யட்சனின் போக யட்சினி – 6

5
(9)

போகம் – 6

 

இந்த நன்னாள் மகாதேவனுக்கும் மகாதேவிக்கும் திருமணமாக போகும் சுபநாளன்றோ…!

ஆகவே வெண்ணிலவும் இவ்விருவரையும் மணவறையில் கண்டுவிட்டுத்தான் செல்வேன் என்று அரியவன் கிழக்கே உதிக்க தொடங்கிய போதிலும் சிறிதாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வைகறை புலரும் பூவேலை தொடங்கிய அழகிய தருணம் அது…! 

 

ருத்ரவேலன் சிறிதும் தூக்கமேதும் இன்றி அப்படியே விடியும் வரை இருந்தவன்… நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து சில தீர்க்கமான எண்ணங்களுடன் முடிவை எடுத்துக் கொண்டு தயாராக சென்றுவிட்டான்…!!!

 

அதிகாலையிலேயே பாட்டி ரகசியாவை எழுப்பியவர்… 

தயாராகுமாறு கூறிவிட்டு சென்றிருக்க…

தன் தொழிலுக்கும் பெயருக்கும் வேண்டி இந்த திருமணத்திற்கு தயாரானவள் இப்பொழுது இவர்களுக்காக  வெளியில் பொய்யாக வேண்டியேனும் புன்னகைத்த வண்ணம் தயாரானாள்…!!!

 

குளித்து முடித்து வந்தவள் விழிகளில் பட்டது எல்லாம் இவளுக்கெனவே இந்தியாவில் உள்ள அனைத்து வகை பெரும்பல லட்சமுள்ள பல வண்ண பட்டு புடவைகளும்…

லெஹங்கா வகைகளும்…

அதற்கு ஏற்றார் போல் முன்னேற்பாடாக தைத்து வைத்த ஹெவி ஹேங்கிங் ஆரி மற்றும் ஜர்தோஸி வேலைகளால் ஆன திருமண ரவிக்கைகளும்…

 

அதற்கேற்ப வைரங்களும் தங்கமும் பவளமும் முத்தும் ப்ளாட்டின நகைகள் செட்டும்…

கூடவே இவள் தயாராகவென அனைத்து வகை ப்ராண்டட் மேக்கப் இத்யாதிகளும் அந்த பிரம்மாண்ட அறை முழுதும்  பரப்பி வைக்கப்பட்டிருக்க…

 

ரகசியாவே தயாராவதிலும் தயாராக்குவதிலும் மகாமன்னி என்று இருந்தாளும் அவ்வீட்டின் மகாராணிக்கு திருமணம் அன்றோ…!!!

 

அவளே தயாரானாலும் கூடவே உதவிக்காக பிரசித்தியான இவளின் நிறுவனத்திலிருந்தே ரகசியாவால் மிகச்சிறப்பான கலைஞிகள் என்று பெயர் வாங்கிய மேக்கப் ஆர்டிஸ்டுகளும்…

உடை அமைப்பாளர்கள் சிலரும் இருந்தனர்.

 

ஆச்சர்யம்தான் ரகசியாவிற்கு ஆனால் இது கனவல்லவே உண்மைதானே எப்படி சாத்தியம் என்று யோசிக்கத் தொடங்கிய வேலையில் அவளைத் தயாராக்க உந்தினர் அங்கே இருந்தவர்கள்…!!!

 

*************

 

அவர்களில் அரண்மனை முன்பாகவே மாபெரும் அழகிய தோட்டத்தில் முழுவுதுமாக திருமணத்திற்காக ஆக்கிரமிக்கபட்டு எளிதாக உடைய முடியாத கடினமான ஃப்ளோடிங் வகை கண்ணாடியால் செய்யப்பட்டிருந்த தரையெங்கும் மின்ன…

 

அதற்கடியில் தெளிவான புல்வெளியின் மேலமைப்பு முழுவதும் மொத்தமாக தெரியும் வண்ணம் இருக்க…

 

அனைத்து வகையாக பூக்களும் இடம் பெற்றிருக்கும் ‘ஃப்ளவர் தீம்’ஆல் ஆக்கபட்ட அந்த மொத்த இடமும் நாசி முதல் உடலெங்கும் நறுமணம் வீசி நிரப்பி ரம்மியமான உணர்வை கொடுப்பதாக இருக்க…

 

எங்கும் கண்ணாடியால் நடுவில் யாகத்திற்காக மட்டும் மாற்பில்ஸ் கொண்ட மணமேடையில் “நீலக்குறிஞ்சி , ட்யூபர்ரோஸ் , கெர்பெர்ரா , இலங்கையின் பிரத்தேயக ‘கடுப்புல் பூ’ ” , என இன்னும் பல வகையான அரிய அழகிய மலரைக் கொண்டு தேவலோகமாக காட்சியளித்தது…!!

 

அந்த இடத்திற்கு மேலும் சொர்க்கமாக்க தமிழக மன்னனாய் கரிகால சோழனாய்… 

வெண்பட்டு சட்டையும்…

தங்க ஜரிகை கொண்டு நெய்த பட்டு வேஷ்டியும்…

தோளில் பட்டு ஜரிகை துண்டும் போட்டுக் கொண்டு கழுத்தில் சிவப்பு பவளமல்லி இதழ் மாலையுமாக வலக்கையில் காப்பு இடக்கையில் ப்ளாட்டினத்தில் தங்க பிரேஸ்லெட்டுடன்…

கழுத்தில் அதே செயின் ‘ரு’டாலருடன் இந்திரனுக்கே சுந்தரனாக கம்பீர ராஜராஜனின் எட்டுக்களுடன் மேடையில் சென்று அமர்ந்தான் நம் நாயகன் ருத்ரவேலன்.

 

இந்திரலோகன் வந்துவிட்டால் பிறகென்ன மேனகை வரவேண்டும் அல்லவா…?! இதோ அச்சுந்தரி…!

 

உதயரகசியா ப்ளாட்டினமும் தங்கமும் கலந்த ஜரிகையால் நெய்த கிட்டதட்ட கோடியை நெருங்கும் பய்ஸன்பெர்ரி வண்ணப்பட்டை அதற்கேற்றாற் போல் அழகிய கை முட்டி வரையான மின்னும் ரவிக்கையுடன் நீண்ட பின்னலிட்ட வண்ணம் அழகிய சிகை அலங்காரமும்…

 

அதற்கும் ஆரி வேலையிலாலான ஜடைப்பில்லை வகையும்… அதில் ஜொலிக்கும் குஞ்சமும்…

குண்டுமல்லி பவளமல்லி ஜாதிமல்லி கலந்த அழகிய பூவேலைபாடுகள் தலையில் கொண்டு ஏற்கனவே த்ரிலோக சுந்தரியாய் இருந்தவள் இப்பொழுது ஜகத்தின் அழகிகளை மொத்தமாக இழைத்து செய்த சிலையாகியிருந்தாள்.

 

தலைவன் அணிந்திருந்த அதே போல் சிவப்பு பவளமல்லி இதழ் மாலையை அணிந்து, பூக்குவியல் சென்டை கையில் பிடித்த வண்ணம் ஒயிலிடை அசையும் அன்னநடையில் மணமேடைக்கு சென்று தலைவனான ருத்ரனின் பக்கத்தில் அமர்ந்தாள் நம் நாயகி.

 

முகத்தில் கடுமையும் மாறாக புன்னகையும் இன்றி அமர்ந்திருந்த ருத்ரன் முகத்தில் வெறுமைச் சென்று சிறிது மங்களத்துடன் ஆன மிடுக்கை கொண்டு வந்திருந்தது அவனையும் அறியாமல் அவன் உயிரோடு கலந்திருந்த வாசம் வந்து உயிர் கலந்து.

 

திருமாங்கல்யம் வணங்கப்பட்டு தாத்தா பாட்டியின் கையால் ருத்ரனிடம் தரப்பட்டதும், 

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…!” என்று மாங்கல்ய மந்திரம் ஓதப்பட…

‘டும் டும் டும்’ என மங்கள நாதங்கள் இசைக்க…

 

இருவரின் வாழ்க்கையை இணைக்க போகும் தெய்வீகத்தை கையில் வாங்கிய ருத்ரன் அவள் பார்வைக்காய் நொடி பொழுது காத்திருக்க…

சிலையாக சமைந்திருந்த ரகசியாவை எதுவோ தலைவனை நோக்கிப் பார்க்க சொல்ல,…

 

கம்பரின் ‘அண்ணலும் நோக்கினான்…!அவளும் நோக்கினாள்…!’ என்ற கூற்றுக் கேற்ப அவள் விழி திரும்பி ருத்ரனின் விழிகளை கண்ட நொடியில் கோடி கதைகள் அவ்விரு விழிகளும் பேசிக் கொண்டனவே…! ஆஹா அவ்வளவு அழகு…!

 

பஞ்சபூதங்களின் சாட்சியுடன் முப்பது முக்கோடி தேவர் தேவிகளின் ஆசியுடன்…

பெரியோர்கள் உற்றார் உறவினர்களின் ஆசியைப் பெற்று… நண்பர்களின் தூய மனவாழ்த்துக்களுடன்…

ஆயிரமாயிரம் ஜென்மம் எடுத்தாலும் பிரிக்க முடியா பந்தத்திற்கு சாட்சியாகப் போகும் முடிச்சினை கோடி சத்தியம் மனதில் தனக்குத்தானே கூறிக் கொண்டு மூன்று முடிச்சைக் கட்டினான் மிக அழுத்தமாக தன்னவளின் வெண்சங்கு கழுத்தில் திருமாங்கல்யத் தாலியை…!!!

 

‘எந்நாளும் நான் உன்னை விட்டு பிரியேன்…’ என அடுத்து நொடி பொழுதில் தன் துனையாளுக்கு விழி தூது அனுப்பி திரும்பிக் கொண்டான் ருத்ரன்.

 

பின் குங்குமம் எடுத்து தன் காரிகையை அணைத்த வண்ணம் பிறை நெற்றியிலும் வகிட்டிலும் வைத்தவனுக்கு உடலில் மின்சாரம் தாக்கி போனதுதான் விந்தையோ…?! 

 

தலைவனை தலைவிக்கு அம்மி மிதித்து மெட்டி அணிவிக்கச் சொல்லி சம்பிரதாயம் சொல்ல…

எழுந்தவன் தன் தேவியைப் பார்க்க எழுந்து நின்று கொண்டாள் பார்வைதான் மொழியாகிறதோ இங்கே…?!!!

 

பின் தன் கால்களை மடக்கி குதிகாலிட்டு அமர்ந்தவன் அவளின் வலப்பாதம் தாங்க அதன் அடியில் தன் இடக்கையை குடுத்தவன்…

தன் வலக்கை விரல்களால் ரகசியாவின் பிஞ்சுபாத விரல்களை பற்றிக் கொண்டு அம்மியை நோக்கி வெண்பட்டு பாதங்களை ஒரு ஒரு அடியாக கொண்டு வந்து அதன் மேல் பூவாக வைத்தான்.

 

நிமிர்ந்து மேலே அவளை ஒரு நொடிக் கண்டவன் அந்த வெண்டை பிஞ்சு விரல்களுக்குள் சிறிய சிறிய ரத்தினமுத்துக்கள் பதித்த மெட்டிகளை இரு பாதங்களிலும் அணிந்து விட்டான்.

 

அங்கே பார்ப்போர்க்கும் இக்காட்சி வானவில் கொண்டு செதுக்கிய கவிதைதான்…! (நமக்கும்தான் இல்லையா டியர்ஸ்…!) 

 

பின் இருவரும் கைகோர்த்து அருந்ததி பார்த்து, விரல் பிடித்து அக்னி வலம் வந்து தாத்தா பாட்டியிடம் சென்றனர்.

பெண்சிலையும் தன்னிச்சையாக அனைத்திர்கும் ஒத்துழைப்பது யாதன்றோ…?!

 

“என்ன பெருசு உமக்கு இப்போ சந்தோஷமா… 

பாட்டி உமக்கும் மனசுக்கு இப்போ திருப்திதான…”,  ஏனோ கட்டயாமாக வந்து மேடையில் அமர்ந்தவனுக்கு இப்போது கள்ளப் புன்னகையுடன் கேட்க தோன்றியது இதை.

(ஒரு வேலை இதான் தாலி மேஜிக்கா இருக்குமோ சொல்லாஸ் ஹிஹிஹி…?!!)

 

விழிகளின் நீர் சுரப்புடன் ஆனந்தம் பொங்க இருவருமே ஒன்றாக,

“ரொம்ப சந்நோஷம் ராஜாஆஆ…மனசு நிறைஞ்சிடுச்சு தங்கம்மா.”, என மணமக்களை தழுவிக் கொண்டனர்.

 

இருவரும் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, 

“தீர்க ஆயுசோட இருநூறு வருஷம்…

பதினாறும் பெற்று எல்லா சந்தோஷத்துடன் ஒற்றுமையாக காதலோட வாழனும் ராஜாஆஆ தங்கம்மாஆஆ… 

எழுந்திருங்க செல்லங்களாஆ…”, எனப் பாட்டியும் தாத்தாவும் அவர்களை எழுப்பி உச்சி முகர்ந்து விட்டனர்.

 

“இருநூறா போதூமா பெருசு…?!”, என்று தலைவனும்

“பாட்டிம்மா த்ரி ஹன்ட்ரட் இயர்ஸ் சொல்லிருக்கலாம்ல…!”, என்று தலைவியும் ஒரே நேரத்தில் கண்ணடித்து அவர்களை கிண்டலடிக்க,

சிரிப்பலைகளுக்கு ஓய்வின்றி போனது அங்கே…!!!

 

பக்கத்தில் அவர்களுடன் ஷைனிங் ப்ளு சட்டை வேஷ்டியில் நின்றிருந்த விஜயனோ, ‘மச்சான் என்ன மூடில் இருக்கானோ தெரிலையே…எதுக்கும் கேட்டு வைப்போம்…’ என நினைத்தவன், “மச்சா…ன் அப்படியே மதியமா பார்டிஇஇஇஇஇ…”, என்று இளித்து வைக்க…

(கேடி ஃப்லோஸ்)

 

“ஆகட்டும் மாப்பிஇஇ நடத்துங்க… !”, ருத்ரன்தான் ஏதோ ஒரு மாயைக்கு சென்று விட்டிருந்தானே ஆகவே பதில் தானாக வந்தது…!!!

 

இதை நம்பமுடியாமல் விஜயன். ஆனாலும் ஒரே குஜால்ஸ்தான், “மச்…சான் நீ என்ற உயிர்டாஆ…”,என்றவன் மணமேடையில் அவனைக் கட்டிக் கொண்டு சுற்ற, 

“டேய் மாங்காஆஆ மாப்பிஇஇ விடுடா… டேய்…” , என்று ருத்ரன் கூறவும்தான் விஜயன் விட்டான்.

 

ரகசியா பக்கத்தில் புடவையில் பொம்மையழகாக இருந்த மோனாவை பார்த்து கண்ணடித்துவிட்டு, மேடையிலிருந்து விசிலடித்துக் கொண்டே இறங்கியவன் அங்கே கலர் கலராக இருந்த வண்ணமலர் போன்ற பிற பெண்களையும் வம்பிழுத்த வண்ணம் சென்றுவிட்டான்.

 

மோனா அவனை பார்த்தவள் ‘என்ன வெரைட்டி தெய்வமே இவன்…!’,என்று நினைக்கையிலும் கூட முகத்தில் சிறு புன்னகை கீற்று விஜயனால்.

(ஆஹான்…! தோடா…!)

 

அந்த ஜில்லாவில் உள்ள மந்திரிகள், தொழில் பிரமுகர்கள் என அனைவரும் வந்திருக்கவும் ஆச்சர்யம்தான் ரகசியாவிற்கு,’பரவாயில்லை நாட்டுகாட்டான் கொஞ்சம் ஃபேமஸ் போல இந்த ஊருல…ஒரு வேளை தாத்தாக்காக இருக்குமோ…?!’ என அவனை பாராட்டி எண்ண முடிந்தும் கூட முடியாத நிலையில் பெண்…!

 

சிறிது நேரத்தில் ரகசியா நெளிய ஆரம்பிக்க,நின்று கொண்டே சிரித்து சிரித்து என சோர்வானதில். அது மட்டுமின்றி இரண்டு நாளாக நன்றாக அலைச்சல் மற்றும் இரவு சரியான தூக்கமின்மை என அனைத்தும் ஒன்று சேர்த்து மந்தமாக இருக்க சிறிது உணவு உண்டால் கொஞ்சம் தேறலாம் போல இருந்தது.

 

அதனை ருத்ரன் அறிந்து , “என்னடிஇஇ பாப்பா பசிக்குதாஆ…??”, அதில் காதல் இருந்ததா என்று அவனைக் கேட்டால் பதில் இப்போது இல்லையும் தெரியாதும்தான். ஆனால் தன் மனைவி எனும் அக்கறை மனதின் எல்லை வரை இருந்தது கடந்த சில மணித்துளிகலில் இருந்து.

 

ரகசியாவோ,’என்னா புதுசா கேர்லாம் செய்றான் இந்த மலைமாடு…!’என்று நினைத்தாலும் பசி வயிற்றைக் கிள்ள… 

 

உதட்டை பிதுக்கி,”எஸ்…ரொம்ப…” , என்று கூறிவளைப் பார்க்க ருத்ரனுக்கு குழந்தையாக தெரிய…

வந்திருவர்களையும் நினையாமல் தன்னவள் பசியை போக்க எண்ணியது ருத்ரனின் மனம். 

 

அழைத்துச் சென்று கையை அலம்பி உணவுப் பந்தியில் அமர வைத்து தானும் அமர்ந்து பாட்டி தாத்தாயுடன் அழகியப் புதுமன தம்பதியராக உண்டனர்.

 

இடையில் ஃபோட்டோகிராபர்ஸ் வந்து, “அண்ணே அண்ணிக்கு ஊட்டுங்க ப்ளீஸ்…அண்ணி நீங்களும் ப்ளீஸ் ப்ளீஸ்… “, என்று கெஞ்சி கூத்தாடிக் கேட்க…

 

பின் விஜயனும் பரிமாறிக் கொண்டே ,”குடு மச்சா..ன், தங்கச்சி ஆஆஆஆ காட்டுஉ…. மச்சான் அட குடுஉஉவே….”, நேரம் பார்த்து அவர்களை இணைக்க முயல…

மோனாவும் தன் பங்குக்கு,”மேம் மேம் அண்ணாக்கு குடுங்க நீங்களும்…” என ரகசியாவை உந்த…

 

இத்தனை பேர் கூறுகையில் எப்படி செய்யாமல் இருக்க குடும்ப விஷயம் குடும்பத்திற்குள் மட்டும் ஊருக்கே அல்ல என்று நினைப்பவன் ருத்ரன் அதனால் அவன் சரியென்று ஊட்டப்போக…  பாட்டி தாத்தா நிற்கின்றனர் அவர்கள் மனம் தன்னாள் நோகி விடக்கூடாது என ரகசியா ஊட்டி விடப் போனாள்.

(ஹப்பாடா ஃபைனலி கொஞ்சம் டச்சிங் டச்சிங்)

 

ருத்ரனின் கை விரல்கள் அவளின் செம்பவள பூவிதழாலான உதட்டை உரசி உணவைக் குடுக்க,விழி மூடிக்கொண்டான் சொற்ப விநாடியில் நரம்பெல்லாம் மின்சாரம் பூக்கவும்.

 

அடுத்து ரகசியா ஊட்ட அவளின் வெண்மைப் பிஞ்சு விரல்கள் ருத்ரனின் மீசை முடியை தீண்டி அவனின் முரட்டு இதழ்களில் பட்டிருக்க…

அவளைப் பார்த்துக் கொண்டே அதனை ருத்ரன் வாங்கிக் கொண்டான்.

 

பாவையால் அந்த பார்வையை தாங்கிக் கொள்ள இயலவில்லை, ‘லூசு மேன்… மோரான்… தடிமாடு ஏன் இப்படி பார்த்து வைக்கிறான்…??!’ என்று மனதில் நன்றாக அவனை முக்கி முக்கி எடுத்தவளின் விழிகள் வேறுபக்கம் திரும்பாமல் ஏனோ தரையை நோக்கிக் கொள்ள…

அழகான புகைப்படமாக க்ளிக்கிடப்பட்டது அந்நொடி!!!

ஆயிரம் காலத்துக்கும் இருகவிதை இணைந்த வண்ணப்படம் அது…!!!

 

விஜயன் சைகையில் தங்களின் தோஸ்துகளுக்கு சைகையிட, “ஹோஓஓஓஓஓஓஓ… ஹோஓஓஓஓஓ … ” , என்று உற்சாகத்தில் கத்தப்பட்டு விசில் மற்றும் கைத்தட்டலுடன் அத்தருணம் கொண்டாட்டமாக நிறைவடைய…

சிவந்து விட்டது ரகசியாவின் முகம்…! 

 

யாராகினும் எதுவாயினும் எப்போதும் வெட்கத்திற்கு ஒரு நொடியேனும் சொந்தக்காரி ஆகி விடுவர் அல்லவா மணப்பெண்ணானவள்…?!

 

இப்படியாக சில பல அழகிய மற்றும் அலப்பறைக் கச்சேரிகளுடன் முற்பகல் வேலையும் வந்தே விட்டது. 

 

வலது கால் எடுத்து வைத்து அந்த ஆதிசிவன் பார்வதி தம்பதி சகிதமாக வீட்டினுள் வந்து பூஜை அறையில் விளக்கை ஏற்றிவிட்டு இன்னும் பல சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் ருத்ரன் உணர்ந்தான் தன்னை எதுவோ ஏதோ செய்கிறது என்று. அதனால் தன்னை நிலைப்படுத்த எண்ணி வெளியே சென்றுவிட்டான் வேகமாக ஏதோ தொலைபேசி அழைப்பு என்றவாறு.

 

ரகசியாவை பாட்டி அழைத்துச் சென்று ருத்ரனின் அறையில் விட்டவர் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க சொல்ல,”சரி பாட்டிம்மா…”,என்றாள் புன்னகை முகமாக.

 

அவர் சென்றதும்தான் தாமதம் அம்மாயி காண்டில்கத்த தொடங்கினாள்.

“ஷிட்…இந்த ப்ளாக் காண்டாமிருகத்தோட ரூம்லதான் அவசியம் நான் இருக்கனுமா… எல்லாம் என் நேரம்… கடவுளே… “என்று அங்கிருந்த மெத்தையில் குதித்து நங்கென்று அமர்ந்தாள் தன் மொபைலும் கீழே அவள் ரூமில் இருக்கும் கடுப்பில்.

 

சுற்றி முற்றி அந்த அறையை நோட்டம் விட்டவளுக்கு, “குக்கூஊ குக்கூஊ…” என குயிலின் நாதம் ஜன்னலின் அருகில் கேட்க…

முகத்தில் புன்னகை வர கிட்டே சென்று பார்க்க நினைத்து அருகில் செல்ல…

அங்கே ஜன்னலின் வெளியே மேலே உள்ள திண்டில் குட்டிக் குயில் அமர்ந்து கொண்டு காணமிடுவதைப் பார்த்தாள்.

 

புன்னகையுடன் , “ஹேய்…குட்டிச்சுட்டி அழகியாஆஆ நீங்க ஆஹ்ன்…?!”, என்று அதனுடன் பேசி சிரிக்க…

 

அப்பறவையும் பதில் பாட்டு “குக்கூஊ குக்கூஊ…”, என்று இசைத்திட… 

 

“ஹாஹாஹா…என்ன பேசுறீங்க இந்த அழகிஇ…”,என்று அதனிடம் கொஞ்ச, அதற்கும் பதில் இசையாய் வர…வெண்மணி சலங்காய் நகைத்தாள்.

 

“ஹாஹா கேடி பேபியாஆஆ நீங்க..?? ம்..உங்க மம்மி எங்க தனியா சுத்துறீங்க…ம்ம் ??”, என்று கூறியவளின் விழிகள் மம்மி எனக் கூறியதும் தன் தாயை நினைத்து விழிகள் சுரக்க சிலையாகிவிட்டாள் அப்படியே சிறிது நொடிகள்.

 

ஜன்னலின் கம்பியை அழுத்திப்பிடித்து, “மம்மிகிட்ட போ குட்டி பேபிஇஇ. இந்த குட்டி வயசுல மம்மிகூட இல்லாட்டி ரொம்ப கஷ்டமா இருக்கும் தெரியுமா…??!!”, என்று குரலுடைந்து கூறியவள் தன் இமைகளை வேகமாக சிமிட்டி கண்ணீரை மறைத்துக் கொண்டாள்.

 

பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாளோ அதனிடம், “ஒகே…ஃபைன்… நீங்க சாப்பிட்டிங்களா அழகி பேபி…?!”,  என்று அவள் கேட்டதும் ” குக்கூ குக்கூ ” என்ற கூறிவிட்டு அந்த இடத்திலே மூன்று நான்கு முறை தன் சிறகை அடித்துத் உல்லாசமாக வட்டமடித்து பறந்தது சிரிக்க வைக்க எண்ணியது போல…!

குயில் குட்டிக்கும் கூட பூங்கோதையின் கண்ணீரைக் காண விருப்பம் இல்லை போல…!

 

 “ஹாஹா ஹாஹா…”, என்று கிளுக்கு நகைத்தவுடன் மீண்டும் உல்லாசமாக சுற்று சுற்றியதும் வான் உலா சென்றுவிட்டது அந்த சின்னக்குட்டி குயில்.

 

இங்கே நடந்த சம்பாஷனைகள் அனைத்தும் அந்த ஜன்னலுக்கு அருகே கீழே நின்றிருந்த கள்வனின் செவியிலும் விழியிலும் விழுந்துவிட்டது மிகத் தெளிவாக…!

 

வெளியே சென்ற ருத்ரனை தனியே எங்கே விட்டார்கள்,

பலரும் அவனுடன் இருந்து பேசிச் சென்ற வண்ணமே இருக்க,

 தன் மொபைல் இப்போது உண்மையாகவே அலறியதால் அதை எடுத்துக் கொண்டு தனியாக வந்திருந்தான்.

அப்போது கண்டு கேட்டதுதான் இவைகள்…!

 

அவள் உடைந்து பேசுகையில் மீண்டும் ஓர் அதிர்வு அவனுக்குள் ‘உனக்கு நான் இருக்கேன்டி…’ என்று கூறி தன் நெஞ்சாங்கூட்டில் சாய்த்து கை வளைவுக்குள் அவளை வைத்து பாதுகாக்க தோன்றியதும், 

அவளின் சிரிப்பு சத்தம் கேட்டதும் முகம் மலர்ந்து உதடு ஒரு சிறிதளவே எனினும் புன்னகையில் நீண்டது ஏனோ…??!! 

மனைவி என்றதால் மட்டும்தானா…??!!!

அவனே அறிவான்.

(ஹிஹிஹி…மீ டுஉஉஉ)

 

ரகசியா சிரித்துக் கொண்டே திரும்பி கட்டிலின் அருகில் வந்தவள்,தன் இடையில் இருந்த ஒட்டியானத்தை கழட்டி மெத்தையில் வைத்தாள்.

 

“உஃப்ப்… பாட்டி கூப்பிடும் போது போட்டுக்கலாம்… 

ஹோ காட்… எப்படிதான் இதை எல்லாம் போடுக்குட்டுஉ பொண்ணுங்க கல்யாணம் செய்றாங்களோ… 

 

ஃபார் ஷுயர் அழகாதான் இருக்கு…

பட் எல்லாம் ஒட்டுக்காப் போட்டுட்டு எவ்ளோ நேரம் இருக்க..?!

ஷப்பா… முடியல… உஃப்”, என்று மீண்டும் அறையை நோட்டமிட,

அதே பழமை மாறாத புதுமை அறையிலும் வீட்டைப் போல…!

 

கதவின் மேற்பக்க சுவற்றில் ராஜாக்கள் பயன்படுத்திய வீரவாள்கள் இருக்கவும் அதை எடுக்க மங்கைக்கு ஆசை வர…

பக்கத்தில் இருந்த சிறிய மேசை போன்ற நாற்காலி இருக்க எடுத்து கதவருகே போட்டு மேலே ஏறி அது எட்டாமல் போக எக்கி முயன்று கொண்டிருந்தாள் மும்முரமாக.

 

ருத்ரனோ தன் ஜீப் சாவியை எடுக்க தன் அறைக்கு வந்தவன், கதவை  தட்ட பூட்டாமல் இருந்ததால் இரும்பு கரங்களை தாங்காத கதவும் திறந்து கொள்ள இப்புறம் ரகசியா…! 

 

“ஆஆஆஆஆஆ……மம்மிஇஇஇ…… நோஓஓஓ…..”, என்ற விழியை மூடி அலறிக் கொண்டே பெண் மான் கீழே விழ போக…

நொடி நேரம் அந்தரித்தில் தொங்கியது போல பிரமையில் தன் இடையில் ஏதோ இரும்பின் அழுத்தத்தை உணர்ந்தவள் அடுத்த நொடி கீழே தரையில் படுத்து இருந்தாள்.

 

ருத்ரன் கதவை திறந்ததும் இவள் விழப் போவதைப் பார்த்தவன்,

எட்டி அவளின் இடையை பிடித்து கொண்டான் அவள் விழாமல் இருக்க. 

 

நல்ல வேலையாக விழும் விசையிலிருந்து தப்பித்திருக்க,ஆனால் இவன் எட்டி பிடித்து விசையில் அவளின் பக்கமாகவே உள்ளே இருவரையும் விழ சொல்லி அந்த மேசைநாற்காலி ருத்ரனை தடுத்து மீண்டும் விழவைத்திருந்தது.

 

பாவையவளின் வயிற்றில் புவ்வப் பகுதியின் மேல் மாங்கல்யம் குத்த அதன் மேல் அதற்கு உடையவனின் முகமும் அவனின் மீசை தாடியும் குத்திக் கூச செய்திருந்தது பெண்ணவளை…!

(ஹிஹிஹி அதுக்குள்ள ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி முடிச்சிடு வாரோ இந்த ராசாஆஆ…?! ஆழ்ந்த சிந்தனையில் தனு பேபி…)

 

நானுன்

வெண்சங்கு கழுத்தைத்

தொட்டுக் கட்டும்

 தாலி…!!!

உன் இதயம் தொட்டு

தொப்புள் கொடியில்

சரணடைகிறதே…!!!

நம்முயிர் 

அங்கேதான்

தொடரும்  

கதையாகும்

என்பதை 

சொல்கிறதோ அது…?!

கூறடி என்னுயிர்

தேவதையான 

யட்சினியே…!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “யட்சனின் போக யட்சினி – 6”

    1. தன்வி ராஜ்

      ஹாஹா ஒருவேளை இருக்குமோ மொமண்ட் ரைட்டா தோழரே 🙈🙈🙈😁😁😁 💗💗💗

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!