யட்சனின் போக யட்சினி – 7

4.8
(8)

போகம் – 7

 

பாற்கரனாவன் தன் கோடானு கோடி கரங்கள் கொண்டு மக்களை தொட்டு தழுவிக் கொண்டிருந்த  முற்பகல் வேளை அது…!!!

 

தரையில் விழுந்திருந்த ரகசியா எழ முடியாமல் விழிகளை திறந்தவளுக்கு தன் வயிற்றின் மேல் பாரம் ஏதோ சுறுக்கென குத்துவதும் கூசுவதும் போல உணர்வு தோன்ற கழுத்தை வளைத்து தலையை சற்று தூக்கி எக்கி குனிந்து பார்த்தாள்.

 

தன் வயிற்றின் மேல் மாங்கல்யத்தின் பக்கத்தில் வீற்றிருந்தது என்னவோ தனக்கு எதிரியாய் தன் வாழ்வில் வந்து சில மணி நேரங்களுங்கு முன்பிலிருந்து மனாளனாக மாறி இருந்த தன் ஆகாத கணவன் ருத்ரவேலன்…!

 

மனைவிக்கு அடி ஏதும் பட்டு விடக்கூடாது என்று எண்ணியவன் விரைந்து அவளை தாங்கி பிடித்து அடிபடாமல் தரைக்கு ஒரு அடி மேல் வரை பிடித்து கொண்டவனையும் கால் தடுத்து விட ருத்ரனும் சேர்ந்தே அவள் மேல் விழுந்தான்…

 

மேசைக்கும் தாண்டி இவன் இரும்பு கால்கள் இருந்ததால் சரியாக நகர்ந்து விட்டிருந்த சேலையின் மத்தியில் நாபி பள்ளம் நேராக விழுந்தவனுக்கு முதலில் தென்பட்டது திருமாங்கல்யம்…! 

 

அடுத்த ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்திற்கும் முன்பாகவே ருத்ரனின் விழிகள் எதைத் தேடி இருபது வருடமாக தவமிருந்ததோ… எதைத் தேடி ஓடித் திரிந்தானோ…

எதன் மேல் காதல் காதல் என்று பித்து பிடித்து சுற்றினானோ… பொக்கிஷமாக கிடைக்கபடுமா என்று ஆராய்ந்தானோ அலைந்தானோ… 

அந்த பிறைநிலா வெண்பச்சை மச்சம் மின்னலாக அவன் விழிகளின் முன்…!

 

‘இது நிஜம்தானா இல்லை விழித்துக் கொண்டே தான் காணும் கனவா…?!

இல்லை நிஜமாதான் இருக்கனும்…!!! ‘என்று நினைத்து தன் தலையை உலுக்கி மீண்டும் விழி முடி திறந்து பார்த்தவனுக்கு ஆயிரமாயிரம் மாத்தாப்பு இதயத்தில் வெடித்தது. 

ஆம் அது அவனின் சொப்பனக்காதல் தேவதையின் மச்சமேதான்…!

 

தன்னை மறந்து போனான் ருத்ரன்…! 

நடக்கும் நிகழ்வுகளை மறந்து போனான் ருத்ரன்…!

தவத்தின் பலனை அடைந்தவனான் இந்த ருத்ரவேலன்…!

 

தன் முகத்தை வைத்து புரட்டியவன் அங்கேயே புதைந்துவிட எண்ணினான் போலும்…

அதையே மீண்டும் மீண்டும் செய்தான்…!

 

கீழே விழுந்திருந்த அதிரச்சியில் இருந்து தெளிந்தவளுக்கு…

அவனின் அந்த செய்கையில் அதிர்ச்சியும் படபடப்பும் கோபமும் கொஞ்சம் பயமும் கூடவே கூச்சமும் சிறிதளவு தொற்றிக் கொள்ள, 

 “ஆஆஆ… ஹேஏஏ…ருத்ரன் …கெட் அப் மேன்… எழுந்நிருஉஉஉ… ” ,என்று கத்தியவள் பலத்தை கூட்டி அவன் தலையை பிடித்து மேலே தூக்க முயன்றாள்.

 

தன்னவளின் கீச்சுக் கீச்சு கத்தலில் நடப்புக்கு வந்தவன், சட்டென்று நகர்ந்து எழுந்து நின்று கொண்டான்.

 

ரகசியாவும் தன்னை சரிப் படுத்திக் கொண்டு எழுந்து நின்றவள்,  ருத்ரனிடம் சண்டைக்கு தயாராகி, “ஹேய்…யூ…வாட்ட் ஆர் யூஊஊ……….”, என்று இவள் பேச தொடங்கியதுமே….

 

“அது… அது… கீ… ஜீப்… கீழே… நீ… நிலா…முத் ” என்று எதை எதையோ உளறியவன், மூச்சை இழுத்து விட்டு தன் கழுத்தை தடவிக் கொண்டு,

“ஜுப் கீ வேணும்…” ,என்றுவிட்டு தானே அதை வேகமாக எடுத்துக் கொண்டு வெளியே சென்றவன்.

 

கதவின் அருகில் நின்று ஒரு நொடி தன் மணாளினியை கண்டவன் தன் விழியால் மொத்தமாய் நிரப்பிக் கொண்டு புயலென வெளியே சென்றிருந்தான்.

 

ரகசியா படபடப்பு குறையாமல், “ஹோ காட்… 

இவன் என்ன இப்படி செய்றான்…?!

இது சும்மா கல்யாணம்தானே…?!!”, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

அவள் உள்ளே இருந்த கார்ப்ரேட் காரியோ, ‘அவனை ஏன் அறையாம விட்ட நீ…!’ எனக் கேட்க…

 

“அது அது அது… தெரியல… ஏன்னு…

ஆஹ்ன்… எனக்கு ஹெல்ப் செய்தான்ல கீழ விழாம பிடிச்சான்ல… அதுனாலதான்….”, என்று திக்கித்தினறி பதில் கூறி அந்த கேள்வியின் பதிலை முடித்திருந்தாள்.

 

தாலிகட்டிய கணவன்…!

தன்னை தொட அனைத்து உரிமையும் உள்ளவன்…!

அப்படியிருக்க எப்படி அறைவது தன் மனாளனை…?!!!

முடியாது என்னும் அடிஆழ் மன உணர்வை உணரவில்லை காரிகை…!

 

அதற்கும் மேல் அவள் யோசிக்க முடியாத வண்ணம் மோனா வந்து அவளை கீழே அழைத்துச் சென்றுவிட்டாள்.

(சிறப்பு…மிகச்சிறப்பு…!)

 

வெளியே வந்தவன் வேகமாக தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு சென்றவன்…

அவனின் ஜாதிமல்லியும் பவளமல்லியும் வெள்ளை ரோஜாக்களும் நிறைந்த பத்தி பத்தியான பூந்தோட்டம் அமைந்திருந்த சிறிய அருவி அதனருகில் வெண்மையான ஆறு மலர்மணம் கலந்து ஒடும் அழகிய பகுதியில் வண்டியை நிறுத்தினான்.

 

இறங்கி நேராக அருவியை நோக்கி நடந்தவன்,கொட்டும் தண்ணீரில் சென்று நின்றுக் கொண்டான். 

மனக்கண் முன் அனைத்தும் வந்து போகத் தொடங்கியது.

 

“ஆஆஆஆஆஆஆஆஆ…… 

நான் பார்த்தது நிஜமா…?!

 

அப்போ… அப்போ… 

என்ற முத்துமயிலு எனக்கே எனக்குனு கிடைச்சிட்டாளா…??!!!

என்ற தேவதை என்கிட்ட வந்துட்டாளா…?!  

 

அந்த குரல்… ?!

தாலி கட்டும்போது என்னை மந்திரம் போட்டு கட்டிபோட்டு வச்சதே அந்த வாசம் அதே வாசம்தானா…?!!! 

 

என்ன நடக்குது எனக்குள்ளனு யோசிச்சி வெளிய வந்ததே இந்த ரெண்டையும் பத்தி யோசிக்கதான மறுபடியும் அதே ஏக்கமான பாசமான குரல்…!

ஜீப் கீ எடுக்க போன எனக்கு என்ற லவ்ஸு கிடைச்சிட்டா அபபோ…?!

 

அந்த பச்சை மச்சம்…!

ஆஆஆஆ…ருத்ராஆஆ உன் காதல் உன் கைலடாஆஆ…!

என்ற தேவதை கிடைச்சுட்டாஆஆஆஆஆஆஆ…! 

என்ற முத்துமயிலுஉஉஉ என்கிட்ட வந்துட்டாஆஆஆ…..!

முத்தேஏஏஏஏஏஏஏ…”, என நீர் விழும் சத்தத்தை தாண்டி ருத்ரவேலன் ஆனந்தத்தில் கத்தினான்.

 

ருத்ரனுக்கு இதயமெங்கும் இதம்…!!!

இருக்காத என்ன??!! 

நேற்றோடு தன்னுடைய வாழ்வில் இருந்து தன் முத்துமயில் மறைந்தவிட்டாள்…!

இனி வரமாட்டாள் தனக்காக…!

அவன் காதல் அவனோடு முடிந்துவிட்டது என எண்ணி இருந்த வேலையில் வந்துவிட்டாளே…!

இதோ தன் சரிபாதியாக,மனைவியாக கிடைத்திருக்கிறாளே…!

இதை விட வேறென்ன வேண்டும் ருத்ரனுக்கு…!!!

 

தன் காதல் இருக்கும் இடம்தான் சொர்க்கம் காதலை உணர்பவர்களுக்கு… !

அந்த காதல் கை கூடி விட்டால் அதுதான் இந்திரலோகம் மன்மதலோகம் வாழ்வே இனி இஷ்டம்தான்…! 

 

அந்த தோட்டத்தின் நடுவே மரக்கம்புகளால் தூண்கள் அமைக்கபட்டு அதன்மேல் இவனுக்கென சிறிய அறை போன்றமைப்பு கொண்ட குடில், மேலே ஏற கயிறு ஏணி…!

அங்கே தொழிலாளிகள் இப்போது யாரும் இல்லை எல்லோரும்தான் அவன் வீட்டில் இருக்கின்றனரே…!!!

 

நினைவுகளில் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் வர,

மேலே சென்று உடையை மாற்றியவன் வெளியே காற்றில் தன் கையை தன் தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு தன் செல்கள் மொத்தத்திலும் காதலின் மகிழ்வுடன் மீசை அரும்பிய பதின்பருவ பையன் போல அங்கேயும் சென்று கத்தினான்…!

 

“அத்..தான்… !” , என்று அவன் பின் கழுத்தில் தன் இதழால் முத்தம் வைத்து நா கொண்டு வருடி பின் சிறிதாக கடித்தாள்….

 

“ஃப்புஉஉ…” ,ருத்ரன் தவிக்க தவிக்க மணப்பெண் கோலத்தில் ரகசியாவாக முழுமையாக தெளிவாக தெரிய வந்து ருத்ரனின் முதுகோடு தன் இரு பவளமேடுகள் மேலே புதுத்தாலி அழுந்திய வண்ணம் இறுக்கி கொண்டாள் அவனின் முத்துமயில்…!

 

“முத்துமயிலுஉஉ… ஹாஆஆ…”, என்று விழியை மூடி நொடிகள் இரசித்தவன்…

அவளை முன்னால் இழுத்து பார்த்து விழியோடு விழி கலந்தான்…!

 

வலக்கை கொண்டு அவளின் இடையை முழுதாக பற்றி பழரசம் எடுக்க முயன்றவன், அவளின் கழுத்தை நோக்கி வாசமிழுக்க குனிய…

 “ம்ம் ம்ஹும்…”, என்று பறந்துவிட்டாள் இவனுக்கு இன்று உற்றாளான ருத்ரனின் ரகசிய நாயகி…!

 

“ம்ம்… உஃப்…இதே வேலையா போச்சுல்லடி உனக்கு …

 

ஹாஹா… 

கில்லாடி ஜில்லாடிதான்டி நீனு…

இத்தனை நாள் தப்பிச்சிட்டடி முத்துமயிலு… 

 

இனி இந்த ருத்ரன்ட இருந்து எப்படி ஓடி மறைவனு நானும் பாக்குறேன்… “, என்று புன்னகையுடன் தன் மீசைமுடியை இடக்கையால் நீவிக்கொண்டான்.

 

ருத்ரன் தனக்குள் சில முடிவை எடுத்திருந்தான். 

அது இவை யாவையும் இப்போது கூறக்கூடாது என்பதைத்தான்.

 

அவளாக காதலை உணரும் கூறும் தருணம்… 

முத்தமழை பொழிந்து அவளை கானமாக இசைக்கும் நேரம்…

அவள் சிவந்து வெட்கம் கொண்டு மேலும் அவனை தழுவும் நேரத்தில்…

அவளின் கனவுச் சேட்டைகளை கூறி இன்னும் அவளை சிவப்பாக்க வேண்டும் என்பதுதான் ருத்ரனின் தற்போதய பேராசை…!

 

நினைக்கையிலேயே மன்னவனுக்கு உடலெல்லாம் காதல் நரம்புகள் முறுக்கி மத்தாப்பு பூக்க செய்தது.

அடுத்த நொடியே மின்னலென தன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்…!!!

 

சரியாக விஜயன் கல்லு பாட்டிலில் கைவைக்கும் நேரம், 

‘மீசக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம்டாஆஆ…!’, என்ற ரிங்டோன் அலற…

“எடுத்து மச்சா..ன்ட நாலு பன்ச்ச போடுவோம் பார்டிக்காக…” , என்று நினைத்து பச்சை சிம்பிளை கீழே ஸ்வைப் செய்து காதில் வைத்து, “மச்….” , என தொடங்குவதற்கு முன்…

 

“மாப்பிஇஇஇஇ இஇஇ…” என முகமெல்லாம் பல்லாக ருத்ரன் பேச தொடங்கினான்…

 

“ஏன் மாப்பிஇஇ தரைல நிக்கற… 

உன்ற மச்சான் ஜீப் இருக்குஉஉ… 

அதுல சீட் இருக்குஉஉ…

 வந்து உக்காரு பாப்போம்ம்ம்….

அட பின்னாடி திரும்பும் மாப்பிஇ… ” என்ற ருத்ரன் கூறவும்,  

பின்னாடி விஜயன் திரும்பி பார்த்தான்.

 

ஜீப்பில் கூலர்ஸ் போட்டுக் கொண்டு ருத்ரன் முகமெல்லாம் புன்னகையுடன் ,

” வணக்கோம்டா மாப்பிஇஇஇ ஓடி வா… ஓடி வாஆஆஆ … “, என கையை ஆட்டி செய்கை செய்யவும்…

 

விஜயன் பக்கத்தில் இவர்களின் தோஸ்துகள் கூட்டத்தில் ஒருவனான பிரபுவோ, அவன் கையிலிருந்த பூஸ்ட் பாட்டிலை நைசாக எடுத்துச் சென்று விட்டான் பாவத்தை.

(அச்சோ வட போச்சே விஜயா கிகிகி…!)

 

“வாழ்வே மாயம்…இந்த வாழ்வே மாயம்…” , என்ற ரேஞ்சில் சோகமாகிய விஜயன்…

 

கையை கேள்வி குறியாக்கி மேலே பார்த்த வண்ணம்,

“ஏன் குருநாதா… ஏன்…?!”, என்று கேட்ட வண்ணம் மைண்ட் வாய்ஸில் சோக சங்கீதத்துடன் ருத்ரனின் ஜீப்பில் ஏறிக் கொள்ள…

 புழுதி பறக்க வீட்டை நோக்கிச் சென்றது ருத்ரனைப் போல சிறுத்தையாக அவன் வண்டியும்…!

 

*****************************

 

மோனா ரகசியாவை கீழே அழைத்துச் சென்றிருக்க…

பாட்டி அவளுக்கு அவ்வூர் பெண்கள் சிலரை அறிமுகப் படுத்தவிட்டு விருந்தினர்களை கவனிக்க சென்றுவிட்டார்.

 

அழகிய கொலு பொம்மையாக ஹாலில் தரைவரை பொருந்திய பெரிய ஜன்னலின் அருகில் ரகசியா ஸோஃபாவில் அமர்ந்திருக்க… அவளைச் சுற்றியும் பக்கத்திலும் அனைவரும் அமர்ந்துக்கொண்டு, அவளை ரசியோ ரசியென ரசித்துக் கொண்டிருந்தனர்.

 

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா…!”

 

“சினிமா நடிகையே தோற்றுடுவாங்க நாத்தனாரே உங்க பக்கத்துல…!”

 

“எங்க அண்ணணுக்கு ஏத்த இளவரசி மதனி நீங்க…!”, என்று தனித் தனியாக உறவு முறைகள் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தனர் இளம் பெண்கள்.

 

ரகசியாவிற்கு வெட்கம் வந்து ஒட்டிக் கொள்ள,

“தேங்க்ஸ் எ லாட்… நீங்க எல்லாருமே ரொம்ப அழகு…

 க்யூட்டா இருக்கீங்க.”, என்று மென்குரலில் அவர்களைப் பாராட்டினாள்.

 

மோனாவிற்கோ ‘நம்ம மேடமா இது அடடே ஆச்சர்யர்குரி…!’ எனும் மனநிலை.

 

“மே..ம்” என்று ஏதோ கூறத் தொடங்கவும்…

 

“ஹேய் மோனா… ஸ்டாப் … 

கால் மீ லைக் ஹௌவ் தீஸ் கேர்ள்ஸ் ஆர் காலிங் மீ ஹியர்… 

இது கம்பனி இல்ல…ஒகேவாஆ…”,  (இங்கே இவர்களை போல ஏதாவது சொல்லி என்னை அழை) என்று புன்னகையுடன் கூறிவிட்டு அவளைப் பார்த்தாள்.

 

மோனாவோ நம்ப முடியாமல், மீண்டும், “மே……..ம்” என்கவும்… 

 

“ப்ச்… மோனா… கமான்.” என்றாள் ரகசியா சிரித்த முகமாக. 

 

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மே… ஸாரி ஸாரி அண்…ணி” , என்று மனதிலிருந்து கூறினாள். மோனாவுக்கு இந்த கல்யாணம் இவள் ஏன் செய்துக் கொண்டாள் என தெரிந்திருந்த போதிலும்.

 

“அச்சோ மோனா… தாங்க்ஸ்… பட் இட்ஸ் டெம்பரரிதானே…” , மோனாவின் காதில் மட்டும் குசுகுசுத்தாள் ரகசியா.

 

ஆனால் ரகசியாவிற்கு தெரியவில்லை அவளுக்கே தெரியாமல் அவளிதில் ஐக்கியமாகிறாள் என்று…!

 

திடீரென ஒரு குட்டிப் பெண் பட்டுப் பாவாடை சட்டையில் ஓடி வந்து இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டு நிற்க…

 

ரகசியாவோ புன்னகைத்துக் கொண்டே, 

“ஹேய் க்யூட்டி… என் மேல என்ன கோவம் உங்களுக்கு… 

கம் ஹியர் இங்க வாங்க… வாங்க…”, என கையை நீட்டி அழைக்க…

 

“போங்க..நான் உங்க பேச்சு கா, 

அப்றம் மாமன்கிட்டையும் கா… 

மாமன் என்ன கட்டிக்கிறேன் சொல்லிபுட்டு உங்களை கட்டிக்கிச்சி… ” என விரலால் செய்கை காட்டி,விழிகளை உருட்டி உருட்டி கூறியபடி கழுத்தை நொடித்தாள் அந்த குழந்தை.

 

ரகசியா வெண்கல மணியாய் நகைத்தவள் ,

“ஹாஹாஹா… அப்படியா க்யூட்டி…

சரி ஒகே ஃபைன்…!

இப்போயும் ஒன்னுமில்ல. 

 

நீங்க பெரிய பாப்பா ஆகிட்டதும், உங்க மாமா உங்களை கல்யாணம் செய்துப்பாரு… 

ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கே… ம்ம்… “, என்று கூறியவளை கட்டிக் கொண்ட குட்டி பெண்ணோ

அவள் மடியில் மடியில் அமர்ந்து கொண்டு, 

“என்ன க்கா அது…?” என்று கேட்க…

 

“நீங்க உங்க பேரைச் சொல்லி என் கூட ப்ரண்ட் ஆகி ஹைஃபை குடுத்துட்டு… இந்த கன்னத்துல ஒரு கிஸ்ஸி… அப்றம் இந்த கன்னம் ஓகே…!?

இதான் அது… டீல்…!!!???” , என அந்த குழந்தையைப் போலவே இவளும் செய்ய…

 

“அவ்ளோதானா…!

 டீல் டீல்… என் பேரு சாரு… சாருமதி… ஹைஃபை…!” , என்று ரகசியாவின் கன்னத்தில் இச்சொன்றை மாறிமாறி வைத்துவிட்டு சிரிக்கவும்  ரகசியாவும் அக்குட்டி பெண்ணின் குண்டு கன்னங்களில் இச்சை வைத்துவிட்டு சிரிக்க, அங்கே நகைப்பொலி பரவியது கல்யாண வீட்டிற்கே உள்ளே கலையில்…! 

 

தாத்தாவும் பாட்டியும் செய்யும் வேலை விட்டு இவளின் சிரிப்பைப் பார்த்து இன்பமாக, 

“அய்யா குலசாமி… எங்க குழந்தைங்கள ரெண்டு பேரும் எப்படியாச்சும் மனசால ஒன்னாக்கி விட்று…! 

இப்படியே சிரிச்சாப்ல ஒன்னா வாழனும் சாமி…”,என்று வேண்டிக் கொண்டனர்.

 

சுப்பு என்ற பதின் வயது பெண்ணோ ,

” ஹாஹா… அக்கா இவ இப்டிதான் படிச்சுட்டி… 

மாமன்தான் இவளை படிக்க வைக்குது பெரிய கான்வெண்ட் ஸ்கூல்ல… 

ஏன் என்னையவே இப்போ அவருதான் காலேஜ் சேர்த்து படிக்க வைக்குறாருஉஉஉ…”,என்றாள்.

 

ராக்கு என்பவளோ ,

“ஆமா மதனி… என்னையும் கூட என்னை மட்டுமில்ல இந்த ஊருல நிறைய பேரை வேலண்ணன்தான் படிக்க வைக்குது… 

சிலர் நல்ல உத்யோகத்துல கூட இருக்காங்க… 

எங்க அண்ணன் ரொம்ப நல்லவரு மதனி… 

நீங்க கொடுத்து வச்சவஹ” என்று அன்பொழுக கூறினாள்.

 

மனம் மொத்தம் ருத்ரவேலன் மேல் வெறும் கோபம் மட்டுமே இருந்தாலும்… 

அவனை பிடிக்காவிட்டாலும்…

சிறிதளவு மரியாதை வந்தது அவன் மேல்.

மிளகளவே ஆயினும் இதயத்தினுள் வந்துவிட்டான் அல்லவோ…!!

(பொங்கல் வெள்ளைனாலும் கருப்பா இருக்க மிளகு இருந்தாதானா அது சுவையான வெண்பொங்கல்…ஹிஹிஹி டத்துவம் பேபிஸ்…!)

 

இவர்கள் கூறி முடிக்கவும், வெளியே ஜுப் சத்தம் கேட்க… திரும்பினார்கள் அனைவரும் ஜன்னலை நோக்கி…

சிறிது நொடிகளில் அனைவரும் அங்கே பார்த்து சிரிக்க…

ரகசியாவும் என்னவென்று நோக்கினாள்…!!!

 

ஜீப் அடுத்த நொடி வீட்டில் நிற்க, இருவரும் இறங்கினர்.

ருத்ரன் வந்து விஜயனை கையில் தூக்கிக் கொண்டு,

“டேய்…..மாப்பிஇஇஇ… 

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டே மாப்பிஇஇ…” ,என்று கத்திக் கொண்டே சுற்றினான்.

 

“மச்சா…ன் வேஷ்டிஇஇஇ… வேஷ்டிஇஇஇ… 

வேஷ்டிய புடிஇஇ மச்சா…ஆஆஆஆன்…” ,என்று விஜயனும் பதட்டமாக கத்திய வண்ணம் இருக்க… 

 

ருத்ரன் அவனை அப்படியே உள்ளே தூக்கிக் கொண்டு, “மாப்..பிஇஇ” என கத்திக் கொண்டே செல்ல…

விஜயன்,”மச்சான் வேஷ்டிஇஇஇ…” , என்று கத்த ஒரே கூத்தாகிப் போனது அங்கே.

 

தாத்தா இவர்களின் அலப்பறையை கண்டு,

“ராஜாஆ என்னய்யா இது..?ஹாஹாஹா…!” , என சிரிக்க…

 

பாட்டியோ,  “டேய் விஜயா இறங்குடா கீழ…,” , என்று சிரித்துக் கொண்டே விஜயனை சாடினார்…!

 

விஜயனோ , 

“ஆமா பாட்டி நான்தான் அவன் கழுத்தைப் பிடிச்சுட்டு தொங்குறேன்… நானே வேஷ்டி அவந்துருமோனு பயத்துல இருக்கேன்… விடசொல்லுங்க பாட்டி…

மச்சா…ன் விட்ருடா ப்ளீஸ் ஒரே கலர்ஸா இருக்காய்ங்க வேஷ்டிஇஇஇ போச்சு அவங்கதான் பாவம்…பாத்துக்க…”, என்று கூற…

 

பாட்டி ருத்ரனிடம் ,” விடுங்க ராஜாஆ அவனை ஹாஹா…”,

என்று சிரிக்கவும்…

 

ருத்ரனோ விஜயனை அப்படியே கீழே போட்டுவிட்டான்.

“… ஆஆஆஆஆ… யம்மோஓஓஓய்… இடுப்பை ஒடைக்கப் பாத்துட்டானே… வாழ்க்கையே முடிச்சிருவாய்ங்க போல… கடவுளே…உனக்கு கண்ணு இல்… யப்பாஆஆஆ…”,

 மீண்டும் அவனை மிதித்து தாண்டிச் சென்றான் ருத்ரன்…!

 

 பாட்டியை தூக்கி சுற்றிக் கொண்டே,  “பெருசு…

சந்நியாசம் கேன்சல் வோய்… 

இனிமேல் எபபோவும் போகவே வேணாம்ம்ம்ம் தாத்தோவ்…!” , என்று தாத்தாவிடம் புன்னகையுடன் கூறி கூப்பாடு போட்டான்.

 

கீழே இருந்த விஜயனுக்கோ போன உயிர் மற்றும் இடுப்பு அடுப்பு எல்லாம் இப்போதுதான் இதைக் கேட்டபின் வந்தது.

 “ஹப்பாடாஆஆ… ஜாலி எனக்கு கல்யாணம் நடக்கும்… 

மச்சான் என்ற உயிரேஏ…

என்ற நட்பேஏஏ…!!” , என இவன் ஒரு பக்கம் வாய்விட்டு சந்தோஷத்தில் புலம்பினான்.

 

பாட்டிக்கு வெட்கம் வந்துவிட்டது, ” ஹய்யோ ராஜா கீழ விடும்யாஆஆ…! ” என்று முகத்தை மூடிக் கொண்டார்.

 

தாத்தாவோ சிரித்து கொண்டே ,

“சரிடே…. சந்தோசம்… என்ற பொண்டாட்டியை கீழ விடும்…

சொன்ன சேதிக்கு நான்தாம்வோய் என்ற பொண்டாட்டியை தூக்கி சுத்தோனும்…”, என்றதும் பாட்டி இறங்கி தாத்தாவின் கன்னத்தில் இடித்துவிட்டு உள்ளே ஓடியேவிட்டார்.

 

“அப்போ உம்ம தூக்கிக்குறேன் தாத்தோவ்…”,என்று தூக்கி இரண்டு சுற்றும் சுற்றிவிட்டான்.

 

இதை தேவகயர்கள் கூட்டம் பார்த்து நகைத்துக் கொண்டிருக்க… 

விஜயன் பொலம்பியதிலும்…

பாட்டியின் வெட்கத்தையும்…

தாத்தாவின் பேச்சையும் கேட்டு ரகசியாவிற்கும் சிரிப்பு வந்துவிட… வீணையில் மீட்ட காணமாக ருத்ரனின் செவிக்கு வந்தது அது…!

 

அப்பக்கம் திரும்பி அவளைப் பார்த்தான். அங்கே வெண்சிலையாய் அமர்ந்து வண்ணம் பச்சரிசி பற்களுடன் சிரித்துக் கொண்டிருந்த அவனின் அழகு சுந்தரி மனைவியை ரசித்துக் கொண்டே அவளை நோக்கி கண்களில் காதலோடு கம்பீர நடையுடன் சென்றான்.

 

அங்கே இருந்த அனைவரின் பார்வையும் ருத்னனையே பின்தொடர, விஜயனோ, ‘இன்னைக்கு ஏதோ சம்பவம் இருக்கு…கன்ன்பாம்…’, என ஆர்வத்தில் தாத்தாவின் கையை பற்றிக் கொண்டு உற்று உற்று பார்க்க…!

(ஸேம் பீலிங் சாமிஹளா)

 

ரகசியா தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தும்…

இவ்வளவு நேர பேச்சில் மறந்திருந்த மேலே அவர்கள் அறையில் நடந்த நிகழ்வு தானாக நியாபகத்திற்கு வந்துவிட்டது.

 

 ‘அச்சச்சோ…!

 இப்ப எதுக்கு இங்க வர்றான் திஸ் நாட்டுகாட்டான்… மலைமாடு…

யாராச்சும் அவனை கூப்பிடுங்களேன்… 

 

வேணாடா கண்டிப்பா அறைய ட்ரை செய்வேன்… 

ஏன் ட்ரை…!

கண்டிப்பா அறைவனே… ஸோ வராதடா…!

 

ஹோ காட்… 

கிட்ட வந்துட்டானே… 

கடவுளே… கடவுளே… 

கிருஷ்ணா… கிருஷ்ணா…!’,

என்று இதயத்தின் லப்புடப்பு சத்ததுடன் விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.

 

உன்னில் 

சரணடைய 

திருடுவது 

குற்றமெனினும் 

அதை செய்த

வண்ணமே

இருப்பேன்

ஆயுளுக்கும்…!!!

ஆதலால் 

நீ எனை 

கைது செய்து

உன் 

இதயச்சிறையில்

அடைத்துவிடடி 

யட்சனியே…!!!

 

(ஆஹா ஆஹா என்னம்மோ நடக்கப் போது போலவே டார்லிங்ஸ்…

லப்டப் லப்டப் லப்டப்….)

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!