போகம் – 8
செங்கதிரோன் தன் கதிர்களால் வெளியே வண்ண மலர்களை தழுவி கொண்டிருக்க, அரண்மனை உள்ளே மானுடக் கதிரவனும் ஆசைக் கொண்டான் போல தனக்கான மலரைத் தழுவ…!!!
நேராக ரகசியாவை நோக்கி சென்ற ருத்ரனுக்கோ விழியின் பார்வை மொத்தமும் தன்னவளை காதலுடன் போர்த்தியிருந்தது…!
அதை எங்கே ரகசியா கண்டாள்,
‘கிருஷ்ணா… ஜீஸஸ்…அல்லா…’, என அனைவரையும் டிஸ்டர்ப் செய்தவள் மூடிய விழியை திறந்தாள் இல்லை தூரிகையானவள்…!
தன் முன்னாடி உருவம் நிழலாடுவதை உணர்ந்து,ஒரு விழியை மூடிக் கொண்டு மறு விழியை சிறிதளவு ஓட்டைப் போட்டுக் கொண்டு திறந்துப் பார்த்தாள்.
ருத்ரனோ ஸோஃபாவில் அமர்ந்திருந்தவளை நோக்கி குனிந்து,
தன் கைகளை அவளின் இடையை நோக்கி நீட்டிய வண்ணம் செலுத்தவும், அதை உணர்ந்த ரகசியா ஆஆஆ என கத்த வாயை திறக்க தயாராகும் நேரம்…
ருத்ரன், “அடியே குட்டி பத்மினி…
என்னட்டி மாமன பார்த்துட்டு அப்படியே உக்காந்திருக்கியே,
ஏம்டிஇஇ.. தூக்க சொல்ல மாட்டியா…?! “, என்றவன் அவளின் மடியில் இருந்த சாருவைத் தன்னவள் இடுப்பை உரசிய வண்ணம் தூக்க போனான்.
அவன் தொட்டதில் உடலில் ஷாக் அடிக்கப்பட்டு இரு விழியை முழுதாகத் திறந்தாள் ரகசியா.
மிக அருகில் மணாளன் முகத்தைக் கண்டு கண்கள் கலவரத்தில் கண்கள் விரிய, அவனோ அவள் மட்டும் பார்க்குமாறு விநாடிப் பொழுதில் கண்ணடித்துவிட்டு உதட்டை குவித்து முத்தம் போல காண்பித்து நிமிர்ந்து கொண்டான்…!
ரகசியாவோ,’ஹவ்…டேர்…யூ…?!
யூ…யூஊஊஊ….நாட்டுகாட்டான்…மலைமாடு…
டச் பண்ற… டச் பண்ற…ஸ்டுபிட்…’, என்று உதட்டை மட்டும் அசைத்து அவனைப் பார்த்து மௌனமாக முணுமுணுத்து அவனை வழமை போல் வாயில் வறுக்க தொடங்கவிட்டாள்.
(ஆமாம்மா அப்பளம் வறு…!)
ஓசி லவ் ஸீனிற்காக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு புஸ்ஸென ஆகிவிட…
பெரியவர்கள் தங்கள் வேலையை தொடங்கிவிட…
உள்ளேயிருந்த பாட்டியும் அதே இடத்தில் இருந்த தாத்தாவும் இவன் பூனையாதான் இருக்க போறான் போல எலிக்கிட்ட சண்ட போட்டுட்டே என்று ஒரே நினைப்புடன் தங்கள் வேலைகளை பார்த்தனர்.
(ஆமா…ஆமா… பூனைதான்…பூனையேதான்…!)
விஜயனோ, “அதான பார்த்தேன்…இவனாவது அவனோட கனவுப் பொண்ண மறக்கறதாவது… மாறுறதாவதுஉஉ…,” , என்று நினைத்துக் கொண்டு ருத்ரன் அருகில் சென்றான்.
கைகளில் இருந்த சாருவோ, “அட போ மாமோய்.
எவ்ளோ நேரம் தூக்குவனு பார்த்து பார்த்து தூக்கமே வந்துரும் போல…!
ஹய்யோ ஹய்யோஓஓஓ… ! …” , என்று தலையில் தட்டிக் கொள்ள…
“அப்படிங்களா மேடம்…!
மாமன பாவம் பார்த்து விட்றுங்க…!
இப்போ உன்னய தூக்காம காக்க வச்சதுக்கு பதிலா உன்னைய நானுஉ…”, என்றவன் குட்டிப் பெண்ணை ஒரு சுற்று சுற்றிவிட்டு மேலே தூக்கிப் போட்டு பிடிக்க….!
“ஹாஹாஹா… மாமோய்…போதும்.. ஹாஹா…போதும்…”, என்று குண்டு கன்னம் குழி விழ சிரித்தாள் சாரு.
ருத்ரன் தன் இடக்கையில் அந்த ஐந்து வயது குழந்தையை பிடித்துக் கொண்டு, “மாமன் ரொம்ப குஷில இருக்கன் குட்டி பத்மினி…
உனக்கு என்ன வேணும் சொல்லு… “,என கேட்டவன் ரகசியாவை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டே குண்டு கன்னத்தில் முத்தமிட்டான்.
ரகசியாவிற்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி,
“வில்லேஜ் வினிகர்…
கண்ண நோண்டி கங்காருக்கு போடுறேன் இரு…
லிப்ஸ லியோபார்டுக்கு போடுறேன்…யூ..யூ…”, என முணுமுணுத்து கழுத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டாள்.
சாருவோ புன்னகை முகத்தை சீரியஸாகவைத்துக் கொண்டு, “மொதல்ல என்ன கீழ விடும் மாமோய்…
எத்தன முற சொல்லிருக்கேன்.
என் பேரு சாரு… சாருமதி…
பத்மினி இல்ல போ…”,என்றதும்,
“ஓவராதாம்டி பண்ணுற குட்டி பத்மினி…
இரும்டி நான் கொம்பன்கிட்ட சொல்லி உன்ன கவனிக்க சொல்லுதேன்…”என்றபடி ருத்ரன் அவளை கீழே விட…
“ஹிஹிஹி…மாமோய்…
சும்மா சும்மா உல்லுலாய் பண்ணன்…
ஆனா சாரு மட்டும் சொல்லேன்…!”.
என்று அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.
விஜயனோ,”ஆமாட்டி வந்துட்டா சாரு மோரு பழச்சாருனு…”, என்றதும்…
“சித்தப்பு கொஞ்சம் கீழ குனியேன்…”, அன்பாக சாரு கூற…
“என்ன குட்டிஇஇ சாக்லேட் வச்சிருக்கியா…? “, என்று விஜயன் குழந்தையிடம் குழந்தையாக சாக்லேட் கேட்டு முட்டிப் போட்டு அமர…
சாருவோ,அவன் கிட்டே சென்று காதுக்குள்ளே,”சாருஉஉஉஉஉஉஉஉ… “, என்று கத்திவிட்டு அவன் கன்னத்தை கடித்துவிட்டு ஓடிவிட்டாள் சிட்டு குருவியாக.
“ஆஆஆஆ… குட்டி பிசாசு…இருக்கு ட்டி உனக்கு ஒரு நாளு.” , என்று காதை தேய்த்தான் விஜயன்.
மோனா வாயை கையால் மூடி சிரிப்பை அடக்க, ரகசியாவும் புன்னகைத்தாள்.
“உனக்கு தேவைதான் மாப்பிஇஇஇ… ஹாஹா…” ,என்றுவிட்டு ருத்ரனும் சிரிக்க, சிரிப்பலைதான்.
ருத்ரன் மீண்டும் அவளைப் பார்த்து விழுங்கிக் கொண்டே,
விஜயனை அழைத்துக் கொண்டு அவளைப் பார்த்த வண்ணம் நேராக எதிரில் இருக்கும் ஸோபாவில் அமர்ந்துக் கொண்டான்.
“மச்சா…ன் என்ன மச்சான் லுக்குஉஉ வேற எங்கயோ இருக்குஉ…?? ஆமா என்ன மச்சான் மேட்டர்… என்ன சந்தோஷமான சேதி…??!!”, என்று விஜயன் அலச…
பதிலே இல்லை ருத்ரனிடம்.
நியூஸ் பேப்பரை முகத்தின் முன்னால் வைத்துக் கொண்டு பார்வை மொத்தமாக தன்னவளை காதலாய் வருடியது…
விஜயானோ, “மச்சா……..ஆன்” , என்று கத்தி நியூஸ் பேப்பரை பிடிங்கி மேசையில் வைக்க…
“ஹான்… கூப்பிட்டியாஆ மாப்பி…” , என்றவன் பற்கள் தெரிய சிரித்து வைக்க…
‘என்னடா இது அதிசயம் நம்ம மச்சானா இது?!’…என மனதில் நினைத்த விஜயனோ, “என்ன மச்சா..ன் நீனு அந்த பொண்ணையேஏஏஏஏஏ….” , என்றுதும் ருத்ரன் அவன் காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்திருந்தான்.
“டேய் நல்ல நாலு அதுமா வாயில நாராசமாக கேட்க வச்சுடாத…
அந்த பொண்ணாஆஆ…
தங்கச்சி சொல்ல மாட்டிஹளோஓஓ ஸார்ரு…
சொல்லுடா தயிருஉஉஉ… தங்கசின்னு சொல்லுவேஏஏ…”,என்று ருத்ரன் தொடை சதையை திருடிக் கொண்டே கூற…
(தர்ம ஆஸ்பத்திரில நான் ஸ்பெஷல் பெட் உனக்கு ரெடி செய்து வைக்கறேன்… யூ டோன்ட் வர்ரி விஜயன் மேன் ஹிஹிஹி!)
‘தெய்வமே என் மச்சானுக்கு ஏதோ ஆயிடுச்சு போலவே…’,என்று நினைத்தவன்,
“நேத்து நீதான மச்சா…ன் அதுக்கும் ஃபோன்ல கிழிச்சு தொங்கவிட்ட என்னைய…”, என்று அலர்ட்டாக ஒரு அடி கேப் விட்டு எழுந்து தள்ளி நின்றுக் கொண்டான்.
ருத்ரன் எழுந்து அவன் தோள் வளைவில் கைப் போட்டுக் கொண்டே படிகளில் மேலே சென்று நின்ற, வண்ணம் தன்னவளை காதல் சொக்கப் பார்த்துக் கொண்டே
“அது நேத்துஉஉ அவ யாரோ எனக்கு ஆகாதவ மாப்பிஇஇ…
இது இன்னைக்கு அவ என்ற பொண்டாட்டி…” , என்றவன்,
உடனே வெட்கப்பட்டு,”அட போ மாப்பி ம்ஹூம்…”,என்க.
பின் முகத்தை நார்மல் மோடுக்கு கொண்டு வந்தவன்,
குரலில் காதல் தேக்கி தன் ஆருயிர் நண்பனிடம்,
“அதுவுமில்லாம இவ என்ற முத்துமயிலுஉஉ டா மாப்பி…
என்ற உசுரு…
என்ற மூச்சு…
என்ற சுவாசம்…
என்ற வாழ்க்கை… எல்லாமே அவதாம்டே…
உன்னை கூட்டிட்டு வந்ததே இந்த விஷயத்தை சொல்லத்தாம்டே…
நேத்து அவ வந்ததுல இருந்தே எனக்குள்ள ஏதோ செஞ்சதுடே…
ஆனா நான்தான் அத ஒதுக்கி வச்சேன்…
ஆனா இன்னைக்குதான் முழுசா நான் அதை உணர்ந்தேன்…
இவதான் மாப்பி என்ற முத்துமயிலு…
என்ற காதல் தேவதை…!” , என்று அவன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் நேயக்காதல் மட்டுமே.
விஜயனோ அடுத்த நொடி தன் நண்பனை ஆரத்தழுவியிருந்தான்.
இவனுக்கு தெரியுமல்லவா ருத்ரன் எப்படி தன் காதலை தேடி அலைந்தான் என்று…
அதுவும் கிடைக்காமல் தாத்தாவிற்காக கல்மாணமும் செய்ய முடியாமல் இருமனமாக அவன் தவித்த தவிப்பு அப்பப்பா ரண நேரங்கள் அவை…!
“மச்சா…ன் உன்ற உண்மையான நேசமும் அன்பும் ஏக்கமும் தேடலும்தான் மச்சான் அதுவா உன்கிட்ட உன்னோட காதல கொண்டு வந்து குடுத்திருக்கு… சந்தோசமா இருக்குவே…
வாழ்த்துகள் மச்சான்…
சீக்கிரமே தங்கச்சிக்கூட காதல் கைகூட உன்ற மாப்பினால என்னலாம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்றேன் மச்சா..ன்”, நெகிழ்வுகடன் ஆரம்பித்து பேசியவன்,
பின் கவுன்டர் வாங்க ஆசைபட்டு வாயை விட்டுவிட்டான் போல.
(பின்ன என்னங்க ஆண் மனசு ஒரு ஆணுக்குத்தானே மாப்பிஸ் புரியும் அவ்வ்…)
இதனிடையே பாட்டி அனைவரையும் சாப்பிட கூப்பிட்டுக் கொண்டிருப்பது கேட்வும்…
“அப்படியாஆஆ மாப்பிஇஇ… அப்போ உன்ற தங்கச்சி என்ற லவ்ஸ ஓகே பண்ணிட்டானா ஆண்டவனுக்கு மொட்டை போடுறதா வேண்டிகோ…சிறப்பா முடியும்… “, என்று கூறிவிட்டு கீழே செல்ல…
“கண்டிப்பா மச்சா…ன் மொட்டைதான அடிச்சுட்டாஆ…”, என்று கத்தி கூறிக் கொண்டே பின்னாடி சென்றவன் ,
சிறு விநாடிக்கு பின் உணர்ந்து “ஆஹ்ன் மொட்டையாஆஆஆ… “என நெஞ்சைப் பிடித்து ஜெர்காகிவிட்டான் விஜயன்.
********
கீழே ருத்ரனையும் ரகசியாவையும் டைனிங் அறையில் அருகருகே அமர வைத்து விருந்துணவு பரிமாறப்பட…
ருத்ரனோ தன் மனைவியை இடிப்பது போல அமர்ந்தான்.
நம் நாயகன் வேண்டுமென்றே அவளை தொட்டுத் தொட்டு இடித்துக் கொண்டும் அவள் எதையெல்லாம் ஒரு கடி கடித்துவிட்டு இலையில் வைக்கிறாளோ,அடுத்த நொடியே ருத்ரன் அதை தன் இலைக்கு எடுத்து வைத்து கொண்டும் புது மாப்பிள்ளை வேலைகளை தொடங்கியிருந்தான்.
‘சரி எல்லார் பார்வையும் நம்மிடம்தான் இருக்கிறது…’ , என ரகசியா அமைதியாக இருக்க, பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் செம காண்டாகிவிட்டாள்…!
பின்னே அது அவளுக்கு பிடித்த கோவா – ஜாங்கிரி அதையும் தூக்கிவிட்டான் கள்ளன் அவளின் எச்சில் பட்டதும்.
“மேன்… நீ என்ன செய்ற…
ஏன் என்னோடு லீஃப்ல இருந்து எடுக்குற…ஸ்டுப்பிட்…?!
என் ஸ்வீட் எடுக்காத இடியட்…
வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிட தெரியாதா…?!
இர்ரிடேட் செய்யாத மேன்…டோன்ட் டேக் மை ஸ்வீட்ஸ்..!”, என்று அவனுக்கு மட்டும் கேட்பது போல் எக்கி அவன் செவிகளில் கீச்சிட்டுவிட்டு உண்ணத் தொடங்க…
ருத்ரனுக்கோ நேற்று வரை பிடிக்காத இவள் துடுக்கத்தனமும் திமிரும் இன்று இப்போது அவள் தன் முத்துமயில் அல்லவா,
யாவும் கொள்ளை அழகாக தெரிய…!
அதனால் அவளை மேலும் சீண்டி விளையாட இவன் மனம் ஆசைக் கொண்டது…!
யாரும் அறியா வகையில் தன் இடக்காலால் அவள் வலப்பாதத்தை தன் வலது கால் மேல் இழுத்து வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டவனுக்கு தன்னவளை தீண்டிய சுகத்தில் மனம் லயித்துப் போக…
அவளோ வாயில் உணவுடன் “ஆ” என முழிக்க…
ருத்ரன் அவள் காதை நோக்கி குனிந்து…
தன் மீசை தாடி உரச…
“ஹே மினுக்கி…
தஸ் புஸ்ஸுனு இங்கிலிஷ்ல பேசாத சொல்லிருக்கேன்ல…
மாமனுக்கு புரிய பேசோணும் பார்த்துக்க…!
இல்லாட்டி இப்போ காலு அடுத்து முறை இந்த இடுப்புதான்…
அது இருக்கா இல்லையானு தொட்டுப் பார்த்துருவேன்டிஇ பொண்டாட்டிஇஇ….விளங்கதாம்டி…?!” , என்றவனின் விழிகள் பவளமேடுகளை தீண்டியது.
நேராக பார்த்து சிலையாய் இருந்த அம்முட்டை விழி இன்னும் விரிய ருத்ரனை நோக்கி திரும்பினாள் இல்லை ரகசியா…!
பின் அவனே மீண்டும் ,
“ம்ம்ம்…அப்றம் என்ன சொன்ன தக்காளி…
எடுக்காதவா…?! சரி இலைல இருந்து எடுக்கல…
வாயோட வாய்வச்சி ஊட்டிவிட்றியா…
இல்லாட்டி மாமனே அப்படியே ‘ஆ’ னு குருவி போல திறந்திருக்க இந்த ரோஸ் உதட்டுல இருந்து உறிஞ்சி எடுத்துக்கவா முத்துஉஉ…!”, என்று காதல் ரசம் வார்த்தைகளில் கொட்ட கொட்ட பேசி வைத்தான்.
அவனின் அனல் மூச்சும் தொடுதலும் அந்த கரகரத்த குரலும் ரகசியாவை ஏதோ செய்ய, இதை கேட்ட நொடி வாயை மூடி உணவை முழுங்கிவிட்டு தண்ணீரை கடகடவென குடித்தாள்.
பின் வேகமாக திரும்பி,அவனை திட்ட எண்ணியவள்…
“யூ…ஹவ் டேர்…” என ஆரம்பிக்க…
எங்கே அவன் அங்கே இருந்தால்தானே,எழுந்து முன்னே சென்றிருந்தான்.
‘ப்ச்… இந்த நாட்டுகாட்டானுக்கு எவ்ளோ திமிரு…
எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்…
ரியல் புருஷன்னு நினைப்பு…
இவனை என்ன செய்தால் ஆகும்…
இடியட்… ப்ளாக் காண்டாமிருகம் …
இருக்கு மேன் இன்னைக்கு உனக்கு…’ ,என்று மனதில் நினைத்தவள் சாப்பாட்டை நன்றாக அமுக்கு அமுக்கென வயிற்றில் அமுக்கி விட்டு கையை அலம்ப மோனாவுடன் சென்றாள்.
அங்கே நின்றிருந்த தலைவனோ,அவள் அருகில் வந்து கண்ணடித்தவன்,
“என்னடி புருஷன தேடின போல….??!!……
நைட்டு பார்க்கலாம்டி பாப்பாஆஆ…
ஆஹ்ன் இதோ வரேன் பெருசு…”, என்றுவிட்டு தன் கையை அவள் சேலை முந்தானையில் துடைத்துவிட்டு நிற்காமல் தாத்தாவை நோக்கி சென்றுவிட்டான்.
“டர்ட்டி மேன்… துடைக்க வேற டவலே இல்லாத போல இவ்ளோ காஸ்ட்லி ஸேரியை நாஸ்தி செய்றான்… வில்லேஜ் வினிகர்…” , என்று முனுமுனுத்துவிட்டு கையை கழுவிவிட்டு பாட்டியிடம் சென்றுவிட்டாள் காதலுக்கு காஸ்ட்லி எங்கே என தெரியாத மங்கை…!
(அதான கேளுமா நல்லா…!?)
இதற்கிடையில் விஜயனும் பெண்களிடம் ரவுசு பண்ணி மொக்கை வாங்கிக் கொண்டிருந்தான்.
மோனா அவனிடம் சென்று, ” சாப்பிட்டிங்களா சா…ர்?”, என்று புன்னகையுடன் கேட்க…
‘நம்மையா கேட்கறா…’ என சுத்தி முத்தி பார்த்தவன்,
அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளைக் கண்டு,
அட நம்மைதான் போல என்று உறுதி செய்துக் கொண்டு,
“சாப்பிட்டேன் பொண்ணு… நல்லா ரெண்டு ரவுண்டு…”,என்றவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“யூவர் ஷர்ட் இஸ் வெரி ஸ்மார்ட் சார்…” , என்று கூறி ஓடியேவிட்டாள் வெட்கத்தில்.
“த்தோடா அவ்ளோ கேவலமாவா இருக்கு…
சுமாருனு சொல்லிட்டு போறா…” என்ற வண்ணம் பக்கத்தில் சுவற்றில் இருந்த கண்ணாடியை பார்த்தான்.
‘கொஞ்சம் சுமார் கலர்தான்டா சட்டை விஜயா…
சிவப்பு சட்டை போட்டிருகலாம் ச்ச அதை போட்ருந்தா பொண்ணுங்க இந்த மாமன் அழகு சொக்கி மயங்கி இருப்பாள்ஹ…’,என்றுவிட்டு ருத்ரனின் முறைப்பில் அவனிடம் சென்றுவிட்டான்.
(இவனுக்குலாம் எங்க இருந்து குபிட் வேலை செய்ய போகுது செல்லாஸ்…!!)
ருத்ரன் விஜயனுடன் நகைக் கடைக்கு சென்றிருக்க,
ரகசியா அந்த இளம் பெண்களுடன் கதையளக்க தொடங்கி விட்டாள்.
அங்கேயும் ஒரே ருத்ரன் புகழாரம்தான் அங்கே ஆஹா ஓஹோ வென! அடப் போங்கடா என ஆகிப் போனது ரகசியாவிற்கு…
‘ஏன் தனக்கு மட்டும் வில்லனாக இருக்கிறான்..?!
என் கண்ணில் ஹுரோவாக எங்கேயாவது இவனை கண்டிருக்க கூடாதா…?!’, என ஒரு நொடி யோசித்தேவிட்டாள் …
ஆக மொத்தம் அவன் மேல் நல்லெண்ணம் கொஞ்சமே கொஞ்சம் நிறையவே வந்துவிட்டது…!
(ஆஹாஆஆ வந்துடுச்சுஉஉஉ ஆசையில் ஓடி வந்தேன்…)
***********************
இப்படியாக நிலவன் வரும் வேலையும் வந்துவிட!!!
உதயரகசியாவை பாட்டியும் மற்ற திருமணம் ஆகிவிட்ட பெண்கள் அழைத்து மஞ்சள் பூசி நலங்கு வைத்துவிட்டனர்.
ரகசியாவோ ‘ஹால்டி’ நிகழ்ச்சி என நினைத்து குஜாலாக தண்ணீரில் ஆட்டம் போட்டாள்…
(கிகிகி)
பின் பாட்டி அவளிடம் ரூபி சிவப்பு நிற மெல்லிய மைஸுர் பட்டுப்புடவையும் அதற்கேற்றாற் போல ரூபி ப்ளாட்டின செட் நகையும் குடுத்து மோனாவை உதவிக்கு அனுப்பி தயாராக சொல்ல…
இரவு ஏதோ அறிவுப்பு பார்டி என நினைத்து மெல்லிய ஒப்பனையுடன் “வாட்டர்ஃபால்” எனும் மேலே இருபக்கமும் இழுத்து நடுவில் பின்னி கழுத்தின் கீழே விரித்து விடப்படும் சிகை அலங்காரத்துடன் தயாராகி வந்தவளை திருப்பி குண்டு மல்லியும் ஜாதி மல்லியும் வைத்துவிட்டு திருஷ்டி சுத்தி எடுத்தார் பாட்டி…!
பூஜை அறைக்கு அழைத்துச் சென்று இறைவனை வணங்கி அவளிடம் ஒரு வெள்ளி சொம்பை குடுக்க…
அப்போதும் பல்ப் எரியவில்லை மேடமிற்கு பழைய தமிழ் படங்கள் பார்த்திருந்தால்தானே புரிந்திருக்கும் மங்கைக்கு…!
(ஹிஹிஹி ஜோக்கத்தை)
“நம்ம ராஜா முரடனா இருந்தாளும் ரொம்ப நல்லவன்டா.
அவனை புரிஞ்சிக்க முயற்சி செய்டா தங்கம்மா…
சீக்கிரம் எங்களுக்கு கொள்ளு பேர பசங்கள பெத்து குடுத்துருங்க…”, என்று புன்னகை முகமாக அவளின் உச்சியில் முத்தமிட்டார்.
இப்போதுதான் விளங்கியது ரகசியாவிற்கு என்ன பார்டி என்று…!
பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டாலும் பாட்டியின் சிரிப்பை கெடுக்க விரும்பாமல் மெலிதான புன்னகை ஒன்றை பூத்துவிட்டு அவருடன் தன் ஆகாத ஆத்துகாரன் அறையை நோக்கி சென்றாள்.
தாத்தாவோ இதற்கெல்லாம் முன்பாக ருத்ரனை அழைத்துச் சென்று தன் அருகில் அமர வைத்து,
“ராஜா… என்ற பேத்தியை எங்களுக்காகதான் கல்யாணம் கட்டிக்கிட்டீரு சரிதேன்…
ஆனாலும் எங்க தங்கம்மாவ ஆசையா பார்த்துக்கப்பா…
அவ நம்ம தங்கம்மா ராஜா…
எவ்வளவோ கஷ்டபட்டுட்டா ராஜா இந்த சின்ன வயசுல…
இனி நாமதான் அவளுக்கு எல்லாமே…
நீவிர்தாம் வோய் அனுசரணையாக போகோனும்…
சின்னப் பொண்ணு கோவப்பட்டாலும் பக்குவமா பேசும்யா …
இனி ஒரு தரம் நம்மைவிட்டு பிரியக்…..”,என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே அந்த வார்த்தையைக் கூட கேட்கப் பிடிக்காமல் இடையே பேசினான் ருத்ரன்.
“இந்தாரு பெருசு நேத்து வரைக்கும் நான் வேற மாதிரிதான் இருந்தேன்…
ஆனா இன்னைக்கு அவ என்ற பொண்ஜாதி…
நீவிர் கவலையேப் படக்கூடாது வோய் …
போய் கொள்ளு பேரபசங்களுக்கு தொட்டில் வாங்கும் தாத்தோய்…
நான் என்ற முத்துமயில பார்த்துக்குறேன்…
கடமைக்காக இல்லை மனசார உள்ளாரமாதான் சொல்லுதேன்…
சந்தோஷமா பெருசு…”, என்று கள்ளச்சிரிப்புடன் ருத்ரன் கூறியதும் அவனை எட்டி அணைத்துக் கொண்டார் அந்த பாசக்கார மனிதர்.
“சந்தோஷம்டே ராஜா… நேரமாச்சே போகும் வோய்…” , என்று அவனை தள்ளிவிட்டார்.
விஜயனும், “வாழ்த்துக்கள் மச்சா…ன் சீக்கிரம் நீயும் தங்கச்சியும் சேர்ந்தாப்ல எனக்கு பொண்ணு பார்த்து குடுங்க…”,என்று ருத்ரனைத் தழுவிக் கொள்ள…
“ஹாஹா ஆசையப் பாரு மாப்பிக்கு நான் பார்பனு…
உன்ற தங்கச்சியா பார்த்தா உண்டு மாப்பிஇஇ…”, என்று விஜயனை இறுக்கி தூக்கி கீழே இறக்கிவிட்டு சென்றான் தன்னறையை நோக்கி.
அங்கே நின்றிருந்த விஜயனோ,ருத்ரன் சென்றதும் தாத்தாவிடம் இப்போது கூறினான் அவனின் தூயக் கனவுக்காதலையும் அதற்காக அவன் செய்த தேடல்களையும்… !
அதனை கேட்டபின்தான் மனதில் அவனை தனக்காக கட்டாயப் படுத்தினோம் என்ற குற்ற உணர்வு சென்று நல்லது செய்திருக்கிறேன் நான் என் பேரனுக்கு என்று இதம் பரவியது…!
மீசையை முறுக்கிக் கொண்டார் முகத்தில் புன்னகை பெருமையுடன், சிங்கமாக செல்லும் பேரனைக் கண்டு…!
********************
தங்கள் அறைக்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்றவளின் கால்கள் அந்தரத்தில் மிதக்க, இதழ்கள் களவாடப் பட்டிருந்தது அவளின் போகனால்.
விழிகள் விரிய,”ம்ஹக்”,என்று அவளின் சத்தம் அவனிதழுள்…!
தன் இதழ் விரிய நா கொண்டு யுத்தம் அவன் செய்தான் இவளிதழுள்…!
இரும்புக் கரங்களால் அவளிடையை அழுத்தி தலைவிக்கு சோதனையை இவன் செய்ய…!
மீனாக துள்ளி இறங்குவேன் என தன் அங்கம் அசைத்து
பவளமேடுகள் உரசி தலைவனுக்கு சோதனை இவள் செய்ய…!
விழிகள் மூடினான் இதம் தாங்காமல் சொக்கநாதன்…!
வெண் பஞ்சு கரத்தால் தாக்கினாள் இதழிலும் இடையிலும் அழுத்தம் தாங்காமல் மீண் விழிகள் கொண்ட மீனாட்சி…!
இடை போதாதென அவளின் பஞ்சனைகள் நோக்கி கையை மனாளன் நகர்த்த…!
போதுமடா உன் இம்சை என்னால் தாள முடியவில்லை என மனாளினி விழிகளை மூட…!
அமுதம் கிடைத்த வெற்றியில் இன்னும் வேண்டும் என நா கொண்டு மாதுளம் சாரிழுத்து இன்னும் இன்னும் வேண்டும் என மாதுலன் கேட்க…!
இழுவிசையின் அவஸ்தை தாங்காமல்,”ம்ம்..ம்ம்…” , என முடியாமல் மூச்சு முட்டி தன்னவனின் கேசம் பிடித்திழுத்தாள் மாதுலினி…!
என் மோகம்
பற்றி எரிய
உன் வாசம்
தூபம் போட்டு
தாபம் பற்றி
தாகம் எடுக்குதடி…!!!
என் போகம்
தீர்த்து என்
சாபம் மீட்க
அணைத்து கொள்ளடி
என் யட்சினியே…!!!
( எப்பப்பாரு நல்ல ஸீன்ல ப்ரேக் விட்றதே உன் பொழப்பா போகுச்சு…அப்டிதான செல்லாஸ் இப்போ என்னை 65 போடுறீங்க ஹிஹிஹி)