வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31

4.8
(17)

வஞ்சம் 31

நடந்த அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவன் தனது கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீரை கண்களை மூடி உள் இழுத்துக் கொண்டு,

“இப்போ சொல்லு ஸ்ரீ நிஷா நான் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டேன்.. இனி நீ தான் ஒரு சரியான முடிவு எடுக்கணும்..
நான் செய்த தப்புக்கு தண்டனை ஏதாச்சும் கொடு நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்…

ஆனா என்ன விட்டு மட்டும் போய்விடாதே.. திரும்பவும் இந்த பிரிவை என்னால தாங்க முடியாது… அதோடு ஆதிராவையும் முத்து என்னால பிரிந்து வைக்க முடியாது எத்தனை வருஷமா நான் என்னோட ஆதிராவையும் உன்னையும் பிரிந்து இருந்திருக்கேன்..

அவளோட குழந்தை பருவத்தில் இருந்து இப்ப வரைக்கும் அவள் செய்த சேட்டைகள் சிறு சிறு குறும்புகள் தவழ்ந்தது, நடந்தது முதல் முதலாக பேசிய வார்த்தை இதெல்லாம் நான் கேட்க எனக்கு கொடுத்து வைக்கல…

இனியாவது என்னோட பிள்ளையோட வாழ்க்கை பயணத்தில் நான் ஒரு தோழனா அவளுக்கு கை கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்.. ப்ளீஸ்.. நீ அதை மட்டும் என்கிட்டே இருந்து பறிச்சுராத ப்ளீஸ்..

இதுல ஒரே ஒரு உண்மையை மட்டும் நீ நல்லா புரிஞ்சுக்கணும் உன்னைய விரும்பினது தான் முழுக்க முழுக்க நான் செய்த அனைத்து பாவத்திற்கும் மூல காரணமே உன்னை நான் ரொம்ப ரொம்ப டீப்பா லவ் பண்ணி தொலைச்சுட்டேன்…

அந்த ஆழமான காதல்தான் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்தது என்னை ஒரு ராட்சசனா மாத்தினது..

ஸ்ரீநிதி செய்த தப்புக்கு நான் உன்னை பழிவாங்கி இருக்கக் கூடாதுதான்.. உன்னால என்ன மன்னிக்க முடியாது ஆனா ஆதிராவுக்காகவாவது என்னை நீ மன்னிச்சுடேன் அவளுக்கு எதிர்காலத்துல அப்பான்னு ஒரு துணை தேவை ஆதிரா வளர வளர அப்பா இல்லை என்று சொல்லி அப்பாவின் பாசத்துக்காக ஏங்கித் தவிக்கத் தொடங்கிடுவாள்..

என் பொண்ணு அப்பா இல்லாத அனாதையா இந்த சமூகத்தில் வளர கூடாது நான் பட்ட கஷ்டம் என் பொண்ணு படக்கூடாது..” என்ற அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனது கண்ணில் இருந்து ஒரு துளி நீர் கீழே விழுந்தது.

“என்னை ஏற்றுக்கொள் ப்ளீஸ் உன்னோட வாழ்க்கையிலாவது எனக்கு இடமில்லாமல் போனாலும் பரவாயில்லை ஆதிராவோட வாழ்க்கையில நான் தந்தையாக இணைந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுறேன்..

என்னோட அம்மாவின் இறப்புக்கு காரணமானவள பழி வாங்கணும் என்றதால தான் நான் இவ்வளவு கொடூரனாக மாறினேன்.

உண்மையில் சொல்லு ஸ்ரீ நிஷா அம்மா இறப்பதற்கு ஒரு பொண்ணு தான் காரணம் அந்த பொண்ணு அம்மாவ கேவலப்படுத்தி அவமானப்படுத்தி அந்த வேதனை தாங்க முடியாமல் தான் அம்மா இறந்தாங்க என்று நான் அறிந்தால்..

அந்த பொண்ணு மேல எனக்கு வெறுப்பு வரும் தானே.. எங்க அம்மாவை கொண்டவளை கொல்லனும் என்ற வெறி மனதுக்குள் தோன்றும் தானே..” என்று நியாயத்தை ஸ்ரீநிஷாவிடமே கேட்டான்.

ஸ்ரீநிஷா அவன் கூறியது அனைத்தையும் கையை கட்டிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் அவளிடம் நியாயத்தை கேட்க மெல்ல வாய் திறந்தாள்.

“இளஞ்செழியன் உங்க பக்க நியாயத்தை நீங்க சொல்லிட்டீங்க பட் என் பக்கம் சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்ல.

நான் அன்னைக்கே எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை குழந்தை வந்துடுச்சு குழந்தைக்காக என்னை ஏற்றுக் கொள் என்று சொல்லுவதெல்லாம் சின்ன புள்ளத்தனம்.

உங்க அம்மா இவ்வளவு தைரியமா உங்களை வளர்த்தார்களோ அதைவிட 100 மடங்கு அதிகமா நான் என் புள்ளைய வளர்ப்பேன் இப்படி ஒரு அப்பா இருக்கிறதா என் பிள்ளைக்கு தெரிய வேணாம் என்ன தான் நீங்க நியாயம் சொன்னாலும் எனக்கு நீங்க செய்தது அநியாயம் தான் ஸ்ரீநிதி அப்படி செய்ததாகவே இருக்கட்டும்.

ஒரு பெண்ணின் கற்பின் மீது எப்படி நீங்க கை வைக்கலாம் அதுவும் அத்துமீறி.. அது மிகப் பெரும் தவறு. பெண்ணின் பலவீனம் தான் கற்பு என்று நினைத்துவிட்டீர்களா? ஆண்களை ஏன் கடவுள் மிகவும் பலமானவனாக படைத்தான் என்று தெரியுமா..?

பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று தான் இப்படி துன்புறுத்த அதனையே ஆயுதமாக பயன்படுத்த வேண்டுமென்று கடவுள் நினைத்திருக்க மாட்டார்.

அப்படிப்பட்ட விஷயத்தை நீங்க எப்படி இவ்வளவு கீழ் தரமா பயன்படுத்துறீங்க என்னோட அனுமதி இல்லாம என்னோட உடலை தொட நீங்க யாரு..?

எப்படி என்னால உங்கள முடியாது.. எத்தனை நாள் படுக்கையில் நான் புழுவை போல சித்திரவதைகளை அனுபவித்திருப்பேன்..

அப்போ அழுத அழுகை எல்லாம் உங்களோட காதுல கேட்கவில்லை தானே.. இவ்வளவு செய்துட்டு எப்படி எந்த மூஞ்ச வச்சுட்டு வந்து என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க.. உங்கள மன்னிக்கவே முடியாது.

உங்களை நினைக்கவே அருவருப்பா இருக்கு..
உங்க மேல ஒரு சிறிய அன்பு இருந்தாலும் பரவால்ல எனக்கு உங்க மேல இருக்குறது முழுக்க முழுக்க வெறுப்பு மட்டும் தான் அந்த வெறுப்பு வந்து ஆதிராவை பாதிச்சிருமோன்னு எனக்கு பயமா இருக்கு..

உங்களோட சேர்ந்து வாழ சான்ஸ் இல்லை ஆனால் நீங்கள் கடைசியா சொன்னீங்க அம்மாவை கொன்ன பெண்ணை நான் தண்டித்து இருக்கணும்னு சொல்லி நீங்க தண்டிப்பதற்கு எவ்வளவு வழி இருக்கு நீங்க தெரிவு செய்த வழி பிழை நீங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கலாம்..

தண்டனை கொடுக்கிறதுக்கு பல வழிகள் இருக்கு எனக்கு விளங்குது என் குழந்தையை நான் எப்பவும் எந்த ஒரு சின்ன விஷயத்திலும் அவளிடம் எந்த கோபத்தையும் வெளிப்படுத்தினதில்லை.

என்னோட வாழ்க்கைக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறாள் ஆதிரா. என்னோட வாழ்க்கையின் முழு அர்த்தம் அவள் தான்.

அம்மா அந்த அம்மா என்ற அடையாளத்தை அவள் எனக்கு பரிசாகத் தந்திருக்கின்றாள். நான் அவளை ரொம்ப ரொம்ப பாசமா தான் பாத்துக்குறேன் நீங்க கவலைப்பட தேவையில்லை.

என்னோட பிள்ளைக்கு அப்பா என்கிற உறவே தேவையில்லை நான் எல்லாமாய் இருந்து என்னோட பிள்ளையை பாதுகாப்பாக வளர்ப்பேன்.

எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அந்த உறுதியும் இருக்கு கடவுள் அருளாலே என்னோட புள்ளைய நான் நல்லபடியா வளர்த்தெடுப்பேன்.

ஒரு பயமும் உங்களுக்குத் தேவையில்லை அதோட எங்களுக்காக நீங்க கஷ்டப்படவும் தேவையில்லை உங்க வேலை எதோ அதை பார்த்துக்கொள்ளுங்கள் நான் இதை உங்கள் மேல் இருக்கிற கோபத்துல சொல்லல நான் நிதானமாக இந்த முடிவை எடுத்தேன்.

எனக்குத் தெரியும் நீங்க எப்படியும் என்னை கண்டுபிடித்து விடுவீங்கன்னு நீங்க கண்டுபிடிக்கும் வரையும் அந்த நாட்கள நான் எண்ணிக் கொண்டுதான் இருந்தேன்.

நீங்க கேட்கும் கேள்விகளுக்கு நான் தெளிவான பதில் சொல்லணும்ல்ல இப்ப அதுக்கான தருணம் வந்துட்டு உங்கள்ட்ட இருந்து இன்னும் என்னால ஓடி ஒழிய முடியாது.

ஆதிரா இளஞ்செழியன் என்கின்ற கொடூரனின் மகளாக வளரத் தேவையில்லை வளரவும் வேண்டாம்.. போனதெல்லாம் போகட்டும் உங்க நிழல் கூட அவள் மேல படக்கூடாது ப்ளீஸ் எனக்காக இந்த ஒன்ன மட்டும் செஞ்சிடுங்க அடுத்தது இனிமே இப்படி என்னைய ஃபாலோ பண்ணி தொல்லை பண்ண வேணாம் நீங்க என்னதான் தலைகீழாக நின்றாலும் என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை..” என்று கூறி முடித்துவிட்டு பெருமூச்சு ஒன்றை விட்டாள்.

“அப்போ இதுதான் உன்னோட கடைசி முடிவா..? ஸ்ரீநிஷா என்னோட தப்புக்கு மன்னிப்பே இல்லையா..?” என்று முழங்காலில் இருந்து அவனது வதனத்தை கைகளால் மூடி அழத் தொடங்கினான்.
ஸ்ரீ நிஷா கூறிய அனைத்து விடயங்களும் சரியானது இதிலிருந்து எப்படி அவன் அவளுடன் இணைவது என்று புரியாமல் அழுதான்.

ஒரு ஆண்மகன் அதுவும் பொது இடத்தில் இவ்வாறு கண்ணீர் சிந்துவது சரிதானா என்று அவனது நெஞ்சம் அப்போது அதனை எண்ணிப் பார்க்கவில்லை அவளிடம் இருந்து எப்படியாவது தன்னுடைய தப்புக்கு மன்னிப்பு யாசிக்க வேண்டும் என்று அந்த மனம் கதறி அழுதது.

“ப்ளீஸ் இளஞ்செழியன் இப்படி அழுது நாடகம் ஆட வேண்டாம் நீங்க என்னதான் செய்தாலும் உங்களை ஏத்துக்க முடியாது ரோட்டுல திரியிற பொறுக்கிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் பொண்ணுங்கள பலவந்தமா பலாத்காரம் பண்ற எல்லாருமே என்னோட கண்ணுக்கு பொறுக்கிகள் தான் நீங்களும் அப்படித்தான் எனக்குத் தெரியுறீங்க உங்களோட பிஹேவியராலதான் நீங்க இப்படி ஆனீங்க உண்மையிலேயே நீங்க எனக்கு நல்ல விஷயம் செய்யணுமுன்னு நினைச்சீங்கன்னா என் கண்ணு முன்னாடி இனிமே வராதீங்க எனக்குன்னு இருக்கிற நிம்மதியே தயவுசெய்து கெடுக்காதீங்க ப்ளீஸ்..” என்று ஸ்ரீ நிஷா நிதானமாகக் கூறினாள்.

“ஓகே ஆதிராவுக்காக நீ என்னை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை ஆனால் எப்போதும் உனக்காக நான் காத்திருப்பேன் உன்ன விட வேற ஒருத்தியே என்னால மனசுல நினைக்க கூட முடியாது இந்த வாழ்க்கையில நீ மட்டும் தான் வேற யாருக்கும் இடமில்லை.

ஓகே உனக்கு எப்ப என்ன மன்னிக்கணும் என்று தோணுதோ அப்ப மன்னிச்சுக்கோ நீ மன்னிக்கும் வரைக்கும் நான் உனக்காக எப்போதும் காத்திருப்பேன்.

இதே இளஞ்செழியனாக உன்னோட காதலனாக, உன்னோட புருஷனாக, ஆதிராவின் அப்பாவாக எப்போதும் நான் காத்திருப்பேன்..” இன்று நெஞ்சில் கை வைத்துக் கூறினான்.

“ரொம்ப சந்தோஷம் அப்படி ஒரு நிலைமை வரவே வராது எனக்காக வெயிட் பண்ணி உங்க வாழ்க்கையை நீங்க கெடுத்துக்கொள்ள வேணாம் இளஞ்செழியன் பாய்.. எனக்கு பிளைட்டுக்கு லேட் ஆகுது..” என்று கூறிக்கொண்டு தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த ஆதிராவை தேடிச் செல்ல ஆதிரா அழகாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள்.

அவளை அழைத்துக்கொண்டு காரில் ஏறிச் சென்றாள்.
இளஞ்செழியன் அசைவற்று அதே இடத்தில் இருந்து கொண்டு ஸ்ரீநிஷா, ஆதிராவை இருவரின் உருவத்தையும் மனதுக்குள் உள்வாங்கி சேமித்து வைத்துக் கொண்டான்.

அவனது இதயமோ பாரமாக இருந்தது ஸ்ரீநிஷா இவ்வாறு நடந்து கொள்வாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை..

எப்படியாவது ஆதிராவை காரணம் காட்டியாவது அவளுடன் வாழ்வில் இணைந்து கொள்வோம் என்று அல்லவா நினைத்திருந்தான்.

அவன் கட்டிய மனக்கோட்டைகள் அனைத்தும் உடைந்து தவிடு பொடியாகிப் போயின. மீண்டும் நரகத்திற்குள் செல்வது போல அவனுக்கு தோன்றியது.

ஏன் வாழ்கிறோம் எதற்கு வாழ்கிறோம் என்றெல்லாம் அவனது எண்ணங்கள் அலைபாய்ந்தன. ஆதிராவின் பால் மனம் மாறாத முகம் அவனது கண்களில் வந்து வந்து போனது.

நாம் ஒன்று நினைக்க ஆண்டவன் ஒரு கணக்கு போடுவது போல.. இளஞ்செழியன் வாழ்க்கையில் அவனது மாறுபட்ட எண்ணங்களால் பல எண்ண முடியாத அசம்பாவிதங்கள் நடந்தேறிவிட்டது.

அவனது பழிவெறி அவனது வாழ்க்கையையே தலைகீழாக திருப்பிப் போட்டு விட்டது. எதனையும் அலசி ஆராய்ந்து அவன் செய்திருந்தால் இப்படியான ஒரு இக்கட்டில் மாட்டியிருக்க மாட்டான்.

எல்லாம் இருந்தும் அவன் செய்த பிழையால் அனாதையாக, நடைபிணமாக வாழத் தொடங்கி இருந்தான்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இப்படித்தான் ஏதோ ஒரு சிறு பிழை அல்லது அவர்களது அறியாமை அவர்களை வேறொரு பாதையில் செல்ல காரணமாக அமைந்துவிடும்.

சில பேருக்கு அது விதி வசத்தால் அமைந்துவிடும். சில பேர் அவர்களது குணத்தினாலேயே அவ்வாறு வேறு பாதையில் சென்று விடுவர்.

 

ஹாய் பிரண்ட்ஸ் இந்த அத்தியாயத்துடன் கதை நிறைவடைந்து விட்டது.

அடுத்த எபி லாக் உடன் வருகின்றேன்…

கதையைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை என்னுடன் பகிரவும்…

உங்கள் அன்புத் தோழி

இயல் மொழி 😍😍😍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!