107. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(5)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 107

 

அறையினுள் வந்த வினிதாவின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி பக்கமாக வைத்து விட்டு அவளைத் தன்னருகே அமர வைத்தான் தேவன்.

 

அவளின் கையைப் பிடித்தவன், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன தேவ்?” கேள்வியாக அவன் முகம் பார்த்தாள் பாவை.

 

“இல்லடி என்னால நம்பவே முடியல. உன்னைப் பிரிந்து வாழ்ந்த அந்த டைம்ல ரொம்பவே உடைஞ்சு போயிருந்தேன். என் பக்கத்தில் நீ வந்து உட்கார்ற காலம் வருமானு நினைக்கிறப்போ கண்ணீரே வந்துடும். இன்னிக்கு நீ என் கிட்ட இருக்கே, என் பொண்டாட்டியா. எனக்கு இது கனவா நனவான்னே தெரியல” என்று கூற,

 

“எனக்கும் அப்படித் தான் தேவ். உன்னை அவ்ளோ காதலிச்சேன். நம்ம காதல் கண்டிப்பா ஒன்னு சேரும்னு நம்பிக்கை இருந்துச்சு. ஆனாலும் ஒவ்வொரு நாளும் பயத்தோட, பதட்டத்தோட போச்சு.

 

உன் கூட எப்படி சேருவேன், உன்னைத் திரும்ப எப்போ சந்திப்பேன், என்ன நடக்கும், நீ என் மேல கோவமா இருப்பியா, உனக்கு என் பிரச்சினையை எப்படி தெரிய வைப்பேன், அப்பாவை எப்படி சமாளிப்பேன்னு ஏகப்பட்ட கேள்விகள். உள்ளுக்குள்ள பெரிய போராட்டத்தை வெச்சுட்டுத் தான் இருந்தேன்.

 

ஆனால் இன்னிக்கு நீ எனக்கே எனக்காக கெடச்சிட்ட. நம்ம காதலும் உறுதியும் தான் நம்மளை சேர்த்து வெச்சிருக்கு தேவ். லவ் யூ சோ மச்” அவனது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் வினி.

 

“லவ் யூ செல்லக் குட்டி” அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

 

எழுந்து சென்று ஒரு அலுமாரியைத் திறக்க, அதிர்ந்து தான் நின்றாள் வினி. அதில் அவள் உபயோகிக்கும் பர்பியூம், உடைகள், செருப்புகள், க்ரீம் வகைகள், பர்ஸ், மாலை என நிறைய இருந்தன.

 

“என்னடா இவ்ளோ திங்க்ஸ்?” அவள் விழி விரிக்க, “எல்லாம் என் வினிமாவுக்காக. உன்னைப் பிரிஞ்சு இருந்த டைம்ல வாங்கின திங்ஸ் கூட இருக்கு. இதையெல்லாம் உனக்கு போட்டு அழகு பார்க்கனும்.

 

என்னால, எனக்காக, என் கூட வாழ நீ நிறையவே கஷ்டங்களை அனுபவிச்சுட்ட. இனி உன்னை எந்த கஷ்டமும் நெருங்காம நல்லா பார்த்துக்கனும். உன்னை மகாராணி மாதிரி வெச்சு தாங்கனும் வினி” என்றவனை அன்புடன் நோக்கினாள் நங்கை.

 

“நீ எனக்கு கெடச்ச அருள் வினி! எனக்கு எவ்ளோ கோபம் வரும். அந்த டைம்ல நிறைய பேசுவேன். உன் கிட்ட ஹார்ஷா நடந்துப்பேன். அப்படிப்பட்ட என்னை பொறுத்துப் போறது பெரிய விஷயம் தெரியுமா?” என்றவனைப் பார்த்து,

 

“உனக்கு கோபம் அதிகம் தான் ஒத்துக்கிறேன். ஆனால் அதை விட பாசம் அதிகம். உன் கோபம் கூட அன்பை மையப்படுத்தி தான் இருக்கும். அது ஏதோ வகையில் காயப்படுத்தினாலும், உன்னோட அன்பும், தேடலும் அந்தக் காயத்தை ஒன்னுமே இல்லாம பண்ணிடும். உன் அன்பு எனக்கு அளவில்லாம கிடைக்குதுன்னா உன்னோட கோபத்தையும் நான் தாங்கிப்பேன் தேவ்! அதுக்குப் பெயர் பொறுத்துப் போறது இல்ல, புரிஞ்சு நடந்துக்கிறது” என்றவள் மீது காதல் பெருகியது அவனுக்கு.

 

தனக்கு இப்படியும் ஒரு காதலா?

நினைக்கவே ஆனந்தமாக இருந்தது‌. அவனை அவனாக நேசிக்க ஒருத்தி! இதை விட வேறென்ன வேண்டும் அவனுக்கு?

 

“நீ எனக்காகப் பிறந்தவ இல்ல, எனக்காகவே அந்த பிரம்மனால படைக்கப்பட்டவ வினி! உன் அன்புக்கு முன்னால் நான் எப்போவும் ரெண்டாவது இடத்துக்குப் போயிடறேன். நீ என்னை முந்திக்கிற. காதல்ல இந்தத் தோல்வி கூட ஒரு வகை சுகம் தான்ல? காதலிக்கிறது சுகம்னா, காதலிக்கப்படுவது வரம்” என்று சொன்னான் தேவன்.

 

“பேசிப் பேசி என்னை என்னவோ பண்ணுற தேவ்! என்ன சொன்னாலும் எனக்கு உன் காதல் தான் பெஸ்ட்! எனக்கு அது தான் வேணும்”

 

“உனக்காக என் கிட்ட இருக்கிறது அது ஒன்னு தான் டி. என் காதலை அள்ளித் தருவேன் வினிமா” அவள் கன்னம் தொடங்கி எங்கெங்கும் முத்த அபிஷேகம் செய்யலானான் வினியின் காதல் தேவன்.

………………..

 

தனது வரவு உணர்ந்தும் சற்றும் கண்டு கொள்ளாமல் தரையை வெறித்திருப்பவனை நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் மகிஷா.

 

“உங்களுக்கு இன்னும் என் மேல கோபம் போகலையா? இன்னுமே நீங்க ஒழுங்கா பேசல. அப்பறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” அவள் முதலில் பேசும் போது தலை தூக்கியவன், இறுதிக் கேள்வியில் கண்கள் சிவக்க அவளது கையைப் பிடித்தான் ரூபன்.

 

“எ..என்னங்க” அவனது பிடியில் அவள் கையில் லேசான வலி.

 

“என்னை அப்படிக் கூப்பிடாத. ஏனோ தானோனு கல்யாணம் பண்ணிக்கிட்டவ தானே நீ? உனக்கு ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தான் இருக்கும்” அவளை உறுத்து விழித்தான்.

 

“எனக்கு அப்படி இல்ல. நீங்க தான் பேசாம இருந்தீங்க” அவள் மெல்லிய குரலில் சொல்ல, “பேசாம இருந்தா கல்யாணம் பிடிக்கலனு அர்த்தமா? பிடிக்காத கல்யாணத்தைப் பண்ணிக்கிற அளவு நான் முட்டாள் கிடையாது” என்றவனோ அவளை ஆழ்ந்து பார்த்து, “உன்னைப் பிடிச்சு தான் டி கட்டிக்கிட்டேன். இந்த பாழாப் போன மனசுக்கு உன்னைத் தவிர யாரும் வேண்டாமாம். அதனால தான் லூசுன்னு தெரிஞ்சும் உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாப் போச்சு” நெற்றியை நீவிக் கொண்டான் ரூபன்.

 

“நான் லூசா?” அவள் முகத்தைத் தொங்கப் போட, அவனுக்கோ பாவமாகப் போய் விட்டது.

 

“லூசு இல்ல டி! அரை மெண்டல். பைத்தியம். என்னையும் பைத்தியமாக்கிட்டல்ல, உன் மேல” அவளின் கையில் முத்தமிட்டான்.

 

“ரூ..ரூபி” அவனை அணைத்துக் கொண்ட மகிஷாவுக்கோ தன்னையறியாமல் கண்ணீர் வந்தது.

 

“இந்தப் பொண்ணுங்க எதுக்கு ஆ ஊன்னா கண்ணுல தண்ணியைக் கக்குறீங்க? பண்ணுற எல்லாம் மத்தவனை அழ வைக்கிற வேலை. ஆனால் அவங்களை எதுவும் சொன்னா சட்டுனு அழுதுடுவாங்க” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

 

“இதோ பார் மகி! என்னென்னவோ நடந்து போச்சு. இன்னிக்கு வரை அது என் மனசை உறுத்திட்டு தான் இருந்தது. ஆனால் இப்போ இந்த நிமிஷம் சொல்லுறேன், உன் மேல சத்தியமா இனி பழைய விஷயங்களைப் பேச மாட்டேன்.

 

இந்த நிமிஷம் நீ என் மனைவி. நான் உன் புருஷன். நாம புது வாழ்க்கை ஒன்னுல கைப் பிடிச்சு உள்ளே போறோம். எத்தனை கஷ்டம் வந்தாலும், இந்தப்பிடி நழுவக் கூடாது. கோபம் வந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் சமாதானம் செய்யனும். விலகிப் போகக் கூடாது. விட்டுக் கொடுக்கக் கூடாது.

 

முக்கியமான விஷயம், என் மேல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இந்தக் கல்யாணம் எப்படி வேணா நடந்திருக்கலாம். ஆனால் அதுக்கான அஸ்திவாரம் எது தெரியுமா? நம்ம காதல் தான்.

 

இனி நாம புதுசா லவ் பண்ண ஆரம்பிக்கிறோம். முதல்ல நல்ல லவ்வர்ஸா இருப்போம். சரியா? டூ யூ லவ் மீ மகி?” எனக் கேட்க,

 

“எஸ்! ஐ லவ் யூ” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ டூ” என்று காதலுரைத்தான் கணவன்.

 

“என்னை எவ்ளோ பிடிக்கும் உனக்கு?” அவனின் கேள்வியில் அவள் பார்வை அவனில் படிந்தது.

 

“பெருசா சொல்லத் தெரியாது. ஆனால் உங்க பக்கத்துல இருக்கனும். உங்க கூடவே வாழனும். மகி மகினு நீங்க கூப்பிடுறத கேட்டுட்டே இருக்கனும்” என்று சொன்னாள் மகிஷா‌.

 

“மகி மகி மகி! எப்போ உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேனோ நான் மகி பைத்தியமாவே மாறிட்டேன். எங்க பார்த்தாலும் மகி தான். இந்த மகியை விட்டு உன்னால இருக்கவே முடியாதானு என்னை நானே திட்டிக்கிற அளவுக்கு மகி கிட்ட மொத்தமா சரண்டர் ஆகிட்டேன். 

 

எனக்கு வேற எதுவுமே வேணாம் மகி. நீ என் பக்கத்திலே இரு. மகி மகினு பூனைக் குட்டி மாதிரி உன்னைச் சுத்தி சுத்தி வந்து டார்ச்சர் பண்ணிட்டே இருப்பேன். அந்த அளவு மகி என்னோட உயிர் மூச்சா ஆகிட்டா” அவள் முகமெங்கும் முத்தமிட்டான் ரூபன்.

 

“இந்தளவு நீங்க காதலிக்க நான் தகுதியானவளான்னு தெரியல. நான் காதலிச்சாலும், என்னால உங்க அளவுக்கு முடியாது தான். ஆனால் எனக்கு நீங்க வேணும். உங்க காதல் வேணும். உங்க மகியா வாழனும்” அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் காரிகை.

 

“நீ என் மகியா தான் வாழ்வ! என் உயிர் மகி! என் உலகம் மகி! என் உணர்வு மகி! எனக்கு எல்லாமே இந்த மகி குட்டி தான்” அவளைத் தன் மென்மைக் காதலில் முக்குளிக்க வைத்தான் வேங்கை.

……………

கதவைத் திறந்து கொண்டு வந்த மனைவியைப் பார்த்த கார்த்திக்கின் விழிகள் இமைக்க மறந்து போயின. அடி மேல் அடி வைத்து வந்தவளோ பால் சொம்பை வைத்து விட்டு அவன் மடியில் ஒய்யாரமாக அமர்ந்தாள்.

 

“ஹே அப்படி கொஞ்சம் நில்லு தனு. புடவைல நீ அவ்ளோ அழகா இருக்க. உன்னைப் பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு” அவன் கண்களில் ரசனை பெருகி வழிந்தது.

 

“பார்த்துட்டே இருக்கவா கல்யாணம் பண்ணுன?” அவள் நகராமல் கேட்க, “நீ சாரி கட்டிட்டு வந்தா பார்த்துட்டு மட்டுமே இருக்கலாம். பார்வையிலயே வாழ்ந்துடலாம். அப்படி ஒரு போதை இந்த காஸ்டியூம்ல இருக்கு” மதுவுண்ட வண்டாய்த் தான் மாறியிருந்தான் கார்த்திக்.

 

“பார்த்துட்டே மட்டும் இருக்கிற கதை எனக்கு சரி வராது” அவள் முறைக்க, “அப்பறம் வேற என்ன பண்ணுறது?” வினா எய்தினான் அவன்.

 

“கிஸ் மீ” தன்யா கண்களை மூடிக் கொள்ள, “என்னடி வெட்கம் இல்லையா?” புருவம் உயர்த்தினான்.

 

“என் புருஷன் கிட்ட தானே கேட்கிறேன். இதுல என்ன வெட்கம்? உன் கிட்ட என்ன வேணா கேட்கலாம். உன் கிட்ட மட்டும் தான் கேட்கலாம். பிகாஸ் உன் கிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. கேட்குறதை நிறைவேற்ற வேண்டிய கடமையும் உனக்கு இருக்கு. நான் சொல்லுறது சரி தானே?” எனக் கேட்டாள் அவள்.

 

“அடடே தனு! என்ன டி இது. உரிமை கடமைனு பேசுற. விட்டா கோர்ட்டுக்கே கூட்டிட்டு போய் நியாயம் கேட்ப போலிருக்கே” என நகைத்தவன் விளையாட்டைக் கை விட்டு, “தனு பேப்ஸ்! இதையெல்லாம் நீ கேட்காமலே நான் தருவேன். இப்போ வாய் திறந்து வேற கேட்டுட்ட. தராம இருப்பேனா?” அவளது கன்னங்களைப் பிடித்துக் கொண்டான்.

 

“நீ தர மாட்டேங்குற. ரொம்ப டிமான்ட் காட்டுற கார்த்தி. நானே வாய் திறந்து கேட்கனும். அப்போ கூட நீ விளையாடுற” அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “நான் விளையாட்டுக்கு தானே சொன்னேன். என் செல்லக் குட்டில்ல? சீரியஸா எடுத்துக்காத. என் கூட லவ் தானே?” எனக் கேட்க,

 

“ம்ம் லவ் தான். இல்லனா இப்படிலாம் உன் கிட்ட கேட்பேனா?” இதழ் சுளித்தாள் இனியவள்.

 

“எனக்கு தெரியுமே. என் தனு பேபி இந்த கார்த்தி கிட்ட தானே கேட்கலாம். வெட்கம் எல்லாம் வேண்டவே வேண்டாம். எங்கே மறுபடி கேளு பார்ப்போம்” அவள் முகம் பார்த்தான் மாயவன்.

 

“நோ! ஏற்கனவே கேட்டுட்டேன்” என்று அவள் கூற, “ப்ளீஸ் ப்ளீஸ்! எனக்காக ஒரு தடவை” கெஞ்சலுடன் ஏறிட்டான்.

 

அவன் முகம் நோக்கியவள், “கிஸ் மீ கார்த்தி” என்று சொல்ல, மறு நொடி அவள் இதழ்களைக் கொய்திருந்தான் காளை.

 

அவள் விழிகள் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளாகப் படபடக்க, காதலைக் கண்களால் கடத்தியபடி அவளை முற்றுகையிடத் துவங்கினான் தனுவின் கார்த்தி.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!