Home Novelsகரம் விரித்தாய் என் வரமே14. கரம் விரித்தாய் என் வரமே

14. கரம் விரித்தாய் என் வரமே

by Ambika ram
5
(2)

கரம் விரித்தாய் என் வரமே – 14

காரில் பயணம் செய்து கொண்டு இருந்த பார்வதியிடம் பலத்த மௌனம். அவள் முகத்தையே பார்த்த சாய்,

“இதெல்லாம் உனக்கு தேவையா?” என்றான் அக்கறையாக.

“இது தான் பர்ஸ்ட் டைம் ராஜேஷ் இப்படி என்னை எடுத்தெறிஞ்ச மாதிரி பேசுறது….”

“இப்போ தான் உனக்கு ராஜேஷ் பத்தி தெரியுதுனு அர்த்தம்….”

“ம்ம்…. அவனுக்கு நிறைய கோபம் வரும்னு அஸ்வினி சொல்லுவா, நான் இப்போ தான் அனுபவிக்கிறேன்….”

“அவன் வீட்டை பார்த்தேல்ல….”

“ம்ம்…. அங்க எல்லாம் நான் போகமாட்டேன்…. அவன் மட்டும் போதும் எனக்கு….”

“ஹாஹா…. குட் ஜோக்…. கல்யாணம் ஆனா அவங்க எல்லாம் உன்னோட தான் இருப்பாங்க…. பையனை விட்டு போக மாட்டாங்க…. வீட்டை கூட மாத்திக்கலாம், ஆளுங்களை மாத்திக்க முடியுமா….? ராஜேஷ் அம்மானு நீ அவங்க கிட்ட பேசி தானே ஆகணும்….”

“அதெல்லாம் பார்த்துக்கலாம்….” என்றவளின் முகம் தீவிர யோசனையில் இருந்தது.

*************

மறுநாள் அலுவலகத்தில்,

என்ன டா….? நீ, நான்னு ரெண்டு பொண்ணுங்க உன்னை எப்போதும் சுத்தி சுத்தி வருவாங்க…. இன்னைக்கு ஒருத்தரையும் காணும்….” ராஜேஷை ஓட்டினான் மதன்.

“அவங்களை எல்லாம் கொஞ்சம் தள்ளி நிறுத்தி இருக்கேன் டா…. என்னை இத்தனை மாசமா பஞ்சர் பண்ணிடுச்சுங்க ரெண்டும் சேர்ந்து…. போதும் டா சாமி….”

“என்னடா இப்படி சொல்றே….?” நண்பனின் கசங்கிய முகம் பார்த்து கவலையாக கேட்டான் மதன்.

அஸ்வினி தவிர யாரிடமும் மனதை வெளியிடாதவன், நண்பனிடம் அன்று தன் மனக்குமுறலை கொட்டினான்.

“ஒரு பொண்ணு உனக்காக வெளிப்படையாக அன்பை கொட்டும் போது நீ என்னடா பண்ணுவே….? நான் எவ்வளவு தவிர்க்க பார்த்தாலும் அது அவளுக்கு புரிஞ்சாலும் என் பின்னாடியே வரும் போது நான் என்னடா பண்ண முடியும்….? என்னால அந்த அன்பை உதாசீனம் செய்ய முடியலை டா….? செய்ய காரணமும் இல்லை என்கிட்ட…. இது எந்த வைகையிலும் என் நட்பை பாதிக்க கூடாதுனு நானும் பார்த்து பார்த்து நடந்துகிட்டேன்…. ஆனா எல்லாருக்கும் நான் தான் இளிச்சவாயன் மாதிரி அவங்க அவங்க எண்ணத்துக்கும், கோபத்துக்கும் என்னை வடிகால் ஆக்க பார்க்கிறாங்க…. அதான் சரி தான் போங்கடினு ரெண்டு பேரையும் தள்ளி வைச்சுட்டேன்….”

அவன் சொல்வது அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த மதன் கடைசியாக ராஜேஷ் சொன்னதை கேட்டு,

“ஸாரி மச்சி….” என்று கடகடவென்று சிரித்து,

“ரெண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி அவஸ்தை படுற மச்சி….” என்று சிரித்தான்.

“ம்ப்ச்…. ஏண்டா…. பார்வதியை விட எனக்கு அஸ்வினி பண்றது தான் கஷ்டமா இருக்கு டா…. அவளுக்கு என்னை தெரியாதா….? பார்வதிக்கு புரியலைனா கூட பரவாயில்லை சரி தான் போனு விட்ருவேன்…. இவ என்னை புரிஞ்சுக்காம பேசுறது வலிக்குது டா….எப்படி பேசிட்டா தெரியுமா….?”

“சரி விடு மச்சி….” என்று தேற்றிய மதனுக்குள் குழப்பம். பார்வதியின் வார்த்தைகள் இவனை பாதிக்காதா….? இவன் அந்த பெண்ணை காதலிக்கிறானா இல்லையா? அவளை சரி தான் போ என்று விடுவேன் என்று ஈசியாக சொல்கிறானே….

ஒரு வாரம் கழித்து,

முன்பே நிச்சயம் செய்து இருந்த தெய்வா ஷிவா திருமணத் தேதி நெருங்கியது. திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் என்ற நிலைமையில், அஸ்வினி, தெய்வாவுடன் நிறைய வெளியில் சென்று கொண்டு இருந்தாள். அதனால் ராஜேஷுடன் அவளின் பிணக்கு சரியாகமலே இருந்தது. ராஜேஷும் அலுவலகத்தில் விலக்கமாகவே நடந்து கொண்டான்.

இவர்கள் இப்படி இருக்க, பார்வதியும் ராஜேஷிடம் ஒரு வாரம் பேசவில்லை. அவள் ஒரு வாரம் ஒர்க் பிரம் ஹோம் வாங்கி கொண்டு ஊருக்கு சென்றிருந்தாள். செல்லும் முன் அவனிடம்,

“என்னால உன்கிட்ட பேசாம ஒரே ஆபிஸில் உன்னை தள்ளி இருந்து பார்த்துட்டு இருக்க முடியாது ராஜேஷ். ஒரு வாரம் தான் உனக்கு டைம், நான் உன்னை விட்டு தள்ளி என் ஊருக்கு போறேன்…. நான் திரும்ப வரும் போது எனக்கு என்கிட்ட கோபப்படாத பழைய ராஜேஷ் வேணும்….ஓக்கே…. எப்படியும் வந்துடுவான் அவன்…. எனக்கு தெரியும்! ” என்று கொஞ்சி விட்டு தான் சென்றிருந்தாள்.

அவளின் கொஞ்சலில் அவனுக்கு தான் சிரிப்பு தான் வந்தது…. என்ன நம்பிக்கை பாரேன் இவளுக்கு…. என்று நினைத்தவன், அமைதியாகவே இருந்தான். அவளிடம் கொஞ்சம் கூட இளக்கம் காட்டவில்லை.

அந்த வாரக்கடைசி,

பார்வதி இல்லாததால் தெய்வா இந்த வாரக்கடைசியிலேயே நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க விரும்பினாள். ஷிவா கூட ராஜேஷ் ஏதும் எடுத்து கொண்டால் என்று தயங்க, தெய்வா உறுதியாக அவன் அப்படி எடுத்து கொள்ள மாட்டான் என்றாள். அப்போதும் அவன் தயங்க, இப்போ பாரு என்றவள், ராஜேஷை அழைத்தாள்.

“ராஜேஷ், இந்த வீகெண்ட் நீ பிரீயா?”

“நான் பிரீ தான் தெய்வா…. என்ன விஷயம்? ஏதும் வேலையா?”

“இல்லை நம்ம பார்ட்டியை இந்த வீக்கெண்டே வைச்சுக்கலாமானு ஒரு திங்கிங்…. அதான்….”

“ஷுயர் வைச்சுக்கலாம் தெய்வா….” அவனுக்கு பார்வதி ஊரில் இல்லையென்றோ, அவளும் கலந்து கொள்ள வேண்டும் என்றோ, அவள் இல்லாமல் தெய்வா ஏற்பாடு செய்கிறாள் என்றோ எந்த எண்ணமும் இல்லை.

போனை வைத்தவள் ஷிவாவை பார்த்தாயா என்று பார்க்க,

“இவனுக்கு பார்வதி நினைப்பே வரலையா? அந்த பொண்ணு இவன் மேல் அவளோ பொஸஸிவ்வா இருக்கு…. இவன் இப்படி இருக்கான்….? குழப்பமாக சொல்லி கொண்டவன், தெய்வாவிடம், உனக்கு முன்னாடியே இது புரிஞ்சிருக்கு….ம்ம்….” என்றான்.

“அவனுக்கு எப்போ இது புரிய போகுதுனு தான் எனக்கு புரியலை….” என்றாள் தெய்வா கவலையாக.

பார்ட்டி அன்று

இவர்களை தவிர இன்னமும் சில பொதுவான நண்பர்கள், ஷிவாவின் நண்பர்கள் என வேறு சிலரும் வந்திருந்தார்கள். அஸ்வினிக்கு அழகான பார்ட்டி கவுன் ஒன்றை பரிசளித்து இருந்தாள் தெய்வா. அதை தான் உடுத்தி கொண்டு வரவேண்டும் என்ற கட்டளையோடு. பார்வதிக்கு இந்த பார்ட்டி பற்றிய தகவலை, கடைசி நிமிஷத்தில் அவசரமாக ஏற்பாடு செய்தோம், ஸாரி, மிஸ் யு என்று பேருக்கு ஒரு மெசேஜ் செய்ததோடு முடித்து கொண்டாள் தெய்வா.

ஒரு வாரமாக பாராமுகமாக இருக்கும் தோழன் இன்று பேசுவானா இல்லையா என்ற தவிப்போடு தான் கிளம்பி கொண்டு இருந்தாள் அஸ்வினி. ராஜேஷும் அஸ்வினியுடன் இன்று நாள் எப்படி போகும் என்ற இனம் புரியா எதிர்பார்ப்போடு தான் வந்திருந்தான்.

வந்த சிறிது நேரத்திலேயே தெய்வாவிடம் சென்றவன், எந்த தயக்கமும் இன்றி, “அஸ்வினி இன்னும் வரலையே….? போன் பண்ணியா நீ….? ஒன்னும் பிரச்சனை இல்லையே….?” என்றான்.

அவன் கேட்டு கொண்டு இருக்கும் நேரத்திலேயே சரியாக அஸ்வினி ராஜேஷிற்கு அழைத்தாள். தான் கிளம்பி வந்த கார் பஞ்சர் ஆகி விட்டதாகவும், வேறு வண்டி ஏற்பாடு செய்து வர சற்று தாமதம் ஆகும், தெய்வாவிடம் சொல்லி விடு என்றாள். தெய்வா பிசியாக இருக்கும் நேரத்தில் அவளை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தாள் அஸ்வினி.

அவளிடம், “நீ இருக்கும் லோகேஷன் ஷேர் பண்ணு எனக்கு, வேற எங்கேயும் போகாம அந்த காரிலே இரு…. மதன்கிட்ட கால் பண்ணி பேசிட்டே இரு….” என்றவன், வேகமாக ஷிவாவிடம், “கார் கீ கொடு மச்சான்….” என்று கேட்டு வாங்கி கொண்டு, மற்றவர் யாரிடமும் எதுவும் பேசி நேரத்தை வீணடிக்காமல் விரைந்து கிளம்பி விட்டான். அவன் முகத்தில் இருந்த உணர்வில் அவன் எவ்வளவு டென்ஷன் ஆகி விட்டான் என்று மற்ற மூவருக்கும் புரிந்தது. புரிந்த அவர்கள் மூவரும் அவர்களுக்குள்ளேயே அதை வைத்து கொண்டனர். வெளியில் சொல்ல முடியாத குழப்பமான விஷயம் அல்லவா அது!

அவளை சென்று பார்க்கும் வரை மிகுந்த டென்ஷனுடன் தான் இருந்தான் ராஜேஷ். அவள் தெரிந்த டிரைவருடன் தான் வருவாள், ஆனால் மாலை நேரம் தனியான ஏரியா என்று அவனுக்கு பல விஷயம் கவலையை கொடுத்தது. அங்கே சென்று அவளை தன்னுடன் அழைத்து கொண்ட பின் தான் நிம்மதி ஆனான் ராஜேஷ். சற்று நேரம் அவன் மனதின் பதட்டம் குறையும் வரை எதுவுமே பேசவில்லை அவன்.

அவனின் மனநிலை என்னவென்று புரியாமல் அஸ்வினியும் அமைதியாகவே வந்தாள். அவன் நார்மல் ஆன பின் தான் அவளை ஒழுங்காக கவனித்தான் அவன். அவள் ஒரு மாதிரி இருக்கவும்,

“ரொம்ப பயந்துட்டியா….?” என்றான்.

“இல்லை, மதன் கூட பேசிட்டு தானே இருந்தேன்…. அதனால் ஓக்கே….” என்றாள்.

“ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேன்னா… ஸரரி….” என்றாள்.

“டிரைவர் நல்லா தெரிஞ்சவர் தான்…. இருந்தாலும் ஏதேதோ சிந்தனை…. இனிமே ஈவ்னிங் மேல் எங்கே போறதுனாலும் தனியா போகாதே….” என்றான். சொல்லும் போதே மனம் குத்தியது. இவளுடன் சண்டை என்று அவள் எப்படி வருகிறாள் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன? இதே சாதாரணமாக இருந்திருந்தால் அவளை தனியே விட்டு வந்திருப்பாயா நீ….? மனசாட்சி கேள்வி கேட்டது.

அஸ்வினியை அழைத்து கொண்டு வந்தவனை பார்த்து சிரித்த மதன், அஸ்வினி தெய்வாவை நோக்கி போகவும்,

“தோழி கிட்ட சமாதானம் செஞ்சுகிட்டே போல்….” என்றான் கிண்டலாக.

“இந்த மாதிரி நேரத்தில் வேற என்ன பண்றது….?” கெத்தை விடாமல் கேட்டான் ராஜேஷ்.

“நான் கூட போய் அழைச்சிட்டு வந்து இருப்பேன்….” மதன் கேலி செய்ய,

“போக வேண்டியது தானே….?” ராஜேஷும் நக்கலாக கேட்க

“விட்டா தானே….? நீ தான் ஒரு வார்த்தை கூட பேசாம, சொல்லாம பறந்து போயிட்டியே….”

“இப்போ என்ன டா….?”

ராஜேஷின் அலுத்து கொள்ளும் தொனியில், “அஸ்வினி மேல் இவ்ளோ பிரியம் இருக்கு…. அப்புறம் என்ன….? அவ மேல் கோபப்படு ஆனா பேசாம இருக்காத….பாவம் அவ!” என்றான்.

“ம்ம்ம்….” என்றான் சம்மதமாக. அவளுடன் பேசாமல் இருப்பது அவனுக்கு மட்டும் சந்தோஷமாக இருந்தது…. எந்நேரமும் மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருக்கும்….

*********

தன் அருகே வந்த தோழியை இறுக்கி அணைத்த தெய்வா, “நான் இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் சமாதானம் செஞ்சு வைக்கணும்னு இருந்தேன்…. கடவுளே அதை செஞ்சுட்டார். நீ வர லேட் ஆகும் போதே டென்ஷன் ஆக ஆரம்பிச்சான், உன் போன் வந்தவுடன் அவ்ளோ பதட்டம் அவனுக்கு…. இப்படியே அவன் கூட சமாதானம் ஆய்டு அஸ்வினி” என்றாள் தெய்வா.

“ம்ம்…. உனக்கு போன் பண்ணாம நான் நேரா அவனுக்கு பண்ணினது அவனுக்கு ரொம்ப சந்தோஷம் போல் டி, என்கிட்ட பிரச்சனை பண்ணினாலும் என் நியாபகம் வந்துருக்கே அதிசயம்னு கிண்டல் பண்ணினாலும் அதில் அவன் சந்தோஷம் தெரிஞ்சுது!” என்றாள் அஸ்வினி சிரிப்புடன்.

தோழியை சற்று தள்ளி தனியே அழைத்து சென்ற தெய்வா, “ரொம்ப நாளா உன்கிட்ட சொல்றதா வேண்டாமானு குழப்பிட்டு இருந்தேன், இன்னைக்கு சொல்லியே ஆகணும்னு முடிவுக்கு வந்துட்டேன். ராஜேஷ்க்கு பார்வதி மேல் இருக்கிறது லவ்வே இல்லைடி…. நம்மளை விரும்புற ஒருத்தரோட லவ்வை அக்செப்ட் பண்ண கமிட்மெண்ட் தான்…. அதை ஒரு கடமை மாதிரி தான் பண்றான் அவன்…. அவனை அதில இருந்து காப்பாத்தி விடுடி….பாவம்…. உன்னால தான் அவன் பார்வதி கிட்டே போய் சிக்கினான்….”

“என்னடி இப்படி சொல்றே….? நான் என்ன…. எப்படி…. பண்றது….?”

“என்னடா இப்படி சொல்றா தெய்வானு நீ நினைக்க மாட்டேன்னு எனக்கு தெரியும், அதனால் தான் சொல்றேன்” என்று பீடிகை போட,

“ஹேய் நீ எது சொன்னாலும் என் நல்லதுக்கு தான் சொல்லுவேனு எனக்கு தெரியும், சொல்லு” என்றாள் அஸ்வினி. தெய்வா எப்போதுமே ரொம்ப யோசித்து, கவனமாக சிந்தித்த பின் தான் பேசுவாள், அதனால் அவள் சொல்லும் விஷயத்தை கன்சிடர் செய்வாள் அஸ்வினி. அவள் தவறிய விஷயம் தெய்வா அவ்வளவு வற்புறுத்தியும் ராஜேஷிடம் காதல் சொல்லாதது தான்.

அவனுக்கு உன்மேல் பிரண்ட்ஷிப்பையும் தாண்டின பீலிங்ஸ் இருக்கு…. அவன் அதை உணர்றதுக்கு முன்னாடி நிறைய விஷயம் நடந்துடுச்சு…. அவன்கிட்ட நீ கொஞ்சம் க்ளோஸா பழகு அஸ்வினி…. உன் காதல் நிச்சயம் கைகூடும்! பார்வதியை விலக்குவியோ விலக வைப்பியோ அது உன் சாமர்த்தியம்…. ராஜேஷ் உனக்கு வேணும்னா நீ வேகமாக செயல்படு…. ரொம்ப முக்கியமா பார்வதி மாதிரி செல்பிஷ்ஷா இரு!

அவள் சொன்ன செய்தியை புரிந்து கொண்ட அஸ்வினி கண்களை விரித்து தெய்வாவை பார்த்தாள்! அதில் ராஜேஷிற்கு என் மேல் பீலிங்ஸா….? என்ற கேள்வி இருந்தது.

நெருக்கமாக பழகு என்றால் எப்படி….? என்ற குழப்பமும் இருந்தது!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!