கரம் விரித்தாய் என் வரமே – 15
“என்னடி…. நான் ஏதோ புரியாத பாஷையில் பேசின மாதிரி முழிக்கிறே….?” தோழியை உலுக்கினால் தெய்வா.
“ராஜேஷிற்கு நிஜமா என் மேல் ஸ்பெஷல் பீலிங் இருக்குன்னு நீ நம்புறீயா….?”
“நிச்சயமா…. இன்னொரு விஷயம் ஒன்னு சொல்றேன், பார்வதி மேல் அவனுக்கு இருக்கிறது லவ்வே இல்லைங்கிறது என்னோட ஒப்பீனியன் மட்டுமில்லை, ஷிவாவிற்கும் தான்!” என்றாள்.
“ஆனா க்ளோசானா எப்படி எனக்கு புரியலை….?” என்றவளை கொலைவெறியுடன் முறைத்தாள் தெய்வா.
“அவன் மேல் இருக்க பீலிங்ஸ் எல்லாம் என்கிட்ட கொட்டி நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவேல்ல, இப்போ அதையெல்லாம் கொண்டு போய் அவன் தலையில் கொட்டு! அந்த க்ளோஸ் தானா வரும்! உன் மனசில அவனுக்காக ஏற்படுற உணர்வை மறைக்காதே…. அதுவே போதும்!” என்றாள் தெய்வா கடுப்பாக.
மேற்கொண்டு அவளுடன் பேச்சை வளர்க்காமல் ஷிவாவுடன் சென்று சேர்ந்து கொண்டாள் தெய்வா. பார்ட்டி களை கட்ட, டான்ஸ் ஆரம்பித்தார்கள் நண்பர்கள். அனைவரும் ஆட, அஸ்வினி மெதுவாக ராஜேஷ் நோக்கி நடந்தாள். தெய்வாவின் வார்த்தைகள் அவளை நன்றாக உசுப்பேத்தி இருக்க, ராஜேஷை தேடினாள் அஸ்வினி. கொஞ்ச நாட்களாக அவனை ரசிக்கும் மனதிற்கு கடிவாளம் போட்டு இருந்தவள் இன்று இருந்த தளைகள் அனைத்தையும் தகர்த்து விட்டு அவனை ரசிக்க ஆரம்பித்தாள்.
அழகும் ஆண்மையுமாக அவளை கிறக்கினான் ராஜேஷ். அங்கு இருந்த அரை இருட்டு சூழ்நிலையும், காதல் பாடல்களும் அவளை மேலும் கிறக்க, மெதுவாக என்றாலும் ஒரு உறுதியுடனே ராஜேஷை நெருங்கினாள் அஸ்வினி.
அவள் மனமெங்கும் தெய்வாவின் வார்த்தைகளே வியாபித்து இருக்க, ராஜேஷை நெருங்கி அவன் அருகில் நெருக்கமாக நின்றாள் அஸ்வினி. அஸ்வினி வந்தவுடன், அவளின் முகத்தை பார்த்த மதன் தானாகவே அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி சென்றான்.
அஸ்வினியின் அருகாமை ஒன்றும் புதிதல்லவே ராஜேஷிற்கு. அதனால் அவள் முகம் பார்த்து பேச எண்ணி இயல்பாக அவள் பக்கம் திரும்பியவனின் இதயம் இது வரை இல்லாத விதமாக, முதல் முறையாக வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவளின் கண்களை பார்த்தவன் பார்த்தபடி நின்றான். அந்த கண்களில் இருந்த உணர்வில் தான் அவன் இதயத் துடிப்பு எகிறி கொண்டு இருந்தது. அந்த உணர்வு என்ன என்று அவன் அறிவுக்கு புரியும் முன் அவன் இதயத்திற்கு புரிந்தது. புரிந்த இதயம் ராஜேஷிற்கு சிக்னல் கொடுத்தது. அந்த சிக்னலை சரியாக புரிந்து கொள்வானா ராஜேஷ்?
“என்ன அஸ்வினி….?” இரண்டு வார்த்தை பேசுவதற்குள் உள்ளுக்குள் தடுமாறினான் ராஜேஷ்.
சந்தன நிற பேண்ட், கருநீல கலர் சட்டையில் இருந்தவனை அவனுக்கு தெரியும்படியாகவே ரசித்து பார்த்தவள்,
“ரொம்ப அழகா இருக்கே ராஜேஷ்….” என்றாள் குரலில் மொத்த காதலையும் தேக்கி. குரலில் மட்டுமில்லாமல், அந்த பூனை கண்களில் அவள் காதல் ததும்பி வழிய, அதை கண்ட ராஜேஷிற்கு இனம் புரியா உணர்வுகள் உடைப்பெடுக்க, ரத்தம் ஓட்டம் வேகமானது! சீரற்ற மூச்சுகளுடன்,
“தேங்க்ஸ் அஸ்வினி….” என்றவனின் பார்வை இப்போது அவளை அளவெடுத்தது. அந்த பார்ட்டி கவுன் அவளின் வளைவுகளை அழகாக காட்ட, அந்த அகன்ற கழுத்து காட்டிய அவள் தேகத்தின் நிறத்தில் சூடானது ராஜேஷின் உள்ளம்! அவளை அளவெடுத்த பார்வை அவளின் மேனியை அங்குலமாக அங்குலமாக ரசிக்க சொல்ல, திகைத்து போனான் ராஜேஷ்.
சே! இதென்ன என்றுமில்லாத தடுமாற்றம், தவிப்பு? புரியாமல் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பி செல்ல பார்த்தான் ராஜேஷ். இதோ வரேன் என்று முணு முணுத்தபடி அங்கிருந்து நழுவ போனவனின் புஜங்களுக்குள் கைகளை கோர்த்து கொண்டவள்,
“நாம டான்ஸ் பண்ணலாமா ராஜேஷ்? எனக்கு ஆசையா இருக்கு…” என்றாள் அவன் கண்களுக்குள் பார்த்து கொண்டே.
ஏதோ மந்திரத்துக்கு கட்டுபட்டவன் போல், சரி என்று அவன் தலையசைக்க, அவனை இழுத்து கொண்டு நடனம் ஆடும் கூட்டத்திற்கு நடுவே சென்றாள் அஸ்வினி.
அவர்கள் இருவர் மேலும் அவ்வப்போது தன் பார்வையை பதித்து கொண்டு இருந்த தெய்வாவிற்கு, அவர்களின் நெருக்கம் பரம திருப்தி! அவர்கள் நடனம் ஆட போகிறார்கள் என்றதும் கடகடவென்று அஸ்வினிக்கு பிடித்த பாடல்களை சொல்லி, போட வைத்தாள்.
“நீ என் ஸ்வீட் ஹார்ட் மொமெண்டோ ….”
“நீ பார்க்க பார்க்க பரவசம்….”
என்ற வரிகளில் சாதாரணமாக தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் தயக்கமாக ஆரம்பித்த அவர்கள் நடனம்,
“உன் கண்ணால் கண்ணால் சொன்னால் சுகம் கிட்டாது”
“கையால் கையால் மெய்யால் தொடு” என்ற போது,
தயக்கம் விலகி… தொடுகை பழகி…. உடம்பால் உரசியபடி ஆடிக்கொண்டிருந்தனர்!
“என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள நெருக்கி விடு” என்ற போது ராஜேஷின் கை அவள் இடுப்பை இறுக்கியது….நிஜமாகவே மிகுந்த சூடானாள் அஸ்வினி….!
“என்னை உடைக்காமல் உயிர் இனிக்காது” அஸ்வினியின் கரங்கள் அவன் கழுத்தை வளைக்க, அவள் மென்மைகள் அவனை பதம் பார்த்தன!
“உன் வன்முறை இன்றி எந்தன் இரவு கலையாது” என்ற போது ஆக்டோப்ஸ் போல் அவளை அவனுடன் வளைத்து சேர்த்து இழுத்து இறுக்கி அணைத்தான் ராஜேஷ்!
“தாங்காது நீ தள்ளி சென்றால் ஆடாது”
நீ கோடி கையால் தொடு தொடு”
ஒரு சிறு தீப்பொறி ஒரு காட்டையே அழிக்க வல்லது என்பதை போல், அஸ்வினியின் மனதில் தெய்வா வீசிய ஒரு சிறு பொறி, அவள் காதலை உயிர்ப்பித்து அவளை மட்டுமின்றி ராஜேஷையும் சேர்த்து எரித்தது! அதன் உச்சமாக, இருக்கும் சுற்றுப்புறம் மறந்து, ராஜேஷின் அணைப்பிற்கு பதில் தரும் வகையில் அவன் இதழில் இதழ் பதித்து தன் முதல் முத்தத்தை அவனில் பதித்து இருந்தாள் அஸ்வினி.
இதழோடு இதழ் உறவாட, ஷாக் அடித்தாற் போல் அவர்களை பிண்ணி இருந்த மாயவலை அறுபட இருவரும் சுயநினைவிற்கு வந்தனர். நல்லவேளை இன்னும் ஆட்டம் பாட்டம் முடியாததால் மற்றவர்களுக்கு இவர்களின் நெருக்கம், அதிர்ச்சி எதுவும் தெரியவில்லை.
இருவரும் மெதுவாக விலகி சென்று ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து கொண்டனர்.
அஸ்வினிக்கோ, ராஜேஷ் தப்பா நினைச்சு இருப்பானோ என்று சங்கடமாக இருந்தது. ஆனால் அதே நேரம் அவனுடனான அந்த நெருக்கமான நிமிடங்கள் மிகுந்த சந்தோஷத்தை தந்து இருந்தது. தெய்வா சொன்னது முற்றிலும் உண்மை என்பது போல் சில நிமிடங்கள் என்றாலும் அவன் அவளிடம் நெகிழ்ந்து இருந்தான் என்பது உண்மை தானே? சீக்கிரம் அவனை மொத்தமாக என்னிடம் கொண்டு வந்து விட வேண்டும்!
அஸ்வினி இவ்வாறு இருக்க, ராஜேஷ் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை! அஸ்வினி அவனை நெருங்கி வந்ததே அவனுக்கு வித்தியாசமாக இருந்தது என்றால் அவனை அதிர்ச்சி கொள்ள செய்தது அவனின் உணர்வுகள் தான்! தானா இப்படி எல்லாம் உணர்கிறோம்….? அஸ்வினியை தீண்டிய போது அப்பப்பா…. இன்னமும் அந்த துடிப்பும் அசையும் அவனுள் முழுதாக மறையாமல் இருக்கிறதே…. சில நொடி ஸ்பரிசம் என்றாலும் அவள் இடையின் வளைவும், இதழின் மென்மையையும் இன்னும் உணர்கிறானே…. கடவுளே….! இப்படி ஒரு தடவை கூட பார்வதியுடனான நெருக்கத்தில் அவன் உணர்ந்ததும் இல்லை, அதை இவ்வளவு ஆசையாக நினைவு கூர்ந்து ரசித்ததும் இல்லை!
ராஜேஷை பார்த்த அஸ்வினிக்கு அவனின் தவிப்பு புரிய, அவளின் தயக்கம், சங்கடம் அனைத்தையும் மறைத்து கொண்டு அவனிடம் சென்று எதுவுமே நடவாதது போல்,
“எனக்கு பசிக்குது, ஏதாவது சாப்பிடலாம் வா ராஜேஷ்….” என்றாள்.
அவளின் இயல்பான பேச்சில், நடத்தையில் இன்னும் குழம்பி போனவன், ஒன்றையும் கேட்கமுடியாமல் மௌனமாக அவளுடன் எழுந்து சென்றான். உண்ணும் போதும், அவள் இது நல்லா இருக்கு பாரேன் என்று அவனுக்கு ஊட்டி விடுவதை போல் கொடுத்தாள். வாய் திறந்து அவன் வாங்கும் போது அவன் இதழ்களை தீண்டியது அவளின் விரல்கள். சிலிர்த்து அடங்கினர் இருவரும்!
ஏன் என்னிடம் இப்படி புதிய நெருக்கம் காட்டுகிறாய் என்று நெருங்கிய தோழியிடம் எப்படி கேட்க முடியும்? அவள் நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டால்? அவளையும் புரியவில்லை, அவனையும் புரியவில்லை அவனுக்கு இப்போது! புரியாத அவஸ்தையுடனே அன்றைய மிச்ச பொழுதை அஸ்வினியுடன் கழித்தான் ராஜேஷ்…. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அஸ்வினியுடன் நெருக்கமாக கழித்தான். அவளின் தீண்டலும் தொடுகையும் இத்தனை வருடம் இல்லாத வகையில் அவனுக்குள் புதிய புதிய உணர்வுகளை ஊற்றெடுக்க வைத்தது, அதை அவன் உணர்ந்து ரசித்தான். இருவருமே எதையும் வாய் விட்டு பேசிக் கொள்ளாமல் அந்த மாலை பொழுதின் நிகழ்வில் மயங்கி, மலர்ந்து இருந்தனர்.
தெய்வாவும் ஷிவாவும் தான் இவர்கள் அருகில் வரவில்லை என்றால் மதனும் இவர்கள் பக்கமே வரவில்லை! இத்தனைக்கும் மதனிடம் ஷிவாவோ, தெய்வாவோ ஏதும் இதை பற்றி பேசவில்லை!
மறுநாள் ஞாயிறு என்பதால் மெதுவாக தூங்கி எழுந்து அமர்ந்திருந்த அஸ்வினியை தெய்வா அழைத்தாள்.
“என்ன மேடம் ஹாப்பியா?” உற்சாகமாக கேட்டாள் தெய்வா.
“எதுக்கு….?”
“ம்ம்ம்…. கையோடு கைகள் சேராமல், தீராது எந்தன் மோகம்…. அதுக்கு தான்!” அவள் சிரிக்க,
“அடிப்பாவி, எங்களை தான் பார்த்துகிட்டு இருந்தியா….?” வெட்கமாக கேட்டாள் அஸ்வினி.
“புல்லா பார்க்கலை, லேசா பார்த்தேன்…. பரவாயில்லை நல்லா தான் இருந்துச்சு உங்க சாப்ட் ரொமான்ஸ்….”
“ம்ப்ச்….போடி இது நிரந்திரம் இல்லையே…. என்னைக்கு பார்வதி விலகுறாளோ அன்னைக்கு தான் எனக்கு சந்தோஷம்!”
“இது நடக்கும்னு நீ எதிர்பார்த்தியா….? அது மாதிரி அதுவும் நடக்கும்! ஆனா இது எல்லாம் நடக்க தேவை உன் முயற்சி….ஓக்கே வா….?”
“ம்ம்….புரியுது! ஆனா ராஜேஷ் என்ன நினைக்கிறான் தெரியாம பயமா இருக்குடி….ஏதாவது தப்பா நினைச்சு இருந்தா ….?”
“தப்பா நினைச்சு இருந்தா நேத்து பாதியிலே கிளம்பி இருப்பான், கடைசி வரை இருந்து உன் கிட்டே பேசிட்டு இருந்திருக்க மாட்டான்! பயப்படாதே…. குழம்பி தான் இருப்பான் நிச்சயமா…. ஆனா குழம்பின குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும்!”
“ம்ம்….” என்றாலும் பார்வதியை எப்படி விலக வைப்பது? பயந்தாள் அஸ்வினி. கல்யாணப் பெண் தெய்வாவை ரொம்பவும் தொல்லை செய்ய கூடாது, நாமளே யோசிப்போம் என்று நினைத்து கொண்டாள்.
அவர்கள் சொல்லியது போல் மிகவும் குழம்பி கிடந்தான் ராஜேஷ். நேற்றைய நெருக்கத்தில், இன்றும் அஸ்வினியின் அருகாமையை கேட்டு அடம் பண்ணியது அவன் உள்ளம்! இது என்ன புது விதமான போராட்டமாக இருக்கிறது என்று தவித்தான் ராஜேஷ். பார்வதியிடம் ஒரு நாள் கூட நான் இது போல் உணர்ந்ததில்லையே!
அஸ்வினி ஏன் என்னை முத்தமிட்டாள்? அதை அவள் உணர்ந்தாளா? இல்லையா? கேட்பதா வேண்டாமா? எதனால் நேற்று தீடிரென அப்படி நெருங்கி வந்தாள்? இன்று சந்தித்தாலும் அதே போல் இருப்பாளா? ஏதேதோ எண்ணம் அவனை அலைக்கழித்தது! அவை அனைத்தையும் மீறி அஸ்வினியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வெல்ல கிளம்பியே விட்டான் ராஜேஷ்.
காலிங் பெல்லை அடித்து விட்டு அஸ்வினியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று டென்ஷனுடன் நின்றான் ராஜேஷ். அவனை சந்தோஷப்படுத்தும் விதமாக தன் வீட்டின் வெளியே நிற்பவனை கண்டு ஆர்பரித்தாள் அஸ்வினி.
“ஹேய் வா! வா! போர் அடிச்சு இருந்தேன்….”
“அதுக்காக என்னை போர் அடிச்சுடாதே மா….”
“நான் உனக்கு போர் ஆ?” கண்களால் முறைத்தவளை கண்டு,
“பூனைக்குட்டி!” என்றான் கொஞ்சலாக. வார்த்தைக்கு வலிக்குமோ என்று மென்மையாக வந்தது குரல்.
“உனக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வரேன், நீ போய் உட்கார்….” என்றவள், இந்த பூனை குட்டி என்ன பண்ணுது பாரு…. என்று மனசுக்குள் நினைத்தபடி அடுக்களைக்குள் விரைந்தாள்.
ஹால் சோபாவில் சென்று அமர்ந்தான் ராஜேஷ். பின்னேயே அவனுக்கு ஸ்னாக்ஸ் எடுத்து வந்தவள், அதை டீபாயில் வைத்து விட்டு அவன் அருகில் அமர்ந்தாள்.
எப்போதும் அமர்வது தான்! ஆனாலும் முன்பிற்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம். முன்பெல்லாம் உடல் அங்கங்கள் ஒட்டி உறவாடாது! நண்பன் எனும் எல்லை இருந்தது! ஆனால் இன்று அஸ்வினி கொஞ்சம் அசைந்தால் அவளின் மென்மைகள் அவன் மேல் அழுந்தும்!
“தள்ளி உட்காருடி! உன்னை பூனைக்குட்டினு சொல்றதுக்கு பதிலா எருமை மாடுனு சொல்லணும்….சதா உரசிக்கிட்டே இருக்கே….” சிரிப்புடன் சொன்னான் ராஜேஷ். அவனின் தவிப்பை அவள் அதிகமல்லவா செய்கிறாள்!
“எருமைமாடு உரசும், பூனைக்குட்டி என்ன பண்ணும் தெரியுமா?” என்றவள், அவனை கிச்சு கிச்சு மூட்டினாள்…. அவனும் இவளை மூட்ட, எப்படி நிகழ்ந்தது என்றே தெரியாமல் அவனின் இறுகிய அணைப்பிற்குள் இருந்தாள் அஸ்வினி. அவளும் அவனை இறுக்கி அணைக்க, அவளின் இணக்கம் அவனுக்கு புரிய, அவள் முகத்தை நிமிர்த்தியவன், அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தான். அவளை ஊடுருவும் அவன் கண்கள் மேல் முத்தமிட்டவள், அவன் முகமெங்கும் முத்தமிட்டாள். அவளின் வேகம் அலாதியாக இருக்க, அவளை தடுக்க முடியாமல் ஒன்றும் புரியாமல் தவித்தபடி நின்றான் ராஜேஷ். அவன் இதழை அவள் ஓற்றவும் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியாதவன், அவள் இதழை வன்மையாக கொய்து தன் சஞ்சலத்தை எல்லாம் அதில் கரைத்தான். தீண்ட தீண்ட இன்பம் போல், அவள் இதழ்களை விடவே இல்லாமல் அவைகளை சுவைத்து கொண்டே இருந்தான்!