விஷ்வ மித்ரன்
நட்பு 58
விஷ்வாவின் அருகில் நவி அமர்ந்திருக்க, அக்ஷுவோ மித்ரனின் தோளில் சாய்ந்திருந்தாள்.
“எப்படி இருந்துச்சு பர்த்டே சப்ரைஸ் எல்லாம்?” என்று கேட்டாள் வைஷ்ணவி.
“நல்லா பண்ணுனீங்க எல்லாரும். என்னை கடுப்பாக்கிட்டீங்க” அங்கலாய்த்துக் கொண்டான் மித்ரன்.
“எப்போவும் ஒரே மாதிரி விஷ் பண்ணி போரடிச்சுது. அதான் கொஞ்ச நேரம் சுத்தல்ல விட்டோம் இல்லையா அண்ணா?” அண்ணனிடம் வினவினாள் அக்ஷு.
“எஸ்டி குள்ள கத்திரிக்கா!” என விஷ்வா ஆமோதிக்கவும், “அடேய் நான் எவ்வளவு பாசமா அண்ணன் சொன்னேன். நீ என்னடான்னா குள்ள கத்திரிக்கா வெள்ள முந்திரிக்கானு சொல்லுற. உனக்கு எல்லாம் மரியாதை தந்ததே தப்பு” படபடவென பொரிந்தாள் அவள்.
“மித்து! இந்த தேஞ்சுபோன ரெக்காடரை எப்படி வெச்சி சமாளிக்கிற நீ?” தங்கையைக் கடைக்கண்ணால் பார்த்தவாறு நண்பனிடம் கேட்டான் விஷு
“அதலாம் நான் நல்லா பார்த்துக்கிறேன். நீ என் செல்ல குட்டியை எப்போவும் ஒன்னும் சொல்லிட்டு இருக்காத” என்றான் மித்ரன்.
அக்ஷரா அண்ணனுக்குப் பழிப்புக் காட்ட, “அருமை நண்பா! என்னடா இப்படி அந்தர்பல்டி அடிச்சிட்ட” வாயைப் பிளந்தான் நண்பன்.
“இல்லனா உங்க தங்கச்சி என் அண்ணாவை நூடுல்ஸ் ஆக்கிடுவா. அதான் முன் எச்சரிக்கையோட சப்போர்ட் பண்ணிட்டார் விஷு” கிண்டலாக மொழிந்தாள் வைஷு..
“அடிப்பாவி! நீ அவனுக்கு ஒத்து ஊதுறியா?” புருவம் உயர்த்திப் பார்த்தாள் அக்ஷரா.
“பின்ன?! என் புருஷனுக்கு நான் சப்போர்ட் பண்ணனும் தானே” என்றவளுக்கு அப்போதே தான் சொன்னது புரிந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“அட என் பாப்பாவா இது? புருஷன் மேல ரொம்பத் தான் அக்கறை” வியந்து பார்த்தான் மித்து.
“டேய் பேசாம இரேன்டா! அப்பறம் உன் தங்க தங்கச்சி வெட்கத்தில் நாலு நாளைக்கி என் பக்கம் திரும்ப மாட்டா” பாவமாக சொன்னான் விஷு.
“சும்மா இருங்க ஜித்து” சிணுங்கலுடன் முகத்தைச் சுருக்கிய பெண்பாவையை அள்ளிக் கொஞ்சத் தான் ஆடவன் நெஞ்சமும் பரபரத்தது.
அவனது ரசனைப் பார்வையில் அவளுள் நாணம் துளிர்க்க, செல்லமாக முறைத்துப் பார்த்தாள் நவி.
புன்னகையுடன் தலை திருப்பி நண்பனைப் பார்த்து, “ரெஸ்டாரண்ட் போகலாம் ரெடியாகுங்க” என்றான் விஷ்வா.
“ஓஹ் உன் ப்ரெண்டு பர்த்டேக்கு ட்ரீட்டா? என்னவோ நமக்கு சாப்பாடு கிடைச்சா போதும்” என்று அக்ஷு குதூகலிக்க, ஜோடியாக பைக்கில் சென்றனர்.
விஷ்வாவின் பேர்ஸை காலியாக்கும் பணியை வெகுசிறப்பாகவே செய்தாள் அவனது அருமை சகோதரி. விதவிதமாய் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து கடைசியாக ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த ப்ளேவரில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தனர்.
“சின்ன வயசுல நம்மளை ஹரிப்பா அடிக்கடி கூட்டிட்டு வந்து ஐஸ்கிரீம் வாங்கி தருவாரே ஞாபகம் இருக்கா உங்களுக்கு” பழைய நினைவுகளுடன் கேட்டாள் அக்ஷு.
“எனக்கு ஞாபகம் இல்லையே” என்று விஷு சொல்ல, “உனக்கு அம்னீஷியானு எனக்குத் தெரியும்டா வெண்ண. என் வாயைக் கிளறாம இரு” கடுப்புடன் அவன் தோளில் அடித்தாள்.
“ஹா ஹா சரவெடி! உன்னை கலாய்க்க சொன்னேன் டி. அதை எல்லாம் மறக்க முடியுமா? எங்களுக்கு வரனும்னா உன்னை ஹரிப்பா கிட்ட கெஞ்ச வெச்சி காரியம் சாதிக்கிறது, உன்னோட ஐஸ்கிரீமை பிடுங்கி எடுக்குறது, நீ அழுதா இன்னும் ரெண்டு எக்ஸ்ட்ராவா வாங்கி தாறது எல்லாமே கண்ணுக்குள்ள அப்படியே இருக்கு குட்டிமா!” தங்கையை அன்பு நிறைந்த விழிகளால் தழுவினான் பாசமிகு அண்ணன்.
“மித்துண்ணா! பாருங்க அண்ணன் தங்கச்சியை” நவி மித்ரனின் காதில் கிசுகிசுத்தாள்.
“என்ன குசுகுசு அங்கே?” கேள்வியோடு ஏறிட்டான் விஷ்வா.
“அது எனக்கும் என் தங்கச்சிக்கும் இருக்கிற ரகசியம். எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்” நொடித்துக் கொண்டான் மித்து.
“பாசம் பொங்கி வழியுது அண்ணனுக்கு. தங்கச்சி துடைத்து விடுங்க” என்றாள் அக்ஷு.
“உனக்கு பொறாமை டி! நீங்க மட்டுமா ரகசியம் பேசனும் ஹான்?” – வைஷு
“இல்லை இல்லை தாராளமா பேசிக்கங்க நாத்தனாரே”
“உலகின் ஒன்பதாவது அதிசயம் நடக்குது இதை நல்லா பார்த்துக்கங்கனு வைஷு சொன்னா” என்று மித்து கூற, “அது என்ன அதிசயம்?” என்பதாக பார்த்தாள் அவள்.
“எலியும் பூனையுமா இருக்கிற ரெண்டு பேரும் பூவும் மணமுமா இருக்காங்கனு சொன்னாள். குட்டிமானு இவன் உன்னை கூப்பிடுறது அதிசயமா இல்லையா?” மனைவியிடம் சொன்னான் மித்து.
“அவனுக்கு அப்படி தான் அருள்! என் மேல எக்கச்சக்க பாசம். ஆனா காட்டிக்க மாட்டான். இப்படி அப்பப்போ வெளிப்பட்டு என்னை பூரிக்க வெச்சிரும். அவனோட குட்டிமாங்குற அழைப்பால வந்த ஆனந்தக் கண்ணீர் இன்னும் மறையாம கண்ணுல அப்படியே இருக்கு பாரேன்” கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டாள் அக்ஷரா.
“போதும் டி ஓவரா கண்ணை தேய்க்காத! அப்பறம் கண்ணீரோட சேர்த்து நீ போட்டிருக்கிற மை எல்லாம் முகத்தில் வடிந்து பேய் மாதிரி தெரிஞ்சு இங்கே இருக்கிறவங்கபை அலறியடிச்சு ஓட விட்றாத” பயந்தது போல் கூறினான் விஷ்வா.
“என்ன அண்ணா இப்படி சொல்லுறீங்க? எனக்கு உங்க மேல பாசம் இல்லைனு சொல்லுறீங்களா? இந்த தங்கச்சியை நம்ப மாட்டீங்களா?” வராத கண்ணீரைத் துடைத்து விட்டபடி பாவமாகக் கேட்டாள்.
“நம்புவேன் என் தங்கச்சியை. ஆனா அவளுக்குள்ள இருக்கும் அந்த நடிகையர் திலகத்தை நம்பவே மாட்டேன். அவளுக்கு இப்போ என்னோட ஐஸ்கிரீம் வேணும் அதனால பாசத்தை மழையா பொழியுறா. அதனால ஐஹ்கிரீம் கரைஞ்சாலும் என் மனசு கரையாது” என்று அவன் சொல்ல,
“கண்டுபிடிச்சிட்டானே கில்லாடி” என நினைத்து வெளியில் இளித்து வைத்தாள்.
“அவன் உனக்கு அண்ணன் அம்முலு. நீயே இப்படினா அவன் எப்படி இருப்பான்” தன்னவளின் முகம் போன போக்கைக் கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான் அருள் மித்ரன்.
“இருந்தாலும் பாவமேனு தரேன் விட்டா அழுதுருவ” என்று தனது ஐஹ்கிரீமை கப்பை அவளிடம் நகர்த்தி வைக்க அதைத் துள்ளலுடன் வாங்கிக் கொண்டு சாப்பிட்டவள் அவனுக்கு இன்னும் குழந்தை போலவே தெரிந்தாள்.
“ஹனிமா!” என அழைத்தவனை, “என்னங்க?” என்பதாக நோக்கினாள்.
அவளைப் பார்த்து சட்டென கண்ணடிக்க விழி விரித்து நின்றவளைக் கண்டு, “முட்டக்கண்ணி” என சிரித்தான்.
“யாராவது பார்த்தா என்னவாகும். அப்படி செய்யாதீங்க” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
“பார்த்தா என்னவாகும்? நாம திருட்டுத்தனமா காலேஜ் கட் பண்ணிட்டு லவ் பண்ணவா வந்திருக்கோம்? யாராச்சும் பார்த்தா என்ன பண்ணுறது வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகுறதுனு பயப்படுற. நாம புருஷன் பொண்டாட்டி டி” என்றான் அழுத்தமாக.
“அது சரி தான். ஆனா வேணாமே”
“என்ன வேணாம்? நீ இப்படி பண்ணுனா கண்ணடிக்க மாட்டேன், கூச்சல் போட்டு எல்லாரையும் கூப்பிட்டு இவ தான் என் பெண்டாட்டினு சொல்லி கிஸ் பண்ணிருவேன்” அடிக்குரலில் நவின்றான் அவன்.
“என்ன கிஸ்ஸாஆஆ” வாயோடு கண்களும் அகல விரிந்தன வஞ்சிக்கு.
“என்ன கிஸ் பண்ண சொல்லி உடனே சம்மதம் தந்துட்ட” குவிந்த இதழ்களில் அவன் கண்கள் நிலைபெற்றன.
அவனது பார்வையில் சட்டென இமை தாழ்த்தினாள் பெண்ணவள். புன்முறுவலுடன் மேசைக்குக் கீழிருந்த அவளது வலக்கரத்தைப் பற்றிக் கொண்டான் விஷ்வஜித்.
“இதுக்கும் சொல்லாத யாராவது பார்த்துடுவாங்கனு”
“சொன்னா மட்டும் விடுவீங்களா? அடுத்த கையையும் சேர்த்து பிடிப்பீங்க அதிரடி ஆட்டக்காரன் மாதிரி” விழிகளால் முறைத்தாள் மங்கை.
“நவி குட்டி என்னை சரியா புரிஞ்சு வெச்சிருக்கியே”
“நான் புரிஞ்சு வெச்சுக்க தானே வேணும். இல்லனா வேறு யார் புரிஞ்சுப்பாங்க”
“அட பரவாயில்லையே. கொஞ்சமா பாசசிவ்னஸ் எல்லாம் எட்டி பார்க்குது” என அவள் கன்னத்தை யாரும் அறியாமல் கிள்ளி விட்டான்.
“எட்டி எல்லாம் பார்க்காது. பாசசிவ்னஸ் நிறைய வரும்” என்றவளைக் கண்டு காதல் பெருக்கெடுத்தது ஆணவனுக்கு.
……………..
“அம்முலு! எங்கேடி போயிட்ட?” குளித்து விட்டு உடைமாற்றிக் கொண்டு தலையைத் துவட்டியபடி தன்னவளைத் தேடினான் மித்ரன்.
அவளது சத்தமே இல்லாதிருக்க அங்குமிங்கும் அலைபாய்ந்த விழிகள் அவளைக் கண்டு கொண்ட மகிழ்வில் பளீரென்று மின்னலடிக்க, சோபாவில் சாய்ந்து கொண்டிருந்தவளின் அருகே சென்றான்.
“இங்கே என்ன பண்ணுற? எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்” அவள் முகம் நோக்க, “என்னை எதுக்கு நீ கூப்பிடனும்?” வெடுக்கென கேட்டாள் அவள்.
“இதென்னடி கேள்வி? உன்னைக் கூப்பிடாம இன்னிக்கு பார்த்தோமே அந்த ஸ்வேதாவையா கூப்பிட முடியும்?” எனக் கேட்டான்.
“ஐயாவுக்கு எப்போவும் அவ நினைப்பு தான். போய் அவளையே கூப்பிடு. எதுக்கு என்னை கூப்பிட்டு டைம் வேஸ்ட் பண்ணுற?” காரமாக சொன்னாள் அக்ஷரா.
“ஓஓ! அப்படினா என் செல்லக்குட்டி இதுக்கு தான் கோபமா இருக்காங்களா?” எனக் கேட்டு டவலை அவள் தலைக்கு மேலால் போட்டு இடையருகே கொண்டு வந்து அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
“விடு நான் போகனும்” அவனிடமிருந்து விலக எத்தனித்தாள். இரும்பை மெல்லிய மலரால் அசைக்கவும் தான் முடியுமோ? அவள் முயற்சிகள் யாவும் அவனது உடும்புப் பிடியின் முன் தோற்றுத் தான் போகலாயின.
“போறனு சொன்ன. எங்கே போ பார்க்கலாம்”
“இப்படி விடாக்கொண்டான் மாதிரி பிடிச்சிட்டு போக சொன்னா எப்படி போறதாம்” உதட்டைச் துளித்தாள் அவள்.
“இப்போ என்னடி உன் பிரச்சினை? காரப்பொடி மாதிரி காந்துற?” அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான்.
“அந்த ஸ்வேதா ஹாய் சொவ்லுறா. நீ ஹலோனு இளிச்சி வைக்கிற”
“ஹலோ தானே சொன்னேன். நீ என்னவோ ஐ லவ் யூ சொன்ன ரேஞ்சுக்கு பேசுற”
“ஓஹ்ஹோ! அப்படி ஒரு ஆசை கூட இருக்கா உனக்கு? எங்கே சொல்லித் தான் பாரேன்” சிதறி வெடித்தன வார்த்தைகள்.
“ஏன் அம்முலு ஆசைனு சொன்னா நினைவேற்றி வைக்க போறியா?” என்றவனின் வாய் அவளது ஏகப்பட்ட முறைப்பில் கப்சிப் ஆனது.
“ஹேய் சும்மா கிண்டலுக்கு சொன்னேன் மா. அவ எனக்கு தெரிஞ்சவ. டாடியோட ப்ரெண்டோட பொண்ணு. பேசினா பேசனும் தானே. அதனால ஒன்னு ரெண்டு வார்த்தை பேசினேன். இதுக்கு நீ இப்படி பண்ணுற” என்றான் மென்மையான குரலில்.
“அதுவும் சரி தான். நான் தான் ஓவரா பண்ணிட்டேன்ல” முகத்தைச் சுருக்கியவளைக் கண்டு,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. என் பாசசிவ் குயீன் அப்படி தான் பண்ணுவா. அது நான் உனக்கு மட்டும் தான் என்கிற அதிகப்படியான உரிமையால உனக்குள்ள உருவாகும் போராட்டம். இது கூட நல்லாத் தான் இருக்கு டி” அவளது தலையை வருடிக் கொடுத்தான் கணவன்.
“ம்ம்ம்” ஹூம்காரம் இசைத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் மாது.
“நீ இப்போ ரொம்ப மாறிட்ட. முன்னெல்லாம் ரொம்ப சண்டை போடுவ. ஏட்டிக்குப் போட்டியா எதிர்த்துப் பேசுவ. இப்போ பூனைக் குட்டி மாதிரி சீக்கிரம் அடங்கி போயிடுற” அவளோடு சோபாவில் அமர்ந்து கொண்டான் மித்து.
“இந்த பூனையைத் தான் ஒரு புலி அடக்கியாச்சே. அதான் இந்த மாற்றம்” என்றாள் புன்னகை ததும்ப.
“இல்லவே இல்லை. இந்த பூனையோட அன்புக்கு முன்னாடி இந்த புலியோட பலம் எல்லாம் எடுபடாது. உன் கிட்ட சரணடைய தான் இந்த புலிக்கு இஷ்டம்” கண்களில் விஷமம் துள்ளி விளையாடியது அவனுக்கு.
அவன் பார்வை அவளை ஏதோ செய்ய, இதழ்கள் மெலிதாய்த் துடிக்க அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
“அம்முலு!” என்று அழைக்க, “என்னடா?” எனக் கேட்டவளினால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தான் போயிற்று.
“பொண்டாட்டி என்னைப் பாரேன்” அவள் நாடி பிடித்து முகத்தை உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தான்.
“நீ அப்படி பார்க்காத. அப்போ தான் நான் பார்ப்பேன்”
“எப்படி?” சில்மிஷமாய்க் கேட்க, “போடா கிறுக்கா! உன்னோட பேசி ஜெயிக்க முடியாது” அவள் மனதில் ஊறிய நாணத்தில் பாதி குரலில் துளிர்க்க, மீதி முகத்தில் சாயமிட்டது.
“ஏன்டி இப்படி வெட்கப்பட்டே கொல்லுற. என்னால சும்மா பார்த்துட்டு இருக்க முடியல” என்றவன் அவளைத் தன்னை நோக்கி இழுத்து, அதிரடித் தாக்குதலில் இறங்கியிருந்தான்.
முதலில் அதிர்ந்தவளோ அவனை முதுகில் கையிட்டு அணைத்துக் கொள்ள, தன் பூம்பாவையின் இதழெனும் பூவில் தேன் உறிஞ்சும் வண்டாய்த் தான் மாறிப் போனான் அக்காதல் கண்ணாளனும்.
நொடிகள் நிமிடங்களாகிக் கரைய, விலகி நின்று அவள் முகம் நோக்க வெட்கத்தில் சிவந்து போனாள் பெண்.
அறையினுள் சென்று ஒரு பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்தாள் அவள். அதைப் பிரித்தவனின் விழிகள் அகல விரிந்தன.
கடும்நீல நிற டிசர்டும் க்ரீம் கலர் ஹாட்டனும் இருந்தன.
“அழகா இருக்கு டி”
“பிடிச்சிருக்கா அருள்?” அவனுக்குப் பிடிக்காதோ என்ற அச்சத்தில் கேட்டாள்.
“பிடிக்காம இருக்குமா நீ எனக்காக ஆசையா வாங்கி தந்தது. இதை விட உன் அன்பும் காதலும் என் மீதான அக்கறையும் பிடிச்சுருக்கு. உன்னை! உன்னை மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்மணி” அவள் நெற்றியில் ஆழமாய் முத்தமிட்டான்.
அவன் அன்பில் உருகிப் போய் நின்றாள் அவள்.
அந்த பெட்டிக்குள் இன்னும் இரண்டு கவர்கள் இருக்க ஒன்றைப் பிரித்தான் மித்து.
அவனும் அக்ஷராவின் கழுத்தில் மங்கலநாண் பூட்டும் போது எடுத்த புகைப்படம் ப்ரேம் செய்யப்பட்டிருக்க, அதில் “தாங்க் யூ பார் கம்மிங் இன்டு மை லைப். ஹேப்பி பர்த்டே டு யூ மை லவ்” என்று எழுதப்பட்டிருந்தது.
அவன் ஏதோ சொல்ல வர, “அடுத்ததையும் பார்” என்றதும் அதனைப் பிரித்தான்.
அதுவும் ஒரு ப்ரேம் தான். அதிலோ விஷ்வாவும் மித்ரனும் ஒன்றாக இருந்த போட்டோ இருந்தது. அகம் குளிர்ந்து போனான் அவன்.
“ட்ரெஸ், நம்ம போட்டோ தரும் போது இருந்ததை விட உன் முகம் இப்போ எப்படி பிரகாசிக்குதுனு பார்” அவன் முகத்தைப் பார்த்து புன்னகைத்தாள் அக்ஷு.
“ஆமா! என்னவோ தெரியல இதைப் பார்த்து டபுள் ஹேப்பி. தாங்க் யூ சோ மச் டி”
“தெரியுமே! உனக்கு இந்த உலகத்தில் அதிகம் பிடிச்சது விஷ்வாவை தான். என்ன கிப்ட் தந்தாலும் உன்னை என்னால சந்தோஷப்படுத்த முடியாது இதைத் தவிர. அதனால தான் அவன் போட்டோவை உனக்கு தந்தேன். உன் முகத்தில் சந்தோஷத்தையும் பார்த்துட்டேன். இது போதும்”
அப்படிச் சொன்னவளை இழுத்து இறுகி அணைத்துக் கொண்டான் மித்ரன். அவளது அளவற்ற அன்பு அவனை உணர்ச்சிவசப்படுத்தியது.
“எனக்கு விஷுவுக்கு அடுத்தபடியா தான் அடுத்த எல்லாம். ஏன் நீயும் கூட. அது தெரிஞ்சும் என் கிட்ட அது பற்றி பேசாம ஒரு பொண்டாட்டியா என்னை கேள்வி கேட்காம என்னைப் புரிஞ்சுக்கிட்ட. இப்போ கூட என் பர்த்டேக்கு அவன் கூட இருக்கிற போட்டோவ தந்து என் சந்தோஷத்தில் நீ சந்தோஷப்படுற.
உன் அன்புக்கு முன்னாடி நான் எல்லாம் எங்கே டி” மேலும் இறுக்கமாய் காற்றுக் கூட புகாத அளவுக்கு இடைவெளியின்றி அவளைக் கட்டிக் கொண்டான்.
“இதுல என்னடா இருக்கு? அவனுக்கு தான் உன் மனசுல முதலிடம்னு நீ என்னை உதாசீனப்படுத்தலயே. எனக்கான எல்லா உரிமையும் தந்து நல்லா பாசமா பார்த்துக்கிற. இதைத் தவிர வேறு என்ன வேணும். நீ மட்டும் தான் எனக்கு வேணும். உன் சந்தோஷம் தான் என் சந்தோஷமும்” அவனைத் தானும் அணைத்துக் கொண்டாள் அக்ஷரா.
“ஐ லவ் யூ சோ மச் செல்லக்குட்டி” அவள் உச்சந்தலையில் முத்திரை பதித்தான் மன்னவன் அவன்.
“ஐ லவ் யூ டூ டா அருள்” என்ற பதிலோடு அவனைக் காதலாடப் பார்த்தாள் அருளின் காதல் ராணி.
*_தித்திக்கும் முத்தங்கள்_*
_*எத்தினமும் என் மீது*_
_*மத்தாப்பாய் நின் அன்போடு*_
_*கிடைத்தாலே போதுமடா(டி)*
_*பத்திரமாய் உன்னை – இதயத்தில்*_
_*பொத்தியே வைத்திடுவேன்*_
*_என் காதல் பொக்கிஷமே!_*
நட்பு தொடரும்……!!
ஷம்லா பஸ்லி