Home Novelsமையல் கொண்டேன் மைவிழி அழகிலேமையல் கொண்டேன் மைவிழி அழகிலே – 2

மையல் கொண்டேன் மைவிழி அழகிலே – 2

by Aazhi Thendral
5
(6)

ஆதிசேஷன் வீட்டை விட்டு கிளம்பிய சில நிமிடங்களில் உள்ளே வந்தாள் வித்யா. வீட்டின் அலங்காரத்தை பார்த்தவளுக்கோ வியப்பே மேலிட்டது. அதில்,

“என்னடி..? பர்த்டே செலப்ரேஷன் எல்லாம் ரொம்ப கிரேன்டா முடிஞ்சுது போலருக்கு? காலைல இருந்து புலம்பி தள்ளுனியே இப்போ ஹேப்பியா?” என்றதும்,

“அப்போ உனக்கு ஏற்கனவே தெரியுமா? நான் நெனச்சேன்டி. என்னடா.. நான் வீட்டை பூட்டிட்டு தானே போனேன். ஆதி எப்படி இதையெல்லாம் ரெடி பண்ணினானு. எல்லாம் உன்னோட வேலை தானா?”

“ஆமா.. உனக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டாங்க. அதான் கீ கேட்டதும் கொடுத்துட்டேன். இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சதுனாலதான் நானும் உன்னை காலைல இருந்து சமாதானம் பண்ணனும்னு ட்ரை பண்ணினேன். ம்ம்ம்…ஹும். நீ புரிஞ்சுக்கவே இல்ல.”

“சரி சரி.. விடு. எனக்கென்ன தெரியும்?”

“ஆமாம். உனக்கு எதுதான் புரிஞ்சிருக்கு?
சரி வா, சமையல் வேலையை பாப்போம்” என்றதும் சரி என்று சம்யுக்தாவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.

இருவருமாக சேர்ந்து சமைத்து முடித்து ஒன்றாக அமர்ந்து பேசியப்படியே சாப்பிட்டு முடித்தனர். பிறகு அவரவர் அறையில் சென்று படுத்து விட, ஆதிசேஷனிடமிருந்து அழைப்பு வந்தது.

ஆதிதான் அழைக்கிறான் என்றதும் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்,

“சொல்லு ஆதி..” என்றாள்.

“ஹேய்.. அதுக்குள்ள தூங்கிட்டியாடி? ஒரு குட் நைட் கூட சொல்லல.”

“இல்லடா.. இன்னும் தூங்கல. ஆனா தூக்கம் வர மாதிரி இருக்கு. சரி நீ சொல்லு பத்திரமா வீடு போய் சேர்ந்துட்டியா?”

“ம்ம்ம்.. வந்துட்டேன்.”

என்று கூறி கொண்டிருக்கும்போதே சம்யுக்தாவின் அன்னை அனிதா அழைத்திருந்தார்.

“டேய்.. நீ கட் பண்ணு, கட் பண்ணு, அம்மா கால் பண்றாங்க.

“இப்போதானடி பேச ஆரம்பிச்சோம்.. அதுக்குள்ள கட் பண்ணனுமா?” என்றான் கொஞ்சலும் சலிப்புமாய்.

“ப்ளீஸ் ஆதி.. புரிஞ்சுக்கோ..”

“சரி. ஆனா பேசி முடிச்சுட்டு மறக்காம கால் பண்ணு. நான் வெயிட் பண்ணுவேன்.”

“சரி.. சரி.. முதல்ல நீ ஃபோன வை.” என்றவள் உடனே அவளது அன்னை அனிதாவின் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ.. சொல்லுங்க மா..”

“இந்த டைம்ல யார்கிட்ட பேசிட்டு இருக்க? இன்னும் தூங்கலையா நீ?”

“இல்லமா ஃப்ரெண்ட் கிட்டதான் பேசிட்டு இருந்தேன்.” எனும்போதே அன்னையை ஏமாற்றுக்கிறோமோ என்று குற்ற உணர்வாக இருந்தது சம்யுக்தாவுக்கு.

“சரி, ரொம்ப நேரம் பேசிட்டு இருக்காம சீக்கிரம் தூங்க பாரு” என்றவரது குரலில் அக்கறையும், கண்டிப்பும் சேர்ந்தே இருந்தது.

“சரி மா.”

“சம்யூ.. ஒரு நல்ல வரன் வந்திருக்கு. இப்போதான் உன் சித்தப்பா மாப்பிள்ளையோட ஃபோட்டோவும் டீடெயில்ஸ்சும் அனுப்பினாரு.

கண்டிப்பா உனக்கு பிடிக்கும்னு நம்புறேன். உனக்கு ஃபோட்டோ ஷேர் பண்றேன் பாரு”

என்றதும் சம்யுக்தாவுக்கோ பதற்றம் அதிகரித்தது. அதில் கைகளை பிசைந்தப்படி அவள் அமைதியாகவே இருக்க, அவள் அன்னையோ,

“சம்யூ.. நான் பேசுறது கேக்குதா? இல்லையா?”

“கே.. கேக்குது மா.”

“ம்ம்ம்.. டீடெயில்ஸ் எல்லாம் அனுப்புறேன். பார்த்துட்டு நல்ல முடிவா சொல்லு.”

“சரி மா..” என்றவளுக்கோ அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆகிறதே என்று உள்ளுக்குள் பயப்பந்து உருள துவங்கியது.

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி திருமணத்தை தள்ளி வைக்கிறாள். ‘ஆனால் இந்த முறை என்ன சொல்வது? புதிதாக என்ன காரணத்தை தேடுவது?’

என்று சிந்தித்தாலே தலை வெடிப்பது போல் ஆகிறது சம்யுக்தாவிற்கு. அதே சிந்தனையில் அவளிருக்க,

“சரி சம்யூ.. நான் காலைல கால் பண்றேன். நீ ரொம்ப நேரம் ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டு இருக்காம சீக்கிரம் தூங்குற வழிய பாரு.”
என்றவர் அழைப்பை துண்டித்தார்.

சம்யூவின் தந்தை விஜய் ஆனந்த் அனிதாவிடம், “ஏன் எப்போ பாரு பிள்ளையை மிரட்டிட்டே இருக்க? கொஞ்சம் பொறுமையா பேச கூடாதா?” என்றார்.

“எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம். வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல அவளை பெங்களூர் அனுப்பி வச்சீங்க.

இப்போ யாரை மாப்பிள்ளையா காமிச்சாலும் வேண்டாம் வேண்டாம்னு சொல்றா. இதுவே அவ இங்க இருந்திருந்தா, இந்நேரம் அவளை எப்படியும் சம்மதிக்க வச்சிருப்பேன்”

“இது கல்யாண விஷயம் ஹனி.. கொஞ்சம் பொறுமையாதான் இருக்கணும். அவசர பட கூடாது. நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா நம்ம பிள்ள வாழ்க்கை தானே கேள்வி குறியாகும்? அவளுக்கும் பிடிக்கணும்ல?”

“இப்படியே ஏதாவது சொல்லி சொல்லி என் வாயை அடைச்சுடுங்க.” என்று சத்தமாக கூறியவர்,

“ஹனியாம் ஹனி.. தோளுக்கு மேல வளர்ந்த பையன் பக்கத்துல இருக்கானேன்னு ஏதாவது விவஸ்தத்தை இருக்கா இந்த மனுஷனுக்கு?” என்று முனுமுனுத்து கொண்டே சமையலறையை சுத்தம் செய்ய கிளம்பிவிட்டார்.

சம்யூவின் அண்ணன் ராகவன் இது எதையுமே கண்டு கொள்ளாமல் ஹால் சோஃபாவில் அமர்ந்தப்படி டிவி பார்த்து கொண்டிருந்தான். சம்யுக்தா திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்று அவனுக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.

இந்த முறையும் ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழிக்கத்தான் போகிறாள் என்று எண்ணியவனுக்கு உள்ளுக்குள் ‘தன் தங்கை யாரையாவது காதலிக்கிறாளா?’ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

‘ஆனால் அப்படி எதுவும் இருந்திருந்தால் அவள் நிச்சயம் வீட்டில் சொல்லி இருப்பாளே? நாங்கள் யாரும் காதலுக்கு எதிரி இல்லையே?’ என்று நினைக்கும்போது தான் சற்று குழம்பி போவான்.

‘சரி எதுவா இருந்தாலும் அவளே சொல்லட்டும்’ என்று காத்திருக்கிறான் ராகவன்.

சம்யுக்தாவோ அழைப்பை துண்டித்தவள் அடுத்த நொடி ஆதிக்கு அழைத்திருந்தாள்.

“ஹலோ..” என்று அவன் காதலோடு அழைக்க,

“இதோ பாரு ஆதி. இன்னைக்கு அம்மா மறுபடியும் கலயாணத்த பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. நீ இப்படியே இருந்தா நான் என்ன செய்ய முடியும்?” என்றாள் சற்று கோபமாக.

“நான் நம்ம இரண்டு பேர் நல்லதுக்காகதானே சொல்றேன் சம்யூ. கொஞ்சம் புரிஞ்சுக்க பாரு.”

“நீ முதல்ல என் நிலைமையை புரிஞ்சுக்கோ ஆதி.”

“சரி சம்யூ. எனக்கு ஒரு ஒன் மந்த் மட்டும் டைம் கொடு. கண்டிப்பா அதுக்குள்ள ப்ரோமோஷன் பத்தி சொல்லிடுவாங்க. அப்படி ஒரு வேலை சொல்லலைனா நீ சொல்றதை நான் கேக்குறேன். என்ன ஓகேவா?”

அதில் சற்றே சிந்தித்தவள், “சரி. சரியா ஒரு மாசம்தான் உனக்கு டைம். அதுக்குள்ள ஒருவேளை நீ நெனச்சது நடக்கலைனா இப்போ சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்.”

“சரி செல்லமே.. இப்போ கொஞ்சம் கோபத்தை குறைங்க. என்றவன் காதலாட நீண்ட நேரம் அவளுடன் உரையாடி விட்டே உறங்கி போனான்.

அடுத்த நாள் காலை பொழுது சம்யுக்தாவும், வித்யாவும் வீட்டு வேலைகளை சேர்ந்தே முடித்தவர்கள் சேர்ந்தே அலுவலகத்திற்கும் சென்று சேர்ந்தனர்.

ஆதிசேஷனும் சரியாக அலுவலகத்திற்கு வந்திருக்க, மற்றவர்கள் முன்னிலையில் ஆதியும், சம்யூவும் யாரோ போலதான் நடந்து கொண்டனர். வேலை விடயத்தில் ஏதேனும் பேச வேண்டிய அவசியம் வந்தால் மட்டும் இருவரும் பேசி கொள்வர்.

மற்றபடி பார்வை பரிமாற்றம் மட்டுமே. அதுவும் யாரேனும் தங்களை கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்த பிறகே நடக்கும்.

அனைவரும் அவரவர் இருக்கையில் அர்ந்து கொள்ள, வழக்கம் போல் வேலை தொடங்கியது.

அலுவலகத்தின் முதலாளி அனைவரையும் ஒருமுறை நோட்டம் விட்டப்படி உள்ளே நுழைய, ஒவ்வொருவரும் அவருக்கு தங்களுடைய வணக்கத்தை தெரிவித்தனர்.

பதில் வணக்கத்தை தெரிவித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தவர் ஆதிசேஷனை பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது.

“மிஸ்டர் ஆதி. கம் டு மை கேபின்” என்று அவனை பார்த்து கூறியவர், அவரது அறைக்குள் நுழைந்து கொள்ள, ஆதிசேஷன் தன்னுடைய மடி கணினியை மூடி வைத்துவிட்டு முதலாளியின் அறை கதவின் முன்பு நின்று,

மே ஐ கம் இன் சார்.. என்றான்.

“வாங்க ஆதி..” என்றவர் அவன் உள்ளே நுழைந்ததும்,

“டேக் யுவர் சீட் என்றார்” இவனுக்கான இருக்கையை காட்டியப்படி.

அவனும் வந்து அமர்ந்தவன், “சொல்லுங்க சார்..” என்றான்.

“ரொம்ப நாளாவே உங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சிருந்த விஷயம்தான். உங்களுக்கு ப்ரோமோஷன் கொடுக்கலாம்னு இருக்கேன்” என்றார்.

அதை கேட்ட ஆதிசேஷனின் விழிகள் மின்னியது. இதற்காகத்தானே இவனும் காத்து கிடந்தான். அவனது ஆர்வம் அவன் கண்களிலேயே தெரிந்திட,

ஆனால் என்ன பொசிஷன்னு இப்போ சொல்ல போறது இல்லை. இன்னும் பத்து நாளைல அதைப்பத்தி உங்ககிட்ட சொல்லிடுவேன். சம்மதமா இல்லையானு நீங்கதான் சொல்லணும்” என்றதும் சற்றே குழப்பமடைந்தவன்,

‘ஒரு வேலை ப்ரோமோஷன் கொடுத்து டெல்லில இருக்குற அவர் கம்பெனிக்கு என்னை மாத்த போறாரோ?’ அப்படீன்னா சம்யுக்தாவும் நானும் கல்யாணம் பண்ணிட்டு டெல்லிக்குதான் போகணும் போலயே. என்று அதற்குள் அவன் மனம் கற்பனை வானில் பறக்க துவங்கியது.

“மிஸ்டர் ஆதி? என்ன யோசிக்கிறீங்க? உங்க ப்ரோமோஷன் பத்தி இன்னும் பத்து நாளைல உங்களுக்கே தெரிஞ்சுடும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

ஆனா அதுக்கு நீங்க நூறு சதவிகிதம் பொருத்தமான ஆளு. அதை மட்டும் நான் உறுதியா சொல்லுவேன்” என்றவர் முகத்தில் கர்வ புன்னகை மிளிர்ந்தது.

ஆதிசேஷனின் மீது அவருக்கு எப்போதும் ஒரு நல்ல எண்ணம் உண்டு. இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு புத்திசாலித்தனமான ஒரு ஆள் தன்னிடம் வேலை பார்ப்பதில் அவருக்கு மகிழ்ச்சியே.

அவன் வேறு எந்த அலுவலகத்திற்கும் மாறி விட கூடாது, எப்போதும் தன்னுடைய அலுவலகத்திலேயே இருக்க வேண்டும் என்ற அளவிலேயே அவனுடைய பதவி உயர்வை பற்றி சிந்தித்து வைத்திருந்தார் அவர்.

ஆதிக்கும் இதில் அளவற்ற மகிழ்ச்சி. எப்படியும் தன் திறமைக்கு ஏற்ற பதவியையே முதலாளி வழங்குவார் என்ற அளவு கடந்த நம்பிக்கை அவனிடம் இருந்தது.

“தேங்க் யூ சார்.. தேங்க் யூ சோ மச்.. எப்போதுமே நீங்க என்மேல வச்ச நம்பிக்கையை நான் காபாத்துவேன்.”

“சரிங்க ஆதி. நீங்க கிளம்பலாம். இதை சொல்லத்தான் வர சொன்னேன்.” என்றதும்

“சரிங்க சார்.” என்றவன் சம்யூவை எண்ணியப்படியே புன்னகையோடு அறையை விட்டு வெளியேறினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!