Home Novelsகரம் விரித்தாய் என் வரமே18. கரம் விரித்தாய் என் வரமே

18. கரம் விரித்தாய் என் வரமே

by Ambika ram
5
(4)

கரம் விரித்தாய் என் வரமே – 18

பார்வதியின் வீட்டிற்கு வந்த சாய், மிகுந்த எரிச்சலில் இருந்தான். அவனும் எவ்வளவு தான் அவளின் புலம்பலை கேட்பது?

“ஏன் பார்வதி? உனக்கு அறிவே இல்லையா? அவன் கொஞ்சம் கூட உன்னோட லவ்வை பிரதிபலிக்கவே இல்லை…. நீயேன் அவனையே பிடிச்சுக்கிட்டு தொங்குறே….? விட்டு தொலை அவனை…. உன் ரேஞ்சு தெரியாம கிறுக்கு மாதிரி ஏதோ பண்ணிட்டு இருக்கே….” என்றான் அவன் எரிச்சலை மறையாமல்.

“ஆமா, விட்டு தொலைக்கணும் தான்…. ஆனா சும்மா இல்லை…. அவனை அசிங்கப்படுத்தணும்….”

“ஹேய்…. சுப்பர்…. எப்படி இப்படி மாறினே…. எவ்ளோ நாளா நான் உன்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்….?”

“ஆமா…. அப்போ எல்லாம் அவன் ஓகே தான் எனக்கு…. ஆனா இப்போ அவன்கிட்ட நிறைய சேஞ்ஜ்…. என்னை ரொம்ப மோசமா நடத்துறான்…. என்னை என்னனு நினைச்சான் அவன்….? அதே மாதிரி நாம எவ்ளோ பிரச்சனை பண்ணி விட்டாலும் அவனும் அஸ்வினியும் எப்படியாவது ஒன்னு சேர்ந்துடுறாங்க…. இன்னைக்கு பார்த்தேன்…. இரண்டு பேரும் அவ்ளோ க்ளோஸா நடந்துகிட்டாங்க…. இவங்க ரெண்டு பேரை பத்தி நினைச்சு நினைச்சு என்னால டென்ஷன் ஆக முடியாது…. அதனால் எனக்கு அவன் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்….”

“வெரி குட்! அவனை எல்லார் முன்னாடியும் நல்லா இன்சல்ட் பண்ணிவிடு…. அது தான் அவனுக்கு தகுந்த பாடம்….”

“ஆமா, ஆனா சின்ன லெவல்ல இல்லை…. பெரிய லெவல்ல பிளான் வைச்சு இருக்கேன்….”

“அப்படி என்ன பிளான்??” அவன் கேட்டு பார்வதி சொல்ல சொல்ல, ஆச்சர்யப்பட்டு போனான் சாய்! அவனிடம் அவள் சில உதவிகள் கேட்க, மனதினில் இவள் நான் நினைத்ததை விடவும் கேடி பெண்! என்று நினைத்து கொண்டவன், “கண்டிப்பா செஞ்சுடலாம்….” என்றான். பின்,

“நீ மாறிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்…. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்…. என்னை கொஞ்சம் கன்சிடர் பண்ணுவியா பார்வதி….?” என்றவன் அவளின் கைகளை எடுத்து மெதுவாக வருடினான்….

அவனின் எண்ணம் இவ்வளவு நாளில் தெரிந்து இருந்தாலும், அவன், அவனின் எல்லையிலேயே இருந்ததால் அதை பெரிதாக கண்டுகொண்டதில்லை பார்வதி. இன்று ராஜேஷ் மேல் இருந்த கோபம், அஸ்வினியுடனான் அவனின் பேச்சு எல்லாம் சேர்ந்து ஏமாற்றத்தில் தன் நிலையில் இல்லாதவள், சட்டென்று அவன் பக்கம் சாய்ந்து விட்டாள்.

சாய்க்கு ஒத்துழைப்பு கொடுப்பது போல், “என் மேல் அவ்ளோ ஆசையா….?” என்று அவனை தூண்டும் விதமாக பேச,

“எனக்கு சான்ஸ் கொடுத்து பார்….! அந்த ராஜேஷிற்கு தான் இந்த பொக்கிஷத்தோட அருமை தெரியலை…. நான் அப்படி இல்லை, உன்னை காலத்துக்கும் கொண்டாடுவேன்….” என்றான். அவளின் மனநிலையை சரியாக புரிந்து கொண்டவன், குறி பார்த்து அடித்து கனியை தன் பசிக்கு இரையாக்கி கொண்டான்.

அவர்கள் இருவரும் தங்களை மறந்து இருந்ததில், நேரம் போனதே தெரியவில்லை. கூடிக் கூடி களைத்து, அவர்கள் உறங்கி எழும் போது இருள் கவிந்து விட்டது!

அவன் கிளம்பி தயாராகி வெளியே வந்த போது, அஸ்வினி வீட்டில் இருந்தாள். முதலில் அவள் சாய் பார்வதியின் அறையில் இருந்து வந்ததை பெரிதாக நினைக்கவில்லை, ஆனால் பார்வதி இருந்த கோலம் கண்டவளுக்கு சட்டென்று அவர்களின் நிலை புரிந்தது. புரிந்தவளுக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகி விட்டது! இவள் ராஜேஷுடன் காதல் என்று சொல்லிக் கொண்டே இவனுடன் உறவு வைத்து இருந்தாளா…. இல்லை ஓப்போது தானா? என்று குழம்பி போனாள். இது போல் இயல்பாக இருக்கிறாள் என்றால் இவளுக்கு இது பழக்கமா? தெரியவில்லை அஸ்வினிக்கு. நல்ல காலம் ராஜேஷ் இவளை விரும்பவில்லை, விட்டு விடுகிறேன் என்று சொல்லி விட்டான்! இந்த கழிசடை எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று மனதை தேற்றி கொண்டாள் அஸ்வினி.

அஸ்வினியை துளி கூட கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு திரும்ப நடந்தாள் பார்வதி. அஸ்வினியின் சந்தேகம் தவறே இல்லை, பார்வதிக்கு இதற்கு முன்பும் ஓரு முறை அனுபவம் இருக்கிறது…. நெருக்கமாக பழகி பழகி அவள் தானே அனைவரையும் கழட்டி விடுவாள்…. அவளை கழட்டி விட்டது ராஜேஷ் மட்டும் தான்!

மறுநாள் அலுவலகம் வந்தவள்,

ராஜேஷை தேடி போனாள். வழக்கம் போல் அவளை பொருட்படுத்தாமல் அவன் இருக்க,

“உன் போனுக்கு ஒரு கிளிப்பிங் அனுப்பி இருக்கேன் பார் ராஜேஷ்….” என்றாள் அசால்ட்டாக.

அவன் பெரிதாக எதையும் யோசிக்காமல், வேண்டா வெறுப்பாக எடுத்து பார்த்தான். பார்த்தவன், அருவெறுத்து போனான். அவளும் ராஜேஷும் முத்தமிடும் வீடியோ அது!

“சே! கருமம் இதை எல்லாம் ரெக்கார்ட் பண்ணியா நீ….?” அலுவலகம் என்பதால் அவனால் அவனின் ஆத்திரத்தை முழுதாக காட்ட முடியவில்லை. முடிந்தவரை அவனை அடக்கி கொண்டு, நரம்புகள் புடைக்க அவளை முறைத்த படி கேட்டான் ராஜேஷ்.

“ம்ம்…. சும்மா ஒரு ஆசைக்காக பண்ணேன்…. பரவாயில்லை இப்போ யூஸ் ஆகுது என்றவள், உன்னை விட்ற சொன்னியே…. விட மாட்டேன்…. என்னை விடணும்னு நினைச்சே…. இந்த விடியோவை ஆபிஸ், உங்க அம்மா, அப்பா தங்கை எல்லாருக்கும் அனுப்பி வைப்பேன்…. அனுப்ப முடியாதுனு நினைக்காதே….அப்படி முடியலைனா உன் வீட்டுக்கே வந்து காட்டுவேன்….” என்றாள்.

“உனக்கு வெட்கமா இல்லையா இப்படி பேச….? இது வெளில வந்தா உனக்கும் தானே அசிங்கம்?” வெறுத்து போய் கேட்டான் ராஜேஷ். அவளிடமிருந்து இப்படி ஒரு விஷயத்தை துளியும் எதிர்பார்க்கவில்லை ராஜேஷ். கொஞ்சி கொஞ்சி பேசி தன்னுடன் குழையும் இவளுக்குள் இப்படி ஒரு ஈனப் புத்தியா என்று அதிர்ந்து இருந்தான்.

“இல்லையே…. நீ என்னை ஏமாத்திட்டே…. இப்படி எல்லாம் என்கூட பழகிட்டு…. இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறான்னு உன்னை பத்தி சொன்னா…. எல்லாரும் எனக்காக பரிதாபம் தான் படுவாங்க…. உன்னை தான் கேவலமா பார்ப்பாங்க….” கிண்டலும் கேலியுமாக பேசினாள் பார்வதி.

“என்ன வேணும் உனக்கு….? என்ன எதிர்பார்த்து இதை எல்லாம் செய்றே….?” அவளை புரிந்து கொண்டதில் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“இவ்ளோ நாள் நான் பின்னாடி சுத்தி வந்தேன். அது இந்த ஆபிஸில் இருக்க அத்தனை பேருக்கும் தெரியும்! இனிமே நீ என்னை சுத்தி வரணும், என்னை மகாராணி மாதிரி தாங்கணும்…. முக்கியமா உன் பிரண்ட் அந்த அஸ்வினி இருக்காளே அவகிட்டே பேசவே கூடாது…. மீறி பேசினா…. உன்னையும் அவளையும் வைச்சு மார்பிங் வீடியோ ரிலீஸ் பண்ணுவேன்…. என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்குவேன்…. எனக்கு கவலை இல்லை…. ஆனா உனக்கு உன் சுயமரியாதை, கவுரவம், குடும்ப கவுரவம் எல்லாம் போய்டும்!” என்று மிராட்டினாள் பார்வதி.

“ஏய்!” என்று பல்லை கடித்து அவளை நோக்கி பத்திரம் காட்டியவன், பின் தன்னை சமாளித்து கொண்டு,

“இப்படி எல்லாம் பண்ணா உனக்கு என்ன கிடைக்க போகுது…? என்றான் புரியாமல்.

“எனக்கு வேற ஒன்னும் கிடைக்க வேண்டாம், நீ கிடைச்சா போதும்! நாம கல்யாணம் வரை போகணும்….” என்று பெரிய குண்டை தூக்கி போட்டாள் பார்வதி.

“வாட்….? என்ன விளையாடுறியா…. இப்படி பண்ற உன்னை நான் எப்படி கல்யாணம் பண்ணுவேன்னு எதிர்பார்க்கிறே நீ….?”

“உன்னை நான் அவ்ளோ ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்க போறதா தப்பா நினைக்காதே ராஜா…. நான் என்ன சொன்னேன்….? கல்யாணம் வரை போகணும்….! அவ்ளோ தான்!”

“அப்படினா…. தெளிவா சொல்லு….” உடலும் உள்ளமும் இறுகியது ராஜேஷிற்கு. என்ன செய்வது இவளை என்று தெளிவாக சிந்திக்க முடியாமல் அவள் பேசுவதை எல்லாம் ஸ்தம்பித்து போய் கேட்டு கொண்டு இருந்தான்.

“சும்மா ட்ராமா மை பாய்…. உனக்கும் எனக்கும் கல்யாணம்னு ஏற்பாடு எல்லாம் பண்றோம்…. ஆபிஸில் இருக்க எல்லாரையும் இன்வைட் பண்றோம்…. ஆனா கல்யாணம் நடக்காது…. எங்க வீட்டில் இருந்து வந்து நம்ம கல்யாணத்தை நிறுத்தி, உன்னை உதைச்சு, என்னை அழைச்சிட்டு போயிடுவாங்க….. நீ எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிற்பே…. அதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை…. அதுவரை நீ எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தே ஆகணும்…. இல்லைனா பர்ஸ்ட் முத்தம், அப்புறம் மொத்தம்!” என்று சிரித்தாள் பார்வதி.

“எவ்ளோ நாள் இந்த ட்ராமா?”

“மேக்ஸிமம் இரண்டு மாசம் தான்!”

“சோ…. உன்னோட எண்ணம், நான் அசிங்கப்படணும், அவமானப்படணும்…. அப்படி தானே….?”

“ஆமா…. அதை பார்த்து நான் சந்தோசப்படணும்….”

“என்னை லவ் பண்றேன்னு சொன்னது எல்லாம்…. என்கிட்ட உருகினது….?”

“அதை கெடுத்துகிட்டது நீதான்…. உன்னால தான் உனக்கு இந்த நிலைமை…. இப்போ எனக்கு உன்னை பிடிக்கலை…. எனக்கு என் மைண்ட்ல என்ன தோணுதோ அதை தான் நான் செய்வேன்….”

“அதுக்கு நீ உன்னையே அசிங்கப்படுத்திக்க கூட ரெடியா இருக்கே….?”

“இது என்ன என் ஊரா? எனக்கு ஒரு அம்பது பேரை தெரியுமா? நான் ஊரை காலி பண்ணிட்டு போய் கிட்டே இருப்பேன்…. நீ தான் இங்கேயே இருக்கணும்….”

இவ்வளவு தெளிவாக பேசுபவளை பொறுமையாக தான் கையாள வேண்டும் என்று நினைத்து கொண்டவன்,

“சரி உன் கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கிறேன்” என்றான்.

“சூப்பர்! அப்போ இப்போ காண்டீன் போய் எனக்கு ஒரு காபி வாங்கிட்டு வா….” என்றாள்.

அமைதியாக கிளம்பி சென்றான் ராஜேஷ். அவன் மனமெங்கும் என்ன செய்வது? எப்படி இவளின் திட்டத்தில் இருந்து வெளிவருவது என்று பல யோசனை ஓடியது. ராஜேஷ் வெளியே சென்றதை பார்த்த அஸ்வினி வேகமாக அவன் பின்னே சென்றாள். நேற்று மாலை நடந்ததை அவனிடம் சொல்லலாம் என்று நினைத்து அவனை தொடர்ந்து சென்றாள். வீட்டில் இருப்பவனிடம் போனில் ப்ரீயாக பேச முடியாது என்பதால் அவள் அவனை அழைக்கவில்லை.

“ராஜேஷ்! ராஜேஷ்!”

அஸ்வினியின் குரல் கேட்க, திக்கென்றது அவனுக்கு. இப்போது அவளிடம் என்ன சொல்லி அவளை விலகி இருக்க சொல்வது….?

வேகமாக திரும்பியவன், “இப்போ உன்கிட்ட பேசுற மூடில் நான் இல்லை அஸ்வினி….ப்ளீஸ்….” என்றவாறு வேகமாக விலகி நடந்தான்.

அவன் மூஞ்சியில் அடித்தாற் போல் பேசிவிட்டு நகரவும் முகம் விழுந்து விட்டது அவளுக்கு. என்ன ஆயிற்று இவனுக்கு? என்ன பிரச்சனை என்று கவலைப்பட்டாள்.

அவள் திரும்பி நடக்க, அவளை நக்கலாக பார்த்தபடி அங்கே நின்றாள் பார்வதி. அஸ்வினி வெளியே செல்வதை பார்த்தவள், அவளை தொடர்ந்து எழுந்து வெளியே வந்து விட்டாள்.

தன் அருகில் வந்தவளிடம்,

“இனிமே ராஜேஷ் கிட்ட பேசுற வேலை வைச்சுக்காத…. அவன் இனிமே உன்கிட்ட பேச மாட்டான்….” என்றாள் திமிராக.

“அப்படியா….? அதை ராஜேஷ் சொல்லட்டும்….” என்றாள் அஸ்வினி நிமிர்வாக. அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தின் விளைவாக வந்த நிமிர்வு அது. பார்வதி ஏதோ சும்மா இவளிடம் பிரச்சனை பண்ணுகிறாள் என்று நினைத்தாள் அஸ்வினி.

“அப்படியா…. ஒரு அஞ்சு நிமிஷம் நில்லு…. இப்போ வந்துருவான்…. வந்து அவனே சொல்லுவான்….” என்றாள் மிகுந்த நக்கலாக.

அதே போல் ஐந்து நிமிடத்தில் வந்தவன், கையில் இருந்த காபி கோப்பையை பார்வதியிடம் நீட்ட, அதிர்ந்து விழித்தாள் அஸ்வினி. அவளின் திகைத்த முகத்தை பார்த்த ராஜேஷிற்கு வருத்தமாக இருந்தது.

“சொல்லு ராஜேஷ் இவகிட்ட, உனக்கு நான் தான் முக்கியம்…. இவகிட்ட பேசினா நமக்குள்ள பிரச்சனை வருது…. அதனால் உன்கிட்ட பேசவேண்டாம்னு சொல்லு ராஜேஷ்….!” என்றாள்.

அவள் சொல்ல சொல்ல, கண்கள் விரிய அப்படியா…? என்னிடம் இப்படியா பேச போகிறாய் என்பது போல் ராஜேஷை பார்த்த அஸ்வினியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்தான் ராஜேஷ். பின் மனதை தேற்றி கொண்டு அவள் கண்களை சந்திக்காமல், அவளுக்கு பின்னால் நோக்கியபடி அஸ்வினியின் மனதை உடைக்க போகிறோம் என்று தெரிந்தே அந்த வார்த்தைகளை சொன்னான் ராஜேஷ்.

“இனிமே நீ என்கிட்ட பேசவேண்டாம் அஸ்வினி. ப்ளீஸ் ஸ்டே அவே பிரம் மீ….!”

நொறுங்கி போனாள் அஸ்வினி. கண்கள் கலங்க, அவனுக்கு பதில் கூட சொல்லாமல், இருவரையும் பார்க்காமல் வேகமாக விலகி சென்றாள் அஸ்வினி.

“ச்சு…. ச்சு….” என்று சிரித்த பார்வதியை அடித்து நொறுக்கி விடும் வேகம் வந்தாலும் கட்டுப்படுத்தி கொண்டு அங்கிருந்து அஸ்வினியை பற்றி கவலையாக நினைத்துக் கொண்டு நகர்ந்தான் ராஜேஷ்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!