வீராவிற்கு சர்வேஷ் மீது டவுட்டு இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பரத்துடன் அவனை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்து விட்டு வேறொரு கேஸைப் பார்க்க வெளியே சென்றான். பரத் சர்வேஷை கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே டாக்டர் அவனை விழுந்து விழுந்து கவனிப்பதைப் பார்த்து பரத்திற்கு அவர்களின் மேல் சந்தேகம் வந்தது. ஏனெனில் அவர்கள் சர்வேஷிற்காகவே காத்திருந்தது போல சர்வேஷை அழைத்து வந்ததும் உடனே எமர்ஜென்சிக்கு கொண்டு சென்றார்கள். அது மட்டுமல்லாமல் எல்லாரும் முன்னாடியே பேசி வைத்து செயல்படுவது போல ஒரு அனைத்தையும் வேக வேகமாக செய்தார்கள். இதை பார்த்ததும் பரத்துக்கு அவர்களின் திட்டம் புரிந்து விட்டது. சர்வேஷை கோர்ட்டில் ஒப்படைக்காமல் இருப்பதற்காகவே அவர்கள் இவ்வாறு நாடகம் ஆடுகின்றார் என்பதைப் புரிந்து கொண்டான். இதை உடனே வீராவிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தவன் அவனுக்கு போன் பண்ணினான்.
“ஹலோ வீரா எங்க இருக்க….?”
“நான் ஒரு கேஸ் விஷயமா வெளியில இருக்கேன் சொல்லு பரத்….”
“வீரா இங்க என்ன நடந்தது தெரியுமா….? சர்வேஷை வந்து நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன்ல டாக்டர்ஸ் எல்லாம் சொல்லி வச்ச மாதிரியே நடந்துக்கிறாங்க…. எனக்கு ஏதோ இவங்க பிளான் பண்ணி தான் பண்ணி இருக்காங்கன்னு தோணுது வீரா….”
“அதுவே உனக்கு இப்ப தான் தோணுதா…? அது வந்து கோர்ட்ல நான் அவனை கோர்ட்ல ஒப்படைக்கக் கூடாதுனு அவனை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்காங்க…. இது எல்லாம் அந்த கன்னியப்பனோட ப்ளான்… நீ வேணும்னா பாரேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து வெயில்ல அவனை எடுத்துடுவான் அந்த கன்னியப்பன்….”
“மச்சான் அப்புறம் எதுக்குடா அவனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண விட்ட….? அவன் மயங்கி விழுற மாதிரி நடிக்கும் போது அவனை ஒரு வழி பண்ணிருக்கலாம்ல மச்சான்…. அங்க வச்சு ரெண்டு அடி போட்டிருந்தா நானும் உன்னோட ஃபைட் சீன பார்த்திருப்பேன்….”
“டேய் இதெல்லாம் என்னடா ஃபைட்…? இதுக்கு அப்புறம் இருக்குடா பெரிய ஃபைட்… விடு விடு எவ்வளவு தூரம் போறாங்கன்னு பாக்கலாம்…. இப்பவே ஆடினா ஆட்டம் சூடு பிடிக்காதுல… என்ன வேணா ஆட்டம் ஆடட்டும்… கொஞ்ச நேரம் அவங்களோட ஆட்டத்தை பார்த்துட்டு அப்புறமா நம்ம ஆட்டத்த ஆரம்பிக்கலாம் சரியா….?”
“சரி மச்சான் இப்ப நான் இங்க இருக்கட்டுமா இல்ல போகட்டுமா….?”
“நீ அங்க இருந்து எந்த ஆணிய புடுங்க போற…? அங்க ஒரு ஆணியும் புடுங்க தேவல நீ கிளம்பி ஸ்டேஷனுக்கு போ…”
“ஓகே மச்சான் நான் வந்துடறேன்…. இருந்தாலும் நீ என்னை இவ்வளவு டேமேஜ் பண்ண தேவலடா…”
“விடுடா விடுடா நட்புக்குள்ள என்னடா வாடா….”
“ஹீஹீஹீ வந்திடுறன் மச்சான்…” என்று போனை வைத்தான் பரத்.
அருகில் இருந்த இளநீர் கடையைப் பார்த்த வீரா, அங்கிருந்த இளநீர் கடைக்காரரிடம் ஒரு இளநீர் வாங்கிக் குடித்துக் கொண்டு இருந்தான்.
………………………………………………….
இங்கே அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு சுதர்ஷினி ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு காலேஜிற்கு சென்று கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவள் காலேஜுக்கு கொண்டு போவதற்காக சில பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் வழமை போல மறந்து விட்டாள். அதனால் இப்போதே வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
வீரா இளநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவன் அந்தப் பகுதியில் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து நாலைந்து பேர் துரத்திக் கொண்டு வந்தனர்.
‘என்னது இவனை துரத்திட்டு இருக்காங்க… என்னவா இருக்கும்…?’ என்று நினைத்த வீரா உடனே ஓடி வந்த ஒருவரை அழைத்து, “என்னங்க பிரச்சனை…?” என்று கேட்டான். அதற்கு அவர், “அதோ ஓடுறானே அவன் அங்க பஸ்ஸிற்காக நின்னுட்டு இருந்த ஒரு அம்மாவோட தாலிச் செயினை அறுத்துட்டாங்க சார்… அதான் துரத்திக்கிட்டு போறோம்…”
“அப்படியா….” என்று அவர்களுடன் சேர்ந்து அந்த திருடனைப் பிடிக்க முயன்றான். ஆனால் அந்தத் திருடனும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். ‘அவனை எப்படியாவது புடிக்கணுமே…’ என்று அங்கும் இங்கும் பார்த்தான். அப்போதுதான் சுதர்ஷினி அந்த கடையில் அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து ஸ்கூட்டியில் ஏறிப்போனாள். அதைப் பார்த்ததும் அவள் அருகில் வேகமாக வந்தான் வீரா.
“ஏங்க கொஞ்சம் விலகுங்க…” என்றவன் அவள் கண்ணிமைக்கும் நொடியில் அங்கிருந்து ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். இங்கே இப்போ என்னதான் நடந்துச்சு என்ற ரீதியில் அவன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு நின்றாள் சுதர்ஷினி. ‘எங்கிருந்து வந்தான்னு தெரியலையே என் ஸ்கூட்டி எடுத்துட்டு போயிட்டான் யாரா இருப்பான்…. டேய் எங்க போனாலும் உன்னை விடமாட்டேன்டா…. என் ஸ்கூட்டியவே எடுத்துட்டு போறியா…? நானே எவ்வளவு கஷ்டப்பட்டு அழுது பட்டினி கிடந்து அந்த ஸ்கூட்டியை வாங்கி இருப்பேன். இப்போ நீ இந்த ஸ்கூட்டி எடுத்துட்டு போன விட்ருவேன் இருடா இப்பவே போலீஸ்ல பொண்ண கம்பளைண்ட் கொடுத்து உன்னை முட்டிக்கு முட்டி தட்ட வைக்கிறன்…’ என்று சொல்லிக் கொண்டவள் வீட்டுக்கு திரும்ப அவள் அருகே அவளது தோழி கூட்டியை கொண்டு வந்து நிறுத்தினாள்.
“ஏய் சுதர் எப்படி இருக்க… உனக்கு காலேஜ்ல டீச்சரா வேலை கிடைச்சிருக்குனு கேள்விப்பட்டேன்
வாழ்த்துகள் டி…” என்றாள்.
“தேங்க்ஸ் டி…”
“ஆமா இங்க என்ன பண்ணிட்டு இருக்க….?” என்றாள் அவள் தோழி. “இங்க என்னோட ஸ்கூட்டியை நிறுத்திட்டு கடைக்கு போயிட்டு வந்து திரும்ப ஏறும் போது என் ஸ்கூட்டியை ஒருத்தன் திருடிட்டு போயிட்டான்டி அதான் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கலாம்னு பாத்தேன்….”
“என்னது உன்னோட ஸ்கூட்டிய திருடிட்டானா…? வா சீக்கிரம் போலீஸ் ஸ்டேஷன் போலாம்…. நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்கிற ஏசிபி கிட்ட இதை சொன்னா உடனே கண்டுபிடிச்சு குடுத்துடுவாரு… வாவாடி போலாம்…..”
“இல்லடி உனக்கு அடுத்த மாசம் கல்யாணம் இருக்கு… இந்த நேரத்துல நீ போலிஸ் ஸ்டேஷனுக்கு என்கூட அலைய வேணாம்… நான் வீட்டுக்கு போய் அப்பாவ கூட்டிட்டு போறேன்… என்ன வீட்ல மட்டும் விடுறியா….?”
“சரி இரு நான் உன்னை வீட்டில விட்டுட்டே போறேன்….” என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டுவிட்டு சென்றாள்.
“அப்பா……”
“அம்மா….”
“ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க….?” என்று அழைத்துக் கொண்டே வீட்டினுள் வந்தாள் சுதர்ஷினி.
“என்னடி இப்பதான் காலேஜ் போறேன்னு போன… அதுக்குள்ள திருப்பி வந்துட்டே என்னாச்சு ஏதும் பிரச்சனையா…..?” என்றார் சுமதி.
“அம்மா என்னோட ஸ்கூட்டியை…..”
“ஸ்கூட்டியா…? ஸ்கூட்டிக்கு என்னாச்சுனு சொல்லு எங்கயாவது கொண்டு முட்டிவிட்டுட்டியா என்ன….? ஸ்கூட்டிக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே….” என்றார்.
“அம்மா…. நீ ரொம்ப ஆசைப்படாத அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கல….”
“ஏம்மா அதுக்காக நான் வேணும்னா போய் மூடிட்டு நிக்க முடியுமா….? பொண்ணுன்னு கொஞ்சமாவது பாசம் இருக்காம்மா….? அப்படியே நடந்து இருந்தாலும் எனக்கு என்ன ஆச்சுன்னு கேக்காம ஸ்கூட்டிக்கு என்ன ஆச்சுன்னு கேக்குற….”
“நீ நல்லாத்தானே இருக்க ஸ்கூட்டி எங்கனு சொல்லுடி…”
“கொஞ்ச இரு சுமதி நானும் பார்த்திட்டு இருக்கேன் ரெண்டு பேரும் வம்பு இழுத்துகிட்டு இருக்கீங்க…. சுதர் சொல்லு என்னாச்சு… ஏன் வேலைக்கு போகாம வந்துட்ட….?”
“அப்பா நான் கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டி இருந்துச்சு அப்போ கடையில ஸ்கூட்டிய நிறுத்திட்டு திங்க்ஸ் வாங்கிட்டு வரும்போது ஒருத்தன் வந்து என்னை தள்ளிவிட்டு ஸ்கூட்டிய எடுத்துட்டு போயிட்டான்….”
“என்னது ஸ்கூட்டிய திருடுடிட்டு போய்ட்டானா….”
“ஆமாம்மா….”
“ஆமா உனக்கு ஏதும் வாங்கணும்னா நேத்தே வாங்கறதுக்கு என்ன… ஸ்கூட்டில கீய வச்சுட்டா போவ அறிவில்ல உனக்கு… ஆளுதான் வளர அறிவுமா வளரல….” என்று திட்ட ஆரம்பித்தார் சுமதி.
“அப்பா பாருங்க அம்மாவ… எப்படி திட்டுறாங்க நான் எதுவுமே பண்ணலப்பா…. வாங்கப்பா போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்….”
“சரி வா சுதர் போய் கம்ப்ளீட் பண்ணிட்டு வரலாம் சுமதி நீ இரு… நான் சுதர் கூட போயிட்டு வந்துடறேன்….”
“ஏங்க என்னங்க இது…? இதுக்குத்தான் நான் தலபாடா அடிச்சிக்கிட்டேன் ஸ்கூட்டி எடுக்காத எடுக்காதன்னு கேட்டீங்களா அப்பாவும் பொண்ணும்….? ரெண்டு பேரும் சேந்து என்னை என்னெல்லாம் பேச்சு பேசினீங்க… பாவம் பஸ் கஷ்டப்பட்டு போறா அப்பிடி இப்படின்னு சொன்னீங்க… இவளும் நான் பத்திரமா பாத்துப்பேன் அம்மானு சொன்னா… இப்போ முதல் நாளே ஸ்கூட்டியே தொலைச்சிட்டு வந்து நிக்கிறா…. எங்க நம்ம பேச்சை இங்கே யாரு கேக்குறா….?” என்று மறுபடியும் ஆரம்பித்தார் சுமதி.
“அம்மா பேசாம இரும்மா கொஞ்ச நேரம்…. நானே டென்ஷன்ல இருக்கேன் நீ வேற என்ன படுத்தாதம்மா…. போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணா அவங்க கண்டு பிடிச்சு கொடுத்துடுவாங்க அம்மா….”
“ஆமா இந்நேரத்துக்கு அந்த ஸ்கூட்டியை எத்தனை பார்ட்ஸா கழட்டி வித்திருப்பானுங்களோ…”
“அம்மா ஏம்மா இப்படி தப்பு தப்பா யோசிக்கிற….? அப்பா பாருங்கப்பா அம்மாவ…”
“இருடா இருடா அவ எப்பவும் அப்படித்தானே கொஞ்சம் இரு நான் குளிச்சிட்டு வந்துடறேன்….”
“ஏய் எவடி இவ சும்மா இருடி… நீ போய் குளிச்சிட்டு வாங்க….”
“அப்பா சீக்கிரம் வந்துருப்பா….” என்று பாரு அந்த சோபாவில் இருந்தாள் சுதர்ஷினி.
சுதர்சனியின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சென்ற வீரா அந்தத் திருடனை ஸ்கூட்டியில் இருந்தவாறே எட்டி உதைத்தான். அவன் கீழே விழ ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு. அவன் முதுகிலேயே நான்கைந்து அடி போட்டான்.
“சார்…. சார் விட்டுருங்க…. சார் விட்டுருங்க சார்….” என்று அழுதான் அந்தத் திருடன்.
“என்னா சார் பண்றது…? வயித்துக்கு சோறு வேணும்ல்ல அதுதான்….”
“அதுக்கு நீ உழைச்சு சாப்பிடு…. கைகளை நல்லா தானே இருக்கு…. அவங்களும் கஷ்டப்படுத்தான் இந்த தாலிச் செயினை வாங்கி இருப்பாங்க….”
“சார் சார் விட்டு சார் விட்டு சார்….”
“உன்ன எல்லாம் விட முடியாது டா…. வாடா ஸ்டேஷனுக்கு….”
“சார் நிஜமாலுமே வயித்து பசிக்காகத்தான் சார் திருடினேன்…. வேல யாருமே கொடுக்க மாட்டேங்கிறாங்க….”
“அப்போ வேலை கொடுத்தா நீ திருடுறத நிப்பாட்டிடிவியா….?”
“சார் வேலை இருந்தா ஏன் நான் திருட போறேன்….”
“சரி செயினை குடு நான் உனக்கு வேலை வாங்கி தரேன்….”
“சார் பொய் சொல்லாத சார்….”
“டேய் என்னை நீ என்ன நெனச்ச, இரு நான் உனக்கு வேலை வாங்கித் தரேன்… செயினை குடு…” என்ற வீரா அவனிடமிருந்து தாலிச் செயினை வாங்கி அவனுக்குத் தெரிந்த ஒருவரின் மர ஆலையில் வேலை வாங்கிக் கொடுத்தான்.
“ரொம்ப நன்றிங்க சார்…. இந்த உதவிய நான் என்னைக்குமே மறக்க மாட்டேன்…. கண்டிப்பா எதுக்காக உங்களுக்கு நான் ஒரு உதவி பண்ணுவேன் சார்…”
“நீ இனிமே திருடாம இருந்தாலே போதும்…. உன்ன கொலைவெறியில தான் துரத்திட்டு இருந்தேன்… ஆனா இப்படி பாத்தாலே பாவமா இருக்கிற உன்னை எதுவும் பண்ண மனசு வரல…. அதான் வேலை வாங்கி கொடுத்து இருக்கேன்…. ஒழுங்கா வேலைய பாத்துட்டு இருக்கணும்….”
“கண்டிப்பா சார் என் பொண்டாட்டி புள்ளைங்க மேல சத்தியமா இனிமே திருட மாட்டேன் சார்….”
“சரி சரி போ….”
“டேய் கொஞ்சம் நில்லு…” என்று அவனை நிறுத்திய வீரா தனது பரிசில் இருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான்.
“சார் வேணாம் சார்…. நீதான் வேலை வாங்கி குடுத்துட்டியே அது போதும் எனக்கு இதெல்லாம் வேணாம்….”
“ஏய் புடிடா உன்ன ரொம்ப அடிச்சிட்டேன் மருந்து போட்டுக்கோ….”
“ரொம்ப நன்றிங்க சார்…” என்றவன் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
செயினை எடுத்துக்கொண்டு மீண்டும் அந்தப் பெண்ணிடம் வந்து செயினை கொடுத்தான்.
“சார் ரொம்ப நன்றிங்க சார்….”
“பரவால்ல அம்மா இது என்னோட கடமை தானே…” என்று அந்த பெண்ணிடம் தாலிச் செயினைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கடை அருகே வந்து சுதர்ஷினியைத் தேடினான். ‘என்னது அந்த பாப்பாவை காணோம்.. ஸ்கூட்டி வேற என்ன பண்ணலாம்…? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஸ்டேஷனில் இருந்து அவனுக்கு கால் வந்தது.
“சொல்லுங்க கான்ஸ்டபிள் என்ன பிரச்சனை….?”
“சார் இங்க கன்னியப்பன் சார் வந்து இருக்காங்க உங்களைப் பாக்கனும்னு சொல்றாங்க சார்….”
“அப்படியா சரி நான் வந்துடறேன்….” என்று போனை வைத்தவன், ‘சரி கான்ஸ்டபிள்ட கொடுத்து இந்த ஸ்கூட்டிக்கு யாருதுனு விசாரிச்சு அவங்க கிட்டயே கொடுக்க சொல்லிடலாம்…..’ என்று ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்