தீரனுடைய செயல் அவளை ஸ்தம்பிக்கச் செய்தது.
“என்ன சார் இது எதுக்காக என்னோட பேர்ல அவரோட சொத்து எல்லாத்தையும் எழுதி வைச்சிருக்கீங்க..?, யார் இப்படி பண்ணச் சொன்னது.? இது தீரனுக்கு தெரியுமா.” என அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“என்ன மேடம் சொல்றீங்க அப்படின்னா உங்களுக்கு எதுவும் தெரியாதா…?
தீரன் சாரோட சொத்து எல்லாத்தையும் உங்க பேருக்கு எப்பவோ எழுதி வெச்சிட்டாரு, இன்னைக்கு அவரும் சாட்சிக்கு இன்னொருத்தரும் சைன் வெச்சா எல்லாம் உங்க பேருக்கு மாறிடும்.” என்றான் அவன்.
அவளுக்கோ மேலும் மேலும் திகைப்பும் குழப்பமும் அதிகரித்துக் கொண்டே போனது.
“என்னோட சீனியர் லாயர் கால் பண்ணியும் தீரன் சார் எடுக்கலை அதான் என்னை நேர்லே போய் சைன் வாங்கிட்டு வர சொன்னார்.” எனக் கூறினான்.
‘எதற்காக இவன் சொத்தை எனக்கு எழுதிக் கொடுக்கனும் என்னை இவ்வளவு கொடுமைப் படுத்துறவன் ஏன் எனக்கு இதை செய்யனும் என நினைத்தவள் அவனது சொத்துக்களை வாங்க விருப்பம் இல்லாத விடயத்தை அஷ்வினிடம் கூறினாள்.
“இல்லை சார் இந்த சொத்தை நீங்க…” என கூறிக் கொண்டிருக்கையில் அவளின் பின்னால் இடி போல ஒலித்தது தீரனின் குரல்,
“அஷ்வின் எதுக்காக இங்கே வந்த” எனக் கேட்டப்படியே மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்தான் தீரன்.
“இதோ சார் வந்துட்டார்” என அவன் அருகில் சென்ற அஷ்வின் வந்ததுக்கான காரணத்தை கூறினான்.
தீரனோ மைவிழிக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என நினைத்து செய்த விடயம் அவளுக்கு தெரிந்து விட்டதே என சற்று சிந்தித்தாலும் அதை சமாளிக்க வேண்டும் என நினைத்து எதையும் வெளிக்காட்டாமல் இருந்தான்.
மைவிழியின் கையில் இருந்த பத்திரத்தை பறித்து அதில் சைன் வைத்த தீரன்,
“அஷ்வின் நீ போ நான் மீதியை உங்க சார்கிட்ட பேசுறேன்” என அவன் கூற அஷ்வினோ இருவரையும் பார்த்து புன்னகைத்து விட்டு சென்றான். தீரனும் எதுவும் நடக்காதது போல மீண்டும் மேலே செல்ல,
“வெயிட், எதுக்காக நீங்க இப்படி பண்ணீங்க…?” எனக் கேட்டப்படி நடந்து அவன் முன் சென்று நின்றாள் மைவிழி.
அவனோ அதை அலட்சியப்படுத்தி விட்டு செல்ல அவனது கையினை பிடித்து இழுத்த மைவிழி,
“நான் கேட்குறது உங்களுக்குப் புரியலையா, எதுக்காக சொத்தை எனக்கு எழுதி வெச்சீங்க.?” எனக் கேட்டாள் அவள்.
கருங்கல் பல அடிகளை உள்ளே வாங்கினாலும் கூட வெளியே சிற்பமாக அழகை கொடுப்பது போல மனதில் பல வலிகளை சுமந்தாலும் கூட வெளியே தன்னை கெட்டவனாகவே நிருபித்துக் கொண்டிருந்தான் தீரன்.
“இது நான் உனக்கு தர வேண்டியது தான் சோ நீ எல்லாத்தையும் எடுத்துக்கோ” என்க
“எனக்கு எதுக்கு உங்க சொத்து…?, உங்க பணத்தை வைச்சு தான் உயிர் வாழ முடியும்னா அப்படி ஒரு வாழ்க்கையே எனக்கு தேவையில்லை” என்று மீண்டும் சத்தமாக மைவிழி பேச,
“ஹா ஹா கூல் மேடம் இது உங்க உழைப்புக்கான ஊதியம் தான், நான் என்ன சொல்றேன்னு புரியலையா…….?” என அவளை வலுகட்டாயமாக இழுத்து அணைத்தவன் அவளின் பின் பகுதியில் கை வைத்து அழுத்தியபடி பின் கழுத்து வரை தடவி பின் அவளது அங்கமெங்கும் வருடியவன் அவளது கழுத்துப் பகுதியில் மையம் கொண்டான்.
தீரன் செய்வதில் அருவெறுப்பாக உணர்ந்து கண்களை மூடிக் கொள்ள அவளின் காதின் அருகே வந்து,
“எனக்கு எப்போலாம் ஆசை வருதோ அப்போல்லாம் உன்கிட்ட வந்துதானே என்னோட ஆசையை தீர்த்துக் கொள்றேன். எதையும் எனக்கு சும்மா செய்து பழக்கம் இல்லை அதுக்காக தான் அதாவது உன்னோட உடம்புக்கு நான் தர்ற கூலிதான் இது” என அவளின் மார்பகங்களை அழுத்த, சட்டென அவனை தள்ளி விட்டாள் மைவிழி.
அவளுக்கோ அவனுடைய வார்த்தைகளில் உடல் நடுங்கியது.
“சீ நீயெல்லாம் ஒரு மனுசனா நான் அப்படி என்ன பாவம் டா செய்தேன் உனக்கு, ஏன் இப்படி என்னைக் கொடுமைப்படுத்துற….?” என கண்கள் நீரின் வெள்ளத்தில் மூழ்க கேட்டாள் மைவிழி.
“என்ன டார்லிங் இப்படி சொல்லிட்ட.? உன்னோட உடம்புல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குன்னு தெரியலையே எப்போ பார்த்தாலும் புதுசா பார்க்குற மாதிரியே இருக்கு” என கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவளின் கன்னத்தைக் கிள்ளினான் அவன்.
“உனக்கு மனசாட்சியே கிடையாதா, உன்னை பெத்ததும் ஒரு பொம்பள தானே, என்னை இப்படி கேவலப்படுத்தி வைச்சிருக்குறதுக்கு நீ ஒரு நாள் கண்டிப்பா யோசிப்ப.” என கண்ணீர் சிந்த,
“அழுது முடிஞ்சதுக்கு அப்புறமா ரூம்க்கு வா செல்லம் மாமன் லைட்டா மூட் ஆகிட்டேன்” என்று அவளிடம் கூறியவன்,
‘சாரி அம்மு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை’ என தனக்குள் கூறியவாறு கண்கள் கலங்கியதோடு தன் அறைக்குள் சென்றான் ருத்ரதீரன்.
அவளோ உடைந்து போய் கதறிக் கதறி அழத் தொடங்கினாள். அவனுடைய வார்த்தைகள் உயிரின் மீது ஊசி ஏற்றினாற் போல வலிக்கச் செய்தது.
தன் வாழ்க்கையில் இதற்கு மேலும் கேவலப்பட முடியாது என நினைத்து துடித்துக் கொண்டிருந்தாள் மைவிழி.
முகத்தை மேஜையில் வைத்து அழுதபடி இருந்த மைவிழியின் தோளின் மீது ஒரு கரம் பட,
“மைவிழி என்னாச்சு ஏன் நீ இப்படி இருக்க….?”எனும் குரல் கேட்க கண்கள் சிவந்து முகம் வீங்கியபடி நிமிர்ந்து பார்த்தாள் மைவிழி.
அங்கே கேட்ட குரல் அருணுடையது என்றதும் சட்டென தன் கண்களை துடைத்துக் கொண்டான் அவன்.
அவனைப் பார்த்த மைவிழிக்கு கூற வார்த்தைகள் வராமல் கண்ணீரே வழியத் தொடங்க,
“ஹே என்னாச்சு அழுகுறதை நிறுத்துங்க” என அவன் கூறினாலும் கூட அவளது கண்ணீர் நிற்கவில்லை.
“ப்ளீஸ் எதுவாக இருந்தாலும் ஓபனா சொல்லுங்க விழி டோன்ட் க்ரை.…” என அவன் கூற கண்ணீரும் கம்பளமுமாக தீரன் தனக்கு செய்த கொடுமைகளை தாங்க முடியாத வலியோடு கூறினாள் மைவிழி.
அருண் ஏற்கனேவே அறிந்த விடயங்கள் என்பதால் அதை பெரிதும் கவனத்தில் கொள்ளாமல் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
“உங்களோட ப்ரண்ட் எனக்கு பண்ற ஒவ்வொன்றுக்கும் அவர் பதில் சொல்லியே ஆகணும் அருண்., என்னை ஏமாத்தினதுக்கு அவர் நல்லாவே இருக்க மாட்டார்” என வாய்க்கு வந்தபடி வேதனையிலும் ஆற்றாமையிலும் திட்டினாள் மைவிழி.
“ப்ளீஸ் அவனைத் திட்டாத மைவிழி அவன் உண்மையிலே பாவம்” என்று கூற,
“பாவமா…?, யாரு அவரா என்னை தினம் தினம் கொல்றாரு. அன்புன்னா என்ன காதல்னா என்னன்னு தெரியாத ஜென்மம்.” என வார்த்தையை விட அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த அருண்,
“இனாஃப் மைவிழி சாகப் போறவனை நீயும் வார்த்தையால கொல்லாத, தீரன் இருக்கப் போற கொஞ்ச நாளாவது நிம்மதியா இருக்கட்டும். நீ அவன்கிட்டேயும் இப்படி பேசாதே” எனக் கூற,
“வாட்..? கொஞ்ச நாளா…, புரியலை. நீங்க என்ன சொல்றீங்க அருண்.? தீரனுக்கு என்ன?” என பதறியவாறு மைவிழி கேட்க, நடந்த அனைத்தையும் கனத்த மனதோடு கூறினான் அருண்.
அவன் கூறியதைக் கேட்ட மைவிழியின் காதல் கொண்ட ஹருதயமோ நொறுங்கிப் போக உடைந்தே போனாள் மாது.
அவளால் அருண் கூறியவற்றை நம்பவே முடியாது போனது. அவளோ உடல் விதிர்விதிர்க்க உறைந்து போனாள்.