காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 21 🖌️

5
(1)

ஆதிக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று புதுப் புரளியைக் கிளப்பி அவனைத் தேடி ஓடினாள் யூவி. “ஹேய்… நில்லுடி… நில்லு… ஒரு நிமிசம்…” என அவள் பின் கத்திக் கொண்டு ஓடினாள் அபி.

 

ஆனால் அவளுக்குத்தான் நிற்கக் கூட நேரமில்லை. ஆதியைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து மூச்சு முட்டிப் போனாள். “எங்கதான் போனான் உன் லூசு அண்ணன்?” எனக் கேட்டவாறே பார்வையை சுழல விட்டாள்.

 

அவன் வலது பக்கமாக பூச்செடியை நோண்டிக் கொண்டு அதே தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தான். மீண்டும் தொலைபேசி அழைப்பு.

 

“Hello… எங்க இருக்க ரித்து நீ என்ன பண்ணுவ ஏது பண்ணுவியோ I don’t know… You must stand before me… Just now…” என அவன் கோபமாக கத்த அந்தப் பக்கம் நின்ற அவனது தொழில் உதவியாளன் ரித்து எனும் ரித்தேஷ் “சேர்…” என  ஏதோ சொல்ல வர அதனைத் தடுத்து அவன் குரல்,

 

“I don’t want any explanation Rithesh. Just do what I say.” என அதிகாரமாக கத்தினான் ஆதி.

 

“Okay Sir.” என இறங்கி ஒலித்தது ரித்துவின் குரல்.

 

“ஹோ… இங்கதான் இருக்கியா? இரு வரேன்.” என அவன் முன் போய் மூச்சு இறைக்க இடுப்பில் கை வைத்து நின்றிருந்தாள் யூவி. அவளை ஏற இறங்கப் பார்த்தவன் “என்ன?” என புருவம் உயர்த்தி அவளைக் கேட்க

 

“கொஞ்சம் தள்ளுங்க…” என அவனைத் தள்ளிவிட்டவள், அவன் நின்றிருந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அவன் முன் நின்றவளை இழிவாக பார்த்து வைத்தான் ஆதி.

 

“ஓம் ரீம் க்ளீம்…” என்று அவள் மந்திரம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை சொல்ல, அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்துவிட்டது.

 

“என்னாது… ஓம்… க்ரீம் ரீம் ஐஸ்க்ரீமா?” எனக் கேட்டு அவன் வாய்க்குள் சிரித்து வைத்தான்.

 

“சும்மா இருங்க.” என அவனைத் திட்டியவாறு அவன் காதின் அருகில் சென்றவள் ஹஸ்கி வொய்சில்

 

“உங்களுக்கு யாரோ சூனியம் பண்ணிருக்காங்க. அதுக்காகத்தான் மந்திரம் பண்ணி அந்த சூனியத்தை உடைக்கப் போறேன்.” என்றாள் சிறுபிள்ளைத் தனமாக.

 

அவனும் அதே போல் ஹஸ்கி வொய்சில் “ஹோ… அப்படியா? சரி… சரி… You continue…” எனக் கூறியவாறு கைகள் கட்டி அவளை கண் இமைக்காது தலை சாய்த்து இலேசாக இதழ் விரித்து சிரித்தவாறே இரசித்துக் கொண்டிருந்தான்.

 

அவள் மறுபடியும் “ஓம் ரீம் க்ளீம் குரு குருஸ் புரு புருஸ் ஏஸ் ஸ்வாஹா!” என தன் கையிலிருந்த மண்ணை அவன் முகத்திலேயே “சடார்…” என்று அள்ளி அடித்துவிட்டாள்.

 

அவள் அடித்த மண் வேகமாக வந்து சுள்ளென்று அவன் முகத்தில் தெறித்து அவளை ரசித்துக் கொண்டிருந்த அவன் கண்களுள் சென்று எரிச்சலை உண்டாக்க, “ஆஆஆ… யூவீவீவீவீ…” என்று அவள் பெயரை பல்லுக்குள் கடித்துத் துப்பியவன் கண்களை மூடிக் கொண்டு கசக்கினான்.

 

அவளோ “ஹைய்யய்யோ… நாம வேற பெரிய மந்திரவாதின்ன நினைப்புல ஏதேதோ பண்ணிட்டோமே. இப்போ இவன் என்ன பண்ணுவான்னு தெரியலையே.” என்று கையைப் பிசைந்து அவனை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என்னடி மண்ண தூவி விட்டுட்டு பாத்துட்டு இருக்க? வந்து ஹெல்ப் பண்ணு.” என அவன் எரிந்து விழுந்தான்.

 

“1 minute… Just a minute…” என்றவாறு  அவன் கசக்கிக் கொண்டிருக்கும் கண்களை இலிருந்து அவள் கையை விலக்கி தன் கைகளால் நீக்கிப் பிடித்து ஊது ஊது என ஊதிக் கொண்டிருந்தாள்.

 

அவள் உள்ளே இருந்து வந்த குளிரான காற்று அவன் கண்களுக்குள் ஊடுறுவிச் செல்ல, அவன் உடலில் இருந்த காதல் கலங்கள் புத்துணர்ச்சி பெற்றது.

 

எந்தப் பெண்ணிடத்திலும் தேடாத ஒரு புது உணர்வு அவனுள் தோற்றம் கண்டது. அதற்கு பெயர் “காதல்.” என்று தெரியவில்லை. ஆனால் அது காதல் என மனம் கூறினாலும் அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளை தள்ளி வைக்க பலவாறு முயற்சி செய்கிறான். செய்துகொண்டே இருக்கிறான்.

 

ஆனாலும் அவனால் தன் காதல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. தவிக்கிறான்… அந்தக் கோவத்தை அவளிடமே காட்டுகிறான். அதுதான் இவர்களுக்கு இடையே உள்ள காதல்.

 

அவள் அவனை நோக்க, அவன் அவளை நோக்க, இருவரும் விழிகளாலேயே காதல் பேசிக் கொண்டனர். இல்லை. இருவரின் பார்வையுமே காதல் பேசிக் கொண்டனவே தவிர, அவர்கள் இல்லை. பல நிமிடங்கள் கடந்த பின் கொஞ்சமாக தன்னிலைக்கு வந்தாள் யூவி.

 

“இவன் ஏன் நம்மள இப்படி பாக்குறான்?” என யோசித்தவாறே “போய்டுச்சா?” என அவனை பாவமாக பார்க்க, அவன் அப்போதும் தன்னிலைக்கு வராததை கவனித்தவள், அவனை உலுக்கி

 

“அதுதான் போய்டுச்சான்னு கேட்குறேன்ல?” என்று கத்தினாள்.

 

அதில் பெரும்மூச்சை இழுத்து விட்டவன் பின்னால் திரும்பி தலையைக் கோதிவிட்டு “விடமாட்ராளே… விலகி விலகி போக ட்ரை பண்ணா பின்னாலேயே வந்து சாவடிக்கிறா… Stupid…’ என தன் பின் தலையில் தட்டிக் கொண்டவாறே அவளை நினைக்க அவன் இதழ்களில் தானாகவே புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

 

அவன் இப்படி பின்னால் திரும்பி நிற்பதைக் கண்டவள் அவன் தோளைத் தட்டி “Hello… என்ன?” எனக் கேட்க, தன்னை சமன்படுத்தியவன், அவள் பக்கம் திரும்பி,

 

“சரி. இப்போ உனக்கு என்னதான் வேணும்?” என்றான் கோபமாக.

 

“இங்க… கிட்ட வாங்க.” என்று ஒற்றைக் கையைத் தூக்கி அவனை அழைத்தாள்.

 

“எதுக்கு?” என்றான் அவளை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்தவாறு

 

“அதெல்லாம் அப்படிதான். கொஞ்ச நேரம் கிட்ட வாங்களேன்.” என்றாள் சினுங்கலாக.

 

“சரி…” என்று அவள் அருகில் காதைக் கொடுத்தவனின் இதயம் ஒரு நிமிடம் அவள் சினுங்களை எண்ணி ஸ்தம்பித்துத்தான் போயிருந்தது.

 

“உங்களுக்கு யாரோ சூனியம் வெச்சிட்டாங்க. சூனியம்… சூனியோ….” என்றதும்தான் அவனுக்கு புரிந்தது அவள் கூற வருவது.

 

“எதேய்… சூனியமா?” என்றவனுக்கு இந்த சூனியத்தில் எல்லாம் நம்பிக்கையே இருந்ததில்லை.

 

“கத்தாதீங்க…” என அவன் வாயைப் பொத்தி ஹஸ்க்கி வொய்சில் சொன்னவள்

 

“கொஞ்சம் மெல்ல பேசுங்க.” என அவனை அதட்டினாள்.

 

அவள் செய்கைகளை எண்ணி அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்புதான் வந்தது. அவளுக்கு ஏற்றது போலவே அவனும் ஹஸ்கி வொய்சில் “சூனியம் எல்லாம் உண்மை பொய். நீ அதெல்லாம் நம்பாத.” என்றான் தலைசாய்த்து மென்புன்னகை வீசியவாறு.

 

“சூனியம்னு சொன்னா உங்களுக்கு புரியாது. ஹிப்னோடிஸ்ம்னா தான் புரியும். மொடர்ன் வேர்ல்ட்ல இருக்குறவங்களுக்கு தமிழ்ல சொல்றத விட இங்க்லிஸ்ல சொன்னாதான் தெளிவா புரியும்.” என்று அவனை பார்த்து மிடுக்காக சொன்னாள்.

 

“சரி… சரி… அப்படி இருந்தாலும்…எனக்கு யாரும் சூனியம் வெக்க மாட்டாங்க. அந்தளவுக்கு எவனுக்கும் தில்லும் இல்லை.” என்று திமிராக வேறு ஏதோ எண்ணத்தில் கூறிவிட்டு அவளை முறைத்தவாறே திரும்பிச் சென்றுவிட்டான்.

 

இங்கு யூவியைத் தேடி அபி அலைந்து திரிய, இறுதியாக யூவி அபியின் கண்களில் பட்டுவிட்டாள். அவளிடம் வந்தவள், “எங்கடி விட்டுட்டு போன? நீ ஏதோ சொன்னியே எங்க அண்ணணுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு… அந்த விசயம் என்னாச்சு?” என்றாள் பொறிந்தவாறே.

 

“அடச்… சீ… பேய் இல்லை. சூனியம்.” என்று புரளியையே திருத்தினாள் யூவி.

 

“ஹா… சரி. சரி. அதுதான் சூனியம்னு சொன்னியே. என்ன ஆச்சு?” எனக் கேட்டதும்,

 

“ஆமாம்… நான் நினைச்சது கன்போர்ம். இவனுக்கு யாரோ சூனியம்தான் வெச்சிருக்காங்க. ஐ மீன், வசியம் பண்ணி வெச்சிருக்காங்க. நல்லா யோசி… சூனியம்… அமாவாசையிலதான் பலிக்கும். நிலவு தேஞ்சு அமாவாசை ஆகும்போது உங்கண்ணன் கெட்டவனா மாறிடுறான். நேத்து அமாவாசை. அதனாலதான் என்னை ரூம்குள்ள பூட்டி வெச்சு டோர்ச்சர் பண்ணான். ஆனால் இன்னைக்கு வளர்பிறை. சோ… அவன் நல்லவனா மாறிட்டான். அதனாலதான் என்கிட்ட நல்லா பேசுறான். இப்படி சிரிச்ச பச்சக் குழந்தை மாதிரி சுத்திட்டு இருக்கான்.” என்று பொய்யையும் உண்மை போல பில்ட் அப் செய்து பேசிய யூவியை நம்பியே விட்டாள் அபி. அபி வாயில் நகத்தை வைத்து கடித்து பயத்தோடு நிற்க மெல்ல ஓரக் கண்ணால் அபி பயப்படுகிறாளா என்று பார்த்த யூவி

 

“இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவோம்…” என்று யோசித்து உள்ளுக்குள் சிரித்துவிட்டு

 

“இல்லன்னா நான்தான் ஆதிஷேஷ கார்த்திக்கேயன். என்ன பாத்தா பேயே நடுநடுங்கும். யூவி… நீ யார்க்கிட்ட மோதிட்டேன்னு தெரியுமா? The world best Mental – ஆதிஷேஷ கார்த்திக்கேயன் கிட்ட. இதுக்கு நீ வருத்தப்படுவ. நீ என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும். கேட்கணும் இல்லை… கேட்க வேப்பேன். இல்லன்னா இன்னும் எண்ணி மூனே மூனு நாள்ள உன்னை என் ஸ்லேவ் ஆக்கிக் காட்டுறேன்னு சொல்லி உலரிக்கிட்டு இருந்திருப்பான்.” என அவனைப் போலவே தலையை உயர்த்தி ட்ரௌசர் போக்கெட்டினுள் கையை விட்டு முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அவள் நடித்துக் காட்ட அபி விழுந்து விழுந்து சிரித்தாள்.

 

“அது சரி. இப்போ வளர்பிறை. அதனால நல்லாதான் நடந்துக்குறான். தேய்பிறை ஆச்சுன்னா அவன் ராட்சசனா மாறிடுவானே.” என்ற பயத்தில் யூவியின் பொய்யை நம்பி அபி ஒன்றும் தெரியாமல் அதே இடத்தில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

“பொய்ய நம்பிட்டா…” என்று உள்ளுக்குள் குதூகலித்த யூவி ஆதியைத் தேடி மீண்டும் ஓடினாள்.

 

“இவ பட்டு பட்டுன்னு எங்கதான் சொல்லாம கொள்ளாம ஓடிடுறா?” என தலையில் அடித்துக் கொண்ட அபி அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, அதில் மூழ்கிப் போனாள்.

 

ஆதியின் அறையின் உள்ளே சென்று அவனைத் தேட கிடைத்தது ஒரு புத்தகம். “அட இது நான் தொலைச்ச புக் ஆச்சே. எவ்ளோ வருசமா தேடுறேன். ஆனால் இததான் ரெய்ல்வே ஸ்டேஸன்ல தவற விட்டுட்டேனே. ஆனால் இது இவன் ரூம்ல இருக்கு. சரி ஒரு வாரத்துக்கு லென்ட் பண்ணிக்கலாம்.” என்றவாறு புத்தகத்தை திறந்து விரித்துப் பாரத்தாள். அதில் “AVSV.” என்ற அவள் அடையாளமே இருக்கவும் அதிர்ச்சியானாள் யூவி.

 

“அடக் கடவுளே அப்போ இது என் புக்கா? ஆனால் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி தொலைஞ்சு போன என் புக் இவனுக்கு எப்படி கிடைச்சது?” எனஅறு உதட்டில் விரல் வைத்து யோசித்துப் பார்த்தவள்

 

“திருடா…” என அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டியவாறே புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க, அதே சமயம் உள்ளே நுழைந்தான் ஆதி.

 

உடனே தன் கையிலிருந்த புத்தகத்தை மறைத்து வைத்தவளுக்கு பதற்றம் வந்து ஒடடிக் கொண்டது. அவளை கண்களால் நோட்டமிட்டவனுக்கு புரிந்து போனது. “ஹேய்த்… திருடி… எத திருடின? நான்தான் சொல்லிருக்கேன்ல என்னோட பொருள தொடுற வேலை வெச்சிக்க கூடாதுன்னு? அப்றம் எதுக்கு இப்படி எரிச்சலை கிளப்பிட்டு இருக்க?” என்று இடுப்பில் ஒற்றைக் கை குத்தி தலை சாய்த்துக் கத்தினான்.

 

“இது யாரோட புக்குன்னு தெரியாம நீங்கதான் கத்திட்டு இருக்கீங்க?” என்று சொன்னவளின் பேச்சைக் கேட்டவனுக்கு உள்ளே சந்தோசம் எட்டிப் பார்த்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் திமிராகவே

 

“அப்படின்னா இது யாரோட புக்குன்னு உனக்கு தெரியுமா? சரி இது யாரோடது? யாரோடது?” என அவன் ஆர்வத்தை உள்ளே வைத்துப் பூட்டப் பார்த்தாலும் அவள் கண்களை வைத்து ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டாள்..

 

உதட்டைக் கடித்து “இவன் எதுக்காக இப்படி ரொம்ப ஆர்வமா இந்த புக் யாரோடதுன்னு கேக்குறான்?” என யோசித்தவள்,

 

“இதுல ஏதோ விசயம் இருக்கும் போலையே. யாருன்னே தெரியாத ஒருத்தரோட புக்க வெச்சிருக்கான்னா, இதுல ஏதோ ஒன்னு இருக்குறது கன்போர்ம். சரி இத வெச்சே இவன தள்ளுவோம்.” என்று பொறி தட்ட யோசித்தவள்

 

“ஏன்? இது யாரோடதுன்னு உங்களுக்கு தெரியாதா? அப்போ இது உங்களோடது இல்லை. Am I right?” என இரு கேள்விகளை முன்வைக்க.

 

“இது என் புக் இல்லன்னதாலதான் இது யாரோடதுன்னு உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்.” என்றான் அவளை முறைத்தவாறு.

 

“எனக்கும் இந்த புக் யாரோடதுன்னு தெரியாதுப்பா…” என அவள் இழுக்க அவன் முகம் கொஞ்சம் வாடியதையும் கவனித்துக் கொண்டாள்.

 

“ஆனால்… இந்த புக்ல இருக்குற அந்த AVSV சைக்ன்க்கு அர்த்தம் தெரியும்.” எனக் கூறியதும் பட்டென்று அவள் பக்கம் திரும்பியவன்

 

“அப்படியா? அப்போ அதுக்கு அர்த்தம் என்ன?” என்றான் ஆர்வமாக.

 

“ஓ… அப்போ இது உனக்கு அவ்ளோ இம்போர்ட்டன்டா? பரவால்லை… ஆனால் உனக்கு இதோட அர்த்தத்த சொல்லவே மாட்டேன். என்ன எவ்ளோ டோர்ச்சர் பண்ண… ஹ்ம்…” என்று உதட்டை சுளித்துவிட்டு வீர நடை போட்டு வெளியே சென்றவளின் கையைப் பிடித்து இழுக்கவும் மாறி அவன் கையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்து முறைத்தாள்.

 

அதில் அவள் கையை விட்டுவிட்டு பின்னந்தலையை இடது கையால் கோதி விட்டு கோபத்தை அடக்கியவன் “இப்போ இதுக்கு அர்த்தம் என்னன்னு சொல்லப் போறியாடி இல்லையா?” என்றான் தீர்க்கமாக.

 

“ஏய்… இங்கப் பாரு… இந்த டீ போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத. கொன்னுடுவேன்டா.” என கை நீட்டி பதிலுக்கு கத்தி எச்சரித்தாள்.

 

“அப்படியா?” என உள்ளுக்குள் அர்த்தச் சிரிப்பு பூத்தவன் அவள் கிட்ட நெருங்கி அவளை சுவரோடு சேர்த்து தன் இரு கைகளாலும் அணைக் கட்டியவாறு

 

“நம்மளுக்கு நெருக்கமானவங்களையும் நம்ம யார் மேல அதிக ரைட்ஸ் எடுத்துக்குறோமோ அவங்களையும்தான் நம்மளால டீயோ இல்ல டாவோ போட்டு கூப்பிட முடியும். Like… Relations… அத வேச்சி பாத்தா, நீ என்ன டா போட்டு கூப்பிடுறதுல எனக்கு no Objection…’ என கையை விரித்து தோளைக் குலுக்கினான்.

 

“அய்யே… நீ சொல்ற மாதிரி பாத்தா… நான் உனக்கு என்ன உறவு?” என்றாள் அவனுக்கு எந்த உண்மையும் தெரியாது என்ற தைரியத்தில்.

 

“நடிக்காத… நீ எனக்கு என்ன உறவுன்னு எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். அப்படி மீறியும் சொல்லனும்னா…” எனக் கூறி நிறுத்தியவன்,

 

அவள் காதில் அருகில் சென்று மெதுவாக “இன்னைக்கு நைட் பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்கு பின்னால இருக்குற வோட்டர் போல்க்கு வா. விளக்கமா விரிவா எனக்கு நீ யாருன்னு சொல்றேன்.” என ஒரு மாதிரி குரலில் கூறியவன் பார்த்த பார்வை அவளை அப்படியே கூறு போட்டது.

 

“இவன் எதுக்கு இப்படி ஒரு மாதிரி பாக்குறான்? இவனோட பார்வையே சரியில்லையே.” என திருதிருவென்று விழித்தவளைப் பார்த்த ஆதி தான் அவளிடம் பேச வந்தது என்ன? பேசிக் கொண்டிருப்பது என்ன என புரிந்தவன்

 

“அது சரி… மரியாதையா அந்த சைக்ன்க்கு அர்த்தம் சொல்லு.” என்றான் கட்டளையாக.

 

“கண்டிப்பா சொல்லனுமா?” என அவள் அவனை ஏற இறங்கப் பார்த்ததும்

 

“நீ இப்போ மட்டும் சொல்லல…” என அவன் குரல் அதிகாரமாக ஒலிக்கவும்

 

“ஹலோ… என்ன? குரல் ரொம்ப ஓங்குது?” என்றாள் அவனை தீயாய் முறைத்தவாறே.

 

அவள் கேட்டதில் கண்களை மூடி பல்லைக் கடித்தவன் பெருமூச்சை இழுத்து விட்டு “சரி. நாமதான் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்ல? பிறகு எதுக்கு இப்படி பண்ற? என்கிட்ட மட்டும் சொல்லேன்.” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்து.

 

“நோ… நாம எப்போ ப்ரெண்ட்ஸ் ஆனோம்? இங்கப் பாரு… நீயே வந்து ப்ரண்ட்ஸ் ஆகிக்கலாம்னு சொன்னா கூட நான் உன் கூட ப்ரண்ட் ஆக தயாரா இல்லை. அன்னைக்கே நான் உனக்கு இத சொல்லிட்டேன். You know that.” என அவள் கூறிய தொனியில் அவனுக்கு பொறுமை பொங்கல் சாப்பிட போய்விட்டது.

 

அவள் கையைப் பிடித்து கசக்கியவன், தெனாவெட்டாக ஒரு புன்னகையை உதிர்த்து “நான் இவ்ளோ வந்து உன் லெவலுக்கு இறங்கி கேட்டும் கூட நீ சொல்லலல? இதுக்கு கண்டிப்பா நீ அனுபவிப்படி. உண்மைய ரொம்ப நாள் மறைக்க முடியாது. அது கண்டிப்பா வெளில வரும்.” என்றான் முகம் சிவக்க.

 

“உனக்கு இப்போ என்ன… அதுக்கு அர்த்தம் தெரியணும்… அவ்ளோதானே…” என்கவும் மீண்டும் அவன் முகம் பிரகாசமடைய

 

“சொல்…” என்றவாறு ஒற்றைப் புருவத்தைத் தூக்கி கை கட்டி அவளைப் பார்த்தான்.

 

“அது… வந்து…” என்றதும் ஆர்வமாகப் பார்த்தவனை சீண்டுவதாக

 

“சீக்ரெட்… சொல்ல மாட்டேன்…” என்று கூறிக்கொண்டு ஓடியவளின் செய்கை அவனுக்கு கோபத்தை கொழுந்து விட்டெரியச் செய்தது.

 

பல்லை நறநறவென்று கடித்தவன் “நீ… மாட்டுவடி என்கிட்ட…” என்று கதவில் ஓங்கிக் குத்தினான்.

 

யூவி சிரித்தவாறே “ஆமாம்… இந்த புக் யாரோடதுன்னு தெரிஞ்சிக்கிறதுல இவனுக்கு அப்படி என்ன இம்போர்டன்ட் வேண்டிக் கிடக்கு? யார் யார் மனசுல என்ன இருக்குன்னு யாருக்கு தெரியும்? கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். ஆனால் அவளுக்கு அவன் கூறியதற்குள் உள்குத்து இருப்பதுதான் புரியவில்லை.

 

யூவி குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க அங்கே வந்த சக்தி அவளைப் பார்த்துவிட்டு “இங்க வா.” என அழைத்தான். அவளுக்கு வந்ததிலிருந்து அவனை சுத்தமாக பிடிக்கவே இல்லை. அவனைப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. அவனை கோவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அவள் வேலையையே கவனித்துக் கொண்டிருக்க

 

“உன்னக் கூப்பிடுறேன்ல? கொஞ்சம் வரதுக்கு உனக்கு அவ்ளோ என்ன திமிரா?” என்று கத்தியவனின் பேச்சில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது யூவிக்கு.

 

“நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா? இல்லை உன் பொண்டாட்டியா? நீ சடட்டம் போட்டா அதை பண்றதுக்கு… உனக்கு தேவைன்னா இங்க வந்து பேசு. இல்லைன்னா மூடிக்கிட்டு போ.” என எரிச்சலாக கூற அவன் கோபம் இன்னும் பலமடங்கு எகிறியது.

 

அவள் அருகில் வந்தவன் “என்னடி சொன்ன…” என்று அவளை அறைய கையை ஓங்க அவன் கையைப் பிடித்தவள், மாறி அவனை “பளார்…” என்று நாலா பக்கமும் சத்தம் எதிரொலிக்க அறைந்துவிட்டாள்.

 

அவள் அறைந்ததுதான் தாமதம். எங்கோ இருந்து விசில் சத்தம் காதைத் துளைத்தது. அதில் திரும்பிப் பார்த்தார்கள் சக்தியும் யூவிரும். விசில் அடித்தது ஆதிதான். வேற யாருமில்லை.

 

“ந்து… ந்து… ந்து… ஹய்யோ…” என உச்சிக் கொட்டியவாறு சக்தியை கேலியாகப் பார்த்து நடந்து வந்தவன்

 

“என்னா அடி… என்னா அடி… கையைக் கொடு.” என யூவியின் கையைப் பிடித்து சக்தியைப் பார்த்தவாறே கை குலுக்கி அவளிடம் திரும்பி நின்று

 

“பேபி… அப்படி அடிக்க கூடாது… அடின்னா… இப்படி அடிக்கணும்” என வேகமாக சொல்லியவாறே பல்லைக் கடித்தவன் அவனது அடுத்த கன்னத்தை “பளார்…” என்ற அறையில் அறையில் சிவக்க வைத்திருந்தான்.

 

அவன் அறைந்ததில் சக்திக்கு மூச்சு முட்டி கோபம் தாறுமாறாக ஏற “டேய்… என்ன தைரியம் இருந்தா… என்னையே அடிப்ப…” என அவன் சட்டையைப் பிடித்து கத்தினான் சக்தி.

 

அவனை சாதாரணமாக தள்ளி விட்ட ஆதி அவன் பிடித்திருந்த சேர்ட்டைத் துடைத்தவாறே “ஏய்… ச்சீ… பொண்ணு கையால அடி வாங்கிருக்க… நீ எல்லாம் என்னடா ஆம்பளை?” என அவனை சீண்டினான்.

 

“ஏய்…” என கை நீட்டிக் கத்தியவன்

 

“டேய்… அதுதான் என் வழில நீ குறுக்கிடக் கூடாது… உன் வழில நான் குறுக்கிட மாட்டேன்னு சொன்னேன்லடா? பின்ன எதுக்காக இப்படி வந்து சீன் போடுற?” என்றான் அடங்கா ஆத்திரத்துடன்.

 

“இங்கப் பாரு… உன்ன இதுநாள் வரைக்கும் என் அக்கா சொன்ன ஒரே வார்த்தைக்காகத்தான் உசுரோட விட்டு வெச்சிருக்கேன். இல்லன்னா நீ பண்ணதுக்கு உன்னை அப்போவே கண்டம் துண்டமா வெட்டி குழிதோண்டி மண்ணுக்குள்ள புதைச்சிருப்பேன். இந்நேரம் உன் சமாதில புல்லு கூட முளைச்சிருக்கும்டா.” என்று அவனை மரியாதை இல்லாமல் பேசி வைத்தான் ஆதி.

 

“என்னடா எனக்கே மறு வாழ்க்கை நீ தந்தன்னு சொல்றியா?” என்று வேஷ்டியை மடித்து கட்டி சண்டைக்கு வர எகிறிய சக்தியைப் பார்த்து

 

“ச்சே… ச்சே… நான் மறுவாழ்க்கை தர்ர அளவுக்கு எல்லாம் ரொம்ப நல்லவன் இல்லடா.. கேடு கெட்டவன். சோ… தனியா இருக்கும் போது என் கைல மாட்டிடாத. உன் உசுரு அடுத்த நிமிசம் என் கையில இருக்கும்.” என்று நிதானமாக ஆதி சொன்னாலும் அதில் எச்சரிக்கை இருந்தது.

 

“அதையும் பாக்கலாம். என் உசுரு உன் கையில இருக்குமா? இல்லை… உன் உசுரு என் கையில இருக்குமான்னு…” என அவனை முறைந்துவிட்டவன்

 

“ஏய்… இதெல்லாம் உன்னாலதான்டி. வருத்தப்படுவ…’ என கூறி யூவியை முறைத்தவன் நெற்றியிலிருந்த வியர்வையை துடைத்துவிட்டவாறே சென்றுவிட்டான்.

 

“டேய்ப் போடா… டேய். வந்துட்டான் பெரிய *** மாதிரி.” என போகும் அவனின் முதுகைப் பார்த்தவாறே முறைத்த யூவியிடம்

 

“ஏய்… என்னடி? நீ வாய வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா? எல்லார்க்கிட்டயும் வம்பு வளர்க்குற?” என்றான் அவளை பார்வையால் வருடியவாறு.

 

“நான்லாம் கண்ணாடி மாதிரி… எத காட்டுறாங்களோ அதேதான் திருப்பி காட்டுவேன்.”  யூவி ஸ்டைலாக ஆதியின் கூலிங்க் க்ளாஸைப் பறித்து தன் கண்ணில் போட்டு மூக்கில் கை வைத்து கண்ணாடியை சரி செய்து கொண்டாள்.

 

“ஒஸ்தி படம் பாத்துட்டு வந்து பேசுறேல்ல…” அவன் கேட்டதிதில் தடுமாறியவள்

 

“சரி… சரி… என் இமேஜ ரொம்ப டெமேஜ் ஆக்காத. போ… போ…” என ஜெயம் சதாவைப் போல கை காட்டினாள்.

 

“வர வர உன் வாய் ரொம்ப நீளுதுடி. இரு வந்து வெச்சிக்கிறேன். எனக்கா காலம் வராம போகும்…” என நாக்கை மடித்து சைகை காட்டிவிட்டு அவளை நினைத்து

 

“இவ ரொம்ப வித்தியாசமாதான் நடந்துக்குறா.” எனக் கூறி இலேசாக சிரித்தவன் கையை பின்னால் கட்டியவாறு நடந்து விட்டு சென்றுவிட்டான்.

 

உள்ளே வந்தவன் அறையினுள் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்துத் தேடிக் கொண்டிருப்பதுதான் அவன் கண்ணில் படவில்லை. தேடித் தேடி அழுத்தே போய்விட்டான். “என்ன டொக்யூமென்ட் அது? காவ்யா சாவுக்கு காரணம் என்ன? ஆனால்… என் உள்மனசு சொல்லுது அவ சாகலன்னு… என்கூடதான் இருக்கான்னு. அவளுக்கு நடந்ததுக்கு எல்லாம் நான் நியாயம் வாங்கித் தரணும். ப்ளீஸ்… கடவுளே எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. என்னதான் இங்க நடக்குதுன்னு புரியலயே… தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு.” என அவன் உலரிக் கொண்டே வேலையில் மூழ்கியிருந்தான்.

 

வெளியே நின்ற உருவம் கதவின் இடுக்கால் மறைந்து நின்று அவனைப் பார்த்து “நல்லா தேடு கார்த்திக். ஆனா நீ தேடுற எதுவும் உனக்கு கிடைக்கவே கிடைக்காது. நீ இப்படி ரகசியம் தேடிட்டு இருந்தன்னா கண்டிப்பா நீயும் செத்துப் போவ.” எனக் கூறி ஏளனமாக சிரித்தவாறே சென்றுவிட்டது.

 

எதுவுமே கிடைக்காத கோபத்தில் அவன் அத்தனையையும் போட்டு உடைத்து தள்ளினான். “Damn it…” என கத்திக் கொண்டவன் வெளியில் சென்றான்.

 

“என்னதான்டி இங்க நடக்குது? உங்கொண்ணன் உண்மையிலேயே நல்லவனா இல்லை கெட்டவனா? அவன் இயல்பாவே இப்படித்தானா இல்லை… நடிக்கிறானா? ஒன்னுமே புரியலையே…” என புலம்பினாள் யூவி.

 

“நானே ப்ரேம் கிட்ட இருந்து போன் வரலன்னு எவ்ளோ கவலையா இருக்கேன். நீ வேற…” என பதிலுக்கு புலம்பினாள் அபி.

 

“அடச் சீ… நான் உங்கண்ணன பத்தி பேசினா நீ அவனப் பத்தி பேசுற? உங்க அண்ணன் மேல இருக்குற பாசம் அவ்ளோதானாடி?” என்றாள் யூவி பாவமாக. ஆனால் அபிக்கே இல்லாத அக்கறை அவளுக்கு எங்கு இருந்து வந்தது என்றுதான் புரியவில்லை.

 

“முதல்ல அவன் மேல எனக்கு பாசம் இருக்காங்குறதே சந்தேகம். அவன் எப்படிப் போனா எனக்கு என்னடி? எனக்கு அவன் மேல எல்லாம் அவ்ளோ அக்கரை எல்லாம் இல்ல. கூடப் பிறந்த பாசம் கொஞ்சம் மறசுல ஒட்டிட்டு வேணா இருக்கலாம்.” என்று சலிப்போடு போனைப் பார்த்தவாறே பதில் சொன்னாள் அபி.

 

“சரிதான். உனக்கு கவலை இல்லன்னா என்ன? நான் இருக்கேன். நான் பார்த்துக்குறேன்.” என்று சவாலுடன் அழுத்தமாக கூறிக் கொண்டாள் யூவி.

 

“அது சரி. எனக்கே என் அண்ணன் மேல இல்லாத அக்கறை… உனக்கு எங்க இருந்து வந்திச்சு?” என அவள் முகத்தை ஆராய்ந்தவாறே கேட்டாள் அபி என்கிற அபிநயா.

 

“பின்ன… அத்தைப் பையன்ல? அக்கரை எல்லாம்… இல்லாமலா இருக்கும்?” என அமர்ந்திருந்தவள் காலை சுற்றி கையைப் போட்டு தாடையை கால் முட்டியில் வைத்து ஆசையுடன் வேண்டுமென்றே கூற அவள் கையில் ஒரு அடி போட்டாள் அபி.

 

“நீ விளையாட்டுக்கு சொல்றேன்னு எனக்கும் தெரியும்டி. இருந்தாலும் சொல்றேன்… நீ எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்க, உன் உண்மை… யாருக்குமே தெரியக் கூடாதுன்னு. அப்படி இருக்கும் போது நீ கார்த்திக் கிட்ட கவனமா இருக்கணும். பாட்டி பல்லவிக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சிருக்காங்க. உன்னால அவங்க முடிவுக்கு இடைஞ்சல் வந்தது…” என கழுத்தை நெறிப்பது போல பாவனை செய்திள் அபி.

 

“ஹேய்… என்னடி பேசுற நீ? நான் விளையாட்டுக்கு தான் சொல்றேன். அவன் எங்க? நான் எங்க? எங்க ரெண்டு பேருக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது. அதுவும் இல்லாம அவன் பல்லவிய காதலிக்கிறான். So, you don’t worry. என்னால எந்த பிரச்சனையும் வராது. போதுமா?” என்று தலையணையைப் போட்டு தூங்குவதற்குத் தயாரானாள். ஆனால் அவளுக்குத்தான் தெரியவில்லை. அவளும் ஆதியும்தான் மேட் போர் எச் அதர் என்று. 

 

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!