திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் “அது சரி… என் பேர்த் டே கிப்ட் என்ன? மரியாதையா நாளைக்கு கிப்ட் வரணும்.” என அவளை தலையை கையால் தாங்கியவாறு படுத்துக் கொண்டே கட்டளை போட்டாள் யூவி.
“என்னது பேர்த் டே கிப்டா? போடி நீ வேற.” என அபி அலுத்துக் கொள்ள யூவி முகம் தொங்கிப் போனது.
“என்ன? அப்படின்னா எனக்கு பேர்த் டே கிப்ட் இல்லையா? இங்கப் பாரு. வழக்கமா 12 மணிக்கு எங்க அம்மா அப்பாக்கு அப்றம் நீதான் விஸ் பண்ணி கிப்ட் தருவ. அதே மாதிரி. இன்னைக்கும் தர்ர. இல்லை… தரணும்.” என அடம்பிடித்து சினுங்கினாள்.
“இங்கப் பாரு. இப்போ நான் உனக்கு கிப்ட் தர்ர நிலைமையில இல்லை. அதனால ப்ளீஸ் இந்த தடவ மட்டும் மன்னிச்சிடுடி…” என்று சமாதானம் செய்தாள் பாவமாக யூவியின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியவாறே.
“ஏன்?” என்றாள் யூவி பொறுமையாக.
“வீட்டுல நாளைக்கு எல்லாரும் விரதம் இருப்பாங்க. ஏன்னா நாளைக்குதான் காவ்யாவுக்கும் பேர்த் டே. அதனாலதான் எல்லாரும் அவ ஞாபகமா அஞ்சலி செலுத்துறாங்க.” என்றாள் அக்காவை இழந்த சோகத்துடன்.
இதைக் கேட்டதும் துள்ளி குதித்து எழுந்தவள் “என்னடி சொல்ற? இத ஏன் இவ்ளோ நாளும் என்கிட்ட சொல்லல நீ?” என சந்தோஷத்தில் அவள் மண்டையில் நங்கென ஒரு கொட்டு போட்டாள் யூவி.
“ஸ்… ஆ…” என கத்தி தலையைத் தேய்த்தவள் யூவியை முறைத்தாள்.
“சரி. சரி. முகத்தை தூக்கி வெக்காத. இனிமேல் சொல்லல. பட் இப்படி ஒரு லட்டு மாதிரி விசயத்தை சொல்லிருக்க. அதுக்காக கொஞ்சமாவது சந்தோசப்பட்டுக்க வேணாமா?” என்று சொன்ன யூவியின் பேச்சு அவளுக்கு புரியவே இல்லை.
“சரி… இப்போ இதுல என்ன இருக்குன்னு இப்படி குதிக்கிற?” என்று சந்தேகமாய் பார்த்தாள் அபி.
“என்ன இருக்கா? இது தெரிஞ்சிருந்தா, இந்நேரம் ஒரு எமோஸனல் மூவியே ஓட்டிருப்பேன். அதுக்கு என்ன? இன்னைக்கு ஓட்டிட்டா போச்சு. இந்த யூவியோட எல்லா டெலென்ட்ஸையும் பாத்திருப்ப… எக்டிங்க் ஸ்கில்ல பாத்திருக்கியா? பாத்திருக்கியா? ஆனால் இன்னைக்கு நைட் பாப்ப.” என்று பயங்கரமாக அறையே அதிரும்படி சிரித்தலளைப் பார்த்து தலையில் தட்டிய அபி
“ஏன்டி… எதாவது பண்ணுறேன்னு மொக்க வாங்காம மூடிக்கிட்டு வேலை வெட்டி இருந்தா பாரு.” என்றாள் நண்பியின் தொல்லையை சகிக்க முடியாமல்.
“வந்த முதல் நாள்… இங்க இருக்குற அத்தனை பேரையும் என் கைக்குள்ள வெக்கிறேன்னு சவால் போட்டேன்ல… இன்னைக்கு நைட்டு நான் போடுற எக்டிங்ல எல்லாருமே என் பின்னாடி வரப் போறாங்க. ஒரே ஒரு தூண்டில். சின்ன மீன், பெரிய மீன், அத்தனையும் க்ளோஸ்…” என்று எகிறி எகிறி சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் யூவி.
இங்கு ஆர்.ஜே ஆதியிடம் காட்டுக் கத்து கத்திக் கொண்டிருந்தான். “உனக்கு அறிவில்லை? எதுக்காக இப்படி பண்ணிட்டு இருக்க? உனக்கு என்ன பெரிய ஸ்மார்ட்டா நடந்துக்குறோம்னு நினைப்பா?” என்றான் கோபத்துடன்.
“You don’t worry. I will manage this problem.” என அவன் தோளை ஆதி தொடவும்
“டேய்…” என அவன் கைகளைத் தட்டி விட்டவன்
“நீ என்ன பண்ணுற ஏது பண்ணுறன்னு எனக்கு சத்தியமா தெரியல. ஆனால் உண்மைகளும் ரகசியங்களும் வெளில வராம இருந்தா சரிதான். அவன் தேடித் துருவ ஆரம்பிச்சிட்டான். கண்டு பிடிச்சான்னா… அந்த டொக்யூமன்ட் நம்ம கைக்கு கிடைக்காம அவன் கைக்கு கிடச்சதுன்னா… நம்ம மொத்த டீலும் க்ளோஸ் ஆகிடும்.” என்று பயந்தான் ஆர்.ஜே.
“உலகத்துக்கும் அவன் குடும்பத்துக்கும் ஆதி நல்லவனாதான். ஆனால் ஆதிங்குற பெயருக்கு பின்னாடி ரெண்டு முகம் இருக்குன்னு யாருக்குமே தெரியாது. ஆனால் தெரியிற நேரம்… நாம நினைச்சது நடந்து முடிஞ்சிருக்கும்.” என்று கூறி பயங்கரமாக சிரித்தவனைப் பார்க்க கடுப்பாகத்தான் இருந்தது ஆர்.ஜேவுக்கு.
“நீ பைத்தியம் மாதிரி ஏதேதோ உலரிக்கிட்டு இருக்குற. என்னமோ பண்ணித் தொலை. ஆனால் உன்னால என்னோட ப்ளேனுக்கு எந்த தடங்களும் வந்துட கூடாது. அப்டி வந்தது… தம்பின்னு கூட பார்க்காம கொன்னு குழி தோன்டி புதைச்சிடுவேன்.” என எரிச்சலாக எச்சரித்தான்.
வெளியே நின்று கொண்டிருந்த யூவி குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். “இந்த ஆதி எதையோ மறைக்கிறான். அது கன்போர்ம். ஆனால் எததான் மறைக்கிறான்னு தெரியலயே. அவன் ஏன் அந்நியன் பட விக்ரம் மாதிரி நடந்துக்குறான். இதுல எதுதான் உண்மை? இன்னைக்கு வந்து நல்லா தானே பேசிக்கிட்டு இருக்கான்.” என யோசித்தவள்
“சரி இருந்தாலும் பரவாயில்லை. The truth will come out one day. அது இன்னைக்கா கூட இருக்கலாம். நாளைக்கா கூட இருக்கலாம். அதுவரைக்கும் ஆதிக்குள்ள புகுந்திருக்குற பேய வேப்ப இலை அடிச்சி விரட்டுற வேலையப் பாக்க வேண்டியதுதான்.” என குதூகலத்துடன் கீழுதட்டைக் கடித்து தோலைக் குலுக்கியவள் அங்கேயே போனை நோண்டிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
வீட்டின் உள்ளே விசில் அடித்துக் கொண்டு சாவியை கையில் வைத்து சுழற்றியவாறு நுழைந்தான் ஆதி. அப்போதுதான் யூவி கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சோகமாக ஏதோ ஒன்றை ஆழமாக யோசித்தவாறு அமர்ந்திருப்பதைப் பாத்தவன், அவளை ஏற இறங்க நோக்கினான்.
அவள் முகத்தில் முன்பு கையை அசைத்துப் பார்த்தவன் “என்ன ஆச்சு இவளுக்கு? இப்படி பேய் அறைஞ்ச மாதிரி எதையோ யோசிச்சிட்டு இருக்குறா?” என பார்த்து, அவள் தோளைத் தட்ட அதில் நிகழ்காலம் வந்தவள் அவனை நோக்கினாள்.
“என்ன ஆச்சு? இப்படி சிலை மாதிரி உட்கார்ந்துட்டு அப்படி என்ன யோசிச்சிக்கிட்டு இருக்க? சீகிரியா கோட்டைய கட்டின காசியப்பன் கூட இந்தளவு யோசிச்சிருப்பானான்னு தெரியல. அந்த அளவுக்கு இருக்கு உன் யோசனை.” என கேட்டவாறே அவவருகில் கட்டில் கையைக் குத்தி அவளை தலை சாய்த்துப் பார்த்திருந்தான்.
சோகமாக இருந்தவளை அறியாமலே அவள் வாயிலிருந்து “உன்னப் பத்திதான் யோசிச்சேன்.” என அவள் சொல்லவும் அவன் இதழ்கள் விரிந்தன.
“ஏதேய்… என்னப் பத்தி யோசிச்சியா?” என தலைசாய்த்து அவளை கூர்மையாகப் பார்த்தவன்
“அப்படின்னா… நான் உனக்கு அவ்ளோ இம்போர்டன்டா?” என அவளை மெலிருந்து கீழ் வரை அளந்தவன் அவள் அழகிவ் ஒரு நிமிடம் கிறங்கித்தான் போனான்.
அவன் தவறாக நினைப்பானோ என்று யோசித்தவள் வெடக்கென்று “இல்லை… இல்லை… நான் சும்மா சொன்னேன். நான் எதுவும் உன்னை பத்தி எல்லாம் யோசிக்கலப்பா.” என்றாள் மறைத்தவாறே.
“ஏய் பொய் சொல்றியாடி? எனக்கு பொய் சொல்றது பிடிக்காது.” எனக் கூறியதும் முதலில் மூக்கு நுனி சிவந்தது அவளுக்கு.
“இந்த மாதிரி டீப் போட்டு கூப்பிட்டா… கொன்னுடுவேன்…” என விரல் நீட்டி பல்லைக் கடித்து எச்சரித்தவள்
“நான் யாரப் பத்தி நினைச்சா உனக்கு என்ன? உன் வேலையப் பாத்துட்டு நீ போறியா?” என கோபத்தில் சிடுசிடுத்தாள்.
“சரிதான். நீ யாரைப் பத்தி நினைச்சா எனக்கு என்ன? பட்… நீ என்னப் பத்தி நினைக்கும் போது அத கேட்க எனக்கு ரைட்ஸ் இருக்கும்மு. சோ… மரியாதையா உண்மைய ஒத்துக்கோ.” என்று அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து கண்ணடித்து கள்ளச் சிரிப்புச் சிரித்தான். அவன் சிரிப்பதில் அவன் இதழ்கள் விரிவதையே கண்கள் விரித்து ரசித்தவனின் நீண்ட மூக்கு அவள் கன்னத்தில் உரச அவள் மெய் சிலிர்த்து அடங்கியது.
தன்னை நிதானம் செய்தவள் “சரி… ஆமாம். நான் உன்னைப் பத்திதான் நினைச்சேன். போதுமா? ஆள விடு ராமா…” உள்ளே செல்ல முற்பட அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து பின்னாலிருந்து அணைத்தவனின் செயல் அவளுக்குள் பூகம்பத்தையே ஏற்படுத்தியது. இதயம் தடக் தடக் என்க உறைந்து போய் நின்றுவிட்டாள்.
“சரி என்னப் பத்தி நினைச்சேன்னு சொல்றல்ல? என்ன நினைச்ச?” என்று தலையை சாய்த்து ஆர்வமாக கேட்டவனின் மீசை அவள் கன்னத்தை உரசியது. அதில் உடல் சிலிர்க்க மூச்சை ஏற்றி இறக்கி விட்டாள். அவன் விடும் மூச்சுக் காற்று அவள் காதில் போய் முட்டியது. கண்கள் கூட சிமிட்டாது அப்படியே உறைந்த பனியாய் நின்றுவிட்டாள். மீண்டும் அவன் மூக்கு நுனி அவள் கன்னத்தில் தட்டியதும்தான் தன்னிலைக்கு வந்தவளின் கரங்கள் நடுங்கின.
“நீ என்ன பண்ற? இடியட்… யாராவது பாத்துட போறாங்க. பைத்தியம். என்ன விடுடா லூசு.” என திட்டி அவன் தோளில் இடித்துத் திமிறினாள்.
அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் “சரி நீ என்னப் பத்தி என்ன நினைச்சன்னு சொல்ற வரை உன்ன விட மாட்டேன்டி…” என்றான் காதலில் கிறங்கிய குரலில்.
“அதெல்லாம் சொல்ல முடியாது. போடா…” என அவன் கைகளுக்குள் இருந்து திமிற ஆரம்பிந்தாள்.
“சரி அப்போ நானும் உன்னை விடவே மாட்டேன்டி… எவ்ளோ நேரமானாலும்… நான் ப்ரீதான்… இப்படியே இருப்பேன்.” என்றான் குறும்பு மின்ன சிரித்தவாறு. அவன் அணைப்பு ஏன் அவளுக்கு கோபத்தை வரவழைக்கவில்லை என்றது அவளுக்குமே யோசனைதான்.
“விடு… விடுடா…” என கத்தி அவனை தள்ளிவிட முயன்று தோற்றுப் போனவள்
“இப்போ சொல்றேன். நீ ஒரு லூசு… நீ ஒரு பைத்தியம்… நீ ஒரு மெண்டல்… நீ ஒரு கிறுக்கு… நீ ஒரு முட்டாள்… நீ ஒரு சைக்கோ… நீ ஒரு குரங்கு… உனக்கு அறிவு சுத்தமா இல்லை. நீ ஆள் வளர்ந்திருக்கியே தவிர உனக்கு மூளை வளரவே இல்லை. நீ உன்னை ரொம்ப ஸ்மார்ட்னு நினைச்சிட்டு இருக்க. பட் நீ ஒரு அடி முட்டாள். நீ பக்கா லோக்கல். படு லோக்கல். இதெல்லாம்தான் நான் யோசிச்சு பாத்துட்டு இருந்தேன்.” என கத்தியவள்
“என்ன விடுடா… தடிமாடு…” என்று அவள் அணைப்பில் சொக்கிப் போன தன்னை மீட்டெடுக்க படாத பாடு பட்டாள்.
“சரிடி… நீ நிறைய விசயங்கள் சொன்ன. பட் எனக்கு அந்த சைக்கோன்ன வேர்ட் மட்டும்தான் மூளைக்குள்ள திருப்பி திருப்பி ரிப்பீட் மூட்ல லூப்ல கேட்டுட்டே இருக்கு.” என வன்மப் பார்வையுடன் அவளை விடுவித்து தன் முன் கொண்டு வந்து நிறுத்தி சொன்னனு.அ
அவளுக்கு அவனை சைக்கோ எனக் கூறி அவனால் பட்ட பாடு கண் முன் நிழலாடியதும் “ஒரு வேலை அன்னைக்கு பண்ண மாதிரி ஏதாவது பண்ணிடுவானோ?” என யோசித்தவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
“இல்லை… இல்லை… நான் எப்போ அப்படி சொன்னேன். நான் சைக்கோன்னு சொல்லவே இல்லையே. நான் எப்படி உங்களை அப்படி சொல்லுவேன்? அப்படி சொல்லக் கூடாது. தப்பு தப்பு…” என கன்னத்தில் போட்டுக் கண்டவளைப் பார்த்து மயங்கித் தவித்தான்.
“சரி. ரொம்ப உருட்டாத… உன் ரீல் அந்து போய் ரொம்ப நேரமாச்சு.” என்று இதழ் வளைத்தான் ஏளனமாக.
அவள சங்கடமான மனநிலையை அடைய “சரி எனக்கு கொஞ்ச வேலை இருக்கு நான் போறேன்.” என கூறிவிட்டு ஒரே ஓட்டம்.
“பைத்தியங்கள் பல விதம்… பட் இவ அந்த அத்தனை விதத்தையும் ஒன்னா சேத்து படைக்கப்பட்ட விதம்.” என அவளை நினைத்து இதழ் விரிய அழகாய் சிரித்தவனின் செல்களில் காதல் பூக்கள் மலர்ந்தன.
இரவு பன்னிரண்டு மணி இருக்கும். காவ்யாவை கடத்தி வைத்திருக்கும் அறையினுள் நுழைந்தான் ஆர்.ஜே. அங்கு வந்தவன் ஒரு கேக்கினை எடுத்து அவள் முன் நீட்டி “Happy Birthday dear love! இன்றுபோல் என்றும் கொடூரமாக சித்திரவதை அனுபவித்து வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றான் கர்வத்துடன். அந்த கேக்கை தெனாவெட்டாக தட்டி விட்டாள் காவ்யா.
இங்கு ஆதி அந்த பாறையில் அமர்ந்து கொண்டு காவ்யாவின் புகைப்படத்தினைப் பார்த்து மௌனமாக கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தான். அவனுள் ஏதோ ஒரு சோகம். அவனுக்கு மாத்திரமல்ல. வீட்டில் அனைவருக்கும் ஒருவகையான குற்ற உணர்ச்சி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் மனம் உடைந்து சிதறிப் போய் கிடந்தனர். அப்போதுதான் ஒலித்தது அந்த இனிமையான மனதை கொள்ளை கொள்ளும் யாழ் இசை.
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை…
இனிய குரல் யாழிசையுடன் சேர்ந்து ஒலிக்க அனைவரும் ஒரு நிமிடம் இது கனவா என ஸ்தம்பித்து போய்விட்டனர்.
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை…
பாடல் ஒலிக்க காவ்யாவின் நினைவுகள் ஆதியை ஆட்கொண்டது. அவளும் இப்படித்தான் பாடுவாள்… ஸ்ருதி கூட்டி தேன் போன்ற குரலில்… “ஒருவேளை… அவள்தான் திரும்பி வந்துவிட்டாளோ.” என்ற எண்ணத்துடன் உடனே எழுந்து நின்றவனின் இதழ்கள் “அக்கா…” என தானாகவே ஒலிக்க கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உருண்டு நிலத்தை நோக்கி ஓடின. கால்கள் இசை வந்த திசையை தேடி ஓடியது.
வீட்டிலுள்ள அனைவருமே இசையினால் ஈர்க்கப்பட அனைவரது கண்களிலும் கண்ணீர் தேம்பியது. இவ்வளவு வருடமாக வீட்டில் முடங்கிக் கிடந்த அகல்யாவிற்கு கூட மனம் கனத்தது. அனைவரும் பாடல் ஒலிக்கும் திசையை நோக்கி ஓடி வர அங்கே காவ்யாவின் சந்தன நிற பாவாடை தாவணியில் அவள் கண்ணாடி வளையல்களை அணிந்து பளபளவென மின்னும் தன் எண்ணெய் தோய்ந்த முகத்தில் புன் சிரிப்புடன் தங்கப் பதுமை போன்று யாழ் மீட்டி தன் இனிய குரலால் அனைவரையும் கவர்ந்திழுத்தாள் யூவி.
பாட்டி உட்பட அனைவரும் முற்றத்தை நாடி வந்து அவளின் ரூபத்தில் காவ்யாவை கண்டவர்கள் கண்ணீர் விட்டு அழனர். நிவி யூவியின் அருகில் சென்று அமர்ந்து விட்டாள்.
மகாலக்ஷ்மி அதிக உணர்ச்சிவசப்பட்டு மனதில் வேதனையில் “என் பொண்ணு காவ்யா சாகலம்மா… சாகல… இதோ இங்கதான் இருக்கா…” என்று சொல்லி அழுதவரின் மனம் யூவியை தன் மகளாக கற்பனை செய்து கொண்டது.
பாட்டி கூட அவளைக் கண்டு சந்தோசத்தில் “என் செல்லப் பேத்தி…” என அவளை நெற்றி முறித்துக் கொண்டார்.
🎶🎶🎶
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
இனிய இசையை கேட்டதும் அறையினுள் அடைந்து கிடந்த காவ்யாவுக்கு ஒரு உற்சாகமும் தன்னம்பிக்கையும் கர்வமும் தோன்றியது. அங்கே நின்றவனைப் பார்த்து ஒரு கேலி சிரிப்பு சிரித்தவள்
“பாத்தியா… நான் இன்னமுமே உயிரோடதான் இருக்கேன்னு அத்தனை பேருக்கும் தெரிய வரும். அப்போ உங்க நாடகம் எல்லாம் இந்த உலகத்துக்கு வெட்ட வெளிச்சமா வரும். இது சத்யா மேல சத்தியம்.” எனக் கூறி இரத்தம் படிந்த உதட்டை துடைத்து விட்டவள் கர்வமாக இதழ் வளைத்து அவனைப் பார்த்தாள்.
“ க – கமகம – ரிமகரி – ஸநிரி – ஸ
பமகம – தமக – ரிஸநிரி – ஸ
கம – ஸநிஸ – தநிமத – கமரிக – ஸ
நிஸதநி – ஸ
நிஸம – கக
நிஸ – பமம – க
ஸநிஸ – கமக
ரிநித – மமக
கமக – க – கமரிக
நிரிநிக – ரிமகரிஸ
பமத – மநி – தநிமத – கமரிக – ஸ “
இனிய கானம் காவ்யாவை நியாபகப்படுத்த கால்கள் பின்ன ஓடி வந்தான் ஆதி. “இறந்தவள் வந்துவிட்டாளா?” என்று நினைத்து மனம் ஏங்கியது.
உயிர்த்தோழி காவ்யாவின் நியாபகம் மனதை உருக்க இத்தனை வருடமாக பூட்டிக் கிடந்த அறையை உடைத்துக் கொண்டு வெளியில் நொண்டியவாறு ஓடி வந்தாள் அகல்யா. அவளைப் பார்த்த சரஸ்வதிக்கு இதயம் தடதடவென அடித்துக் கொண்டது. விஷ்ணுவும் மகளை எண்ணி கலங்கினார். “என் பொண்ணு…” என வாய்திறந்து கூறி அவளை அணைத்துக் கொண்டு அழுதார்கள் அன்னையும் தந்தையும்.
அவளது பிஞ்சுக் குழந்தைகள் நிஸாவுப் ரோஹனும் அம்மாவை கண்டதும் ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதன. அவளும் குழந்தைகளை பார்த்து முத்தமிட்டு தன் தாய்மையை வெளிப்படுத்தினாள்.
ஆதி உள்ளே நுழைந்ததும் தலைசுற்றியது. மனம் முழுக்க “காவ்யாவைப் பார்த்துவிட மாட்டோமா?” என்ற ஏக்கமே நிறைந்திருந்தது. அவன் கண்கள் காவ்யாவைத் தேடி ஏங்க உள்ளே இருந்தது என்னமோ யூவி. ஆதியின் முகம் முழு நிலவாய் பிரகாசித்தது. கண்களின் தசை சுருங்க சிரித்தான். பூரித்துப் போய் சிரித்தான். கண்ணீர் கோடாக வழிந்து கீழே சொட்டியது. அவளைப் பார்த்ததும் அவள் மேல் இருந்த காதல் இன்னும் ஆழமாகிப் போனது.
அவனை அறியாமலே அவன் அவள் மீது கொண்டுள்ள காதலை இன்னும் இன்னும் பலப்படுத்திக் கொண்டான். அவள் மேல் இதுவரை இருந்தது காதல் என அவனுக்கு புரியவே இல்லை. காலையில் ஏதோ உந்துதலில் அவளை அணைத்து முத்தம் கொடுத்ததாக நினைத்தான். ஏதோ… தெரியாமல் அவன் பார்வை தவறியது என்று நினைத்தான். ஆனுல்… அது என்ன உந்துதல் என்றுதின் புரியவில்லை.
ஆனால் தற்போது அதனை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தவன் கைகள் அவளை அள்ளி அணைத்து ஈர முத்தத்தால் நனைத்துக் கட்டிக் கொள்ள துடித்தது. ஆனால் தன்னை தடை போட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன் இதயம் அவளிடத்தில் மொத்தமாய் பறிபோனது.
🎶🎶🎶
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்தனை
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை
எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய்
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
🎶🎶🎶
அவளை உடனே ஓடிச் சென்று கட்டி அணைத்து முத்தமிட்டார் மகாலக்ஷ்மி. அவரை விலக்கியவள் “எனக்கும் இன்னைக்குதான் பிறந்த நாள். அதனால ப்ளீஸ்.. என்னை ப்ளஸ் பண்ணுங்க.” என அவள் பவ்வியமாக கூற உடனே
“ஆயிரம் வருசத்துக்கு எந்த குறையும் இல்லாம சந்தோசமா வாழனும்மா…” என அவளை சந்தோசமாக அணைத்து வாழ்த்திய பாட்டி தனது கண்ணாடியை விலக்கி கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
“அதுசரி… வந்த முதல் நாள் பாடத் தெரியாத மாதிரி சொன்ன… ஆனால் இப்போ இவ்வளோ அழகா பாடுற.” என அவளை மெச்சியவர் அவரை கேள்வியாக பார்க்க
“அதெல்லாம் எக்டிங்…” என்றாள் மீரா யூவியைப் பார்த்து முறைத்தவாறு.
அதைக் கேட்டு சிரித்தவர், “இனிமேல் நீ எங்க வீட்டுப் பொண்ணுமா. எது நடந்தாலும் இங்க இருந்து எங்கேயுமே போக கூடாதுன்னு என் மேல சத்தியம் பண்ணு.” என்று பூரிப்புடன் கூற சற்று யோசித்தவள்
“பாட்டி…” என இழுத்தாள் தன் உடல் நிலையை யோசித்து.
“அவ எங்கேயுமே போக மாட்டா… நாங்க போக விடவே மாட்டோம்.” என பல்லவி அவள் தோளில் சாய்ந்து அவளை அணைத்துக் கொண்டாள். இதிவ் புகைந்தது என்னவோ கார்த்திகா மற்றும் வில்லன் கூட்ட உறுப்பினர்களுக்குத்தான்.
“என்ன? உங்க பொண்ணு ரொம்பதான் அவ மேல அக்கறை காட்டுறா. இது நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்.” என அவளை முறைத்தவாறே அனுயா பல்லவியின் தாய் திவ்யங்காவிடம் கூற
“அததான் நானும் பாக்குறேன். சகிக்க முடியல. எங்க இருந்தோ வந்த பொண்ணு இப்படி அத்தனை பேரையும் ஒரே நாள்ள கையில போட்டுக்கிட்டா. அது தெரியாம அவ இப்படி அன்ப பொழியிறா. வரட்டும்… அவள வெச்சிக்கிறேன்.” என பல்லவியை பொறிந்து தள்ளினார் அவளது தாயார்.
“என் பொண்ணு காவ்யா சாகல. அவ ஆத்மா உனக்குள்ள இருக்கும்மா…” என்று யூவியிடம் சொன்னவர்
“கடவுளே… எவ்ளோ நாளைக்கு அப்றம்… இன்னைக்கு என் மனம் குளிர்ந்து போச்சு.” என அவளைக் கட்டிக் கொண்டு அழ ஒவ்வொருவராக அவளை அணைத்து பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
இவ்வாறு ஒருத்தருக்கொருத்தர் “நீ வந்த பிறகுதான் இந்த வீடே கலகலப்பா இருக்கு. போன சந்தோசம் திரும்ப வந்திருக்கு. நீ எங்க வீட்டு மகாலக்ஷ்மிமா… அந்த கடவுளா பாத்து உன்ன அனுப்பி வெச்சிருக்காரு.” என வசனம் பேச ஆதியால் மாத்திரம்தான் அவளை நெருங்கவே முடியவில்லை. அவள் மாத்திரம் தனியாக இருந்திருந்தால்… அள்ளி அணைத்து முத்தமிட்டு கட்டிணைத்து கொஞ்சி கதறிக் கதறி அழுதிருப்பான்.
“அடிப் பாவி ஒத்த இரவுல இப்படி மொத்த மீனையுமே கவுத்துட்டியேடி.” என முட்ட முட்ட விழிக்க அவளைப் பார்த்து சிரித்தவாறே கண் அடித்தாள் யூவி.
“சரிதான் போ. நீ சரியான கில்லாடிடி.” என மனதிற்குள் கூறியவள்
“இந்த ட்ராமாவுல நாமளும் பங்கெடுப்போம்…” என யோசித்துவிட்டு
“ஆமாம்மா. யூவி ஆதிர்ஷடக்காரி. என் கூட யாரெல்லாம் ப்ரண்ட்சிப் வெச்சிருக்காங்களோ அவங்கெல்லாருமே அதிர்ஷ்டக்காரிதான்.” என்றதும் அவளை முறைத்துப் பார்த்தனர் அனைவரும்.
அதில் அசடு வழிந்தவள் ‘சோரி…” என்று இழித்தாள். ஆதியிற்குத்தான் சங்கடமாய்ப் போனது. அங்கே அனைவரும் முற்றத்தில் ஒன்றாக இணைத்து பாச மழையை யூவியின் மேல் கொட்டோ கொட்டென்று கொட்ட அவள்தான் மூச்சு முட்டிப் போனாள்.
ஒருபக்கம் அவள் இத்தனை நாளாக ஏங்கித் தவித்த பாசம், நேசம் அத்தனையும் ஒரே நாளில் அடைந்து கொண்டாள். இனிமேல் அவள் உயிர் இந்த நொடி போவது என்றாலும் அவளுக்கு கவலை இல்லை என்று ஆகிவிட்டது.
இவ்வாறு அவள் அனைவரிடம் நெருங்கி பழகிக் கொண்டிருக்க ஆதிக்கு அவளை நெருங்க வழிதான் தெரியவில்லை. “யூவி… உன்ன தேடி யாரோ வந்திருக்காங்க.” என தவிப்பில் அவளை வெளியே வரவழைக்க பொய் ஒன்றை அவிழ்த்து விட்டான்.
“இந்த நேரத்துல யாரு?” என்ற பாட்டிக்கு கொஞ்சம் யோசனைதான்.
“தெரியல பாட்டி. நான் பாத்துக்கிறேன். அவள வர சொல்லுங்க…” என்றவனின் பின்னால் சென்று வெளியில் எட்டிப் பார்க்க யாரையும் காணவில்லை.
“எங்க ஆதி? யாரோ வந்திருக்காங்கன்னு சொன்ன. ஆனால் யாரையும் காணோம்.” என்றாள் மலர்ந்த முகத்துடன். அவள் சுதாரிக்கவே இல்லை… அவளை இடையோடு சேர்த்து இழுத்தவன் அவள் இதழை வன்மையாகத் தீண்டினான். அவன் கண்கள் மூடி அவளுடன் இதழ் போர் தொடர்ந்தான். அவள் கண்கள் தெறித்து விழுமளவு விரிந்தது. அவனைப் பிடித்துத் தள்ளிவிட அவன் மார்பில் தள்ளினாள். அவன் வலது கை அவள் இடையை இன்னும் இருக்கிப் பிடித்துக் கொண்டது. அவன் இடது கை விலகிய அவளின் தலையை இன்னும் தன்னோடு சேர்த்துப் புதைத்தவனை அதி வேகமாக தள்ளிவிட்டவளின் கண்களில் கோபத்தில் தகிக்க அவனை அறையப் போனவளின் கையை வெகு வேகமாக பிடித்துக் கொண்டவன் அவன் கையைப் பிடித்து இழுத்து தன் முன் கொண்டு வந்தவன் அவன் பின்னால் ஒன்றி நின்று அத்தனை இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான்.
“What the hell are you doing?” அவள் சீறினாள் அவனிடம் தலையை பின்னால் சாய்த்து.
“எங்கக்காவ… நான்… ரொம்ப… ரொம்ப.. மிஸ் பண்ணேன். ஒரு நிமிசம்… எனக்கு… நீ அவளை… திரும்ப கொடுத்துட்ட…” என்று நிறுத்தி நிறுத்தி பொறுமையாக சொன்னவனின் கண்ணீர் அவள் கையில் பட்டுத் தெறிக்க அவன் மேல் இருந்த கோபம் பனியாய்க் கரைந்து போனது.
“இல்லை நான் சும்மா சொன்னேன். உன்னை தேடி யாரும் வரல.” என்றான் மெதுவாக. அவன் கையை உதறிவிட்டு அவன் முன் வந்து தள்ளி நின்றவள்
“அப்போ ஏன் பொய் சொன்ன?” என்றாள் கண்களைத் தாழ்த்திக் கொண்டு.
“இல்லை… உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு தோனிச்சு. அதுதான் எல்லார் முன்னாடியும் சொல்ல முடியாது. அதனாலதான் பொய் சொன்னேன்.” என்றவனுக்கு அவள் முகம் பார்க்க தைரியமில்லல.
“இங்க பாரு… உனக்கும் எனக்கும் இடையில தனியா பேசுற அளவுக்கு எதுவுமில்லை. இருந்தாலும் சொல்லு கேட்குறேன்.” என அவள் வேண்டா வெறுப்பாக கையைக் கட்டி பார்வையை வேறெங்கோ செலுத்தினாள்.
அவன் ஒரு வலி நிறைந்த புன்னகையை வெளியிட்டு விட்டவன் குரல் இத்தனை நேரமும் இல்லாமல் கர்வமாக ஒலித்தது. “என்னங்க மிஸ் யூவி… ஒரே நாள்ள எல்லாரையுமே உங்க பின்னாடி வர வெச்சிட்டீங்க போல. காலையில எல்லாம் சூனியம் மந்திரம் தந்திரம்னு ஏதோ உலரிட்டு இருந்தீங்க. சோ… எல்லாருக்குமே சூனியம் பண்ணி உங்க பின்னாடி வர வெச்சிட்டீங்க. Am I right?’ என அவளை அர்த்தமாக பார்த்தான்.
“இப்போ என்னதான் உன் ப்ரோப்ளம்? சரி… நீ சொன்ன மாதிரியே நான் சூனியம் பண்ணிதான் இப்படி எல்லாரையும் பின்னாடி வர வெக்கிறேன்னே வெச்சிக்கோ. அதுக்கு இப்போ என்ன செய்யலாம்னு சொல்ற?” என கோபத்துடன் அவனிடம் எதிர்த்துப் பேசினாள்.
“இங்க இருக்குற எல்லாரையும் மடக்க, உங்க அப்பா ஆதித்ய வர்மாவும் அம்மா ஸ்வேதா லக்ஷ்மியும் அப்படி என்ன மந்திர வித்தை சொல்லிக் கொடுத்தாங்க?” என அவளை கைகட்டிப் பார்த்து கண்களில் குரோதம் வைத்துக் கேட்க, அவள் இதயம் நின்று துடித்தது. அங்கேயே கோமாவுக்குப் போகாததுதான் குறை.
தொடரும்…