காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 24 🖌️

0
(0)

“என்ன வேலை?’ என ஆர்வமாக கேட்டவளிடம்

 

“ஒருத்தரை கொலை பண்ணணும்.” என்றான் சாதாரணமாக.

 

அவளுக்கு கண் முழி பிதிங்கிப் போனது. “என்னாஆஆஆது கொலையா?” என்று கத்தினாள் வாய் பிளந்து.

 

“ஆமா… கொலைதான். ஏன் இந்த டீவி நிவ்ஸ்ல எல்லாம் நீ கொலை நிவ்ஸ் பார்த்ததில்லையா?” என்றான் அவள் அதிர்ச்சி மாறாத முகத்தை பார்த்து ரசித்தவாறே.

 

“What the hell are you talking? நீ சொல்ற எல்லாத்தையும் நான் பண்ணுவேன்னு நினைச்சியா? சத்தியமா இல்ல. நான் இந்த வீட்டை விட்டுப் போனாலும் நீ சொல்ற இந்த பாவத்தை மட்டும் செய்ய மாட்டேன்.” என்று அவன் கொலையும் பண்ணத் தயங்காதவன் என்று அறிந்து கத்தினாள்.

 

“ஏன்?” என கேட்டான் புருவங்கள் உயர்த்தி.

 

“ஏனா? ஏன்னா என்னோட மனசாட்சிக்கு நான் எப்போதுமோ துரோகம் பண்ண மாட்டேன். அதுவும் கொலை எப்போதும் செய்ய மாட்டேன். அதுக்கெல்லாம் நீ வேற ஆள பாரு.” எனக் கூறியவளின் பேச்சைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

“என்னது மனசாட்சியா? அது உனக்கு இருக்குதா? நான் இல்லன்னுல நெனச்சேன்… ஆனால்… இப்படி வீட்டுல இருக்கிறவங்கள இப்படி ஏமாத்திட்டு இருக்குறது உன் மனசாட்சிக்கு செய்ற துரோகம் இல்லையா?” என அவன் கேட்டதும் அவளால் எதுவும் பேச முடியாது போனது.

 

“அது… அது…” என திணறிக் கொண்டிருந்தவளுக்கு சமாளிக்க எந்த பொய்ன்ட்ஸும் கிடைக்கவில்லை.

 

“போதும் பேசாதே. உன் மேல எல்லாரும் எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்க. ஆனால் நீ அதுக்கு எல்லாம் தகுதி இல்லாதவ. அதுக்கு பதிலா நீ அவங்களை இப்படி ஏமாத்திகிட்டு இருக்க. இத செய்றதுக்கு உனக்கு எப்படி மனசு வந்துச்சு? சொந்த வீட்டை இப்படி ஏமாத்திகிட்டு இருக்கியே. உனக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியா இல்லையா? நீ எல்லாம் என்ன ஜென்மம்? இதுல நீ மனசாட்சிய பத்தி பேசுறியா?” என அவளை கேவலமான பார்வையோடு பார்த்ததும் அவன் பார்த்த பார்வையில் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

 

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்னோக்கி சில அடிகளை வைத்து மீண்டும் அவள் பக்கம் திரும்பியவன் “கொலை பண்ற அளவுக்கு எல்லாம் நீ வேர்த் இல்லன்னு எனக்கும் தெரியும்.” என அவளிடம் உரைத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டான்.

 

“சொந்த வீட்டுக்கு துரோகம் பண்றது தப்புதான். எனக்கு இத விட்டா வேற வழி தெரியல. ஆனால் நீங்க எல்லாருமே எங்க அப்பாவுக்கு பண்ணது மட்டும் சரியா? அதுவும் தப்பு தானே?” என மனம் வெம்பிக் கூறியவள் கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

 

காலையில் சூரியோதயம் குண திசையை வர்ண நிறங்களால் நிரப்ப வழமையைப் போல் எழுந்து குளித்துவிட்டு கடவுளிடமும் வீட்டிலுள்ள அனைவரிடமும் ஆசிர்வாதமும் வாங்கி யூவி வெளியே வந்தாள். கையில் கலர் கலராக ரங்கோலி தூள்களை எடுத்து வந்து ரங்கோலி போடுவதற்காக  கீழே அமர்ந்து பாட்டியின் வேண்டுகோள் படி ஒரு பாடலைப் பாடியவாறு ரங்கோலி போட்டுக் கொண்டிருந்தாள்.

 

ரங்கோலி போட்டு முடித்ததும் அதன் அழகைப் பார்த்து “வாவ்… யூவி… கலக்குறடி… எவ்ளோ அழகா ரங்கோலி போட்டிருக்க. செம்ம… பாட்டி இதப் பாத்தாங்கன்னா காலி ஆகிடுவாங்க. அவ்ளோ அழகா இருக்கு. இதுக்காக உனக்கு அவார்டே தரனும்டி.” என துடுக்குத் தனத்தோடு முகம் மலர தற்பெருமை பேசியவள்

 

“அது நானே… அது நானே… இந்த கோலம் போட்டதும் நானே… அத அழகா போட்டதும் நானே… அது நானே…” பாடிக் கொண்டே சேலை நுனியைப் பிடித்தவாறு நடனம் ஆடிக் கொண்டிருக்க இந்த சத்தத்தைக் கேட்டு வெளியில் தியானம் செய்து கொண்டிருந்த ஆதி

 

“யார் அது? டிஸ்டேர்ப் பண்றது?” எனத் திரும்பிப் பார்த்தான். அவள்தான்… அவளேதான். என்றும் விட இன்று புதுமையாக இருக்கிறாளே என்று அவளை தலைசாய்த்து காந்தக் கண்ணால் நோக்கினான். புதிதாக இன்று அபியிடம் சொல்லி பாவாடை தாவணி அணிந்திருந்தாள். நேற்றும் அணிந்திருந்தால்தான்… ஆனால்… அவன் இருந்த நிலைக்கு அவனால் ரசிக்க முடியவில்லை.

 

சூரிய வெளிச்சத்தில் தங்கப் பதுமையாக மின்னியவளிடமிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை அவனால். அவள் அழகு அவனை போதையேற்றிக் கிறங்கடித்தது. மூச்சு வாங்க அவளையே பார்த்திருந்தான். குளித்துவிட்டு வ்நது நெற்றியில் குங்குமம் வைத்து கை நிறைய வளையல்கள் அணிந்து ரோஜா நிற பாவாடையும் இளமஞ்சள் நிற தாவணியும் போட்டு அவனை சுயநினைவு இழக்கச் செய்தாள். அப்படியே மெய் மறந்து போனான்.

 

அவள் தலைமுடியிலிருந்து தண்ணீர் கீழே சொட்டு சொட்டென சொட்டிக் கொண்டிருந்தது. நீர்த்துளி பட்ட வதனத்தை கைகளால் துடைத்து விட்டவளின் வதனத்தில் ரங்கோலியின் நீல நிறத் தூள் பட்டு இன்னும் அழகுக்கே அழகாய்த் தோன்றியவளை பார்வையாலேயே தன்னுள் இழுத்துக் கொண்டான். கண் சிமிட்ட மறந்தவனின் பார்வை குனிந்து கொண்டு கீழே அமர்ந்து ரங்கோலி போட்டுக் கொண்டிருந்தவளின் கழுத்தைத் தாண்டி இரசனையாகப் பதிந்தது. கண்ணியம் என்ற அவன் கட்டுப்பாடுகள் தகர்த்தெறியப்பட மூளை “ஆதி… என்னடா பண்ற… ஒரு பொண்ண கண்ண பாத்துதான பேசணும்னு… அம்மா சொல்லிருக்காங்கடா…” என்று செய்தி அனுப்ப இதயம்தான் கேட்க மறுத்தது. இதுவரை எந்தப் பெண்ணிடமும் தோன்றாத உணர்வு… அவளிடம் மாத்திரம்.

 

அப்படியே இன்னும் பார்வை கீழிறங்கி நீர்த் துளிகள் பட்டுத் தெறித்த அவள் இஞ்சி இடையில் வந்து நின்றது. அவள் மெல்லிடை அழகில் இதயத்தை நழுவ விட்டான். அவள் இடையில் மாட்டித் தவித்த ஹிப் செய்னின் சங்காய் மாறத் துடித்தது இதயம்.

 

“ஐய்யோ… கொல்றாளே…” என்று பின்னந் தலையைத் தேய்த்தவனுக்கு பார்வையை கண்ணியப்படுத்த முடியவே முடியவில்லை.

 

“கடவுளே…” என்று கடவுளை அர்ச்சித்தவன். ஏதாவது செய்ய வேண்டும் என்ள எண்ணத்தில்

 

“ரங்கோலி போட்டுட்டு டான்ஸ் ஆடிட்டா இருக்குற? இதுல அது நானே வா? இரு… இதோ வரேன். தப்பு பண்ணிட்டோம்னு குற்ற உணர்ச்சி இருக்கான்னு பாரேன்.” என்று அவள் மேல் கோபப்படுவதாக தன் மறதைத் தானே நம்ப வைத்து வீட்டின் உள்ளே நுழைவதற்காக வந்தவன் வேண்டும் என்றே கால்களால் அவளின் அழகான ரங்கோலியை கலைத்துக் கொண்டே செல்ல அது யாவும் அறியாமல் ஆடிக் கொண்டிருந்தாள் யூவி.

 

ஆடிக் கொண்டிருந்தவள் சில நொடியில் திரும்பிப் பார்க்க ஆதி அதனை கன நேரத்தில் நாசமாக்கி இருந்தான். அவள் அடுத்த நிமிடம் பல்லைக் கடித்து அவனை முறைத்துப் பார்க்க அவள் முறைப்பதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவன் “அது நானே… அது நானே… இத நாசம் பண்ணதும் நானே… உன்னை வெறுப்பு ஏத்தனும் தானே??? அது நானே… அது நானே…” என அவளைப் போலவே பாடிக் கொண்டே அவள் முன் வந்து சொடக்கிட்டான்.

 

அவள் திடுக்கிட்டு அவனை கோபமாக பார்த்தாள். “என்ன முறைப்பு ஹான்?” என அவள் தலையைத் தட்டி விட்டவன்

 

“நீ போடுவ… நான் நாசம் பண்ணுவேன்… ரிப்பீட்டு… நீ போடுவ… நான் நாசம் பண்ணுவேன்… ரிப்பீட்டு…” என சிறு குழந்தை போல் சிரித்துக் கொண்டே அவன் சொல்ல அவளுக்கு எரிச்சல்தான் கிளம்பியது.

 

“ச்சேய்… சரியான தொல்லை பிடிச்சவன். மங்கீ…” என அவனை வஞ்சிவிட்டு மீண்டும் ரங்கோலி போட ஆரம்பித்தாள்.

 

அவளைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்தவாறே ஆதியும் பேசாமல் போய் பூச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். ஆனால் கண்கள் மட்டும் அவளிடம். அவளை பார்வையால் வதம் செய்து கொண்டிருந்தான். அவளை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் பித்துப் பிடித்து தவித்தவன் அவள் ரங்கோலி போட்டு முடித்து எழுந்து நின்று அதன் அழகை ரசித்துப் பார்த்து சிரிக்கும் நேரத்தில் கையிலிருந்த தண்ணீர் பைப்பை அவளது ரங்கோலியின் மேல் அடித்திருந்தான். மொத்த ரங்கோலியும் க்ளோஸ்.

 

ரங்கோலியில் தண்ணீர் ஊறி அது கலந்து செல்வதை வாயால் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்த யூவி “நோ…” எனக் கத்தினாள். அவள் முகத்தில் தெரிந்த சிரிப்பு கன நொடியில் காணாமல் போனது.

 

“ஓ… கடவுளே… என் ரங்கோலி…” என்றவாறே ஆதியை கோபமாக நோக்கினாள்.

 

அவனோ சாதாரணமாக “ஒ… ஓவ்… சோரி யூவி. தெரிஞ்சுதான் அடிச்சேன். நீ வேணா திரும்பவும் க்ளீன் பண்ணிட்டு ரங்கோலி போடுறியா?” எனக் கேட்ட கள்வனுக்கு அவளை ரசிக்க வேண்டும் என்பதே அப்போதைய லட்சியமாக இருந்தது. ஆனால்… அவளுக்கோ காண்டாகிவிட்டது.

 

“டேய்… டேய்… அரை மெண்டல். நான் எவ்ளோ கஸ்டப்படுட்டு போட்டேன் தெரியுமாடா உனக்கு? நீ பாட்டுக்கு எவ்ளோ ஈசியா கலைச்சி விட்டுட்ட?  சென்ஸ் இல்ல? முதல்ல உனக்கு மூளையே இல்ல. இதுல எங்க சென்ஸ் இருக்க போகுது? எங்க அத்த பெத்ததுல முதல் ரெண்டும் நல்லாத்தான் இருக்கு. ஆனால் கடைசி ரெண்டுக்கும்தான் இந்த மென்டல் டிஸோடர் இருக்கு போல. உன்னை எல்லாம் பக்கத்து ஊரு மெண்டல் ஹொஸ்பிடல்ல கூட சேர்க்க மாட்டாங்கடா. ஏன்னா நீ முத்தின லூசு.” என அவள் காட்டுக் கத்து கத்த அங்கே அவள் பின் பாட்டி வந்து நின்றார்.

 

“யூவி…” என அவரது சத்தத்தைக் கேட்டதும் கண்கள் பிதுங்க திருதிருவென்று முழித்தவள்

 

“ஒருவேளை… சொல்லிடுவானோ?” என அவனைப் பாவமாக பார்த்தது.

 

“என்ன கார்த்திக்? செடிக்கு எல்லாம் தண்ணி ஊத்திட்ட போல இருக்கு?” என பாட்டி கேட்க அவன்

 

“ஆம்…” என்று தலையை ஆட்டினான்.

 

அதே போல் யூவியிடம் “என்னம்மா? ரங்கோலி போட சொன்னேனே. ஆனால் போட்ட மாதிரியே தெரியலயே.” என்று தரையை அளந்தார்.

 

“அது… வந்து… பாட்டி… இந்த லூசு ஆதிதான்…” என ஏதோ கூற வர அவள் காலை எட்டி ஒரு மிதிதான் விட்டான் ஆதி.

 

அதில் அவள் காலைப் பிடித்துக் கொண்டு “ஆஆஆஆ…” எனக் கத்தியதும்

 

“என்னம்மா? என்னாச்சு?” என பதறினார் பாட்டி.

 

“அதுவா பாட்டி… யூவிய பத்தி நான் உங்க கிட்ட சில விசயம் சொல்லனும். அது என்னன்னா அவங்க அப்பா வேற யாரும் இல்லை. அவர் பெயர் ஆதித்ய வர்…” என்று ஆதி கூறியதும் யூவிக்கு முச்சே இல்லை. பாய்ந்து ஆதியின் வாயைத் தன் கரங்களாலேயே பொத்திக் கொண்டாள்.

 

ஆனால் அவன் விடுவதாக தெரியவில்லை. அவள் கையைப் பிரித்தவன் “ஆதித்ய வர்…” என மீண்டும் கூற வர அவள் பத்ரகாளியாக மாறி கண்களாலேயே அவனை

 

“சொல்லாதேடா பக்கி…” என கண்களால் மிரட்டிக் கொண்டிருந்தாள்.

 

“என்னம்மா? அவன் என்ன உலர்ரான்?” என பாட்டி யோசித்தார்.

 

“அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே பாட்டி அவர் உலர்ரான்னு? உலர்ரத கேட்டு ஏன் உங்க டைம நீங்க வேஸ்ட் பண்றீங்க? நான் ரங்கோலி போட்டுர்ரேன் பாட்டி. நீங்க போங்க…” என அவன் வாயைப் பொத்தியவாறே பாட்டியிடம் இழித்துக் கூறவும்

 

“என்னவோ பண்ணுங்க. ஆனால் ரங்கோலி மட்டும் போட்டுடு…” என அவர் கூறிவிட்டு முன்னேற அப்போதுதான் யூவிக்கு நின்ற மூச்சு திரும்பி சீராக வந்தது.

 

“ஸ்பா…” என இடுப்பில் கை வைத்து அவள் பெரும் மூச்சு விட அவன் மீண்டும் அவளைக் கடுப்பேத்தும் விதமாக

 

“பாட்டி யூவியோட அப்பா…” என்றதும் அவனைப் பிடித்து அவன் வாயைப் பொத்தியவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு

 

“உன் கால்ல வேணா விழுறேன்டா சாமி… பீளீஸ்… இன்னைக்கு என் பேர்த் டே. இன்னைக்காவது இப்படி சோக் கொடுக்காம இரு. இல்லன்னா 5 மாசத்துல சாக வேண்டிய நான் இப்போவே செத்துப் போய்டுவேன்டா. நீ என்ன சொன்னாலும் செய்றேன். ஆனால் பாட்டிக்கிட்ட மட்டும் எதையும் உலரித் தொலைச்சிடாத ராஜா. ப்ளீஸ்…” என தலையைக் குனிந்து கைகளைத் தூக்கி அவனைக் கும்பிட வாய்க்குள் சிரித்தவன் நெஞ்சை நிமிர்த்தி

 

“ஆ… அது… என்ன சொன்ன நான் மென்டலா? இப்போ நீ என் அடிமை. அதனால் நீதான் மூடிக்கிட்டு போகணும். அத விட்டுட்டு பெரிசா துள்ளுற? நேத்தைய கதைக்கு இன்னைக்கு குளிர் விட்டுப் போச்சா? அதுதான் டெமோ காட்டினேன். சோ கொஞ்சம் அடங்குறியா?” என்றான் கர்வமாக.

 

“சரி… இப்போ என்ன என்னதான் பண்ண சொல்ற?” என அவள் பாவமாக கேடட்தும்

 

“அப்படி வா வழிக்கு.” என்றவன் அவன் நிபந்தனைகளை கூற ஆரம்பித்தான்.

 

“என்ன எப்போல்லாம் பாக்குறியோ அப்போ எனக்கு சல்யூட் அடிக்கிற… என்ட்… இனிமேல் இந்த பேர் சொல்லி கூப்பிடுற வேலை வெச்சிக்காத. மரியாதையா கூப்பிடு.” என்றான் உத்தரவாக.

 

“நீ என்ன லூசா? இல்லன்னா நான் லூசா? இப்படி சொன்னா என்னல்ல லூசுன்னு நினைப்பாங்க?” என அவள் கண்ணை உருட்டி கேட்க அவள் அழகை அப்படியே அள்ளிக் கொள்ள ஆசை வந்தது ஆதிக்கு.

 

அதை விடுத்து “மரியாதை… மரியாதை…” என்றான் நெஞ்சை நிமிர்த்தி.

 

“சரி… சேர்…” என இழுத்தவள் மனதுக்குள் அவனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தாள்.

 

“மாத்தி சொன்னா என்ன லூசுன்னு நினைப்பாங்களே சேர்.” என்றாள் உதடு பிதுக்கி.

 

“அதுதானே எனக்கு வேணும். நீ லூசுன்னு எனக்கு தெரியும். உனக்கும் தெரியும். அத எல்லாருக்கும் தெரிவிக்கதான் இந்த பனிஸ்மென்ட். இப்போ சொல்லு செய்வியா மாட்டியா? செய்யலன்னா பாட்டி…” என இழுக்க அவள் பயந்து போய்

 

“பாட்டி எல்லாம் எதுக்குப்பா? நீங்க சொல்றதுதான் என் வேத வாக்கு. அத நான் பண்ணாம இருப்பேனா? ஆனா தயவு செஞ்சு பாட்டி கிட்ட மட்டும் வாய திறந்துடாதீங்க ஆதி சேர்.” என்று அவள் மன்றாடித் தவித்தாள்.

 

“நான் சொல்றததான் செய்வேன். நான் செய்றததான் சொல்லுவேன். அதனாலதான் நான் சொன்ன மாதிரி உன்ன என் ஸ்லேவாவே ஆக்கிட்டேன் பாத்தியா?” என்றான் ஒரு கர்வமான சிரிப்புடன்.

 

“ஹா… போதும் போதும்… ரொம்ப பண்ணாதீங்க சேர். சகிக்கல…” என்றவள் யோசித்துப் பார்த்துவிட்டு

 

“தப்பு பண்ண… பனிஸ்மென்ட் இருக்கு. புரியுதா? ரெடியா இருடி.” என அவள் கன்னத்தில் தட்டியவன் பின்னந்தலையை கோதியவாறு உள்ளே சென்றுவிட்டான்.

 

“ரெடியா இருடீ… வெவ்வெ வெவ்வே…” என பல்லை காட்டி அவனுக்கு பழிப்புக் காட்டி அவனைப் போலவே பின்னந் தலையை கோதி விட்டு காட்டி உதட்டை சுளித்துக் கொண்டவள்

 

“சோதிக்கிறானே. முதல்ல இவனை போட்டுத் தள்ளனும். சரியான இம்சை.” எனக் கூறிவிட்டு ரங்கோலியை அவசரமாக போட்டுவிட்டு உள்ளே சென்றாள்.

 

உள்ளே அனைவரும் கோவிலுக்கு செல்ல ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர். உள்ளே சென்றதும் “இதோ யூவியே வந்துட்டா. அவளுக்கும் இன்னைக்கு பிறந்த நாள்ள? அதனால அவளும் வரட்டும்.” என்று விஷ்ணு கூற

 

“ஆம்மாம்மா. இன்னைக்கு நல்ல நாள்ள கோவிலுக்கு போனா நல்லது. நீயும் எங்க கூட வா.” என்று சரஸ்வதி அழைத்தார்.

 

“இல்ல சித்தி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க போங்க. நான் இன்னொரு நாளைக்கு வரேன்.” என்றாள் தயங்கியவாறே.

 

“கோவிலுக்கு போக கூப்பிட்டா இப்படி வர மாட்டேன்னு சொல்றது நல்லாவா இருக்கு? உங்க அம்மா அப்பா இதெல்லாம் சொல்லித் தரல?” என்று கார்த்திகா கத்தினார்.

 

“ஐய்யய்யோ… இப்போ மட்டும் நான் இவங்க கூட கோவிலுக்கு போனேன்னா என் ப்ளேன்ஸ் எதையுமே எக்ஸிக்யூட் பண்ண முடியாம போய்டுமே. என்ன செய்றது?” என யோசித்தவள்

 

“அதெல்லாம் நல்லாவே சொல்லித் தந்திருக்காங்க. அது மட்டும் இல்லாம இன்னும் பல விசயங்கள் சொல்லி தந்திருக்காங்க. சில நேரத்துல கோவிலுக்கு போகுறது அவசியமில்லைன்னும் சொல்லித் தந்திருக்காங்க. அதனால எனக்கு நிறைய வேலை இருக்கு.  சோ நீங்க எல்லாரும் போங்களேன்.” என்றாள் கார்த்திகாவுக்கு குத்தலாக.

 

“கார்த்திகா அவதான் வரலன்னு சொல்றால்ல? சோ நாமளே போய்க்கலாம்மா. அவளுக்கு உடம்பு சரியில்லை போல…” என மகாலக்ஷ்மி அவளுக்கு ஆதரவாக பேச

 

“சரிம்மா. நீ வீட்டுலேயே இரு.” என்று கூறிவிட்டு அனைவரும் சென்று விட்டனர்.

 

“அப்பாடா. எப்படியோ… இந்த கோவிலுக்கு போகாம தப்பிச்சிட்டோம். இனி நம்ம வேலை ஈஸியா முடிஞ்சிடும். ஆதி… ஆட்டமா போடுற… இன்னைக்கு உன் தொல்லைக்கு எல்லாம் சேர்த்து நான் முடிவு கட்டுறேன்டா.” என்று மனதில் நினைத்தவள் அபியைத் தேட அவளும் அடுத்த நிமிடம் கிளம்பியிருந்தாள்.

 

“ஏய்… நீ எங்க போற?” என யூவி கோபமாக கேட்கவும்

 

“நானும் கோவிலுக்குதான் போறேன். அந்த கோவில் மலையில இருக்கும்டி… ரொம்ப அழகா இருக்கும். நீ வரலன்னா நானும் போக கூடாதா என்ன?” என்றாள் கண்கள் மின்ன.

 

“அப்போ நீ போனா நான் மட்டும் வீட்டுல தனியா இருக்கனுமாடி?” சோர்வாக கேட்டாள் யூவி.

 

“அதுதான் என் அருமை அண்ணங்காரன். எங்க அம்மாவோட ஆசைப் புதல்வன். காவ்யாவோட கண்ணான தம்பி, பாட்டியோட செல்லப் பேரன். பல்லவியோட வருங்கால கணவன். என்ட் இன்னும் சொல்லப் போனா… உன் முறைப் பையன் என் பாசக்கார அண்ணன் ஆதிஷேஷ கார்த்திக்கேயன் வீட்டுலதான் இருக்கான். அவன் கூட இரு.” என்றவள்

 

“துன்பத்தை அனுபவிக்க… பெஸ்ட் ஒப் லக்…” என்று கை கொடுத்துவிட்டு ஓடிட யூவிக்கு பயம் கிளம்பியது.

 

“என்னது… இந்த இங்க்லீஸ் குரங்கு வீட்டுலதான் இருக்கா? நீங்க எல்லாரும் இருக்கும் போதே சும்மா வேற லெவல்ல என்ன வெச்சி செய்வான். இப்போ நீங்க யாருமே இல்லன்னா என் கதை கதம் ஹோகயாதான்டி.” அவள் போகும் அபியைப் பார்த்துக் கத்த அவள் எப்போதோ கிளம்பி இருந்தாள்.

 

“ச்சேய்… இவளையும் கூட்டு சேக்கலாம்னு பாத்தா தப்பிச்சிட்டாளே… அவன்கிட்ட மாட்டினாலும் துணைக்கு இவ இருப்பான்னுல நினைச்சேன். அது கூட பரவால்ல. இந்தப் பைத்தியம் கூட தனியாவா இருக்கனும்? என்ன என்ன கூத்து பண்ணப் போறானோ…” என பயந்தவள் பயத்தை மறைத்துக் கொண்டு

 

“சரி… அவனுக்கு எதுவும் கொம்பு எல்லாம் முளைக்கலையே. அவனும் சராசரி மனிசன் தானே. அவன பாத்து நீ ஏன் பயப்படுற யூவி? இன்னைக்கு ஒரு கை பாத்துடலாம்.” என்றவாறு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து காலை ஆட்டியவாறு போனில் எங்க்ரி பேர்ட் விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைத்த ஆதி உள்ளே வந்து பார்க்க யூவி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அவனுக்கோ கடுப்பாகியது. *ஏமாத்துக்காரி. எல்லாரையும் ஏமாத்திட்டு இப்படி ஹாயா உட்கார்ந்து போன் நோண்டிக்கிட்டே இருக்கியா? தப்பு… தப்பு… தப்பு… விடக் கூடாதே இவள… என்ன பண்ணலாம்?” என இதழ் கடித்து யோசித்தவன் உடனே அவள் அறியா நேரத்தில் அவள் கைகளைப் பிடித்து இழுத்து அவளை கீழே தள்ளிவிட்டு அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்து அவன் போனை நோண்ட ஆரம்பித்தான்.

 

அவன் செயலில் அவளுக்குப் பத்திக் கொண்டு எழ, கீழே அமர்ந்தவாறே “ஹலோ… ஹலோ… என்ன பண்ண நீ இப்போ? நான் உட்கார்ந்துட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு வந்து இப்படி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க?” என சீற அவன் சாதாரணமாக அவளை கண் சிமிட்டாமல் அழுத்தமாக பார்த்து தன் காலை எடுத்து அவள் தோளில் போட்டுக் கொண்டு சோம்பல் முறித்தவன்

 

“என்னன்னு தெரியல நைட் சுவரால ஏறி குதிச்சேன். கால் ரொம்ப வலிக்குது. சோ… கொஞ்சம்… பிடிச்சு விடு.” என கூறி அவளை ஆழமாக பார்வையால் பார்த்து விழுங்கினான்.

 

அவன் காலைத் தன் தோளிலிருந்து தட்டி விட்டவள் “What??? How dare you to say this? நான் உன் காலை பிடிச்சு விடனுமா? ஹா? உன் மனசுல நீ என்ன நாட்டோட ப்ரசிடன்ட்டுன்னு நினைப்பா? ஆப்ட்ரோல் உனக்கு நான் கால் பிடிச்சு விடனுமா? இத உன் பொண்டாட்டி பல்லவிக்கிட்ட சொல்லு…” என அவள் எகிற அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

 

“ஏய்…” என்று பல்லைக் கடித்து அவள் பின்னந்தலையைப் பிடித்து இழுத்து தன் முகத்தின் அருகே அவளைக் கொண்டு வந்தவன்

 

“பல்லவிய… என் பொண்டாட்டின்னு சொன்ன… கொன்னுடுவேன்.” என்று கர்ச்சித்தவனின் கைக்குள் அவள் முடி சிக்கிக் கொள்ள வலியில் முகம் சுனக்கியவளைப் பார்த்து தன்னை நிதானப்படுத்தியவன்

 

“ஏய்… அடிக்கடி அமீனீஸியா ஸ்டேஜ்க்கு போய் வர போல? என்ன குளிர் விட்டுப் போச்சாடீ? மரியாதை…” என்றதும் கேட்டதும் அவள் முகம் அடுத்த நொடி மலர்ந்தது.

 

“கால தானே பிடிச்சு கொடுக்கணும் சேர்? சாட்சாத் கார்த்திகேயன் அதாவது முருகனோட அவதாரம்… உங்களுக்கு கால் பிடிச்சு கொடுக்காமலா? தாராளமா பிடிச்சு கொடுக்கேன் ஆதி சேர்.” என வெளியில் சிரித்தவாறே உள்ளே கருகிக் கொண்டாள்.

 

“கருங் குரங்கு… மெண்டல்… அரை லூசு… ஆளையும் மூஞ்சையும் பாரு… எருமை மாடு…” என அவனை அர்ச்சித்தவாறே எரிச்சலாக அவன் காலை வேண்டுமென்றே மிகவும் கோபமாக அழுத்திக் கொண்டிருந்தாள்.

 

“என் தலை எழுத்து. இவன் காலை எல்லாம் போய் பிடிச்சு விட வேண்டி இருக்கு. ச்சேய்… என்ன ஒரு கொடுமை.” என தனக்குள்ளே எரிந்து சாம்பலானாள்.

 

அவன் அந்தக் காலை இறக்கி விட்டு அடுத்த காலைத் தூக்கி மற்றைய தோளில் வைக்க அவள் அதையும் சோம்பேறி போல பிடித்துக் கொடுத்தாள். அடுத்து சில நொடிகளில் அவன் “யூவி.” என அழைத்ததில் திடுக்கிட்டு மகிழ்ந்தவள்

 

“என்ன சேர்… கால் பிடிச்சு விட்டது போதுமா?” என ஆர்வமாக கேட்டாள்.

 

“நோ… எனக்கு பயங்கரமா தலை வலிக்கிது. சோ… நீ என்னப் பண்ற…” என அவன் கூறும் போதே அவள் முகம் சுருங்கியது.

 

“நீ போய் ஒரு நல்ல ஜிஞ்ஜர் டீ போட்டு எடுத்துட்டு வந்து தர்ர.” என்றதும் அவள் வாடிய முகத்துடன்

 

“என்னது? ஜிஞ்ஜர் போட்ட டீயா?” எனக் கேட்டதும் “ஆம்…” என அவன் தலை அசைக்க

 

“யார்ரா இவன்? எனக்குன்னு வந்து வாய்க்குறானுங்களே. எங்க அம்மா கூட எனக்கு இதெல்லாம் செய்ய சொல்லல. ஆனால் இவன் என்னடான்னா நான் பண்ணாத வேலைய எல்லாம் பண்ண வெக்கிறானே.” என சலித்தவள் அவனைத் தாண்டி செல்லும் போது அவனுக்கு பழிப்பு செய்தவாறே உள் நுழைய

 

“இந்த பின்னாடி இருந்து பழிப்பு காட்டுற வேலை வெச்சிக்கிட்ட தலைய தலைகீழா நாட்டிடுவேன்டீ…” என்று அந்த இடமே அதிர கர்ச்சித்தான்.

 

“நான் இல்லை.” என்றவாறே சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

உள்ளே நுழைந்தவள் பொருட்கள் அனைத்தையும் தூக்கி வேகமாக போட்டு எறிந்து எரிச்சலோடு வேலை செய்ய அதில் கடுப்பான ஆதி “யூவி… செம்ம காண்டுல டீ போடுற போல இருக்கு?” என போனில் இருந்து பார்வையை உயர்த்திக் கேட்க

 

“இல்ல இல்ல… அப்படி எல்லாம் எதுவுமில்லை சேர். நான் ரொம்ப சந்தோஷமா… மனசாரதான் உங்களுக்கு சேவை செய்றேன் ஆதி சேர்.” என்று வார்த்தைகளை கடித்து சொன்னவள் தலையில் அடித்துக் கொண்டு

 

“இவனே ஒரு இஞ்சி தின்ன குரங்கு. இதுல இவனுக்கு இஞ்சி போட்டு டீ வேணுமா?” என்று கருகிக் கொண்டே டீயை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

 

பின்னால் வந்து நின்று நிலையில் கையை சாய்த்து நின்று அவளையே ரசித்திருந்தான் ஆதி. அவள் பின்னழகை ரசித்து கிறங்கிப் போய் தவித்தவன் வேகமாக கண்களை திசை திருப்பிக் கொண்டு போனைப் பார்த்தவாறே தலைகுனிந்து நின்று கெண்டான்.

 

யூவி தனது பையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்தவள் “ஆதி… என்னயா கால் பிடிச்சு விட சொல்லுவ? என்ன எவ்வளவு டோர்ச்சர் பண்ற? இன்னைக்கு இந்த மெடிசின் உன் கதைய கதம் பண்ண போகுது. ஏன்னா இது சாதாரணமான மெடிசின் இல்லடா. இது ஒரு வகையான ரஷ் உருவாக்குற மெடிசின். இத போட்டா நீ காலிடா. இன்னைக்கு இருக்கு உனக்கு. இந்த யூவி யாருன்னு உனக்கு காட்டுறேன்.” என ஒரு மாத்திரையை எடுத்து டீ கப்பினுள் போட்டுக் கலக்கியவள்

 

“உனக்கெல்லாம் ஒன்னு பத்தாது. இன்னும் நிறைய போடனும்.” என்று கூறி தன்னிடம் இருந்த அனைத்து மாத்திரைகளையும் அதனுள் போட்டுக் கலக்கினாள்.

 

கோபி கப்பை கையில் எடுத்துப் பார்த்தவள் “இத குடிச்சிட்டு உடம்பெல்லாம் அலேர்ஜிக் ஆகி நாக்கு தள்ளி சாவு.” என்றுவிட்டு

 

“எனக்கு எதுக்கு அக்கரை? உன் கோபிக்குள்ள சக்கரை.” என பாட்டுப் பாடியவாறே அவனிடம் நீட்டினாள். அதை வாங்கித் தன் கைகளில் ஏந்தியவன் வாயில் வைத்து குடிக்க எத்தனித்தான்.

 

“கம் ஒன்… அப்படிதான் குடிச்சிடு…” என அவனை ஏக்கமாக அவனை கண்காணிக்க

 

கப்பை வாயிலிருந்து எடுத்தவன் “இதுல விஷம் ஏதாவது கலந்த?” என்று கப்பை பார்த்தவாறே கேட்க அவள் கண்கள் வியப்பில் ஆழ்ந்தன.

 

“என்… என்ன? பொய்சனா?” எனக் கேட்டவளிடம்

 

“உன்னை நான் எப்

போவுமே நம்ப மாட்டேன்டி. இதுல விஷம் ஏதாவது கலந்தாலும் கலந்திருப்ப. சொந்த வீட்டையே ஏமாத்தினவ தானே நீ? சோ… முதல்ல இந்த டீய நீயே குடி.” என அவள் கைகளில் கப்பைத் திணித்தான். அவளுக்குத்தான் பேரிடி விழுந்தது.

 

 

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!