“ஏங்க அவனை சும்மாவே விடக் கூடாது எனக்கு வர கோபத்துக்கு கத்தி எடுத்து குத்து, குத்து, குத்து, குத்துன்னு குத்தி இருப்பேன்.
எங்க அப்பா ஊர்ல இருந்து வந்ததும் அவர் கிட்ட சொல்லி அவனை ஏதாவது செய்யணும் எனக்கு அவனோட முகம் அப்படியே ஞாபகம் இருக்கு எங்க அப்பாக்கு ஆள் அடையாளம் சொன்னா அவர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்.
ஊர்லயும் இப்படி ஒன்னும் முதல் நடந்துச்சு ஒரு சின்ன பொடி பையன் என்ன தின்னி மாடுன்னு பேசிட்டான் நான் சும்மா விடுவேனா அப்பா கிட்ட போய் சொல்லி கொடுத்து அவனுக்கு செம அடி வாங்கி கொடுத்துட்டேன்.
அதுக்கப்புறம் என்னை அவன் திரும்பிக் கூட பாக்குறது இல்ல..” என்று மெச்சுதலாகத் தனது அப்பாவைக் கூற,
‘அடிப்பாவி இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்..’ என்று துருவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,
“அய்யய்யோ இவ்வளவு பெரிய ரவுடியா நீங்க இந்த சம்பவத்தை சொல்லவே எனக்கு மனசுக்குள்ள பக்கு பக்குன்னு அடிக்குது..” என்று பொய்யாக நடிக்க,
அவன் நடிப்பதை பார்த்து உண்மை என நம்பியவள்,
“பார்த்தீர்களா உங்களுக்கு கேட்கவே இவ்ளோ பயமா இருக்கு நான் நேர்ல பார்த்தேன் அதுவும் தைரியமா..” என்று அவள் கூறியதும்,
அவள் அவ்வாறு தன்னை பெருமைப்படுத்தி கூறவும் மேலும், கீழும் அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தான்.
‘என்ன இவரு எதுவுமே பேசாமல் போறாரு நம்ம அப்பாவ பத்தி சொன்னதுல ரொம்ப பயந்துட்டாரு போல பார்க்கத்தான் எக்ஸசைஸ் எல்லாம் செய்து ஜிம் பாடி மாதிரி உடம்பு வளர்த்து வெச்சி இருக்காரு ஆனா மனசுல இன்னும் சின்ன பிள்ளை தான் இவரே இதுக்கு போய் பயப்படுறாரே..’ என்று மனதிற்குள் நினைத்தவள் அப்படியே சோபாவில் அமர்ந்து அறையை நோட்டமிட்டாள்.
அவள் அமர்ந்திருப்பதற்கு அருகில் ஒரு சின்ன பை இருந்தது. அதனை எடுத்து பிரித்துப் பார்க்க அதற்குள் கொப்பிகளும், புத்தகங்களும் ஒருவர் படிப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அந்த பைக்குள் இருந்தன.
கண்கள் பிரகாசிக்க ஒவ்வொன்றையும் எடுத்து வெளியில் வைத்து பார்த்து அகம் மகிழ்ந்தாள்.
அப்போது குளியல் அறைக்குள் இருந்து வெளியே வந்த துருவன் வள்ளியின் சந்தோசத்தை பார்த்து,
“என்ன இப்படி பார்க்கின்றாய் இதெல்லாம் உனக்குத் தான் வாங்கி வந்தேன் நேற்று நான் சொன்னது போல சரியா டியூஷன் வைக்கிற டைமுக்கு டான்னு வந்துவிட்டேன் அப்புறம் அதுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் நேரத்துக்கே வாங்கி வச்சிட்டேன் ஆனா நீ தான் இல்லையே அதனால அப்படியே கொண்டு வந்து வச்சுட்டேன்..” என்று துருவன் கூறியதும்,
“உண்மையாவா.. இதெல்லாம் எனக்குத்தானா..? புத்தகங்கள கையில தொடவும் அதனின் வாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனை முகர்ந்து பார்க்கவும் எனக்கு அவ்வளவு இஷ்டம் தெரியுமா இத்தனை காலமா நான் ஏங்கி தவிச்சதே இதுக்காகத்தான்..” என்று உணர்ச்சித்தரும்ப கூறினாள் வள்ளி.
“அதுக்குள்ள இன்னொரு திங்ஸும் இருக்கு உனக்குத்தான் எடுத்துப் பாரு..” என்று சொல்லிவிட்டு மெத்தையில் போல் சாய்ந்த படி தலையில் கை கொடுத்து படுத்திருந்தான் துருவன்.
என்ன இருக்கின்றது என்ற ஆவலில் பைக்குள் கைவிட்டு துலாவி பார்த்தவள் ஒரு வெள்ளை நிற பெட்டி அதனுள் இருக்க,
அதனை கையில் எடுத்துப் பார்த்துவிட்டு என்ன என்று புரியாமல் அதனை பிரிக்க அது புதுவகை ஸ்மார்ட் ஃபோனாக இருந்தது.
“இது எனக்கா..”
“உனக்குத்தான் அற்புதம்..”
“எனக்கு எதுக்குங்க எனக்கு தேவையில்லை நான் அம்மா அப்பாவோட பேசுறதுன்னா வீட்டைத்தான் பெரிய போன் இருக்கு அந்த போன்ல எடுத்து பேசிக்கொள்வேன் வேற யாரோட தான் நான் பேசுறது அதோட எனக்கு இந்த போனை எப்படி பாவிக்கிறதுன்னு தெரியாது..?” என்று கைகளை விரித்து உதட்டை பிதுக்கினாள்.
அவளது செய்கை பார்த்து சிரித்தவன்,
“இன்னைக்கு ஆபீஸ் போனதும் உன்னோட ஞாபகமாவே இருந்துச்சு அப்போ உனக்கு கால் பண்ணி பேசுவோம் என்று நினைத்தேன் வீட்டுக்கு கால் எடுத்தா அம்மா தான் தூக்குவாங்க எது வேணும்னாலும் உன்னோட நேரடியா பேச முடியாதே அப்பதான் இந்த ஐடியா வந்துச்சு உன்கிட்ட போனும் இல்ல தானே அதனால தான் எடுத்தேன்.
அப்புறம் ஈவினிங் வரும்போது உனக்கு ஏதாவது தேவையான பொருட்கள் ஏதாவது வேணுமான்னா வாங்கி வர கேக்கணும் நீயும் வெளியே போறதில்ல ஏதாவது சாப்பிடணும்னு விரும்புவா இல்லன்னா ஏதாவது திங்ஸ் வாங்க வேண்டுமென்று விரும்புவா அதனால இந்த போன் இருந்தா நாம ரெண்டு பேரும் மட்டும் பேசிக்கலாம் அதுக்காகத்தான் இதை வாங்கி தரேன்.
அதோட நீ இந்த போன்லயே நிறைய விஷயங்களை படித்துக் கொள்ளலாம் என்னிடம் டவுட்டு கேக்கணும்னு அவசியமே இல்லை நான் சில பாடங்களும் சொல்லித் தரேன் மீதி விடையங்களை நீ இதுலையே கத்துக்கலாம்.
சம் டைம் நாம் வேலையில் ரொம்ப பிசியா இருந்தேன்னா அப்போ உன்னோட படிப்பு வீணா போயிடும்ல்ல நீ எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டிய தேவை இல்ல தானே.
இதுலயே நான் சில வீடியோக்களை உனக்கு டவுன்லோட் பண்ணி தரேன் அதை பார்த்து படிச்சுக்கோ..” என்று துருவன் கூற,
“அப்படியா ஆமாங்க ஈவினிங் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிடணும்னு நினைச்சேன் அப்போ உங்களுக்கு சொல்லியிருந்தா நீங்க கொண்டு வந்து இருப்பீங்க என நாளைக்கு ஈவினிங் வரும்போது கேளுங்க நான் கட்டாயமா சொல்றேன் அம்மா சுட்டு வந்த பலகாரமும் முடிஞ்சு போச்சு..” என்று அவள் மீண்டும் உணவிற்கே வர,
‘எவ்வளவு பீலிங்கா நான் கதைக்கிறேன் இந்த மரமண்டைக்கி ஏதாவது புரியுதா எப்போ பார்த்தாலும் சாப்பாடு தான்..’ என்று மனதிற்குள் திட்டி விட்டு அவளை முறைத்துப் பார்க்க,
அவனது பார்வையின் அர்த்தத்தை புறக்கணித்தவள்,
“எனக்கு ஒரு சந்தேகம் நான் கேட்பேன் சொல்லுவீங்களா..” என்று அவள் கேட்க,
“என்ன பெருசா கேட்டிட போறே சாப்பாடு விஷயம் தானே..!” என்று அவன் வில்லங்கமாக பதில் கூற,
அதைக் கேட்டு பல்லைக் கடித்த படி ஓரக்கண்ணால் பார்த்து,
“இல்லைங்க நான் போனதும் அத்தை ரொம்ப பயந்துட்டாங்க என்னைப் பார்த்ததும் கட்டிப்புடிச்சு முத்தம் எல்லாம் கொடுத்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க அப்போ நீங்க எனக்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று பயப்படவில்லையா..?” என்று அவனிடமிருந்து எப்படியாவது இதற்கான பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அவளது வதனம் சடுதியில் மாறியது.
“இப்போ நீ என்ன சொல்ல வர அத்தை உன் மேல வச்சிருக்க பாசம் உங்களுக்கு என் மேல இல்லையா என்று கேட்க வாரியா..?
இல்லன்னா ஏன் நீங்க எனக்கு முத்தம் தரவில்லை என்று கேட்க வாரியா..?” என்று அவன் நேரடியாகவே விஷயத்திற்கு வர, என்ன செய்வதென்றே தெரியவில்லை வள்ளிக்கு,
‘என்ன இப்படி கேட்கின்றார்..?’ என்று அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
வதனம் உடனே வெட்கத்தில் சிவப்பு சாயத்தை பூசிக் கொண்டது. கண்கள் அங்கும் இங்கும் அலைபாயத் தொடங்கியது.
வெட்கம் தாங்க முடியாமல் நிலத்துக்குள் புதைந்து விடுவோமா என்று கூட தோன்றியது எங்கு சென்று ஒழிவது என்று தெரியாமல் தலையை குனிந்து கொண்டு சேலை முந்தானையை கைகளால் சுழட்டியபடி இருக்க,
பதில் எதுவும் கூறாமல் வெட்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும் வள்ளியைப் பார்த்ததும் மெதுவாக எழுந்து அவள் அருகில் வந்து மிகவும் நெருங்கியபடி நிற்க,
வள்ளி தலை குனிந்து நின்றவள் திடீரென துருவன் அருகில் வந்து நின்றதை பார்த்ததும் அதிர்ந்து பின்னே நகர்ந்தாள்.
அவள் காலடிகளை பின்னே எடுத்து வைக்க அவளது விழிகளை உற்று நோக்கியபடி துருவன் மிக அருகில் நெருங்கி வந்தான்.
இறுதியில் வள்ளியின் உடல் சுவற்றை ஒட்டி நிற்க இனி செல்வதற்கு வழி இல்லாமல் அவள் துருவனை நிமிர்ந்து பார்க்க,
அவனோ அவளது வதனத்தின் அருகில் குனிந்து இருவரின் உதடுகளும் உரச, வள்ளியின் மனதிற்கு மின்சாரம் பாய்ந்தது. அப்படியே உடல் அதிர்ந்து நிற்க,
“என்ன பதிலையே காணோம் முத்தம் வேணுமா..?” என்று துருவன் வள்ளியை சீண்ட,
அவளோ கண் இமைக்கும் நேரத்தில் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் வேகமாக ஓடிச் சென்று புகுந்து கொண்டாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த துருவனுக்கு மனதில் பேரானந்தம்.
மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல இருந்தது.
குளியல் அறைக்குள் நுழைந்தவள் தண்ணீரைத் திறந்து விட்டு தண்ணீருக்கு கீழே நின்றவளது சிந்தனைகள் அனைத்தும் துருவனைப் பற்றியே இருந்தது.
தன் மனம் அவனின் காலடியில் தொக்கி கிடப்பது அவளுக்கு விளங்கியது.
அவன் இன்று அவளுக்கு அலைபேசி வேண்டி கொடுத்ததற்கான விளக்கம் கூறியது அவளது மனதை உவகை கொள்ளச் செய்தது.
‘எனக்காக என்னைப் பற்றி சிந்தித்திருக்கின்றார் அதுவும் என் ஞாபகம் வரும்போதெல்லாம் என்னோடு பேச வேண்டுமாம் இதைக் கேட்கவே எப்படி இருக்கிறது அதோட எனக்கு தேவையானது அவர் வேண்டித் தர வேண்டும் என்றல்லவா ஆசைப்படுகிறார் என்ன எந்த குறையும் இல்லாம பாத்துக்கணும்னு விரும்புகிறார் என்ன நினைத்துக் கொண்டே வேலை பார்க்கிறாராம் அப்படின்னா என்ன அர்த்தம்..?’ என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக்கொண்டவள்,
குளித்து முடித்துவிட்டு,
‘இப்போ எப்படி நாம வெளியே போறது அவர நான் எப்படி நேருக்கு நேர் சந்திப்பேன் என்னால முடியாது எனக்கு வெட்க வெட்கமா வருது
என்ன வள்ளி இப்போதான் ஒரு பெரிய ரவுடி கும்பலையே சுத்த விட்டுட்டு வந்த அத்தனை அடியாட்களுக்கும் விளையாட்டு காட்டிட்டு வந்த நீ இந்த ஒரு ஆண்மகனைப் பார்த்து இப்படி பயப்படுறியே..! பயமெல்லாம் இல்ல..’ என்று மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உடையை மாற்றி விட்டு வெளியே தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள்.
சிந்தனை வயப்பட்டதில் நீண்ட நேரம் நீருக்கு அடியில் நின்றது அவளுக்கே தெரியவில்லை. சிந்தனையில் சிறிது நேரம் போக குளித்து முடித்து வெளியே வர நீண்ட நேரம் ஆகிவிட்டது அதனால் துருவன் அப்படியே கண் அய தூங்கிவிட்டான்.
அவன் தூங்கி விட்டான் என்றதும் நெஞ்சில் கை வைத்து பெரும் முச்சொன்றை விட்டு வெளியே வந்தவள்,
“அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு நாம போய் தூங்குவோம்..” என்று போய் சோபாவில் அப்படியே விழுந்து படுக்க அன்றைய நாள் என்னவோ ரவுடி கும்பலிடம் இருந்து தப்பி வருவதற்காக ஓடி வந்ததில் கால்கள், கைகள் எல்லாம் வேதனையை கொடுக்க அப்படியே அடித்துப் போட்டார் போல் உடனே தூங்கியும் விட்டாள்.
அவள் கண்ணயர்ந்ததும் மெல்ல கண் திறந்து பார்த்த துருவன்,
‘ராட்சசி எப்படி தூங்குறா பாரு முத்தம் வேணுமாம்ல முத்தம் இப்போ தர மாட்டேன் உன்ன ஒரு வழி பண்ணிட்டு தான் விடுவேன் பிளான் பண்ணியா கல்யாணம் பண்ணிக்கிறீங்க ஒரு உன்ன சுத்த விடுறேன்..’ என்று மனதிற்குள் அன்பாகத் திட்டியவன்,
அவள் நன்றாக உறங்கி விட்டாள் என்று அறிந்ததும் பால்கனி பக்கம் எழுந்து சென்று தனது அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பினை எடுத்தான்.
அலைபேசியை எடுத்து காதில் வைத்ததும் இவ்வளவு நேரம் துருவனின் முகத்தில் குடி கொண்டிருந்த உவகை உணர்ச்சிகள் அனைத்தும் துடைத்தெடுத்து அங்கு ரௌத்திரம் குடி கொண்டது.