முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32

3.9
(10)

அரண் 32

 

இருவரும் பேசியபடி வந்ததில் தங்களை மறந்து உணவு அருந்த வந்த ஹோட்டலைத் தாண்டிச் சென்று விட்டனர்.

அதன் பின்பே துருவனுக்கு தோன்றியது.

“அச்சச்சோ நில்லு அற்புதம்..”

“ஏங்க..?”

“பேசிப்பேசியே ஹோட்டல் தாண்டி வந்துடோம் போல..” என்று கூறிவிட்டு அவளை மீண்டும் அதே பாதையில் திரும்பி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

அதன் முகப்பைப் பார்த்ததுமே அற்புத வள்ளிக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.

அவ்வளவு அழகாக அந்த ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அங்கு பல மேசைகளும், கதிரைகளும் வட்டமாக போடப்பட்டிருந்தன.

அதில் ஒரு மேசையின் அருகே அற்புத வள்ளியை அழைத்துக் கொண்டு போய்  அவளை அமர வைத்து தானும் அருகில் அமர்ந்தான்.

நேரத்தை பார்க்க சரியாக 8:00 மணி எனக் காட்ட,

“என்னங்க எட்டு மணிக்கு யாரோ வாரதுன்னு சொன்னீங்க சரியான டைமுக்கு தானே நாங்க வந்து இருக்கோம் அப்போ இன்னும் அவங்கள காணலையே..!” என்று வள்ளி கூற,

“அவங்க எட்டு அரைக்கு தான் வருவாங்க நாம அதுக்கு முன்னுக்கு கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்பமே…”

“ஏங்க நாம ஆறுதலா கிளம்பி வந்திருக்கலாமே அவசரப்படுத்திக்கிட்டே இருந்தீங்க..”

“உன்ன  வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று எனக்கு ஆசை அதுதான் உள்ளையே எவ்வளவு நேரம் இருப்ப இந்த இடம் உனக்கு பிடிச்சிருக்கா.. எப்படியும் நாளைக்கு லீவு சொல்லிட்டு உன்னை நான் வெளியே கூட்டிட்டு போற பிளான்ல தான் இருக்கேன்..” என்று துருவன் கூறியதும்,

அற்புத வள்ளிக்கு அப்படி ஒரு சந்தோஷம்,

“உண்மையாவாங்க..?”

“ம்ம்.. காலையில நேரத்துக்கே போய் சின்ன வேலைகளை முடிச்சுட்டு ஒரு பத்து மணி போல நான் வந்துருவேன் நீ அதுக்குள்ள ரெடியாகிடு ஓகேயா..?”

“ஐயா ஜாலி..” என்று கைதட்டி சிரித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் வள்ளி.

அவள் சிரிக்கவும் அருகில் இருந்த மேசையின் அருகில் இருந்த இருவர் திரும்பி அவர்களைப் பார்த்து சிரித்தனர்.

அதனைக் கவனித்த துருவன்,

“அற்புதம் இங்க எல்லாம் அப்படி பண்ண கூடாது அற்புதம் நீ இப்படி பிஹேவ் பண்ணினா உன்ன எல்லாரும் வித்தியாசமா பார்ப்பாங்க அதோட அவங்களுக்கு அது இடையூறா போய்விடும்

இங்கே எல்லாம் மெதுவா தான் பேசணும் மத்தவங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கிற மாதிரி நாம நடந்துக்க கூடாது அப்படி செஞ்சா  போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவாங்க..”

“என்னங்க இப்படி சொல்றீங்க இதுக்கெல்லாம் போய் போலீசுக்கு போவாங்களா..? நான் அப்படி இனிமே பண்ண மாட்டேன் நீங்க வெளியில கூட்டிட்டு போறன்னு சொன்னதும் சந்தோஷத்துல வீடுன்னு நினைச்சு அப்படி நடந்துகிட்டேன்..” என்று பயத்துடன் கூறியவள் அங்கும் இங்கும் சுற்றி யாராவது தன்னை கவனிக்கின்றனரா என்று திரும்பிப் பார்த்தாள்.

அப்படியே அந்த இடத்தினை கண்களால் அளவெடுத்த வள்ளி, பல வண்ண நிறங்களில் மின் குமிழ்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

ஆங்கில மொழியில் பாடல்கள் மெல்லிசையாக இசைத்துக் கொண்டிருந்தன.

ஆங்காங்கே ஜோடி ஜோடியாக இருந்து சிலர் உணவருந்த சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு ஜோடி இணைந்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்டிருக்க, வள்ளிக்கு கூச்சமாக போய்விட்டது.

“என்னங்க இது பொது இடத்துல இப்படியா நடந்துக்குவாங்க சீச்சீ” என்று அவள் சடார் என்று திரும்பிக் கொள்ள,

துருவன் அந்த ஜோடியை பார்த்து விட்டு சிறு புன்னகையுடன்,

“இங்கே இதெல்லாம் சகஜம் அற்புதம் இதை யாருமே பெரிது படுத்த மாட்டார்கள் பார் யாராவது கவனிக்கிறார்களா என்று சத்தம் இல்லாமல் முத்தம் கொடுத்தால் இங்கு யாருக்கும் எந்த இடையூறும் இல்லை.. நாம வேணும்னா செய்து பார்ப்போமா..?” என்று துருவன் வள்ளியை தோளோடு அணைக்க,

“இல்லை இல்லை..” என்று வள்ளி துருவனை விட்டு நகர்ந்து இருந்தாள்.

மீண்டும் கண்களை சுழட்டி ஒவ்வொன்றையும் உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்க துருவன் அவளது கவனத்தை சிதைக்கும் வண்ணம்,

“அற்புதம் அப்படி என்ன பாக்குற..?”

“இல்லங்க இந்த லைட் செட்டிங் எல்லாம் நல்லா இருக்கு..”

“இங்க இதுதான் ஸ்பெஷல் எப்பவுமே ஒரே மாதிரி டெக்கரேட் பண்ண மாட்டாங்க நாளைக்கு வந்தா இதைவிட டிஃபரண்டா லைட் செட்டிங் பண்ணி இருப்பாங்க அதுதான் இவங்களோட ஸ்பெஷல்

அதோட இங்க சாப்பாடும் நல்ல டேஸ்ட்டா இருக்கும் நான் இங்கே இருந்த நாட்கள்ல இங்க வந்து சாப்பிட்டது தான் அதிகம் இப்போ உனக்கு பசிக்குதா..?”

“இல்லைங்க உங்களோட கெஸ்ட் வரட்டும் நான் வெயிட் பண்றேன்..” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போது அவளது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

உடனே அதனை அதில் ஒளிர்ந்த புகைப்படத்தை பார்த்தவள் துருவனிடம்,

“ஒரு ஐந்து நிமிடம் போன் பேசிட்டு வாரேன்..” என்று எழுந்து சென்று விட்டாள்.

துருவனும் அவள் செல்வதை பார்த்து ‘யாராயிருக்கும் அப்படி நம்மளுக்கு தெரியாம ரகசியமா பேசுவதற்கு அவ்வளவு தூரம் போறாள் வரட்டும் அது யாருன்னு பார்த்திடுவோம்..” என்று அவளுக்காக காத்திருந்தவன் பத்து நிமிடங்கள் ஆகியும் வள்ளி வராமல் போக தனது தொலைபேசியை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அவனது கையடக்கத் தொலைபேசியில்  அவனுக்கு வந்திருந்த மின்னஞ்சல்களை சோதித்துக் கொண்டிருக்க, யாரோ அருகில் வந்து அமர, அற்புத வள்ளியென்று நினைத்து சிரித்தபடி தனது அலைபேசியை வைத்துவிட்டு,

“வந்துட்டியா..” என்று சிரித்துக் கொண்டே நிமிர்ந்து பார்க்க,

அவனது கண்கள் ஒரு நிமிடம் விரிந்து சுருங்கின.

அப்படியே முகத்தில் இருந்த மகிழ்ச்சி துடைத்தெரிந்தது போல முகத்தில் உள்ள புன்னகை மறைந்து அங்கு சற்று கடமை குடி கொண்டது.

அப்படி யாராக இருக்கும் ஏன் துருவனின் பிரகாசமான  முகத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

அது வேறு யாருமில்லை ரேகா தான்.

“என்ன துருவன் என்ன பார்த்ததும் சொக் ஆயிட்டீங்களா அப்படியே பார்த்துட்டு இருக்கிங்க என்ன ரொம்ப நேரமா எதிர்பார்த்துட்டு இருக்கீங்க போல சொன்ன மாதிரி டைமுக்கு வரல கொஞ்சம் லேட் ஆயிட்டு சாரி…”  என்று ரேகா பேசிக் கொண்டிருக்க துருவனின் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தன.

தூரத்தில் அற்புத வள்ளி அலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்க அவளை எவ்வாறு அழைப்பது என புரியாமல் அவள் பேசிவிட்டு ஆறுதலாக வரட்டும் என்று நினைத்தவன் பின்பு தான் ரேகாவின் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.

“எப்பவுமே நான் பஞ்சுவாலிட்டியா தான் நடந்துப்பேன்னு உனக்கு தெரியாதா. நீ எப்பவுமே லேட்டு தானே சுட்டு போட்டாலும் உனக்கு பஞ்சுவாலிட்டி வராதுன்னு எனக்கு தெரியும்..” என்று அழுத்தி கூற அவளது புன்னகை எங்கோ பறந்தோடியது.

இருந்தும் வலுக்கட்டாயமாக மீண்டும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு,

“இருக்கட்டும் துருவன் லேட்டா வர்றதும் ஒரு சந்தோசம் தான் நான் கூப்பிட்டதுக்கு நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் ஏதாவது ஆர்டர் பண்ணிங்களா..” என்று ரேகா கேட்க,

“இல்ல..” என்று கூறிக் கொண்டிருக்கும்போது இருவருக்கும் அருகில் குளிர்பானம் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

துருவன் புருவம் சுருக்கியபடி,

“நான் ஆர்டர் பண்ணலையே..!”

“நான் தான் துருவன் ஆர்டர் பண்ணினான் வரும்போது ஆர்டர் கொடுத்துட்டு தான் வந்தேன். ஃபர்ஸ்ட் இந்த கூலிங்கா இந்த ஜூஸ குடியுங்க அப்புறம் சாப்பாட ஆர்டர் பண்ணுவோம்..”

“ஏன் ரேகா கூல்டிரிங்ஸ் எல்லாம் சாப்பிட தானே போறோம் இதெல்லாம் தேவையில்லை..”

“இல்லை துருவன் நான் ஆர்டர் பண்ணிட்டேன் கொஞ்சம் குடிங்க இந்த ட்ரிங்க்ஸ் இங்க ரொம்ப ஃபேமஸ் இது ரொம்ப டேஸ்டா இருக்கும் குடியுங்க ப்ளீஸ் எனக்காக.. அப்புறம் பிசினஸ் எல்லாம் எப்படி போகுது வந்த வேலை முடிஞ்சிருச்சா..”

“என்ன விட்டா இந்த ட்ரிங்க்ஸ்க்கு நீயே விளம்பரம் பண்ணுவ போல 75% வேலையை முடிச்சிட்டேன் இன்னும் 25% தான் மீதம் இருக்கு அது இன்னும் 2 வீக்ஸ்ல முடிஞ்சிடும்..” என்று அவன் கூற,

“ஓகே ஓகே கூல் ட்ரிங்ஸ்ச குடிங்க..” என்று ரேகா கூற,

‘என்ன இவள் கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதிலேயே கண்ணா இருக்கிறாள்..’ என்று சிந்தித்தபடி,

“என்ன ரேகா ஏன் என்ன போஸ்ட் பண்ணுற நான் குடிப்பேன் தானே..”

“இல்ல துருவன் நீங்க அதை குடிச்சிட்டீங்கன்னா அடுத்தத ஆர்டர் பண்ணலாம்னு..” என்று ரேகா சிரித்துக் கொண்டு கூற,

துருவன் சந்தேகமாக அவளை மேலும் கீழும் பார்த்தான்.

ரேகாவிற்கு புரிந்து விட்டது துருவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்று அதனை சமாளிக்க,

“அப்புறம் உங்களோட திருமண வாழ்க்கை எப்படி போகுது..?”

“அது ரொம்ப ஜாலியா தான் போகுது..” என்று அவன் கூறியபடி அற்புத வள்ளியைத் தேட,

அவளோ பேசிப் பேசி தொலைதூரம் சென்று இருந்தாள்.

அலைபேசியை எடுத்து அவளுக்கு  அழைப்பு எடுத்தால் அவள் பேசி முடித்தால் தானே அவனது அழைப்பை பார்ப்பதற்கு அப்படி என்னதான் பேசுகிறாளோ தெரியவில்லை என்று சிறு கோபம் கூட துருவனுக்கு முளைத்தது.

ரேகா துருவன் எங்கோ பார்ப்பதை உணர்ந்து,

“என்ன துருவன் யாரையாவது தேடுறீங்களா..?”

‘இவள் வேற நேரம் காலம் புரியாம தொண தொணன்னு பேசிகிட்டு..& என்று மனதில் அவளை பேசிவிட்டு அந்த குளிர்பானத்தை எடுத்து இரண்டு மிடார் வாய்க்குள் திணித்தான்.

அவன் அதனைக் குடித்த பின்பு ரேகாவிற்கு முகம் சிரிப்பில் மூழ்கியது. அப்படியே முகம் சிறிது கடுமையை தத்தெடுத்துக் கொண்டது.

“உங்களோட ஆசை மனைவி இப்போ என்ன பண்ணுறாள்..?” என்று சற்று கடுமையாக மரியாதை இன்றி வள்ளியை அவள் பேச,

துருவனுக்கு மூக்குக்கு மேல் கோபம் துளிர்விட்டது.

“ஏன் என்னோட வைஃப் பத்தி நீ பேசுற உனக்கு அது தேவையில்லாத விஷயம்..” என்று அவனும் பதிலுக்கு பேசினான்.

“என்ன தேவையில்லாத விஷயம் என்ன கல்யாணம் கட்டிக்கிறேன் என்று சொல்லிட்டு கடைசியா கல்யாணம் அன்று அவளோடு படுக்கையை பங்கு போட்டவன் தானே நீ  எல்லாம் யோக்கியன் மாதிரி பேசுற..”

“ஏய் என்னடி வாய் நீளுது இதுக்கு நான் உனக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை என்னோட பர்சனல் விஷயத்துல நீ மூக்க நுழைகிறத இத்தோட நிறுத்திக்கோ..”

“யாரோ ஒரு பட்டிக்காட கட்டிட்டு பெரிய பந்தா காட்டுற அவ ஏதோ என்னை விட கொஞ்சம் அழகா இருக்கா அவ்வளவுதான் வேற என்னத்த என்னிடம் இல்லாதத அவளிடம் பார்த்த..”

“ரேகா மைண்ட் யுவர் வேர்ட்ஸ் அவ என்னோட வைஃப் இதுக்கு மேல இப்படி சில்லியா பேசின உன்னோட கண்ணம் பழுக்கும் ஜாக்கிரதை..”

“ஒரு வருஷத்துல டைவர்ஸ் பண்றேன்னு சொன்னவளை என்ன தூக்கி வச்சு கொண்டாடுற..?”

“ஆமாண்டி நான் அப்படித்தான் சொன்னேன் அவளை டைவர்ஸ் பண்றதும் பண்ணாததும் என்னோட இஷ்டம் அதை நீ கேட்க தேவையில்லை உன்னோட லிமிட்ட நீ தாண்டுற நீ கூப்பிட்டேன்டா காரணத்துக்காக தான் நான் சாப்பிட வந்தேன் உன்னோட பேச்சுவார்த்த எனக்கு பிடிக்கல

பிறகு பொது இடத்தில் ஒரு பொண்ணு மேல கை வைத்துன்னு எனக்கு கெட்ட பேரு வேணாம் இப்படி கூப்பிட்டு வச்சு என்னோட நீ எப்படி நடந்து கொள்வது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல உன்னோட பிஹேவியரே இதுதான்

உன்னோட பிஹேவியற்காகத்தான் நான் கடைசி நிமிஷம் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு தடுமாறினான் தங்க் காட் என்ன கடவுள் காப்பாத்திட்டாரு..” என்று துருவன் கூறிக் கொண்டிருக்கும் போதே தலை சுற்றுவது போல் இருந்தது.

தலையை உழுப்பிவிட்டு,

“உன்னோட பார்ட்டியும் நீயும் உன்ன மாதிரி ஒரு கேவலமான பொண்ண நான் இந்த உலகத்துல பார்த்ததே இல்லை இனிமேல் என் கண் முன்னுக்கு வந்துவிடாதே அப்புறம் உன்னோட உசுருக்கு  நான் கேரண்டி இல்லை..” என்று அவன் கூறிக்கொண்டு எழ பதற்றத்துடன் ரேகா அவளது கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவள், நிமிர்ந்து எகத்தாளமாக துருவனைப் பார்த்து சிரித்தாள்.

எழுந்த துருவன் அவளது சிரிப்பை பார்த்து,

“ஏய் என்னடி என் சிரிப்பு..?” என்று வார்த்தைகளை கடித்து துப்ப,

“உன்னாலே என் ம**** கூட பு**** முடியாதுடா..” என்று அவள் கூறியதும் கோபம் தலைக்கேற அவள் அருகே வந்து அவளுக்கு அறைவதற்காக கையை தூக்கியவன்  அந்தோ பரிதாபம் அப்படியே வேரோடு மரம் சரிவது போல சரிந்து  மேசை மீது விழுந்தான்.

அவனது கண்கள் அவனை அறியாமல் மூடின.

ரேகாவோ பெரும் வெற்றி சிரிப்புடன் தனது தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு எடுத்து,

“மிஷன் சக்சஸ் சீக்கிரமா வா…” என்று அழைப்பை துண்டித்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 3.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!