அரண் 41
ரேகாவின் கன்னத்தில் விழுந்த அறையில் அந்த இடமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போனது. துருவன் உட்பட அனைவரும் கண்கள் இமைக்கா வண்ணம் வள்ளியின் கோபத் தாண்டவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த வள்ளி அவர்களின் அதிர்ச்சியை மேலும் கூட்டும் வண்ணம் அருகில் இருந்த நீளமான தடி ஒன்றை எடுத்து சுழட்ட ஆரம்பித்தாள்.
அவள் பாய்ந்து கையை விட்டுப் போனதும் திரும்பவும் அவளை தனது கன் முனையில் வைத்திருக்காமல் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் அவளைக் கைநழுவி விட்டதால் ஏற்பட்ட விபரீதத்தை பார்த்த ருத்ரப்பிரசாத்திற்கு தனது மூடத்தனத்தை எண்ணி பெரும் கோபம் எழுந்தது.
தடியை சுற்றிய படியே வள்ளி,
“எங்க ஊர்ல நான் சிலம்பாட்டத்தில் நான் கோல்ட் மெடலுடா நெஞ்சுல தைரியம் இருந்தா கிட்ட வாங்கடா பார்ப்போம்..” என்று வள்ளி சவால் விட உண்மையிலேயே சுற்றி இருந்த அனைத்து அடியாட்களுடன் ருத்ர பிரசாத்தும் ரேகாவும் அதிர்ந்து நின்றனர்.
ஏன் துருவன் கூட வள்ளியின் இப்படி ஒரு அவதாரத்தை கண்டதும் இல்லை எதிர்பார்க்கவும் இல்லை. அவளது துணிச்சலான முகத்தைப் பார்த்ததும் அவனுக்குள் அவனை அறியாமல் ஒரு பெருமிதம் உண்டானது.
நீண்ட நாட்கள் சிலம்பாட்ட வித்தையில் கை தேர்ந்தவள் போல தடியை நுனி விரலால் சுழற்றி எடுத்து அனைவரையும் பதம் பார்க்க காத்திருந்தாள் வள்ளி.
அவளது தடி வேட்டையாடும் எண்ணம் கொண்டு சுழன்று கொண்டே இருந்தது. முதல் வேலையாக சுற்றி இருந்தவர்கள் கன்னைத் தூக்கி வள்ளிக்கு நேராகப் பிடிக்க ஒரே சுழற்றுவையில் அனைவரின் கையில் இருக்கும் கன்னையும் அந்த தடி நொடிப்பொழுதில் கண்ணுக்கு எட்டாத இடத்தில் தூக்கி எறிந்தது.
ருத்ர பிரசாத்துக்கு அனைத்தும் சிதம்பரச் சக்கரத்தில் பேய் பார்ப்பது போல இருந்தது. அப்படித்தான் அவனும் வாயைப் பிளந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
நிலைமை கையை மீறி செல்வது அவன் கண்கூடாக விளங்கினாலும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று புரியாமல் கைகட்டு போட்டவன் போல அப்படியே அசைவற்று நின்றிருந்தான்.
வள்ளியின் தடி அடுத்ததாக சுற்றியுள்ள அடியாட்கள் ஒவ்வொருவரையும் பதம் பார்க்கத் தொடங்கியது. வள்ளியின் அருகில் அவளை நெருங்க வருபவர்கள் அனைவரையும் அது பெரும் அரணாக இருந்து காப்பாற்றியது.
வள்ளி தடியை மிகவும் வேகமாகவும், லாவகமாகவும் சுழற்றிய சுழற்றலிலும் வீசிய வீச்சிலும் அனைவரது உடலிலும் அடியால் உடலெங்கும் முத்திரை பதிக்கப்பட்டன. அவ்வளவு வேகமாகவும், அழுத்தமாகவும் வள்ளி என்னை ஏது என்று பார்க்காமல் கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது தடயங்களை பதிக்கத் தொடங்கினாள். அனைவரும் முன்பும் அவள் பெரும் வீரப்பெண்ணாகவே தோற்றமளித்தாள்.
துருவனோ வள்ளியின் இத்தகைய செயலைப் பார்த்து மெய்மயங்கி அப்படியே இருக்க ரேகாவோ நிலைமையை சுதாரித்துக் கொண்டு தனது நரி மூளையை பயன்படுத்தி உடனே ஒரு திட்டம் தீட்டினாள்.
அருகில் நின்ற ருத்ர பிரசாத்தின் சார்ட் பாக்கெட்டுக்குள் இருந்து அவனது பேனாவை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் துருவனின் கழுத்தில் அந்தப் பேனாவின் கூர்மையான முனையால் அழுத்தமாகக் குத்தினாள்.
தடியை சுழற்றி அனைவரையும் பந்தாடிக் கொண்டிருந்த வள்ளி இதனை கவனிக்கவில்லை. வள்ளியை நெருங்க வரும் அடியாட்களை தடியால் தட்டி எறிந்து கொண்டிருந்தவளைப் பார்த்த ரேகா உடனே,
“அடியேய் பட்டிக்காடு இங்க பாருடி உன் புருஷன் நிலைமைய..” என்று உறுமினாள்.
அவளது குரல் வந்த திசையை உடலில் சிறு பதற்றத்துடன் திரும்பிப் பார்த்த வள்ளிக்கு மீண்டும் தன்னை அறியாமல் தொலைவில் சென்ற பயம் மனதில் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
ருத்ர பிரசாத் தங்கையின் விவேகமான செயலைக் கண்டு சிரித்த வண்ணம்,
“இப்போதான் என் தங்கச்சின்னு நீ நிருபிச்சி இருக்க வெல்டன் ரேகா குட் ஜாப்..” என்று சிலாகித்துக் கொண்டான்.
“இந்தப் பட்டிக்காடு காட்டுற குரங்கு வித்தைய எல்லாம் பார்த்து நான் பயப்படுவானா அண்ணா இவள் எல்லாம் ஆடு மாடு மேய்க்கத் தான் லாய்க்கு..” என்று ரேகா கிண்டலாகக் கூற வள்ளி அவளை கண்ணாலேயே எரிக்கும் பார்வை பார்த்து வைத்தாள்.
“என்னடி முறைக்கிற உன்னோட வித்தை எல்லாம் இங்கே என்கிட்ட செல்லாது மரியாதையா தடியை கீழ போடு இல்லன்னா உன்னோட புருஷன் உயிர் இந்த பேனாவாலேயே போகும்..” என்று சொல்லி பேனாவின் கூர்மையான முனையினால் மீண்டும் துருவனின் கழுத்தை அழுத்தினாள்.
அவள் அழுத்தியதில் கழுத்திலிருந்து சிறிதாக குருதி வெளியேறியது. அதனைப் பார்த்து துடிதுடித்துப் போன வள்ளி தடியை தூர சுழற்றித் தூக்கி எறிந்தாள்.
அவள் தூக்கி எறிந்ததும் அங்கிருந்து அடி வாங்கிய ஒவ்வொருத்தரும் மெதுவாக எழுந்து,
“அய்யோ… அம்மா..” என்று தங்களது உடலில் அடி விழுந்த இடத்தினை தொட்டுத் தொட்டு பார்த்து வேதனை தாங்க முடியாமல் தவித்தனர்.
அவர்களின் நிலைமையை பார்த்த ருத்ர பிரசாத்திற்கு அடங்காத கோபம் எழுந்தது.
“எருமை மாடுகளா உங்களுக்கு தின்னப் போட்டதுக்கு நாலு நாய்க்கு எலும்புத் துண்ட போட்டு இருந்தா இந்நேரம் சொன்ன வேலையே சரியா செய்து தன்னோட நன்றியைக் காட்டி இருக்கும் ஒன்றுக்கும் உதவாத உங்கள வச்சு நான் எப்படித்தான் இந்த காரியத்தை முடிக்க போறேன்னு தெரியல போங்கடா போய் அவளை புடிங்கடா..” என்று கர்ச்சித்தான்.
அவனது பேச்சினை கேட்டு உடனே அனைவரும் எழுந்து போய் வள்ளியின் இரு கைகளையும் பிடித்து அவளை எங்கும் அசைய விடாமல் நிறுத்தினர்.
துருவனது கழுத்தில் இருந்த பேனா முனையை எடுத்த ரேகா துருவனின் கன்னத்தில் தனது கன்னத்தை வைத்து உரசியபடி,
“என்ன டார்லிங் வலிக்குதா கொஞ்சம் பொறுத்துக்க இதைவிட பெரிய வலி உனக்காக காத்திருக்கு கவலைப்படாத அந்த வலி கொஞ்ச நேரம் தான் அதுக்கப்புறம் அப்படியே நீ சொர்க்கத்துக்கு பறந்து போயிடுவ..” என்று கைகளால் பறப்பது போல் செய்கை காட்டினாள்.
அவளது தீண்டலினால் உடம்பில் தீ பட்டது போல உணர்ந்தவன் உடனே தலையை திருப்பி பற்களைக் கடித்துக் கொண்டு,
“பிளடி*******…” என கெட்ட வார்த்தைகளால் ரேகாவை அர்ச்சித்தான்.
தன்னவனை இன்னொருத்தி தீண்டுவதைக் கூட தாங்க முடியாத வள்ளி,
“நீ எல்லாம் ஒரு பொம்பளையா ச்சீ..” என்று எச்சிலை காரி உமிழ்ந்தாள்.
அவளது இத்தகைய எதிர்பாராத செயலை ஜீரணிக்க முடியாத ரேகா,
“ஆமா நான் பொம்பளை இல்ல ஆனா நீ பொம்பளையா இல்லையான்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னுக்கு நீ செய்த வேலைய பார்க்க எனக்கு சந்தேகமா தான் இருந்துச்சு கொஞ்சம் செக் பண்ணி பார்ப்போமா..?” என்று அவள் நெருங்கி வர வள்ளி அடியாட்களின் பிடியிலிருந்து தனது கையை உருவ முயற்சி செய்தாள்.
ஆனால் அது அவளால் முடியாமல் போனது. இரண்டு புறமும் மூன்று மூன்று பேர் அவளது கையை இறுக்கமாகப் பிடித்திருந்தனர்.
அடிவாங்கிய அவ்வளவு பேருக்கும் வள்ளியின் மீது மிகுந்த பயம். மீண்டும் கையை விட்டு விட்டால் தடியைச் சுழற்றி தங்களை பதம் பார்த்து விடுவாள் என்று அதனால் கையை மிகவும் இறுக்கமாகவே பிடித்திருந்தனர்.
அவளால் அசையவே முடியவில்லை இருந்தும் முயற்சி செய்து ரேகா நெருங்க இரண்டு அடி பின்னே எடுத்து வைக்க உடனே இரண்டு எட்டில் வள்ளியின் சேலை தலைப்பைப் பிடித்து,
“செக் பண்ணுவோமா…?” என்று இழுக்க அவளது உடல் அழகை வாகாக மறைத்திருந்த அங்கவஸ்திரமான சேலை அப்படியே ரேகாவின் கைக்குத் தாவியது.
இதனைப் பார்த்ததும் ருத்ர பிரசாத் கண்ணசைக்க வள்ளியைப் பிடித்திருந்த அடியாட்கள் அவளது கையை விடுவித்தனர்.
உடனே ஒரு கையால் தனது மார்பை மூடிக்கொண்டு சேலை தலைப்பை மறு கையால் பிடித்தபடி,
“என்னை விடு ரேகா நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை என்ன விடு ரேகா..” என்று கோபமாக வள்ளியிடமிருந்து வந்த குரல் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கெஞ்சலாக மாறியது.
வள்ளியை சூழ்ந்து இருந்த அனைத்து ஆண்களின் கண்களும் அவளை மோகப் பார்வையால் மொய்த்தன.
இவை அனைத்தும் பார்த்துக கொண்டிருந்த துருவனுக்கு அடக்க முடியாத கோபம் எழுந்து கை, கால்களில் நரம்புகள் புடைத்து முறுக்கேறியது.
தனது மனைவியின் மானம் இந்தக் கயவர்கள் முன் அம்பலமாவதைக் கண்கொண்டு பார்க்க முடியாது துருவன் அப்படியே கதிரையுடன் எழுந்து பின் சென்று பின்னிருந்த சுவற்றில் வேகமாக மோதினான்.
மோதிய வேகத்தில் அந்த பழைய கதிரை உடைந்து தெறித்து விழுந்தது.
கயிற்றினால் கட்டிய கட்டுக்களை கழற்றி எஎடுத்தவன் ஒரே பாய்ச்சலில் ரேகாவின் கன்னத்தில் அறைந்திருந்தான்.
அவன் அறைந்த வேகத்தில் அப்படியே ரேகா நிலத்தில் விழுந்தவள் அப்படியே மயங்கியும் போனாள்.