அரண் 44
இவ்வளவு நேரமும் சுவாரசியமாக தனது எண்ணங்களுடன் நடந்த விடயங்கள் ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டிருக்கும் போது இடையில் வைதேகி தயங்கி நிற்க துருவனின் சிந்தனைகள் எங்கெங்கோ தறி கெட்டுச் சென்றன. அதற்கு தடா போட்ட வண்ணம்,
“என்னம்மா அதுக்கப்புறம் என்ன ஆச்சு..?” என்று தனது தாயிடம் வினவ,
“அதுக்கு அப்புறம் என்னை அறியாமலேயே வள்ளியை எப்போ பார்த்தேனோ அப்பவே அவள் மேல அளவில்லாத அன்பு வந்துட்டு அதனால மாசத்துக்கு ஒரு தடவை நம்மட குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு வருவேன் அப்போ வள்ளிய ஒவ்வொரு முறையும் சந்திப்பேன்.
எனக்கும் அவள ரொம்ப பிடிக்கும் அதே போல அதே பாசத்தோட வள்ளியும் என் உடன் நெருங்கி பழகத் தொடங்கினாள் இந்த விஷயம் அவங்க அப்பாக்கு தெரியவே தெரியாது
அப்படி ஒரு நாள் நான் அவளை சந்திச்சிட்டு திரும்பும் போது கோயில் குளத்தடியில் மயங்கி விழுந்துட்டேன் உடனே அவ தான் பக்கத்துல இருக்க வைத்தியசாலையில் என்னை சேர்த்தாள் சேர்த்ததும் எனக்கு பலவிதமான ரத்த பரிசோதனைகள் செஞ்சாங்க அதுல தான் எனக்கு பிளட் கேன்சர் இருக்கிறதே தெரிய வந்துச்சு
அதுக்கப்புறம் அது பத்தின விஷயங்களை அவள் டாக்டர் கிட்ட கேட்டு எனக்காக டாக்டரிடம் பேசி மேலதிக பரிசோதனை மற்றும் ட்ரீட்மென்ட்க்கு உதவி செய்தாள்.
எனக்கு உடம்பில் இப்படி ஒரு நோய் இருக்குன்னு தெரிஞ்சதும் பாவம் ரொம்ப கலங்கி போயிட்டாள் அவளுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் நிற்கவே இல்லை அதற்கு அப்புறம் டாக்டர் ஆறுதல் கூறவும் தான் அவள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு என்னையும் நல்லா பார்த்துக்கிட்டா
அதுபோல டாக்டர் சொன்ன டிரீட்மென்ட் எல்லாம் நான் செய்ய தொடங்கினேன் அந்த ட்ரீட்மென்ட் ஒவ்வொன்றும் செய்ய செய்ய என்னோட உடம்பு கொஞ்சம் கொஞ்சம் பழைய நிலைமைக்கு திரும்பிச்சி அதுக்கப்புறம் தான் நீ அந்த ரேகாவ கொண்டு வந்து இடையில புகுத்தின
அதுதான் என்னால என்ன செய்ற என்று தெரியவில்லை அப்போதான் உடனே முதல் நாள் வெளியே குலதெய்வத்துக்கு போயிட்டு வரேன் என்று கிளம்பினான் அப்போ நேரா போய் வள்ளியைத் தான் சந்திச்சு பேசினேன்
பேசின போது என்னோட மனசுல இருக்க விஷயத்தை நேரடியாகவே சொன்னேன் வள்ளி எனக்கு உன்னை என்னோட மருமகளா ஆக்கிக்கத்தான் விருப்பம் அந்த எண்ணம் என் மனசுல உன்ன நான் எப்போ முதன் முதலில் பார்த்தனோ அப்பவே என் மனசுல அது ஆழமா பதிஞ்சிட்டு
ஆனா என் பையன் வேறொரு பொண்ண திருமணம் செஞ்சுக்க போறேன்னு கூட்டி வந்து காட்டுறான் எனக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்கல ஆனால் அவனுக்கும் புடிச்ச மாதிரி எனக்கு தெரியல
அவன் ஏதோ பிசினஸ் டீலிங் அது இதுன்னு சொல்லி பேசுறான் இது என்ன கல்யாணமா இல்லாட்டி வேற எதுவுமா நீ இப்ப சொல்லு என்னோட பையனோட போட்டோ இதுதான் இந்தா பாரு ரொம்ப நல்ல பையன் உன்னை நல்லா வச்சு காப்பாற்றுவான் அதுக்கு நான் பொறுப்பு என் பையன பிடிச்சிருக்கா
உன்னை எந்த விதத்திலும் இந்த கல்யாணத்துக்காக கட்டாயப்படுத்தல்ல உனக்கு விருப்பம் இருந்தா நீ இந்த திருமணத்தை செய்து கொள்ளலாம் இல்லன்னா சொல்லு
ஆனா நாளைக்கே கல்யாணம் அதுதான் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல ஒரே யோசனையாகவே இருக்கு எங்கே என் துருவன் என்னோட கையை விட்டு போயிடுவான் என்ன விட்டு அவ பிரிச்சு எடுத்துருவாள் என்றே தோணுது
அவளோட பேச்சுவார்த்தையே சரியில்ல என்று சொல்லி கவலைப்பட உடனே என்னுடைய ரெண்டு கையையும் பிடித்து அத்தை நீங்க கவலைப்படாதீங்க நான் உங்களுக்கு எப்பவுமே உறுதுணையா இருப்பேன் இந்த கல்யாணத்தால நம்மளோட குடும்பமும் சேரலாம்
எனக்கு அது தான் முக்கியம் பரவால்ல நான் கல்யாணம் கட்டிக்கிறேன் நீங்க எப்ப எங்க வரணும்னு சொல்லுங்க நான் உடனே வாரேன் என்று கூறி உடனே வீட்டை கூட சொல்லாம யாருக்கும் தெரியாம என் கூட வந்துட்டா
தன்னோட இன்ப துன்பத்தை யோசிக்காம மத்தவங்கள்ட சந்தோஷத்துக்காக தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைக்க துணிந்தவதான் என்னோட மருமக வள்ளி மற்றவர்களுக்காக வாழ்றவங்க கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அவ மத்தவங்க சந்தோஷத்தை பத்தி அக்கறை கொண்டதால தான் இப்போ என் மருமகளா என் வீட்ட ராணி மாதிரி இருக்கா
அவ ரொம்ப நல்லவாடா அப்படி ஒரு மருமகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் உனக்கும் இப்படி ஒரு மனைவி எங்கு தேடினாலும் கிடைக்காது நீ அவளை கஷ்டப்படுத்தாமல் சந்தோஷமா வச்சிருப்பேன்னு தான் நான் இன்று வரைக்கும் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன்
என்னோட நம்பிக்கையை மகனா இருந்து நீ காப்பாற்றுவ என்று நினைக்கிறேன் எனக்கு இன்னும் மனசுல உறுத்தலா இருக்கு ரெண்டு பேருக்கும் பொருந்தாமல் போயிடுச்சுன்னா இல்லன்னா ரெண்டு பேருக்கும் ஒத்து வரலைன்னா என்னால அதை நினைச்சு கூட பார்க்க இயலாம இருக்கு
நீ வேற ஒரு வருஷத்துல டைவர்ஸ் பண்ணிடுவேன் என்று சொல்லிட்டே எனக்கு அதுவே பெரிய யோசனையா இருக்கு அதோட இந்த கனவு வந்ததிலிருந்து வள்ளியை பாக்கணும் போல இருக்கு எதுக்கும் அவளை நீ கவனமா பாத்துக்கோ இன்னைக்கு எங்கேயும் வெளியே கூட்டிப் போகாத நாளைக்கு வேணும்னா கூட்டிட்டு போ போனதும் வீடியோ கால் எடுடா துருவன் லைன்ல இருக்கியா..?”
“போமா எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன் உங்களோட மருமக புராணத்தை கேட்டு என் காதே அடைச்சிருச்சு..”
“சொல்லுவடா சொல்லுவ என்னோட மருமகளை பார்க்காமல் எனக்கு பொழுதே போகுதில்ல பக்கத்தில் இருக்கும் போது எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒன்னு பேசிக்கிட்டே இருப்பா. இப்போ வீடே வெறிச்சோடி போன மாதிரி இருக்கு..”
“அப்ப பையன பிரிஞ்சு இருக்கிறது உங்களுக்கு சோகம் இல்ல மருமகளை பிரிந்து இருக்கிறது தான் சரியான கஷ்டமா இருக்கு..”
“ஆமாடா இப்போ என்ன பண்ண போற போடா..”
“சரி மா எனக்கு டைம் ஆகுது நான் வைக்கிறேன்..”
“சரி சரி போனதும் கட்டாயமாக கால் பண்ணு அம்மா வைக்கிறேன் பாய்..”
“பாய் மா..” என்று அலைபேசியை அணைத்தவனது நெஞ்சு பாரமாக இருந்தது. நிமிர்ந்து நேரே இயேசுவின் சிலையை பார்த்து கண்களை மூடி அப்படியே முழந்தாழிட்டு அமர்ந்து விட்டான்.
மனதிற்குள் புயலே அடிப்பது போல சிந்தனைகள் எங்கும் சிதறடித்து பாய்ந்து கொண்டிருந்தன. இன்னும் 24 மணி நேரம் என்று டாக்டர் மிகச் சுலபமாக கூறிவிட்டார் அந்த மணித்துளிகளை கடக்கவே அவனுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது.
இரு கைகளை எடுத்துக் கூப்பி,
“உங்களை இப்படித்தான் வணங்கனும் வணங்கக்கூடாது என்று எனக்கு தெரியாது ஆனால் எனக்கு தெரிஞ்ச விதத்துல உங்களை நான் வேண்டி கேட்டுக்குறேன் ப்ளீஸ் என்னோட மனைவியை என்கிட்ட கொடுத்துடுங்க எனக்கு வேற எதுவுமே வேணாம் நான் இதுவரைக்கும் கடவுள் கிட்ட ஏன் யார்கிட்டயும் எதையும் கையேந்தி கேட்டதில்லை
இதுவரைக்கும் எல்லாத்தையும் எனக்கு நீங்க கொடுத்திருக்கீங்க இப்ப என்கிட்ட எல்லாமாய் இருக்கிற என்னோட அற்புதத்தை தரனும் அவள் எப்பவுமே எனக்கு அற்புதம் தான் அந்த அற்புதப் பரிசை என்கிட்டயே திருப்பி கொடுத்துடுங்க ப்ளீஸ்..” என்று கைகூப்பி வணங்கினான்.
அவனது செயல் கண்டு அங்கிருக்கும் ஓரிரு நபர்கள் சிரித்தனர். சிலர் விசித்திரமாக பார்த்தனர்.
அது எல்லாம் பொருட்படுத்தாமல் அவன் எழுந்து அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிய வண்ணம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தான்.
அனைத்தும் கனவு போல மிக வேகமாக நடந்தேறியதை எண்ணி அவன் உள்ளே பெரும் ஏமாற்றம், தூக்கம், அழுகை அனைத்தும் கருமேகங்கள் வானை சூழ்வது போல சூழ்ந்து கொண்டன.
அப்படியே எவ்வளவு நேரம் இருந்தான் என்றே தெரியவில்லை சர்ச்சில் மணியோசை கேட்க சித்தம் கலைந்து கண் திறந்து பார்த்தவன் அருகில் வசுந்தரா அவனையே பார்த்தபடி அமர்ந்திருப்பதை கண்டு திரும்பி ஆவலுடன்,
“அற்புதம் கண் முழிச்சிட்டாளா..? அவளை டாக்டர் வந்து பார்த்தாரா..? அதுக்கப்புறம் ஏதாவது தகவல் தெரிந்ததா..? நாளைக்கு கண்ணு முழிச்சிடுவால்ல..” என்று கேள்விக்கணைகளை தொடுக்க வசுந்தராவின் கண்ணோரம் நீர் துளிர்த்தது.
மிகவும் சிரமப்பட்டு அனைத்துக்கும் ஒரே பதிலாக இல்லை என தலையாட்டினார் வசுந்தரா. அவரது எதிர் மாறான பதிலை கேட்டு கவலையுற்றவன் மனம் வாட தொய்ந்து போய் கீழே பார்த்த வண்ணம் இருந்ததான்.
“துருவன் நீ ரூமுக்கு போய் பிரஷ் ஆயிட்டு வா நான் இங்கிருந்து வள்ளியை பார்த்துக்கிறேன் …” என்று வசுந்தரா துருவனின் நிலையைப் பார்த்து கூற,
“இல்ல ஆன்ட்டி நான் எங்கேயும் போறதா இல்ல வள்ளியை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் இங்கே தான் இருப்பேன்..”
“சொன்னா கேளு துருவன் இங்க பாரு இந்த டிரஸ் எல்லாம் ரொம்ப அழுக்கா இருக்கு அதோட வள்ளிக்கும் நாளைக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணனும் அவளோட டிரஸ் ஏதாவது இருந்தா எடுத்துட்டு வா இல்லன்னா வேண்டிட்டு வா நீ சாப்பிட்டு ஒரு நாளைக்கு மேல ஆகுது போய் முதல் சாப்பிடு..” என்று வசுந்தரா அக்கறையுடன் கூறினார்.
சாப்பாடு என்று கூறியதும் தான் வசுந்தராவை நிமிர்ந்து பார்த்தவன்,
“நீங்களும் இன்னும் சாப்பிடலயே ஆன்ட்டி பொறுங்க நான் பக்கத்துல எதாவது ரெஸ்டாரன்ட் இருக்கான்னு பார்த்து உங்களுக்கு சாப்பாடு எதுவும் வேண்டி வரேன் சாப்பிடுங்க ..”
“அதெல்லாம் பரவாயில்லைப்பா, சுகர் டேப்லெட் தான் இன்னும் போடல உடம்பு கொஞ்சம் சவரிங்கா இருக்கு..”
“இருங்க ஆன்ட்டி சாப்பிட்டு போடலாம் நான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி வரேன்..”
“இல்ல இல்ல வேணாம்பா..”
“என்ன ஆன்ட்டி டேப்லட் சாப்பிடாம எப்படி போடுவீங்க உடம்பு வீக் ஆயிரும்..”
“சரி நீ சாப்பிட்டால் நானும் சாப்பிடுறேன்..”
“எனக்கு உண்மையிலேயே பசிக்கலை ஆண்ட்டி..”
“இல்ல இல்ல அப்ப எனக்கும் வேணாம்..”
“சரி நான் எனக்கும் சேர்த்து வாங்கி வரேன்..” என்று அருகில் இருக்கும் உணவகம் ஒன்றில் உணவை வாங்கி வந்து ஹாஸ்பிடலுக்கு எதிரில் உள்ள பார்கில் இருவரும் இணைந்து உணவை உண்டனர்.
துருவன் ஏதோ இயந்திர கதியில் வாய்க்குள் உணவை அடக்கித் தள்ளியவன்.