அரண் 45
வசுந்தராவை நிமிர்ந்து பார்த்து,
“நான் அற்புதத்தோடு இருக்கிறேனே வீட்ட போகல அவளை விட்டுட்டு போகவும் விருப்பம் இல்லை நீங்க போய் ரீப்ரஷ் ஆயிட்டு அப்படியே அற்புதத்துக்கு ரெண்டு டிரஸ் வாங்கி வாங்க ப்ளீஸ் ஆன்ட்டி..” என்று துருவன் கருணை பொங்கும் வதனத்தோடு கெஞ்சினான்.
“ஓகேடா நான் வீட்ட போய் ரீப்ரஸ் ஆயிட்டு அப்படியே உனக்கும் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன் இந்த சாப்பாடு எல்லாம் சரி வராது அதோட வள்ளிக்கும் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன் ஓகே யா..?”
“அப்போ நாளைக்கு வள்ளி கண் முழிச்சிடுவால்ல..” என்று துருவன் சந்தோசத்தில் கண்கள் பளபளக்க ஒருவித ஏக்கத்துடன் கேட்டான்.
“நிச்சயமா கண் முழிப்பா நான் அவளுக்கும் சேர்த்து சாப்பாடு செஞ்சு வரேன்னா அவ முழிச்சா தானே சாப்பிடுவா என்னோட சாப்பாடு சாப்பிடறதுக்காவது அவ கண் முழிப்பா நீ ஒன்னும் கவலைப்படாத என்ன எழுந்ததும் உன்னோட தான் சண்டை போடுவா..?”என்று வசுந்தரா நக்கலாக நமட்டுச் சிரிப்புடன் கூற,
வசுந்தராவின் குறும்பு சிரிப்பை பார்த்தவன்,
“என்ன எழுந்ததும் என்னோட அவ சண்டை போடுவாளா அப்படி நான் என்ன செய்தேன்..?” என்று துருவன் புரியாமல் வினவ,
“பின்ன இந்த அழுக்கு டிரஸ் ஓட குளிக்காம வியர்வை மனத்தோடு அவளுக்கு பக்கத்துல போய் நின்னா அவ உனக்கு பேசுவா தானே உன்னோட முகத்தை போய் கண்ணாடில பாரு ஏதோ ஃபயர் சர்வீஸ்ல வேலை செய்ற மாதிரி உடம்பு, முகம் எல்லாம் அழுக்கா இருக்கு…” என்றிட,
இதுவரை தன்னை கவனிக்காத துருவன் மேலிருந்து கீழ் வரை கண்களால் தன்னைத்தானே ஆராய்ந்தான்.
ஒரு நாட்களில் இரண்டு தடவைக்கு மேல் குளித்து உடல் சுத்தம் பேணுபவன் இன்று கிஞ்சித்தும் அது பற்றிய நினைப்பே இல்லாமல் வள்ளியை மட்டும் நினைவில் கொண்டு அவனது நெஞ்சம் துடிக்க அவளுக்காக காத்திருக்கின்றான்.
அவனுக்கும் ஆசை தான் உடம்பு மிகவும் சோர்வாகவே இருந்தது. குளித்துவிட்டு வந்தால் உடல் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் அவனது மனதில் தோன்றியது. ஆனால் இப்படி வள்ளியை தனியாக விட்டு விட்டு செல்லவும் மனம் இல்லை. வசுந்தரா ஆண்டியிடம் விட்டுச் செல்லவும் மனம் இல்லை.
அவரைப் பார்க்கவும் மிகவும் பாவமாக இருந்தது பாவம் தன்னுடன் சேர்ந்து காலை, இரவு என உண்ணாமல் உறங்காமல் கண்விழித்து அவரும் வள்ளியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைக் கஷ்டப்படுத்த எண்ணம் கொள்ளாத துருவன் இவற்றையெல்லாம் மனதில் கொண்டு ஒரு அசட்டு சிரிப்புடன் வசுந்தராவைப் பார்த்து,
“என்னோட மனைவி எழுந்திருச்சு என் கூட சண்டை பிடிச்சா எப்படி சமாளிக்கிறது என்று எனக்கு தெரியும் நீங்க போய் முதல் குளிச்சிட்டு வாங்க உங்கள வியர்வை மனம் தான் தாங்க முடியல ரொம்ப நேரமா இந்த மனம் வந்துகிட்டு இருக்கு
நான் நெனச்சேன் இங்க பக்கத்துல ஏதோ எலி செத்து கிடைக்கும் இப்பதான் புரியுது உங்க மேல இருந்து தான் வருது
அதுக்குள்ள என் மேல குறை சொல்றீங்க போங்க போங்க முதல் போய் குளிங்க முக்கியமா அங்கிள கிட்ட வராம பாத்துக்கோங்க இல்லன்னா மயங்கி விழுந்துடுவாரு..” என்று கூறிவிட்டு வசுந்தராவின் முகம் போகும் போக்கை பார்த்ததும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“துருவா உனக்கு வர வர கிண்டல் அதிகமாகிப் போகுது பொறு வள்ளி எழும்பட்டும் உன்னை அவகிட்ட மாட்டிக் கொடுக்கிறேன்..”
“ஓஹ்… அப்படியா… என்னோட பொண்டாட்டி என் பேச்சை மட்டும் தான் கேட்பா பார்ப்போமா..?” காலரை தூக்கிவிட்டு துருவன் சவால் விட,
“சரி பார்ப்போம்..” என்று கூறிவிட்டு இருவரும் இணைந்து ஒரு சேர சிரித்தனர்.
நீண்ட நேரப் போராட்டங்களின் பின் கலகலவென சிரித்ததால் துருவனின் நெஞ்சில் இருந்த பாரம் சிறிது அகன்று போனது போல இலேசாக இருந்தது.
சிறிது நேரம் சிரித்த பின்பு கண்களில் மீண்டும் தீவிரம் குடிகொள்ள,
“சொல்றது போல நாளைக்கு உண்மையிலேயே அற்புதம் எழுந்திடுவா தானே ஆன்ட்டி..” என்று துருவன் கவலை தோய்ந்த முகத்துடன் கேட்க,
வசுந்தராவிற்கோ துருவனின் முகத்தைப் பார்க்க ஐயோ என்று ஆனது.
“கண்டிப்பா எழுந்திருவா நீ ஒன்றும் யோசிக்காத மனச குழப்பிக்கொள்ளாமல் இரு கடவுள் எப்பவுமே எங்களை கைவிட மாட்டார்..” என்று அவனது தலையை தடவி விட்டு அவ்விடத்தை விட்டு செல்லவே மனமில்லாமல் நகர்ந்து சென்றார் வசுந்தரா.
துருவன் உடனே வள்ளி இருக்கும் அறை முன் சென்று அமர்ந்திருந்து அவளது வாயில் மீண்டும் எப்போது திறக்கும் அவள் வதனத்தை எப்போது பார்ப்போம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காவல் காத்து நின்றான்.
அப்படியே கண்ணிமைக்காமல் இருந்தவன் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பின் அவனை அறியாமல் அந்த அப்படியே சாய்ந்து உறங்கியும் போனான்.
அவனது உடல் அசதி அவனை உறக்கத்தால் ஆட்கொண்டது.
அந்த உடலும், மனதும் எத்தனை துன்பத்தையும் வேதனையும் தான் தாங்கும் அவனையும் மீறி அவனது உடல் உறக்கத்தை யாசித்தது அவனுக்கு புதுமை தான்.
நீண்ட நேர உறக்கத்திற்கு பின் “என்னங்க..” என்ற ஒற்றை அழைப்பு அவனை உறக்கத்திலிருந்து எழச் செய்தது.
உடலில் மின்சாரம் பாய்ந்தது போல திடுக்கிட்டு எழுந்து பார்த்தவனது வாயிலிருந்து உதிர்த்த முதல் வார்த்தை “அற்புதம்..” ஆம் கனவில் அழைத்தது துருவனின் மனைவி அற்புதவள்ளியே தான்.
ஏதோ மனதில் உணர்வுகள் தரிகெட்டு ஓட அது இன்பமா, துன்பமா என்று பிரித்தறிய முடியாமல் உடனே எழுந்து கண்ணாடிக் கதவின் வழியாக அவளது முகம் பார்க்க ஆவல் கொண்டு எட்டிப் பார்த்தான்.
பார்த்தவனது கண்கள் அங்கேயே நிலை குத்தி நின்றன. அப்படியே பேச்சற்று, மூச்சற்று உறைந்து போய் நின்ற துருவன் சிறிது நேரத்தின் பின்னே சுயம் பெற்றான்.
உடலில் இனம் புரியாத நடுக்கம் ஏற்பட உடனே யாது செய்வது என்று புரியாமல் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடினான். அப்போதுதான் ஒன்றை நன்கு கவனித்தான் அங்கு வள்ளியை கவனித்துக் கொள்ளவதற்கு பொறுப்பாக விட்ட தாதியை அந்த அறையில் காணவில்லை.
வள்ளியைத் திரும்பிப் பார்த்தவனது கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்படி எதை பார்த்து தான் துருவன் இவ்வாறு பதறுகின்றான். ஆம் நமது வள்ளி மூச்சு விட சிரமப்பட்டு மூச்சு திணறலின் உச்சத்தில் இருந்ததால் கை கால்கள் உதற மேலும் கீழும் மூச்சை இழுத்து விட்டபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். மூச்சு திணறலில் துடிதுடித்துக் கொண்டிருந்த வள்ளியை துருவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
அவளது அறையில் அவசர அழைப்புக்காக ஒரு அலாரம் இருந்தது. அதனை அழுத்தினால் உடனடியாக 5 நிமிடத்திலேயே டாக்டர் இருக்கும் அறைக்கு அதன் ஒருவித ஒலி மூலம் அறிவித்து விடும்.
அதன் மூலமாக டாக்டர் எந்த அறையில் இருந்து அவசர தேவையுடன் மணி ஒலிக்கப்பட்டது என்று அறிந்து கொண்டு உடனே அங்கு ஓடி வந்து விடுவார்.
அந்த எமர்ஜென்சி அலாரத்தை முதலில் அழுத்த ஐயோ என்ன துரதிஷ்டமோ தெரியவில்லை அந்த அலாரத்தின் சுவிட்ச் உள்ளே சென்றது வெளிவரவே இல்லை.
அது பழுதடைந்து விட்டதோ என்னவோ அல்லது அந்த மணியின் சத்தம் டாக்டரின் பிரத்தியேக அறைக்கு சென்றதா இல்லையா என்று ஒன்றும் தெரியவில்லை.
இப்போது இதனை ஆராய்வதற்கு நேரமில்லை என்பதை அறிந்த துருவன். உடனே,
“டாக்டர்… டாக்டர்..” என்று அந்த வைத்தியசாலை அதிரும் வண்ணம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கத்தியபடி வைத்தியரின் அறைக்கு ஓடிச் சென்றான்.
வள்ளி இருப்பதும் மூன்றாம் மாடி ஆனால் வைத்தியரின் பிரத்தியேக அறை இருப்பதோ ஐந்தாம் மாடி லிப்டில் செல்லலாம் என்று பார்த்தால் லிப்ட்டும் தனது வேலையை இடைநிறுத்தி துருவனை மேலும் சோதித்தது.
தலை கால் புரியாமல் அனைத்தும் அவனுக்கு முன்வந்து தடா போட படிகளில் தாவித்தாவி மேலே 5 நிமிடங்களில் டாக்டரின் பிரத்தியேக அறையை அடைந்தான்.
வைத்தியரிடம் கதவு உடைந்து கீழே விழும் அளவுக்கு கதவை படார் படார் என தட்டினான்.
உடனே கதவு திறக்கப்பட மேல் மூச்சுக்குள் மூச்சு வாங்கிய படி,
“டா…டாக்டர் டாக்டர் அற்புதத்திற்கு அற்புதத்திற்கு…” என்று துருவன் சொல்ல முடியாத தவிக்க,
“ரிலாக்ஸ் மிஸ்டர் துருவன் மூச்ச இழுத்து விட்டு ரிலாக்ஸ் ஆயிட்டு அப்புறம் என்னன்னு சொல்லுங்க நீங்க சொல்றது எனக்கு சுத்தமா புரியல..” என்று டாக்டர் கூற,
மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்து விட்டவன்,
“அ..அற்புதத்தால மூச்சு விட முடியல ப்ளீஸ் வாங்க டாக்டர் சீக்கிரமா வாங்க..”
உடனே வைத்தியர் வள்ளியின் அறைக்கு ஓடிவந்து அவளுக்கு பொருத்தி இருக்கும் மெஷின்களின் பட்டன்களை அழுத்தி பரிசோதித்த வண்ணம் அவளுக்கு ட்ரீட்மென்ட் செய்யத் தொடங்கினார்.
அந்த மிஷின்களில் அவளது இதயத் துடிப்பும் சுவாசமும் கூடிக் குறைவது நன்றாக விளங்கியது.
அவள் துடி துடித்துக் கொண்டிருப்பது பார்க்க இயலாத துருவனது கண்கள் நிற்காமல் கண்ணீரைச் சொறிந்தன.
அவள் கைகளும், கால்களும் மேலும் கீழும் அடித்துக் கொள்ள துருவனின் ஆவியோ உடலை விட்டு செல்வது போல இருந்தது.
உயிரை யாரு உருவி எடுப்பது போல அவனது மனம் வலித்தது.
வள்ளியின் ஒரு கையைப் பிடித்து தனது கைக்குள் பொத்தி பிடித்த வண்ணம்,
“ப்ளீஸ் டி கொஞ்சம் பொறுத்துக்கோ நான் இருக்கேன் உனக்கு ஒன்னும் ஆகாது என்னோட அற்புதத்திற்கு ஒண்ணுமே ஆகாது ஒண்ணுமே ஆகாது ஒண்ணுமே ஆகாது..” என்றும பித்து பிடித்தவன் போல அதனையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்படியே துடி துடித்துக் கொண்டிருந்தவள் சிறிது நேரத்திலேயே தூக்கிப் போட்டது போல கை, கால்கள் அசைவற்று ஒரே நேரத்தில் மெத்தையில் விழுந்தன.
துருவனின் கையில் இருந்த அசைந்து கொண்டிருந்த அற்புதத்தின் கை அப்படியே சோர்ந்து போய் அசைவற்று நின்று துருவனின் இதயத்துடிப்பை அதிகரித்தது.