இரண்டு மாதங்களின் பின்பு
“ஹலோ..”
“ஹலோ சொல்லுங்க அம்மா..”
“டேய் துருவா இதோ வாரன்னு ரெண்டு மாசம் முடிஞ்சிருச்சு இன்னும் என் மருமகளை என் கண்ணுல நீ காட்டல சரி வீடியோ கால் வான்னா அதுக்கும் முடியாது
ஏன்டா என் மருமகள கண்ணுல காட்டாம ஒழிச்சு வச்சிருக்கே ரெண்டு மாசமா பாக்கணும்னு துடிச்சுக்கிட்டே இருக்கேன் ஏன்டா இப்படி என்னோட கண்ணாமூச்சி விளையாடுற ” என்று துருவன் மீது மிகுந்த கோபத்துடன் வைதேகி கூற,
“உங்களோட விளையாடுறதே ஒரு சுவாரஸ்யம் தானேமா..” என்று துருவன் கிண்டல் செய்ய,
“சரிப்பா எப்போ ஊருக்கு வார..”
“அம்மா நான் ஆபீஸ்ல நிக்கறேன் அப்புறமா பேசறேன்..” என்று திடீரென தொலைபேசியை வைத்துவிட்டான்.
‘இவனை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே முடியல என்னோட மருமகளை ஏன் தான் கண்ணுல காட்டாம இருக்கிறான்னு தெரியல..’ என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்க,
அப்போது வெளியே மணியோசை கேட்க, ‘உடனே யாரது காலங்காத்தால..’ என்று சினந்து கொண்டு வைதேகி கதவைத் திறந்தார்.
திறந்த வேகத்தில் வள்ளி ஓடி வந்து வைதேகியை கட்டி அணைத்தாள். அவளது அனைப்பில் அத்தனை அன்பும் அவருக்கு நன்றாக புரிந்தது.
அவ்வளவு நெருக்கமாக அவரைக் கட்டியணைத்து ஒரு நிமிடம் எந்த அசைவுமற்று இருவரும் அப்படியே ஒன்றிப் போய் நின்றனர்.
அவளது பிரிவால் வாடிய வைதேகிக்கு வள்ளியின் அனைப்பு தேவையான தொன்றாகவே அவருக்கு தெரிந்தது.
அவள் காட்டிய பாசம், அக்கறை, அனைத்திலும் மூழ்கி எழுந்த வைதேகி அப்படிப்பட்ட மருமகளை 60 நாட்கள் பிரிந்து இருந்தது ஏதோ நடுக்காட்டில் தவம் செய்தது போல் அல்லவா அவருக்கு இருந்தது.
“வந்துட்டியாமா..” என்று கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரைத் துடைத்து வள்ளியின் தலையை வருடினார்.
அப்போதுதான் ஒன்றை கவனித்த வண்ணம் மேலிருந்து கீழ் வரை அவளது உடலை கண்களால் ஆராய்ந்தார்.
“என்ன வள்ளி ஏற்கனவே நீ அகப்பையால வலிச்செடுத்தாலும் ஒரு கைப்பிடி சதை தான் உடம்புல இருந்து எடுக்கலாம் ஆனா இப்போ பாத்தா அந்த ஒரு அகப்பை சதை கூட வராது போல இருக்கே
இப்படி இளைச்சிட்டியேம்மா உடம்புக்கு ஏதும் முடியலையா இல்லைன்னா அங்கிட்டு சாப்பாடு ஒத்து வரையில்லையா ஏன் இப்படி முகமும், உடம்பும் வாடிப்போய் இருக்கு…” என்று கேட்டதும் ஒரு சேர வள்ளியும், துருவனும் அதிர்ந்து போய் நின்றனர்.
என்னவென்று சொல்வது துருவன் வள்ளிக்கு நெஞ்சில் குண்டு பட்டதிலிருந்து ஒரு மாதம் பெட் ரெஷ்ட் எடுக்க வேண்டியதாக வைத்தியர் சொல்லிவிட்டார் அதனால் துருவன் வள்ளிக்கு அருகில் இருந்து சிறு குழந்தை போல அவளது அனைத்து தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு மடிக்கணனியில் தனது வேலைகளை வைத்தியசாலை இருந்து கொண்டே செய்து முடித்தான்.
ஒரு பக்கம் வள்ளியைக் கவனிப்பதும் மறுபக்கம் வேலையை கவனிப்பது என்று அவனது பொழுதுகள் தூக்கமின்றி தவித்தன.
அடுத்த மாசம் அவளுக்கான மூச்சுப் பயிற்சிகள் மற்றும் வேறு உடற்பயிற்சிகள் என அவளது உடல் நலம் தேறி வரவே அடுத்த முப்பது நாட்கள் கழித்து விட்டன.
அதற்கிடையில் அம்மாவிடம் இருந்து அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்புகளின் தொல்லையால் அவளை இந்த இரண்டு மாதத்திற்கு பின்னும் அங்கு வைத்திருப்பது மிகவும் கடினம் என்று ஆகிவிட்டது.
எத்தனை நாட்கள் தான் அம்மாவிடம் அந்த பொய் இந்த பொய் என்று ஊரில் இருக்கும் அனைத்து பொய்களையும் வாரி இறைப்பது ஒரு கட்டத்திற்கு மேல் துருவனுக்கு இயலாமலேயே போய்விட்டது.
அன்னையின் நலனுக்காக பொய்களை சொன்னவன் இதுவரைக்கும் அன்னையிடம் எதற்காகவும் ஒரு பொய் கூறியது இல்லை.
அப்படிப்பட்டவன் இன்று தனது மனைவிக்காகவும், அன்னையின் நலனுக்காகவும் நொடிக்கு நொடி பல பொய்களை கூற வேண்டியதாயிற்று அவனது நிலைமையை பார்க்க அவனுக்கே சிரிப்பாக இருந்தது.
இப்படி ஒரு நிலை வரும் என்று கனவில் கூட நினைக்காதவன் அனைத்து துன்பங்களையும் எதிர்த்து சமாளித்து தனது மனைவியை ஏதோ தேற்றி எடுத்து வந்து விட்டான்.
ஊரெல்லாம் எங்கு சென்றாலும் வீடு வந்து சேரும்போது வரும் அமைதி அதற்கு எதுவுமே மிகையல்ல அதுபோல தனது வீட்டு வாசலை மிதித்தவுடன் அவனது மனதில் இனம் புரியாத ஒரு அமைதியும், இன்பமும் தொற்றிக் கொண்டது.
அதுபோல்தான் வள்ளிக்கும் அங்கு நடந்த விபரீதங்களை அங்கு இருக்கும்போது அவளுக்கு சுற்றி சுற்றி ஞாபகம் ஊட்டிக் கொண்டே இருந்தன.
மீண்டும் துருவனுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்று அடிக்கடி கனவிலும் அப்படியே மீண்டும் நடப்பது போல பல இரவுகள் திடீரென்று எழும்பி பார்த்ததும் உண்டு.
துருவனுக்கு அங்கிருக்கும் வரை பாதுகாப்பு என்பதே இல்லை என்பது வள்ளிக்கு நன்கு தெரியும். அதனால் தான் இந்தியாவிற்கு போய் ஆகவே வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றாள் வள்ளி.
வள்ளியின் பிடிவாதத்தை மனதளவில் உணர்ந்த துருவன் அவள் முழுதாக பரிபூரணமாக குணமடைந்த பின்பே போக வேண்டும் என்ற முடிவோடு தான் இந்த இரண்டு மாதங்கள் பொறுத்திருந்தான்.
வள்ளியும், துருவனும் இந்த எண்ணங்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்க இதனை அறியாத வைதேகி அவர்களது முகம் பார்த்து பதிலுக்காக காத்திருந்தாள்.
அதனை முதலில் உணர்ந்த வள்ளி,
“அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை அங்கத சாப்பாடு எனக்கு பிடிக்கல அதனால தான் உடம்பு இப்படி ஆகிட்டோ தெரியல ஆனா நான் ஒழுங்காத்தான் சாப்பிடுறேன்..” என்று விரக்தியாக பதில் கூற,
அவள் மிகவும் சோர்வாக இருப்பதை உணர்ந்த வைதேகி,
“வாம்மா முதல் கை கால அலம்பிட்டு வந்து சாப்பிடு..” என்று தாய்மை ததும்பக் கூற, அவர்களது மாமியார், மருமகள் பிணைப்பை பார்த்து மனதளவில் இன்பமுற்ற துருவன் அன்னையைப் பார்த்து,
“சரி மா அப்பா எங்க..? வெளியே எங்கேயும் போயிட்டாரா..?”
“இல்லடா.. அப்பா குளிச்சுட்டு இருக்காரு இப்போ சாப்பிடற டைம் தான் வந்துருவாரு..”
“ஓகே மா..” என்று கூறிவிட்டு தந்தையின் அறைக்குள் சென்றான்.
அங்கு கண்ணாடியை பார்த்து தலைவாரிக் கொண்டிருந்து தனபால் துருவனைக் கண்டு சிரித்தபடி,
“எப்பப்பா வந்த போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா..?”
“முடிஞ்சது பா நான் உங்ககிட்ட பர்சனலா பேசணும் அவசரம்…” என்று துருவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
தனபாலின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டன.
“பிசினஸ் விஷயமா..? பர்சனல் விஷயமா..?”
“ரெண்டும் தான் இம்போர்ட்டன்ஸ் அண்ட் எமர்ஜென்சி..” என்று துருவன் கூறியதும்,
“ஓகே நீ தோட்டத்துக்கு போ நான் வாரேன்..”
“ஓகே பா..” என்று துருவன் தோட்டத்திற்கு உடனே சென்று அவருக்காக காத்திருந்தான்.
அவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் உடனே இரண்டு நிமிடங்களிலேயே தோட்டத்திற்கு வந்த தனபால்,
“சொல்லுப்பா என்ன பிரச்சனை..?”
“என்னப்பா நான் சொல்றதுக்கு முன்னாடியே பிரச்சனைன்னு வந்து நிக்கிறீங்க..”
“ஏதாவது பிரச்சனை இருந்தால் தானே என்கிட்ட நீ கேட்க வருவா மற்றும் படி பெருசா நாம பேசிக்கிறதே இல்லையே..”
“அதுவும் சரிதான் வீரானு உங்களுக்கு நண்பர் யாராவது இருக்காங்களாப்பா..?” என்று தந்தையின் வதனத்தில் தெரியும் உணர்ச்சிகளை ஆராய்ந்த வண்ணம் கேட்டான் துருவன்.
உடனே தடுமாறிய தனபால், துருவன் தண்ணீரில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவர் புருவங்களை உயர்த்திய வண்ணம்,
“ஆமா தெரியும் இப்ப அதுக்கு என்ன..?”
“அவங்களோட சேர்ந்து நீங்க பிசினஸ் செய்தீங்களா..?”
“ம்ம்…” என்று ஒற்றை பதிலளித்தார்.
$அப்போ ஏன் பிறகு தனியா செய்ய தொடங்கினீங்க..?”
“அதெல்லாம் ஏன்பா இப்ப கேக்குற..?”
“எல்லாம் காரணமா தான்பா..”
“என்னன்னு சொல்லுது துருவன் நீ ஏதோ மனசுக்குள்ள வச்சுட்டு கேட்கிற மாதிரி இருக்கு நீ முதல் என்ன பிரச்சனையை சொல்லு எனக்கு தெரிஞ்ச உண்மையை நான் சொல்றேன்..”
“உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்குபா நீங்க ஒரு தப்பான விஷயத்தை செஞ்சிருக்க மாட்டீங்கன்னு தான் நான் நம்புறேன் யாருக்குமே எப்பவும் இதுவரைக்கும் நீங்க கெட்டது நினைத்ததில்லை அப்படியும் நீங்க செய்ய மாட்டீங்க என்று எனக்கு தெரியும் அந்த ஒரு நம்பிக்கையில் தான் நான் உங்களை என்னோட மனசுல உயர்ந்த இடத்தில வச்சிருக்கேன்..” என்று துருவன் மனதிற்குள் இருக்கும் தனது தந்தையை பற்றிய எண்ணங்களை விவரிக்க,
தனபாலுக்கு என்ன பிரச்சனை என்று அறியாமல் தலையே வெடிப்பது போல இருந்தது.
“சரிப்பா விஷயம் என்னன்னு சொல்லு நீ இப்படி முடிச்சு போட எனக்கு ஏதோ மாதிரி இருக்கு இப்போ என்ன வீராவ பத்தி உனக்கு தெரியனுமா நான் சொல்றேன்
வீரா என்னோட க்ளோஸ் பிரண்டு நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினோம் அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் ஒரு சில விஷயங்கள்ல ஒத்து வரல அதனால தனியா பிசினஸ் தொடங்கிட்டேன் அவ்வளவுதான்..” என்று கூறி முடிக்கும் முன்னே,
“அவ்வளவுதானா வேறொன்றும் இல்லையா..?” என்று புதிராகக் கேட்டான் துருவன்.
“இல்லப்பா நீ எதையோ மனசுல வச்சுத்தான் இதெல்லாம் கேட்கிறே உனக்கு என்ன கேட்கணும் என்று தோணுதோ அதை நீ நேரடியாகவே கேட்கலாம் நான் கட்டாயமா உன்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்..”
“ஓகேபா அவருக்கு உடம்பு சரியில்லாமல் போறதுக்கு முன்னுக்கு உங்களோட கால் பேசினாரா உங்களோட சண்டை போட்டாரா..?”
“அதை இப்போ ஏன்பா கேக்குற ஏதாவது பிரச்சனையா..?”
“நீங்க சொல்லுங்கப்பா ப்ளீஸ் இப்ப கேட்க வேண்டிய அவசியம் வந்திருக்கு அதனால தான் கேட்கிறேன்..”
“சரி இதெல்லாம் உனக்கு யார் சொன்னது..?” என்று குரலில் சிறு மிரட்டலுடன் தனபால் கேட்க,
“நீங்க விஷயத்தை சொல்லுங்க நான் சொல்லி முடித்ததும் யாருன்னு சொல்றேன்..” என்று துருவன் பிடிவாதத்துடன் கூற,
வேறு வழியில்லாமல் நடந்த விடயங்கள் ஒவ்வொன்றையும் நெஞ்சில் பெரும் ரணத்துடன் கூறத் தொடங்கினார் தனபால்,
“அவனோட மருந்து பேக்டரி ஒன்னு இருக்கு அந்த மருந்து பேக்டரில நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் விட்டமின் குறைபாடு இருக்கிற பிள்ளைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் தயாரிச்சு கொடுக்கணும்
அது சத்து டானிக் அந்த சத்து டானிக்க குடிச்சா விட்டமின் குறைபாட்டால் பாதிச்சு இருக்கிற பிள்ளைகளுக்கு சத்து மேம்பட்டு நல்லா படிப்பாங்க, நல்லா விளையாடுவாங்க, உடம்புல எந்தவிதமான நோய்களும் அணுகாது ஒரு சுகதேகி ஆன பிள்ளைகளா அவங்க வளருவாங்க
அப்ப எங்களுக்கு எங்கட நாட்டிலேயே பல பிள்ளைகள் உணவில்லாமல், சுகாதார வசதி இல்லாம, பொருளாதார வசதி இல்லாம பிள்ளைகள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு இருக்கிற பிள்ளைகளை பார்த்து அப்படிப்பட்ட உங்களுக்கு இதை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
நாங்க ஃபர்ஸ்ட் ஒவ்வொரு ஹோம்லயும் இருக்கிற அனாதை குழந்தைகளுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்தோம்
நாங்க உண்மையிலேயே எதிர்பார்க்காத நல்ல ரிசல்ட் வந்தது அதுக்கு அப்புறம் அதை நாடளாவிய ரீதியில நாங்க விற்பனை செய்தோம் பிறகு அந்த டானிக் நல்ல பிரபல்யமாகி அப்புறமா அதை வெளிநாட்டுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம்.
அப்படியே செய்து கொண்டு இருக்கும் போது தான் எனக்கும் அவனுக்கும் சிறு தகராறு வந்து நாங்க பிரிஞ்சிட்டோம் அதுக்கப்புறம் வீரா தான் அதை ஃபுல்லா செய்து வந்தான்
நான் அதுல இருந்து விலகிட்டேன் மூணு மாசத்துக்கு பிறகு அந்த டானிக்ல ஏதோ கலப்படம் இருக்குன்னு எனக்கு பிசினஸ் வட்டாரத்துல ஒரு தகவல் வந்துச்சு அது சம்பந்தமா நான் விசாரிக்கணும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்
அப்படியே வேலை பிஸியில மறந்துட்டேன் அவங்க டானிக் ஒரு ஸ்கூலுக்கு டொனேட் பண்ணி இருந்தாங்க அந்த டொனேட் பண்ணின டானிக்க குடிச்ச கிட்டத்தட்ட 200 பிள்ளைகளுக்கு மேல பக்கவாதம் வந்துடிச்சு சில பிள்ளைகள் கிரிட்டிக்கலான கண்டிஷன்ல இறந்துட்டாங்க சில பிள்ளைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள்
அந்த விஷயம் அந்த நேரம் பெரியதொரு பிரச்சினையாக தீப்பற்றி எறிந்தது அப்ப இவங்களோட அந்த மருந்து தயாரிக்க தொழிற்சாலையில நான் என்னோட ஆட்களை வைத்து ரகசியமா விசாரிச்சு பார்த்ததுல அங்க அதுக்கு பொறுப்பான மேனேஜர் இதெல்லாம் கலவா அதிக பணம் சம்பாதிக்கிறதுக்காக அந்த ஃபேக்டரில் இருந்து தயாரிக்க டானிக்ல கலப்படம் செய்து அதில் வரும் லாபங்களை சுரண்டு வதற்காக இப்படி செய்கிறார் என்று தெரிய வந்துச்சு
இந்த விஷயத்தை நான் ஃபர்ஸ்ட் வீராக்கு கால் பண்ணி சொன்னேன் உன்னோட மேனேஜர் இப்படி பிரச்சனை பண்ணி இருக்காரு இப்போதான் எனக்கு தெரிய வந்திருக்கு என்று சொல்லி ஆதாரத்தோடு அவனுக்கு சில விஷயங்களை நான் போன்ல அனுப்பினேன் அதை பார்த்துட்டு வீரா ரொம்ப பயந்துட்டேன்
ஆனா இதை பிரஸுக்கு சொல்லாத என்று ரொம்ப கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆனால் நான் சொல்லல யாரோ சொல்லி அது பெரிய விஷயமாகி அந்த தொழிற்சாலையை யாரோ எரிச்சிட்டாங்க அந்த தகவலை கேட்டதும் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.
அப்பவும் அவனோட பேசிக் கொண்டிருக்கும் போதே நியூஸ் சேனல்ல இந்த எரிந்த விஷயத்தை சொல்ல நான் அவனுக்கு அதே விஷயத்தை சொல்ல உடனே அவன் அதிலேயே அதிர்ச்சியாகி மயங்கி விழுந்துட்டான் போல அவனோட மகன்ட குரல் மட்டும் தான் கேட்டது
அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியாது ரெண்டு நாள் கழிச்சு தான் எனக்கு விஷயம் தெரிய வந்துச்சு அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவனுக்கு கையும் காலும் இழுத்துட்டு என்று கேள்விப்பட்டேன்.
ஆனா இது எல்லாத்துக்குமே காரணம் அவனுடைய மேனேஜர் மட்டும் தான் காசுக்கு ஆசைப்பட்டு தரம் குறைந்த சத்து டானிக் எல்லாருக்கும் கொடுத்து அதுல பிள்ளைகள் பாதிக்கப்பட்டுட்டாங்க பாவம் நான் ரெண்டு மூணு தடவை அவன பாக்குறதுக்காக ட்ரை பண்ணினேன் ஆனா என்னால பாக்க முடியல..”
“ஏன் பா உங்களோட குளோஸ் பிரண்டு இப்படி இயலாம தவித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தடவை கூட உங்களுக்கு பார்க்கணும்னு தோணலையா..?” என்று சந்தேகத்துடன் துருவன் கேட்க,
“இல்ல துருவன் நான் உண்மையை சொல்லவா என்னால அவன அந்த நிலைமையில் பார்க்கிற தைரியம் இல்ல அவன் மேல ரொம்ப அன்பு, பாசம் வைத்திருந்தேன்.
அவனால் பேச முடியாமல் கை கால் இழுத்தபடி அந்த கஷ்டமான நிலைமையை பார்த்து என் மனசு தாங்கும் என்று எனக்கு தெரியல
ஒருத்தர் வந்து என்கிட்ட இப்படி உங்க பிரண்டு தவித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லவே எனக்கு கண்கள் கலங்கிட்டு அப்படி நான் அவனை பார்க்கிறதுக்கு பார்க்காமலே இருக்கலாம்
அந்த விஷயம் ஐந்து மாதங்களுக்கு மேல எனக்கு சரியான தாக்கமா இருந்தது ஒருவேளை இதுக்கு நானும் காரணமோ இந்த விஷயத்தை அவனுக்கு சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோணுச்சு ஆனா மறுபக்கம் மனசு சொல்லுச்சு சொல்லாட்டியும் இன்னொரு ஆள் மூலம் அவனுக்கு அந்த விஷயம் தெரியத் தானே போகுது என்று மனம் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டது..” என்று தனது கூறி முடித்து துருவனை நிமிர்ந்து பார்க்க,
“அப்போ அந்த மேனேஜர..?” என்று துருவன் மெதுவாக இழுக்க,
“என்னோட ஃப்ரண்டுட இந்த நிலைமைக்கு காரணமானவன நான் சும்மா விடுவேனா ரெண்டு மாசத்துல ஆள வச்சு தூக்கிப் போட்டு தள்ளிட்டேன்..” என்று சர்வசாதாரணமாக தோளில் இருக்கும் தூசியை தட்டி விட்டேன் என்பது போல மிக இயல்பாகக் கூறினார்.
தந்தையின் பதிலை கேட்டு அதிர்ந்து போய் நின்ற துருவனை பார்த்த தனபால்,
“சரி இப்போ சொல்லு என்ன பிரச்சனை..?”
“அவனோட பையன் ருத்ர பிரசாத் நீங்கதான் இதுக்கெல்லாம் காரணம் என்று என்னை கொள்ள ட்ரை பண்ணினா ஆனா..” என்று துருவன் சொல்ல வந்த வார்த்தைகளை சொல்லாமல் நிறுத்த,
“என்னப்பா ஆனா உனக்கு ஏதாவது..”
“இல்லப்பா எனக்கு ஒன்னும் ஆகல ஆனா இங்க நடந்த பிரச்சனைகளுக்கும் அவன் தான் காரணம் அங்கேயும் வந்து அவன் தன்னோட வேலையை தொடங்ககினான் ஆனா நான் உங்களோட மகனாய்ச்சேப்பா சும்மா விடுவேனா தூக்கி ஆள தூரம் வீசிட்டேன்..” என்று துருவன் சிலாகித்துக் கூற,
அவன் வசீகரமாக அதை கூறிச் சிரிக்க தானும் சேர்ந்து சிரித்த தனபால்,
“ஓகே துருவா ரொம்ப நேரம் ஆயிற்று வைதேகி தேடி வந்துருவா தெரியும் தானே உனக்கு உங்க அம்மாவை பற்றி வா முதல் இந்த இடத்தை விட்டு போகலாம்..” என்று இருவரும் உள்ளே செல்ல வள்ளியும் உணவருந்தி விட்டு மேலே செல்லவும் நேரம் சரியாக இருந்தது.
துருவனைப் பார்த்த வைதேகி,
“சாப்பிடலயா துருவா..” என்று அன்பாகக் கேட்க,
“இதோ 2 மினிட்ஸ்ல குளிச்சிட்டு வாரேன்மா..” என்று கூறிவிட்டு மாடிப்படிகளில் தாவிக் குதித்து அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.
“உள்ளே சென்றதும் பின் இருந்து வள்ளியை வாரி அனைத்து கொண்டு,
“என்னோட அற்புதம் நாம நம்ம ரூமுக்கு வந்துட்டோம் இப்பதான் கம்பெட்டபுளா இருக்கு..”
“எனக்கும் தாங்க..”
“சரிம்மா கொஞ்சம் வெயிட் பண்ணு நான் குளிச்சிட்டு வரேன் உடம்பு ரொம்ப அழுக்கா இருக்கு..” என்று கூறியபடி குளியலறைக்குள் புகுந்தவன் குளித்துவிட்டு பத்து நிமிடங்களில் இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு தலையில் நீர் சொட்டச் சொட்ட வள்ளியின் அருகில் வந்து நின்றான்.
அவனது முறுக்கிய புஜங்களையும், பரந்த வெற்று மார்பையும் பார்த்த அற்புத வள்ளிக்கு கண்கள் கூச்சத்தில் படபடக்க உடனே தலையை திருப்பிக் கொண்டாள்.
அவள் முகத்தை திருப்பிக் கொள்வதை பார்த்த துருவன் அவள் அருகே மிகவும் நெருக்கமாக வந்து நிற்க, அவனது சிகையில் இருந்து வழிந்த நீர்த் துளி அவளது தோளின் மேல் விழுந்தது.
அந்த நீர் துளியின் ஸ்பரிசம் அவளை ஏதேதோ செய்து இம்சித்தபடி அவள் உடலில் இறங்கி பயணம் செய்யத் தொடங்கியது.
அதன் பயணப் பாதையை உணர்ந்த வள்ளி நிமிர்ந்து துருவனைப் பார்க்க அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த துருவன் அவளது வதனத்தை இரு கைகளாலும் ஏந்தி அவளது திராட்சை உதடுகளை கவ்விச் சுவைக்கலானான்,
எவ்வளவு நேரம் அதன் சுவையில் மயங்கிக் கிரங்கி நின்றானோ தெரியவில்லை. தாகம் அடங்காமல் உணர்ச்சிகள் எல்லை மீறி தரிகெட்டு ஓட உடனே மெத்தையில் மேல் விழுந்து அவளை தன் மார்பின் மீது தூக்கி வைத்து மீண்டும் பித்தம் கொண்டது போல் முத்தச் சுவையில் மூழ்கினான்.
அவனது முத்த தாக்குதலில் மூச்சு எடுக்கவும் சிரமப்பட்ட வள்ளி அவனிடமிருந்து திமிறி மூச்சுக்காக எழ முயல ஐயோ பரிதாபம் அவனது பிடியிலிருந்து விடுபட முடியாமல் தவிக்க வேண்டியதாயிற்று வள்ளிக்கு.
ஒருவித தவிப்பில் சிக்குண்ட துருவன் அவளது இதழ்களுக்கு தற்காலிக விடுதலை கொடுக்க,
வள்ளியும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மிக வேகமாக மூச்சுகளை விட்டுக் கொண்டிருக்க, அதனைப் பார்த்து புன்முறுவல் அளித்தபடி,
அவளுடைய காதோரம் இருக்கும் பூனை முடிகளை ஒதுக்கி விட்டவன் அப்படியே கைகள் தவழ்ந்து வந்து அவளது கழுத்தின் அருகே அதன் மென்மையை தேடி அங்கே சரசம் செய்தது.
அவனது வருடலில் உடல் சிலிர்க்க சிணுங்கியபடி உடனே அவனது கைகளுக்கு தடா போட, அந்த முரட்டுக் கரங்கள் வள்ளியின் கைகளைத் தாண்டி பல வித்தைகளை நிகழ்த்தத் தயாராக இருந்தது.
கைகள் செல்லும் பாதையை தடுக்க முடியாமல் தவித்த வள்ளி புழுவாய் நெளிந்தாள்.
துருவனோ அவளது முகத்தில் தெரியும் உணர்ச்சிகளின் ரசவாதத்தை பார்த்ததும் அவனது நரம்புகளில் மின்சாரம் தீண்டியது போல அவள் மீதான தாபம் மேலிட்டு உடலெங்கும் பரவத் தொடங்கியது.
அவளுடன் இணைந்து ஒன்றி அவளது ஆடைகளுக்கு விடுமுறை கொடுக்க எண்ணியவன், அதனை லாவகமாக செயல்படுத்த,
அவன் எதிர்பாராத நேரம் “சும்மா போங்க..” என்று அவனது பிடியிலிருந்து விடுபட்டு எழுந்து கொண்டாள் அற்புதவள்ளி.
“என்ன அற்புதம்..?” என்று குழந்தையின் கையில் இருந்து சிறு பொருளைப் பறித்தால் எப்படி கதறி அழுமோ அதுபோல துருவன் சினுங்கினான்.
“என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு பகல்லேவா..?” என்று வள்ளி அதட்ட,
“சாரிங்க மிஸ்ஸஸ் துருவன் அப்போ ஆவுஸ்திரேலியாவில் நடந்தது எப்போன்னு ஞாபகத்துல இல்லையோ..!” என்று கிண்டல் அடிக்க,
வள்ளியின் வதனமோ அன்றைய நினைவுகளில் சிவந்து போனது. துருவன் அதை ரசித்தபடி, கண் சிமிட்ட,
“நான் உங்க கூட முக்கியமான விஷயம் ஒன்னு பேசணும்..”
“சரி இங்க பக்கத்துல வந்து உட்காரு பேசுவோம்..”
“இல்ல உங்கள நம்பி நான் பக்கத்துல வரமாட்டேன் வந்தா நீங்க பேசவே விட மாட்டீங்க..”
“என் மேல பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தாத அற்புதம் பின்னுக்கு ரொம்ப வருத்தப்படுவ..”
“ஐயோடா இப்போ நடந்தது என்னவாம்..”
“அது சும்மா ஒத்திகை..” என்று வாயில் இருக்கும் அவ்வளவு பற்களும் தெரிய சிரித்தவன், வள்ளி முறைப்பதைப் பார்த்து,
“ஓகே ஓகே கூல் நீ நம்பி பக்கத்துல வரலாம் நான் ஒண்ணுமே செய்ய மாட்டேன் வா வந்து பக்கத்துல உட்காரு..” என்றதும் அருகில் வந்து அமர்ந்தாள்.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் சிந்தித்துக் கொண்டிருக்க,
“என்ன அற்புதம் பேசணும்னு சொல்லிட்டு யோசிச்சுகிட்டு இருக்க ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்க,
“இல்லைங்க நான் படிக்கணும்னு ஆசைப்படறேன்..”
“தாராளமா படி யாரு வேணாம்னு சொன்னா இந்த சின்ன விஷயத்துக்கு போயா இவ்வளவு யோசிச்சிட்டு இருக்க”
“இல்லைங்க இந்த படிப்பால நான் இவ்வளவு நாளும் பெருசா கஷ்டத்த அனுபவிச்சதில்லை யாராவது ஏதாவது எழுத வாசிக்க கேட்டாங்கன்னா அப்ப நான் படிக்கலைன்னு சொல்லுவேன் அவங்களுக்கு என்னால இந்த விஷயத்துல உதவ முடியலையே என்று மனசுல சின்ன வருத்தமா இருக்கும்
அப்புறம் நான் எங்கேயும் பெருசா ஊரை விட்டு வெளியே போனதே இல்லை அப்படி போனாலும் அம்மா அப்பாவோட தான் போவேன்
அதனால வெளி உலகம் எனக்கு அறிமுகம் இல்லாத ஒன்று ஆனால் வாழ்க்கையில மறக்கவே முடியாத அளவுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னுக்கு நடந்த சம்பவத்துல படிப்பு எவ்வளவு முக்கியம் என்று வாழ்க்கை எனக்கு நல்லா கற்று தந்துட்டு
நீங்க காணாமல் போன நேரம் என்னால யார்கிட்டயும் எதையுமே கேட்க முடியல அந்த இடத்துல ஒரு வாய் பேசத் தெரிஞ்சும் நான் எல்லார் முன்னாடியும் ஊமையாகத்தான் தெரிஞ்சேன்
நான் சொல்ற மொழி அவங்களுக்குப் புரியல அவங்க சொல்ற மொழி எனக்குத் தெரியல இதே அந்த இடத்துல நான் படிச்ச ஒரு பெண்ணா இருந்திருந்தால் இந்நேரம் அவங்க கூட பேசி ஏதாவது ஒரு முயற்சி எடுத்திருப்பேன்
அந்த இடத்துல வசுந்தரா ஆன்ட்டி மட்டும் இல்லேன்னா என்னோட நிலைமை என்னவா இருந்திருக்கும் அங்கேயே பைத்தியக்காரி மாதிரி உங்களைத் தேடி அலைந்து திரிந்து இருப்பேன்
வந்த பாதையும் தெரியாது போன பாதையும் தெரியாது மொழியும் தெரியாது என்னுடைய நிலைமை எப்படி இருந்திருக்கும் எல்லாத்துக்கும் காரணம் அந்த படிப்புத்தான் படிப்பு இல்லன்னா எதுவுமே இல்லைன்னு மண்டையில சுத்தியல் வச்சு அடிச்சது போல எனக்கு அந்த தருணத்தில் அந்த நேரத்துல கல்வியின் முக்கியத்துவத்தை வாழ்க்கை அனுபவத்தால உணர்த்திடுச்சு
நாளைக்கு என்னோட சந்ததியில பிள்ளை படிக்கும்போது என்கிட்ட ஒரு சந்தேகம்னு என் முன்ன வந்து நின்னா நான் எப்படி அதை புரிய வைப்பேன்.
நீயே படிக்கல நான் ஏன் படிக்கணும்னு என்னோட புள்ள கேட்டா அந்த நேரம் என் பிள்ளைக்கு முன்னுக்கு நான் தலை குனிந்து நிற்கிறது விட நான் படிச்ச தாயா இருந்தா அதற்கான விளக்கத்தை கொடுத்து என் பிள்ளையோட கல்விக்கும் நான் ஒரு வழிகாட்டியாக இருப்பேன்
நாளைக்கே வளர்ந்து வந்த அந்தப் பிள்ளையே என்னைய படிக்காத பட்டிக்காடு தானே நீ உனக்கு என்ன தெரியும் என்று கேட்டால், ரேகா சொன்னதும் உண்மைதானே நான் படிக்காத பட்டிக்காடு தான்..” என்று கூறும்போது பள்ளியின் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் கசிந்து கீழே விழுந்தது.
வள்ளியின் கண்ணீரைத் துடைத்த படி,
“இங்க பாரு அற்புதம் நீ சொல்றது ஒரு வகையில உண்மைதான் கல்வி என்றது எல்லாருக்கும் வாழ்க்கையில முக்கியம்தான் கல்விதான் அறிவுக்கு வழிகாட்டியா இருக்கிறது வாழ்க்கைய இயக்க ஒரு கருவியா பயன்படுறது கல்விதான்
ஆனால் அது உனக்கு கொடுக்க வேண்டிய வயசுல கொடுக்கப்படவில்லை அதுக்கு எங்க அம்மாவும் ஒரு காரணமா போயிட்டாங்க அதனால இதுல நானும் சம்பந்தப்பட்டு தான் இருக்கேன்
உனக்கு எங்க படிக்கணும், எப்படி படிக்கணும், என்ன படிக்கணும் என்று சொல்லு நான் உனக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய காத்திருக்கேன் ஆனா திரும்பவும் இப்படி பட்டிக்காடு என்று பேசிடாதே எனக்கு மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு அந்த வார்த்தையை என்னால கேட்க முடியல என்னோட டெலன்டான பொண்டாட்டிட புத்திசாலித்தனத்தால தான் நான் ருத்திரபிரசாத்திட்ட இருந்து தப்பிச்சேன் அது ஞாபகத்தில் இருக்கட்டும்..” என்று துருவன் கன்னம் கிள்ளிக் கூற,
“அது சரி ரேகான்னு சொல்லத்தான் ஞாபகம் வந்துச்சு ருத்திரபிரசாத்துக்கும் ரேகாவுக்கும் என்ன ஆச்சு நான் ரொம்ப நாளா உங்க கிட்ட கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்..”
“ருத்ரபிரசாத் என்ன கொலை பண்ண முயற்சி செய்ததால் ஆவுஸ்திரேலியா போலீஸ்கிட்ட கையும் களவுமாக மாட்டிட்டான் அதனால அவனை போலீஸ் புடிச்சிட்டு போயிட்டு
அதுல இருந்து எப்படியும் அவன் தப்பிச்சிடுவான் என்று தெரியும் அதனால அவன் ஹொக்கைன் கடத்தினான் என்று அவன் மேல பொய் கேஸ் போட்டு அவனை உள்ள தள்ளிட்டேன் இனி ஜென்மத்துக்கும் ஜெயிலிலிருந்து வெளியே வர இயலாது..”
“அப்போ ரேகா..?”
“ரேகா அவளோட கதையே வேற உன்ன மானபங்கப்படுத்தி அவமானப்படுத்தினவள நான் சும்மா விடுவேனா அவ தப்பான பிசினஸ் செய்றானு அவளை ரெட் லைட் ஏரியால ஒரு பொண்ண வைத்து மாட்டி விட்டுட்டேன் இப்போ அவங்க அண்ணனுக்கு பக்கத்து ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருக்கா..”
“ஐயோ பாவங்க..”
“பாவம் பார்த்தால் இந்த உலகத்துல யாருமே வாழ முடியாது அற்புதம்..”
“சரி வா நான் உனக்கு முக்கியமான சப்ஜெக்ட் சொல்லித் தாரன்..”
“இல்ல இன்னொரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும்..”
“என்னம்மா..?”
“அ..அது வந்து அது.. இப்போதைக்கு குழந்தை எதுவும் வேணாமே..!” என்று வள்ளி தயங்கினாள்.
“ஏன்… ஏன்.. ஏன்.. ஏன்..” என்று அதிர்ச்சியும் கோபமும் பொங்கி எழக் கேட்டான் துருவன்.
துருவனின் இத்தகைய கோபத்தைக் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டவள், வெளியே அப்பாவியாக,
“என்னங்க இத்தனை தடவை கேக்குறீங்க அதுதான் சொன்னேனே படிச்சு முடிச்சுட்டு..”
“படிப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல சூரியவம்சம் படம் பார்த்ததில்லையா அதை மாதிரி நீ பிள்ளைய பெத்து தந்துட்டு படிக்க போவியாம் நான் பிள்ளையை வளர்த்தெடுத்து அன்பா பார்த்துபனாம்..”
“அசுக்கு புசுக்கு ஆசை தோசை நீங்க மட்டும் புள்ள கூடவே இருப்பீங்களாம் நான் பிள்ளையை பிரிந்து இருக்கனுமோ அப்படி பிரிஞ்சு இருக்கும்போது எப்படி படிக்கலாம் படிப்பு மண்டையில ஏறவே ஏறாது..”
“அத அப்புறம் பாத்துக்கலாம்..”
“இல்…” என்று வள்ளி வாயில் இருந்து வார்த்தைகள் வர முன் அவளது உதடுகள் துருவனின் உதடுக்குள் சிக்குண்டு சிறைபிடிக்கப்பட்டது.
அவளது கண்ண கதகதப்புகளை உரசிய வண்ணம் தற்போது அவளை முத்த பேரலைக்குள் மூழ்கடித்து அதிலிருந்து மீண்டெழ முடியாமல் தவிப்புடன் சொக்க அவன் மேலேயே கிறங்கி விழுந்தாள் பேதையவள்.
இதுதான் தக்க தருணம் என்று எண்ணியிருந்த துருவன் அவளை தூக்கி மெத்தையின் மேல் போட்டு தனது விளையாட்டுகளை மெதுவாக ஆரம்பித்தான்.
மெல்லிய உடலில் அவனது கரங்கள் கவி இயற்ற அங்கே அழகான தாம்பத்தியம் சிறப்பாக அரங்கேறியது. கன்னங்களுடன் சேர்ந்து அவளது உடலும் சிவந்து போக துருவனின் ஆண்மை அணை இல்லா ஆசைகளை அவள் மீது வாரி இறைத்தது.
முன்பு முரணாக அடம் பிடித்தவள் பின்பு அவனது ஆசைக்கு அசைந்து கொடுத்து அவனது இன்பத்தையும் தனதாக்கி பகிர்ந்து கொண்டாள்.
இரு உள்ளங்கள் ஈருடலில்
ஓர் இன்பத்தை உணர்வித்து
இல்லறத்தின் இன்பம் தன்னை
எண்ணி இருமனது ஓர்
மனதாய் ஒன்றாய் உயிராய்
கலந்து சுகத்தில் மிதந்து
தனது காதலை தங்களது
மனதில் தடம் பதித்திட
அன்பின் உன்னதத்தை தனதாக்கிட
இரு கிளிகள் ரத்தமின்றி
முத்தத்துடன் போர் புரிந்தன.
முரணாய்த் தாக்கும் அரனாய் எப்பொழுதும் அற்புத வள்ளியுடன் துருவன் தோள் கொடுத்து வாழ்வில் தோழமையுடன் அவள் பயணத்தில் கைகோர்த்து ஒன்றாக பயணித்தான்.
இனிதே எனது இரண்டாவது கதையும் நிறைவடைந்து விட்டது இக்கதையினை வாசிக்கும் போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை என்னுடன் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
என்றும் உங்கள் அன்புத் தோழி
இயல் மொழி…