அத்தியாயம் 2
இனிதுழனியிடம் கூறியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை சகிதம் நெற்றியில் சந்தனக்கீற்றுடன் முழங்கை சட்டையை மடக்கி கையில் இருக்கும் காப்பினை மேல் நோக்கி ஏற்றிவிட்ட வண்ணம் மிடுக்கான தோரணையில் கீழ் இறங்கி வந்தான் இன்னுழவன். இறங்கி வருபவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர் வீட்டின் முன் கூடத்தில் ஊர் பெரியவர்கள். முன் கூடம், நடு கூடம், சுற்றிலும் வாழை, தென்னை, தோட்டம், கீழே பூஜை அறை மற்றும் சமையலை அறையுடன் கூடிய மூன்று அறைகள், […]