உயிராய் உணர்வில் உறைந்தவளே

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(5)

என்னடி ஏன் அப்பா பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொன்ன என்ற குந்தவையிடம் எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சுருக்கு என்றாள் சங்கவி. வாவ் சூப்பர் யாருடி அது என்ற குந்தவையிடம் எல்லாம் உன் ஆளோட அசிஸ்டென்ட் அந்த கார்முகிலன் தான் என்றாள் சங்கவி. அந்த ஆளா உங்களுக்குள்ள எப்படி லவ் செட் ஆச்சு என்றவளிடம் இன்னும் செட் ஆகலை சீக்கிரமே செட் ஆகிரும் என்றாள் சங்கவி. அடிப்பாவி ஒன்சைடு லவ்வா என்ற குந்தவையிடம் அந்த ஆளுக்கும் என் மேல […]

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(5) Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(4)

எவ்வளவு நேரம் இப்படியே அமர்ந்திருப்பது என்று நினைத்த குந்தவை எழுந்து செல்ல அவள் அமர்ந்திருந்த இடத்தில் நின்றிருந்த படகின் மறுபுறம் இருந்து உதிரனும் எழுந்தான். அங்கு அவனைக் கண்டவள் எழில் என்று அவனது கையை பிடிக்க அதை உதற முயன்றான். அவள் விடாமல் பிடித்தவள் என்னை மன்னிக்கவே மாட்டிங்களா எழில் என்றதும் மன்னிக்கவா உன்னையா நான் செத்தபிறகு செய்ய என்றவன் வார்த்தையை முழுங்கிக் கொண்டு நீ செய்த காரியத்தை வாயால கூட சொல்ல முடியலடி. உனக்கு தெரியும்லடி

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(4) Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே..(3)

சங்கவி சோகமாக தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரம் என்னங்க ஒரு நிமிசம் என்று வந்தான் கார்முகிலன். சொல்லுங்க என்ற சங்கவியிடம் நீங்க இதை மறந்து வைத்து விட்டு வந்துட்டிங்க என்றான். அது குந்தவையின் செயின் அதை வேண்டும் என்று தான் அங்கு வைத்து விட்டு வந்தாள். அதை தெரிந்து கொண்ட உதிரன் முகிலனிடம் கொடுத்து அனுப்பினான். உங்க இன்ஸ்பெக்டர் கொடுத்து விட்டாங்களா என்ற சங்கவியிடம் ஆமாம் என்றான் முகிலன். அவள் அதை வாங்கிக் கொண்டு கடவுளே

உயிராய் உணர்வில் உறைந்தவளே..(3) Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(2)

சர்க்கரவர்த்தி கொலை நடந்து இரண்டு வாரங்கள்  கடந்த நிலையில் பள்ளி வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. குந்தவை தன் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் எதையோ பரிகொடுத்தது போல அமர்ந்திருந்தாள் ஒரு மாணவி அவளது பெயர் தாரிகா. அவளைக் கவனித்த குந்தவை அமைதியாக பாடம் நடத்தினாள்.  மற்ற மாணவர்கள் ஆர்வமாக பாடத்தை கவனித்தனர். குந்தவையை பிடிக்காத மாணவர்கள் யாருமே அந்த பள்ளியில் இல்லை. அவள் மற்றவர்களுடன் பழகும் விதமும், மாணவர்களிடம் தான் ஒரு தோழி போலவே

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(2) Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(1)

அழகான காலை வேளையில் இரை தேடும் பறவைகளாக மக்கள் கூட்டம் கூட்டமாக நகரமெங்கும் பரவிக் கிடந்தனர். அவரவர் தங்களின் வேலைகளுக்கு வாகனநெரிசலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களின் பயன்பாட்டிற்கு உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஆறடியில், சிக்ஸ்பேக் உடல்கட்டுடன், குத்தீட்டி பார்வையுடன் கூடிய பழுப்பு நிற விழிகள், கூரிய நாசி, புகைப்பழக்கம் இல்லாததால் சிவந்த உதடுகள், அளவான அழகான மீசையுடன் கூடிய ஆணழகனான இருபத்தி எட்டு வயது வாலிபன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். உடற்பயிற்சியை

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(1) Read More »

error: Content is protected !!