கனவே சாபமா..!

கனவே சாபமா 08

கனவு -08 அவளுடைய பதிலில் கௌதம் ஆடிப் போயிருக்க டாக்டரோ கௌதமிடம் திரும்பியவர், “கௌதம் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க நான் துவாரகா கிட்ட பேசிட்டு அப்புறமா நான் உங்களை கூப்பிடுறேன்” என்றார். அவனோ அவரிடம் சரி என்றவன் துவாரகாவை ஒரு அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான். அவன் வெளியேறியதும் துவாரகாவிடம் பேச ஆரம்பித்தார் அமராந்தி. அவள் தனக்கு முதன்முதலாக எப்போது அந்த கனவு தோன்றியது. அதில் வந்த காட்சிகள் என்று […]

கனவே சாபமா 08 Read More »

கனவே சாபமா 07

கனவு 07 துவாரகா கௌதமின் கையில் கத்தியை திணித்தவள் அதை தன்னுடைய கழுத்தில் வைத்து அழுத்தியவாறு அவனை கொள்ள சொல்ல இவ்வளவு நேரமும் பொறுமையாக இருந்து அவளுடைய பிதற்றளை கேட்டுக் கொண்டிருந்த கௌதமுக்கு பொறுமை காற்றோடு கரைந்து போக விட்டான் அவளுடைய கன்னத்தில் பளார் என்று ஒரு அறையை. அதில் பொத்தென்று கட்டிலில் விழுந்தாள் துவாரகா. அதில் அவளுடைய கனவும் கலைந்து போக கன்னத்தில் சுளிர் என்ற வலி அவளைத் தாக்க ஒற்றை கையால் அதை தேய்த்தவாறே

கனவே சாபமா 07 Read More »

கனவே சாபமா 06

கனவு -06 “கௌதம் கௌதம் எங்க இருக்கீங்க” என்று அவனை அழைத்து கொண்டே அவனுக்கு பிடித்த குலாப் ஜாமுனை செய்து கொண்டு எடுத்து அவர்களுடைய அறைக்கு வந்தவள் தன்னுடைய கணவனை காணாது அந்த அறை முழுவதும் தேடினாள். அவள் சமையல் கட்டில் அவனுக்காக குலாப் ஜாமுன் செய்ய உள்ளே சென்றபோது அவனோ வெளியில் சென்று விட்டான். அது கூட தெரியாமல் இப்பொழுது வந்து அவர்களுடைய அறையில் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள் துவாரகா. சற்று நேரத்திற்கு முன்பு கோபமாக

கனவே சாபமா 06 Read More »

கனவே சாபமா 05

கனவு -05 அமையாதேவி தனக்கு இருந்த கடும் கோபத்தில் சேனபதி சாயராவின் பிடரி முடியை கொத்தாக பிடித்து அவளை அடிக்க போக அச்சமயம் அங்கு வந்தான் கௌதமாதித்தன். “அமையா என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ முதலில் சாயரா மேலிருந்து கையை எடு இல்லை என்றால் இப்பொழுதே சேனபதி சாயரா மேல் அத்துமீறி நடந்து கொண்டதற்கா உன்னுடைய கையை வெட்டி விடுவேன்” என்றான் கௌதமாதித்தன். “தாங்கள் என்ன கூறினீர்கள் மன்னா இந்த வேசி பெண்ணிற்காக தங்களுடைய மனைவியான என்னுடைய

கனவே சாபமா 05 Read More »

கனவே சாபமா 04

கனவு -04 தான் கண்ட கனவினால் பதறி அடித்து எழுந்தாள் துவாரகா. தன்னுடைய அணைப்பில் இருந்து சட்டென அவள் விலகியதும் கௌதம் தூக்கம் கலைந்து எழுந்து அவள் அருகில் அமர்ந்தவன் கண்களை கசக்கியவாறு, “என்ன துவாரகா என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துற” என்று கேட்டான். அவளோ, “என்னங்க நேத்து வந்த அதே கனவு இன்னிக்கும் வந்தது. நீங்க நேத்து மாதிரி இன்னைக்கும் என்ன கொன்னீங்க அவளோட பேச்ச கேட்டு நேத்தே மாதிரி இன்னைக்கும் என்ன நீங்க

கனவே சாபமா 04 Read More »

கனவே சாபமா 03

கனவு -03 துவாரகாவும் கௌதமும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள். ஒரே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஒருவருக்கு மேல் மற்றவருக்கு விருப்பம். காலப்போக்கில் அது காதலாக உருவெடுத்தது. கல்லூரி படிக்கும் நேரமும் வர தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள் இருவரும். ஒரு கட்டத்தில் இருவருடைய வீட்டிற்கும் தெரியவர இரு குடும்பமும் இவர்களுடைய காதலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. காரணம் இருவரும் வேறு வேறு ஆட்கள் என்பதால். அதனால் இரு வீட்டிலுமே பயங்கரமான எதிர்ப்பு தெரிவிக்க

கனவே சாபமா 03 Read More »

கனவே சாபமா 02

கனவு -02 “ஏன் இப்படி கத்துற துவாரகா என்ன கனவில எதுவும் பேய் பார்த்தியா” என்றவாறு அவள் அருகில் அமர்ந்தான் கௌதம் அவளுடைய கணவன். “நீங்க நீங்க என்ன கொன்னுட்டீங்க” என்று அதிர்ச்சியோடு உரைத்தாள் துவாரகா. அதில் புருவங்கள் முடிச்சிட அவளை பார்த்த கௌதமோ, “என்னடி இப்படி காலங்காத்தால உளர்ற நான் உன்னை கொன்னுட்டேனா.. அப்போ மேடம் என்ன சொர்க்கத்துலயா இருக்கீங்க.. இங்க பாரு நம்ம ரெண்டு பேரும் பத்து வருஷமா காதலிச்சு எவ்வளவோ பிரச்சினையை எதிர்த்து

கனவே சாபமா 02 Read More »

கனவே சாபமா..! 01

கனவே சாபமா..! கனவு -01 அந்தி சாயும் வேலை. அந்த இரவு நேரத்தில் சுற்றி எங்கும் பசுமையாக காட்சியளித்தது. மிகப்பெரிய அரண்மனை அது. அந்த அரண்மனையில் தனக்கும் தன் மன்னவனுக்குமான அறையில் உள்ள பால்கனியில் நின்று ஜன்னலின் ஊடாக அங்கு குளத்தில் வீற்றிருக்கும் வெள்ளை நிற தாமரை மலர்களை கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவ்வப்பொழுது அவளுடைய விழிகளோ தன்னுடைய மன்னவனை காண ஏங்கியது போல் அறையின் வாயிலை அவப்பொழுது தழுவின. அந்த இருட்டில் நிலவின் வெளிச்சத்தில்

கனவே சாபமா..! 01 Read More »

error: Content is protected !!