காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ..

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 20 🖌️

“குளிர்ந்த நீர் உடலை வேகமாக நனைக்க அதில் நடுங்கி எழுந்து அவனை “ஆதி…” என வேதனையோடு பார்த்தாள்.   அவன் அவளின் கையில் போடப்பட்டிருந்த கைவிலங்கைக் கழட்டிவிட்டு கையிலிருந்த உணவுத் தட்டை நீட்டி “சாப்பிடு…” என்று கொடுக்க   “எனக்கு வேணாம்.” என தட்டை தூக்கி எறிந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.   அதில் அவனுக்கு கோபம் வந்துவிட கழுத்தை வேகமாகப் பிடித்தவன், “இத சாப்பிடாம செத்து போக போறியா?” என்றான் பல்லைக் கடித்து.   “ஆமாம்… […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 20 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 18 🖌️

பொற்கதிரோன் கிழக்கு வாயிலில் அத்துமீறி நுழைய அதன் வெப்பத்திலும் வெளிச்சத்திலும் பறவைகளும் மிருகங்களும் தங்களுக்காக உணவு தேடச் சென்று விட்டன. ஆனால் இங்கு ஒருத்தன் இன்னும் எழுந்த பாடில்லை. பின்னர், நடு இரவு வரை விழித்திருந்தால் இப்படித்தான் பகல் முழுவதும் தூக்கம் பேயாட்டம் ஆடும். அதுதான் அவன் நிலை. வழமையாக காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விடுவான். ஆனால் இன்று அவன் தூங்கியதே ஐந்து மணிக்குத் தானே. இப்போது எட்டு மணியாகியும் தூங்கிக் கொண்டிருக்கிறான்.   இவன்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 18 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 17 🖌️

அரை நிலா வெளிச்சத்தில் பாறையில் அமர்ந்து கொண்டவன் பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க கண்கள் கலங்கி கண்ணீர் ஊறியது ஆதிக்கு. நிலாவையே வெரித்து வெரித்துப் பார்க்க குழந்தை அவனை நோக்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்னரை மணித்தியாலமாக இருக்க பொறுமை தாங்காதவள் அவனை தன் பிஞ்சுக் கரங்களால் வருடி திசை திருப்பினாள். ஆனால் அவன் வானை நோக்கி பார்த்தவாறே “என்ன?” எனக் கேட்க “நீங்க மிஸ் பண்றீங்களா? நான் உங்களை விட அதிகமா மிஸ் பண்றேன்.” என்றாள் காவ்யாவையும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 17 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️

பாட்டி “இனிமேல் நீ என் பேத்தியே இல்ல. உன்ன நாங்க எல்லாருமே தலை மூழ்குறோம். என் பேச்ச கேட்காத உனக்கு இந்த வீட்டுலயும் இடமில்லை. எங்க மனசுலையும் இடமில்லை. இனிமேல் நீ யாரோ. நாங்க யாரோ. உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” கத்தினார் காது வெடிக்க. “அம்மாஆஆஆ…” என கண்ணீரோடு நா தழுதழுக்க அழைத்தார் மகாலக்ஷ்மி. “நிறுத்து… உன் பொண்ணுன்னதால அவ பின்னாடியே போகனும்னு நினைச்சேன்னா நீயும் போகலாம். நாங்க யாரும் தடுக்க மாட்டோம். ஆனா

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 15 🖌️

“பார்வதி வெளியில வா… பார்வதி.” எனக் மாணவர்கள் சத்தமாகக் கத்த “டேய் யார்டா அவன் என்னையே பெயர் சொல்லி கூப்பிடுறது?” என்றவாறு வெளியே வந்தார் பாட்டிம்மா அவரது மருமகன் விஜயனுடன். “போச்சுடா…” என்றவாறு சத்யாவைப் பார்த்தான் ஆதி. “டேய்… மாமா. பேசாம எஸ்கேப் ஆயிடலாம். பாட்டி சும்மாவே பரதநாட்டியம் ஆடும். இதுல இவனுங்க சலங்கைய வேற கட்டி விட நினைக்கிறானுங்க. அவ்ளோதான். மெல்ல இங்கெருந்து நகர்ந்துடு.” என்று கண்கலாளேயே சைகை செய்தான் ஆதி. அவன் சொல்வது சரிதான்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 15 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 14 🖌️

சத்யா குளித்துவிட்டு வெளியே வர, ஒரு கூட்டம் கரம் விளையாட, இன்னொரு கூட்டம் செஸ் விளையாட அடுத்த கூட்டம், மொனோபோலி விளையாட மற்றொரு கூட்டம் கார்ட்ஸ் என பொழுதைக் கழிக்க சில பேர் சேர்ந்து கொண்டு டீவியில் மெட்ச் பார்த்தவாறு பொப்கோர்னை கொட்டிவிட்டு வீட்டை நாசம் செய்து கொண்டிருந்தனர்.   அடுத்த பக்கம் பெண்கள் குழுவினர் சமைத்துக் கொண்டு இருக்க “டேய்… என்னங்கடா? என் வீட்டையே போய்ஸ் ஹொஸ்டலா மாத்திட்டீங்க?” என்றான் பாவமாக.   “அதெல்லாம் அப்படித்தாண்னா

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 14 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 13 🖌️

கீழே உயிர்போகும் நிலையில் கிடந்தவனைப் பார்த்து அனைவரிடமும் “இவனை அள்ளிக்கிட்டு போய் ஹொஸ்பிடல்ல சேத்து விடுங்கடா. செத்துக் கித்து போய்ட போறான்.” என்றதும்  எவனும் முன்வரவில்லை. அதில் சற்று அதிர்ந்த சத்யா “என்னாங்கடா? எவனும் வர மாட்டேங்குறீங்க?” எனக் கேட்க அதில் ஒருத்தன் “இவன நாங்க தூக்கிட்டு போய் ஹொஸ்பிடல்ல சேரக்கனுமா? இப்படியே கிடந்து சாகட்டும்.” என்றான். “எவன்டா அவன்?” எனக் கேட்டான் சத்யா. அமைதியாக இருந்தது முழு இடமும். “இப்போ ஒரு குரல் வந்துச்சுல்ல? அந்தக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 13 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️

சூரியன் பொற்கதிர்களை தன் உறக்கத்தை கெடுத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் பூமியில் வீசிக் கொண்டிருக்க, தலைமுடியை வெட்டி க்ளீன் சேவ் செய்து தலைவாரி நேர்த்தியான வெண்மையான சேர்ட் ஒன்றை தன் கருநீல நிற கால்சட்டையினுள் டக் இன் செய்த சத்யா சூரிய உதயத்தைப் பார்த்துக் கொண்டே கோபியை அருந்திக் கொணடிருந்தான். அவன் பின்னே வந்து நின்றான் விநோத். அவன் கோலத்தைப் பார்த்தவன் “ராம்… இப்போ இப்படி ட்ரஸ் பண்ணிட்டு எங்க போக போற?” எனக் கேட்டான் எதுவும் புரியாதவனாக.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 11 🖌️

காவ்யா பாட்டியின் பக்கம் போய் நின்று “பாட்டி எனக்கு சத்யா வேணாம். நீங்க எல்லாரும்தான் வேணும்.” என கண்ணீருடன் கூற   பாட்டி கர்வமாய் “பாத்தியாடா… எங்க பொண்ணு. எங்க ரத்தம். எங்களுக்கு துரோகம் பண்ண மாட்டா. அவ நாங்க சொல்றதுதான் கேட்பா.” என பெருமையாகக் கூறிக் கொண்டார். சத்யாவுக்கு பாரிய அவமானம்.   “கேட்டேல்ல? நீ வேணாமாம். இப்போ வெளில போறியா? இல்லை கழுத்தை பிடிச்சு தள்ளணுமா?” என்றார் ஆர்.ஜே திமிராக.   “டேய்…” எனக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 11 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 10 🖌️

வீட்டு வாசலின் முன் மாணவர்கள் கூட்டம் கூடியிருக்க, அனைவரையும் உள்ளே போக விடாமல் தடுத்தவாறு பொலிஸ் அதிகாரிகள் நிற்க பூகம்பமே வெடித்தது. உள்ளே சத்யா போட்டிருந்த வெண்மை நிற டீ சேர்ட்டில் இரத்தம் படிந்து தன் தலைமுடி கோலம் கலைந்து கண்கள் வெடித்து சிவந்து நரம்புகளுக்குள் சினம் ஊடுறுவ கண்ணீர் ஒரு பக்கம் கண்களை எரித்துக் கொண்டு வெளியேற இன்னும் இரத்தம் நாடி நாளம் நரம்பு என அனைத்திலும் பழி உணர்வு ஊடுறுவி கொதிக்க கைகள் இரண்டையும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 10 🖌️ Read More »

error: Content is protected !!