நாயகனின் மைவிழியே..!!

மைவிழி – 14

அனைவரது பேச்சும் மைவிழி மற்றும் ருத்திரதீரன் பற்றியே  இருந்தது. எங்கிருந்தோ வந்த புதுமுக கதாநாயகியை கொண்டு எடுத்த படமோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு பல நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் ருத்ரதீரனுக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்கள். தன் படத்தின் வெற்றியை கொண்டாட நினைத்த ருத்ரதீரன் தன் திரையுலக நண்பர்கள் என அனைவரையும் அழைத்தான். அந்த நிகழ்வுக்கு மைவிழியும் ருத்ரதீரனும் ஒன்றாக சென்று ஹோட்டலில் இறங்கியதும் கேமராக்கள் இருவரையும் சூழ்ந்துக் கொண்டது. அங்கே இருவரும் அமர நிகழ்வும் […]

மைவிழி – 14 Read More »

மைவிழி – 13

கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து சத்தமிட்ட மைவிழி தற்போது மிகப்பெரிய பொல்லாத பூச்சியிடம் மாட்டிக் கொண்டாள். ஆம் அவளை தூக்கி கட்டிலின் மீது போட்டான் தீரன் அவளோ மோகம் கலையாமல் இருந்தாலும் தன் அருகில் இருந்த போர்வையை கொண்டு உடலை மூடி, “சார்ர்ர் எனக்கு வெட்கம் வெட்கமா வருது, நீங்க என்னவோலாம் பண்றீங்க..” எனக் கூறினாள். அவன் அவளது பேச்சை கேட்காமல் தன் டீ சர்ட்டை கழற்றி கட்டிலில் அவளின் அருகே வர, “சார் வேணாம் இதுலாம்

மைவிழி – 13 Read More »

மைவிழி – 12

தன்னைப் பற்றி தவறாக செய்தி வந்து விட்டதே என கலங்கி நின்றவளை மணப்பதாக ருத்ரதீரன் கூறினான். அதைப் பற்றி சிந்திப்பதக்குள் மங்கையின் இதழ்களில் மையம் கொண்டு அவளின் சிந்தையை கலங்க வைத்தான். மைவிழியோ அவன் செய்ததில் உறைந்தாலும் கூட தீரனின் அன்பை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலும் அதை வெளிப்படுத்தாமல் இருந்தாள். ருத்ரதீரனின் மனதில் பூத்த காதல் மலர் தற்போது மைவிழியிடமும் துளிர் விட ஆரம்பித்தது. அவனது முத்தத்தின் வடுவினை கண்ணாடியின் முன் நின்று தன் இதழ்களில் பார்த்தவள்,

மைவிழி – 12 Read More »

மைவிழி – 11

அனைவருக்கும் விடுமுறை விட்ட ருத்ரதீரனோ அன்றைய தினம் மைவிழியை போட்டிங் அழைத்துச் செல்ல முடிவெடுத்திருந்தான். ஆகையால் அவளோடு காலையிலேயே தயாராகியவன் அவளைத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.     “நாம இப்போ எங்க போறோம்..?” “அது சஸ்பென்ஸ்..” “சப்பாத்தியா.?” “அம்மா தாயே போட்டிங் போறோம்டி.” “ஓஹ் போட்டியா.? என்ன போட்டிக்கு போறோம்.?” “இம்சை இம்சை போட்டி இல்ல போட்டிங்.. போட்டிங்னா படகு சவாரின்னு அர்த்தம்.” “ஹி ஹி.. சரி சார்.” என்றவளின் முகம் மலர்ந்தது.

மைவிழி – 11 Read More »

மைவிழி – 10

இருள் சூழ்ந்த வானில் தனிமையில் இருந்த நிலவின் அருகில் வந்தமர்ந்த நட்சத்திரம் போல ருத்ரதீரனின் வாழ்வினுள் வந்தாள் மைவிழி. தன்னை கவனிக்க எவரும் இல்லை என ஒரு நாள் கூட நினைத்துப் பார்க்காத ருத்ரதீரனுக்கு மைவிழியின் கவனிப்பு புதிதாக இருந்தது. பிடிக்கவும் செய்தது. தன் நினைவு தெரிந்து குறுகிய காலத்திலேயே தனிமையில் வாழத் தொடங்கியவன் தான் ருத்ரதீரன். ஆனால் தற்போது தன் படத்தில் நடிப்பதற்காக அழைத்து வந்த மைவிழியோ தன்னோடு இருக்கும் ருத்ரதீரனின் நலம் பற்றி கவனம்

மைவிழி – 10 Read More »

மைவிழி – 09

தன்னை சற்றும் அசைய விடாது பிடித்து வைத்து முத்தமிடுபவனை எதுவும் செய்ய முடியாது தவித்தவள் அடுத்த கணம் அவனுடைய மார்பிலேயே மயங்கி விழுந்தாள். கோபத்தில் அவளுடைய இதழ்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தவன் அவள் மயங்கிச் சரியவும் பதறிப் போனான். “ஓ நோ…” எனக் கத்தியவன் அடுத்த கணமே அவளைத் தன் கரங்களில் ஏந்த முயல, மயக்கம் போல நடித்துக் கொண்டிருந்தவளோ அவனுடைய பிடி தளர்ந்த அடுத்த கணமே அங்கிருந்து ஓடியே போனாள். தீரனோ அவளுடைய நடிப்பில் அசந்து

மைவிழி – 09 Read More »

மைவிழி – 08

அவளுடைய நீளமான கூந்தல் இடை தாண்டி தொங்க, கன்னத்தில் தொட்டு இசை மீட்டிய கற்றைக் கூந்தலை தொட்டு விலக்கியவாறு மீடியாவைப் பார்த்து அவள் மருளும் தோற்றம் மிக மிக மிக அழகாக புகைப்படம் ஆக்கப்பட்டிருந்தது. “வாவ் ஷீ லுக்ஸ் லைக் அ பிரின்ஸஸ்.” என்றவனுடைய விரல்களோ புகைப்படத்தில் இருந்த அவளுடைய முகத்தை வருடின. அவளுடைய கண்களில் தெரிந்த உணர்வுகளை படித்தவன் அவளை வித்தைக் காரி என எண்ணிக் கொண்டான். அந்த மருண்ட பார்வை அவனுக்கு புள்ளி மானை

மைவிழி – 08 Read More »

மைவிழி – 07

சென்னையில் வந்து அவனோடு தங்கிக் கொண்டவளுக்கு அனைத்தும் புதுமையாகஇருந்தது. பெரிய பெரிய கட்டிடங்களும் இடிப்பது போல வேகமாக செல்லும் வாகனங்களும்நவீன ஆடையுடன் திரியும் பெண்களும் அவளை வியக்க வைத்தனர். தீரனோ மைவிழியை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தன்னுடைய காரில் அழைத்து வந்துகொண்டிருந்தான். கார் வேகமாக செல்ல அவளுக்கோ விழிகள் பயத்தில் மூடிக் கொண்டன. படபடப்போடு அமர்ந்திருந்தவளைக் கண்ட தீரனோ அவளுடைய கரத்தை மெல்லபிடித்துக் கொண்டான். “டோன்ட் பேனிக்..” “பேனா..? என் தலைல பேன்லாம் இல்லைங்க.” என்றவளைக் கண்டு அவனுக்கோ

மைவிழி – 07 Read More »

மைவிழி – 06

இருள் சூழ ஆரம்பித்து சில மணி நேரத்தில் ருத்ரதீரனின் கார் வீட்டினை வந்தடைய அவனது வீட்டைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள் மைவிழி. “எந்தப் பெரிய வீடு…., எங்க ஊரே இங்கே இருக்கலாம் போலவே” என கூறிக் கொண்டே இறங்கினாள் மைவிழி. “எங்க ஊர்ல யார்கிட்டையும் தட்டு வீடு இல்லை, இவ்வளவு நாளா நான் இப்படி வீட்டை புத்தகத்தில தான் பார்த்திருக்கேன் இப்போ தான் முதல் தடவை நேர்ல பார்க்கிறேன்” என வாயை பிளந்த படி பார்த்துக்

மைவிழி – 06 Read More »

மைவிழி – 05

மைவிழியை நாயகியாக தெரிவு செய்தது மிகப் பெரிய தவறு என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில் ருத்ரதீரனின் யோசனையாலும் அவளது இயல்பான நடத்தையாலும் உருவான காட்சியை கண்டு அனைவரும் வாயடைத்துப் போனார்கள். தன் தெரிவு எப்போதும் பிழைத்துப் போகாது என விளங்கும் வகையில் ஆணவத்துடன் எழுந்து ருத்ரதீரன் அனைவரையும் பார்வையாலே சுட்டெரித்தான். மறுபக்கமோ மைவிழி சிறு பிள்ளை போல துள்ளிக் குதித்து சிரித்துக் கொண்டிருந்தாள். சுமார் பத்து நாட்கள் அந்தக் கிராமத்தில் இருந்து அவன் எதிர்பார்த்த அனைத்து காட்சிகளையும்

மைவிழி – 05 Read More »

error: Content is protected !!