முகவரி அறியா முகிலினமே..!
முகில் 12
இந்த எட்டு பேர்களில் ஒருவன் தடியால் ஆதிரனை தாக்க அந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டடி தள்ளி போய் விழுந்தான் ஆதிரன்.
விழுந்து உடனே எழுந்தவன்,
“பேசிக் கொண்டிருக்கும் போது யாருடா அது மேல கை வச்சது உண்மையான ஆம்பளையா இருந்தா இப்போ வாங்கடா..” என்று பெட்டியை கீழே இறக்கி வைத்து, கையில் இருந்த தனது நவீனரக கைக்கடிகாரத்தை கழட்டி, சட்டை காலர் பட்டனை திறந்து இரு கைகளிலும் சேட்டை மடித்து விட்டான்.
கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக அவர்கள் முன் நின்றாலும் மனதில் தன்னம்பிக்கையுடன் போரிட தயாராகினான் ஆதிரன்.
அவனது துணிச்சலை பார்த்து அங்கிருந்தவர்கள் சற்று அசந்து தான் போயினர். மிரட்டி இரண்டு அடி அடித்தால் ஓடி விடுவான் என்று எண்ணியிருந்தவர்கள் அவன் எதிர்த்து சண்டைக்கு நிப்பான் என்று நம்பவே இல்லை.
எட்டு பேர்களில் இருவர் முன் வந்து அவனோடு சண்டையிட அவர்களின் தாக்குதலில் இருந்து லாவகமாக தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆதிரன் முயற்சி செய்தான்.
அங்கிருக்கும் மண்வெட்டி ஒன்றை பார்த்தவன் அதில் அந்த பிடியை கழற்றி ஒவ்வொருவரையும் அந்தக் கட்டையால் பதம் பார்த்தான்.
அவனது அடி ஒவ்வொன்றும் அந்த இருவர் மீதும் இடியாக விழுந்தது.
தனது நண்பர்கள் அடிவாங்கி துவண்டு போவதை பார்த்ததும் மீதி ஆறு பேரும் ஒன்றாக களமிறங்கி ஆதிரனை தாக்கத் தொடங்கினர்.
முதலில் அந்த ஆறு பேரின் தாக்குதலை ஒன்றாக சமாளிக்க முடியாமல் திணறிப் போன ஆதிரன் பின்பு நிலைமையை தனது கட்டுக்குள் கொண்டு வர கொஞ்சம் திண்டாடித்தான் போனான்.
ஓரிரு அடிகள் அவன் மீது பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் எதிரிகளை துவம்சம் செய்வதில் குறியாக இருந்தான்.
அந்தக் கட்டையால் சுழற்றி சுழற்றி அடிக்க இருவரின் தடி எங்கோ பறந்து போனது. கையில் கத்தியுடனும் அருவாலுடனும் நின்றவர்களை எட்டி உதைத்து வீழ்த்தினான்.
தலையில் பலமாக அந்தக் கட்டையால் அடித்தான். அதில் ஒருவன் பின்புறமாக ஆதிரனுக்கு தெரியாமல் பெரிய அருவாளுடன் அவனை வெட்ட வர அந்த எதிர்பாராத சம்பவம் கண்முன்னே நடந்தேறியது.
அந்த ஆபத்தான நிலைமையில் எங்கிருந்துதான் செந்தாழினி வந்தாளோ தெரியவில்லை ஆதிரனை அந்த ரவுடி வெட்ட அருவாளை ஓங்கிய நேரம் “ஆதிரன் சார்..” என்று பெருங்குரலெடுத்து கத்தியபடி ஓடி வந்தாள் செந்தாழினி.
அந்நேரம் சுதாரித்துக் கொண்டு ஆதிரன் விலக பின்னிருந்து இருவர் வந்து ஆதிரனின் இரு கைகளையும் பிடித்து அவனை எங்கும் நகர விடாமல் பிடித்திருந்தனர்.
எதிரில் ஒருவன் கையில் கத்தியுடன் ஆதிரனை குத்துவதற்காக நெருங்கி வர செந்தாழினி ஓடி வந்து அந்தக் கத்தியை கையினால் பிடித்து இழுத்தாள்.
அவள் பிடித்து இழுக்க ஆதிரனை பிடித்திருந்தவனில் ஒருவன் செந்தாழினிக்கு நெருங்கியவன் போல உடனே செந்தழினியை ஓடி வந்து பிடிக்க அந்த நேரம் பார்த்து ஆதிரன் மற்றவனை தூக்கி கீழே போட்டு பந்தாடினான்.
செந்தாழினியோ கத்தியை விடாமல் இறுக பற்றி நிற்க அந்தக் கத்தியை அந்த ரவுடி உறுவி எடுக்க அது கையை கிழித்துக்கொண்டு குருதிப்புனலுடன் வெளிவந்தது.
கையில் இருந்து பெருக்கெடுத்த இரத்த வெள்ளத்தைப் பார்த்ததும் செந்தாழினி பயந்து மயங்கி சரிந்து விழுந்தாள்.
அவள் குருதி ஆறாக வலிய விழுந்து கிடப்பதைப் பார்த்ததும் ஆதிரனுக்கு எப்படித்தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை அங்கிருக்கும் அனைவரையும் புரட்டிப்போட்டு துவைத்தெடுத்தான்.
அவனது அதிரடியான தாக்குதலை தாங்க முடியாத அந்த எட்டு பேரும் “ஐயோ.. அம்மா..” என்று தலை தெரிக்க ஓடினர்.
அவர்களை விரட்டி விரட்டி அடித்தவன் அவர்கள் தொலைதூரம் ஓடிய பின்பு மீண்டும் செந்தாழினி விழுந்து கிடந்த இடத்திற்கு வந்து அவளை தூக்கிக்கொண்டு நதி அருகே கிடத்திவிட்டு அதிலிருந்து நீரை கையால் அள்ளி அவளது அழகிய வதனத்தில் தெளித்தான்.
மயக்கம் தெளிந்து விழித்த செந்தாழினி முதலில் தன்னை கூட கவனிக்காமல்,
“ஆதரன் சார் உங்களுக்கு ஒன்றும் ஆகலையே..!” என்று அவனது கை கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதா எனத் தொட்டுப் பார்த்தாள்.
ஆதிரனோ அவளது அளவில்லாத அன்பை கண்டு கண்களில் நீர் கசிய இல்லை என்று மறுப்பாகத் தலையாட்டினான்.
அவனால் அவளது பாசத்தை நன்கு உணர முடிந்தது. இருந்தும் ஏன் இப்படி, இவ்வாறு எதற்காக எனக்காக தானா இவ்வளவும் என்று அவனது மனது அவனை ஆயிரம் கேள்விகளைத் தொடுத்தது.
ஆனால் அந்நேரம் அதனை அவளிடம் கேட்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை. அவளது கையில் இருந்து ஆறாகப் பெருகும் இரத்தத்தை பார்த்ததும்,
“செந்தாழினி எனக்கு ஒன்னும் இல்ல வா கைக்கு மருந்து போடணும் இங்க பாரு எவ்வளவு ரத்தம் போகுதுன்னு..”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் சின்ன காயம் தான் நீங்க ஊருக்கு கிளம்புங்க நான் பாத்துக்குறேன்..”
“இல்ல செந்தாழினி இந்த நிலைமையில உன்ன தனியா விட்டுட்டு நான் ஊருக்கு போகல முதல் வா உன்னோட காயத்துக்கு மருந்து போடணும்..”
“சார் சார் உங்க அக்காவ சரியான டைமுக்கு ஹாஸ்பிடல் சேர்க்கணும் இப்போ அவங்க தான் உங்களுக்கு ரொம்ப முக்கியம் நீங்க உடனே புறப்படுங்க..”
“ஏன் செந்தாழினி அடம் பிடிக்கிற எனக்கு அவங்களும் முக்கியம்தான் ஆனா உன்னோட உயர விட என்னோட உயிர் தான் முக்கியம் என்று எனக்காக எதையும் செய்ய துணிஞ்ச உனக்காக இத கூட நான் செய்ய மாட்டேனா..?”
“அய்யய்யோ இப்படி எல்லாம் பேசி என்ன பெரிய மனசி ஆக்கிடாதீங்க சார் சரி நான் மருந்து போட்டா நீங்க போயிடுவீங்க தானே வாங்க பக்கத்துல தான் மருத்துவரோட வீடு இருக்கு பத்து நிமிஷத்துல போயிடலாம்..” என்று ஆதிரனுக்கு மருத்துவரிடம் செல்வதற்கு வழி காட்ட அவள் காட்டிய திசையில் அவளுடன் மருத்துவரின் வீட்டுக்கு விரைந்தான் ஆதிரன்.
கையில் இருந்து ரத்தம் அதிக அளவு வெளியேறாமல் இருக்க தனது கைக்குட்டையை அவளது இரு கைகளிலும் இணைத்து கட்டியதும் அவனது கரிசனையையும், அன்பையும் பார்த்து செந்தாழினி மனதளவில் நெகிழ்ந்து தான் போனாள்.
மருத்துவரின் வீடு வந்ததும் வாசலில் இருந்து சிகண்டி ஐயா சிகண்டி ஐயா..” என்று சத்தம் வைத்தாள் செந்தாழினி.
உள்ளிருந்து 80 வயது மதிக்கத்தக்க ஒரு வயோதிபர் மெதுவாக நடந்து வெளியே வந்தார். அந்த குடிசையை சுற்றி அங்கங்கே பச்சை பசேல் என மூலிகைகளும், மரங்களும் அழகாக நடப்பட்டு இருந்தன.
“யாரு நம்ம செந்தாழினி புள்ளையா..?”
“பரவாயில்லையே இத்தனை வயசாகியும் என்னோட குரலை மதிச்சுட்டீங்களே..! நான்தான்..”
“வயசுல என்ன இருக்குமா? என்ன புள்ள உங்க அப்பனுக்கு ஏதும் உடம்புக்கு முடியலையா..? நீ அவ்வளவு சீக்கிரம் என்ன தேடி வர மாட்டியே..!”
“இல்ல ஐயா ஒரு சின்ன அடிதடி ஆகிப்போச்சு அதுக்கு நடுவுல நான் குறுக்க வந்துட்டேன் அதனால கையில சின்ன காயம் மருந்து போட்டு விடுங்க நான் சீக்கிரம் கிளம்பனும்..”
“எங்க புள்ள காட்டு பாப்போம்..”
இதோ என்று ஆதிரனின் கை குட்டையை கழட்டிக் காயத்தை மருத்துவரிடம் காட்டினாள்.
“என்ன பிள்ளை இது இவ்வளவு பெருசா காயம் வந்திருக்கு சின்ன காயம்ன்னு சொல்ற கொஞ்சம் பொறு முதல் இரத்தம் வெளியேறத கட்டுப்படுத்தனும்..” என்று அருகில் இருக்கும் செடிகளில் எதையோ தேடினார்.
அதில் ஒரு செடியின் இலைகளைப் பறித்து கையினால் கசக்கி அதன் சாறை காயங்கள் மீது பிழிந்தார்.
அதன் சாறு பட்டதும் செந்தாழினி வலியில் துடித்தாள். “கொஞ்சம் வேதனையா தான் இருக்கும் பொறுத்துக்கோமா..” என்று மருத்துவர் கூற,
ஆதிரன் மனதளவில் அவளது வலியை உணர்ந்தவன் பெரிதும் கவலை கொண்டான். வலியை அடக்கிக் கொண்டு ஆதிரனுக்காக அவனைப் பார்த்து புன்னகைத்தபடி,
“அய்யா மருந்து கட்டினா ரெண்டு நாள்ல சுகமாயிடும் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார்..” என்று வலியை விழுங்கியபடி பற்களால் உதட்டை கடித்த வண்ணம் கூறினாள் செந்தாழினி.
ஆதிரன் தன்னால்தான் இவ்வாறு ஏற்பட்டது என்று குற்ற உணர்ச்சி அவனது மனதில் தோன்றி விடக்கூடாது என எண்ணி தனக்காக செந்தாழினி இவ்வளவும் செய்கிறாள் என்று எண்ணியவன் வியந்தே போனான்.
அய்யா செந்தாழனியை அருகில் இருக்கும் திண்ணையில் இருக்க வைத்துவிட்டு,
“கொஞ்சம் பொறுமா நான் மருந்து தயாரிச்சுட்டு வாரேன் ரெண்டு நாள் தொடர்ந்து பத்து போட்டா சரியாகிவிடும் ஆனால் தண்ணியில காயம் நனையாமல் பார்த்துக் கொள்ளணும்..” என்று கூறிவிட்டு அருகில் உள்ள மூலிகை தோட்டத்திற்குள் சில இலைகளை பறித்து விட்டு உள்ளே சென்றார் மருத்துவர்.
செந்தாழினியின் காயத்தை வாயினால் ஊதி ஊதி அதன் வலியை குறைக்க ஆதிரன் முயற்சி செய்ய, அவன் வாயினால் ஊத செந்தாழினிக்கு காயத்தின் மேல் இட்ட மருந்தின் வலியோ குறைந்து இதமாக இருந்தது.
உள்ளிருந்து மருந்தை தயாரித்து வந்த மருத்துவர் இரு கைகளுக்கு மருந்து இட்டு துணியால் கட்டி நாளை இதே நேரத்துக்கு மருந்த மாற்றிக் கட்டணும் இங்கே மறக்காமல் வந்துடு..” என்று கூற,
“சரி சிகண்டி அய்யா அப்போ நான் கிளம்பவா..?” என்று செந்தாழினி கேட்க,
“நல்லதுமா போயிட்டு வா..” என்று விடை கொடுத்தார் மருத்துவர்.
ஆதிரனோ அவர்கள் இருவரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன்,
“கொஞ்சம் இரு செந்தாழினி ஐயாவுக்கு காசு எதுவும் கொடுக்க வேண்டாமா..?” என்று கேட்டதும் வைத்தியருக்கு கோபம் தலைக்கேறியது.
“என்ன தம்பி இப்படி சொல்றீங்க அது என்னோட பேத்தி மாதிரி அதுக்கிட்ட போய் நான் காசு வாங்குவானா இந்த தொழிலை நான் தெய்வமாக மதித்து செய்கிறேன் இப்படி எல்லாம் சொல்லி என்னோட மனச காயப்படுத்தாதீங்க அந்தப் புள்ள எனக்கு எவ்வளவு உதவி செய்திருக்கு
நான் இப்போ உயிரோட வாழ்றதுக்கே இந்தப் பொண்ணுதான் காரணம் அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது நீங்க பட்டணத்துக்காரர் தானே முதல் இங்க இருந்து போயிருங்க..” என்று கூறியதும் பாக்கெட்டில் இருந்து எடுத்த பர்சினை மீண்டும் பாக்கெட்டுக்குள் வைத்தவன் அப்படியே கண்கள் சொருக சரிந்து விழுந்தான்.
மருத்துவருக்கும், செந்தாழினிக்கும் பெரும் அதிர்ச்சியாகிப் போனது. இப்பொழுதுதான் நட்ட மரம் போல் நன்றாக நின்ற மனிதன் எப்படி புயலில் சிக்குண்டது போல சரிந்து விழுந்தான்.
“சிகண்டி ஐயா சீக்கிரமா என்னென்னு பாருங்களேன் ஆதிரன் சார் ஆதிரன் சார்..” என்று ஆதிரனது கன்னம் தட்டி அவனை எழுப்புவதற்கு செந்தாழினி முயற்சி செய்தாள்.
ஆனால் ஆதிரனோ அசைவற்று அப்படியே துவண்டு போய் கிடந்தான்.
முகில் 11
அவளது மென் கரம் பட்டதும் செந்தாழினி தான் என்று உணர்ந்தவன், திரும்பி அவளைப் பார்க்க அவளும் அவனது வதனத்தை பார்த்ததும், அவனது முகவாட்டத்தை நொடியில் கண்டு கொண்டவள்,
“என்ன சார் ஏதாச்சும் பிரச்சனையா முகம் வாடி போய் இருக்கு அம்மாகிட்ட பேசறதுன்னு சொன்னீங்களே அம்மாக்கு எதுவும் உடம்பு சரியில்லையா..?” என்று ஊகித்த விடயத்தை கேட்க,
அவனுக்கும் அது ஆச்சரியம் தான். ‘எனது முகத்தில் தெரியும் சிறிய மாற்றத்தை வைத்து எனது மனதை படித்து விட்டாளே..!’
“இல்ல செந்தாழினி அம்மா நல்லா தான் இருக்காங்க ஆனா அக்காக்கு தான் கொஞ்சம் உடம்புக்கு முடியல அதுதான் ரொம்ப கவலையா இருக்கு..”
“என்னாச்சு அக்காவுக்கு காய்ச்சலா..?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அவங்க ஆறு மாசம் கர்ப்பமா இருக்காங்க இப்போ கொஞ்சம் வயிறு வலிக்குதாம் அதுதான் நானும் அங்க இல்ல அப்பாவும் வெளியூருக்கு வேலைக்கு போயிட்டாங்க.
அத்தானும் ஃபாரின்ல ஒர்க் மீடடிங்கு அவசரமா போயிட்டேர் அதனால யாருமே இப்போ பக்கத்துல இல்லைன்னு அம்மா ரொம்ப கவலைப்படுறாங்க
அக்காவை ஹாஸ்பிடல் சேர்ப்போம்னா யாருமே பக்கத்துல இல்ல அதோட அவங்க ரொம்ப பயப்படுறாங்க அக்காவும் தான் இப்போ எனக்கு என்ன செய்றன்னு தெரியல நான் வந்து முழுசா மூணு நாள் கூட ஆகல அதுக்குள்ள திரும்பி போகணுமான்னு எனக்கும் ரொம்ப கவலையா இருக்கு
இங்க எவ்வளவோ சுத்தி பார்க்க இருக்கு இப்பதான் திருவிழாவும் ஆரம்பிச்சிருக்கு இந்த திருவிழாவில் நடக்கிற சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாத்தையும் பார்க்கலாம்னு நினைச்சேன் ஆனா என்னோட ஆசை எல்லாம் அப்படியே மண்ணா போச்சு சரி பரவால்ல அடுத்த தடவை லீவுக்கு கட்டாயமா வந்து டூ வீக்ஸ் ஆவது தங்கி இருந்து தான் போவேன்..”
“அப்போ நீங்க இப்போ கிளம்ப போறீங்களா சார்..?”
“ஆமா செந்தாழினி நான் உடனே புறப்படணும் அங்க நான் இருந்தா தான் அம்மாவுக்கும், அக்காவுக்கும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன் உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு தான் வந்தேன்..” என்று கூற,
“சரிங்க சார் கவனமா போயிட்டு வாங்க..” என்றதும் ஆதிரனுக்கு மனதில் ஏனோ மனம் பாரமாக இருந்தது.
அவ்வளவுதானா போய்ட்டு வாங்கன்னு சொல்லிட்டா ஏதாவது என்ன பத்தி கவலை அவளது கண்களில் தெரிகின்றதா என்று பார்த்தால் அவளோ அங்கு திருவிழாவை பார்க்கும் சந்தோசத்தில் இருந்தாள்.
அப்போ நான் போறதில்ல அவளுக்கு ஒரு துளி கவலை கூட இல்லையா என்று அவன் மீண்டும் தன் மனதையே கேட்டுக்கொண்டான்.
ஆனால் அது அவளது கண்களில் தெரிந்த பாடு இல்லை ஏமாற்றத்துடன் செல்ல,
செந்தாழினி “ஆதிரன் சார்..” என்று அழைத்த வண்ணம் பின்னே ஓடி வர,
‘ஆஹா போகாதீங்க அப்படி இப்படின்னு ஏதோ சொல்ல போற பாப்போம் என்னதான் சொல்றான்னு..’ என்று எதிர்பார்ப்புடன் ஆதிரன் அதே இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்க,
அருகில் ஓடி வந்த செந்தாழினி மூச்சு வாங்கி படி,
“சார் கொஞ்சம் என்கூட வாங்க நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னுக்கு பத்து நிமிஷம் இதை செஞ்சுட்டு போனீங்கன்னா கட்டாயமா உங்களுக்கு நல்லது நடக்கும்..”
“என்னது என்ன செய்யணும்..?”
“வாங்க சார் வாங்க சொல்றேன்..” என்று அழைத்து சென்றவள்,
அங்கு அருகில் சந்திரா வீடு இருக்க அவளது சரிந்து வளர்ந்திருந்த தென்னையில் ஒரு தேங்காயைப் பறித்து வந்து தேங்காயின் கண் வெளியே தெரியாதபடி உரித்து எடுத்தவள்,
அதனை எடுத்துக் கொண்டு கழுவி மஞ்சள், சந்தனம் தடவி அதனை அலங்கரித்து ஆதிரனின் கையில் கொடுத்தாள்.
“என்ன செந்தாழினி இது எதுக்கு இந்த தேங்காய்..”
“வாங்க சார் சொல்றேன்..” என்று அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றவள், அங்கு இருக்கும் ஆலமரத்தை காட்டினாள்.
அங்கு வெள்ளைத் துணியால் தேங்காயைக் கட்டி முடிந்து வைத்திருந்தனர். அந்த ஆலமரம் நிறைய தேங்காய்களால் கட்டப்பட்டிருந்தன.
அதைப் பார்த்ததுமே அவனுக்கு ஏதோ வேண்டுதல் முறையாக்கும் என்று தோன்றியது அதை பற்றிய விளக்கத்தைக் கேட்க செந்தாழினியை பார்த்து புருவம் உயர்த்தினான் ஆதிரன்.
“இது வந்து சார் இந்த ஊரு சம்பிரதாயம், நம்பிக்கை, வேண்டுதல் என்று சொல்லலாம்
இந்த ஆலமரம் ரொம்ப சக்தி வாய்ந்தது சார் அம்மனே இந்த ஆலமரத்துல குடியிருந்து எங்கள காக்குறானு எங்களுக்கு நம்பிக்கை எங்களுக்கு என்ன துன்பம் வந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்தாலும் ஒரு தேங்காய நிலத்துல படாம பறித்து அதில் மூன்று கண்களும் வெளியே தெரியாம உரித்து
அதை அம்மன் போல மஞ்சள் குங்குமம் தடவி அலங்கரித்து வெள்ளை துணியால் கட்டி எங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கோ அந்த கஷ்டத்த தேங்காய்கிட்ட சொல்லி அதை மரத்துல கட்டினோம்னா ஒரு வாரத்துக்குள்ளையே அது சரியா போயிடும்
எனக்கெல்லாம் ரெண்டு நாள் மூன்று நாளிலேயே சரியாகிடுச்சு ஒரே ஒரு வேண்டுதலை தவிர..” என்று அவள் சொல்லி முடிக்க,
“அது என்ன வேண்டுதல்..?” என்று ஆதிரன் கேட்டான்.
“அத விடுங்க சார் அது ரொம்ப பெரிய கதை நான் அப்புறமா சொல்றேன் நீங்க இப்போ உங்க அக்காவும், பிள்ளையும் ஆரோக்கியமா இருக்கணும் என்று நினைத்து இதை அந்த ஆலமரத்துல கட்டுங்க சார் உடனே சுகமாயிரும் பொய்யின்னா பாருங்க நீங் ஊர் போய் சேர முன்னே நல்ல செய்தி நல்ல செய்தி வந்திரும்..” என்று நம்பிக்கையுடன் செந்தாழினி கூற,
“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல இருந்தாலும் நீ சொல்றதுக்காக ஏதோ நான் இதை செய்றேன்..”
“இல்ல சார் நம்பிக்கையோடு நீங்க வேண்டுதல் வச்சா தான் அது நிறைவேறும்..” என்று கூற சிரித்துவிட்டு அந்த தேங்காயை சூடம் ஏற்றி ஆதிரனின் கையில் கொடுத்தாள்.
அந்த மரத்தை ஒரு முறை சுற்றி வந்து வெள்ளை துணியால் அதை சுற்றி கட்டி அந்த மரத்தில் ஒரு கிளையில் நன்கு இறுகக் கட்டி கைகூப்பி கடவுளை வேண்டிக் கொண்டான்.
அப்படியே வேண்டியவன் செந்தாழினியைப் பார்த்து,
“உனக்கு எப்படி நான் தேங்க்ஸ் சொல்றதுனே தெரியல எவ்வளவோ கஷ்டங்கள் மனசுல இருந்தாலும் நீ தார நம்பிக்கையிலையும் நீ சொல்ற வார்த்தைகளாலையும் எனக்கு என்னவோ என்னோட கவலைகள் எல்லாம் என்னை விட்டு பறந்து போற மாதிரி இருக்கு
என்ன பிரச்சனை வந்தாலும் நீ எனக்கு வழிகாட்டுறா முறையும், நீ என்னை வழி நடத்துற முறையும் நீ எனக்கு கொடுக்கிற சப்போர்ட்டு அதெல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்கு
இப்போ இங்க சாமிகிட்ட வேண்டினதுக்கு அப்புறம் அக்காவுக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கு சரி நான் சீக்கிரமா போகணும் இல்லான்னா பஸ்ஸ மிஸ் பண்ணிடுவேன் ஓகே நான் போயிட்டு வரேன்..”
“சரிங்க சாரி கவனம்…” என்று செந்தாழினி வழி அனுப்ப,
பெட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக மாந்தோப்பு வழியாக நடந்து சென்றான் ஆதிரன். அவன் செல்லும் வழி சரி என்று தான் எண்ணிக் கொண்டு சென்றான் ஆனால் வழி ரொம்ப நீளமாக இருந்தது.
பேசாமல் செந்தாழினியையும் கூட்டி வந்திருக்கலாமோ திருவிழாவை பார்த்து ரசிச்சு கொன்னு இருக்கா அவள ஒரே நாம தொல்லை பண்ண கூடாது அப்படியே இந்த வழியாக தான் வந்த ஞாபகம் இருக்கு இருட்டா இருந்ததால பெருசா ஒன்னும் புரியல சரி அந்த அருவிய பிடிச்சு அப்படியே போய் சேர்ந்திடுவோம் என்று மாந்தோப்பு வழியாக அப்படியே அருவி ஓடும் திசை நோக்கி நடக்க ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது.
அந்த சத்தம் கேட்டு அன்று முதன்முதலாக அவன் ஊருக்குள் வரும்போது செந்தாழினியன் முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது.
மென் சிரிப்புடன் வேகமாக நடையை எடுத்து வைக்க மீண்டும் அதேபோல சத்தம் கேட்க யார் என்று திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தால் அங்கு யாரும் இல்லை.
ஏதோ மனதுக்கு தப்பாகப் பட, மீண்டும் நடையின் வேகத்தை அதிகரித்த படி அவன் அந்தப் பாதையில் செல்லும் அவ்வேளையிலேயே எதிர்பாராத விபரீதமான அந்த சம்பவம் நடந்தேறியது.
திடீரென நான்கு அடியாட்கள் கையில் கத்திகளுடன் வந்து ஆதரன் முன்பு நின்றனர். அப்படியே பின்னே இரண்டடி எடுத்து வைக்க அவன் பின்புறமும் நான்கு பேர் கையில் கத்தியுடனும் அரிவாளுடனும் வந்து நின்றனர்.
ஒவ்வொருத்தனையும் பார்த்தால் மலைப்பாம்பை முழுங்கியவர்கள் போல மிகவும் திடகாத்திரமான உடலுடன் முகத்தை யாரும் அறியாதபடி சேரும் சகதியும் பூசியபடி ஆதிரன் முன்பு வந்து நிற்க,
ஆதிரனுக்கு நன்கு விளங்கியது இவர்கள் தன்னை தாக்கத்தான் இவ்வாறு வந்து நிற்கின்றனர் என்று ஆனால் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்று அந்நேரம் அவனது மனம் கணக்கிட்டு கொண்டிருந்தது.
அத்தோடு இதை செய்தவர் யாராக இருக்கக்கூடும் என்றும் மனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
அவனை அதிகம் யோசிக்கவிடாமல் அதில் இருக்கும் ஒருவனே அதற்கான பதிலையும் தந்தான். அந்த அடியாட்களில் ஒருவன்,
“என்னடா எங்கடா ஓடப் பார்க்கிற இந்த ஊரை விட்டு நீ உயிரோட இங்கிருந்து போய் விடுவியா அதுவும் எங்கய்யா வரதராஜனையும், சின்னய்யா செந்தூரனையும் பகைச்சுக்கிட்டு இந்த ஊரை விட்டு ஒழுங்கா நீ உன்னோட ஊருக்கு திரும்பி முழுசா போய்டுவியா அப்படி போகத்தான் நாங்க விட்டுருவோமா..” என்று கேட்க,
ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் அதில் மிகவும் கருப்பாகவும் உயரமாகவும் பெரிய உருவத்துடனும் இருக்கும் ஒருவன் இப்படி மிரட்ட அப்போது தான் அவனுக்கு புரிந்தது வரதராஜனும் செந்தூரனும் சேர்ந்து திட்டம் போட்டு தன்னை அடிப்பதற்காக அடியாட்களை அனுப்பி இருக்கின்றார்கள் என்று உடனே அவர்களைப் பார்த்து,
“இங்க பாருங்க எனக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை பஞ்சாயத்துல நான் நியாயம் கேட்டு எல்லாருக்காகவும் தான் பேசினேன்.
ஆனா நீங்க இப்படி செய்றது ரொம்ப தப்பு அவங்க கிட்ட அதிக பணம் இருக்கு என்றதுக்காக இப்படி எல்லாம் அவங்க பண்ணிக்கிட்டு இருக்கிறது சட்டப்படி குற்றம் அதைத்தான் இந்த ஊர் மக்களுக்கு நான் எடுத்துச் சொன்னேன் அதுக்கு ஏன் என்ன கொல்ல வர்றீங்க..”
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது எங்க ஊர் பெரிய மனுசன எதிர்த்து பேசினா இதுதான் நிலைமை என்று ஊருக்குள்ள இருக்குறவங்களுக்கு தெரியணும் அப்பதான் இனிமே எங்க ஐயாவை யாருமே எதிர்த்து பேச மாட்டாங்க எங்கோ இருந்து நீ வந்து வாலாட்டிட்டு போக நாங்க என்ன சொம்பையா..” என்று அடுத்தவன் மிரட்ட,
“இங்க பாருங்க ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்துச்சு அத தட்டிக் கேட்டேன் அவ்வளவுதான் இப்போ நான் அவசரமா ஊருக்கு கிளம்புறேன் வீணா தகராறு பண்ணாம வழிய விடுங்க இந்த பஸ்ஸ மிஸ் பண்ணினா இனி நாளைக்குத் தான் அடுத்த பஸ் வரும்..” என்று கூறிக் கொண்டிருக்கும்போது முன்னிருந்து ஒருவன் பெரிய தடியைக் கொண்டு ஆதிரனைத் தாக்க பாய்ந்து வந்தான்.
முகில் 10
கடற்கரையின் ஓரத்தில் மணலில் அமர்ந்திருந்து ஆர்ப்பரிக்கும் அந்த கடல் அலையின் ஓசைகளை உள்வாங்கியபடி ஆதிரன் அமைதியாக இருந்தான்.
ஏனோ தெரியவில்லை அந்தக் கடல் காற்று அவனை அன்போடு அரவணைப்பது போல் இருந்தது.
மிகுந்த வேலைப்பழுவிலிருந்து விடுபட்ட மனது கூண்டில் இருந்து வெளியேறிய பறவை போலானது.
வேலையால் ஏற்பட்ட மன அழுத்தம் இப்போது எங்கோ தூரச்சென்று இருந்தது.
அனைத்தும் மறந்தவனாக கடல் அலையின் மோதல்களை பார்த்து ரசித்தபடி இருக்கும் போது எங்கோ தூரத்தில்,
“காப்பாத்துங்க என்னை காப்பாத்துங்க..” என்று கூச்சலிடும் சத் அதை ஔதம் கேட்டது.
அந்த சத்தம் வந்தத் திசையை நோக்கி எழுந்து ஓடத் தொடங்கிய ஆதிரன் அந்தக் குறலின் பின்னே வேகமாக ஓடினான்.
தொலைதூரம் ஓடிய பின்பு கடல் அலைக்குள் சிக்குண்ட ஒரு சிறுவனின் கரம் அவனது கண்ணுக்கு தென்பட்டது.
உடனே கடல் அலைக்குள் பாய்ந்து நீந்தி ஓடிச்சென்று அந்த சிறுவனின் கரம் பற்றி இழுத்தவன் அப்படியே நீந்தி வந்து தரையில் அவனைக் கிடத்தினான்.
“அப்பாடா இந்தச் சிறுவனை காப்பாத்தியாச்சு..” என்று பெருமூச்சு விட்டபடி அவனது வதனம் பார்த்தவன் அப்படியே வேரூன்றிய மரம் போல் அசைவற்று அதிர்ச்சியுடன் நின்றான்.
அவனது வாயில் இருந்து “அ..ர..வி..ந்..த்..” என்ற வார்த்தை மட்டுமே சப்தமின்றி காற்றாக வெளி வந்தது.
உடனே நெஞ்சில் கை வைத்தபடி தொழில் நீங்கிய ஆதிரன். அரவிந்தின் இழப்பு இவ்வளவு பாரதூரமான தாக்கத்தை மனதில் ஏற்படுத்தி இருக்கின்றது என்பது இந்த கனவின் மூலமே அவனுக்கு நன்கு விளங்கியது.
உண்மையில் செந்தாழினி கூறியது போல நான் நீச்சலை கூடிய சீக்கிரம் பழக வேண்டும் என்று மனதிற்குள் உறுதி பூண்டான்.
“அப்படி நீச்சல் பழகலன்னா உண்மையிலேயே எனக்கு நெருங்கியவங்க யாராவது ஆபத்துல மாட்டினா நான் அவங்கள காப்பாத்த முடியாம ஒரு கையாலாகா தனத்துக்கு உள்ளாகிடுவேன் மீண்டும் என்னால அப்படி ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக முடியாது.
இந்த குற்ற உணர்வு என்னை எவ்வளவு நாட்களாக தாக்கிக் கொண்டிருக்கின்றது.
எவ்வளவு அழகா என்னோட தவறை செந்தாழினி புரிய வச்சுட்டா உண்மையிலேயே அவள் கிரேட்..” என்று வாய்விட்டு கூறியவன்,
உடல் சோர்வாக இருக்க எழுந்திருக்க மனம் வராமல் அப்படியே கண்களை மூடி படுத்துக் கிடந்தான் நேரம் ஏழினைத் தொட்டிருக்கும்.
கண்களை மூடி இருக்கும்போது செந்தாழினி நேற்று அருவியில் இருந்து குளித்து எழுந்து வரும் பொழுது அவளது முன் எழில்கள் மற்றும் அனைத்து அங்கலாவண்யங்கள் அதில் காணப்படும் பள்ளத்தாக்குகளும் சுவடுகளும் அவன் கண் முன்னே அக்கணம் தோன்றி மறைந்தது.
உடனே சட்டென்று கண்விழித்து எழுந்து இருந்தவன், தலையை உழுப்பி தன்னை நிதானத்திற்கு கொண்டுவர பெரும் சிரமப்பட்டான்.
“என்ன ஆச்சு ஆதிரா ஏன் இப்படி என் புத்தி கோணலா யோசிக்குது சேச்சே.. கூடாது அப்படியெல்லாம் யோசிக்க கூடாது செந்தாழினி எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பெண்..” என்று ஒரு புறம் மனது கூற,
மறுபுறம் வேறு விதமாக சிந்தித்தது. ‘பிடித்த பெண் என்றால் இப்படி எல்லாம் தோன்றுமோ இல்ல ஆதிரா இப்படி யோசிக்கவே கூடாது..’ என்று ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தவன் மீண்டும் கண்களை மூடி உறங்க,
“பனியில் நனைந்த ரோஜா போல அவன் கண்முன்னே மீண்டும் அவ்உருவம் வந்து அவனை பாடாக படுத்தியது.
அந்நேரம் பார்த்து வாசலில்,
“ஆதிரன் சார்.. ஆதிரன் சார்..” என்று செந்தாழினியின் குரல் கேட்க எழுந்து வந்து சலிப்புடன் கதவை திறந்தவன் அங்கு அவன் கனவில் கண்ட காட்சி போல செந்தாழினி நனைந்தபடி நிற்க உடனே அவளது எழில் பொங்கும் அழகினை பார்க்க முடியாமல் கண்களை மூடி மறுபக்கம் திரும்பிக் கொண்டவன்,
“என்ன செந்தாழினி குளத்துல குளிச்சிட்டு அப்படியே வந்துட்டியா போய் ட்ரஸ் மாத்திட்டு வா..” என்று சற்று கோபமாகக் கூற,
அவளோ ஒன்றும் புரியாமல் தன்னை மேலும் கீழும் உற்றுப் பார்த்தவள்,
“என்ன சார் தூக்கம் இன்னும் போகலையா ஒழுங்கா பாருங்க நான் குளித்து டிரஸ் எல்லாம் மாத்திட்டு தான் வந்து இருக்கேன் சீக்கிரம் கிளம்பி வாங்க கோயில்ல திருவிழா இந்நேரம் ஆரம்பிச்சிருக்கும் காலையிலேயே போனா தான் நடக்கிற சடங்குகள் சம்பிரதாயங்கள் பூசைகள் எல்லாம் அழகா பார்க்கலாம்
இதோ சார் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன் இன்னைல இருந்து எங்க ஊர்ல எல்லாரும் மரக்கறி உணவுகள் தான் சாப்பிடுவோம் அதனால நானும் மாமிசம் தொட மாட்டேன் நீங்க ஒரு பத்து நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்க..” என்று கூற,
உடனே கண்களை நன்றாக துடைத்து விட்டு செந்தாழினியைத் திரும்பிப் பார்க்க உண்மையிலேயே அவள் குளித்து முடித்து அழகாக உடை அணிந்து அம்சமாக கண்ணை பறிக்கும் அழகுடன் பதுமை போல நின்றிருந்தாள்.
அவள் அணிந்திருந்த தங்க நிற பட்டுத் தாவணி புதியதாகவும் அவளது உடலை வனப்பாகவும் எடுத்துக்காட்டியது.
அதனை ரசிக்காமல் அவனது கண்களால் இருக்க முடியவில்லை.
“என்ன செந்தாழினி இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க புது டிரஸ்ஸா..?”
“அப்படியா ரொம்ப நன்றி சார் புதுசு தான் ஒரே ஒரு தடவை தான் இதை உடுத்தி இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிச்ச தாவணி
சரி சரி இதை சாப்பிட்டு சீக்கிரமா வாங்க நான் முன்ன போறேன் நீங்க பின்ன வாரிகளா..?
ஊர் மத்தியில இருக்க அந்த காளியம்மன் கோயில் தான் நான் சீக்கிரமா போகணும் சார் பார்த்து வாங்க வழி தெரியும் தானே..” என்று கேட்க,
“ஓகே நீ கிளம்பு எனக்கு வழி தெரியும் நான் வீட்டுக்கு கால் பண்ண வேண்டி இருக்கு கால் பேசிட்டு அப்புறமா குளிச்சு முடிச்சு சாப்பிட்டு வாரேன்..”
“சரிங்க சார் நான் போயிட்டு வரேன்..” என்று கூறியவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல அவள் சென்ற பாதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிரன்.
“இன்னைக்கு எனக்கு என்ன ஆச்சு எல்லாமே தப்பு தப்பாவே தோணுது செந்தாழினி பேசுறது, சிரிக்கிறது, நடை, உடை, பாவனை எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு எல்லாமே ரசிக்கிற மாதிரியும் இருக்கு அவளைப் பார்த்ததும் ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோசம் வருது ஒருவேளை எனக்கு ஏதாவது வியாதி வந்துடுச்சோ சரி பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..” என்று யோசித்தபடி குழப்பங்கள் தீர அன்னைக்கு அழைப்பெடுத்தான்.
வளமையாக காலையிலேயே அன்னையிடம் அழைத்து பேசிவிட்டு தான் ஊர் சுற்றிப் பார்க்க செல்வான் அத்துடன் இரவு உறங்கும் முன்பு அன்னையுடனும் தனது அக்காவுடனும் பேசிவிட்டு தான் உறங்கச் செல்வான்.
ஆதிரன் அழைப்பு எடுத்தவுடன் அதற்காக காத்திருந்தது போல முதலாவது ரிங்கிலேயே அங்கு அழைப்பு ஏற்கப்பட்டது.
“சொல்லுடா கண்ணா எப்படி இருக்க..? சாப்பிட்டியா..?” என்று சிவகாமி தவிப்புடன் கேட்டார்.
“அம்மா என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு ஏதாவது பிரச்சனையா..?”
‘இல்லப்பா நேத்து ராத்திரியில் இருந்து உங்க அக்கா வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு இருக்கா மாப்பிள்ளைக்கு கால் பண்ணி சொல்லிட்டேன் உங்க அப்பாவும் இதோ புறப்பட்டு வந்துடுறேன் என்று சொன்னாரு இன்னும் ரெண்டு பேரையும் காணல்ல அதுதான் யோசனையா இருக்கு
நீ பக்கத்துல இருந்து இருந்தாலும் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கும் உங்க அக்கா சும்மாவே சின்ன வலி வந்தாலே ஊரை எழுப்புவா இது ரொம்ப வலிக்குதுன்னு வேற சொல்லுறா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..” என்று சிவகாமி கூற,
ஆதிரனிற்கும் சிவகாமியின் பதற்றம் மனதளவில் தொற்றிக் கொண்டது. இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“அம்மா நீங்க ஒன்னும் யோசிக்காதீங்க அது ஏதாவது சின்ன வலியா இருக்கும் இல்லன்னா பாப்பா உதைக்கிறதை தான் அவள் வலிக்குதுன்னு சொல்றாளோ தெரியால. நீங்க ராதிகா கிட்ட போன குடுங்க நான் பேசுறேன்..” என்று சொல்ல அருகில் ராதிகாவிடம் போனைக் கொடுத்தார் சிவகாமி.
“என்ன ராதிகா ஓவரா சீன் போடுற போல நான் அங்க இல்லைன்னதும் நாடகம் ஆடுற என இப்ப நான் வந்தேன் வயித்துக்குள்ள இருக்க பாப்பாவ பலமா உதையச் சொல்லுவேன்..” என்று ஆதிரன் மிரட்ட,
“ஆதிரா உண்மையிலேயே எனக்கு வலிக்குது பயமா இருக்குடா நீ சீக்கிரமா வா நீ பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும் போல இருக்கு நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்
பாப்பா வெளியே வந்துவிடுமோ இப்பவே வந்துரும் போலத் தான் இருக்கு பாப்பா பிறக்கும்போது நீ பக்கத்துல இருக்க மாட்டியா..?” என்று அன்புடனும் கலக்கத்துடனும் கேட்க அக்காவை எப்படி தேற்றுவது என்று புரியாமல் தவித்தான் ஆதிரன்.
வம்பாக பேசுபவர்களிடம் வம்புக்கு நிக்கலாம் அன்பாக பேசுபவர்களிடம் எப்படி அதட்டி பேசுவது என்று ஆதிரன் யோசித்தபடி அவளுக்கு ஆறுதல் தேடி,
“நீ ஒன்னும் கவலைப்படாதே நான் இன்னைக்கு புறப்படுறேன் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்திடுவோம் இப்போ மாமா வந்துருவாரு நான் மாமாவோட பேசினான் மாமா வந்ததும் ஹாஸ்பிடல் சேர்த்ததும் என்னன்னு சொல்லுவாங்க
நான் இன்னைக்கு இருக்கிற முதல் பஸ்ஸிலேயே ஏறி வந்திடுறேன் ஓகேயா நீ ஒன்னும் கவலைப்படாதே பாப்பா நல்லா ஆரோக்கியமா தான் இருக்கும் என்னோட செல்ல அக்கால்ல..” என்று கூறியதும்,
“சரி சீக்கிரம் வந்துர்ரா…” என்று பதில் உதிர்த்து விட்டு அன்னையிடம் அழைபேசியை கொடுத்தாள்.
அன்னையோ அதே பதற்றத்துடன்,
“என்ன ஆதிரா அவ பேசினத கேட்டியா அவ உண்மையிலேயே வலிக்குதுன்னு துடிக்கிறா பாவம் என் பொண்ணுக்கு பிரசவ வலி வார நேரம் நீங்க ஒருவரும் பக்கத்தில இல்லையே..!” என்று சிவகாமி அழுதார்.
“அம்மா அழாதீங்கம்மா அக்காக்கு ஒன்னும் இல்ல இன்னும் ஏழு மாசமே முடியல பாப்பா இப்ப வெளியே வரமாட்டா நான் இதோ புறப்பட்டு வாரன்..”
‘சரிப்பா சீக்கிரமா வா..” என்று கவலையுடன் சிவகாமி அழைபேசியை வைக்க ஆதரனின் மனதில் கவலையும், யோசனையும் அதிகமாயிற்று.
குளித்து காலை உணவை உண்டு முடித்துவிட்டு அனைத்து உடைகளையும் எடுத்து வைத்து ஆயத்தமாகிய பின்பு, ‘செந்தாழினி கிட்ட விஷயத்தை சொல்லிட்டு கிளம்புவோம்..’ என்று பெட்டியை வைத்துவிட்டு கோயில் நோக்கி புறப்பட்டான்.
அங்கு கோயிலில் பெரும் சனத்திரளாக இருந்தது. ஊரிலுள்ள அனைத்து மக்களும் கோயிலிலேயே குழுமி நின்றனர்.
கல்லு போட்டால் கூட கீழ விழாத அளவுக்கு மிகவும் சன நெருக்கடியாக இருந்தது.
செந்தாழினியை கண்களால் தேடி களைபுற்றவன், நேரம் வேகமாக நகர வேறு வழி இல்லாமல் திரும்பி செல்ல எண்ணித் திரும்பும் போது பவள மணிகள் பூட்டிய கரம் அவனது திடமான கரத்தினைத் தீண்டியது.
முகில் 9
சமைத்து முடித்து ஆதிரனுக்கு மதிய உணவை கொடுத்துவிட்டு வந்து அருகில் பண்ணையிலும், வயலிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உணவை கொடுத்துவிட்டு தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த செந்தாழினி அப்படியே திண்ணையில் இருந்தபடி வீசும் தென்றலின் துணையால் கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள்.
சிறிது நேரத்திலேயே அருகில் அரவம் எழ சட்டென்று கண்விழித்துப் பார்க்க அவளது தோழி சந்திரா அவள் அருகே வந்து மேதுவாக அமர்ந்தாள்.
“நீயா நான் திடீரென்று சத்தம் கேட்க பயந்துட்டேன் வரும்போது சத்தம் வச்சுக்கிட்டு வர மாட்டியா..?” என்று நித்திரை மயக்கத்தில் சந்திராவின் மீது எரிந்து விழுந்தாள் செந்தாழினி.
உடனே சந்திராவை முகம் மாற,
“சரி என்ன சந்திரா இந்த நேரம் என்ன தேடி வந்திருக்க..” என்று பேச்சை மாற்ற,
“சிறு தயக்கத்துடன் கை விரல்களை பிசைந்தபடி,
“அது ஒன்னும் இல்ல செந்தாழினி இன்னைக்கு நீ வெளியே போகல்லையா..?”
“இது என்னடி கேள்வி இவ்வளவு நேரமும் அப்படியே ஊர் சுத்திட்டு இப்பதான் வீட்டுக்கு வந்து அவசர அவசரமா சமைச்சு ஆதிரன் சாருக்கும் வளமையா நான் சாப்பாடு கொடுக்கிறவங்களுக்கும் கொடுத்துட்டு வந்தேன் என்ன திடீர்னு கேட்கிற எங்கேயாவது போகணுமா தனியா போக பயமா இருக்கா நானும் வரவா..?” என்று செந்தாழினி கேட்டதும் சிறு தயக்கத்துடன் தலையை சொரிந்த படி,
“இல்லை இல்லை நீ அவர் கூட இன்னைக்கு வெளியே போகலையான்னு கேட்டேன்..” என்று வெட்கத்துடன் புன்னகைத்தபடி வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.
அவளது வார்த்தைகளின் தடுமாற்றத்திலேயே எதனையோ உணர்ந்த செந்தாழினி வேண்டுமென்றே அவளை வம்பு இழுப்பதற்காக,
“எவர் கூட..?” என்று துருவிக் கேட்டாள்.
“அதுதான் பட்டணத்தில இருந்து வந்திருக்காரே அவரைத்தான்..”
“ஓஹ் அவரா..? ஆமா நம்ம ஆதிரன் சார பத்தியா கேக்குற..”
“ஆமா அவர பத்தி தான் சொல்லு இன்னைக்கு நீ போகலையா..”
“போயிட்டு வந்துட்டேன் ஏன்டி..”
“இல்ல நானும் கூட வரத்தான்..” என்று தலையை குனிந்த படி காலால் கோலமிட்டுக் கொண்டு கூறினாள் சந்திரா.
சந்திரா எதுவென்றாலும் நேரடியாக செந்தாழியிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி விடுபவள். இன்று மிகவும் தயக்கத்துடனும் வெட்கமும் சூழ்ந்து கொள்ள வார்த்தைகள் தடுமாற பேசுவதைப் பார்க்க செந்தாழனிக்கு நகைச்சுவையாக இருந்தது.
அதனைப் பார்த்து ரசித்தபடி வாய்க்குள் நமட்டுச் சிரிப்புடன்,
“ஏன்? எதுக்கு? உன்னை எல்லாம் என்னால கூட்டி போக முடியாது அவருக்கு ஊரு தெரியாதுன்னு சொன்னாரு அவரை நான் சுத்திக் காட்டுறேன்
நீ தான் சின்ன வயசுல இருந்து இந்த ஊர்ல பிறந்து வளர்ந்த உனக்கு இந்த இடமே அத்துபடி ஆகிருக்கும் பிறகு நான் ஏன் உன்ன சுத்தி காட்ட..” என்று செந்தாழினி வாதிட,
“நான் இப்போ ஊரை சுத்தி பாக்க தான் உன் கூட வர்றேன்னு உன் கிட்ட யார் சொன்னா..?”
“அப்போ எதுக்குடி சீக்கிரமா சொல்லு நிம்மதியா தூங்கிட்டு இருந்த என் தூக்கத்தை கலைச்சிட்டு இப்படி வம்பு பேசிக்கிட்டு இருக்க உனக்கு வேற வேலையே இல்லையா..?”
“என்னோட செல்ல செந்தாழினிக் குட்டி என்னோட உயிர் தோழி நான் சொல்றத நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லு நான் உன்கிட்ட சொல்றேன்..”
“அது என்ன பெரிய பரம்பரை இரகசியம் சொல்லு சொல்லு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் எனக்கு வேற வேற வேலை இல்ல பாரு..” என்று அதீத ஆர்வம் மனதினுள் எழ செந்தாழினி சந்திராவிற்கு அருகில் வந்து ஒட்டி அமர்ந்தாள்.
“அது வந்து ஊருக்கு புதுசா வந்திருக்காரு அவர எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதை அவர்கிட்ட நான் சொல்லணும் அதுக்காகத்தான் நீ அவர் கூட போகும்போது என்னையும் கூட்டிட்டு போன்னு கேட்டேன்..” என்று மனதில் ஆதிரன் மீது பூத்த காதலை படபடவென செந்தாழினியிடம் சந்திரா கொட்டி விட்டாள்.
“ஆஹ் அப்புறம்…” என்று மேலும் சந்திராவை தூண்ட,
“அப்போ தானே அவர் கூட பழக முடியும் அவரும் இன்னும் பத்து நாள்ல இந்த ஊரை விட்டு கிளம்பிடுவாரு அதுக்குள்ள என்னோட விருப்பத்தை நான் அவர்கிட்ட சொல்லிடனுமில்ல
உடனே பார்த்ததும் உங்களை எனக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னா என்னை புரிஞ்சுப்பாரோ தெரியல அதனால இந்த பத்து நாளும் அவர் கூட பழகிட்டு அப்புறமா அவருக்கு என்னை பிடிச்சதும் நான் சொல்லிடுறேன் நீ தான் எனக்கு உதவி செய்யணும்…” என்று வந்தால் நீ பார்த்து கருணையுடன் கேட்டாள் சந்திரா.
“என்னடி காலைல தான் அவரை நீ பார்த்த ஒரு தடவை தான் பார்த்திருப்பே அதுவும் முழுசா கூட பார்த்து இருக்க மாட்ட பார்த்ததும் உனக்கு காதல் வந்திருச்சா இதைத்தான் கண்டதும் காதல்ன்னு சொல்லுவாங்களா..?”
“ஆமாண்டி அவர பார்த்ததும் எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத சந்தோஷமா என்னன்னு புரியல ரொம்ப அவஸ்தையா இருக்குடி ஆனா அவர பார்த்ததும் தான் என்னோட மனசு இப்படி கிடந்து தவிக்குது…”
“சரி சரி நான் உதவி பண்ணுறேன் ஆனா இது உங்க அப்பாவுக்கு தெரியுமா..?”
“அச்சச்சோ அவருக்கு தெரியாது அத எப்படி நான் சொல்லுவேன் சொன்னா என் உயிரே போயிடும்..”
“புரியுதுல்ல அந்த மனிதனுக்கு போய் துரோகம் பண்ண பார்க்கிறா விட்டுட்டு போய் பொழப்ப பாரு..”
“ஏன்டி நான் லவ் பண்ணக் கூடாதா எனக்கு தான் காதல் வரக்கூடாது அவரைப் பார்த்ததும் பிடிச்சுப் போயிட்டுன்னு நீ என்னோட உயிர் தோழின்னு தானே உன் கிட்ட சொன்னேன் இதுக்கு போய் இப்படி பேசுற எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்லை..” என்று கண் கலங்கினாள் சந்திரா.
“சரி சரி அழாத என்னோட அழுமூஞ்சி சந்திரா நீ ஆசைப்பட்ட ஆதிரன் சார் கூட நான் உன்னை சேர்த்து வைக்கிறேன் சரியா..?”
“சரி இன்னைக்கு எங்க போறீங்க எத்தனை மணிக்கு நான் வரட்டும்..”
“இன்னைக்கு எங்கேயும் வெளியே போகல காலையிலேயே ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற அருவிக்கு போயிட்டு வந்துட்டோம் அவர் ரொம்ப டயர்டா இருக்குன்னு சொன்னார் அதனால நாளைக்கு காலைல திருவிழாக்கு போறதுன்னு சொல்லி இருக்காரு
இப்போதான் சாப்பாடு செஞ்சு கொடுத்துட்டு வந்தேன் சாப்பிட்டு தூங்கிருப்பாரு இது போதுமா இதுக்கு மேல ஏதும் தகவல் தேவையா..?” என்று கிண்டலாக செந்தாழினி கேட்க,
“இல்ல இல்ல போதும் சரி நாளைக்கு திருவிழாவில சந்திப்போம்..”
“சரிங்க மகாராணி..” என்று செந்தாழினி கூற,
“சந்திரா வந்த வேலை முடிந்த சந்தோஷத்தில் புறப்பட தூரத்தில் சரவண முத்து போதையில் ஆடி அசைந்து பாட்டுப் பாடி கொண்டு வந்தார்.
“சரிடி நான் கிளம்புறேன் உங்க அப்பா வராரு அவர் கிட்ட ஒன்னும் சொல்லிடாத போதையில் எங்க அப்பா கிட்ட உளறிடுவாரு…”
“எங்க அப்பா பத்தி எனக்கு நல்லாவே தெரியும் நான் சொல்ல மாட்டேன் நீ போ இந்த செந்தாழி இருக்கப் பயமேன்..” என்று செந்தாழினி கூற சந்திராவும் சிரித்தபடியே சிட்டாகப் பறந்து விட்டாள்.
“பாடி பறந்த கிளி… பாதை மறந்ததடி… பூமானே..” என்று பாடிக் கொண்டே தள்ளாடியபடி செந்தாழினி அருகில் வந்தார் சரவணமுத்து.
“என்னப்பா சாப்பாடு போடவா..?” என்று செந்தாழினி பரிவுடன் தனது தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
“எனக்கு பசி இல்லை கொஞ்சமா போடு புள்ள அது நம்ம சிவராசா மக சந்திரா தானே..”
தட்டில் சோற்றை போட்டுக் கொண்டிருந்தவள்,
“ஆமாப்பா அவள் தான்..”
“என்ன ரொம்ப நாளா இந்த பக்கம் வராதவ இன்னைக்கு உன்னை தேடி வந்திருக்கா..?”
“அதுவா ஆதிர…” என்று கூற வந்தவள் வாய்தவறி உண்மையை உளறி விட்டோமே என்று சட்டென்று நாக்கைக் கடித்தாள்.
கையில் வைத்திருந்த தட்டும் கை தவறி கீழே விழுந்தது.
சரவணமுத்து தனது பெண்ணின் தடுமாற்றத்தையும் பேச்சையும் கேட்டு சிறு புன்முறுவலுடன்,
“என்ன புள்ள என்கிட்ட எதுவும் சொல்லனுமா..?”
“இ..இல்..இல்லப்பா…”
“இல்ல ஏதோ ஆதின்னு சொன்னியேமா..” என்று வினவ,
‘அய்யய்யோ தெரியாம உளறிட்டனே இவருக்கு சாதாரணமாய் இருக்கிறதை விட குடிச்சா தான் காது நல்லா கேட்கும் என்றத மறந்துட்டேனே இப்போ எப்படி சமாளிக்கிறது..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க,
“என்ன புள்ள இவ்வளவு தீவிரமா யோசிக்கிற..?”
“ஒன்னும் இல்லப்பா அது வந்து ஊருக்கு புதுசா வந்த ஆதிரன் சார்..” என்றதும்,
“ஓஹ் அந்தப் பையனா..? அந்தப் பையன் ரொம்ப நல்ல பையன் என்று ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே..! இன்னைக்கு பஞ்சாயத்துல பையன் பெரிய கலவரமே பண்ணிட்டானாமே..! அவனைப் பத்தி எவ்வளவு பேர் என்கிட்ட பேசினாங்க தெரியுமா..?
நல்ல துணிச்சலான பையனாம் இல்லன்னா பட்டணத்தில இருந்து இந்த கிராமத்துல யாரு உதவியும் இல்லாம இந்த வரதராஜனை எதிர்த்து நிற்க இங்கு இருக்கிற ஒரு ஆம்பளைக்கு துணிவிருக்கா
ஆனா அவன் தட்ட தனியா அந்த பஞ்சாயத்துல எதிர்த்து கேள்வி கேட்டத இந்த ஊரே பேசுதும்மா எனக்கு கவலையா இருந்தது அதை நேர்ல பாக்கலையேன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான புகழ்ந்து பேச எனக்கு அந்தப் பையன பாக்கணும் போலவே இருந்துச்சு அவன் கைய புடிச்சு நான் அவன பாராட்டணும்
இப்படி இங்க நடக்கிற அநியாயங்களை தட்டி கேட்காம தான் இந்த ஊர்ல வரதராஜன் ஓட அக்கிரமம் கொடிகட்டி பறக்குது இன்னைக்கு அவன் யோசிச்சு இருப்பான் நம்மளை எதிர்த்து கேள்வி கேட்க ஒரு ஆம்பள இருக்கான்னு ரொம்ப சந்தோஷமா இருக்குமா அதுதான் இன்னைக்கு ஒரு பெக் கூட குடிச்சிட்டேன்..” என்று மனதார பெருமிதத்துடனும், சந்தோஷத்துடனும் சரவணமுத்து கூறினார்.
அப்படியே உணவை இருவரும் உண்டு விட்டு சரவண முத்து திண்ணையில் படுத்து உறங்கியவர் நித்திரையில்,
“ரொம்ப நல்ல பை…பையன்…” என்று வாய் புலம்பினார்.
அவரது புலம்பலை கேட்டு இன்று ஆதிரனை அருவியில் இருந்து காப்பாற்றியது செந்தாழினிக்கு ஞாபகம் வந்தது.
அதில் அவள் அவனது உதட்டோடு உதடு பொருத்தி செயற்கை சுவாசம் கொடுத்தது இப்போது ஞாபகத்தில் வந்து இம்சித்தது.
தந்தை கூறிய விடையங்களை மனதிற்குள் அசை போட்டவள் ஆதிரன் மீது இனம்புரியாத ஒரு நம்பிக்கையும், அன்பும் அவள் அறியாமலேயே அவளது மனதிற்குள் மொட்டாக அரும்பியது.
அது அவளுக்கு புரியவில்லை. புரியும் நேரத்தில் ஆதிரன் அருகில் இருக்க மாட்டான் என்பது பாவையவளுக்கு அந்நேரம் தெரியவில்லை. காலம் கடந்து காதல் அரும்ப பாவையவளின் நிலைதான் என்னவோ..?
முகில் 8
அந்த உயர்ந்த நீர்வீழ்ச்சியின் அழகில் தன்னை மறந்து நின்ற ஆதிரனை கைப்பிடித்து அதன் அருகில் அழைத்துச் சென்றாள் செந்தாழினி.
“நல்லா இருக்குல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் இதுதான் வாங்க சார் கிட்ட போய் பார்க்கலாம் இன்னும் நல்லா இருக்கும்..” என்றிட
முறுக்கி விடும் பொம்மை போல செந்தாழியின் பின் சென்றான் ஆதிரன்.
சிறிது நேரம் சுற்றும் முற்றும் அதன் அழகினை திகைப்புடனும், ஆச்சரியத்துடனும் கண்கள் விரிய பார்த்து ரசித்தவன் உடனே தனது ஆயுதத்தை கையில் ஏந்தினான்.
ஆயுதம் என்றதும் ஆயுதமா அது என்ன ஆயுதம் என்று பயப்படத் தேவையில்லை அவனது ஆயுதமே கேமரா தான். கேமராவை கையில் எடுத்து ஒவ்வொன்றாக படமெடுக்க செந்தாழினிக்கோ இருப்புக் கொள்ளவில்லை.
அவள் இங்கு வந்து ஒரு நாளும் அந்த நீரில் குளிக்காமல் சென்றதே இல்லையே! தண்ணீரைக் கண்டதும் மனம் பரபரக்க தாவிக் குதித்து ஓடும் அருவியில் அழகாக நீந்தத் தொடங்கினாள்.
ஒவ்வொன்றாக தனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தவன் நீரின் மேலே நீச்சல் அடிக்கும் செந்தாழினியைப் பார்த்ததும் உடனே தனது கேமராவில் அதனையும் படம் பிடித்தான்.
கேமராவின் ஊடாக அவள் நீந்தும் அழகைப் பார்த்ததும் கடல் கன்னியே தரை இறங்கி கண் முன் வந்து நிற்பது போல அவளுடைய அழகு அவனது கண்களை கவர்ந்து இழுத்தது.
நீரின் மேல் வந்து இரு கைகளையும் வாய்க்கு அருகில் வைத்து கொண்டு, “கூ…. கூ… கூ…” எனப் பெரும் சத்தத்துடன் கத்தி நீரில் மூழ்கி எழுவதுமாக விளையாடினாள்.
அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கையைப் பார்த்தவன் சிறு புன்னகையுடன் தலையசைத்து விட்டு அங்கிருக்கும் ஒவ்வொன்றையும் அழகாக படம் பிடித்து அதனை கேமராவில் சரியாக இடம் பிடித்து இருக்கின்றனவா என்று சோதித்துக் கொண்டிருந்தான்.
நன்றாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்த செந்தாழினி அதிரனின் அருகில் நீந்தி வந்து,
“சார் வாங்க சார் இந்த தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியா இருக்கும் ஒரு தடவை இறங்கி நீந்திப் பாருங்க நல்லா இருக்கும் இதுல குளிச்சா தான் மனசுக்கு ரொம்ப லேசா இருக்கும் வேணும்னா முயற்சி செஞ்சு பாருங்க..” என்று கூறியதும்
மாவீரன் போல் நின்றிருந்த ஆதிரன் உடனே இரண்டு அடி பின் நகர்ந்து,
“இல்ல என்னால முடியாது..” என்று பின்னோக்கி நகர அந்தோ பரிதாபம் பாறையில் படிந்திருந்த பாசியினால் வழுக்கி கால் இடறி பாறையில் இருந்து நீருக்குள் விழுந்தான்.
அவன் விழுந்ததும் சிரிப்புடன் செந்தாழினியும்,
“பாத்தீங்களா மாட்டேன்னு சொன்னீங்களே இதோ எப்படி நல்லா இருக்கா..” என்று அவள் கிழுக்கிச் சிரிக்க,
ஆதிரன் உள்ளே சென்று மூச்செடுக்க முடியாமல் மேலே வந்து ஹெல்ப் பண்ணு..” கத்தியபடி மீண்டும் நீரின் உள்ளே சென்றான்.
‘இவருக்கு உண்மையிலேயே நீச்சல் தெரியாதா என்னைய ஏமாத்துறாரா இல்லைன்னா நான் பயப்படனும் என்று நடிக்கிறாரா..?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது தடவையும் மேலே வந்து மூச்சுக்கு போராடி மீண்டும் உள்ளே சென்றான்.
‘பார்த்தா நடிக்கிற மாதிரி தெரியலையே..!’ என்று அப்போதுதான் செந்தாழினிக்கு மண்டையில் உரைத்தது.
“அப்படின்னா இவருக்கு உண்மையிலேயே நீச்சல் தெரியாதா..?” என்று உடனே நிலைமையை சுதாரித்து உள் நீச்சல் அடித்து ஆதிரனைத் தேட, ஆதிரன் மூச்சுக்குத் தள்ளாடி அப்படியே மயங்கும் தருவாயில் அருவியின் ஆழத்தில் சென்று கொண்டிருந்தான்.
அவனது கையினை பிடித்து இழுத்துக் கொண்டு மேலே நீந்தி வந்து மெதுவாக பாறையின் மீது இழுத்து மேலே அவனை படுக்க வைத்தாள்.
“அப்பாடா என்ன வெயிட் ஒரு மாதிரி காப்பாத்தியாச்சு..” என்று அவன் அருகில் சென்று,
“சார் எழுந்திருங்க சார்..” என்று மெதுவாகத் தட்டி எழுப்பினாள். ஆனால் ஆதிரனிடம் இருந்து எந்த வித அசைவுகளும் இல்லை.
‘ஒரு வேளை மயங்கி இருப்பாரோ..!’ என்று கன்னத்தில் தட்ட அப்போதும் எந்த வித உணர்வற்றவனாக அப்படியே கிடந்தான்.
சிறிது நேரத்தில் செந்தாழியின் உடல் பயத்தில் குளிர் ஏறி நடுங்கத் தொடங்கியது.
உடனே ஆதிரனின் அருகில் செல்ல தடுமாறியவள், பின்பு யாரும் இல்லாத இடத்தில் என்ன செய்வது என்று தவிப்புடன் அவன் அருகில் சென்று நெஞ்சில் படுத்து இதயத்துடிப்பு விளங்குகின்றதா என்று சோதித்து பார்த்தாள்.
பதற்றத்திலோ என்னவோ அவளுக்கு சரி வர ஒன்றுமே கேட்கவில்லை. அவளது இதயம் எகிறித் துடிப்பது தான் அவளுக்கு நன்றாக விளங்கியது.
உடனே நெஞ்சில் கை வைத்து ஒரு தடவை அம்முக்க அவளுக்கோ பதற்றம் மேலும் கூடியது. இதுவரை யாருக்கும் முதலுதவி செய்து பழக்கமே இல்லை.
ஊரில் இப்படி ஏதும் நடந்தால் வண்டில் சக்கரத்தில் அவர்களை கிடத்தி வண்டில் சக்கரத்தை சுழற்ற அருந்திய நீர் அவ்வளவும் வெளியேறிவிடும் ஆனால் இங்கே இந்த இடத்தில் வண்டில் சக்கரத்திற்கு நான் எங்கு சென்று தேடுவது.
பின்பு நீர் அதிகம் அருந்தி இருப்பாரோ என்று வயிற்றில் கை வைத்து அமுக்க சிறிது நீர் கூட வெளியே வரவே இல்லை என்ன செய்வது என்று படத்தில் பார்த்த காட்சி ஒன்று அவளுக்கு உடனே ஞாபகத்திற்கு வர,
அப்படி செய்தால் தான் சரி என்று அடுத்த முயற்சியை கையில் எடுக்க எண்ணியவளது மனம் அதை செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை.
படத்தில் நீரில் மூழ்கியவரை செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி தான் அது. அதை நினைவில் கொண்டவள் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று ஆதிரனின் தடித்த அதரங்களை தனது இதழ்களால் கவ்வி வாயோடு வாய் வைத்து ஊதினாள்.
அப்படி செய்தும் அதிர நிலமிருந்து எந்த ஒரு துலங்களும் கிடைக்கவில்லை. மனம் தளராமல் மீண்டும் தொடர்ந்து முயற்சி செய்ய சிறிது நேரத்தில் வாயிலிருந்து நீர் விசிறி அடித்த வண்ணம் பெரும் இருமலுடன் கண் விழித்தான் ஆதிரன்.
ஆதிரன் பலமாக இரும அவனது முதுகை தட்டிக் கொடுத்தபடி,
“என்ன சார் இது நீச்சல் தெரியாதுன்னு சொல்லி இருக்கலாமே நான் இங்க எல்லாம் கூட்டியே வந்திருக்க மாட்டேன் எப்படி ஒரு நிமிஷத்துல என்னோட ஆவியே அடங்குற மாதிரி செய்திட்டிங்களே சார்..”
“நீ என்கிட்ட நீந்தத் தெரியுமா என்று கேட்கவே இல்லையே அதோட நான் இங்க போட்டோ எடுக்க மட்டும் தான் வந்தது இங்கே குளிக்கணும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்லை அப்படி ஆசை இருந்தாலும் நான் அதைச் செய்ய மாட்டேன்..”
“ஏன் சார் உங்களுக்குத் தண்ணின்னா பயமா..?”
“அப்படியெல்லாம் இல்ல சின்ன வயசுல நானும் என்னோட ஃப்ரெண்ட்டும் சேர்ந்து கடலுக்கு குளிக்கப் போனோம். அப்போ எங்களுக்கு ஒரு 13 வயசு இருக்கும் அந்த நேரம் ஒரு பெரிய அலை வந்து அடிச்சி அவனை தூக்கிட்டு போயிட்டு
அன்னையிலிருந்து நான் இப்படி குளம், அருவி, கடல் ஒன்னுலையும் குளிக்கிறது இல்ல. பயம் என்றத விட என் கண்ணு முன்னாடியே..” என்று கூற வந்ததை கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, செந்தாலி நிற்க ஆதிரனின் கவலை நன்கு விளங்கியது.
“சாரி என் கண்ணு முன்னாடியே ஆதி ஆதி என்று அவன் கத்திக்கொண்டு அலையோடு சேர்ந்து போய்விட்டான். இதெல்லாம் ஒரு ஒரு செக்கன்ல நடந்து முடிஞ்சிருச்சு.
இப்போவும் என்னோட கண்கள்ல அவன கடைசியாக பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கு. அது எப்பவும் என் கண்ணுக்குள்ள இருக்கும் என்னோட மறக்க முடியாது. அந்த சம்பவத்தின் தாக்கம் என்னவோ எனக்கு தண்ணில குளிக்க விருப்பமில்லை அதோட நீச்சலும் நான் பழகல..” என்று கவலையுடன் கண்களில் கசிந்த நீரை செந்தாழினி பார்க்காத நேரம் துடைத்தான்.
“ஆனா சார் நீங்க அதுக்கப்புறம் தான் நீச்சல் பழகி இருக்கணும் உங்க பிரண்டு கண்ணு முன்னால அலை அடிச்சிட்டு போகும் போது கொஞ்சம் நீச்சல் பழகியிருந்தீங்கன்னா உங்க பிரண்டா தைரியமா நீங்க காப்பாற்றி இருக்கலாம்
ஆனா அதுக்கு அப்புறமும் நீங்க நீச்சல் பழகாம இருந்தது தான் தப்பு யோசிச்சு பாருங்க..” என்று சொல்லிவிட்டு மீண்டும் நீருக்குள் குதித்து விட்டாள் செத்தாழினி.
‘உண்மையிலேயே செந்தாழினி கூறிச் சென்றது சரிதானே அதற்கு அப்புறம் தானே நான் நீச்சல் பழகி இருக்க வேண்டும் அடியோட அதை வெறுத்தவனாக அப்படியே விட்டு விட்டேனே உண்மையில் அந்நேரத்தில் எனக்கு நீச்சல் தெரிந்திருந்தால் அரவிந்தை அப்படி விட்டிருக்க மாட்டேன்..’ என்று மனம் காலம் கடந்து நொந்து கொண்டது.
இந்த சிறு பெண்ணுக்கு இருக்கின்ற அறிவு கூட நம்மளுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சிரித்தான் ஆதிரன். செந்தாழினியோ அவனது புன்னகையைப் பார்த்து அருகில் வந்து,
“என்ன சார் ஏன் சிரிக்கிறீங்க..?”
“அதுவா அது வந்து இல்ல நீ சொன்ன ஐடியா எனக்கு அந்த நேரம் வராமல் போயிட்டு அவன் இறந்த கவலைல நான் மொத்தமா அதை வெறுத்துட்டேன் ஆனா உண்மையில நீ சொன்னததான் நான் செஞ்சிருக்கணும் சென்னைக்கு போனதும் கிளாசுக்கு போனா போச்சு ஒரு மாசத்துலையே வடிவா கத்துக்கலாம்..”
“இதுக்கெல்லாமா கிளாஸ் போவாங்க நீங்க வாங்க நான் ரெண்டே நாள்ல உங்களுக்கு கத்து தரேன் ஒரு மாசம் எல்லாம் அதிகம் நீங்க வாங்க நான் அமைதியா சொல்லித்தாரேன்..”
“என்னது இங்க வா இப்படியா இப்ப விழுந்து எழும்பினது காணாத எனக்கு வேணாம் பா எனக்கு இது ரொம்ப பயமா இருக்கு இது ரொம்ப ஆழம் ஆழம் குறைந்த ஸ்விம்மிங் ஃபூல் அங்க வச்சு பழகினா பரவாயில்லை இந்த ஆழத்தில நான் வரமாட்டேன்..” என்று பின்வாங்கினான் ஆதிரன்.
அவனது சிறுபிள்ளைத்தனமான பயத்தை பார்த்து சிரித்த செந்தாழினி தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் நீருக்கடியில் சென்றாள்.
ஒருவாறு குளித்து முடித்தவள் மேலே வந்து
“படம் எல்லாம் எடுத்து முடிஞ்சா சார் போவமா..?” என்று செந்தாழினி கேட்க,
அவளுக்கு பதில் கூற திரும்பியவன் அவளை மேலும் கீழும் பார்த்த உடன் சற்றென்று திரும்பிக் கொண்டான். அவள் அப்போதுதான் தன்னை மேலிருந்து கீழ் வரை கவனித்துப் பார்த்தாள்.
அவள் அணிந்திருந்து தாவணி நீரில் நனைந்து கண்ணாடி போல அவளது முன் பருவ அழகை எழிலாகக் காட்டியது.
உடனே நெஞ்சில் கை வைத்துக் கொண்டு திரும்பியவள் அப்போதுதான் ஒன்றை மறந்தே போனாள்.
எப்போதும் இந்த இடத்திற்கு தனியாக வந்து குளித்துவிட்டு செல்வதற்குள் இந்த வெட்ட வெயிலில் ஆடைகள் அனைத்தும் காய்ந்து விடும்.
அப்படி இருக்கையில் இன்று ஆதிரனோடு வந்ததை மறந்து இவ்வாறு நடந்து கொண்டதை எண்ணி தன் மீது தனக்கே கோபம் வந்தது செந்தாழினிக்கு.
உடனே ஆதிரன் தனது தோள் பையனுள் இருந்த ஜக்கெட்டை எடுத்து செந்தாழினியிடம் கொடுத்து,
“இதை போட்டுக்கோ..” என்றான்
மறுப்பேதும் தெரிவிக்காமல் உடனே அதனை வாங்கி போட்டுக் கொண்டாள்.
அதன் பின்பு தான் திரும்பி செந்தாழினியைப் பார்த்தான் ஆதிரன். அவனது கண்ணியமான செய்கையைப் பார்த்து அவன் மீது மரியாதையும் அன்பும் செந்தாழினிக்கு பெருகியது.
மீண்டும் திரும்பி ஊருக்குள் வந்த செந்தாழினி அவனது ஜாக்கெட்டை கழட்டி கொடுத்தபடி,
“இந்த வெயிலுக்கு தாவணி காஞ்சுருச்சு சார் ரொம்ப நன்றி..” என்று கூறிவிட்டு அவ்விடத்தில் நிற்காமல் ஓடிவிட்டாள்.
“செந்தாழினி இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு நாளைக்கு காலையில திருவிழாவில் சந்திப்போம்..” என்று ஓடும் செந்தாழினிக்கு கேட்கும் படி கத்திக் கூறினான் ஆதிரன்.
“சரிங்க சார்..” என்று கூறிவிட்டு செந்தாழினி மறைந்து போனாள்.
வீடு சென்று அவசரமாக சமைத்து முடித்த செந்தாழினி இன்று நடந்த விஷயங்களை மீட்டிப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
பாவம் பாவை அவளுக்கு புரியவில்லை இந்த இன்பமும் புன்னகையும் இன்னும் சில நாட்களில் வேரோடு பிடுங்கி எறியப்படுவது.
முகில் 7
செந்தாழினி கூறியதைக் கேட்ட வரதராஜன் தீர்க்கமான முடிவெடுத்தவராக செந்தாழினியைப் பார்த்து,
“இங்க பாரு புள்ள நீ செஞ்சது தப்புதான் என்ன இருந்தாலும் ஊர் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கு அத இங்க இருக்கிற மக்களே கடைப்பிடிக்காட்டி அப்போ எதுக்கு ஊர்ல பஞ்சாயத்து நீதி நியாயமெல்லாம்
அதனால நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் அந்தப் பையன் பஞ்சாயத்துக்கு குறுக்க வந்து பேசினது பெரிய தப்பு அதோட ஊர் பெயர் தெரியாதவன் பஞ்சாயத்துக்கு உரிய மரியாதை கொடுக்கல இங்க இருக்குற பெரியவங்களையும், பஞ்சாயத்தையும், தீர்ப்பையும் அவமதித்ததால இந்த பஞ்சாயத்து அவனுக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் வழங்குது
அதோட என்ன இருந்தாலும் இந்த ஊரை நம்பி வந்தவனை இந்த ஊரை விட்டு போங்க என்று சொல்றது முறை இல்ல வந்தவங்கள வாங்க என்று உபசரிக்கிறது தான் எங்க ஊரு மரியாதை
அந்த மரியாதைக்கு கேடு வர பஞ்சாயத்து தலைவரா நான் விடமாட்டேன் ஆனா வந்தவரு வந்த வேலையை பார்த்துக்கிட்டு பத்து நாள்ல இந்த ஊரை விட்டு கிளம்பி போயிடனும்
ஏன் பத்து நாளுன்னு சொல்றேன்னா நாளையில் இருந்து நம்ம மாரியம்மன் கோயில் திருவிழா ஆரம்பமாகுது
திருவிழா ஆரம்பிச்சதிலிருந்து திருவிழா முடியிற பத்து நாள் வரைக்கும் யாரும் ஊருக்கு வந்தவங்க வெளியே கிளம்பக்கூடாது.
அதனாலதான் அந்த பத்து நாளைக்குள்ள அவர் வந்த வேலையை பார்த்துக்கிட்டு போயிடனும் அம்புட்டு தான் நான் சொல்றது இதுக்கு மக்களாகிய நீங்க என்ன சொல்றீங்க சொல்லுங்கப்பா நான் சொல்றது சரிதானே..!” என்று கூறியதும் மாடு தலையாட்டுவது போல அனைவரும் தலையாட்டி ஆமென அதனை ஆமோதித்தனர்.
செந்தாழினிக்கு அப்போதுதான் உயிரே வந்தது போல இருந்தது. வரதராஜன் பெரிய அளவில் தண்டனை கொடுத்து விடுவாரோ என்று பயந்து கொண்டு இருந்த செந்தாழினி அவரின் இந்த தீர்ப்பு மிகவும் கவலையாக இருந்தாலும் இத்துடனே இதனை முடித்து விட்டார் என்று மனதில் ஓரளவு நிம்மதி நிறைந்து கொண்டது.
அதோடு 5000 ரூபா அபராதம் எல்லாம் பெரிய தொகை தான் ஆனால் லட்சக்கணக்கில் உழைக்கும் ஆதிரனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விடயம் அல்ல என்று சிந்தித்த செந்தாழினி பஞ்சாயத்து கலைந்த சிறிது நேரத்திலேயே ஓடிச் சென்று ஆதிரனை அடைத்து வைத்திருந்த வீட்டில் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அவளுக்கு பின்னே அவளது தோழி சந்திராவும், அவளது தந்தை சிவராசாவும் செந்தாழினியை பின்தொடர்ந்து வந்தனர்.
உள்ளே வந்து பார்த்தால் பெரும் கோபக் கனல் பொங்க தனது கோபத்தை அடக்க முடியாமல் ஆதிரன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த செந்தாழினிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
கதவு திறந்த கையுடன்,
“விடுங்க நான் போறேன் ரெண்டுல ஒன்னு இன்னைக்கு கேட்டே ஆகணும் இவங்க உங்களை எல்லாம் படிக்காதவங்க என்று இப்படி ஏமாத்துறாங்க உண்மையான சட்டம் என்னன்னு இங்க இருக்கிற மக்களுக்கு தெரியாது
இங்க இருக்கிறவங்க எல்லாம் கிணத்து தவளைகளாக தான் இருக்கிறாங்க
என்னால இந்த அக்கிரமங்களை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியல செந்தாழினி விடு நான் இப்பவே போலீஸ் கிட்ட போறேன்
எனக்கு என்னவோ அவங்க தான் அந்த பொண்ண ஏதோ பண்ணியிருக்கணும் என்று தோணுது அந்தப் பொண்ணு வேற வாயை திறக்க மாட்டேங்குது..” என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டு வெளியேறியவனை சிவராசாவும், செந்தாழியும், சந்திராவும் இழுத்துப் பிடித்தனர்.
செந்தாழினி ஓடிச் சென்று கதவை உள்ளே தாழிட்டு ஆதிரனின் அருகில் வந்து,
“ஐயோ சார் கொஞ்சம் பொறுமையா இருங்க நான் சொல்றதை முதலில் கேளுங்க..” என்று ஆதிரனின் கையைப் பிடித்துக் கெஞ்ச அருகில் இருந்த சிவாவும்,
“தம்பி கொஞ்சம் பொறுமையாக இருப்பா நீ கோபப்பட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை..” என்று கூறி அவனது கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்ய,
ஆதிரனோ ஜல்லிக்கட்டு காளை போல அடங்க மாட்டேன் என்று திமிறி கொண்டு நின்றான். உடனே சிவா ஓங்கி கன்னத்தில் ஒரு அரை விட்டான்.
அப்படியே அதிர்ந்து போய் நின்றது ஆதிரன் மட்டுமல்ல சந்திராவும் செந்தாழினியும் தான்.
இதுவரைக்கும் சந்திரா தந்தை யாருக்கும் அடித்து பார்த்ததே இல்லை. ஏன் சந்திராவிற்கு கூட தனது தந்தை அரைந்ததில்லை அப்படி இருக்கையில் வேறொருவனுக்கு கை நீட்டி அரைந்திருக்கின்றார் என்றால் அவளுக்கு அது ஆச்சரியம் தானே.
“என்ன தம்பி நானும் பாவம் போனா போகுதுன்னு சமாதானம் படுத்தலாம் என்று பார்த்தால் நீங்க கொஞ்சம் கூட சொல்றத கேட்கவே மாட்டேங்கிறீங்க இங்கே இப்படித்தான்..” என்று இறுதியில் கூறிய வார்த்தைகளை மிகவும் அழுத்திக் கூறினார்.
“இப்படித்தான்னா..” என்று புரியாமல் புருவங்கள் முடிச்சிட புரியாமல் அந்த வயதானவரைப் பார்த்து வினவினான்.
“இப்படித்தான்னா இப்படித்தான் இதுதான் இங்க நடைமுறை. இந்த நடைமுறையை பார்த்து தான் நாங்க அந்த காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறோம்
இப்போ வரதராஜன் இதற்கு முதல் அவனோட அப்பா ஆளவந்தான் அதுக்கு முன்னுக்கு அவங்க அப்பா என்று காலாகாலத்துக்கு அவங்க தான் இந்த ஊரை ஆட்சி செஞ்சு வந்தாங்க
ஆனா வரதராஜன் இவ்வளவு காசு பணத்தோட இருக்கல பஞ்சாயத்து தலைவரா இருந்தாலும் அவனோட அப்பனே பொம்பள சோக்குல எல்லாத்தையும் அழிச்சிட்டான்
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்று செந்தாழினியைப் அவர் பார்த்து கண்கலங்க செந்தாழினி சிவா சொல்ல வரும் விடயத்தை வேண்டாம் என்று கண்களால் சைகை காட்ட, சில நிமிடங்களில் சிவராசாவின் வார்த்தைகள் தந்தி அடித்தன.
“சில வருடங்களுக்கு முன்பு என்ன..?” என்று ஆதிரன் கூற வந்த விடயத்தை கூறாமல் சிவராசா தவிப்பதை பார்த்து அவரின் பேச்சைத் தூண்டினான்.
“அது பெரிய கதை தம்பி அவனுங்கட அராஜகம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை இங்க ஊரில இருக்கிற எல்லாருக்கும் அது நல்லாவே தெரியும் அவன் அநியாயம், அக்கிரமம் பண்றான்
தீர்ப்பு என்ற போர்வையை சுத்தி வச்சு பொண்ணுங்க நம்ம சாதி சனங்கள துஷ்பிரயோகம் பண்றான்.
ஆனா எங்களுக்கு வேற வழி இல்லை பிறந்த மண்ணுல வாழனும் என்ற ஆசையில இங்கே கிடந்து சீரழிந்து கொண்டிருக்கிறோம்
அதோட இவன் என்றாலும் பரவாயில்லை
இவனுக்கு பிறந்திருக்கானே ஒரு மகன் அவன் எல்லாம் எந்த ரகத்திலும் சேர்க்கவே முடியாது
அவனுக்கு என்று புதுசா ஒரு பெயர் உருவாக்கனும் அப்படி ஒரு கேடு கெட்டவன் அந்த பொண்ணுக்கு நடந்தது காரணம் அவனுக தான்
அது அந்த பொண்ணோட அம்மா அப்பா தொடக்கம் அந்த பஞ்சாயத்தில இருக்க எல்லாருக்குமே தெரியும் ஆனா ஒருத்தரும் முன் வந்து சொல்ல மாட்டாங்க ஏன் மூச்சே விடமாட்டாங்க ஏன்னா அன்னையோட அவங்கட மூச்சு நின்னுரும்
அவனை எதிர்த்து பேசுறவங்கள சில நாட்களிலேயே கொன்னுடுவான் இல்லன்னா கால், கை இல்லாம முடம் ஆக்கிடுவான் நீங்க இந்த ஊருல கால், கை ஒன்னு இல்லாம முடமா திரிகிறவன் எல்லாம் வரதராஜனையும், செந்தூரனையும் எதிர்த்து பேசினவங்க தான்
ஊருக்குள்ள இன்னும் அப்படிப்பட்டவங்கள நீங்க இன்னும் கண்ணுல காணலன்னு தான் நினைக்கிறேன்
தம்பி இங்க பாருங்க உங்கள பார்த்தா என்னோட மகள ஒத்த வயசுல இருக்கீங்க உங்கள பெத்த பிள்ளையா நினைச்சு சொல்லிக்கிறேன் கேளுங்க
நீங்க வந்தீங்களா சுத்தி பார்த்தீங்களா எல்லாரையும் படம் பிடிச்சீங்களா அதோட போயிடுங்க இந்த ஊரு வம்பு தும்பெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் ஏதோ நல்ல காலம் அவங்க மன்னிச்சு விட்டுட்டாங்க இல்லன்னா இன்னைக்கு பஞ்சாயத்துல உங்கள உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பாங்க
ஆனா அதுவும் சந்தேகமா தான் இருக்கு உங்கள விட்டு வச்சிருக்காங்க ஏதோ ஒரு பிரச்சனைய உண்டு பண்ண போறாங்கன்னு தோணுது ஏன்னா அவ்வளவு சீக்கிரமா அவங்கள எதிர்த்து கேள்வி கேட்டாவங்கள அவங்க ஒருபோதும் சும்மா விட்டதில்லை
எதுக்கும் கவனமா இருங்க இந்தா புள்ள செந்தாழினி தம்பியை கவனமா கூட்டிட்டு போ இன்னும் பத்து நாள் இருக்க சொல்லி இருக்காங்க ஆனா எனக்கு ஒன்னும் நல்லதா படலம்மா அவரை நாளைக்கு ஊருக்கு கிளம்ப சொல்லு..” என்று கனிவோடு கூற,
“ஏன் சிவப்பா இவங்களை எல்லாம் பார்த்து பயப்படுறீங்க இவனுகள எல்லாம்…” என்று செந்தாழினி பற்களை கடிக்க,
“என்ன புள்ள நீயும் இப்படி பேசுற அந்த பையன் ஒரு சூதுவாது தெரியாம பேசுறான்னா நீ வேற
இங்க இருக்கிற உனக்கு வருடக்கணக்கா அவங்கள பத்தி நல்லா தெரியும் தானே அந்த பிள்ளை பட்டணத்துல படிச்சிட்டு வந்து இங்கு வந்து உயிரை விடணுமா சொல்லு…” என்று கூறவும் ஒரு நிமிடம் அவளது கடந்த கால வாழ்க்கை கண் முன்னே வந்து நின்றது.
உடனே நெஞ்சில் கை வைத்தபடி ஆதிரனைப் பார்த்து,
“சார் நீங்க நாளைக்கே ஊருக்கு கிளம்புங்க இங்க இருக்க வேணாம் நான் பிரகாஷ் அண்ணாவோட பேசுறன்..” என்று கண்களில் பயத்துடன் கூறினாள் செந்தாழினி.
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை அவங்க தான் பத்து நாள் வரைக்கும் டைம் தந்திருக்காங்கல்ல நான் பத்து நாள் வரைக்கும் இருந்து எல்லாத்தையும் சுத்தி பாத்துட்டு போறேன்
அதோடு உங்க திருவிழா நாளைக்கு தொடங்குது திருவிழா தொடங்கின பிறகு நான் எப்படி வெளியே போக முடியும் பத்து நாள் வரைக்கும் நான் கவனமாய் இருக்கிறேன்
பத்து நாளுக்குள்ள எனக்கு இந்த ஊரை சுத்தி காட்டுனீங்கன்னா எனக்கு அது போதும் நான் இனிமே எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டேன்..” என்று சிவராசாவை பார்த்து ஆதிரன் கூற,
“சரிப்பா அதுதான் ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டேன்னு சொல்லிட்டல்ல தம்பி எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க..” என்று கூறிவிட்டு சந்திராவும் அவளது தந்தை சிவாவும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து அதிரடிம் செந்தாழியும் வீட்டில் இருந்து வெளியே வர,
“செந்தாழினி எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல எங்கேயாவது மனசுக்கு அமைதி கிடைக்கிற மாதிரி ஒரு இடமிருந்தா சொல்லு..” என்று வினவ,
செந்தாழினி கன்னத்தில் ஆட்காட்டி விரலை வைத்து தட்டியபடி வானை நோக்கி பார்வையை செலுத்தி யோசித்துக் கொண்டிருந்தாள்.
“நீ மனசு கஷ்டமா இருக்கும்போது மன அமைதியைத் தேடி எங்க போவ அங்க என்ன கூட்டிட்டு போ..” என்று கூறியதும் அவளது முகம் செந்தாமரை போல மலர்ந்தது.
“சரி சார் வாங்க போவோம்..” என்று கிராமத்துக்கு கிழக்காக நெடுந்தூரம் கூட்டி சென்றாள். ஆதிரனுக்கு நடந்து கால்கள் வலிக்கத் தொடங்கி விட்டன.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்தாயிற்று ஆனால் செந்தாழினி எதிர்பார்த்த இடம் இன்னும் வரவில்லை போல ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் ஆதரனே கேட்டு விட்டான்.
“செந்தாழினி தெரியாம உன்கிட்ட கேட்டுட்டேன் என் காலெல்லாம் ரொம்ப வலிக்குது உன்னோட இடம் வந்துட்டா இல்லைன்னா சொல்லு திரும்பிடுவோம் என்னால இதுக்கு மேல முடியாது..” என்று அருகில் இருந்த பாறையில் அமர்ந்தான் ஆதிரன்.
“இல்ல சார் இதோ வந்துருச்சு..” என்று ஆதிரன் அமர்ந்திருக்கும் பாறைக்கு பின்னால் படர்ந்திருக்கும் அடர்ந்த முற்புதர்களை விரித்து காட்டினாள்.
அங்கு மேகங்களுக்கு கீழே பாதை அமைத்தது போல நீர் மேலிருந்து கீழே மிகவும் அழகான வீழ்ந்து ஓடிக் கொண்டிருந்தது.
அந்த நீர் துகள்கள் எல்லாம் பணிச்சாரல்கள் போல பறந்து அந்த இடத்தையே மறைத்து நின்றன.
அவனாலேயே அவனது கண்களை நம்ப முடியவில்லை புதர்களுக்கு நடுவில் இவ்வளவு பெரிய நீர்வீழ்ச்சியா அதுவும் அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் என்று ஆதிரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அந்த இடத்தில் வீசும் காற்றுகள் நீர் துளிகளின் குளிர்மையை சுமந்து வந்து ஆதிரனின் மீது மோதிச் சென்றது.
அந்த வீசும் காற்றின் ஸ்பரிசத்தினால் அவனது மனதிலும் உடலிலும் உள்ள வலிகள், சுமைகள் அனைத்தும் அந்நேரம் மெதுமெதுவாக மறக்கச் செய்தன.
முகில் 6
வரதராஜனின் தீர்ப்பினைக் கேட்டு அனைத்து மக்களும் ஒன்று சேர ஆமோதித்ததும் ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் நிற்க முடியாமல் ஆதிரன் தவித்தான்.
அந்த இடத்தை விட்டு உடனே எழுந்தவன் பஞ்சாயத்தின் நடுவில் மின்னல் வேகத்தில் வந்து நின்று,
“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் பஞ்சாயத்து தலைவர் நான் கொஞ்சம் பேசலாமா..?” என்று ஆதிரன் தனது கனீர் குரலால் அங்கு இருக்கும் அனைவரின் காதிலும் விழும் வண்ணம் வரதராஜனைப் பார்த்து கேட்க,
செந்தாழினிக்கு திடீரென பஞ்சாயத்து நடக்கும் இடத்தின் மத்தியில் நிற்கும் ஆதிரனைக் கண்டதும் மூச்சடைத்து விட்டது.
“அங்க நிக்கிறத பாத்தா நம்ம ஆதிரன் சார் மாதிரி இருக்கு..” என்று நன்கு கண்களைச் சுருக்கிக் கூர்ந்து பார்த்தவள் அப்படியே பயத்துடன் திரும்பி அருகிலும் சுற்றிப் பார்க்க அங்கு ஆதிரன் இருந்த இடத்தில் அவனைக் காணவில்லை.
அப்போ பஞ்சாயத்து தலைவர்கிட்ட பேசிகிட்டு இருக்கிறது அவனே தான் என்று நெஞ்சில் கை வைத்த படி திகைப்புடன் பயமும் சேர்ந்து உடல் மரத்துப் போனது போல ஸ்தம்பித்து போய் நின்றாள்.
‘ஐயையோ நிலைமை தெரியாம இந்த ஆளு ஏன் பஞ்சாயத்துக்கு நடுவுல போய் நிக்குது சரி இன்னைக்கு நான் செத்தேன் இவர் வேற ஊருக்கு புதுசு ஆச்சே ஏதாவது ஏடாகூடமா பேசி வச்சுட்டு இருந்தா பின்னுக்கு பெரிய பிரச்சினையா போயிடும்
நான் ஒரு கிறுக்கி வரும்போது விஷயத்தை சொல்லி கூட்டி வந்து இருக்கணும் அப்படி சொல்லாம விளையாட்டா அவரும் வர விளையாட்டு புத்தியுடன் தான் இருப்பாருன்னு நினைச்சு நான் ஒன்னும் சொல்லாம கூட்டி வந்தது தப்பா போச்சு..’ என்று தன்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள் செந்தாழினி.
அவன் அங்கு அனைவர் முன்பும் வந்து நிற்க, அங்கிருந்த மக்களுக்கு ஆதிரன் சற்று முன் அனைவரையும் புகைப்படம் எடுத்து பரீட்சையமானதால் “இவன் யார்..?” என்ற கேள்வி அங்கிருக்கும் மக்களுக்கு எழவில்லை. நடப்பதை மட்டும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் பஞ்சாயத்து சபை உட்பட வரதராஜனுக்கும், செந்தூரனுக்கும் மட்டும் அவன் புதிதான ஆளாகவே தோன்றினான்.
“யார் இவன்..?” என்று அவனது உடலை அங்குல அங்குலமாக அளவெடுத்த செந்தூரன்.
“பார்க்க ரொம்ப அழகா இருக்கானே இந்த பொட்டச் சிறுக்கிக வேற முன்னுக்கும் பின்னுக்கும் திரிவாளுக நம்ம கெத்த நாம காப்பாத்திக்கணும் செந்தூரா..!” என்று மனதிற்குள் கணக்கிட்டான் அந்தக் காமுகன்.
அப்பொழுது பஞ்சாயத்து சபையின் தலைவர் ஒருவர்,
“என்ன தம்பி யாரு நீங்க..?”
“நான் யார் என்றது இருக்கட்டும் முதல் நீங்க இந்த பொண்ணுக்கு வழங்கின தீர்ப்பு சரியானதா..?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அங்கிருக்கும் பஞ்சாயத்து தலைவர்களை பார்த்துக் கேட்டான்.
“தம்பி இதுதான் எங்களோட ஊர் வழக்கம் இப்படியான தப்பு செஞ்சா நாங்க இப்படித்தான் தீர்ப்பு வழங்குகிறது இதெல்லாம் கேக்குறதுக்கு நீங்க யாரு..?”
“என்னையா இது நான் ஒரு நியாயத்தை கேட்டா நீங்க யாரு நீங்க யாருன்னு கேட்டுகிட்டு இருக்கீங்களே தவிர ஒழுங்கா ஒன்னுக்கும் பதில சொல்ல காணும்..”
அதுதான் தம்பி சொன்னனே இதுதான் எங்க ஊர் பஞ்சாயத்து வழக்கம் இந்த வழக்கத்துப்படிதான் நாங்க நடத்துக்குவோம். என்னென்ன தப்புக்கு என்னென்ன தண்டனைன்னு சொல்லி இருக்கு அதன்படி தான் பஞ்சாயத்து சபை தீர்ப்பு வழங்கும் அதே மாதிரி இந்த பஞ்சாயத்துக்கு ஊர் மக்களும் கட்டுப்பட்டு நடப்பாங்க அதுதான் இந்த ஊரோட வழக்கம்..”
ஒரு கசப்பான புன்னகையை உதிர்த்துவிட்டு,
“அந்தப் பொண்ண கேட்டீங்களே இவன் தானா உன்னை கெடுத்ததுன்னு அதுக்கு அந்த பொண்ணு ஆமான்னு சொல்லுச்சா..” என்று அடுத்த கேள்விக்கனையை தொடுத்தான்.
அங்கிருந்த மக்கள் உட்பட பஞ்சாயத்து சபையும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் நின்றது.
உண்மைதானே மல்லிகா இதுவரையில் அவன் தான் என்னை இப்படி சீரழித்தான் என்று ஒரு தடவை கூட ஆமென்று ஒத்துக் கொள்ளவே இல்லையே..!
“பாத்தீங்களா ஐயா உங்களால பேச முடியல அந்த புள்ள அவன் தான் பலாத்காரம் செய்தான் என்று ஒத்துக்கொள்ளாமல் எப்படி நீங்க தீர்ப்பை சொல்லலாம் இது முறையா..?
நீங்களே யோசிச்சு பாருங்க தப்பு செய்தவன் தப்பு நான் தான் செஞ்சேன்னு வந்து சொல்றான் என்றதுக்காக, முறைப்பாடு செஞ்சவங்க அது உண்மையா பொய்யா என்று சொல்றதுக்குள்ள நீங்க எப்படி தீர்ப்ப வழங்கலாம்..? இதுவா உங்களுடைய பஞ்சாயத்து தீர்ப்பு..?” என்று நக்கலாக கேட்டவனை ஒரு நிமிடம் கண்களால் எரிக்கும் பார்வை பார்த்தார் வரதராஜன்.
“ஒரு பொண்ணுக்கு உங்க ஊர்ல அநியாயம் நடந்திருக்கு அதை தட்டிக் கேட்க ஒருவரும் இல்லை தப்ப ஆமோதிக்கிற மாதிரியும் ஊக்குவிக்கிற மாதிரியும் அதுக்கு ஒரு பஞ்சாயத்து சபை
இங்கே இருக்க யாருமே நியாயவாதியா எனக்கு தெரியல இந்த பஞ்சாயத்து சபையும் நியாயத்துக்குத் துணை போறதா தெரியல..” என்றவன்,
மல்லிகா வை திரும்பிப் பார்த்து,
“நீ என்கூட சென்னைக்கு வாமா நான் கோர்ட்ல கேஸ் போட்டு உனக்கு நியாயம் வாங்கி தாரேன் அப்படி அங்கேயும் உனக்கு நியாயம் கிடைக்கலன்னா ஹை கோர்ட்டுக்கு போடுவோம் நான் உனக்கு துணையா இருக்கேன்..” என்று மல்லிகாவை பார்த்துக் கூற,
மல்லிகாவின் கண்களுக்கோ ஆதிரன் அப்பொழுது தெய்வமாகவே தெரிந்தான்.
அவரளது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இவர் ஒருவராவது எனது மனதை புரிந்து கொண்டு பேசுகிறாரே..! என்ற உணர்வே அவளது மனதில் இருக்கும் பாரத்தை மிகவும் குறைத்தது.
ஒரு பெண் உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தப்பட்டிருக்கின்றாள் என்றால் அவளது உள்ளத்தை உணர்ந்து மனதை அறிந்து அதனை சரிப்படுத்த வேண்டியது பெற்றோர்களது கடமை.
அந்தப் பிழை எவ்வாறு நடந்தது..? எப்படி நடந்தது..? அதற்கு காரணமானவர் யார்..? என்று கண்டுபிடிக்க வேண்டியது பஞ்சாயத்து சபையில் நீதிக்கு சாட்சியாக கடவுளுக்கு சமமாய் இருக்கிற உங்களோட பொறுப்பு.
நீங்க இதெல்லாம் விட்டுட்டு தப்பு செய்தவன விட அந்தத் தப்பினால் பாதிக்கப்பட்டவள இப்படி துன்புறுத்துறீங்களே இது நியாயமா..?
இப்போ வற்புறுத்தி வன்புணர்வு செய்றவங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கலாம்ன்னு ஒரு சட்டம் வந்திருக்கு அது உங்களுக்கு தெரியுமா..?
ஒரு பெண் துன்புறுத்தப்பட்டா என்று அறிந்ததுமே அந்த ஊரில் இருக்கும் அனைத்து ஆண்களும் கொந்தளித்து அதற்கு நியாயம் வழங்க வேண்டும் ஆனால் இங்கு ஒருவரும் அவளுக்காக பேச கூட இல்லை அப்படி என்றால் இந்த ஊர்ல யாருமே ஆம்பளைகள் இல்லையா..?” என்று கேட்டதும் வரதராஜன் உட்பட அங்கிருக்கும் அனைத்து ஆண்களுக்கும் ஒன்று சேர கோபம் வந்தது.
வரதராஜன் தோளில் இருக்கும் துண்டை எடுத்து கொண்டு “டேய்..” என்று சத்தமிட்டுக் கொண்டு எழுந்து நிற்க,
அங்கிருக்கும் நாள் ஐந்து பேர் கையில் அருவாளுடன் எகிறிப் பாய்ந்து ஆதரனின் அருகில் வர செந்தாழனிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை தூக்கி வாரி போட்டது.
உடனே செந்தாழி பாய்ந்து வந்து ஆதிரனை பாதுகாக்கும் பொருட்டு அவன் முன்பு வந்து நின்றவள், வரதராஜனை பார்த்து,
“ஐயா மன்னிச்சுக்கோங்க அவர் இந்த ஊருக்கு புதுசு தெரியாம பேசிட்டாரு..”
வரதராஜன் கடும் கோபத்துடன்,
“அவர் இந்த ஊருக்குப் புதுசுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியுது ஆனா எப்படி எப்போ இந்த ஊருக்கு வந்தாரு அதை முதல் சொல்லு..”
“அதுவா ஐயா பிரகாஷ் அண்ணா கூட வேலை செய்ற கம்பெனியிலேயே இவங்களும் வேலை செய்றாங்க அந்த கம்பெனியில விடுமுறையா அதனால பிரகாஷ் அண்ணா சொல்லி இங்க வந்து இருக்காரு..”
“அதெல்லாம் இருக்கட்டும் உனக்கு பஞ்சாயத்து விதிகளை பத்தி ஒன்னும் தெரியாதா சிறு வயசுல இருந்து இந்த ஊர்ல தான் இருக்கா இங்க கடை பிடிக்கிறோம் நடைமுறையை மீறக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா..?”
“தெரியும் ஐயா ஆனா..?” என்று அவள் இழுக்க,
“உன் மேல தான் பிழை ஊருக்கு புதுசா யாராவது வந்தா பஞ்சாயத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று உனக்கு தெரியாதா..?”
“தெரியும் ஆனா நைட்டு நாம வரவே ரொம்ப லேட் ஆயிட்டு காலையில அறிவிக்கலாம்னு தான் இருந்தேன் அதுக்குள்ள இப்படி பஞ்சாயத்து கூடி சில பிரச்சனைகள் வந்ததால என்னால பஞ்சாயத்துக்கு அறிவிக்க முடியல ஆனா நான் செய்தது தப்புதான் அதுக்காக இந்த பஞ்சாயத்து முன்னுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..”
“அந்தப் பையன் இந்த ஊருக்கு புதுசு அவனுக்கு இங்கத்த நடைமுறை தெரியாது. அதனாலதான் அப்படி பேசுறான் ஆனா நீ சொல்லி இங்க கூட்டி வந்து இருக்கனும் இப்ப பாரு எல்லாரும் முன்னாடியும் அவன் எப்படி பேசுறான்னு இதெல்லாம் சரிப்பட்டு வராது இன்னைக்கே அவன அவங்க ஊருக்கு அனுப்பி வைச்சிரு..” என்று வரதராஜன் கராராக கூறிவிட்டார்.
“எங்கள பார்த்தா இங்க சொம்புல தண்ணி குடிக்க வந்தவங்க மாதிரியா தெரியுது நாங்க காலாகாலமா பின்பற்றி வருகிற பழக்கங்களை தான் இங்க தீர்ப்பா நாங்க சொல்றோம் இவரு அந்த பொண்ணு பாதிக்கப்பட்டான்னு ரொம்ப வருத்தப்படுறாரு ஏன் பொண்ணுக்கு ரொம்ப வேண்டியவரோ..?” என்று கூறியதும் கோபம் துளிர் விட வரதராஜனை பார்த்த ஆதிரன்,
“ஒரு பெண்ணுக்கு அநியாயம் நடக்க அவங்களுக்கு வேண்டியதாக வரவேண்டும் என்று அவசியம் இல்லை பெண்ண பெண்ணா மதிக்கிற ஒரு மனுஷனா இருந்தா போதும் என்று மூஞ்சில அடித்தாற் போல கூற,
செந்தூரன் பாய்ந்து வந்து ஆதிரன் சட்டை காலரை பிடித்து,
“எங்க வந்து யாருகிட்ட எப்படி பேசணும்னு தெரிஞ்சுகிட்டு தான் பேசுறியா நீ ஒத்தாள் இங்க ஒரு ஊரே இருக்கு எங்க அப்பாவை அவமானப்படுத்திட்டு இந்த ஊரை விட்டு நீ உயிரோட போயிருவியாடா கொன்னுடுவேன் கொன்னு..” என்று மிரட்ட,
ஆதரனின் சட்டை காலரை செந்தூரன் பிடித்ததும் ஆதிரனுக்கு கட்டுக்கடங்காத கோபம் எழுந்து அவனது முகத்தில் அறைவதற்கு கை ஓங்க ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருவரையும் பிரித்தெடுத்தனர்.
செந்தாழினி உடனே ஆதிரனை அவ்விடத்திலிருந்து இழுத்து சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் பூட்டிவிட்டு வெளியே வந்து,
ஐயா நான் பண்ணினது தப்புதான் யார் என்று தெரியாத அவரை இங்கு நான் பஞ்சாயத்துக்கு கூட்டி வந்திருக்கக் கூடாது அதோட பஞ்சாயத்துக்கு நான் முக்கியமா வந்தத அறிவித்திருக்கணும் என்னோட தப்பு தான் நீங்க இதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் தாங்க நான் கட்டாயமாக ஏற்றுக் கொள்வேன்..” என்று செந்தாழினி அனைவரும் முன்பும் கேட்க,
அப்பொழுது செந்தூரனின் குறுக்கு புத்தி எதையோ யோசிக்க வரதராஜனின் அருகில் சென்று காதில் எதையோ ஓதினான்.
அப்படி எதைத்தான் வரதராஜனிடம் கூறினானோ தெரியவில்லை அவரது காது மடல்கள் கேட்ட விடயத்தில் வாயில் சிறு புன்னகை தவழ்ந்தது.
முகில் – 5
வரதராஜனின் கர்சனையில் அந்த இடமே எதிரொலித்தது. அங்கு கூடி இருந்த மக்கள் அனைவரும் வரதராஜனின் இச்செயலை பார்த்து உடல் அதிர ஒரு நொடி தங்களை அறியாமலேயே கால்களை பின் நோக்கி வைத்து நகர்ந்து நின்றனர்.
பஞ்சாயத்து தலைவராக பொறுப்பில் இருக்கும் வரதராஜன் எப்பொழுதும் மக்கள் முன் மரியாதையாக இருக்க வேண்டும் என்பதற்காக மனதில் தோன்றும் எண்ணங்களை சிறிதளவு கூட வெளிக்காட்டியதே இல்லை.
பஞ்சாயத்திலும் தீர்ப்பு வழங்கும் போது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமென்று அவர் எவ்வளவோ முயற்சித்து தான் தீர்ப்பை வழங்குவார்.
அப்படிப்பட்டவர் இன்று தன்னை அறியாமலேயே கோபத்தின் உச்சியில் வார்த்தைகளை தீயாக கக்க அது மக்களுக்கோ பெரும் ஆச்சரியம் தான்.
அதை எண்ணி ஒரு நிமிடம் கண்களை இறுக மூடித் தன்னை சமப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய அருகில் இருந்த பஞ்சாயத்து தலைவர்களுள் ஒருவர் எழுந்து,
“என்ன வரதராஜா இது நீயே இப்படி கோபப்பட்டு பேசினா எப்படி..? கொஞ்சம் பொறுமையாக இரு.. யாருன்னு விசாரிச்சிட்டு அதுக்கப்புறம் கோபப்படுவோம்
என்ன இருந்தாலும் பொண்ண பெத்தவன் இல்லையா அதுதான் கண் கலங்கி மனசில இருக்கும் ஆதங்கத்தையும், கோபத்தையும் வாய் வார்த்தைகளாக வெளி விட்டுட்டான்
அவன் சொல்ற விஷயமெல்லாம் இப்ப நீ காதுல போட்டுக்கொண்டு இப்படி பேசினா அப்புறம் பஞ்சாயத்தை எப்படி நடத்த முடியும் வா வந்து இரு..” என்று வரதராஜனை சமாதானப்படுத்தி இரண்டு அடி தள்ளி விழுந்த கதிரையை ஒருவன் எடுத்து வந்து அதே இடத்தில் போட்டு தனது தோளில் உள்ள துண்டால் அதில் இருக்கும் மண்ணைத் தட்டி விட வரதராஜன் அமைதியாக உட்கார்ந்து முடிந்தவரை தனது கோபத்தை கட்டுக்குள் வைத்தபடி ஒரு முடிவோடு மல்லிகாவின் தந்தை ராசுவைப் பார்த்து,
“இங்க பாரு ராசு உன் பொண்ணு கெட்டுப் போயிட்டா அது உண்மைதான் ஆனால் என் இடத்துக்கு வந்ததால தான் கெட்டுப் போயிட்டான்னு சொல்லாதே
உன் பொண்ண நீ ஒழுங்கா வச்சிருக்க முடியல என் தோப்புல எத்தனை வருஷமா உன் பொண்ணு வேல செய்ற இத்தனை வருஷம் நடக்காதது நேத்து நடந்திருக்கு
இத்தன வருஷமா பாதுகாப்பா தானே இருந்தா என் இடத்துக்கு வேலைக்கு வந்ததால தான் இப்படி நடந்தது என்று சொல்ல வாரியா..?
அதோட என் தோப்பு, பண்ணை, வயல் இப்படி பல இடங்களில் எவ்வளவு பொண்ணுங்க வேலை செய்றாங்க உன் பொண்ண விட சின்ன பொண்ணுங்க கூட வேலை செய்றாங்க அவங்களுக்கெல்லாம் நடக்காது உன் பொண்ணுக்கு மட்டும் எப்படி நடந்துச்சு..” என்று அவன் கூறிய வார்த்தைகளை வைத்தே அவனுக்கு கொக்கி போட்டான் வரதராஜன்.
“இ..இல்லையா இல்ல நான் அப்படி சொல்ல வரல..” என்று ராசு தடுமாற,
“சரி விடு உன் பொண்ணு உத்தமின்னா யார் செய்ததுன்னு கேட்டு சொல்லு சொன்னாத்தான் என்னால தீர்ப்பு வழங்க முடியும்
இன்னும் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம் தருவேன் அதுக்குள்ள நீ கேட்டு சொல்லலைன்னா
பஞ்சாயத்தில நாங்க எல்லாம் பேசி ஒரு முடிவு பண்ணிடுவோம் அதுக்கப்புறம் ஐயா எனக்கு நியாயம் வேணும் தர்மம் வேணும் என்று சொல்லி என் வீட்டு வாசல் பக்கம் நீ வந்து நிற்க கூடாது…” என்று கூறியதும் ராசு மல்லிகாவைப் பிடித்து அடித்து,
“யாருன்னு சொல்லுடி பொட்டக் கழுதை என் உயிரை வாங்காதே என் மான மரியாதை எல்லாத்தையும் இப்படி குழி தோண்டி புதைச்சிட்டியே இதுக்குத்தான் அஞ்சு வருஷமா தவமிருந்து காடு மேடு அலஞ்சி உன்ன பெத்தோம் நாசமா போனவளே சொல்லுடி..” என்று அவளுக்கு அனைவரும் முன்னிலையில் அடித்து துவைத்தெடுத்தார் ராசு.
அவளை அவ்வளவு அடித்தும் அவள் வாய் திறக்கவே இல்லை.
“என்ன ராசு உன் பொண்ணு சொன்னாளா..?” என்று வரதராஜன் கிண்டலாக கேட்க,
ராசு தலை குனிந்தபடி இல்லை என்று மறுப்பாகத் தலை அசைத்தார்.
“அப்போ உன் பொண்ணு விரும்பித்தான் இதை செஞ்சிருக்கா சின்னப் பொண்ணுன்னு சொன்ன ஆனா இந்த வயசுலயே ஆம்பள சோக்கு கேக்குது பாத்தியா..” என்று கூறியதும் மல்லிகா நிமிர்ந்து அவரைப் பார்த்து முறைத்து விட்டு மீண்டும் அழத் தொடங்கினாள்.
செந்தாழினி உட்பட அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் மல்லிகாவை பார்க்க பரிதாபத்துடன் கோபமும் எழுந்தது.
‘யார் என்று ஏன் இந்த பொண்ணு சொல்லாம இப்படி எல்லார் முன்னுக்கும் அடி வேண்டி புழுவா துடிக்குது அந்தக் கயவன் யார் என்று சொல்லித் தொலையலாம் தானே..’ என்று அனைவர் மனதிலும் எரிச்சல் உண்டாகியது.
வரதராஜன் உடனே கதிரையில் இருந்து எழுந்து,
“என்ன ராசு உன் பொண்ண வச்சு நாடகம் ஆடுறியா எனக்கு என்னவோ அப்படி ஒன்னு நடக்கவே இல்ல நீங்க எல்லாம் சேர்ந்து நாடகம் ஆடுற மாதிரி இருக்கு
தெரியும் தானே பஞ்சாயத்து நடவடிக்கை எப்படி இருக்கும்னு பொய்யான பிராது கொடுத்தா அதுக்கு வேற தண்டனை பஞ்சாயத்து நேரத்தை வீணடிச்சதுக்கு உங்களுக்கு தனியா 500 ரூபா அபராதம் கட்டணும்..” என்று வரதராஜன் கூறிக்கொண்டே போக,
நாடகமா ஆடுறீங்க என்று கூறியதும் தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்த மல்லிகாவுக்கு எல்லை மீறிய கோபம் எழுந்தது.
தன்னை இவ்வாறு கேவலமாக ஊர் மக்களுக்கு முன் வைத்து பேசும் வரதராஜனை பார்த்ததில் ஏதோ விஷப் பாம்பை பார்த்தது போல அருவருத்தாள் மல்லிகா.
ஏதோ முடிவெடுத்தவளாக தாவணி முந்தானையால் கண்களை அழுந்தத் துடைத்துவிட்டு,
“ஐயா..!” என்று கோபமாக குரலை உயர்த்தி,
“யாருன்னு சொன்னா நீங்க அவங்களுக்கு மறுக்காம தண்டனை வழங்குவீங்களா?..” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு துணிவுடன் கேட்டாள்.
அனைவருக்கும் பேரதிர்ச்சி இவ்வளவு நேரமும் தலை கவிழ்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த பெண்ணா இவ்வாறு வரதராஜனை எதிர்த்து கத்தியைப் போல வார்த்தைகளை வீசுகின்றாள் எனத் தோன்றியது.
உடனே அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு சற்று நிலை தடுமாறிய வரதராஜன்,
“நி.. நிச்சயமா அ..து அதுக்குத்தானே பஞ்சாயத்து இருக்கு..” என்று கூற,
உடனே அவனது வார்த்தையை கேட்டு இகழ்ச்சி புன்னகையை உதிர்த்து விட்டு தனது வலது கரத்தைத் தூக்கி ஆள்காட்டி விரலால் செந்தூரன் இருக்கும் திசையை நோக்கி நீட்டினாள்.
இதனை எதிர்பார்க்காத பண்ணியாரின் மகன் செந்தூரன் அதிர்ச்சி என்னும் சுழலில் மாட்டிக்கொண்டவனாக அவள் தன்னை நோக்கி விரல் நீட்டுகின்றாள் என்று அறிந்ததும் இவ்வளவு நேரமும் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவன் உடனே எழுந்து நின்றான்.
அந்த நேரம் தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தேறியது.
செந்தூரனின் பின் நின்ற ஒருவன் ஓடிவந்து பஞ்சாயத்தின் முன் நின்று,
அனைவரும் இவன் ஏன் வந்து முன்னால் நிற்கின்றான் என்று புரியாமல் பார்க்க அவனும் கைகளை முன் கட்டி கொண்டு தலை குனிந்தபடி,
“ஐயா நான் தான் இப்படி செய்தேன் என்னை மன்னிச்சிடுங்க பொண்ணு பார்க்க அழகா இருந்துச்சு அதான் ஐயா பம்பு செட்டுக்குள்ள வச்சு பலவந்தமா…” என்று சிரித்துக் கொண்டு தலையை சொரிந்தான்.
கை வச்ச பிறகு தான் தெரிஞ்சுச்சு நான் அத்து மீறி தப்பு பண்ணிட்டேன்னு அந்த பொண்ணு அவ்வளவு கத்துச்சு ஆனாலும் நான் இப்படி செஞ்சது தப்புதான் கொஞ்ச நேரத்துல எனக்கு என்ன ஆச்சுன்னு புரியல நான் செஞ்சது பெரிய தப்பு தான் ஐயா எனக்கு என்ன தண்டனை வேணா தாங்க நான் அதை முழு மனசா இந்த பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு ஏத்துக்கொள்றேன்..” என்று அவன் கூறியதும்,
மல்லிகா முதல் முறை தான் அவனைப் பார்ப்பது போல மேலிருந்து கீழ் வரை கண்களால் அளவெடுத்தாள்.
மல்லிகாவை பார்த்து வரதராஜன்,
“என்னம்மா சொல்ற இவனா உன்ன கெடுத்தது ஆமாவா இல்லையா சொல்லு..” என்று கேட்க,
“இவன் சொல்றது உண்மைதானா சொல்லு..” என்று ராசு அதட்டினார்.
எழுந்து நின்ற செந்தூரன் இப்பொழுது துண்டைத் தூக்கி கதிரையில் மீண்டும் தூசி தட்டுவது போல தட்டி விட்டு கிறக்கமாக மல்லிகாவை பார்த்து விட்டு அப்படியே இருக்கையில் அமர்ந்து புன்னகையுடன் நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
வரதராஜன் உடனே,
“அப்போ சரி பஞ்சாயத்து நல்லபடியா முடிவுக்கு வந்துட்டு இனி தீர்ப்பு சொல்லலாமா..?” என்று மக்களை பார்த்துக் கேட்டுவிட்டு வரதராஜன் பஞ்சாயத்து சபை நால்வருடன் இரகசியமாக கலந்துரையாடினார்.
நடப்பதை யாவற்றையும் அமைதியாக ஒரு ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆதிரனுக்கு அவ்வளவு கோபம் எழுந்தது.
இருந்தும் அனைத்தையும் அடக்கி வைத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் ஆன வரதராஜன் இதற்கு என்ன தீர்ப்பு வழங்குகின்றார் என்று பார்ப்போம் என அனைத்தையும் வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
10 நிமிடங்களில் பஞ்சாயத்து குழு ஒரு முடிவை எடுத்து முன்னால் நிற்கும் அந்தக் கயவனைப் பார்த்து,
“உன்னோட பேரு என்னடா..?”
“மயில்சாமி ங்க..”
“மயில்சாமி ஒரு பொண்ண அத்து மீறி தொட்டது மகா தப்பு நீ செஞ்ச தப்புக்கு பெரிய தண்டனை கொடுக்கணும் ஒரு பொண்ணுட சம்மதம் இல்லாமல் அவளை தொட்டு தாலி கட்டாமல் ஒரு பொண்ணோட கற்ப சீரழிச்சதுக்கு உன்ன வெட்டிக் கொன்னாலும் தப்பில்லை
ஆனா பஞ்சாயத்து சட்டத்தில் ஏன் இங்கே இந்த ஊரிலேயே கொலை பண்ற அளவுக்கு சட்டங்கள் இன்னும் வரல
அதனால வளமை போல தான் நீ 2000 ரூபா அபராதத்தை பஞ்சாயத்தில் கட்டிட்டு 50 சவுக்கடி அந்த பொண்ணு கையால வாங்கணும் அதோட அந்த பொண்ணு வார வெள்ளிக்கிழமை அம்மன் கோயில் வைத்து கல்யாணம் முடிச்சு அந்த பொண்ண மனைவியா ஏத்துக்கணும் என்ன நான் சொல்றது இதுக்கெல்லாம் சம்மதமா.”
“சரிங்கய்யா..” என்று ஆடு மாறி தலையாட்டினான் மயில்சாமி.
“என்னப்பா என்ன நான் சொல்றது இந்த தீர்ப்புக்கு ஊர் மக்களாய் இருக்கிற நீங்க என்ன சொல்றீங்க எல்லாரும் சம்மதிக்கிறீங்களா..?” என்று ஊர் மக்களை பார்த்து வரதராஜன் கேட்க,
ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக “தீர்ப்ப ஏத்துக்கிறோம் ஐயா..” என்று கூறினார்.
தீர்ப்பினை கேட்டதும் ஆதிரன் கொதித்து எழுந்து விட்டான் இதெல்லாம் தீர்ப்பா ஒரு பெண்ணின் கற்பு பறிபோனதற்கு விலை பேசியது போல அல்லவா இருக்கின்றது பெண்ணின் கற்புக்கு மதிப்பு அவ்வளவுதானா
இப்படி என்றால் ஊரில் இருக்கும் பணம் படைத்தவன் எவ்வளவோ பேர் எத்தனையோ பெண்களை கெடுத்து விட்டு பணம் கட்டிவிட்டு அந்த சவுக்கடியை வாங்கிவிட்டு எத்தனையோ பெண்களை திருமணம் செய்து கொள்ளலாமே..!
தீர்ப்பு என்பது தவறை மீண்டும் செய்யாதிருக்க வழங்கும் தண்டனை தவறை செய்ய தூண்டுவதற்கு அல்ல.
முகில் 4
ஆதிரன் பஞ்சாயத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் புறப்பட அவனின் சிறுபிள்ளைத்தனமான ஆர்வத்தை எண்ணி சிரித்த வண்ணம்,
“என்னங்க சார் இது.. சின்ன புள்ள மாதிரி இவ்வளவு சந்தோஷப்படுறீங்க..”
“இல்ல செந்தாழினி இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை இப்பதான் முதன் முதல் பார்க்கிறேன் அதுதான் ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு
படத்துல பாக்குறது எல்லாம் நேர்ல பாக்குற ரொம்ப டிஃபரண்டா அன்ட் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் தானே அதான் எனக்குள்ள என்ன அறியாம ஒரு ஹப்பினஸ் வந்துட்டு..”
ஆதிரன் ஒன்று மாறி ஒன்று ஆங்கில வார்த்தைகளால் பேச அவளால் அதற்கு பதில் கூற முடியாமல் திணறினாள்.
அவன் கூறும் வார்த்தைகள் ஏதோ நல்லதாகத் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள்,
“சரிங்க சார் வாங்க அதுக்குள்ள போய் குளிச்சிட்டு அப்படியே காலை சாப்பாட முடிச்சிடுவோம்
நேரத்துக்கு பஞ்சாயத்துக்கு போனால்தான் அங்கு நடக்கிற புதினங்களைப் பார்க்கலாம்..” என்று கூற செந்தாழினி உடன் சென்று ஆற்றில் குளித்துவிட்டு உடைமாற்றி உணவினை உண்டு முடித்துவிட்டு நேரடியாக பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
அவர்கள் செல்லவும் நேரமும் சரியாக இருந்தது. அங்கு ஊர்மக்கள் அனைவரும் குழுமி இருந்து தங்களுக்குள் ஒவ்வொரு கதைகளையும் பேசி எதனையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.
அங்கு ஆதிரன் டிப் டாப்பாக ஜீன்ஸும், டி-ஷர்ட்டும் அணிந்து கூலிங் கிளாஸ் போட்டு கையில் கேமராவுடன் செந்தாழினி அருகில் வந்து நிற்க அனைவரும் ஆதிரனை விசித்திரமாகப் பார்த்தனர்.
ஆதிரன் இரவில் ஊருக்குள் வந்ததால் பெரும்பாலும் ஒரு சிலரைத் தவிர வேறு கண்களுக்கு அவன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால் அவன் யார்..? எனப் புரியாத மக்கள் செந்தாழினியிடம்,
“யாரு புள்ள இவரு..?, எப்போ வந்தாரு..?, எங்கிருந்து வந்திருக்காரு..?, உன்னோட உறவுக்காரரா..?, இல்லனா உனக்கு கல்யாணம் பேசின மாப்பிள்ளையா..?” என்று அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேள்விகளை தொடுக்க,
அவை அனைத்திற்கும் அமைதியாக பதில் கூறிய செந்தாழினி இறுதியாக உனக்கு பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையா என்று கேட்டதும் சங்கடமாகிப் போனது அவளுக்கு
அதுவும் அருகில் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரனுக்கு இது நன்றாகவே கேட்டிருக்கும் என்று அவர் என்ன நினைப்பாரோ என்று எண்ணத்துடன் திரும்பிப் பார்த்த பின்பு தான் அவளுக்கு நிம்மதியே வந்தது.
ஆம் அவன் அது எல்லாம் கேட்கும் நிலைமையில் இல்லை சுற்றி இருந்தவர்களை கண்களால் ஆச்சரியத்துடன் ஆராய்ந்த படியே நின்றான்.
வயதுக்கு வந்த பெண்கள் ஆதிரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க,
அவர்களை விட வயது கூடிய பெண்கள் அவனை விழுங்குவது போல மோகப் பார்வையுடன் கண்களால் மொய்த்துக் கொண்டிருக்க செந்தாழினிக்கு தான் இவர்களின் செயல்களைப் பார்த்து வெட்கமாகிப் போனது.
அனைவரின் கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொன்னவள், ஆதிரனை அருகில் அழைத்து,
“சார் நீங்க நேத்து ரொம்ப நேர தாமதமா வந்ததால இந்த ஊர்ல இருக்கிறவங்களுக்கு நீங்க வந்தது தெரியாது அதுதான் மாறி மாறி எல்லாரும் கேட்டுகிட்டு இருக்காங்க அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லத் தானே வேணும் இல்லன்னா தப்பா நினைச்சுப்பாங்க நீங்க இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க..”
“இல்ல செந்தாழினி அவங்க கேக்குறது நியாயம் தானே என்ன இப்பதான் முதல் முதலா பார்த்து இருக்காங்க அப்ப நான் யாருன்னு அவங்களுக்கு மனசுக்குள்ள ஒரு கேள்வி வரும் தானே பரவாயில்லை நான் இவங்களை எல்லாம் வைத்து ஒரு போட்டோ எடுக்கவா..?”
அவ்வாறு கூறியதும் மிகவும் நிலைமையை புரிந்து கொண்டு மிக எளிமையாக நடந்து கொள்ளும் ஆதிரனின் குண இயல்பு செந்தாழினிக்கு வெகுவாக பிடித்து விட்டது.
உடனே சத்தமிட்டு,
“எல்லாரும் கொஞ்ச நேரம் சத்தம் போடாம இருங்க இவர் தான் நம்ம ஊருக்கு வந்திருக்க பிரகாஷ் அண்ணாவோட நண்பன்
இவரு பிரகாஷ் அண்ணா கூட தான் வேலை பார்க்கிறார் லீவுக்கு நம்ம ஊர பார்த்துட்டு அப்படியே இங்கே இருக்கிற அழகான இடங்களை படம் பிடிக்க வந்திருக்காரு
இப்போ உங்க எல்லாரையும் படம் பிடிக்கணுமாம் அதனால எல்லாரும் அசையாம சத்தம் போடாம நில்லுங்க..” என்று அனைவரும் கேட்கும் படி கூச்சலிட்டு செந்தாழனி கூறினாள்.
அவ்வாறு கூறியதும் அந்த சனத் திரளுக்குள் சலசலப்பு உண்டானது. எல்லோருக்கும் ஒரே குசியாகிவிட்டது.
பெண்கள் தாங்கள் அணிந்திருந்த சேலையை, தாவணியை ஒழுங்காக சரி செய்ய ஆண்கள் தலைமுடியை கோதியபடி தங்களது வீர மிகுந்த பெரிய மீசையை நீவி விட்டபடி நிமிர்ந்து கம்பீரமாக நிற்க, அவர்களின் செயலைப் பார்த்து ஆதிரனுக்கு புன்னகை அரும்பியது.
மாவீரன், அழகு மங்கையர் என கூட்டமாக நிற்பவர்கள் ஒவ்வொருவரையும் பகுதி பகுதியாக புகைப்படம் எடுக்க திடீரென அங்கு ஏற்பட்ட சலசலப்பும், சந்தோசமும் ஒரு நொடியில் அனைவர் முகத்திலும் துடைத்து எடுத்தார் போல் காணாமல் போனது.
அனைவரும் இருந்த இடத்திலிருந்து எழும்பி நின்றனர். ஒரு சிலர் தோளில் போட்டு இருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டினர்.
சிலர் கைகளை முன்னே கட்டிக்கொண்டு தலை குனிந்து நிற்க சிறு பிள்ளைகள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒரே திசையைப் பார்த்து சத்தம் போடாமல் நிற்க,
கேமராவின் ஊடாக மக்களின் முக மாற்றத்தை உணர்ந்து கொண்ட ஆதிரன் திடீரென்று மக்களின் முகம் தீவிரமாக மாறிவிட்டதே என்று அவர்கள் பார்க்கும் திசையை நோக்கி திரும்பிப் பார்த்தான்.
அப்பொழுது தூரத்திலிருந்து ஒரு கார் அவர்களை நோக்கி வர அந்த காரில் இருந்து தலையில் நரை விழுந்த பெரிய மீசை வைத்த ஒரு 60 வயதை எட்டும் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த ஒரு பெரியவர் காரில் இருந்து இறங்கி வந்தார்.
அவர் காரில் இருந்து இறங்கியதும் அனைவரும் கையெடுத்து கும்பிட்டு ஒன்று சேர “வணக்கம் ஐயா..” என்று கூற அவர் சிறு தலை அசைப்புடன் முன்னாள் கம்பீரமாக நடந்து சென்றார்.
அவரின் நடையையும், கம்பீரத்தையும் பார்த்து அவர் தான் பஞ்சாயத்து தலைவர் என்று ஆதிரன் ஊகித்து விட்டான்.
ஆலமரத்திற்கு கீழே அவர்களுக்கு என்று கதிரைகள் போடப்பட்டிருந்தன. அதில் நடுவில் உள்ள பெரிய கதிரை புலிப்பல் பதித்து மிக கம்பீரமாக அமைக்கப்பட்டிருந்தது.
அதில் போய் பண்ணையார் அமர்ந்ததும் அருகில் இருக்கும் நான்கு கதிரைகளிலும் ஏனைய பெரியவர்கள் வந்து அமர்ந்தனர்.
“எல்லாரும் வந்தாச்சு தானே பஞ்சாயத்து ஆரம்பிக்கலாம்..” என்று அருகில் இருக்கும் ஒரு வயதானவர் எழுந்து கூற, பஞ்சாயத்து ஆரம்பமாகியது.
“யாரு பிராது கொடுத்தது..? கொடுத்தவங்க முன்னுக்கு வாங்க..” என்று கம்பீரமான குரலில் வரதராஜன் அழைத்தார்.
அழைத்ததும் ஒரு பாவாடை தாவணி அணிந்து 18 வயது மதிக்கத்தக்க பெண் சில காயங்களுடன் அழுது கொண்டே அந்தக் கூட்டத்திற்கு முன் வந்து நின்றாள்.
அவளுக்கு பின்னால் அவளது தாய், தந்தையர் இருவரும் கண்ணீர் சிந்திய படி வந்து நின்றனர்.
அவர்களைப் பார்த்து தீவிரமான முகத்துடன்,
“என்ன பிராது சீக்கிரமா சொல்லுங்க..” என்றதும்,
அந்தப் பெண்ணின் தந்தை கண்ணில் வழிந்த நீரை அழுந்தத் துடைத்து விட்டு,
“ஐயா நாங்க காலம் காலமா உங்க பண்ணையில தான் வேலை செய்றோம் நான், என்னோட பொஞ்சாதி, பொண்ணு எல்லாம் பத்து வருஷத்துக்கு மேல வேலை செய்றோம்.
திடீரென்று நேத்து என் பொண்ணு உடம்பெல்லாம் காயத்தோடு ஓடி வந்து ரொம்ப நேரமா அழுதுட்டே இருந்தா என்னை ஏதுன்னு நாங்க ரொம்ப பதறிப் போயிட்டோம்
வளமையா நானும் என் பொஞ்சாதியும் பொண்ணும் ஒரே இடத்துல தான் வேலை செய்றனாங்க
ஒன்னா தான் வேலைக்கு போவோம் ஒன்னா தான் வீடு திரும்புவோம்
நேத்து என் பொஞ்சாதிக்கு உடம்புக்கு ரொம்ப முடியல அதனால நான் வேலைக்கு வரமாட்டேன்னு பொண்ணு கிட்ட தகவல் சொல்லி வேலைக்கு அவளையும் அனுப்பி வைச்சேன்.
வேலை முடிஞ்சு ரொம்ப தாமதமா தான் வீட்டுக்கு வந்தா வீட்டுக்கு வந்தவ ஒண்ணுமே சொல்லாம அழுதுகிட்டே இருக்கா பாவி பொண்ணு இப்படி யார்கிட்டயோ மானம் மரியாதைய பறி கொடுத்துட்டு வந்து நிற்கிறாளே..!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் மல்லிகாவின் தந்தை.
அங்கிருக்கும் அனைவரும் அவரைப் பார்த்து இரக்கம் கொண்டனர். ஆண்மகன் அழுதால் மனம் தாங்குமா அவரது அழுகை அனைவரது மனதிலும் வேதனையை உண்டாக்கியது.
“என் பொண்ணு உலகம் அறியாதவையா அவளுக்கு ஒண்ணுமே தெரியாது சின்னப்பொண்ண என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்க நீங்கதான் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லணும்..” என்று மல்லிகாவின் தாய் உடல் நிலை முடியாமல் இருமியபடி மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு அழுதார்.
அவர்கள் கூறிய விடையங்களை கேட்ட வரதராஜன் தனக்கு கீழ் இருக்கும் அந்த நால்வருடனும் மாறி மாறி தங்களுக்குள் கலந்துரையாடினர்.
அவர்களுடன் பேசிய பின்பு அந்த பெண்ணை பார்த்து,
“இந்தா பொண்ணு உன்ன தொட்டது யாருன்னு உன்னால அடையாளம் காட்ட முடியுமா..?”
அவ்வாறு கேட்டதும் அந்த சிறுமி அந்த கேள்வியை கூட காதில் வாங்க முடியாமல் தவித்துப் போய் மீண்டும் தாவணியால் வாயை பொத்திக்கொண்டு அழுதாள்.
அப்போது கூட்டத்திற்குள் சலசலப்பு மீண்டும் ஆரம்பமாக ஒவ்வொருவரும் இவனா இருக்குமோ அவனா இருக்குமோ என்று தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.
அப்போது அந்தக் கூட்டமே அதிரும் வண்ணம் பெரும் சத்தத்துடன் புல்லட் பைக்கில் காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக பண்ணியாரின் மகன் செந்தூரன் அங்கு வந்து இறங்கினான்.
அவனை அங்கு பார்த்ததும் அனைவரும் வரதராஜனுக்கு எப்படி மரியாதை செலுத்தினரோ அவ்வாறே அவனுக்கும் தவறாது மரியாதையை வாரி வழங்கினர்.
வரதராஜனாவது அனைவருக்கும் தலையசைத்து அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டான். ஆனால் செந்துரனோ யாரின் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கு கொடுத்த மரியாதையை கிஞ்சித்தும் மதிக்கவும் இல்லை.
அவனைக் கண்டதும் அங்கு கூடியிருந்த செந்தாலினி உட்பட அனைத்து பெண்களின் முகத்திலும் அப்பட்டமாக புழுவை பார்ப்பது போல ஒரு அருவருப்பு தன்மை தென்பட்டது.
உடனே அந்த கூட்டத்திலிருந்து செந்துரனின் அடியாள் ரங்கன் வந்து புல்லட்டை பிடிக்க செந்தூரன் இறங்கி தோரணையுடன் நடந்து வர பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி அவர்களுக்கு நிகராக கதிரை போடப்பட்டது.
“என்னப்பா பஞ்சாயத்து முடியப் போகுதா..?” என்று கால் மேல் கால் போட்டு ஆட்டியபடி திமிராக மல்லிகாவை பார்த்து கேட்க,
“இல்ல தம்பி எங்க அந்த பொண்ணு தான் வாயே திறக்க மாட்டேங்குதே அது வாய திறந்து யாருன்னு சொன்னா பஞ்சாயத்து அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சிருக்கும்..” என்று வரதராஜன் கூற,
தலைகுனிந்து அழுது கொண்டிருந்த மல்லிகாவோ நிமிர்ந்து இருவரையும் அனல் கக்கும் பார்வையை பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்தாள்.
அந்த பெண்ணின் தந்தையோ,
“ஐயா நீங்க தான் இதுக்கு ஒரு நல்ல முடிவா சொல்லணும் அவன் யாரா இருந்தாலும் கண்ட துண்டமா வெட்டி போடணும்
உங்களை நம்பித் தானே ஐயா உங்களோட இடத்துக்கு வேலை செய்ய என்னோட பொண்ண அனுப்பி வச்சேன் அப்ப அவளோட பாதுகாப்பு உங்கள்ளையும் தானே தங்கி இருக்கு
உங்க இடத்துக்கு வேலைக்கு வர்றவங்களுக்கு நீங்க தானே பாதுகாப்பு இதுக்கு நீங்கதான் ஒரு நியாயம் வழங்கணும்..” என்றதும் வரதராஜனுக்கு கோபம் தலைக்கேறியது.
உடனே எழுந்து கதிரையை காலால் உதைத்து,
“என்னடா சொன்ன வேலைக்கார நாயே..!” அந்த இடமே அதிரும்படி கர்ச்சித்தார் வரதராஜன்.