யட்சனின் போக யட்சினி

யட்சனின் போக யட்சினி – 16 & 17

போகம் – 16   உலகில் ஜனித்திருக்கும் உயிரினங்கள் யாவும் தன் காதலன் காதலியுடன் கூடிக் களித்து ரிங்காரமிட்டுக் கொண்டிருந்த அர்த்த முன் ஜாம வேலை…!   தன் ஆருயிர் பெண்ணின் சம்மதம் கிடைத்த பின் இவ்வுலகில் எந்த ஒரு காதல் கணவன்தான் தாமதிக்க நினைவான்…! ருத்ரன் அவ்வாறே…!   உரசி உரசியே அவளைப் பற்ற வைக்க முடிவு செய்தானோ…?! தீக்குச்சி காந்தமாய் ருத்ரன் தன்னவளின் வெண்சங்கு கழுத்து வளைவில் முகம் புதைத்து வத்திக்குச்சியாய் உரசினான்.   […]

யட்சனின் போக யட்சினி – 16 & 17 Read More »

யட்சனின் போக யட்சினி – 14 & 15

போகம் – 14 வானில் உள்ள வெண்பருவதியவளோ… நட்சத்திர வாலிப கூட்டத்தைக் கண்டு வெட்கம் கொண்டு மேக மன்னனிடம் அடைக்கலம் சென்றிருந்த ஏகாந்த வேலை…!   ருத்ரன் சட்டையின்றி ஈரம் சொட்ட சொட்ட விழிகளில் தாபம் பொங்க நிற்க… அக்கோலத்தில் அவனைப் பார்த்ததும் வெட்கம் கொண்ட மாது விழியை திருப்பி நாணம் கொண்டாள்.   ருத்ரனோ அது போதாது என விடாது அவளை சீண்ட எண்ணினான் போலும்,”பொண்டாட்டிழிஇஇ…ஏன் திரும்புழற…?! நான்தான் நீ சொன்னழ்தும் குளிச்சிட்டேன்ல…!  திழும்புடிஇஇ… பாருழு

யட்சனின் போக யட்சினி – 14 & 15 Read More »

யட்சனின் போக யட்சினி – 13

போகம் – 13   காந்தனானவன் தன் வெண்பனி வீச்சால் உலகில் உள்ள மங்கையர்கள் அனைவரின் மனதினை கொள்ளையடித்த வண்ணம் இருக்க… நம் தலைவியும் வேறொரு காந்தனுக்கு மனதை தந்துட்டுவிட்டு காத்துக் கொண்டு இருந்தாளாம்…!   ரகசியா வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு முற்பகல் வேலை போல் பாட்டியுடன் கதையளந்து கொண்டிருந்த நேரம் ருத்ரன் வரும் சத்தம் கேட்டது.   தனக்கு அவசரமாக ஒரு மீட்டிங் இருப்பதாக கூறிவிட்டு, கீழேயே அவளுக்கென திருமணத்திற்கு முன் தந்த அந்த ஒரு

யட்சனின் போக யட்சினி – 13 Read More »

யட்சனின் போக யட்சினி – 12

போகம் – 12   திங்களவன் தன் சுழலும் வேலையை செவ்வென தொடங்கி செங்கதிர்களை பூமியின் மேல் முழுமையாக வீச தொடங்கியிருக்க… இளம்பனியும் தன் தாக்கத்தை இன்னும் சிறிது நேரத்தில் குறைத்துவிடுவேன் என கூறும் அழகிய காலை வேலை…!   ருத்ரன் கொம்பனுடன் அடக்கும் விளையாட்டில் மும்முரமாக இருக்க… தன் காரிகையின் கீச்சுக்குரல் கேட்டது போலவே இருக்கவும் மேலே விழி உயர்த்தி பார்த்தவனுக்கு,அவள் இல்லை என்றதும் காதல் பித்தால் ஏற்பட்ட தன் மனபித்து போல என்று நினைத்துக்

யட்சனின் போக யட்சினி – 12 Read More »

யட்சனின் போக யட்சினி – 11

போகம் – 11   பூக்களெல்லாம் ஆனந்தமாய் சிரித்து மகிழ்ந்து பூத்துக் குலுங்க தொடங்கி மக்களின் அகத்தை குளிர்விக்கும் துகினம் பொழியும் வைகுறு விடியல் பொழுது…!   தன்னவளின் துயில் அழகை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்த வண்ணமே உறங்கிய ருத்ரன் எப்போதும் போல அதிகாலையிலேயே எழுந்துவிட்டான்.   உடற்பயிற்சியும் கொம்பனுடனான விளையாட்டும் விஜயனுடனான சிறிய நடைப் பயணமும்… தாத்தாவுடன் காலையில் வயலின் நடக்கும் வேலைகளின் மேற்பார்வைகளுடான சில இத்யாதிகளும்தான் அவனுக்கு அன்றாட உணவு போல… இவைகளை எல்லாம்

யட்சனின் போக யட்சினி – 11 Read More »

யட்சனின் போக யட்சினி – 10

போகம் – 10   அம்புலி மாமனோ தன் எண்ணிலடங்கா நட்சத்திர காதலிகளுடன் உல்லாசமாக வானில் உலா வந்து கொண்டிருக்க…. தன் மதியின் பதற்றக் குரலைக் கேட்டு இங்கே அமர்ந்திருந்த நம் அம்புலியானும் பதறித்தான்விட்டான்…!   சிறுவயது முதலாக அடர் இருட்டென்றால் பயம் நம் ரகசியாவிற்கு, என்ன செய்வாள் பாவம் புது இடமும் கூட கர்ரெண்ட் கட் ஆகிவிட்டதும் அலறிவிட்டாள்…!   ருத்ரனோ கட் ஆகியதும், “ஜெனரேட்டர் என்ன ஆச்சு தெரியலயே…?!” , என்று நொடியில் நினைத்துக்

யட்சனின் போக யட்சினி – 10 Read More »

யட்சனின் போக யட்சினி – 9

  போகம் – 9   நிலவினி சென்று இன்று நிலவன் வந்து முகில்கள் இரண்டிற்கு முதலிரவாமே என்று நம் தலைவனையும் தலைவியையும் தேடி ஆராய்ந்த அழகிய மதுரம் சிந்தும் வேளை…!   ரகசியா ரூபி சிவப்பு புடவையில் இந்திர லோகத்து மேனகையாக விசுவாமித்திரனின் மனதை ஆட்டிப் படைக்க போவது தெரியாமல் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே அறையில் ரூபி சிவப்பு சட்டை மற்றும் பட்டு வேஷ்டியில் ஹேண்ட்சம் சிம்மனாக அமரந்திருந்த ருத்ரனைப் பார்த்தாள்.   ரகசியாவிற்கு சற்று

யட்சனின் போக யட்சினி – 9 Read More »

யட்சனின் போக யட்சினி – 8

போகம் – 8   செங்கதிரோன் தன் கதிர்களால் வெளியே வண்ண மலர்களை தழுவி கொண்டிருக்க, அரண்மனை உள்ளே மானுடக் கதிரவனும் ஆசைக் கொண்டான் போல தனக்கான மலரைத் தழுவ…!!!   நேராக ரகசியாவை நோக்கி சென்ற ருத்ரனுக்கோ விழியின் பார்வை மொத்தமும் தன்னவளை காதலுடன் போர்த்தியிருந்தது…!   அதை எங்கே ரகசியா கண்டாள்,  ‘கிருஷ்ணா… ஜீஸஸ்…அல்லா…’, என அனைவரையும் டிஸ்டர்ப் செய்தவள் மூடிய விழியை திறந்தாள் இல்லை தூரிகையானவள்…!   தன் முன்னாடி  உருவம் நிழலாடுவதை

யட்சனின் போக யட்சினி – 8 Read More »

யட்சனின் போக யட்சினி – 7

போகம் – 7   பாற்கரனாவன் தன் கோடானு கோடி கரங்கள் கொண்டு மக்களை தொட்டு தழுவிக் கொண்டிருந்த  முற்பகல் வேளை அது…!!!   தரையில் விழுந்திருந்த ரகசியா எழ முடியாமல் விழிகளை திறந்தவளுக்கு தன் வயிற்றின் மேல் பாரம் ஏதோ சுறுக்கென குத்துவதும் கூசுவதும் போல உணர்வு தோன்ற கழுத்தை வளைத்து தலையை சற்று தூக்கி எக்கி குனிந்து பார்த்தாள்.   தன் வயிற்றின் மேல் மாங்கல்யத்தின் பக்கத்தில் வீற்றிருந்தது என்னவோ தனக்கு எதிரியாய் தன்

யட்சனின் போக யட்சினி – 7 Read More »

யட்சனின் போக யட்சினி – 6

போகம் – 6   இந்த நன்னாள் மகாதேவனுக்கும் மகாதேவிக்கும் திருமணமாக போகும் சுபநாளன்றோ…! ஆகவே வெண்ணிலவும் இவ்விருவரையும் மணவறையில் கண்டுவிட்டுத்தான் செல்வேன் என்று அரியவன் கிழக்கே உதிக்க தொடங்கிய போதிலும் சிறிதாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வைகறை புலரும் பூவேலை தொடங்கிய அழகிய தருணம் அது…!    ருத்ரவேலன் சிறிதும் தூக்கமேதும் இன்றி அப்படியே விடியும் வரை இருந்தவன்… நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து சில தீர்க்கமான எண்ணங்களுடன் முடிவை எடுத்துக் கொண்டு தயாராக சென்றுவிட்டான்…!!!  

யட்சனின் போக யட்சினி – 6 Read More »

error: Content is protected !!