“உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன், இங்க எல்லோரும் அவங்க அவங்க நடத்துகிற விதத்துலயும் அவங்கவங்க பேசுற விதத்தையும் பொருத்து தான் மதிப்பு மரியாதை எல்லாம்.
முக்கியமாக உங்களுக்கும் சேர்த்து தான் அத்தை. வயசுக்கு இங்க மரியாதை கொடுக்கணும்னா அந்த வயசுக்கு தகுந்த மாதிரி பெரிய மனுஷதனமா நடந்துக்கணும்.
பின்னாடி மாட்டுத் தொழுவுல நிக்கிற எருமை மாட்டுக்கு கூட தான் 40 வயசு ஆகுது. அது வயசுக்கு மரியாதை கொடுத்து தள்ளிப்போன்னு சொன்னா அது போகாம நின்னா முதுகுல நாலு அடி போட்டா தான் அது விலகும். சக்திவேலை பார்த்தவன் அந்த நாலடிய போட நானும் எப்பவும் தயார் தான்.
யார் யாருக்கு தணிச்சு போகணும் பணிஞ்சு போகணும்னு எனக்கும் தெரியும் எனக்கு மேல என் பொண்டாட்டிக்கும் தெரியும்.
எங்க வாழ்க்கையில நல்ல நேரம் கெட்ட நேரம்ங்கிறது நாங்க வாழ்கிற வாழ்க்கை பொறுத்து தான் இருக்கு.
சந்தோஷமாவும் மன நிம்மதியா வாழற எல்லா நேரமும் நல்ல நேரம்தான் எங்களுக்கு. இந்த ஜாதி ஜோசியம் இதெல்லாம் உங்களோட வச்சுக்கோங்க.” தீயாய் பார்த்தவன்,
“வா…” என மேக விருஷ்டியை அழைத்து சென்றான் இன்னுழவன் மேலே.
“இன்னு… இப்ப மேகா உன்கூட” என கோதாவரி சற்று தயங்க…
படியில் நின்றவன், “எனக்கு தெரியும் மா. இருந்தாலும் அவங்களுக்கு சொன்னது தான் உங்களுக்கும். ஏன் காலைல தாலி கட்டும் போது நல்ல நேரம் முடிஞ்சு இருந்தா உன் அண்ணன் மகள இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்துருக்க மாட்டிங்களா..?
இருந்தாலும் உங்க மனசுக்காக உங்க ஆசை படி தான் எங்க வாழ்கையோட தொடக்கம் நடக்கும். நான் பாத்துக்குறேன் மா” என சென்று விட்டான் வேக நடையுடன்.
அனைவரையும் சினம் கொண்டு பார்த்து பல்லை நறநறவென அரைத்து அறைக்குள் அடைந்து கொண்டார் சக்திவேல்.
தங்கமணியோ முகத்தை சுழித்துக் கொண்டு நந்தனா கை பிடித்தவர், “ஏய் உனக்கு இன்னும் இங்க என்னடி வேலை. அதான் நீ இந்த வீட்டுக்கு மருமக இல்லனு சொல்லி செஞ்சுட்டாங்க இல்ல. அப்புறம் எதுக்கு நிக்கிற வா…” என நந்தினி இழுத்தார்.
“அண்ணி ஏன் இப்படி பேசுறீங்க, நான் தான் நந்தனா எப்போதுமே இந்த வீட்டுக்கு பொண்ணு தான். அவ எப்போதும் எனக்கும் உங்க அண்ணனுக்கும் மருமக தான்” என்றார் கோதாவரி கனிவாய்.
“ஆமாமா… பொல்லாத மருமக. அதான் என் மகள விட்டுட்டு எங்கயோ இருந்து ஒருத்திய சீமையிலிருந்து கொண்டு இறக்கி இருக்கீங்களே அம்மாவும் மகனும்.
என் மகன்கிட்ட இல்லாதது அப்படி என்னத்த கண்டிங்களோ தெரியல எல்லாரும். நல்லா எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா. இவளுக்கு அந்த சூது வாது தெரியாம போச்சி” என நந்தனாவை அவர் அடிக்க…
“இன்னுழவன் அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கான். இதுல நந்தனா என்ன செய்வா அவன் தான் அன்னைக்கு தெளிவா சொல்லிட்டான் தான…” என்றான் அகரன் தன்னவள் அடி வாங்குவதை பொறுக்க மாட்டாது கோவம் கொண்டாவனாய்.
தங்கமணி அகரனை பார்த்தவர் “ஏய் நீ யாருடா… கீழ் சா…” தங்கமணி உதடு கிழிந்து ரத்தம் வந்தது அம்பிகாமா கை வண்ணத்தில்.
“அவ்வளவு தான் உனக்கு மரியாதை இல்ல பார்த்துக்கோ. அவன் என் பேரன் டி… நீ பேசுனது மேல இருக்குற என் மூத்த பேரனுக்கு தெரிஞ்சுது உசுரோட வீடு போய் சேர மாட்ட…” என்றார் திண்ணமான குரலில் கோவ விழிகளுடன்.
“அடி மா… அடி… யாரு யாருக்கெல்லாமோ என்ன அடிக்கிற நீ… கல்யாணம் ஆன ஒரு நாள் கூட முடியல அவன் என்னடானா பொண்டாட்டிய விட்டு எங்க அண்ணன் பல்ல உடைக்க சொல்றான்.
கோதாவரி பார்த்தவர் நீங்களும் பார்த்துக்கிட்டு அமைதியா நிக்கிறீங்க. இதுதான் நீங்க புருஷன் மேல வச்சிருக்கிற மதிப்பு மரியாதை பாசம் எல்லாம்.
தெரியாம தான் கேக்குறேன் உங்களுக்கு உங்க அண்ணன் பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு இவ்வளவு நாள் மனசுக்குள்ள வச்சுக்கிட்டே தான் என் பொண்ண பத்தி அண்ணன் பேசும் போது அமைதியா இருந்திங்களா… சுயநலவாதி நீங்க” என வார்த்தையை விட்டார் வன்மமாய்.
மீண்டும் அவர் கன்னத்தை பதம் பார்த்த அம்பிகாமாவோ, “ஏய்… பெருசா பேச வந்துட்டா ஆட்டிகிட்டு. நீ அப்படி என்னடி உன் புருஷனுக்கு மதிப்பு மரியாதை பாசம் கீசமெல்லாம் கொடுத்து தொலைச்சிருக்க, என்ற மருமகள பத்தி பேசறவ.
இங்க பாரு அவள பேச எனக்கு உரிமை இருக்கு ஏன்னா நான் அவன் அம்மா மாதிரி. என் மகனுக்கு பேச உரிமை இருக்கு ஏன்னா அவன் பொண்டாட்டி. அத தவிர்த்து இங்க யாருக்கும் முக்கியமா உனக்கும் எந்த உரிமை இல்லை.
அம்மா வீட்டுக்கு மாசத்துக்கு ஒரு நேரம் வந்தோமா.. போட்ட சோத்த திண்ணும்மா போனோமான்னு இருக்கணும். அத விட்டுட்டு அதிகாரம் பண்றது அதிகாரமா பேசுறதுன்னு வேலை வெச்சுக்கிட்ட… நானே உன் முடிய பிடிச்சு இழுத்து வீட்டுக்கு வெளில தள்ளிருவேன்.
வந்து ஒரு வாரம் ஆகுது வீட்டில புருஷன் கஞ்சி குடிச்சானா வைச்சானான்னு நினைப்பு இல்ல இங்கயே அண்ணனுக்கு கூஜா தூக்கி ஆட்டிக்கிட்டு இருக்குறவ நீ பேசுறவ.. நீ சொல்றியா அவள பார்த்து சுயநலவாதின்னு தொலைச்சிருவேன்” என விலாசிவிட்டார் அம்பிகாமா.
தங்கமணியும் அனைவரையும் பார்க்காது வெளியேற நந்தனாவோ அகரனை பார்த்து இமை அசைத்து அனைவரிடம் இருந்து விடை பெற்றாள்.
“ஏன் அத்தை… அவளே ஏதோ மகள இந்த வீட்டுக்கு வாழ வைக்க முடியலையேன்னு ஆதங்கதுல பேசுறா.. நீங்க வேற..” கோதாவரி கவலை கொள்ள…
“ஆமாடி நீ இப்பிடி இருந்தா என் பொண்ணு மாதிரி இருக்குற எல்லாரும் உன் தலைல மிளகா அறைக்க தான் செய்வாங்க..
கல்யாணம் முடிஞ்சு கொடுத்தாச்சு தான அவள. உன் அதிகாரத்த உன் வீட்டுல வச்சிக்கோங்கன்னு நீ ஆரம்பத்துலயே சொல்லி கண்டிச்சு இருந்தா நான் ஏன் இன்னைக்கு பேச போறேன். அவளும் ஏன் கொடுக்கு முளைச்சி ஆட போறா…” என எள்ளும் கொள்ளுமாய் கண்டித்தார் அம்பிகாமா கோதாவரியை.
மகளுக்காக மட்டுமே பேசும் தாய்மார்களுக்கு மத்தியில் மருமகளுக்கா பேசும் அம்பிகாமா எட்டா ஆதிசயம் தான்.
“ஜஸ்ட் மிஸ் நான் கூட என் பேத்தி கையால இந்த பவர் டப்பா (சக்திவேல்) மூஞ்சி வாய் பிளக்கும்னு நினைச்சேன்.
நானே அந்த சோகத்துல இருக்கேன். இவ வேற உடால கட்டைய போட்டுக்கிட்டு.
ஹான்… என் பேரன் கையால தான் பவர் டப்பா முகம் பஞ்சர் ஆகணும்னு இருக்கும் போல…” என விரக்தியாய் விசனசப்பட்டு அமர்ந்து ஜூஸை பருக்கினார் அம்பிகாமா.
இங்கு அறைக்கு அழைத்துக் கொண்டு வந்த இன்னுழவனோ மேக விருஷ்டியை உள்ள விட்டு கதவை படார் என்று அடைத்தான்.
அவளோ இன்னுமும் மேனி நடுங்க அவனின் ருத்ர அவதாரத்தில் இருந்து அதிர்ந்து வெளிவராது அதிர்ச்சியுடனே நின்று கொண்டிருந்தாள் சிலையென.
கதைவை அடைத்தவன் திரும்ப அவளையே வெறிக்க பார்த்து நின்றாள் விழிகளில் நீருடன் மேக விருஷ்டி.
இரண்டடியில் அவளை நெருங்கியவன் தன் மார்பு கூட்டுக்குள் அடக்கியனான் கோழி குஞ்சாய்.
அவளும் அவனை காற்றுக்கும் இடம் கொடுக்காது இறுக்க அணைத்தாள்.
“இப்ப என்ன நடந்து போச்சுன்னு எதுக்கு இப்பிடி நடுங்குற டி நீ…” அவள் முதுகு வருடி ஆசுவாசபடுத்த…
சற்றென்ற அவன் விழி ஏறெடுத்தவள் “அதைத்தான் நானும் கேட்கிறேன் எதுக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு. எனக்கு பயமா இருக்கு உழவா உங்க கோபத்தை பார்த்து.” என அவன் நெஞ்சு முட்டினாள் சிசுவாய்.
அவள் பேச்சில் மீண்டும் கோபம் கிளர்ந்தாலும் அதற்கு உள்ளுக்குள் மடை கட்டியவன் அவளை சமநிலைப் படுத்த முனைந்தான்.
“கணக்குக்கு நீதான் கோவப்பட்டு இருக்கணும் ஏஞ்சல், நான் கோபப்பட்டு இருக்கேன்.”
“எவ்வளவு திமிரு டா உனக்கு…” என அவனை விடுத்து தலையணை தூக்கி மொத்தினாள்.
அவள் அடிகளை சுகமாய் வாங்கியவன், “ஏய் என்னது டாவா… ஏய் என்னடி மரியாதை எல்லாம் காத்துல பறக்குது…”
“நீதான டா சொன்ன வயசுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது வார்த்தைக்கு நடந்துக்கிற விதத்துக்கு தான்னு” என்றவள் மேலும் அடிக்க…
“ஏஞ்சல் கை வச்சி அடி டி… அப்போ தான் இதமா இருக்கும்” என
“ஓ அப்படி வரியா, நீ எனக்கு மரியாதையே கொடுக்க வேண்டாம் செல்லம். அதான் காலையிலேயே மானம் மரியாதை எல்லாம் பறந்து போயிருச்சுனேனே…” என்றான் தலையணை பறித்து தன்னோடு அணைத்து.
“வாய்… வாயா இது… என்ன வாய் இது… நான் என்ன பேசினா இது என்ன பேசுது”
அவளின் இதழை பெருவிரல் கொண்டு அழுத்த வருடியவன் “அப்ப இது வாயா தெரியலையா டி… வேணா உன்னோட இந்த ரெண்டு தேன் வடியிற உதட்ட மோத விட்டு பாரு ஏஞ்சல்” என்றவன்
அவளின் பதட்டத்தை மறக்கடித்து மனதை இதமாக்கினான்.
“உழவா நீங்க இப்ப எதுக்கு அடி போடுறீங்கன்னு தெரியுது. நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் கிளம்புங்க” அவனை தன்னில் இருந்து விலக்க…
உடும்பாய் இதழ் கடித்தவன், “ஆனா எனக்கு வேணும் போல இருக்கே ஏஞ்சல்…” என சிறு பிள்ளையை அடம் பிடித்தான் விழிகள் சிரிக்க.
“என்ன வேணும் உங்களுக்கு இப்போ…”
“எல்லாமே வேணும் கிடைக்குமா…” விரலால் அடி முதல் நுனிவரை ஓவியம் வரைந்தான் கிறக்கமாக.
அதில் நாணித்து சிலிர்த்தவள் கன்னங்கள் செம்மையாக “ஒன்னும் கிடைக்காது முதல்ல போங்க…”
“ஒன்னு கிடைக்கலட்டாலும் பரவால்ல டி… ஒரு அரை கிடச்சா கூட போதும்” என அவளின் கோவை பழ இதழை வழிகளால் சிறையெடுத்தான்.
அதில் அவன் முகம் பார்க்க முடியாது வெக்கத்தை மறைத்தவள், “அரையும் கிடையாது முக்காலும் கிடையாது. ஐயா சாமி கிளம்புங்க ஆல்ரெடி உங்க அப்பாக்கு என் ஃபேமிலிய பிடிக்காது. இதுல இன்னைக்கு நீங்க பண்ண அக்கப்போருல அவர் என்னை கொலை பண்ணாலும் பண்றதுக்கு இந்நேரம் ப்பளான் போட்டு இருப்பாரு தீவிரமா…” என்றவள் கேலியாய் நகைத்தாள்.
“அவர் உன்ன கொலை பண்ற வரைக்கும் நான் பார்த்துகிட்டு சும்மா இருப்பேன் நினைச்சியா ரெயினி. அவர் அப்படி நினைச்சாலே விளைவு பெருசா இருக்கும் அவருக்கு.” என்றவன் விழிகள் அனல் பறந்தது செழுமையாய்.
மீண்டும் அவளவன் கோவ வதனத்தில் அதிர்ந்தவள் “இத இதத்தான் சொன்னேன். இந்த வாய் தான் இந்த வாய் தான் இப்படி எல்லாம் பேசுது. கூடவே இந்த முகம் ஆவுன்னா சிவக்குது. உங்கள என்ன பண்ணனும்” அவள் முறைக்க…
“என்ன வேணாலும் பண்ணலாம் ஏஞ்சல். உன் இஷ்டத்துக்கு பண்ணு நான் என்ன கேட்கவா போறேன். இந்தா இப்பவே பண்ணு. கோவத்துல சிவக்குற என் முகத்த உன் மோகத்துல சிவக்க வையி…” என அவனிரு இதழ்களையும் அவள் இதழ்களின் அருகில் நெருங்கினான் மீண்டும் குறும்புடன் கள்ள பார்வை கொண்டுவனாய்.
“ஐயோ… என்னால முடியல தலை ரொம்ப வலிக்குது” என தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் மேக விருஷ்டி உடையவன் வார்த்தை ஜாலத்தில் திணறியவளாய்.
இன்னுழவனோ ஒரு சிறு மூச்சுடன் அவளிரு தோள்களையும் பிடித்து எழும்ப செய்து கண்ணாடி முன் அமர்த்தியவனோ அருகில் இருந்த முடி உலர்த்தியை ஆன் செய்தான்.
இருவரின் விழிகளும் கண்ணாடியூடு இருக்க ஈரம் தோய்ந்த அவளின் கேச திரள்களில் செயற்கைக் காற்றை செழுமையாய் படரவிட்டு அதை உலர வைத்தவனோ…
“ஏஞ்சல் எல்லா நேரமும் நான் உன் கூட இருக்க முடியாது. அவர் அப்பா மாதிரி நடந்துகிட்டா நான் ஏன் இப்படி எல்லாம் பேச போறேன். தப்புன்னு தெரிஞ்சா அது தட்டி கேட்கணும் ஏஞ்சல் இப்படி அழுதுகிட்டு இருக்க கூடாது.
நல்லா புரிஞ்சுக்கோ இந்த குடும்பத்துக்கு நீதான் இனி எல்லாம். இந்த குடும்பத்துக்கு மட்டும் இல்ல இந்த ஊருக்கும்.
இந்த ஊர்ல நான் தலைவரா இருக்கும் போது என்னோட மனைவி உனக்கும் சில பொறுப்புகள், பதவிகள், அந்தஸ்துகள் இருக்கும். அதுல இந்த மாதிரி நிறைய களைகள் வரும் அதாவது என் அப்பா மாதிரி.
ஒரு நெற்கதிர் வளர்ந்து மேல வர்றதுக்கு இந்த மாதிரி களைகள் எல்லாம் குறுக்க நிக்கும் போது அதை பிடுங்கி எறிய தான் செய்யணும். இதுல வயசு மரியாதைன்னு பாரபட்சம் பார்த்தா ஒன்னும் முடியாது.
இனிமேல் இந்த மாதிரி அழுதுகிட்டு நிக்க கூடாது. நாளைக்கு என்ன யாராவது ஏன் என் அப்பவே ஏதாவது பேசினா கூட நீ இந்த மாதிரி நின்னா அது எனக்கு எப்படி மரியாதையா இருக்கும் சொல்லு.
உன் அப்பாவ பேசின உடனே உன் தம்பி யாரு என்னனு பார்க்காம கொதிச்சுகிட்டு வந்தானே நீயே வரல…?”
“ஏன்னா நான் இந்த வீட்டுக்கு மருமக உழவா. வந்த அன்னைக்கு என்னால இந்த மாதிரி பிரச்சனை வந்ததுன்னா…” அவள் இழுக்க
“இந்த வீட்டு மருமகனா என்ன விண்வெளியில இருந்த குதிச்சு வந்தியா நீ. நீயும் பத்து மாசம் வயித்துல இருந்து அப்பா, தம்பி அம்மான்னு வளர்ந்து தானே வந்த.
இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. உனக்கு இந்த வீட்ல யாரு என்ன மரியாதை கொடுக்குறாங்களோ அதே மாதிரி நீ அவங்களுக்கு கொடுத்தா போதும்.
வாய முடிகிட்டு சகிச்சிகிட்டு எல்லாம் போக வேண்டாம்.
அது நானா இருந்தா கூட.
சிலர் வயசு காட்டி உன்ன அவமானப்படுத்தினா கூட திருப்பி பேசு. இந்த வீட்ல உனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கும் இல்ல. தப்புன்னு தெரிஞ்சா தட்டி கேளு நான் இருக்கேன் உனக்கு.
ஏங்கிட்ட கூட இது தப்புடான்னு சொல்லு நான் கேட்குறேன். இல்ல இந்த உதட்ட வச்சி நாலு கடி கடிச்சி சொல்லு ஏன்னு கேட்காம கேட்குறேன்,தெரிஞ்சு புரிஞ்சி நடந்துக்கோ சரியா.” என்றவன் உலர்த்தியை அணைத்து அவளை தூக்கி படுக்க வைத்தான்.
“கொஞ்ச நேரம் தூங்கு ஏஞ்சல் தலை வலி சரியாயிடும்” அவள் பிறை நெற்றியில் இதழ் பதித்தான்.
அவன் கையைப் பிடித்தவள், “நீங்க என்னென்னமோ சொல்றீங்க என்னால முடியுமான்னு தெரியல. ஆனா, உங்க பெயர் கெட்டு போற மாதிரி நான் எங்கேயும் நடந்துக்க மாட்டேன்.
அப்புறம் உங்கள யாராவது தப்பா பேசினாலும் இன்னைக்கு அப்பாவை பேசின மாதிரி நான் அமைதியா இருந்த மாதிரி இருக்க இனி மாட்டேன் ப்ராமிஸ் சரியா… அதுனால என்கிட்ட பேசாம இருக்க கூடாது…” என்றாள் உதட்டை பிதுக்கி மிடறு குழியை பிடித்துக் குழந்தையாய்.
பிதுங்கிய இதழில் இதழ் ஒற்றி எடுத்தவன், “சரி எதை பத்தியும் யோசிக்காம கொஞ்ச நேரம் தூங்கு. எனக்கு வெளியில வேலை இருக்கு நான் போயிட்டு வரேன் ஓகேவா” மென்னகையுடன்.
“நான் தூங்குற வரைக்கும் என் கூட இருக்குறீங்களா ப்ளீஸ்” கெஞ்சல் மொழியில் யாசித்தாள்.
அவளை அள்ளி வாரிசுருட்டி தன் நெஞ்சுக்குள் அடக்கிக் கொண்டவன் தட்டிக் கொடுக்க பத்து நிமிடத்தில் அவளும் உறங்கிப் போனாள் அவன் மார்பு சூட்டில்.
உறங்கியவள் துயில் கலையாது தலையணையில் பதித்து நெற்றியில் மென் முத்தம் கொடுத்து சத்தம் வராது கதவை அடைத்து வெளியே வந்தான் இன்னுழவன்.
வெளியில் வந்த இன்னுழவன் பைக்கில் ஏற போக அங்கு தோட்டத்தில் நின்று இயற்கை காற்றை உள்வாங்கிக் கொண்டிருந்தான் நிவர்த்தனன்.
அவனை கண்டவுடன் பைக்கை ஆன் செய்யாது அவனை நோக்கி சென்றான் இன்னுழவன்.
“என்னடா எங்க ஊரு காத்து புடிச்சிருக்கா” என குரல் கொடுத்து அவன் தோளோடு தோள் போட்டு நின்றான் இன்னுழவன்.
இதழ் பிரியாது சிரித்தவன், “நீங்க மறந்துட்டீங்க நினைக்கிறேன் மாமா இதுவும் என் ஊர் தான்..” என்றான் நக்கலாய்.
“நான் எல்லாம் மறக்கல டா நீங்க தான் மறந்துட்டு இத்தனை வருஷமா எங்கயோ இருந்திங்க. அவ்வளவு பேசுறவன் இந்த ஊரை பார்த்து வந்திருக்க வேண்டியது தானடா. இந்த ஊருக்கு வரட்டுமான்னு மை மாமனார் அதான் உங்க டாடி என்கிட்டேயே பர்மிஷன் கேட்கிறாரு.. எல்லாம் காலக்கொடுமை” என சலித்துக் கொண்டான் இன்னுழவன்.
நிவர்த்தனனோ மௌனமாய் நகைத்துக் கொண்டவன், “உண்மையாவே இதெல்லாம் கனவு மாதிரி இருக்குது மாமா. இந்த ஊருக்கு நாங்க வருவோம் இப்படி எல்லாம் இருப்போம், முக்கியமா என் அக்காக்கும் உங்களுக்கும் கல்யாணம் முடியும் இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல” என்றான் ஆச்சர்யமாக.
இன்னுழவனும் “ஹிம்… உன் அக்கா பத்தி சொல்லு டா. எதுக்காக உன் அக்கா காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணி ஒன் வீக்லயே அத டிராப் பண்ணிட்டு போனா?
எனக்கு தெரிஞ்சாகனும். அன்னைக்கு காலேஜ்ல நடந்த இன்சிடென்ட்டாலவா. அது ராகிங்கான சீனியர் ஜூனியர் பிரச்சனை.
அதுக்கான ப்ராப்பர் பனிஷ்மென்ட் கூட நான் அப்பவே கொடுத்துட்டேனே பிரின்ஸ்பல் மூலமா. அப்புறம் எதுக்கு அங்க இருந்து போனா…?” கேட்டான் விழிகளில் தீவிரமாக.
நிவர்த்தனன் நிமிர்ந்து கால் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டபடி நின்றவன், “அவ அங்க இருந்து பாதில போனதுக்கு முக்கிய காரணமும் முழுமுதற்க் காரணமும் நீங்க தான் மாமா” என அசராது இடியை இறக்கினான் இன்னுழவன் மேல்.
செங்கோதை மணம் வீசும்…
Story பத்தி ஒரு one or one like and heart Friend 🤗😍…
இன்னுழவன் மேக விருஷ்டி இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளால் நிறைத்து அவர்களுக்கென்று தனி உலகம் தேடிக் கொண்டு போக…
“ம்க்கு…” குரலை திரும்பி அவர்களை நிகழ்வு உலகிற்கு கொண்டு வந்திருந்தார் கோதாவரி.
அதில் தெளிந்தவர்கள் அனைவரையும் பார்த்தனர் அசடுவழிய.
“இனி அண்ணிய ரூமுக்கு கூட்டிட்டு போ… நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா” என்றார் கோதாவரி மேக விருஷ்டியை பார்த்து.
அவளோ இன்னுழவன் விழி பார்க்க அவனும் செல்லென்று இமை அசைக்க.. எழுந்துக் கொண்டவளை இனிதுழனி அழைத்துச் சென்றாள் மேலே அறைக்கு.
“என் மருமக எவ்வளவு ஆழகா கரடி வேல பாத்துட்ட பாத்தியாடா…” நிவர்த்தனிடம் முணுமுணுத்து கொண்டார் அம்பிகாமா இதழ் விரியா புன்னகையுடன்.
அதைக் கேட்டுக் கொண்ட கோதாவரியோ, “அத்த… அதடிட்யவர் எல்லாத்துக்கும் நேரம் காலம் இருக்கு இல்லத்த. நல்ல நேரத்தில அவங்க வாழ்க்கை ஆரம்பிச்சா தான நமக்கு நிம்மதி. நான் ஜோசியர வர சொல்லி இருக்கேன்” என்றார்.
“சரி டி சரி… நான் ஏதும் சொல்லையே… சரி நான் கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்றவர் எழுந்து கொள்ள, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்து சோமசுந்தரம் மைதிலியும் எழுந்து கொண்டனர்.
“கிளம்புறீங்களா? எங்க கிளம்புறீங்க.. இருங்க சாப்பிடுங்க. நைட்டு புள்ளைங்களுக்கு பார்க்க வேண்டிய சடங்கு எல்லாம் இருக்கு. அதெல்லாம் முடிக்காம நீங்க எங்கடா கிளம்புறீங்க” கேட்டார் கோதாவரி கண்டிப்புடன்.
வருடம் கழித்து சகோதரியின் கண்டிப்பு பேச்சில் மகிழ்ந்தவர், “என் மக இந்த வீட்டுக்கு மருமகளா வந்த அப்பவே மனசு நிறைஞ்சு போச்சுக்கா, சாப்பாடு எல்லாம் வேண்டாம். நம்ம வீடு தானே எப்ப வேணாலும் சாப்பிட்டுக்கலாம்.
பிள்ளைகளுக்கு நல்லது பண்றதுக்கு தான் நீயும் ஆத்தாவும் இருக்கீங்களே. நீங்க பண்ணாததையா நாங்க இருந்து பண்ணிடப் போறாம்.
இப்போது எழுந்த இன்னுழவனோ, “அவன் இங்க இருக்கட்டும் மாமா. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றான் மென்மையாக.
நிவர்த்தனனுடன் பேச வேண்டியவையான கோவிலில் வைத்து அவன் பேசியதையும் அன்று போனில் அவன் பேசியதையும் குறித்து கேட்க வேண்டிய கேள்விகள் அனைத்தையும் மனதுக்குள் வகுத்தவனாய்..
“ஓ… சரி இன்னு… நாங்க கிளம்புறோம் நாளைக்கு வரோம்.” என சோமசுந்தரம் கூற…
மேலே மேக விருஷ்டி சென்ற அறையை தவிப்புடன் கண்டு இன்னுழவனை பார்த்தார் மைதிலி.
அவரின் தவிப்பு மகளின் கல்யாண பிரிவு என அவன் நினைத்தாலும் அதையும் தாண்டி வேறு ஏதோ அவன் ஆழ் மனதை குடைந்தது அவன் மட்டுமே அறிந்த நிதர்சனம்.
அத்தவிர்ப்புக்கான பதில் மைதிலி,சோமசுந்தரத்திடம் மட்டுமே என்றாலும் அதை கேட்க்கும் சூழ்நிலை இது அல்ல என எண்ணியவன்,
மைதிலி கரம் பற்றியவனாய், “உங்க பொண்ணு மேல ஒரு துரும்பு கூட படாம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இன்னைல இருந்து அவ இந்த இன்னுழவன் உயிருக்கும் மேல. பயப்படாம போய்ட்டு வாங்க அத்த..” என்றவன் உறுதி மொழி கொடுக்க, அதனை மௌனமாய் விழிகளில் நீருடன் ஆமோத்தித்தார் மைதிலி.
ஏனெனில் அன்று அவர் கண்ட அவன் தந்தையின் குணாதிசயத்திலிருந்து இவன் முற்றிலும் வேறுப்பட்டவன் என வந்ததில் இருந்து இன்னுழவனை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறார்.
“அகரா கொண்டு போய் விட்டுட்டு வா… ” இன்னுழவன் சொல்ல அகரனும் அவர்களை அழைத்துச் சென்றான்.
கோதாவரி நகர்ந்து கொள்ள, “டேய் நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. மார்னிங் தான வந்த இந்தியா, போ… அந்த ரூம் எடுத்துக்கோ..” என்றான் நிவர்த்தனனை பார்த்து இன்னுழவன்.
நிவர்த்தனனும் எழுந்தவன் “மாமா என்கிட்ட ஏதும் நீங்க பேசணுமா?” என அவனின் எண்ணத்தின் ஓட்டத்தை மிகச் சரியாக கணித்து கேட்டான்.
அவன் கணிப்பை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டு அமோதிப்பாய் தலை அசைத்த இன்னுழவனும், “பேசணும் தான் அதுக்கு முன்னாடி நீ போய் ரெஸ்ட் எடு டா.. ரொம்ப டயர்டா இருக்க. இனியும் உன் அக்கா பற்றின கவலை இல்லாம போய் தூங்கு டா பொறுமையா பேசிக்கலாம்” என மென்னகையுடன் அவன் தோள் தட்டி நகர்ந்தான்.
செல்லும் அவனை கண்டு பெருமூச்சொன்று விட்டு அவன் காட்டிய அறைக்குள் அடைந்தான் நிவர்த்தனனும்.
அறைக்குள் வந்த இன்னுழவனும் அறை வெறுமையாக இருக்க இனிதுழனியுடன் உடையவள் இருப்பாள் என சிந்தித்து கொண்டு தன் சட்டையை கழட்டி ஹங்கிரில் மாட்டியவன் பூத்துவாலையுடன் குளியல் அறைக்குள் புகுந்திருந்தான்.
உள்ளே சென்றவன் கையில் இருந்த பூத்துவாலை நழுவி விழ.. சர்வமும் சிலிர்த்து விழிகளில் வசீகரம் தாவிக்கொள்ள சமைந்து போய் நின்று கொண்டிருந்தான் அங்கு அவனவள் நிற்க்கும் காட்சியினை கண்டு.
ஆம் அங்கு நின்று கொண்டிருந்தது மேக விருஷ்டி, அவனின் மழை தேவதை.
இனிதுழனி அறையில் தண்ணீர் சரி வர வராததால் இங்கு வந்திருந்தாள்.
கதவை திறந்து உள்ளே வந்து நின்ற உடையவன் அசப்பு சத்தம் கூட கேட்காது தனது சேலையின் முத்தானையை ஏற்கனவே அவிழ்த்திருந்தவள் தனது இடைவளை சேலையை முற்றிலும் அவிழ்க்க முனைந்துக் கொண்டிருந்தாள் மும்பரமாக.
உடையவளை அந்நிலை கண்டவனுக்கோ உணச்சிகள் பருவ மழையாய் விழித்துக் கொள்ள, “ஏஞ்சல்” என அவளை நெருங்கியவன் மானை பிடித்த சிங்கமாய் கொத்தாக அணைத்து இருந்தான்.
சரியாக அவளின் புடவையானது முழுவதும் அவிழ்ந்து நிலம் தழுவி இருக்க, அவளை அவன் தழுவி இருந்தான் அவனின் வெற்று மார்புக்குள்.
கருவிழி விரிய புருவங்கள் மேலெழும்பு திடீரென்ற தன்னவன் அணைப்பில் அதிர்ந்து திடுக்கிட்டவள், “நீங்க இங்க என்ன பண்றீங்க…” என்றவள் அவன் அணைப்புக்குள் நின்று ஏறெடுத்து அவன் முகம் பார்க்க..
இதழ் கடித்து நகைத்தவனோ, “அள்ளுது டி ரெயினி…” என அவள் சுதாரிக்கும் முன் எட்டி ஷவரை ஆன் செய்து இருந்தான்.
ஆர்ப்பரிக்கும் நீர் துளிகள் அவள் முகம் தொட்டு மேனியில் சுற்றுலா செல்ல, “உழவா… என்னப் பண்றீங்க…” என தலையை குனிந்தவள் மேலும் அவன் மார்புக்குள் ஒடுங்கினாள். இம்முறை அவனை இறுக்கி அணைத்தவளாய் அவள்.
இப்பொழுது இருவர் மேனியிலும் நீர் துளிகள் சரிக்கு சமாய் வழிந்தோட அதற்கும் இடம் கொடுக்காது பசைப்போல் ஒட்டியிருக்க அவள் சங்கு கழுத்தில் அவன் முகம் புதைத்தான்.
வழிந்தோடும் குளிர்ந்த நீரிலும் சூடான அவனது மூச்சுக் காற்று பட்டவுடன் உள்ளுக்குள் பூகம்பம் வெடிக்க, “உழவா… என்ன பண்றீங்க விடுங்க…” என திமிரியவள் குரல் அவன் செவி மடல் எட்டும் முன் அவள் கழுத்தில் வழித்தோடும் நீருடன் நனைத்து கிடந்த தாலியில் அவன் அழுத்த அதரம் பதித்திருந்தான்.
அவன் மீசை மூடி செய்த குறுகுறுப்பில் ஐம்புலங்களும் ஆட்டம் காண கன்னக் கதுப்புகள் செஞ்சாயம் படர “உ… ழ… வா…” என்றவள் குரல் தாளம் தப்பி கரங்கள் அவன் சிகைக்குள் குடி புகுந்தது.
ஒரு நொடி சுதாரித்து தன்னில் இருந்து அவனை பிரித்தவள், “உழவா… என்ன பண்றீங்க… அத்த எதோ நல்ல…” என்றவள் இதழில் பதித்து விடுத்தவன்,
“அதுக்கு தான் டி ஒரு வாமப் பார்க்குறேன். தாலியை காண்பித்து இது எப்போ காட்டினேனோ அப்பவே என் வாழ்க்கைல நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிருச்சு டி…” என்றவன் அவளை மேலும் பேசவிடாது, இருக்கும் மோன நிலை கலைக்க விரும்பாது அவள் இதழ்களை தன் வசமாக்கி இருந்தான்.
நேரம் நீண்டு கொண்டே போக அவள் இதழ்கள் இரண்டு அவன் வசம் வாசம் செய்ய.. வாகுவாய் அவளை தூக்கி தன் பாதம் மேல் விட்டவன் கொஞ்சம் கொஞ்சமாக இதழ் கொண்டு அவளை கரைக்க, அவனுக்குள் சில்லி சில்லியாய் அவள் நாணித்துக் கொண்டிருந்தாள்.
வழிந்தோடும் நீர் துளியின் சப்தத்தோடு அவளின் “உழவா…” என்ற அவளவன் நாம முனங்கல் சப்தமும் ஒன்றாய் அரங்கேற.. முழுதும் உருக்கி மிஞ்சினான் மன்மத லீலைக்கு அடித்தளமிட்டு.
முழுமையான கூடல் இல்லா கூடல் உலகத்தை அவளுக்கு காட்டி அவளை அடக்கி அவளுள் அடங்கினான்.
அப்படியே இடம் பொருள் மறந்து அவள் கெஞ்ச.. அவன் மிஞ்ச.. என சென்று கொண்டிருக்க, வாசலில் இருந்து குரல் கொடுத்தார் அம்பிகாமா.
அச்சத்ததில் சட்டென்று மோகம் கலைந்தவள் “வெளியிலிருந்து யாரோ கூப்பிடற மாதிரி இருங்க” என உடும்பாய் இருந்தவனை தன்னிலிருந்து பிரித்தெடுத்தாள் மூச்சி வாங்க.
அதில் சற்று கடுப்பானவன், “என்னடி…” என்றவன் மூச்சுக்கு ஏங்கியவள் முதுகை தன்னுடன் அணைத்து தடவிக் கொடுத்தான்.
“யாரோ…” என்றவள் கூறும் முன் அவள் இதழ் மூடி தன் மூச்சை வழங்கியவன் சரியாக அனுமானித்து விட்டான் கேட்ட குரலை வைத்து யார் என்று.
“அப்பத்தா…” என்க,
“அப்பத்தா வா…” என அதிர்ந்தவள்
“போச்சி… போச்சி… என்ன பண்றது. எல்லாம் உங்களால தான். இப்ப எப்படி வெளியில போறது. அவங்க என்ன என்ன நினைப்பாங்க என்ன பத்தி.
வந்த அன்னைக்கே அவங்க பேச்ச மீறிட்டேன் எல்லாம் உங்களால தான்…” அவனை மொத்தியவள் முகத்தை மூடி புலம்ப அவள் தோளை அழுத்த பற்றி விழி பார்த்தவனோ..
“ஜில் ஏஞ்சல் எதுக்கு இவ்ளோ டென்ஷன்..? ஒன்னும் இல்ல ப்ரீயா விடு. அப்பத்தா பத்தி உனக்கு முழுசா தெரியல. சரி நான் போய் முதல்ல சமாளிக்கிறேன்.
நானே கதவ தட்டுனத்துக்கு அப்புறம் நீ கதவை திற. அதுவரைக்கும் உள்ள லாக் பண்ணிக்கோ” என அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் நகர முனைய..
அவனை நகர விடாது மீண்டும் இழுத்து தன்னோட அணைத்தாள் மேக விருஷ்டி.
அதை கண்டு கொடுப்புகள் சிரித்தவன், “என்னடி போக வேண்டாமா…? இன்னும் குளிக்கனுமா உனக்கு… சரி வா குளிக்கலாம்” என மேலும் அவன் அவளை அணைத்தவனாய் ஷவரை ஆன் பண்ணப் போக அவன் கையில் அடி போட்டவள்,
“ஓத படுவீங்க உழவா நீங்க.. நான் இப்படியேவா உள்ள நிக்கிறது. என்னால முடியாது என்கிட்ட நில்லுங்க” என்றவள் சிணுங்கும் போதே அவளை முழுமையாக பார்த்தான்.
அவன் கைகளோ அவளே அறியாது அவள் ஆடைகள் அனைத்திற்க்கும் விடுதலை அளித்திருந்தது.
மேலும் அவன் கரங்கள் செய்த ஜாலத்தால் அவள் வெண்ணிற மேனியும் செந்நிறம்பூண்டு இருந்தது ஆங்காங்கே.
அதை கண்டு வெக்கத்தில் நகைத்துக் கொண்டவனோ இவ்வளவு நேரம் கடந்தும் தன்னையே ஆடையாக கருதுவதோடு மட்டுமல்லாது வெற்று அறையில் கூட தன்னை தவிர்த்து ஆடை இல்லாமல் இருக்க சிரமப்படும் தன்னவள் மனம் கண்டு அகம் கொள்ளா புன்னகை உதிர்த்துக் கொண்டான்.
“ப்ச்… என்ன சிரிக்கிறீங்க… எனக்கு ட்ரெஸ்” உதட்டை பிதுக்க,
“அதான் நான் இருக்கேனே டி… ” அவன் அவள் சிவந்த மூக்கில் முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.
“அதனால தான் உங்கள இப்பிடி பிடிச்சிட்டு இருக்கேன்” என்றவள் அவர்கள் நிற்கும் நிலையை சுட்டி காட்ட
“சரி… அப்புறம் என்ன டி…” என்றவன் அவள் கழுத்தில் விரலால் வருடும் போதே வெளியில் இருந்து அம்பிகாமா குரல் ஓங்கி ஒலித்தது.
அவன் வருடலில் நெளிந்தவள், “உழவா… பாட்டி… ஏதாவது பண்ணுங்க…”
“நீ என்ன விட்டா தானடி நான் போக முடியும் ஏதாவது பண்ண முடியும்” என்றவன் மேலும் அவள் செவிமடல் சிலிர்க்க வைத்து சிவக்க வைக்க
“ஹிம்… ஹீம்… ட்ரெஸ் இல்லாம உங்கள விட மாட்டேன்…” என்றவள் சிணுங்கினாள்.
“விடாத உன்ன யாருடி விட சொன்னா… இறுக்கமா பிடிச்சி வைச்சிக்கோ…” என்றவன் அவள் இடை அழுத்தி லயம் பாட.. வெளியில் விடாது அழைத்து கொண்டிருந்தார் அம்பிகாமா.
“ப்ச்… உழவா… நான் என்ன சொன்னா நீங்க என்ன செயிறீங்க…” என அர்த்து மீறும் அவன் கையை அவள் பிடிக்க போக..
அதை லாபகமாக நழுவிக் கொண்டவன், “அப்போ நீ சரியா சொல்லு அது படி நான் செய்றேன் ஏஞ்சல்…” என அவன் மோகம் சீண்டி விளையாண்டான்.
உடையவன் சூச்சமம் கண்டு கொள்ளாதவள், “ஐயோ உழவா உங்களால…”
“ஹீம்… என்னால…”
பெருமூச்சு இழுத்து விட்டவள், “என்னால முடியல”
“இதுக்கே வா…!” அவன் கள்ள புன்னகை சிந்த
“ஐயோ ஏதாவது செயிங்க… பாட்டி உள்ள வந்துற போறாங்க…”
“அவங்க ஆல்ரெடி ரூம்க்கு உள்ள வந்தாச்சி டி… என்றவன் சரி சொல்லு என்ன செய்யணும் என் ஏஞ்சலுக்கு…” என்றான் அவள் கார் கூந்தல் விலக்கி.
அவன் கூறியது போல் அம்பிகாமாவும் அவன் அறைக்குள் வந்திருந்தார்.
“என்ன ரூம்குள்ள வந்துட்டாங்களா! மேலும் அதிர்ந்தவள், ஹ்ம்… ம்கூம்… உங்கள யாரு ரூம் கதவ தொறந்து வச்சிட்டு உள்ள வர சொன்னா…?” அவன் நெஞ்சில் அடிக்க,
“உன்ன யாருடி ரூம் கதவையும் பாத்ரூம் கதவையும் திறந்து வச்சிட்டு குளிக்க சொன்னா…?” மறு கேள்வி அவனிடம்.
“எனக்கு அந்த லாக் சரியா போட வர மாட்டேன்றிச்சு. அப்புறம் நீங்க வருவீங்க நான் என்ன கனவா கண்டேன்” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே..
அறை முழுவதும் பார்வையிட்ட அம்பிகாமாவோ தண்ணீர் சத்தம் கேட்காது இருந்ததால் குளியலறையை நெருங்கினார் சத்தம் கொடுத்துக் கொண்டே.
அவர் காலடி தண்டை சத்தத்தை அவதானித்த இன்னுழவன் சிந்தைக்கு அப்பொழுதே எட்டியது அவன் செயல்.
ஏனென்றால் வரும் போது குளியலறை கதவையும் அவன் லாக் செய்யவில்லை என்பதே.
மானசீகமாக தன்னை திட்டிக் கொண்டவன் நிற்க, அம்பிகாம்மா குளியலறையை நோக்கி வந்தார்.
அதற்குள் தன்னவளை விட்டு விலகாது அவள் இடையோடு பிடித்து தன்னோடு அவளை அள்ளிக் கொண்டவன் குளியல் அறையில் இருக்கும் வாட்ரோப் அருகில் தரையிறக்கி அதனுள் இருந்து அவனது டி-ஷர்ட் ஒன்றை எடுத்து சடுத்தியில் அவளுக்கு தலைவழி மாட்டி விட்டவன்,
தனக்கும் ஒரு பூத்துவாலையை எடுத்து இடையில் கட்டிக்கொண்டு அவள் இதழின் இதழ் பதித்து “இங்கேயே இரு ஏஞ்சல். நான் சொன்னதுக்கு அப்புறம் நீ வெளிய வந்தா போதும், கதவ உள்ள லாக் பண்ணிக்கோ” என்றவனாய்..
அம்பிகாமா குளியலறை கதவை தட்ட போகும் வேளையில் சரியாக கதவை திறந்து சட்டென்று அடைத்து வெளியேறியிருந்தான் இன்னுழவன்.
“என்ன அப்பத்தா…”
“எங்கடா போன எவ்வளவு நேரமா உன்னைய கூப்பிடுறது?”
“குளிச்சுகிட்டு இருந்தேன் அப்பத்தா கேட்கல..”
என பிடரி தலையின் ஈரத்தை தட்டியவாறு கண்ணாடியின் முன் நின்றான் இன்னுழவன் எப்போதும் போல் முக பாவனையில்.
அவனை ஏற இறக்கமாய் பார்த்த அம்பிகாமாவோ “குளிச்சிட்டு இருந்தியா…? இல்ல குளிச்சிட்டு இருந்தீங்களா பேராண்டி…?” எனக் குதிர்க்கமாய் கேள்வி எழுப்பினார் நக்கல் தோணியில்.
அவர் கேள்வியில் அதிர்ந்தாலும் அதை முகமதில் காண்பிக்காது சட்டென்று அவரைப் பார்த்து திரும்பியவன்,
“அது என்ன குளிச்சிட்டு இருந்தீங்களான்னு பொடி வைச்சி பேசுற அப்பத்தா… நான் மட்டும் தான் குளிச்சிட்டு இருந்தேன், சரி என்ன விஷயமா வந்து அதை சொல்லு முதல்ல” என்றான் அப்பேச்சை கத்தரித்து .
அவரும், “கீழ ஊர்க்காரங்க எல்லாம் வந்து இருக்காங்க டா. ஏதோ பிராது கொடுக்கணுமாம். ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்காங்க. அதுக்கு தான் கூப்பிட வந்தேன். சரி நீ ரெடியாகி கீழ வா நான் கீழ போறேன்” என்றவர்
“பேராண்டி…” என கதவைத் திறந்து வெளியே போகாது அழைத்தார் மீண்டும்.
“என்ன அப்பத்தான் சொல்லு…” கடுப்புடன் அவன் வினவ
“வெளியில வர்றதுக்கு முன்னாடி இன்னொரு முறை நல்லா குளிச்சிட்டு வா டா…” என்றார் கிளுகிளுப்புடன்.
அவனும் எதற்கு என்னும் விதமாய் புருவம் இடுக்க, “என் பேத்தி வாட்டர் ப்ரூப்பு லிப்பி ஸ்டிக்கு யூஸ் பண்ணுவான்னு நினைக்கிறேன். கன்னம், கழுத்து, காதுன்னு, உடம்பு முழுக்க அது தான் நிறைஞ்சி கிடக்கு.
தெரியாத இடத்த சட்டைய போட்டு மறைச்சுகிட்டாலும் கண்ணுக்கு தெரியிற இடத்தை எத கொண்டு மறைப்ப எல்லார் முன்னாடியும்.
உனக்கு உங்க அம்மா அங்க நல்ல நேரம் பார்க்கா. அவ நல்ல நேரம் சொல்லும் போது நீ அவ கையில பிள்ளைய பெத்து கொடுத்திடுவேன்னு நினைக்கிறேன்.
சரி டா பேராண்டி கீழ வந்து எல்லாரையும் பார்த்துட்டு அதுக்கப்புறம் உன் விளையாட்ட திரும்பவும் ஆரம்பிச்சுக்க. நமக்கு நம்ம மனசு சொல்றது தான் டா நல்ல நேரம். என்றவர், அப்படியே உன் தாத்தன மாதிரி” என வெட்க்கத்தில் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு ஓடி சென்றார் அம்பிகாமா.
செல்லும் அவரை இதில் விரிய புன்னகையுடன் பார்த்து பிடரி வருடியவன் திரும்பி கண்ணாடியில் பார்த்தான்.
அவர் கூறியது போல் அவன் அங்கம் முழுதும் இழைத்திருந்தது அவளின் செந்நிற உதட்டுச் சாயம்.
“ஏஞ்சல்…” என விழிகளின் மூடி மீண்டும் வெக்கித்துக் கொண்டவன், சென்று இம்முறை கதவை அடைத்து விட்டு குளியல் அறை கதவை தட்டினான்.
மூட்டி வரை இருந்த அவன் அணிவித்து விட்ட டி-ஷர்ட்டுடன் வெளியே வந்தாள் மேக விருஷ்டி.
அவனோ அவளையே கண் மூடா பார்த்துக் கொண்டிருக்க, அவளோ அறையை சுற்றிப் பார்த்தாள்.
“பாட்டி போயாச்சா…?” என்றவளை இழுத்து தன் கை வளைவுகள் கொண்டு வந்தவன், “பாட்டி எல்லாம் போயாச்சு இப்ப நான் தான் கிழ போகவா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான் மோக விழி பார்வையுடன்.
ஏன்? என்னும் கேள்வியாய் அவள் அவன் விழி பார்க்க…
“இப்படி நீ நின்னா.. நான் எப்படி பா போறது” என கண்ணாடியில் அவனை காண்பிக்க ஏற்கனவே அவன் நடத்திய கூடல் பாடத்தில் சிவந்திருந்தவள் முகமது மேலும் செந்தூரமாய் சிவக்க.. அவன் இதழ்கள் அவள் இதழை நெருங்கிய சமயம் மீண்டும் கதவு தட்டப்பட்டது.
“இப்ப யாருடா கரடியா வந்திருக்கது…” அவளை விட்டு பிரிந்து சென்று கதவை திறந்தான்.
கதவை முழுதாய் திறக்காது ஒருக்களித்தே திறந்து அதன் வழி அவன் உடலை நிறைத்து நின்றான் இன்னுழவன்.
தட்டியது வேறு யாரும் அல்ல நிவர்த்தனனே.
“என்னடா…?”
அவனோ கொண்டு வந்த கவரை அவனிடம் நீட்டியவன், “இதுல அக்காக்கு ட்ரெஸ் இருக்குது. நான் கோவில்ல இருந்து வரும் போதே வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்துட்டேன். இப்போதைக்கு இத போட்டுக்க சொல்லுங்க மாமா.
அதுக்கப்புறம் அவளோட ட்ரெஸ் மத்ததெல்லாம் எடுத்துக்கலாம். இதுல அவளுக்கு தேவையானது எல்லாம் இருக்கும். வேற ஏதும் வேணும்னா கேட்டு சொல்லுங்க நான் போய் எடுத்துட்டு வரேன்.” என்றவன் அன்பில் எப்போதும் போல் பூரித்தான்.
ஏனென்றால் இவை அனைத்தையும் மைதிலியல்லவா செய்திருக்கணும்.
“அது சரி டா… உங்க அக்காகிட்ட கொண்டு போய் கொடு என்கிட்ட எதுக்கு தர…?” என்றவன் வேண்டும் என்று வம்பிழுத்தான்.
நிவர்த்தனனோ தலையை சொரிந்தவன், “என் அக்கா உன் கூட தான் இருக்கான்னு எனக்கு அது நல்லாவே தெரியுது கேடி மாமா. ஓவரா பேசாம இந்தாங்க பிடிங்க” என கவரை திணித்து இருந்தான் இன்னுழவனிடம்.
“அவ என் கூட தான் இருக்கான்னு நீ எப்படி டா இவ்வளவு கான்ஃபிடென்ட்டா சொல்ற?” இன்னுழவன் நெற்றி சுருங்க..
“ச்சி போங்க மாமா… என் அக்கா நேத்தே சொன்னா இந்த வாட்டர் ப்ரூவ் ஐ லைனர் கிடைக்கல என்னோடத வரும் போது மறந்துடேன்னு…” என நாசுக்காய் கூறி அவனை பார்த்து குறுநகை சிந்தியவனாய் “போங்க மாமா…” என நகர்ந்து கொண்டான் நிவர்த்தனன்.
அவன் கூறியதன் பொருள் உணர்ந்து தன்னை மீண்டும் பார்த்தவன் “இவன் கிட்டயும் மானம் போச்சு. இல்ல… இல்ல வான்ட்டடா போய் நானே காத்துல பறக்க விட்டுக்கிட்டேன்…” என வெக்கத்துடன் பின்னந்தலை தட்டிக் கொண்டவன் கதவை அடைத்து உள்ளே சென்றான்.
“யாரு இப்போ?” என்றவளிடம் “இந்தா இதுல உனக்கான ட்ரெஸ்ஸ உன் தம்பி கொடுத்தான்” எனக் மேக விருஷ்டி கையில் கொடுத்தான் அதனை.
அதை பிரித்தவள், “நான் கூட யோசிச்சேன் அடுத்து போடறதுக்கு ட்ரெஸ் இல்லையே என்ன பண்ண அப்படின்னு” என்றவள் கூற…
“அதான் உன் தம்பி இருக்கானே உனக்கு என்னென்ன வேணுன்றத ப்ராப்பரா பாக்க” என்றான் இன்னுழவன்.
“ஆமா அவன் தம்பி இல்ல எனக்கு அம்மா” என்றவள் உள்ளம் நெகிழ…
“சரி நீ சேஞ்ச் பண்ணு. எனக்கு கீழ கொஞ்சம் வேலை இருக்கு. நான் ரெடி ஆகிட்டு கீழ போறேன். அதுக்கப்புறம் நீ ரெடியாகிட்டு பொறுமையா கீழே வா.. என்றவன் உண்மையாவே அவன் உனக்கு அம்மா தான்” என மனமார கூறியவன் அவள் உச்சந்தலையில் அழுத்த இதழ் பதித்து மீண்டும் குளியலறை நோக்கினான்.
“திரும்பவும் குளிக்க போறீங்களா…!” வியப்புடன் அவள் கேட்க, மேலிருந்து கீழ் வரை தன்னை காண்பித்தவனாய்..
“ஆல்ரெடி உன் தம்பிகிட்டையும் அப்பத்தாகிட்டையும் மானம் போச்சி டி. இனி இருக்க கொஞ்ச மானத்தையாவது ஊர் தலைவர் எங்கிற முறைல மற்றவங்க முன்னாடி காப்பாத்திகிறேன் மா…” என இதழ் பிரிய சிரித்தவன்,
“இத தான் சொல்லுவாங்களோ கல்யாணம் முடிஞ்சா மானம் மரியாதை எல்லாம் காத்தோட போயிடும்னு” என புலம்பியபடி குளியலறைக்குள் அடைந்துக் கொண்டான் மீண்டும் இன்னுழவன்.
செல்லும் தன்னவனை கண்டு நாணத்துடனும் உள்ளம் நெகிழ்வுடன், நின்றாள் மேக விருஷ்டி.
செங்கோதை மணம் வீசும்…
Story எப்பிடி இருக்குனு ப்ளீஸ் ஒரு லைக்காது போடுங்க ஃப்ரெண்ட்ஸ்.
Family stress நடுவுள உங்க like and comment தான் என்னோட boost up.
நீங்க தர boost up ல யே என் stress எல்லாம் ஓடி உங்களுக்காக ud தர ஆவலா type பண்ணுவேன்.
So ப்ளீஸ் don’t Miss it your Golden hearty likes and comments friend’s and Family’s.