
Tag:
Vaasanthi Sankar
சரியாக நண்பகல் வேளையில் கிருஷ்ணகிரியை அடைந்திருந்தாள் மேக விருஷ்டி மணம் முழுவதும் வெறுமை சூழல.
அந்தியூர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற மஞ்சள் வண்ண பலகை அவளை வரவேற்க…
காரை செலுத்தாது அவ்வூரினுள் நுழைய இருந்த ஒரே நேரத்தில் ஒரு வாகம் மட்டுமே முன்னும் பின்னும் செல்லும் அளவிற்கு இருந்த பாலத்தில் காரை அணைத்தபடி ஸ்டியரிங்கில் தலைசாய்த்து அமர்ந்தாள் வாடிய முகத்தோடு.
ஒருபுறம் விரும்பியவன் விரும்பிய வேலை என அணைத்தும் இழந்த எண்ணம் ஒருபக்கம் வதைக்க, விருப்பம் இல்லா வாழ்க்கை எண்ணி மனம் மறுபக்கம் பறிதவிக்க ஒரு நிலையில் இல்லாது அமர்ந்திருந்தாள்.
அந்நேரம் அவளை அழைத்த அலைபேசிக்கு உயிர் கொடுத்து சலிப்புடன் காதில் வைத்தவளிடம்,
“ஹிம் சொல்லுங்க மா…”
“மேகா நீ எங்க இருக்க? ரீச் ஆகிட்டியா எப்படி?” கேட்டார் மைதிலி தீவிரமாக எதிர் முனையில் இருந்து.
பெருமூச்சு எடுத்து விட்டவள் “நான் இன்னும் ரீச் ஆகலமா. நான் இன்னும் ரீச் ஆக ரெண்டு மணி நேரம் ஆகும். செம டிராபிக் நான் ரீச் ஆயிட்டு கண்டிப்பா உங்களுக்கு கால் பண்றேன் ப்ளீஸ்” என மேலும் அவர் பேச்சை ஏற்காது அழைப்பை துண்டித்திருந்தாள் மேக விருஷ்டி.
மீண்டும் அவள் ஸ்டியரிங்கில் தலை சாய மீண்டும் அழைத்தது அவள் அலைபேசி அவளை.
இம்முறை பல்லைக் கடித்து பார்த்தவள் கண்கள் சற்று துளிர்விட உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
“என்ன சிசி போய் சேர்ந்துட்டியா அங்க?” நிவர்த்தனன் வினவ…
மைதிலி படுத்திய பாட்டில் “ஆமாண்டா போய் சேர்ற நிலைமைல தான் இருக்கேன் சீக்கிரமா பால் ஊத்தவா” என்றாள் சினம் எழும்ப.
விளையாட்டான அவள் பேச்சில் அதிர்ந்தவன் “அக்கா… என்ன வார்த்தை பேசுற நீ” எனப் பல்லை கடித்தான் நிவர்த்தனன் எதிர்முனையில்.
தமையன் அவன் குரல் அதிர்வில் தான் தான் பேசிய வார்த்தையின் கடுமையை உணர்ந்தவள் தலையை அடித்து “சாரி டா… சாரி டா… வெரி சாரி டா…” என்றவள் மன்னிப்பு யாசிக்க
“ஏன் அக்கா இப்படி பேசுற, அந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி தொலைனாலும் சொல்லி தொலைய மாட்டேங்குற. இப்பிடி உன்னையும் வறுத்திகிட்டு எங்களையும் வருத்திகிட்டு ஏன்கா?” என்றான் விட்டேரியாக.
“சரி சரி அதெல்லாம் பிரீயா விடு. நம்ம வேற பேசலாம்” என்று அவன் பேச்சை திசை திருப்ப, “அதான பார்த்தேன் கல்யாணத்த பத்தி பேசும் போதெல்லாம் என்ன மட்டும் தான் திசை திருப்புற உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு…” தலையில் அடித்துக் கொண்டவன்,
“சரி போய் அங்க ரீச் ஆயிட்டியா இல்லையா? அம்மா உனக்கு கால் பண்ணாங்களா?”
“இன்னுமா பண்ணாம இருப்பாங்க, கிளம்புன நேரத்துல இருந்து குறைஞ்சது 50 போன் கால் வந்திருச்சுடா. முடியலடா எங்கயாவது ஓடி போயிரலாம் போல இருக்குது”
“இப்பவும் ஒன்னு கெட்டுப் போல அக்கா உன் கையிலேயே பாஸ்போர்ட் இருக்கு தான. காரை திருப்பி ஏர்போர்ட்டு போ உனக்கு நான் டிக்கெட் ரெடி பண்றேன். ஒன்னு ஆஸ்திரேலியாவா இல்ல உனக்கு பிடிச்ச வேற எங்க வேணாலும் போ. இல்ல அமெரிக்காவே போறியா போ. நான் இருக்கேன் அந்த இன்னு…” என்னும் போது
பின்னோடு இருந்து பலமாக கேட்ட ஹாரன் சத்ததில் அதிர்ந்தவள் கையில் இருந்த போனை நழுவ விட்டிருந்தாள் பட்டென்று.
திடுக்கிட்டவள் யார் என்று உள்ளிருந்து ஜன்னல் வழி பார்க்க, ஐவிரல் பதித்து கார் கண்ணாடியை தட்டும் சத்தம் அவள் செவிமடல் அடைந்தது.
“யாருடா அவன்…?” என்று கார் கண்ணாடிய அவள் இறக்க, அங்கு நின்று கொண்டிருந்தது வேறு யாருமல்ல சாட்சாத் நம் இன்னுழவன் தான்.
அவன் செயலில் திடீரென்று திடுக்கிட்டிருந்தவள் அவனை முறைக்க, கொளுத்தும் வெயிலில் நெற்றி சுருங்க அவளுக்கு மேல் அவளை முறைத்தவனோ,
“ஏய் இந்தா புள்ள யாருமா நீ. நடுரோட்டில வண்டி விட்டுட்டு தூங்கிட்டு இருக்கிறவ. என் வீட்ல நைட்டு ஃபுல்லா தூங்கலையோ? ஓரமா வண்டிய விட்டுட்டு தூங்கு மா. இல்ல வீட்டுக்கு போய் தூங்கு. இப்படி வண்டிய நெடுவாள நடு ரோட்ல விட்டு நின்னனா மத்தவங்க போக வர வேண்டாமா” என்றான் ஏகத்துக்கு சினம் கொண்டவனாய்.
அவளோ கோவத்தில், “யூ பிளாடி ரஸ்க்கள், ஸ்டுபிட், நோன்சன்ஸ், கவுண்டர்” என்று ஆங்கில வார்த்தைகளால் அவனை அவள் அர்ச்சிக்க…
கையில இருந்து தவறி எதிர்ப்புறம் இருந்த சீட்டில் விழுந்த அலைபேசியில் திடீரென்று ஏற்பட்ட சத்தத்தில் நிவர்த்தனனோ “ஹலோ… ஹலோ சிசி…” என்று விடாது குரல் கொடுத்தான்.
பைக்கில் அமர்ந்தப்படி அவளின் ஆங்கில பேச்சிலும் அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த நிவர்த்தனன் குரலையும் கேட்டவன், “ஓ வெளியூர் பிள்ளையா நீ. எதுவோ இருந்துட்டு போ… அந்த பக்கம் ஓரஞ்சாரமா போய் கடலை போடுமா.
இனி உன் வண்டி ஊருக்குள்ள நடுரோட்டில் நிக்கிறத பார்த்தேன் நாலு டயரையும் பஞ்சராக்கி போடுவேன் பார்த்துக்கோ. அப்புறம் தள்ளிட்டு தான் போகணும். வீட்டுல மரியாதையா பேச சொல்லி கொடுக்கலையா உனக்கு? முதல்ல வண்டிய எடு” என்று மீண்டும் அவன் கார் கதவில் அடித்தான் பளார் பளாரென்று.
ஏனென்றால் காருக்கு பின்பு மாட்டு வண்டியில் காய்கறிகளை வைத்துக்கொண்டு வயதான முதியவர் ஒருவர் வெயில் பொழுதில் தலையில் துண்டை போட்டு அமர்ந்திருந்தார்.
டவுனில் வேலையை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தவனுக்கு இந்த காட்சி புலப்பட்டது. அதிலும் எசியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் மேக விருஷ்டி பார்த்தவனுக்கு கோவம் கொந்தளித்து.
அவன் பேச்சில் மட்டு பட்டிருந்த சினம் மீண்டும் கிளர்த்தெழ மேலும் எரிச்சல் கண்டவள் வேகமாக காரை ஓரமாக செலுத்தி நிறுத்தி கதவை திறந்த படார் என்று அறைந்து இறங்கினாள்.
இன்னுழவனும் பைக்கை ஓரமாக நிறுத்தியவன் இறங்காது திரும்பி, “நீங்க போங்கய்யா முதல்ல. அவங்க நின்னா போக சொல்லாம வெயிலேயே அவங்க போகும் வர கத்துக்கிட்டு நிற்பிரா நீரு… சத்தம் கொடுக்க வேண்டாமா…” என அவரை கடிந்து கொண்டு முதலில் அப்பெரியவரை அனுப்பி வைத்தான்.
இதையெல்லாம் அதன் பின்பு தான் கவனித்திருந்தாள் மேக விருஷ்டி.
தான் செய்த தவறின் விளைவை எண்ணி வருந்தியவள் “சாரி” என அவரிடம் மன்னிப்பு கூற வருவதற்குள் அம்முதியவர் முன்னே செல்ல… அவருக்கு ஓரம் வாங்கி பைக்கில் பறந்திருந்தான் இன்னுழவன்.
வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் மிடுக்காக புல்லட்டில் சென்று கொண்டிருக்கும் அவன் பின்புறத்தை தான் பார்த்து நின்றாள் மேக விருஷ்டி.
இங்கோ அலைபேசியில் விடாத அழைத்துக் கொண்டே இருந்தான் நிவர்த்தனன்.
“அச்சோ பாவம் அந்த தாத்தா, எவ்வளவு நேரம் நின்னாரோ இந்த வெயில்ல. எல்லாம் இந்த அம்மா பண்றதால” என மைதிலியை வறுத்தெடுத்து தன் மனம் வருந்தியவள் மீண்டும் காரில் ஏறி அலைபேசியை காதில் வைத்தாள்.
“என்னாச்சு அக்கா எதுவும் ப்ராப்ளம் இல்லையே? யாருக்காக அவன் குறுக்கே ஏதோ ஒரு வாய்ஸ் கேட்டுச்சு” என நிவர்த்தனன் கேட்க, நடந்துவற்றை கூறினாள் மேக விருஷ்டி.
“தப்பு உன் மேல தான் சிசி. ஓகே அந்த தாத்தாகிட்ட சாரி கேட்டியா?”
“எங்க அந்த தாத்தாவும் போயிட்டாரு. அவருக்காக என்ன திட்டுன அந்த வில்லேஜ் ஜென்ட்டில் மேனும் பைக்குல பறந்துட்டாரு.” என்றாள் மேக விருஷ்டி உதட்டை பிதுக்கி.
“சரி அங்க தான ரெண்டு நாள் ஸ்டே. அப்போ பார்த்தா தேங்க்ஸ் அண்ட் சாரி சொல்லிக்கலாம் சிசி. அதெல்லாம் விடு அம்மா கிட்ட என்ன சொல்லி வச்சிருக்க?”
“நான் இன்னும் இங்க வரவே இல்ல, ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொல்லி இருக்கேன் டா…”
“திரும்பவும் சொல்றேன் கார் திருப்பு… ஏர்போர்ட்டுக்கு போ…” என்றவன் பேச்சை தொடர காரை செலுத்தியபடி அந்தியூர் எல்லையை கடந்து ஊருக்குள் வந்திருந்தாள் மேக விருஷ்டி.
“நீ சீக்கிரம் கிளம்பி வா டா… நான் இங்க வந்துட்டேன், நீ இல்லாம எனக்கு போர் அடிக்கும்” அவள் சாட
“ஏன் அந்த ஷாம்பு பாட்டில் கிட்ட பேச வேண்டியது தானே” நக்கல் பேசினான்.
“டேய் அவன்… சாரி சாரி அவரு நம்பர் கூட என்கிட்ட இல்லடா…”
“அந்த ஷாம்பு பாட்டிலுக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சலுலு… அவரு… மண்டையிலயே போட்டுருவேன் சிசி உன்ன” என்றவன்,
“நீ தான் சிசி பேசணும் நீ தான் அவனுக்கு கழுத்தை நீட்ட போற.
ஏன் சிசி வழக்கமான நம்ம பண்பாட்ட மாத்தி வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல” என சகோதரியின் மனக்கவலையை போக்க பேச்சை தொடர்ந்தான் நிவர்த்தனன்.
“எப்படி மாத்தி வெச்சிருக்கணும் நீ சொல்ற?” புரியாதவள் கேட்க,
“இல்லை சிசி மாப்புள தாலி கட்டடுறதுக்கு பதில் பொண்ணு தான் தாலி கட்டணும்னு ரூல்ஸ் இருந்தா தாலி கட்டுற டைம் அத வச்சே அவன் கழுத்தை நெருச்சிடலாம்ல சிசி. அட்லீஸ்ட் அந்த மாதிரி பண்றேன்னு பிளாக் மெயில் ஆவது பண்ணலாம். அப்படியே தான் அந்த ஷாம்பு பாட்டில் ஓடிப் போகலாம்” என்றானவன்.
அதை கேட்டு நகைத்தவள், “இப்போ நீ என்ன அந்த ஷாம்பு பாட்டில கொல்ல சொல்றியா டா…?”
“ஆமா நீ செஞ்சு தள்ளிவிட்டு தான் மறு வேலை பார்ப்ப. அட போ சிசி. நம்ம பிள்ளை பூச்சி மைதிலியையே நீ எதிர்த்து பேச மாட்டேங்க, இதுல ஷாம்பு கழுத்துல நீ கழுத்து நெறிகிறாயாக்கும்” என்றவன் வாதாடிக் கொண்டிருக்க… ஜன்னல் வழியாக தென்றல் அவள் முகமதை தழுவி சென்றது.
அதில் அகம் மலர்ந்தவள் “சரி டா சீக்கிரமா வா, நானும் ஊருக்குள்ள வந்துட்டேன் வைக்கிறேன். வீட்டுக்கு போய் கால் பண்றேன் பார்த்து வா” என அழைப்பை துண்டிக்கவும் காரை நிறுத்தியிருந்தாள், இம்முறை காரை ஓரமாக நிறுத்தியிருந்தாள்.
மனம் வெறுமையாகவும் வெறுப்பாகவும் அவவூருக்கு வந்திருந்தாலும் அவ்வூரின் குளிர்க்காற்றும் அமைதியான சூழலும் மனமுவந்து உள்ளுக்குள் இழுத்து சென்றது என்னவோ அவள் அறியா நிதர்சனம்.
காரைவிட்டு இறங்கியவள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் சுற்றியும் பச்சை வண்ண மகள் நெற்ச்சோலையாய் அசைந்தாடி, தென்றலோடு உறவாடிக் கொண்டிருக்கும் அழகான காட்சியை கண்டவள் மனம் முழுவதும் ரணமும் வெறுமையும் விலகியோட இதம் கண்டது.
“இப்படி ஒரு ஊர்ல வாழனும் தானே நான் ஆசைப்பட்டேன். ஆனா, எனக்கு மட்டும் அது கை சேரா கானல் நீரா போயிடுச்சே…” என குமறியவள் மனதில் நொடி நேரத்தில் வந்து வாசம் செய்யத்தான் செய்தான் இன்னுழவன்.
அவனுடன் தினமும் காற்றலையில் உரையாடும் பொழுது சுற்றி இருந்த இயற்கை எழில் கொஞ்சும் சூழல்களை அவன் வர்ணிக்காத நாளும் இல்லை! அதில் லயித்து அவள் கேட்காத நாளும் இல்லையே!
அதனாலயே அவள் இப்பிடி பட்ட ஊரில் வாழனும் என தனக்குள் ஆசையை வளர்த்தாள். அவள் தாயோ அதற்கு வேலியிட்டார்.
மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி வரப்பில் அவள் நடந்து கொண்டிருந்தாள் இயற்கை சூழலை ரசித்தவாறு மேக விருஷ்டி.
இயற்கை வளத்தை இவள் ரசித்துக் கொண்டிருக்க, அலைபேசியில் தீவிரமாக பேசியபடி நின்று கொண்டிருந்தான் இன்னுழவன் அவளுக்கு முதுகு காட்டியவனாய் வரப்பின் ஓரத்தில் நின்ற தென்னை மரத்தின் அடியில்.
“அகரா எதுக்கும் மாப்பிள்ளை வீட்ல தங்கியிருக்க ஹோட்டலை சுற்றி ஆள போட்டு விடு. எங்கய்யா அங்கேயும் வேலை பார்க்க வழி இருக்கு. மாமா வீட்ட சுத்தியும் ஆள் போட்டு இருக்கேன், இருந்தாலும் ஒரு கவனம் இருக்கட்டும்.” என மாமானவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் தன் தந்தைவனால் விபரீதம் ஏற்பட்டு விடக்கூடாது என அரணாக அவன் திட்டங்களை கூறிக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் ஆளை அசைக்கும் அளவிற்கு காற்று மிகவும் பலமாக அடிக்க தூரத்தில் தென்னை மரத்திற்கு கீழ் நின்று கொண்டிருந்த இன்னுழவனை பார்த்திருந்தாள் மேகவிருஷ்டி.
அவளையும் ஒரு சேர தென்னை மரத்தின் மேல் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் கொத்தாக ஆடிக் கொண்டிருந்த தென்னங்குலையையும் கண்டவள் அந்த நொடி அதிர்ந்து விட்டாள்.
இன்னுழவன் பின் முதுகையே பார்த்தவளுக்கு சற்று முன் தன்னை திட்டி விட்டுச் சென்றவன் தான் இவன் என அறியாது போனாள்.
அவளோ தூரத்திலிருந்து “ஹலோ… ஹலோ… சார் ஹலோ… இங்க பாருங்க…” எனக் கத்த காற்றடித்ததின் வேகத்தில் அவள் குரல் காற்றோடே கலந்து சென்றது.
அடிக்கும் காற்றில் தன் இமைகளை சுருங்க மூடியபடி போனில் கவனத்தோடு பேசிக் கொண்டிருந்தான் இன்னுழவன் இதை எதையும் கவனிக்காதவனாய்.
சுற்று மூச்சு பார்த்து மேக விருஷ்டி கண்களுக்கு சிறு தென்னங்காய் தென்பட அதை வேகமாக எடுத்து இன்னுழவன் பிடரி மண்டையிலேயே “யோவ் வளர்ந்தவரே…” என பெருங்குரலோடு எறிந்திருந்தாள் நச்சென்று குறிப்பார்த்து.
தென்னங்காய் பட்ட வலியில் “ஸ்ஸ்ஸ் ஆ… எவண்டா அவன்?” என்றவனாய் இன்னுழவன் அவள் புறம் திரும்பி அதிர்ந்து நகர…
மேல இருந்து தென்னாங்கொலையும் அவிழ்த்து அவன் நின்ற இடம் தன்னில் விழவும் சரியாக இருந்தது.
செங்கோதை மணம் வீசும்…
டியர் ஃப்ரெண்ட்ஸ் story எப்பிடி இருக்குன்னு சொன்னா I’m very Happy 🙂🙂.
வீட்டில் இருந்து கிளம்பிய இன்னுழவன் நேரே வந்து சேர்ந்ததென்னவோ சோமசுந்தரம் இல்லத்திற்கு தான். வாசலில் பைக்கை ஸ்டாண்ட் போட்டு இறங்கிய அவனை உள்ளே இருந்து பார்த்துக்கொண்டார் சோமசுந்தரம்.
முகமதில் புன்னகை மலர “வா இன்னு…” என புன்முறுவலுடன் அவர் வரவேற்க, அவ்விடம் வந்து சேர்ந்தார் பழனியும்.
“என்ன பழனி அண்ணா நல்லா இருக்கீங்களா?”
“எனக்கென்ன தம்பி உங்களுடைய தயவுல சந்தோசமா இருக்கேன்.” இருவரும் பேசிக் கொண்டிருக்க வாசல் வரை சென்று விட்டார் சோமசுந்தரம்.
“சரி தம்பி நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் கொஞ்சம் வேலை இருக்கு பாத்துட்டு வரேன்” என்று பழனி அங்கிருந்து நகர்ந்தார்.
“வா இன்னு உள்ள போலாம்…” என்றவரை தடுத்து “இல்ல மாமா இதோ திண்ணையில நல்லா காத்து வருது இங்கேயே உட்கார்ந்துக்கலாம்” என்று திண்ணையில் அமர்ந்தான் இன்னுழவன் பாதம் தழுவிய வேஷட்டியை கால்களோடு மடித்து.
“ரொம்ப நன்றி இன்னு இந்த வீட்ட இத்தனை வருஷமா நீ பேணி பாதுகாத்துட்டு இருந்திருக்க. இந்த ஊருக்குள்ள நான் இன்னைக்கு தைரியமா வர்றதுக்கு காரணமாகவும் நீ இருக்க” காலையில் சக்திவேலுடன் நடந்த உரையாடலை எண்ணிக் நன்றி கூறியவர்…
“சரி என்ன சாப்பிடுற இன்னு, இரு உனக்கு நான் ஏதாவது எடுத்து வர சொல்றேன்” என்ற ஆர்வமாய் கேட்டார்.
“இப்ப ஏதும் வேண்டாம் மாமா பொறவு பார்த்துக்கலாம். அப்புறம் இது உங்க வீடு என் வீடு இல்ல மாமா, நம்ம வீடு. அத எப்படி நான் பூட்டி போட விடுவேன்.
இன்னொன்னும் நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் எனக்கு முன்னாடி இந்த உலகத்தை பார்த்தது நீரு தான். இந்த உலகத்த மட்டும் இல்ல இந்த வானம் பார்த்த பூமியை பார்த்ததும் நீரு தான்.
உமக்கு அப்புறம் தான் நான் இந்த பூமியில் பிறந்தேன், சொல்லப் போனா எனக்கு முன்னாடி சொந்தக்காரன் இந்த பூமிக்கு நீருதான்றது நினைப்புல இருக்கட்டும்” என்றவன் முகமது சற்று வாட “இப்பதான் உங்களுக்கு இன்னு இன்னுன்னு வாயி நிறைய கூப்பிட்டு இப்பிடி உரிமையா பேச தோணிச்சா மாமா?” என்றான் குரல் தளர்ந்து.
அவன் கேட்டதில் சோமசுந்தரமோ தலை குனிந்தவர் , “இந்த மாமன மன்னிச்சிரு இன்னு… என்னால என் நிலைமை என்னன்னு” மனம் சொல்லி துடித்தவகைளை அடக்கியவர்,
“எவ்ளோ கோவம் இருந்தாலும் நீ மாமன அடிச்சுக்கோ ஓகேவா” என்றவர் அவன் தோள் பிடித்தார்.
“அட போ மாமா உங்கள அடிச்சிட்டு உங்க அக்காகிட்ட நானா பாடுபடுறது” என்றவன் நகைக்க அவனுடன் அமர்ந்தார் சோமசுந்தரமும்.
இன்னுழவனோ நிசப்தமான வீட்டுக்குள் விழிகளை சுழல விட்டவன், “சரி கல்யாண வீடு சொன்னீங்க எங்க உங்க புள்ளைங்க யாரையும் காணோம்” என்றான் யோசனையுடன்.
“ரெண்டு பேருக்குமே பிசி ஸ்கெட்டியூல் இன்னு. பொண்ணு இன்னைக்கு ஈவினிங்குள்ள வந்துருவா, பையன் நாளைக்கு கல்யாணத்துக்கு வந்துருவான்.
அத்தைக்கு நைட்டு வந்த டிராவல் காலையில இன்னைக்கு நடந்து டென்ஷன் எல்லாம் தலைவலி அதான் படுத்து இருக்கா.
இரு நான் போய் எழுப்பிட்டு வரேன்” என்றவர் எழும்ப..
அவரை தடுத்தவன், “இல்ல மாமா அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றவனாய்…
“சரி மாப்ள வீட்டுக்காரங்க யாரையும் காணும்? அவங்களுக்கு இங்க தங்க வசதி இருக்குமா இல்லன்னா வேற எதுவும் அரேஞ்ச் பண்ணட்டுமா?” என்றான் அக்கறையோடு.
“நீ கேட்டதே போதும்டா ராசா… அவங்க எல்லாரும் டவுன்ல லாட்ஜில தங்கி இருக்காங்க. இங்க கல்யாணத்த வைக்க சம்மதித்ததே பெரிய விஷயம்.
காலைல அவங்க முகூர்த்தத்துக்கு நேரே கோவிலுக்கு வந்துருவாங்க.
முகூர்த்த முடிஞ்சு கையோட கிளம்ப வேண்டியது தான்” என்றார் பெருமூச்சு தன்னை விட்டு சோமசுந்தரம் மனதில் இங்கு இருக்கும் ஆசை இருந்தாலும் அதை பொருட் படுத்தாதவராய்.
“ஏன் மாமா உடனே நீயும் கிளம்ப போறியா…?”
“ஹிம்… கிளம்பி தானட ஆகணும் இந்த ஊர்ல எனக்கு சந்தோஷமா நிம்மதியா இருக்க கொடுத்து வைக்கவில்லையே…” என்றார் அவர் விரக்தியாய் அவன் முகம் பார்த்து.
“ஏன் மாமா நீங்க சந்தோஷமா தானே இருக்கீங்க? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே. முக்கியமா இந்த கல்யாணத்தில் இந்த பிரச்சனையும் இல்லையே. எல்லாரோட சம்மதத்தால தான இந்த கல்யாணம் நடக்குது?” கேட்டான் அன்று நிவர்த்தனனுடன் அவர் பேசிய உரையாடலை கேட்டதை குறித்து.
அதை அவரும் புரிந்து கொண்டவர், “எல்லாரோட சம்மதத்தோடு தான் நடக்குது இன்னு” என்றார் வேகமாக.
“அப்புறம் ஏன் அன்னைக்கு நிவர்… நிவர்…” நிவர்த்தனன் பெயரை யோசித்தவன் அது சிந்தையில் பிடிபடாது போக “பையன் பெயர் என்ன மாமா?”
“நிவர்த்தனன்”
“ஹான் நிவர்த்தன்ன அவன் எதுக்கு அன்னைக்கு அப்படி பேசினான்? அவன் அக்கா விஷயத்துல நீங்க ரொம்ப சுயநலமா இருக்கிற மாதிரி பேசினானே! போன்ல நான் கேட்டுட்டு தான் இருந்தேன். உங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சுன்னா நீங்க சொல்லலாம் என்கிட்ட” என்றான் மாமனவனுடன் நண்பனாய் பேச்சை வளர்த்து.
சற்றென்று அவன் கேள்வியில் திடுக்கிட்டார் சோமசுந்தரம். அதையும் தன் மனக்கண்ணில் பதித்துக் கொண்டான் அவர் அறியாது இன்னுழவன்.
எச்சிலை விழுங்கியவர் “அது ஒன்னும் இல்ல இன்னு அவளுக்கு இப்ப இப்போ கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்ல இன்னு. கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டா.
ஃபாரின்ல இருந்து படிச்சிட்டு இப்பதான் ஒன் இயரா இங்க இருக்கிறா. இன்னும் கொஞ்ச நாள் எங்க கூட இருக்கணும்னு அவ நினைச்சா போல அதுக்குள்ள உங்க அத்தை கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிட்டா, அதுவும் லண்டன் மாப்புளைக்கு.
அதான் அக்காவோட சந்தோஷத்த நீங்க பறிக்கிறீங்கன்னு நிர்வத்தனா கோபப்பட்டுட்டு இருந்தான். வேற ஒன்னும் இல்ல” என்ன ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டார் சோமசுந்தரம்.
அனைத்தையும் கேட்டவன், “உங்க பொண்ணு அதான் என் மாமா மக எப்போ ஃபாரின் போனா…?”
“12த் ஸ்கூல் முடிச்ச கையோட ஃபாரின் போயிட்டு அங்கேயே படிச்சு முடிச்சு இன்டெர்ன்ஷிப் எல்லாம் கிளியர் பண்ணிட்டு தான் இங்க வந்தா” என்றார் சோமசுந்தரம் பாதி உண்மையும் மறைத்து.
“ஓகே திரும்பியும் ஃபாரின்னா கொஞ்சம் கஷ்டம் தான், இன்னொரு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சிருக்க வேண்டியது தானே மாமா மாப்பிள்ளை வீட்டுல பேசி” இன்னுழவன் கேட்க,
மனதுக்குள் புலம்பிக்கொண்டார் சோமசுந்தரம் “மாப்பிள்ளைகிட்டயே நான் இன்னும் பேசினதில்ல இதுல மாப்பிள்ளை வீட்ல பேசிட்டாலும்” என்று.
“இல்லப்பா போகப் போக சரியாயிடுவா. அக்காவுக்கு ஒன்னுனா தம்பி தான் தாம் தும்னு குதிக்கிறான், அவ்வளவு தான் வேற எந்த பிரச்சனையும் இல்ல” என்றார் சோமசுந்தரம்.
“உங்கள மாதிரி அக்கா மேல அவ்வளவு பாசம் போல” நிவர்த்தனன், மேக விருஷ்டி பிணைப்பை கண்டு நகைத்தான் இன்னுழவன்.
அனைத்தும் கேட்டவன் மாமன் மகள் பற்றிய முழு விவரமும் கேட்காது விட்டு விட்டான். கேட்டிருந்தால் மனம் கவர்ந்தவளின் மனமில்லா இத்திருமணத்தை நிறுத்திருப்பானோ என்னவோ!
அக்கா என்று கூறிய பின்பு தான் சோமசுந்தரத்திற்கு தனது சகோதரி கோதாவரி நினைவுக்கு வந்தார்.
“என் அக்கா நல்லா இருக்கா டா இன்னு. சந்தோஷமா இருக்குல” என்ன தளர்வாய் கேட்டவரிடம்,
“அவங்களுக்கு என்ன நல்லா இருக்காங்க. என்ன தினமும் ஒரு நாளைக்கு 50 நேரமாக உங்கள பத்தி யோசிச்சு புலம்பாம இருக்க மாட்டாங்க” என்றான் இன்னுழவன் இதழ் விரியா நகையுடன்.
“தூக்கி வளர்த்தவளுக்கு என்னாலயே கஷ்டத்த கொடுத்திட்டேன்னு நினைக்கும் போது மனசு ரணமாகுது டா இன்னு” என்றார் சோமசுந்தரம் கவலையுடன்.
மாமன் அவன் வாடிய முகம் பார்த்து தாங்காதவன், “மாமோய் அதான் நீரு வந்துட்டீற்ல அப்புறம் என்ன. இப்ப எதுக்கு போட்டு கஷ்டப்பட்டு இருக்கீங்க கல்யாண வேலையை பார்ப்போம்.
அதெல்லாம் சரியாயிடும், சரி பண்ணிடுவேன் உங்க மருமகன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கட்டும். அழுத்த சொன்னவன் சரி நான் கிளம்புறேன் எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க” என்றவன் கிளம்ப வாசலில் வந்து இறங்கியது தோரணங்களும் வாழை மரமும்.
“நான் எதுவும் வர சொல்லலையே” சோமசுந்தரம் வினவ…
“நான் தான் வரச் சொன்னேன் மாமா” என்ற இன்னுழவன் “எல்லாத்தையும் கட்டிருங்க” என்று அவர்களிடம் எதை எங்கெங்கு கட்ட வேண்டும் எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஏன் மருமகனே அதான் கோயில்தான் எல்லாம் அரேஞ்ன்ட்டும் முடிச்சிட்டோமே. இங்க எதுக்கு நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச கையோட ஊருக்கு கிளம்புறது தானே” சோமசுந்தரம் சாட…
“கோயில்ல தான் கல்யாணம் அதுக்காக வீட்ட இப்படியா போட்டு இருப்பிரு நீரு கலையிழந்து போயி. கல்யாண வீடு மாதிரி தெரிய வேண்டாமாக்கும். அது அது செய்ய வேண்டியத செய்யணும் மாமா” என்றவன்,
அவர்கள் புறம் திரும்பி “நீங்க எல்லாத்தையும் சரியா கட்டிடுங்க” என்று “சரி மாமா நான் போயிட்டு வரேன் எனக்கு வேலை கொஞ்சம் கிடக்கு” என்று பைக்குக்கு உயிர் கொடுத்து விடைப்பெற்றான் இன்னுழவன் அங்கிருந்து.
இன்னுழவன் புறப்பட்டு செல்ல அலைபேசி வாயிலாக அழைத்திருந்தான் நிவர்த்தனன் சோம சுந்தரத்தை.
“சொல்லுடா நிவர்த்தனா நீ எப்ப கிளம்புற” என்றபடி அவர் பேச ஆரம்பிக்க…
“அப்பா கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது. அதுவும் உங்க ஊர்ல கல்யாணத்தை வச்சிருக்கீங்க நீங்க ஓகே தானே? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? அக்கா கால் பண்ணாளா? இந்நேரத்துக்கு அவ சோ முடிஞ்சி கிளம்பி இருக்கணுமே! எனக்கு மெசேஜ் ஏதும் போடல? நான் கால் பண்ணேன் ரீச் ஆகல..” என்ன பல கேள்விகளை அவன் கேட்டு வைக்க…
“அடேய் கொஞ்சம் மூச்சு விட விடு டா…” என்றபடி சொந்த ஊர் காற்றை சுவாசித்தவர் பேச ஆரம்பித்தார் அவனுடன்.
“எல்லா வேலையும் நல்லபடியா போகுதுடா எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்ல. எல்லாத்தையும் முன்ன நின்னு என் மருமகன் இருந்து பாத்துக்குற போது எனக்கு என்னடா கவலை” என்றார் சந்தோஷமாக இன்னுழவனை நினைத்து.
“ங்ங… மருமகனா அந்த ஷாம்பு பாட்டில் அங்க வந்துட்டானா என்ன. அதுமட்டுமல்லாம அங்க வந்து அந்த ஷாம்பு பாட்டிலே எல்லாத்தையும் பார்க்குறானா!இருக்கா இருக்காதே..!” என்றவன் எதிர்புறத்தில் இருந்து நாடி தடவினான்.
சோமசுந்தரமோ, “அவன யாருடா சொன்னா…” என அலுத்துக் கொண்டவர், “என் அக்கா பையன் டா என் மருமவன் இருக்கும் போது எனக்கு என்னடா கவலை. சொல்ல போனா இன்னைக்கு இங்க எல்லாத்துலையும் எனக்கு துணையாக நிற்கிறது அவன் தான்டா.
இங்க நான் கூட இந்த ஊருக்கு திரும்ப வரும்போது என்ன பிரச்சனை நடக்கும்னு கொஞ்சம் பயந்துட்டே தான் இருந்தேன். ஆனா, இந்த சின்ன வயசுல இந்த ஊரை எவ்வளவு ஆளுமையா அவன் கையாலுறான் தெரியுமா.
எஸ்பெஷலி என்னோட மச்சானையும் டா… அவன் ஒரு வார்த்தை சொன்னா என் மச்சானே ஆடிப் போய் வாய மூடிட்டு நிக்கிறார் டா… அன்னைக்கு நான் பார்த்த அந்த மச்சானா இவருன்னு நானே ஷாக் ஆகிட்டேன்” என்று மருமகன் அவன் பெருமையை சில்லாகித்தார் சோமசுந்தரம்.
“ஹான் பார்ரா மருமகன் பெருமை புராண ஆஸ்திரேலியா வர காது கிழியுதே. நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா எனக்கு அவர பாக்கணும் ரொம்ப கியூரியாசிட்டி இருக்குப்பா. ஆனா அத விட ரொம்ப சந்தோஷமா இருக்கு பா நீங்க ரொம்ப நாள் கழிச்சு இப்படி சந்தோஷமா பேசுறது கேட்கும் போது” என்றான் மனமார.
மேலுமவன் “நீங்க இவ்வளவு பேசுறத பார்த்தா இவரையே நம்ம அக்காக்கு நீங்க பேசினதுல தப்பு இல்லைன்னு தான் தோணுது” என்றான் நிவர்த்தனன் வெறுமையாக.
அதை நினைத்தவர், “ஹிம் தப்பு இல்ல தான் ஆனா உன் அம்மாக்கு தப்பா படுதே. அன்னைக்கு இருந்த நிலைமை வேற இன்னைக்கு இருக்குற நிலைமை வேறன்னு உன் அம்மாக்கு புரிய மாட்டேங்குதே.
உன் அம்மாக்கு அந்த ஷாம்பு பாட்டில் தான் சரியாப்படுது. என்ன பண்ண முடியும்? விதி யார விட்டுச்சி” என மனைவி முடிவை எண சலித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது சோமசுந்தரம்.
“அதே தாம்ப்பா நானும் சொல்றேன். விதி யார விட்டுச்சி கண்டிப்பா அக்கா கல்யாணத்துல ஏதாவது மேஜிக் நடக்கும். நடக்கணும் இல்லனா இந்த ரைட்டர நம்ம ஒரு கை பார்க்குறோம் டீலா ப்பா…”
“Me: ஏதேய்…”
“ஹிம் டில் டில் டா…” என அவர்கள் பேச்சை தொடர்ந்து கொண்டு இருக்க…
இங்கு கல்யாண வேலைகள் தடபுடலாக அரங்கேறிக் கொண்டிருக்க…
அங்கு இவர்களை எவ்வாறு அடியோடு சரிக்கலாம் என திட்டம் கட்டிக் கொண்டிருந்தார் சக்திவேல் எள்ளும் கொள்ளுமாய்.
செங்கோதை மணம் வீசும்…
Next ud night வரும் ஃப்ரெண்ட்ஸ் so ப்ளீஸ் உங்க likes and Comments or raitings கொடுங்க ஃப்ரெண்ட்ஸ்.
யோசனையுடனே வீடு வந்து சேர்ந்திருந்தான் இன்னுழவன்.
உள்ளே வந்தவனை வழிமறித்து இருந்தார் அம்பிகாமா.
என்ன என்னும் விதமாய் அவன் பார்க்க, “ஏன் பேராண்டி உன் லவ்வு சாஸ்ஸாகிருமா…?” (சக்ஸஸ் )
“ங… ஸாஸ் ஆ…” என இன்னுழவன் விழித்து வைக்க…
அவன் தோள் தட்டி பின்புறம் வந்து நின்ற இனிதுழனியோ சக்ஸஸ் என திருத்திக் கூறினாள் செய்கை மொழி தன்னில்.
ஏனென்றால் தினமும் இவர்கள் இருவரின் காதல் சம்பாஷனைகளை ஊர் கேக்குதோ இல்லையோ மொத்த பேரும் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். சக்திவேல், கோதாவரி, சோமசுந்தரம், மைதிலி, தங்கமணி ஐவரை தவிர.
மேக விருஷ்டி பேசியதை எண்ணி யோசனையில் வந்தவன், “ப்ச்… அப்பத்தான் உன் 30 நாள் இங்கிலீஷ குழி தோண்டி மூட போறேன் பாரு” என்றவனாய்,
“ஏன் என் லவ்வுக்கு என்ன குறைச்சல் அதெல்லாம் நல்லபடியா சக்ஸஸ் ஆகும். ஏன் ஏஞ்சல் கண்டிப்பா என்ன வந்து சேர தான் போறா. நாங்க உனக்கு டசன் கணக்குல பெத்து போட தான் போறோம்.” என்றவனாய் பெருமூச்சு விட்டு மேலே சென்றான் இன்னுழவன்.
நேரம் கடக்க…
இன்னுழவன் வீட்டு வாசலில் கையில் பழம், பூ, தாம்பாழம் சகிதம் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தனர் சோமசுந்தரமும் மைதிலியும் ஒருவருக்கொருவர் வாதாடியவர்களாய்.
“ஏங்க இவங்களுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் செய்யணுமா?” மைதிலி எரிச்சலாய் வினவ…
“ப்ச்… மைதிலி ஊர் தலைவர் எங்கிற முறையில நாம மரியாதை கொடுத்து தான் ஆகணும்.” என்றார் சோமசுந்தரம் உறுதியாக.
“சரி எவ்வளவு நேரம் தான் இங்கேயே நிற்கிறது, வாங்க உள்ள போலாம்” என இருவரும் உள்ளே செல்ல…
“அங்கயே நில்லுங்க…” என்று குரல் அதிர நடுக்கூடத்தில் இருந்து கத்தி இருந்தார் சக்திவேல்.
வாசலை கடக்காது அதிர்ந்து நின்றனர் சோமசுந்தரமும் மைதிலியும். இதை அவர்கள் எதிர்பார்த்தது தான்.
இதற்காகத்தான் மைதிலி வரமாட்டேன் என்று கூறியபோதும் சோமசுந்தரம் வலுகட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்தார்.
சக்திவேலை பல வருடங்கள் கழித்து பார்த்த மைதிலிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. எனினும் அதை வெளிகாட்டிக்காது நின்றார் அன்று போல் இன்றும் கணவன் கை பிடித்து.
சோமசுந்தரமும் மனைவி கையை அழுத்த பற்றி நிற்க, சக்திவேலின் குரல் கேட்டு அனைவரும் வெளியே வந்திருந்தனர்.
கோதாவரி கண்களிலோ தமையனை பார்த்ததும் விழி நீர் வெள்ளம்.
“ஏண்டி இவள இந்த கத்து கத்துனா உன் அப்பனுக்கு ஆட்டு(ஹார்ட்) அட்டாக்கு வராது?” கேட்டார் அம்பிக்காமா மௌனமாய் இனிதுழனியிடம்.
அவளோ முறைக்க, “நான் என்னடி தப்பா கேட்டுடேன். வயசான காலத்துல ஆட்ட வேற தச்சு வச்சிருக்காங்களே இவன் கத்துற கத்துல கிழிச்சிட கூடுமோ என்ற நல்ல எண்ணத்துல தான கேட்டேன். அதுக்கு ஏன் இந்த முறை முறைக்கிறவ” என்றார் அம்பிகாமா உதடை சுழித்து.
சக்திவேல் அவர்களின் முன்வந்து நின்றவர், “கொலைகார பாவிங்களா உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டு வாசப்படி மிதிச்சிருப்பீங்க, உங்கள…” என்றவர் கொதித்துக் ஏழுந்தார்.
பொறுமை இழக்க மைதிலி வார்த்தை தொடங்கும் முன்
“என்ன பண்ணுவீங்க அவங்கள நீங்க…?” என அதே அதிரும் குரலில் கர்ஜித்தவனாய் படியில் இருந்து இறங்கி வந்தான் கை காப்பினை நரம்பு புடைக்க ஏற்றி விட்ட வண்ணம் இன்னுழவன் கூர் விழிகளுடன்.
கீழ இறங்கி வந்தவனோ மூவருக்கும் நடுவில் முன் வந்து நின்றவனாய் சக்திவேலை பார்த்து “சொல்லுங்க என்ன பண்ணிடுவிங்க நீங்க?” கேட்டான் குரலில் கடுமை ஏகத்திற்க்கு விரவியிருக்க.
அவரும் சற்றும் அசராது, “வெட்டி போட்ருவேண்டா. இவ்வளவு நாள் கையில சிக்கல இன்னைக்கு எவ்வளவு தைரியம் இருந்தா ஏன் வீட்டுக்கே வந்து என் முன்னாடியே இப்படி நிப்பாங்க இவங்க” என்றவர் கைகள் பரபரத்தன ஆத்திரத்தில்.
“எங்க வெட்டுங்க பார்ப்போம் என்ன மீறி எப்பிடி உங்க கை அவங்க மேல படுதுன்னு நானும் பாக்குறேன். அன்னைக்கு நீங்க ஆடுன ஆட்டத்துக்கு கேட்க யாரும் இல்லை, அன்னைக்கு மாதிரி இன்னைக்கு இல்ல. அப்புறம் எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கவும் மாட்டேன்” என அர்ச்சித்தவன்,
இந்த வீடு உங்க வீடா இருக்கலாம் அதே நேரம் என்னோட வீட்டுங்கிறதையும் மறக்க வேண்டாம். இங்கு யார் வரணும் யார் வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எந்த உரிமை இல்லை. பேசாம விலகி இருங்க” என்றவன் நீங்க உள்ள வாங்க என சோமசுந்தரத்தையும் மைதிலியும் கை கூப்பி புன்முறுவலுடன் வரவேற்றான் இன்னுழவன்.
சோமசுந்தரமும் மைதிலியுமே சற்று ஆடிப்போய் தான் நின்றிருந்தனர். இன்னுழவன் பேச்சை கண்டும் சக்திவேலை ஆட்டிப்படைக்கும் அவனின் ஆளுமையை கண்டும்.
இன்னுழவன் அழைத்தது கூட தெரியாத சிலையாய் நின்றவர்களை “மாமா… அத்தை… உங்கள தான் உள்ள வாங்க. எவ்வளவு நேரம் வாசல்லையே நிப்பீங்க” என்று அழுத்தமாக அழைத்தவன் குரலிலே தன்நிலை தெளிந்தவர்கள் “ஹான்…” என உள்ளே வந்தனர்.
“தம்பியா…” என சோமசுந்தரத்தை பார்த்து ஓடி வந்தார் கோதாவரி பாச உணர்வில்.
வந்தவர் அவர் கைப்பற்ற “எப்படிடா இருக்க? அக்காவ பாக்கணும்னு உனக்கு தோணவே இல்லையா? நீ நல்லா இருக்கியாமா? இன்னைக்கு தான் உங்களுக்கு இங்க வரணும்னு தோணுச்சா” என விழி நீர் மல்க அவர் பேசிக் கொண்டிருக்க…
சகோதரியின் கண்ணீரை பார்த்தவுடன் மனமது உடைய அவரை கட்டியணைத்து “உன்ன நான் என்னைக்குக்கா மறந்தேன்னு” கூற துடித்த மனமானது அவரை உந்தித்தள்ள அதை கட்டுப்படுத்திவராய்
எச்சிலை கூட்டி விழுங்கி, “நான் என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் மா இந்த ஊர்ல. ஊர் தலைவரையும் அவர் குடும்பத்தையும் முறையா கல்யாணத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக வந்திருக்கேன்மா” என்றார் சோமசுந்தரம் தூக்கி வளர்த்த சகோதரியை மூன்றாவது மனுஷியாய் பாவித்து.
அவரின் ஓட்டா வார்த்தையில் இதயம் வலிக்க அவரின் கைப்பற்றி இருந்த கோதாவரியின் கரங்கள் தானாக விடுவித்தன.
“டேய் சோமு என்னடா பேசுற நீ… ஊர் தலைவர் அது இதுன்னு” என வேகமாக அம்பிகாமா முன் வர…
அவரோ கல்லாக்கியா மனதுடன் இன்னுழவன் புறம் திரும்பியவர், “இந்த ஊர் தலைவரா என்னோட அழைப்ப நீங்க ஏத்துக்கிட்டீங்கன்னா நாங்க கிளம்புவோம் சந்தோசமா. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு” என வெட்டு ஒன்று தொன்று இரண்டாக பேசிக் கொண்டிருந்தார் சோமசுந்தம்.
ஆனால் இவை அனைத்தையும் கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ சக்திவேல் தான்.
இன்னுழவன் சோமசுந்தரத்தின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று அலைபேசியில் அவனுடன் பேசும் பொழுதே யாரிடமோ பேசுவது போல் பேசியவர் அல்லவா!
அவர்களின் கையில் இருந்த தாம்பூலத்தை இன்னுழவனை பார்த்து நீட்ட.. அதைப் பெற்றுக் கொண்டவன், “ஊர் தலைவரா உங்க வீட்டு கல்யாணத்தை என் வீட்டு கல்யாணமா நெனச்சு அதை சிறப்பிச்சி கொடுக்குறதுக்கு எங்க குடும்பத்தோட நாங்க கண்டிப்பா அங்க இருப்போம். நீங்க சந்தோஷமா போயிட்டு வரலாம்” என்றான் அழுத்தமாக வாசலை பார்த்து.
மாமன் அவனுடன் பேச வேண்டியவை ஏராளம் இருந்தாலும் இப்பொழுது பேசுவது முறையாகாது, நெடு வருடங்கள் கழித்து நல்லதொரு காரியதிற்க்காக சொந்த மண்ணை மிதித்துள்ளதால் வந்த காரியம் இனிதுடன் முடிந்த பின்பே பேசிக்கொல்லாம் என முடிவு எடுத்து மௌனம் காத்தான் இன்னுழவன்.
“என்னது கல்யாணமா யார் ஊர்ல வந்து யாருக்கு கல்யாணம் வச்சிருக்க. யாரைக் கேட்டு முதல்ல நீங்க கல்யாணத்தை வச்ச உன் பொண்ணுக்கு. உனக்கே முதல்ல இந்த ஊர்ல இடம் கிடையாது” என அமைதியாய் கொதித்துக் கொண்டிருந்த சக்திவேல் மீண்டும் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தார்.
இன்னுழவனோ தன் கையில் இருந்த தாம்பூலத்தை கலங்கி நின்ற கோதாவரியின் கையில் கொடுத்து அவர் விழி நீரை துடைத்தவன், நான் இருக்கிறேன் என்னும் விதமாய் இமை அசைத்து “பூஜை ரூம்ல வையுங்கம்மா” என சாந்தமாக கூறியவன் திரும்பி சோமசுந்தரம் மைதிலி பார்த்தான்.
“நீங்க போயிட்டு வரலாம், கண்டிப்பா கல்யாணத்துக்கு நாங்க எல்லாரும் வருவோம்.” என்றான் மார்புக்கு இடையில் வணங்கி.
சோமசுந்தரமும் மைதிலியும் சக்திவேலை விழி அசையாது பார்த்தபடி அங்கிருந்து நகர… “ஒரு நிமிஷம்” என நிறுத்தியிருந்தான் அவர்களை இன்னுழவன்.
அவர்களோ திரும்பி பார்க்க, “யார பற்றியும் நீங்க கவலைப்பட வேண்டாம். முக்கியமா பயப்பட வேண்டாம். உங்க பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கும்.” என அழுத்த திருத்தமாக தீர்க்கமாக கூறினான் இன்னுழவன்.
வந்ததில் இருந்து இன்னுழவன் செய்கை தன்னை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கோ அவன் வாய்மொழிதனில் சற்று நம்பிக்கை பிறக்க, தன் சகோதரியிடம் கலங்கிய விழிகளால் மன்னிப்பு யாசித்து சோமசுந்தரம் வெளியே செல்ல அவர் பின் மைதிலியும் வெளியே சென்றார்.
இப்பொழுது இன்னுழவன் பார்வையோ சக்திவேலின் மீது காரமாக படிந்தது.
“அவன் எப்படி இந்த ஊருக்கு வரலாம் அது மட்டும் இல்லாம இந்த ஊர்ல எப்படி கல்யாணத்தை வைக்கலாம்” எற்றார் சக்திவேல் தொண்டை கிழிய.
இன்னுழவன் அவர் முன் வெறப்பாய் நின்றவன், “முதல்ல அவர் இந்த ஊருக்கு வரதுக்கு யார கேட்கணும்? அப்புறம் அவரு பொண்ணு கல்யாணத்தை இந்த ஊர்ல வைக்க கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு?”
“டேய் பேராண்டி அவனுக்கு இந்த ஊர்ல இடமில்லன்னு வேற சொன்னான் டா இந்த வெஸ்ட்பாலோ?” (வேஸ்ட் ஃபெல்லோ )என அப்பத்தா எடுத்துக் கொடுக்க…
“ஹான்… இடமில்லன்னா எப்படி இந்த ஊர் மொத்தத்தையும் நீங்க பட்டா போட்டு எழுதி வாங்கிட்டீங்களா…? கேட்டான் இன்னுழவன் புருவம் இடுக்க சக்திவேலை பார்த்து.
“நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். அவனால தான் என் தங்கச்சி செத்தா… அவனையும் அவன் குடும்பத்தையும் கருவறுக்காம விடமாட்டேன்” என சக்திவேல் பேசி கொண்டே போக…
“என்னங்க…” என கோத்தாவரி பதற
“அப்பாஆஆஆஆ…” என வீடே அதிரும் அளவிற்கு கத்தியிருந்தான் இன்னுழவன் முகமது தனலாய் சிவக்க.
“இப்ப பேச சொல்லு உன் அப்பன… ஹிம் டல்… டல்…” (டெல் டெல்) என அப்பத்தா முணுமுணுத்தார் இனிதுழனியிடம் அருகில் இருந்த ஆப்பிளை எடுத்து கடித்த வண்ணம்.
இன்னுழவன் சத்ததில் சக்திவேல் அதிர்ந்து வாயை மூடி கொள்ள, “அவங்க குடும்பத்து மேல உங்களால ஒரு தூசு பட்டாலும் அப்புறம் நான் இப்பிடி பேசிட்டு இருக்க மாட்டேன். நீங்க சொன்னத உங்களுக்கு செஞ்சுட்டு தான் மறு வேலை பார்ப்பேன். அப்பான்னு கூட பார்க்க மாட்டேன் ஜாக்கிரதை.” என தீர்க்கமாக எச்சரித்தவன்…
“என்னமா நீ இப்பிடியே சிலையாட்டம் தான் நிற்க போறியா? நாளைக்கு உன் தம்பி மக கல்யாணத்துக்கு மாமன் வீட்டு சார்புல என்ன வாங்கணும்னு பார்க்க போறியா…?” என்றான் கோதாவரி புறம் திரும்பி சற்று கோவம் மட்டுப்பட.
“இதோ… இதோ… இப்பவே போறேன்யா…” என்றவர் புடவை முந்தானையில் விழிநீர் துடைத்து உள்ளே செல்ல…
“அப்பத்தா…”
அவன் முன் வந்து நின்றவர், “நான் பார்த்துக்குறேன் பேராண்டி பர்சசிங்க… இந்தா கிளம்பிட்டேன்ல ஜாப்பிங்க்கு…” என்றவரிடம் கட்டு ரூபாய் பணத்தை எடுத்து வந்து நீட்டினான் இன்னுழவன்.
அதை வாங்காதவர், “டேய் பேராண்டி என்கிட்ட காடு (கார்டு) இருக்கு டா. நான் சுவைப்பு (ஸ்வைப்) பண்ணிக்கிறேன்” இத நீயே வச்சுக்கோ என்றார் அம்பிகாமா புன்னகையுடன்.
“சரி பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க. அப்புறம் நகை கடைக்கு போனதும் எனக்கு கால் பண்ணு மறந்துறாத” என்றவன் அமர்ந்திருந்த சக்திவேல் மீது அனல் பார்வையை வீசி சென்றான்.
செங்கோதை மணம் வீசும்…
டியர் ஃப்ரெண்ட்ஸ் ப்ளீஸ் your likes or comment and ratings also 😍
இனிதுழனியிடம் கூறியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை சகிதம் நெற்றியில் சந்தனக்கீற்றுடன் முழங்கை சட்டையை மடக்கி கையில் இருக்கும் காப்பினை மேல் நோக்கி ஏற்றிவிட்ட வண்ணம் மிடுக்கான தோரணையில் கீழ் இறங்கி வந்தான் இன்னுழவன்.
இறங்கி வருபவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர் வீட்டின் முன் கூடத்தில் ஊர் பெரியவர்கள்.
முன் கூடம், நடு கூடம், சுற்றிலும் வாழை, தென்னை, தோட்டம், கீழே பூஜை அறை மற்றும் சமையலை அறையுடன் கூடிய மூன்று அறைகள், மேலே நான்கு அறைகள் என அனைத்து வசதிகளுடன் தேக்கு, பர்மா என கட்டப்பட்ட அழகான அந்தகால மாளிகையே இன்னுழவனின் வீடு.
எள்ளும் கொள்ளுமாய் நடு கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்த சக்திவேலின் பார்வை ஒரு கணம் அவரை கடந்து செல்லும் இன்னுழவன் மீது விழ்ந்து மீண்டு மீண்டும் செய்தித்தாளில் படிந்தன.
ஆனால் சற்றும் அவரை பார்த்து திரும்பாது கைகளைக் மார்புக்கு இடையில் கூப்பியவனாய் புன் சிரிப்புடன் நடுக்கூடத்தை நோக்கி சென்றான் இன்னுழவன்.
இன்னுழவன் தந்தை தான் சக்திவேல். இன்னுழவனுக்கு சக்திவேலுக்கும் கிஞ்சித்தும் ஒத்து போகாது.
இருவரும் எப்பொழுதும் கீரியும் பாம்புமாக தான் முறைத்துக் கொண்டிருப்பர். தந்தை மகனாக பாசமாய் சீராட்டுவார்கள் என்றால் அது கேள்விக்குறியே! இவர்களுக்கு இடையில் பாலமாய் இருப்பது இன்னுழவன் தாய் கோதாவரி தான். அவருக்குமே சக்திவேல் செயல்கள் பிடிக்காது தான். எனினும் கணவன் என்பதால் சகித்து கொள்வார்.
கிருஷ்ணகிரியில் சக்திவேலின் குடும்பம் தான் அவ்வூரின் பெரிய தலக்கட்டு குடும்பம். ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சக்திவேலின் குடும்பத்திற்கு முதல் மரியாதை.
விவசாயம்,ரைஸ் மில்,தோப்பு துறவு என வாழையடி வாழையாக பரம்பரை நிலத்தில் சாகுபடி செய்து வருமானத்தையிற்றி வருகின்றனர். அதில் ஒரு பங்கை ஊருக்காக்கவும் இல்லாதவர்களுக்கும் செய்ய தவறியாதே இல்லை இன்று நாள் முதல்.
சக்திவேலின் அப்பாவின் காலத்திற்கு பின்பு சக்திவேல் தான் ஊரின் பொறுப்பையும் ஊர்மக்கள் பொறுப்பையும் ஏற்றி நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சக்திவேலுக்கு திடீரென்று இதயத்தில் கோளாறு ஏற்பட்டதால் அனைத்து பொறுப்புகளையும் அவரால் மேற்கொள்ள முடியாத பட்சத்தால் ஊர் மக்களாக பொறுப்பை குடும்பத்தின் அடுத்த தலைமுறையான இன்னுழவன் கையில் ஒப்படைத்தனர்.
அவனும் இதுக்காக தான் காத்துக் கொண்டிருந்தான். சக்திவேலோ ஜாதி, மதம், இனம் என பார்க்கும் பிற்போக்குவாதி. ஆனால் இன்னுழவன் அதை எதையும் துளியும் கருத்தில் ஏற்க்காது ஆண், பெண் என்று இரு ஜாதியே… அதுவும் அவர்கள் மனதால் இணைந்தால் ஒரே ஜாதி,மதம் எனக் கொள்கை கொண்டு ஊரை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கின்றான் முற்போக்குவாதியாய்.
சக்திவேல் நாட்டாமையாகவும் ஊர் அறங்காவலராகவும் இருந்த தருவாயில் ஜாதி மதத்திற்கு கொடுத்த அனைத்து முக்கியத்துவத்தைக்கும் தவிடு பொடியாக்கி, நல்வழியில் ஊரையும் ஊர் மக்களையும் செலுத்திக் கொண்டிருக்கின்றான் இன்னுழவன். அதானாலே தனது கொள்கைக்கு எதிராய் நிற்கும் மகனையும், மகனின் செயல் யாவிலும் பிடிக்காது மனம் ஓவ்வாது போனது சக்திவேலுக்கு.
விவசாயத்தின் மீது அலாதி பிரியம் கொண்டவன் இன்னுழவன். படித்ததும் முதுகலை விவசாயம், பார்த்துக் கொண்டிருப்பதும் விவசாயம் தான். விவசாயம் படித்தவனுக்கு மற்ற துறைகள் பற்றி தெரியுமா என்று கேட்டால் அனைத்துமே அத்துபடி தான் அவனுக்கு. நடப்பு சமூகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நேர்த்தியாக மெய்தேர்ந்தவன்.
ஊரார் அனைவரும் வசதியாக அமர்ந்து பேசி செல்ல வெளி கூடத்தில் கதிரைகள் அமைக்கப்பட்டிருக்க, அதில் அமர்ந்திருந்த ஊர் பெரியவர்கள் கோதாவரி கொடுத்த தேனீரை, ராகி புட்டையும் இரசித்து பருகி கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு எதிர் புறத்தில் திண்டில் கால்களை நீட்டி கொட்டாம் பாக்கைய் இடித்துக் கொண்டிருந்தார் அம்பிகாமா.
அம்பிகாமாவின் பார்வை தன் பேரனின் மீது படிந்தது. சக்திவேலின் தாயாரே அம்பிகாமாள். பேரனின் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
வந்தவர்களுக்கு வணக்கத்தை வைத்துவிட்டு அவர்கள் அருந்தி முடிக்கட்டும் என அம்பிகாமாவை நெருங்கியவன் அவர் தோள் அழுத்த பிடித்தவனாய், “என்ன அப்பத்தா அப்படி பாக்குற என்ன?” என்றவனின் புன்சிரிப்பை கண்டு விரல்கள் மடக்கி நெற்றியில் நெட்டி முடித்தவர்…
“என் ராசா அப்படியே உன் தாத்தாவ பார்க்கிற மாதிரியே இருக்குயா. குணத்திலும் சரி நடந்து வர தோரணைலையும் சரி சாட்சாத் அவரே தான்” என்றவர் சில்லாக்கிக்க…
“அது சரி நீ காலம் புல்லா இப்படியே சொல்லிட்டு இரு. உள்ள இருக்குற உன்ற மகனுக்கு எரிகிற நெருப்புல எல்லாம் பொசுங்க போகுது” என்றான் நக்கலாய் இன்னுழவன் அருகில் அமர்ந்து பாக்கை இடித்தவனாய். அந்நேரம் அவர்களுடன் வந்து சேர்ந்தான் இன்னுழவன் நண்பன் அகரன்.
(அகரன் – முதன்மையானவன்)
“வாடா” என அவங்களுடன் அவனும் சேர்ந்து கொள்ள, “அவன் கிடைக்குறான் ***யிராண்டி…” என்றவரிடம், சத்தமாக சிரித்தவன், “சரி எதுக்கு இப்படி ஒத்தைல இருக்கிற. உள்ள போய் டிவி பார்க்க வேண்டியது தானே உன்ற மகன் கூட சேர்ந்து” வம்புழுத்தான் இன்னுழவன் அசட்டு நகையுடன்.
அம்பிகாமாவோ முகத்தை அஷ்ட கோலமாக சுழித்தவர், “ஐய்ய… அவன் கூட உக்காந்து எவன் பாக்க. நான் என்ற லோப்பு டப்லையே (லேப்டாப்) சூரிய நமஸ்காரம் எல்லாத்தையும் பாத்துட்டேன். இப்போ இந்த சொன்னு மிக்சில, ஆத்தா அது சன் மியூசிக்” அகரன் திருத்த…
“ஹான் அதாம்ல அந்த கழுதைல தான் காலை நேர புதுப்பாட்டு போடுவான். நல்லா ஜிலுக்கு ஜிலுக்குன்னு இருக்கும். அத பார்க்கலாம்னு பார்த்தா அதுக்குள்ள கழுத அது சார்சி இல்லாமல் போயிடுச்சு.
அதான் சார்சில குத்தி போட்டு வந்து இருக்கேன். இன்னுழவனை பார்த்தவர், நீ காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை முடிச்சு பிள்ளைய பெத்து போட்டா நாங்க ரெண்டு பேரும் கிளுகிளுனு பாட்டு போட்டு டான்ஸ் ஆடுவோம். நீ என்னடா வெள்ளையுஞ் ஜொல்லையுமா சுத்துறியே தவிர ஒண்ணுத்துக்கும் தேற மாட்டேங்குற” என்றவர் அலுத்து கொள்ள…
இன்னுழவனோ பாக்கை வெத்தலையில் வைத்து மடித்தவன், “நீ தான அப்பத்தா வாய்க்கு வாய் நான் தாத்தா மாதிரின்னு சொல்லுறவ. அப்ப நான் அப்படி தானே இருப்பேன்”
“அட கோமட்டி பயலே, உன் தாத்தாவ பத்தி உனக்கு என்ன தெரியும். அவர் என்ன கண்ணாலம் பண்றதுக்கு முன்னாடி ஊர்ல ஒரு பொண்ண விட மாட்டாரு. எல்லாவளும் அவர் பின்னாடி வாலாட்டோம் திரிவாளுவ.
அப்புறம் என்ன கட்டினதுக்கு அப்புறம் அந்த மனுஷன் தலையில நாலு போடு போட்டு அவரு சண்டியர்த்தனத்த அடைக்கி என்ற பக்கத்துல உட்கார வச்சேன். அப்புறம் என் மேல மயங்கினவர் தான், முன்னாடி மேலோகத்து ரதியே வந்து நின்னாலும் திரும்ப மாட்டார்ன்னா பார்த்துகேயேன்.” என்றவறவாரு கணவரை சில்லாகித்தார் முகம் மின்ன அம்பிகாமா.
“ஆத்தா உண்மையை சொல்லு தாத்தாக்கு பாயசம் போட்டுட்டுவேன்னு சொல்லி தான உன் பின்னாடி சுத்த வச்ச” அகரன் வினவி கிளுக்க…
“அதெல்லாம் புருஷனை முந்தானைல முடிஞ்சு, பொட்டி பாம்பா அடைக்கி வைக்கிற சூட்சுமம்லே. உனக்கு என்னாலே தெரியும் அத பத்தி” என்றார் அம்பிகாமா அகரன் தலையில் கொட்டியவராய்.
“ஓ அப்போ அந்த சூச்சமத்த கொஞ்சம் எனக்கும் சொல்லித் தர்றது ” என்றான் இன்னுழவன் வெற்றிலையை அவரிடம் நீட்டியவனாய் புருவம் தூக்க.
அதை வாங்கி பல் இடுக்கில் அதக்கியவர், “ஹிம் அத நான் உன்ற பொண்டாட்டியா வருவாள அவகிட்ட சொல்லிக்கிறேன் போடா அங்கிட்டு” என அவர் தோள் தட்டி உள்ளே நகர எத்தனித்தவரிடம்…
“அவகிட்ட சொன்னாலும் அவ என்கிட்ட தான் வரணும் நியாபகம் வச்சிக்கோ அப்பத்தா” என்றான் இன்னுழவன்.
“பார்ப்போம்ல அவ உங்கிட்ட வரலா நீ அவ பின்னாடி சுத்துறீயான்னு” என்றவர் உள்ளே செல்ல…
இன்னுழவனின் அவ்வளவு நேரம் உதட்டில் இருந்த சிரிப்பும் முகத்தில் இருந்த இன்முகபாவனையின் பின்னோக்கி செல்ல, கூர் விழிகளுடன் முகம் சற்று கட்டமாய் மீண்டும் கைகாப்பை இழுத்து விட்டவன் அனைவரின் முன் சென்று அமர்ந்தான் தலைமையாய். அவனின் பின் நின்று கொண்டான் அகரன்.
ஊர்க்காரங்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் சில நிமிடம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தவன் இறுதியாய் வணக்கம் வைத்து எழும்ப, அனைவரும் புன்னகையுடன் விடைபெற, “வாடா சாப்பிட போலாம்” என அகரன் தோளில் கையை போட்டான் இன்னுழவன்.
“இல்லடா… அப்பா…” என சக்திவேலை குறித்தவன் தயங்கி வாசலிலேயே நிற்க, “ஏன்டா அவர் சாப்பிட்டா தான் நீ சாப்பிடுவியா?” என்றான் நக்கலாய்.
“அப்படி இல்லடா நான் உள்ள வந்தா அப்பா டென்ஷன் ஆவாரு. அதான் நான் இங்கேயே உக்காந்து இருக்கேன் நீ போய் சாப்பிட்டு வா நம்ம வெளில கிளம்பலாம்” அகரன் சாட…
இன்னுழவனோ, “அடேய் நீ என்ன புதுசாவா வர, தினமும் உன்னோட ரோதனையா போச்சுடா ஒழுங்கு மரியாதையா வா” என அகரன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று டைனிங் டேபிளில் அமர வைத்து உடன் அமர்ந்து கொண்டான்.
அகரன் உள்ளே வரும்பொழுதே டிவி பார்த்துக் கொண்டிருந்த சக்திவேல் கையிலிருந்த ரிமோட்டை தூக்கி ஒரே போடாய் போட, அது இரண்டாய் பிளக்க கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.
காரணம் அகரன் கீழ் ஜாதியாம்.
முதல் தடவை அகரனை இன்னுழவன் வீட்டிற்குள் அழைத்து வர சாமி ஆடினார் சக்திவேல் அனைவரிடமும்.
“தெருவுல நின்னு பிச்சை போட வேண்டியவன எல்லாம் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வர. கொஞ்சம் கூட வரைமுறை இல்லையா இன்னுழவா உன்கிட்ட?”
இன்னுழவன் தாடை இறுக்க அவரை எதிர் கொண்டவன், “அந்த தெருவுல நின்னு பிச்சை போடுறவன் இல்லனா நீங்க இப்படி வெள்ளையும் ஜொல்லையுமா சுத்த முடியுமா?” என காரப்பார்வை அவர் மீது வீசியவன்,
“சொல்லுங்க அவனோட அப்பாவும் அம்மாவும் வெளுக்கலைன்னா நீங்க இப்படி வெள்ளை சட்டை போடுவிங்களா. இல்ல அவங்க வயல்ல இறங்கி வேலை பார்க்கலனா நீங்க மூணு வேலை ருசியா சாப்பிடுவீங்களா?
எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் அவன் உழைப்பான்னா அப்பிடி உழைப்பவனுக்கு என் வீட்டுக்குள்ள வரையும் உரிமை இருக்கு தகுதியும் இருக்கு.
அப்புறம் எல்லாத்துக்கும் மேல அவன் என் நண்பன் அதைவிட அவனுக்கு பெரிய தகுதி எதுவுமே தேவையில்லை. அந்த உரிமையை அவனுக்கு போதுமானது. இன்னொரு தடவ பிச்ச, அது இதுன்னு சொன்னிங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என சக்திவேல் ஆடிய சாமியை வேப்பிலை அடித்தே அடக்கி வைத்தான் இன்னுழவன்.
கோதாவரியும் இனிதுழனியும் பரிமாற, “சும்மா தினமும் ரிமோட்டை உடைச்சா மட்டும் போதாது வாங்கி வைக்கணும்.” என்றவாரு உள்ளே செல்லும் சக்திவேலுக்கு கேட்குமாரு சாப்பிட்ட வண்ணம் இன்னுழவன் சாட…
அமர்ந்திருந்த அகரன் சட்டென்று எழுந்து தனது கால் பாக்கெட்டுக்குள் இருந்த ரிமோட்டை உருவி எடுத்து நீட்டியிருந்தான் இனிதுழனியிடம்.
சிரித்துக் கொண்டே அதை பார்த்து இன்னுழவன் சாப்பிட முறைத்து வைத்தாள் இனிதுழனி அவனை. இது இன்று நடப்பது அல்ல வருடமாக நடந்து கொண்டு தான் இருப்பது. சக்திவேல் உடைப்பதும் அகரன் வாங்கி வைப்பதும் வாடிக்கையே!
ரிமோட்டை வாங்கிக் கொண்டவள் இன்னுழவனிடம், “அண்ணா முதல்ல இவர சாத்துன்னா… இவரு தினமும் வாங்கிட்டு வாங்கிட்டு வர தான் அப்பா உடைக்கிறாரு. இல்லனா அவரு என்ன பண்ணுவாரு” என அகரனை காண்பத்தவள் கூற…
(இனிதுழனி சைகையில தான் ஃப்ரெண்ட்ஸ் பேசுவா. அத நான் டைலாக் ஆ கொடுக்குறேன் ஓகே)
“முதல்ல உன்னைய தான் வெளுக்கணும், என்ன சட்னி வச்சிருக்க, டேஸ்ட்டாவே இல்ல இன்னும் நாலு கரண்டி இதுல ஊத்து” என்றவனாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அகரன்.
“ஊத்துறேன் ஊத்துறேன் முதல்ல உன் தலையில ஊத்துறேன்” என சட்னியை அகரன் தலை அருகினில் கொண்டு சென்றவள், தலையில் உத்தாது அவன் தட்டில் ஊற்றிவிட்டு மேலும் இரண்டு இட்லியை அதில் எடுத்து வைத்தவள் “ஒழுங்கா தின்னு” என சைகையின் மூலம் சொல்லிவிட்டு” மண்டையில் நங்கென்று ஒரு கொட்டையும் வைத்துவிட்டாள்.
“அவனோ ஆ… குடை மிளகா” என்றவாரு அகரன் கத்த, அவன் வாயில் முழு இட்லியை திணித்திருந்தாள் இனிதுழனி.
அவ்விருவர் செல்ல சண்டையையும் பார்த்தும் பார்க்காதது போல் மன நிறைவாய் சாப்பிட்டு கொண்டிருந்தான் இன்னுழவன். இனிதுழனி இன்னுழவனுக்கு மட்டும் செல்ல தங்கை கிடையாது அகரனுக்கும் தான். ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம்.
வேகமாக ஒடிச் சென்று கை கழுவி வந்தவள், “ஈவினிங் ஃபங்ஷன் இருக்கு மறக்காம வந்துருங்கன்னா ரெண்டு பேரும்.” எனக் கூறி டாடா காண்பித்து கல்லூரிக்கு கிளம்பினாள் இனிதுழனி.
“இனி இரு நான் ட்ராப் பண்றேன்” என பாதி சாப்பாட்டில் அகரன் எழும்ப, “டேய் நீ இரு நான் விட்டுட்டு வரேன்” என சாப்பிட்டு எழுந்தான் இன்னுழவன். “டேய் நான் சாப்பிட்டேன் வா போலாம்” என எழுந்துக் கொண்டான் அகரனும்.
செங்கோதை வருவாள்…
டியர் ஃப்ரெண்ட்ஸ் comments 🤗🤗.
சூரியனின் செம்மை நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருந்த அந்த அழகான இளம் காலை வேளையில் தன்னில்…
சிலு சிலுவென்று எதிர்வரும் இயற்கை தென்றல் காற்று தன் மேனியில் தழுவி செல்ல, நெற்றியிலோ முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அக்காலை நேர ஒளியில் பிரகாசிக்க…
பூமியின் இதமான ஈர்ப்புத் தன்மையை பாத சுவட்டின் வழியே யாக்கை தன்னில் உள்வாங்கு விதமாக வெறும் காலில் தனது காலை நேர ஓட்ட பயிற்சியில் எதிரில் வருபவர்களுக்கு இன்முகத்துடன் சிறு கீற்று புன்னகை சிந்தி தலை அசைப்புடன் தன் வணக்கத்தை வைத்து ஓடிக்கொண்டிருந்தான் , சந்தன திராவிட நிறம் ஒத்த, சீரான உடற்க்கோப்புடன் ஆறடி ஆண்மகனாய் நம் கதையின் நாயகன் இன்னுழவன்.
(இன்னுழவன் – இனிமையான உழவன்.)
ஓடிச் சென்றவன் தன் ஓட்டத்திற்கு தடை போட்டு பசுமையாய் தெரியும் நெற்கதிர்களுக்கு இடையில் தன் சிறு ஒளிக் கால்களால் வானில் மேல் நோக்கி நடந்து கொண்டிருக்கும் கதிரவனை பார்த்தவன்,
தனது கால் சட்டைக்குள் இருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அதனுடன் காதொலிப்பானை (head phone) இணைத்தவன் செவி மடலில் எதிர் புறத்திலிருந்து கேட்ட இனிமையான குரலில் இதழ்கள் தானாகப் பிரிந்தன… உள்ளிருக்கும் பற்கள் தெரியும் வண்ணம் மௌனமாய்.
“ஹாய் ஹலோ ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ். உங்க எல்லாருக்கும் என் இனிமையான சந்தோஷமான காலை வணக்கங்கள்.” ரேடியோவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க,
“இதோ உங்கள் விருப்பமான மனம் கவர்ந்த காலை தேநீர் நேரத் தென்றல் நிகழ்ச்சியில் உங்களுடன் இணைவது நான் உங்கள் செல்லம் மேக விருஷ்டி” என தன் காந்த குரல் வளத்தால் அனைவரையும் ஒலிபெறுக்கி வாயிலாக கட்டி ஈர்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி மேக விருஷ்டி.
மேக- மேகம், விருஷ்டி – மழை.
பத்தி இலக்க அலைபேசி எங்களைக் கூறியவள் “அப்புறம் இன்னும் என்ன எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க. சீக்கிரமா உங்களுடைய அழைப்பு கொடுத்து உங்களுடைய முதல் காலை வணக்கத்தை எனக்கு தெரிவிங்க.
இன்னைக்கு யார் அந்த முதல் மற்றும் கடைசி அதிர்ஷ்டசாலின்னு பார்க்கலாம்” என்றவள் சொல்லி முடிக்க… அவள் எண்களை சொல்லி கொண்டிருக்கும் தருவாயிலேயே
இன்னுழவனும் தன் அலைபேசி வாயிலாக அழைத்திருந்தான்.
சரியாக தனது ரேடியோ அலையின் காற்றின் அலை கற்றைகள் வாயிலாக இன்னுழவனின் அழைப்பை இணைத்திருந்தாள் மேக விருஷ்டி.
இது இன்று நடக்கும் எதார்த்தமல்ல! தினமும் நடக்கும் வாடிக்கையே. பல பேர் முயற்சிக்கும் இந்த நேரடியலை நிகழ்ச்சியில் தவறாது தன் முதல் அழைப்பை பதித்துக் கொண்டிருக்கின்றான் இன்னுழவன்.
ஒவ்வொரு நாளும் முதலில் மேக விருஷ்டியின் குரலும் அதில் அடையும் இதமும் இன்னுழவன் மனதையும் தேகத்தையும் புத்துணர்ச்சிக்கும் உத்வேகத்திற்கும் அழைத்து செல்கின்றது மனதளவில்.
சொல்லப்போனால் அவள் குரலில் போதையையும் கண்டான் இன்னுழவன். அவள் குரலில் மட்டுமா…? இல்லை அவளிளுமா என்ற கேள்விக்கு பதில் அவனிடமே!
“ஹாய் ஹலோ வணக்கம். லைன்ல இருக்கும் அந்த காலை நேர அதிர்ஷ்டசாலி யாரு?” மேக விருஷ்டி குரல் எழுப்ப…
“இனிய காலை வணக்கம் ரெயினி ஏஞ்சல் மேடம்” என எப்போதும் போல் தன் முதற்கண் வணக்கத்தை வைத்தான் இன்னுழவன் இனிமையாய்.
அவன் குரலில் அதிர்ந்தவள், “ஓ காட்… இன்னுழவன் சார் இன்னைக்கும் நீங்களா?” என்றாள் மேக விருஷ்டி ஆச்சரியம் குறையாமல்.
“எஸ் ரெயினி ஏஞ்சல் மேம் நானே தான்” என முத்துப்பல் தெரிய சிரித்தான் இன்னுழவன் நெற்றி வருடியவனாய்.
“இத நான் ஆச்சரியமாக சொல்லையா… அதிசயம் சொல்லலையா… இல்லன்னா இதுல ஏதும் உள்குத்தா எப்படி சொல்லனு எனக்கு தெரியல. எல்லா நாளும் உங்களோட இந்த முதல் அழைப்பு மட்டும்தான் எனக்கு வந்துட்டு இருக்கு, நான் ஷோ ஆரம்பிச்சதுல இருந்து. உங்களோட குரல தான் எல்லா நாளும் முதல்ல கேட்குறேன்.
ஆனா, பாருங்க இதோ உங்களால முயற்சி பண்ற மத்த எல்லாருமே ரொம்ப பீல் பண்ணுவாங்க இல்ல லைன் கிடைக்கலன்னு” என்றவளின் குரலில் சற்று தளர்வு மேலோங்கியிருந்தது.
அதை உணர்ந்தவன், “அப்போ என் ரெயினி ஏஞ்சல்” என்றவனின் ஒருமை அழைப்பை அவள் கவனித்தாலும் கவனிக்காதது போல் இருக்க, “அப்போ என்ன போல தினமும் உங்க குரலையும், பேச்சையும் கேட்ட பிறகு தான் என்னோட நாள நான் ஆரம்பிக்கிற மாதிரி நீங்களும் என்னோட குரல கேட்டு ஆரம்பிக்கிறீயா ரெயினி ஏஞ்சல்”
அவளோ, “ஐயோ… அது” பேச வருவதற்கு முன்…
கள்ள புன்னகை உதிர்த்தவனாய், “நான் என்ன பண்றது அழுத்த குரலில் என் ரெயினி ஏஞ்சல். நானும் எல்லாரும் போல தான் போன் ஆன் பண்ணி உங்களுக்கு போன் பண்றேன். நீங்க அத்தனை பேர் க்காலையும் விட்டு கரெக்ட்டா என்னோட க்கால் தான் அட்டென்ட் பண்றீங்க. இதுல என்கிட்ட எந்த உள் குத்தும் இல்ல ஏஞ்சல் மேடம். எல்லாம் அந்த கடவுளோட ப்ளனோ என்னவோ” என்றவன் நகைக்க…
“என்கிட்ட எந்த உள்குத்தும் இல்ல சார். கடவுள் எதுக்கு பிளான் போடணும் தினமும் நம்ம பேச?” என்றவள் வினவ…
“அத நீங்க கடவுள் கிட்ட தான் கேட்கணும் ரெயினி ஏஞ்சல் மேடம்” என்றவன் பதில் சாட…
“ஓ… அந்த கடவுள் மட்டும் கிடைச்சாரு உங்களுக்கும் எனக்கும்….”
“உங்களுக்கும் எனக்கு…” இடை புகுந்தவன் வார்த்தை இழுக்க,
அப்பொழுது தான் பேசும் செயல் சூழல் புரிந்தவள் அதை அப்படியே நிலுவையில் விட்டுவிட்டு “ஏனிவே உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா. சுதாரிச்சிட்டா அவன் இதழுக்குள் முணு முணுக்க, சரி உங்களுக்கு இன்னைக்கு என்ன பாட்டு வேணும் இன்னுழவன் சார். பாட்டோட பெயர சொல்றீங்களா? இல்ல வழக்கம் போல பாடிய காட்டுறீங்களா?” என்றாள் ஆர்வமாய்.
அவன் தினமும் கேட்கும் பாடலுக்கு அவளோ அவனறியா அடிமையவள். காரணம் அவன் கேட்கும் பாடலும் அவளுக்கென்றே பாடி வடிவமைத்து வழங்கபட்டது போல் இருக்கும். அவளும் தனக்கென தான் என உள்ளுக்குள் போலியாய் யூகித்துக் கொண்டிருக்கிறாள்.
இன்னுழவன் இது நாள் வரை கேட்கும், கேட்ட பாடல்கள் அத்துணையும் அவளுக்காக மட்டுமே. இது போலி இல்லை நிதர்சனம் என்று அறிவாளா! இல்லை அறிய வைப்பானா?
“என் குரல்ல பாட்டு கேக்க அவ்வளவு ஆசையா?” நக்கலாய் விழிகள் மின்ன இன்னுழவன்.
“ஹிம்… ஆசைத்தான்…” என்றவள் சலித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் இன்பித்துக் கொள்ள தான் செய்தாள்.
“பார்ரா என் குரல்ல பாட்டு கேக்க இவ்வளவு ஆர்வம் வச்சிருக்கீங்க. வாய் திறந்து ஆசைதான்னு வேற கேக்குறீங்க.” என்றவன் இரு பொருள் அர்த்தம் கொண்டு வசை பாட…
“ஐயோ நான் அப்படி சொல்லல…” என்றவள் வேகமாய் இடை மறிக்க,
“எப்படி சொன்னாலும் உங்க வாய் நிறைய ஆசைன்னு வந்துருச்சு. அதனால உங்க ஆசைய நான் நிறைவேற்றாம விட்டா எப்படி?” என்றவன் துள்ளளாய் நகைக்க.
“ஹலோ ஹலோ சார் இங்க நான் ஷோ பண்றேனா? நீங்க ஷோ பண்றீங்களா? ஏன்னா நான் தான் சார் இந்த டயலாக் எல்லாம் பேசணும்” என்றவள் சற்று சினம் கொண்டாள் செல்லமாய்.
மூக்கு நுனில கோவம் சட்டுன்னு வந்துரும் என அவள் கேட்கா கூறி தலை சாய்த்து பிடரி வருடியவன், “இருக்கட்டும் ஏஞ்சல்”
“ஏஞ்சல் மேடம் அல்லனா மேக விருஷ்டி மேடம்” அவள் திருத்த,
இதழுக்குள் வசீகரமாய் புன்னகைத்தவன், “ஓகே… ஓகே… நீ கேட்குறது வேற, நான் கேட்குறது வேறையா?” அதாவது நீ வேறு நான் வேறா என பொருள் பட அவன் பேச… சில நொடி கழித்தே அதன் அர்த்தம் உணர்ந்தவள்
“வாட்… ஹெலோ மிஸ்டர் இன்னுழவன்” அவள் ஏகத்திற்க்கும் ஏகிற…
இதழ் பிரிய மௌனப் புன்னைகையுடன் சுதாரித்து கொண்டவன், “நீ மட்டும் ம்… என்றால்…
உடலோடு உடல் மாற்றம் செய்வேனே…
நீ மட்டும் போ என்றால்…
அப்போதே உயிர் விட்டு செல்வேனே…
அடி பருவ பெண்ணே நீயும்…
ஒரு பங்கு சந்தை போலே…
சில ஏற்ற இறக்கங்கள்…
அட உந்தன் மேனி மேலே…
ஏதோ ஏதோ வலி
எந்தன் ஐம்புலன்களில்
ஏன்…
மழை மழை…
என் உலகத்தில் வருகின்ற…
முதல் மழை… நீ முதல் மழை…
அலை அலை…
என் இதயத்தில் அடிக்கின்ற…
முதல் அலை… நீ முதல் அலை…
என தன் கேட்க இருந்த பாடலை அவள் கேட்டு மயங்கும் குரலில் பாடி அழைப்பை துண்டித்து இருந்தான் இன்னுழவன் வழக்கம் போல்.
மேக விருஷ்டியும் இன்னுழவன் அழைப்பு துண்டிக்கப்பட்டதை திரையில் பார்த்தவள், “ஓகே ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ் இன்னைக்கும் இன்னுழவன் சார் உங்களுக்கு முன்னாடி முந்திகிட்டாரு… முந்திரி கொட்டை” என பல்லிட்டுக்கில் அவனை வாட்டி வதைத்தவள்,
தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க. கண்டிப்பா உங்களோட அழைப்பும் ஒருநாள் ஏற்கப்படும். அப்போ நீங்களும் என்னோட பேசி உங்க மனம் கவர்ந்த பாடலை கேட்டு சந்தோசபடுவீங்க. ஆல் தே பெஸ்ட்.
இப்போ இன்னுழவன் சார் ஆசையோடு பாடிய அந்த அழகான பாடல் உங்களுக்காக. சோ ஸ்டேட் டியூன் தேநீர் நேரத் தென்றலில் நான் உங்கள் செல்லம் மேக விருஷ்டி”
பாடலை ஒலிக்க விட்டு செவிமடலில் இருந்து ஒலிவாங்கியை (head microphone) கழற்றி கழுத்தில் போட்டவள், “யாருடா இவன்” என பொறுமிக் கொண்டாலும் அவன் குரல்வள இசையில் மயக்கம் கொள்ளத்தான் செய்தாள் பாவையவள் அனுதினமும்.
செவியோலிப்பானில் அவள் ஒலிப்பித்த இசையையும் அவளையும் மனதில் ஓட விட்டவன், தனது ஓட்ட பயிற்சி மீண்டும் தொடர்ந்தான் வீட்டை நோக்கி.
சரியாக பாடல் வரிகள் முற்றுப்பெற பெருமூச்சுடன் வீட்டை அடைந்திருந்தான் இன்னுழவன்.
உள்ளே வந்தவன் விழிகள் அவன் தாயை கோதாவரியை தேட, அவரோ சப்தமில்லா முணுமுணுப்புடன் பூஜை அறையில் ஆழ்ந்த பிரார்த்தனையில் இருக்க, அதைக் கண்டு புன்முறுவலுடன் தாவி குதித்து படியேறி சென்று தன் அறைக்குள் அடைந்து கொண்டான்.
குளியலறைக்குள் புகுந்து தன் காலை நேர கடமைகளை செய்து முடித்தவன் வெளியே வர கதவு தட்டப்பட்டது.
அதன் ஓசையில் பிடரி முடி சொட்டிய நீர்தன்னை தோளில் கிடக்கும் பூத்துவாலை கொண்டு துடைத்தவனாய் கதவை திறக்க, வாசலில் பாவாடை தாவணி சகிதம் நிறைமதியாய் பொண் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் கையில் காபி கப்புடன் இனிதுழனி
இனிதுழனி – இன்னிசை போன்ற குரல் கொண்டவள். இன்னுழவனின் செல்ல தமக்கை.
அதே புன்சிரிப்பு கிஞ்சித்தும் தாளமல் அவளிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டவனிடம், இதழ்கள் பிரியா கைகள் அசைத்து அவன் விழி பார்த்தவள் சைகையில் அவள் சில விஷயங்களை கூற…
அதன் பொருள் உணர்ந்தவன், “சரி நீ கீழ போ நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன். அம்மாட்ட சொல்லி அவங்களுக்கு காபி கொடுக்க சொல்லு” என்றவன்,
“உனக்கு இன்னைக்கு காலேஜ் கல்ச்சுரல்ஸ் இருக்குல்ல” ஆமோதிப்பாய் அவள் தலையசைக்க,
“நீயும் பார்ட்டிஸ்ஃபேட் பண்றது தான எத்தனை மணிக்கு?” என்ற அவனிடம்,
தன் விரல்களால் நிகழ்ச்சியின் நேரத்தை அவள் குறிப்பிட்டுச் சொல்ல, “ஓகேடா கண்டிப்பா அண்ணன் அந்த டைம்க்கு அங்க இருப்பேன் ஒகேவா” என்றவனுக்கு…
விழிகள் மின்ன முத்தத்தை காற்றில் பறக்க விட்டாள்.
தலை வருடி அவன் அறைக்குள் செல்ல, அவளும் கீழே இறங்கினாள் நிலம் தழுவிய பாவாடையை கையில் ஏந்திய வண்ணம் புள்ளி மானாய்.
பெயரில் இனிய குரல் என்ற அர்த்தத்தை பெற்றவளுக்கு நிதர்சனத்தில் அக்குரல் வளத்தை சூறையாடி இருந்தார் கடவுள்.
செங்கோதை மணம் வீசும்…
டியர் ஃப்ரெண்ட்ஸ் story படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.
I’m waiting for Golden comments and like Friend’s 🤗😍😍.
Older Posts