போகம் – 11
பூக்களெல்லாம் ஆனந்தமாய் சிரித்து மகிழ்ந்து பூத்துக் குலுங்க தொடங்கி மக்களின் அகத்தை குளிர்விக்கும் துகினம் பொழியும் வைகுறு விடியல் பொழுது…!
தன்னவளின் துயில் அழகை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்த வண்ணமே உறங்கிய ருத்ரன் எப்போதும் போல அதிகாலையிலேயே எழுந்துவிட்டான்.
உடற்பயிற்சியும் கொம்பனுடனான விளையாட்டும் விஜயனுடனான சிறிய நடைப் பயணமும்…
தாத்தாவுடன் காலையில் வயலின் நடக்கும் வேலைகளின் மேற்பார்வைகளுடான சில இத்யாதிகளும்தான் அவனுக்கு அன்றாட உணவு போல…
இவைகளை எல்லாம் செய்தாலே அவனுக்கு தனி த்ருப்தி அளிக்கும்.
இன்று விழி திறந்ததும் தன்னவள் கிள்ளையாக சுருண்டு கொண்டு தூங்குவதைக் கண்டு புன்னகையுடன் அவள் தலையை தடவி விட்டவன்,
“இனி எனக்கு எல்லா நாளும் இந்த முகத்தை பார்த்துதான்டி விடியனும் முத்துமயிலு…”, என்று பிறைநுதலில் இதழ் அச்சாரம் பதித்துவிட்டு அவன் எழுந்து நகர்ந்தவுடன் உறக்கத்தினூடே தானாக ருத்ரன் கையை பிடித்துக் கொண்டாள் ரகசியா.
முகத்தில் தவழ்ந்த புன்னகை ருத்ரனுக்கு மேலும் விரிய,
“எந்திரிச்சு இப்படி கையை பிடிச்சிருக்கேனு பார்த்தா…
காலைலவே காளி ஆட்டம் ஆடிடுவா…
விடுடி என் அழகிஇஇ… இல்ல இல்ல பேரழகுப் பாப்பா…!”, என்றவன் கையை மனமே இன்றி மென்மையாக பிரித்து எடுத்தவன்…
தன் சிறிய அலமாரியை திறந்து தனக்கான அன்றைய உடைகளை எடுத்து மேசை மீது வைத்துவிட்டு வழமை போலவே டவலை மட்டும் எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான்.
பாத்ரூம் சென்று குளித்துவிட்டு டவலுடன் அறைக்கு வந்தவன் அங்கே சுவரோரம் தேக்கு மரத்தால் ஆன உடைமாற்றும் தடுப்பு இருக்க அங்கே சென்று தனக்கான இத்யாதிகளை போட்டுக் கொண்டு வேஷ்டி மட்டும் அணிந்து மேல் சட்டை இல்லாமல் அதனைத் தொட்டு சரிபார்த்த படியே வெளியே வந்தான்.
ரகசியாவிற்கு எப்போதும் காலையிலேயே எழுந்து யோகாசனம் செய்யும் பழக்கம் உண்டு. அதனால் எப்போதும் அதிகாலையிலே தன் தோழனான சூரியனுடன் எழுந்துவிடுவாள்.
ரகசியாவின் விழிகளுக்கு சூரியன் உதிக்க தொடங்கிய அந்த சிறிய சிவப்பு ஒளியே போதுமாய் இருக்க…
கதிர்கரங்கள் தொடும் முன்பே எழுந்து கொண்டவளுக்கு ருத்ரன் அரைசட்டை காட்சி அப்படியே உல்டாவாக அவிழ்பது போல தெரிந்தது.
உடனே தொண்டையில் மைக்கை முழுங்கிவிட்டதைப் போல்,”ஆஆஆஆஆஆ… நோஓஓ…
ம்ம்ம்…மம்மிஇஇஇ…
பாட்டிஇஇஇஇ…தாத்தாஆஆ…”, என கத்திவிட்டாள்.
அந்த கடோத்கஜ புஜங்களையும் எட்டு அடுக்கு மாடி வீடு போன்று அமைந்திருந்த அவன் எட்டுப் பேக் படிக்கட்டுகளையும் பார்த்தவளுக்கு பயம்தான்…
இதில் அவன் வேஷ்டியில் கை வைத்திருந்ததால் வேறு பக்கென்று ஆகிவிட பாவம் அலறிவிட்டது பெண்மான்…!
(இதான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்றது போலங்க மக்கள்ஸ்…!)
ருத்ரன் கீழே பார்த்த வண்ணம் கழுத்தை தேய்த்துக் கொண்டு விழியை மட்டும் அவளை நோக்கி இருக்க,
“இந்தா ஆரம்பிச்சாட்டாள்ள காலைலயே ரவுஸு பண்ண…”, என்று முணுமுணுத்தவனுக்கு புன்னகைதான் வந்தது.
“காலை வணக்கோம்டி பொண்டாட்டிஇஇஇ…
இப்ப எதுக்குடி இப்படி கத்துற…??
எப்ப பாரு இதே வேலையா போயிறுச்சுடி உனக்கு…
மைக் செட் மங்கம்மா மாதிரி கூவிகிட்டே இருக்க …!”,என்று இடுப்பில் கைவைத்து கொண்டு அவளைப் பார்த்த வண்ணம் கிண்டலடித்தான் கண்ணடித்து.
அப்போதும் அவள் அதை கேட்காமல்,
“ஹே மேன் வெளிய போஓஓஓ…
பாட்டிஇஇஇ…தாத்தாஆஆ…”, என கட்டிலை விட்டு எழுந்து நின்றுக் கொண்டு மீண்டும் கதவை காட்டியபடி கத்தினாள்.
“அடியே என்ற மைஸுர் தக்காளி …
பாருடி ஒரு நாள் ‘புருஷா போகதாடானு’ இந்த குருவிகுட்டி வாயால சொல்ல வைக்கல நான் சக்ரவர்த்தி பேரன் இல்லடி…
இப்ப என்னடி நடந்துச்சு எதுவும் செய்யாமலே ஏன் கத்துன அதை சொல்லுஉஉடி மொத…”, என்றவாறு மெரூன் வண்ணச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டான் ருத்ரன்.
“நோஓஓ…” , என்று கத்த தொடங்கியவள் அவன் சட்டையைப் போட்டதும், “ஒஒ…ஒ…ஒ” என காற்று போன பலூனாக வாய்ஸ் சவுண்டின் அலைவெண்(ஃப்ரீக்வெண்ஸி) படிபடியாக குறைந்து போயவிட்டது மேடமுக்கு…
பின் உடனே எதுவுமே நடக்காதது போல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு இடுப்பில் கை வைத்த வண்ணம் கெத்தாக,
“ஹான்…அது ஒன்னுமில்லயே நத்..திங்…
நீ இப்படி மலைம…ம்ம்… ஹர்னால்ட் மாதிரி நின்னா…
அதான் நான் பூதம்னு நினைச்சிட்டேன் ருத்ரன்…ஹிஹிஹி…”, என்று மலைமாட்டில் மாடை மட்டும் விட்டுவிட்டு சமாளித்து வைத்தது சிட்டுக்குருவி.
“அடிங்…மினுக்கிஇ…பூதமா…?!!
பூதம் என்ன செய்யூம்னு காட்றேன்டி… இருக்கு அப்போ…
அப்றம் வேற என்னவோ சொல்ல வந்தியே சொல்லுடி என்னது அது மலை…?!
என்ன…ம்ம்… ம்ம்…சொல்லு சொல்லு…
ஆஹ்ன்…ஆஹ்ன்”, என்று அவள் பக்கமாக காதை திருப்பி வைத்து கழுத்தை கொஞ்சம் சாய்க்க…
அவனுக்கா தெரியாது என்ன சொல்ல வந்தாளென,
ஆனாலும் வேண்டுமென்ற தன் வாழ்வில் புதிதாக இனிமைக்காக நுழைந்த பொண்டாட்டியுடன் கதை அளந்தான்.
ரகசியாவோ சமாளிக்க வழியின்றி கையை பிசைந்தவள், “அதுவாஆஆஆ…
அது…ம்ம்……. அதுஉஉஉ…ஹிஹி…”,என்று சிறிதாக இளித்து வைக்க…
ருத்ரன்,”சொல்லுடிஇஇ…
அது…எது…அதுஉஉஉ…
ஆஹ்ன்….ஆஹ்ன்… சொல்லுங்கிறனே…”, என்றவாறு இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவளை நெருங்கி நிற்க.
‘ஹேய் ரகா இந்த வில்லேஜ் வினிகர்க்கு ஏன் நீ பயப்படுனும் ஆஹ்ன் நெவர் நெவர் பேசு கேர்ள் போல்டா எதையாச்சும் சொல்லி சமாளிடி…யூ கேன் டு இட்…’என்று மைண்ட் வாய்ஸில் மோடிவேட் செய்து தைரியம் வந்தவளாக…
முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு,
“அது…வந்து…யூ க்நோ வாட்… அது…
மலை…மலையாள ஹுரோஓஓஓ…”, என்று கழுத்தை வேறு பக்கம் திருப்பி முகத்தை கெத்தாக வைப்பது போல் பாவ்லா செய்துக் கொண்டே விழி மட்டும் திருதிருவென முழிக்க கூறி வைத்தாள்.
ருத்ரனோ பார்வை அவளின் ஒரு பக்கமாக பக்கவாட்டில் தெரியும் அழகில் பதிந்து இருந்ததால்…
தன் முத்துமயிலின் காலை காணமாக ஒளத்த அதன் தேன் குரலில் மயங்கி,”ஹோஓஓ மலையாள ஹுரோவாஆஆஆ…”, என்று தலையை ஆடியது.
பின் சமாளிக்கிறாள் என உடனே உணர்ந்தவன்
“அடிங்க…ஏமாத்தவா செய்ற…உன்னைய…” , என்று அவள் கௌனை இழுக்க வருவது போல் மேலே கையை தூக்கவும்…
ருத்ரன்தான் தன்னவளின் வாயளக்கும் அழகில் மயங்கி கேட்டுக் கொண்டிக்கிறானே…
அதனால் கொஞ்சம் தளர்வாக நின்றிருந்தவனை…
கட்டிலில் தள்ளிவிட்டு சிட்டென ஓடிச் சென்று பாத்ரூமினுள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள் ரகசியா அவன் பின்னாடி வருவதற்குள்.
ருத்ரனுக்கோ மனமெங்கும் ராட்டினத்தில் சுற்றிப் பறப்பது போல் இருந்தது,இவளுடன் இப்படி வம்பளப்பது.
சில விராடிகள் தொட்டது எனினும் அவளாக தொட்ட முதல் முதல் தீண்டலல்வோ தித்திக்கும் தேனாய்
இனித்தது அவள் தொட்ட இடம்.
கட்டிலில் இருந்து புன்னகையுடன் எழுந்து சென்றவன்…
கண்ணாடியில் தன் சிகையை சரி செய்துக் கொண்டே,
“ஹாஹா… சரியான கில்லாடி ஜில்லாடிய இருக்கடி முத்துமயிலுஉஉ…”, என்று பேசிக் கொண்டான்.
பின் கீழே செல்வதற்காக அறைக் கதவின் அருகில் சென்று தாழில் கை வைத்தான்.
சரியாக அதே நேரம் ஒரு சின்ன அங்குலம் மட்டும் கதவை திறந்து தலையை வெளியே நீட்டிய ரகசியா,
“போடாஆஆஆ… மலைமாடுஉஉஉ…!”, என்று கத்திவிட்டு அவன் திரும்பி பார்த்ததும்,”வெ..வ்வ..வெ”,என நாக்கை துருத்திக் காட்டிவிட்டு மீண்டும் பூட்டிக் கொண்டாள்.
ருத்ரனோ முகத்தில் கள்ளச் சிரிப்புடன் குரலில் பொய்க் கோபம் கொண்டவனாக,
“அடிங்…. டா வா சொல்ற….
கதவை தொறடிஇஇ…ஓய்…கேடிஇஇ…
மலைமாடா நானு ஆஹ்ன்… ?!
வெளிய வாடி வைச்சு மலைமாடு மாதிரி முட்டி தள்ளிறேன்…
கேடி பொணடாட்டிஇஇஇ…”, என்று கூறி வைத்துவிட்டு பாத்ரும் கதவை சும்மா லைட்டாக காலால் எட்டி உதைத்து மிரட்டுவது போல் செய்தான்.
உள்ளே ரகசியாவிற்கோ அவனை காண்டேத்துவது மனசுக்கு குளிர்ந்து போய் கிளுக்கி வாயைப் பொத்தி நகைத்துவிட்டு…
மீண்டும் உள்ளே இந்த பக்கமிருந்தே,
“போடா…போடா…
மலைமாடு…
வில்லேஜ் வினிகர்…நாட்டுகாட்டான்…
கருவாப்பயலேஏஏஏ…”, என்று கத்தி குரல் குடுக்க…
இந்த பக்கம் இவனுக்கு அவள் டா சொல்ல சொல்ல மாறன் அம்பு பாய்ந்ததை போல உடலெங்கும் போதை ஏறத் தொடங்கியது… மற்றதெல்லாம் எங்கே விழுந்தது அவன் காதில், “ஹே…பொண்டாட்டிஇஇஇ…”, என இவன் காதலாக தொடங்கவும்…!
ருத்ரனின் மொபைல் அலறல் சத்தம்.
(என்ன சத்தம் இந்த நேரம் மொபைலின் குத்தமா..?!)
“தப்பிச்சுட்டடி…!”, என்று விட்டு மொபைலின் திரையை பார்கத்தான்
எனக்கு அடுத்து இந்த நந்தி வேலை எல்லாம் பார்ப்பது வேறு யாராகத்தான் இருக்கும் மக்கள்ஸ்…(கிகிகி)
ஆம்…அவன்தான்…அவனேதான்…
சாக்ஷாத் விஜயனேதான்…!
ருத்ரன் எடுத்து காதில் வைத்தவன் விஜயன் பேசுவதற்குள், “மாப்பிஇஇஇ…
நேத்து ஒரு நாள்தான் பச்சை பேச்சுக்கு தடா போட்டிருந்தேன்…
இப்போ காலைலவே நல்ல மூட்ல நான் இருக்கறதுனால தப்பிச்சிட்ட மவனே இல்லாட்டி பச்சை ஊதானு நல்லா வாங்கிருப்ப…
உன் தங்கச்சி காப்பாத்திட்டா உன்னைய…!
இப்ப என்ன தேவைக்குடா கூப்பிட்டிருக்க…?!”, என்று பல்லைக் கடித்துக் கொண்டே ருத்ரன் கூறினான்.
“ஹிஹிஹி மச்..சா..ன் அது ஒன்னுமில்ல …
இந்த கொம்பன் பையன் சுத்தமா அடங்க மாட்றான் மச்சா..ன்…
தாத்தாகூட பேசி பார்த்துட்டாரு கேட்க மாட்றான்…
நீனு வந்தாதான் ஆவது போலருக்கு… !
மணியும் ஏழே காலாச்சா இப்போலாம் கொம்பன் வேலைல இருக்கனும்ல மச்சான்…
சொல்லாட்டி நீனு வையுவனு தாத்தோவ்தாம்லே உனக்கு போன் அடிக்க சொன்னாரு மச்சா…ன்…”, என்று அப்பக்கம் தலையை சொறிந்து கொண்டு தாத்தாவின் அருகில் நின்று கொண்டு விஜயன் சொன்னான்.
ருத்ரன் அவன் பேசிக் கொண்டிருக்கும் போது கீழே இறங்கி அவர்கள் இருக்குமிடம் வந்தவன்,
“போடாங்…. முன்னாடியே பண்ணிருக்கலாம்ல மாப்பி…
இதுக்குலாம் போய் லேட் பண்ணலாமா டே….”, என்றவாறு விஜயன் தோள் வளைவில் கையைப் போட்டு அவன் கழுத்தை தன்னை நோக்கி இழுத்து மண்டையில் டிஷ்யூம் செய்துவிட்டு தாத்தாவைப் பார்த்து கண்ணடித்தான்.
“ஆஆஆஆ டேய் மச்சான்ன்…
இருந்தாலும் நீனு இவ்ளோ சீக்கிரம் தயாரா இருந்து வந்துடுவனு நினைக்கல மச்சா…ன்… ம்ம்…ம்ம்…!”, என்று விஜயன் கத்தி கிண்டலாக கூறிவிட்டு…
பின் ருத்ரன் காதில் குசுகுசுவென,
“ஏன்னா வீடே… இல்லல்ல ஊரே ராத்திரி கரெண்ட் கட்டானப்போ தங்கச்சி உன்ற பேர முழுசா சொல்லி கூப்பிட்டுச்சாம்லனு ஒரே பரபரப்பு கிசுகிசுக்கள்…
அதான் மச்சா…ன் டாபுட்டுஉஉஉ…”, என்று குசுகுசுத்ததும் அவன் தோள் பட்டை நசுங்க கீழே கால் மீதும் ஒரு எத்து எத்தியிருந்தான் ருத்ரன்.
ருத்ரனுக்கு மனதுள் ‘ஆஆஆ…
சென்சுட்டாளே ஒன்னுமே நடக்காம இதெல்லாம் கேட்கனும்னு இருக்கே ஆண்டவா…! எல்லா நேர சோதனைடா…!’,
என்று நினைத்தவன்.
விஜயனிடம் “ஹோஹோ…
ஊருதான் நினைக்குது அப்போ ஸாரு நினைக்கலையோ…?!
வாடே நானே நனைச்சு காய போடுறேன்டே தயிருமவனே …!”, என்று அவனைப் போலவே இவனும் காதில் மட்டும் சொன்னான்.
நடப்பதை கவனித்த தாத்தாவோ,
“அங்க என்னங்டே குசுகுசுனு காதை கொடைறீங்க மாத்தி மாத்தி…?! என்னா சங்கதி வோய்…??!! எமக்கும் சொல்லும்…!”, என்று அவரும் குறும்புடன் கேட்க…
“ஆஹ்ன் குசுகுசு இல்ல பெருசு…
கொசு சொசு அதான் ஊதி தொறத்திவிட்டோம் இல்லடா மாப்பிஇஇஇ…”, என்று மீண்டும் தாத்தா பார்க்காத வண்ணம் ஒரு எத்து மிதியென விஜயனை மிதித்தான்.
“யம்மோவ்வ்வ்…ஆமா..,ஆமாஆஆஆ…
சொசுதேன் சொசுவேதேன் தாத்தா…!”, என்று விஜயன் ஒற்றைகாலில் கூறினான்.
பின் தாத்தா அதற்கு விஜயனிடம் குறும்பு குறையாமல்,
“அதுக்கு ஏம்டே ஒற்றை கால்ல நிக்குற…
பரவாயில்ல நம்பிட்டேன் நானு…
நீனு காலை கீழ போடும் டே…
ஹாஹாஹா”, என்று மீசையை திருகிக் கொண்டார்.
ருத்ரனோ,”சரிதேன்… என்ன தாத்தோவ்…
உன்ற கடைக் குட்டிப் பேரன் உம்ம பேச்சையும் கேட்கலையாம்…
உம்ம கொஞ்சல் பேரனோட பேச்சையும் கேட்கலையாமே வோய்…?!!! ஹாஹா…”,என்று அவர்களிருவரையும் கேலி செய்தான்.
மூன்று வயதிலிருந்தே ருத்ரனின் ஆருயிர் நண்பன்…
அது மட்டுமின்றி விஜயன் இவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் சொந்தம்தான்…
அதனால் அப்போது சொந்தகாரனாக தொடங்கியது ஆனால் இப்போது தாத்தா பாட்டிக்கு அவனும் அவரின் சொந்த பேரனேதான்…!
அதைதான் கொஞ்சல் பேரன் என்கிறான் ருத்ரன்.
தாத்தாவோ ருத்ரன் முகத்தில் உள்ள புத்துணர்ச்சி கண்டு மனதில் ஆனந்தம் பரவ, “ஆமா போவே இதென்ன புதுசா சொல்லுடே…!
அவன் கிடக்குறான் களவாணிப்பய…
ஒரு நிமிஷம் மொதல்ல நீவிர் இதை சொல்லும் வோய்…!
என்ற பேத்தி என்ன செய்றா…?!”, என்று ஆசையாக பாசமாக கேட்க…
ருத்ரனோ சிறிய புன்னகையுடன் மிடுக்காக,
“ம்ம்…ம்ம்… அவளுக்கென்ன நல்லா என்னைய வம்பிழுந்துட்டே பொழுத நல்லா தொடங்கியிருக்கா….
கள்ளிக்காரி…!”, என கூறுகையில் அந்த கரிகால மன்னனின் சூரிய முகத்தில் அத்தனை ஒளிக்கீற்று…!
அதனைக் கண்ட தாத்தாவிற்கு மனம் நிறைந்து போக,
“போ டே நீனுதா என்ற பேத்திய வம்பிழுத்திருப்ப…”, என பேத்தியை விட்டுக் குடுக்காமல் கூற…
விஜயனும்,
“ஆமா தாத்தா தங்கச்சிஇஇ சமத்து…
மச்சா…ன் தான் ரவுஸு பண்ணிருப்பான்…ஹிஹிஹி…”, என்றவாறு ருத்ரனிடம் இருந்து நழுவி தாத்தா பக்கம் போய் நின்று கொண்டான்.
(கிகிகி… தப்பித்தார் விஜயர்ர்…)
“ஆமா…ஆமா… நான்தேன்…நானேதேன்…”, என்று கூறிக் கொண்டிருக்கையில்…
கொம்பனோ ‘அடேய்ஹளா வந்தது எனக்காக…
இதுல தனி மாநாடு வேறயா… பசிக்குது பங்காளி…’ என்று நினைத்து “ம்மம்ம்மாஆஆஆஆ” என கத்தினான்…!
ஆம் அவன் ருத்ரனின் தம்பி கத்திக்கொம்பன்…!
கார்மேக வண்ண மேனியும் கழுத்திலும் வயிற்றிலும் பழுப்பு நிறம் கொண்டவன்…!
தமிழக வீடுகளில் இருக்கும் பெருமைமிகு வீரவாரிசுகளின் ஒருவன்..!.
திமிலை ஆட்டி திமிரினால் மரத்தின் வேர்கூட தப்பியாது நோண்டி விடுவான்.
கொம்பனின் அந்த தீட்டிய வாளென இருக்கும் கொம்பிலிருந்துதான் தப்ப இயலுமோ சிக்கியவர்களும்..?!
அவன் வென்ற ஜல்லிக்கட்டுத்தான் எத்தனை…!
மஞ்சுவிரட்டில் மாந்தர்களை விரட்டியதும்தான் எத்தனையோ கணக்கில்லை…!
வேட்டியை மடித்துக் கொண்ட ருத்ரனோ, “யடோய்…கொம்பா…என்றா…?!
அண்ணன பார்க்காம ஒரு நாள் இருக்கமாட்டிஹளோ…?”, என்றவாறு அதன் கழுத்து வளைவில் தடவினால்.
கொம்பனோ ஆமாம் என்பதுபோல் கூர்கண்களை சிமிட்டி,
தன் கொம்பினால் கீழே இருந்த வைக்கோலை நோண்டி எடுத்துப் போட…
“ஹாஹாஹா… சரி அதான் வந்துட்டேன்ல தண்ணிய குடிவே… வெறசா கிளம்பலாம்…! “,என்றவாறு கொம்பனை உண்ண வைத்தான்.
அவன் வந்து தடவிய பின்தான் கொம்பன் உண்டான்…
ருத்ரன்தான் கொம்பனுக்கு உயிர்…!
ருத்ரனுக்கும் அவ்வாறே…!
பின் அதன் கயிற்றை அவிழ்த்து விட்டவன்…
தன் சட்டையை கழட்டி விஜயனிடம் கொடுத்து விட்டு,
கையில்லா ஆர்ம்லெஸ் பனியனுடன் கொம்பனின் முன் சென்று,
“சரி இப்போ வழக்கம் போல நம்ம ஆட்டத்தை முடிச்சிட்டு கிளம்புவோமா டே கொம்பா…!? சண்டை செய்வோமாஆஆஆடே…!?”, என்றவாறு கை முஷ்டியை தட்டிக் கொண்டு, தன் இடக்கை விரலால் மீசை நீவிக் கொண்டான்.
கொம்பனோ விழியை தீட்டி தன் காலால் தரை உதைத்து மண்ணை பின்னால் இறைத்து தலையை ஆட்டி கொம்பைத் தரையில் தீட்ட…
ருத்ரனும் காளையனுக்கே காளையனாக அதே போல் ஒரு காலால் மண்ணை பின்னால் தள்ளிவிட்டு…
எட்டி கொம்பனின் கொம்பை பிடித்தவன் அடங்க மறுக்கும் கொம்பனின் திமிலை பிடித்து தன் கால்களை தரையில் ஊன்றி புழுதிப் பறக்க முட்டிக் கொண்டு…
ஒற்றைக்கு ஒற்றையாக கொம்பனை அடக்கி கொண்டிருந்தான்.
ரகசியா மேலே குளித்துவிட்டு அடர் மெரூன் வண்ண குபேரப்பட்டில் முழுநீல உள்ளங்கை மணிக்கட்டு வரை ஸ்லீவ் என தைத்த அனார்கலி வகை லாங் சுடியும் அதற்கேற்ற ஸாஃப்ட் பட்டுத் துப்பட்டாவும் மார்ப்பின் மேலே புது மஞ்சள் தாலிக் கொடியுடன் இருக்க…!
அந்த உடைக்கு ஏற்ப சிறிய ரோஸ்கோட் பட்டாம்பூச்சி டிஸைனர் நெக்லஸூம்…
அதே போன்ற தோடுகளும் போட்டு…
வண்ணத்துப்பூச்சியின் அழகில் ஃபிரன்ச் ப்ளாட் போட்டு நீண்ட பின்னலுடன் மயிலாக அறையின் மற்றொரு பால்கனியில் வந்து நின்றவளுக்கு இந்த காட்சி விழிகளில் படவும்…
இதயத்தின் ஓட்டமே அவளுக்கு நின்றுவிட்டது போல ஆகிவிட்டதும்தான் ஏனோ…!?
ரகசியா விழிகள் கோழி முட்டையாக மாறி,
“நோஓஓஓ… தாத்தாஆஆஆ ஹெல்ப் ஹிம்…
விஜி பாய் அவரை பிடிங்க…
ஆஆஆஆ அந்த மாடுஉஉஉ…
ருத்துஉஉஉ நோஓஓஓ…”,என்று தன் தேன் குரலில் கத்த அவர்களுக்கு கேட்கவில்லை என்றவுடன் இதயம் தாறுமாறாக துடிக்க. கீழே இறங்கி ஓடி வந்தாள்.
(ஆஹாஆஆ பத்திக்கிச்சோ…அப்போ இது லவ்தான ஜெஸ்ஸி…?!கிகிகி)
நீ என் உயிரெனில்
நான் உன் கருவடி..!
நான் உன் மூச்செனில்
நீ என் சேயடி
தாயாக அணைத்து
தந்தையாக அரவணைத்து
உன் புன்னகையே
என் வாழ்வாய்
நான் வாழ
பேராசைக் கொண்டு
நிற்கிறேன்…
தாமதியாமல்
நொடியில் வந்து
கட்டிக் கொள்ளடி
என் யட்சினியே…!!!
(என்னா செல்லாஸ் சேரும் முன்னாடியே பிரிச்சுப் பார்ப்போமா கிகிகி?…
நோ டெரர் லுக்குஉஉஉ மீ சும்மா உல்லுல்லாய்கு சொன்னேன் டார்லிங்ஸ்…)