Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 12

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 12

by Subhashri Srinivasan
4.9
(10)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 12

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

அழகான எதிரி…!!

தன் வீட்டின் அருகே வேலையில்லாத பெண்களையும் ஆண்களையும் அழைத்து அவர்கள் அனைவருக்கும் இப்படி ஒரு வேலை இருப்பதாகவும் செய்ய விருப்பம் இருந்தால் வேலையில் அவர்களை சேர்த்துக் கொள்வதாகவும் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் பற்றியும் எடுத்துச் சொன்னாள்..

“ஆரம்பத்துல சம்பளம் குறைவா தான் இருக்கும்.. ஆனா நீங்களும் நல்லா வேலை செஞ்சு நம்ம பிசினஸ் இன்னும் நல்லா வந்ததுன்னா ஆட்டோமேட்டிக்கா உங்க சம்பளத்தையும் நான் ஏத்திடுவேன்..”

அவள் குரலில் அதீத நம்பிக்கை ஒலித்தது.. அந்த நம்பிக்கையும் அவளின் ஆளுமையும் அங்கிருந்த பல பெண்களையும் ஆண்களையும் ஈர்த்தது.. அங்கிருந்த இளைஞர்களுக்கு அவள் ஒரு உதாரண மனுஷியாகவே தெரிந்தாள்..

நிச்சயம் அவள் அவளுடைய நிறுவனத்தை பல மடங்கு பெரிதாக்குவாள் என்று அவர்களுக்குள் அனேகமானவர்களுக்கு உறுதியாய் தெரிந்தது.. அவள் பார்வையின் திடமும் கூர்மையும் அவளின் தெளிவான பேச்சும் அவர்களுக்கு அவளின் எதிர்கால வளர்ச்சியின் உயரத்தை அப்போதே வெளிச்சம் போட்டு காட்டியது..

கிட்டத்தட்ட அங்கிருந்த பத்து பெண்கள் மற்றும் பத்து ஆண்களில் ஐந்து பெண்களும் ஐந்து ஆண்களும் வேலைக்கு சேர விருப்பம் தெரிவித்தார்கள்.. மற்றவர்களும் செய்தியோசித்துவிட்டு பிறகு வந்து சொல்வதாக சொல்லி கிளம்பினர்..

வேலைக்கு சேர விருப்பம் தெரிவித்தவர்களை மறுநாள் காலை அந்த புது இடத்திற்கு வர சொல்லி அனுப்பினாள்..

மறுநாள் காலையில் பாட்டிகளையும் தாத்தாக்களையும் லட்சுமி மேடத்துடன் ஆஸ்ரமத்தில் இருந்து அந்த புது இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றாள்..

முன்னாள் அவள் வேலைக்கு அழைத்த அனைவரும் அங்கு வந்திருந்தார்கள்..

அவர்களைப் பார்த்து “வெல்கம் கைஸ் என்ட் கர்ள்ஸ்.. முதல்ல உங்க எல்லாருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடறேன்.. இத்தனை  நாள் இந்த பாட்டிக்களும் தாத்தாக்களும் செஞ்ச வேலையை தான் இப்போ கொஞ்சம் பெரிய அளவில நாம செய்ய போறோம்..”

அவள் சொல்லவும் அங்கு புதிதாய் சேர்ந்த இளைஞர்கள் இடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டது..

“எனக்கு புரியுது.. வயசானவங்க இவங்க எல்லாரும் என்ன பண்ணி இருக்க முடியும்னு தானே நினைக்கிறீங்க.. ஆனா இந்த கம்பெனியில் செய்ற ஐட்டம்ஸ்க்கு இவ்ளோ டிமாண்ட் வர்றதுக்கு ரீசனே இவங்களோட உழைப்புதான்..”

அவள் சொன்னதை விழி விரித்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உடனே அந்த வயதானவர்களின் பக்கம் திரும்பி கைதட்டி ஆர்ப்பரித்து அவர்களை பாராட்டினார்கள்..

அல்லி தொடர்ந்தாள்..

“அதனால ஒரு ரெண்டு நாள் இவங்க எப்படி வேலை செய்யறாங்கன்னு பார்த்துக்கோங்க.. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நீங்க அவங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டு வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.. இங்க கம்பெனியிலேயே இருந்து பாட்டிங்க செஞ்ச வேலையும் நீங்க எடுத்து செய்யலாம் இல்ல தாத்தாங்க செஞ்ச மார்க்கெட்டிங் வேலையும் நீங்க செய்யலாம்.. எந்த வேலை செய்யணும்னு உங்களோட விருப்பம் தான்..”

அவள் சொல்ல “பாட்டிங்க என்ன வேலை செஞ்சாங்க? தாத்தாங்க என்ன வேலை செஞ்சாங்க மேடம்?”

ஒரு பெண் எழுந்து கேட்க

“பாட்டிங்க மசாலா பொருட்கள் இதெல்லாம் செஞ்சு பேக் பண்ணி வைப்பாங்க.. தாத்தாங்க பக்கத்துல இருக்குற கடைங்களுக்கு போயி பாக்கெட்டை எல்லாம் வித்துட்டு வந்தாங்க.. ஆனா இப்போ நம்ம பிசினஸ் பெரிசாகி இருக்கிறதுனால பக்கத்துல இருக்குற கடைங்கள்ல மட்டும் நம்ம ப்ராடக்ட்ஸை வித்தா பத்தாது.. அதனால தாத்தாங்க செஞ்ச வேலையை செய்யணும்னா அதுக்கு நீங்க வண்டி வச்சிருக்கணும்.. கேர்ள்ஸ்.. மார்க்கெட்டிங் வேலை செய்யணும்னா உங்களுக்கும் இதே கண்டிஷன் தான்.. நீங்களும் வண்டி வெச்சிருந்தா தான் அந்த வேலை செய்ய முடியும் இல்லனா பாட்டிங்க செஞ்ச வேலை தான் நீங்க செய்யணும்..”

அவள் சொன்னதை கேட்ட ஆண்களில் இருவர் தங்களுக்கு சமையல் வேலை பிடிக்குமாதலால் தாங்கள் பாட்டிகள் செய்து கொண்டிருந்த வேலையை செய்வதாக சொன்னார்கள்.. அதேபோல பெண்களில் இருவர் தங்களிடம் வண்டி இருப்பதாகவும் தங்களுக்கு வெளியே சென்று வேலை செய்வது பிடித்திருப்பதாக சொல்லி மசாலா பாக்கெட்டுகளை கடைகளுக்கு எடுத்துப் போய் விற்கும் வேலையை செய்வதாக ஒப்புக்கொண்டனர்..

“நீங்க வண்டி வச்சிருக்கறதுனால கொஞ்சம் தூரத்தில் இருக்கிற கடைங்களுக்கும் போயி மசாலா பேக்கட் விக்க வேண்டி இருக்கும்..  ரொம்ப தூரம் போகணும்னாலும் நீங்க தயாரா இருக்கணும்.. இதுக்கு பொண்ணுங்கங்கறதுனால உங்களுக்கு எந்த கன்செக்ஷனும் இருக்காது”

அவர்களுக்கு உரிய வேலைகளை விளக்கிக் கூறினாள் அல்லி..

“மேடம் ஒரு டவுட்” என்றான் ஒருவன்..

“கேளுங்க” என்று அவள் கூறவும் “இல்ல.. நாங்க கொஞ்ச தூரத்தில் இருக்கிற கடைக்கு எல்லாம் போயி பாக்கெட்டெல்லாம் வித்துட்டு வரணும்னா எங்க வண்டியில போகும்போது பெட்ரோல் செலவாகும்.. அந்த பெட்ரோல் காசு எல்லாம் தனியா கொடுப்பீங்களா? இல்ல எங்களுக்கு குடுக்குற சம்பளத்திலேயே நாங்க செலவு பண்ணிக்கணுமா?”

“நீங்க பெட்ரோல் போட்ட அப்புறம் அந்த பில்லை வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுங்க.. அதுல இருக்குற அமௌன்ட்டை உங்க சம்பளம் தவிர உங்களுக்கு தனியா கொடுப்பேன்.. அது நிச்சயமா சேல்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் காஸ்ட்ல தான் வரும்”

அவள் விளக்கி சொன்னாள்..

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்”

ஒரு நிம்மதி பெருமூச்சோடு அமர்ந்து கொண்டான் அவன்..

“வேற ஏதாவது உங்களுக்கு என்னை கேட்கணுமா? வேற ஏதாவது டவுட்ஸ் இருக்கா?” என்று அவள் கேட்கவும் எல்லோரும் எதுவும் இல்லை என்று சொன்னவுடன் “ஓகே அப்படின்னா கம்பெனில வேலை செய்யறவங்கள்லாம் பாட்டிங்களோட போய் எப்படி வேலை செய்றாங்கன்னு அப்செர்வ் பண்ணுங்க.. மத்தவங்க எல்லாம் தாத்தாக்களோட கடைக்கு போயிட்டு வாங்க.. இன்னைக்கு நீங்க அவங்களை வண்டில கூட்டிட்டு போலாம்.. ஓகே..? ரெடியா கைஸ் என்ட் கேர்ள்ஸ்..!!?”

அவள் கேட்க எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் உற்சாகமாய் “ஓகே மேடம்” என்றார்கள்..

“இந்த ரெண்டு நாள் அப்சர்வேஷன்க்கு அப்புறம் நீங்க வேலை செய்யும்போது அக்கம்பக்கம் இருக்கிற கடைக்கு எல்லாம் தாத்தாங்க இனிமேலும் பாக்கெட் போடப் போவாங்க.. தூரத்தில் இருக்கிற கடைக்கு மட்டும் தான் புதுசா ஜாயின் பண்ணி இருக்கிற நீங்க எல்லாம் போய் பாக்கெட் போட வேண்டியது இருக்கும்.. ஓகேவா?”

அவள் கேட்கவும் அந்த இளைஞர்களும் ஆமோதித்தார்கள்..

அதன் பிறகு இரண்டே வாரத்தில் அந்த வியாபாரம் நன்கு சூடு பிடிக்க கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களுடைய பொருட்களுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே இருந்தது..

அல்லியோ நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.. சிறிது நாட்களிலேயே நல்ல லாபம் கிடைக்க ஆரம்பிக்க எல்லோருக்கும் மனம் நிறையும்படி சம்பளமும் கிடைத்தது.. அதனால் புதிதாய் சேர்ந்த இளைஞர்களும் இளைஞிகளும் சந்தோஷமாய் அவளுடைய நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள்..

############

ஆதித்யா தன் நிறுவனத்தில் தன் அறையில் அமர்ந்து கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான்.. கையெழுத்திட வேண்டிய கோப்புகளை படித்து கையெழுத்திட்டுக் கொண்டிருந்தவனை அணுகி அருண், “பாஸ் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..” என்று சொல்லவும் “பட்டுன்னு சொல்லு.. ஐ டோன்ட் ஹேவ் ஆல் த டைம் இன் த வேர்ல்ட்” முகம் சுருங்க சொன்னான் ஆதித்யா..

“பாஸ் மார்க்கெட்ல ஒரு ப்ராடக்ட் வந்து இருக்கு.. அந்த ப்ராடக்ட்க்கு இப்ப நல்ல டிமாண்ட் இருக்கு.. நிறைய பேர் இப்ப அந்த ப்ராடக்ட் வாங்க ஆரம்பிச்சு இருக்காங்க..” என்றான் அவன்..

“சரி ஆரம்பிக்கட்டும்.. இந்த மாதிரி நிறைய ப்ராடக்ட்ஸ் இருக்கும் மார்க்கெட்ல.. ஆனா அதனால நம்ம ப்ராடக்ட் சேல்ஸ்ல ட்ராப் வந்ததில்லையே.. இப்ப எதுக்கு நீ என்கிட்ட இதை சொல்ற?” எரிச்சலோடு கேட்டான் ஆதி..

“இல்ல.. அந்த கம்பெனி ஆரம்பிச்சு ரெண்டு மாசம் தான் ஆகுது.. ஆனா இப்பவே அதோட ரீச் பயங்கரமா இருக்கு.. பாஸ் நம்ம சேல்ஸ்ல பாதி அளவை இப்பவே ரீச் பண்ணிட்டாங்க அவங்க.. நம்ம நிறைய கம்பெனிஸ் வச்சிருக்கோம்.. ஆனா அவங்க ஃபுட் ப்ராடக்ட்ஸ் மட்டும் தான் சேல் பண்றாங்க.. சின்ன கம்பெனி தான்.. ஆனா அவங்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் ஏறிக்கிட்டே போகுது.. நிச்சயமா அந்த கம்பெனி கூடிய சீக்கிரம் பெருசாயிடும்னு எல்லாருமே பேசிக்கிறாங்க..” என்றான் அவன்.

“அருண்.. இப்ப எதுக்கு இந்த கதையெல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க.. அவங்க ப்ராடக்ட்ஸ் நல்லா சேல் ஆகுதுன்னா நம்ம பிசினஸ்ல யூஸ்வலா யூஸ் பண்ற பிசினஸ் டேக்டிக்ஸ் யூஸ் பண்ணி எப்படி அவங்க சேல்ஸை பீட் பண்றதுன்னு பாருங்க.. அதை விட்டுட்டு இது என்ன புதுசா புலம்பிக்கிட்டு இருக்க?” ஆதியின் குரலில் எரிச்சல் கூடியது ..

“அது இல்ல பாஸ்.. ஆக்சுவலி அந்த கம்பெனி யாரோடதுன்னு உங்களுக்கு தெரிஞ்சதுன்னா.. “

அவன் இழுக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையில் ஒரு கேள்வியுடன் “யாரோடது?” என்று கேட்டான்..

“அது இங்க வேலை கேட்டு வந்தாங்கல்ல மிஸ். அல்லி மலர்.. அவங்களோட கம்பெனி”

அவன் கூறி முடிக்கும் முன் ஆச்சரியமாகி போன ஆதித்யா “வாட்… இல்லை.. அந்த அல்லி ராணி திடீர்னு எப்படி ரெண்டு மாசத்துல இவ்ளோ பெரிய கம்பெனியை உருவாக்க முடியும்? நல்லா தெரியுமா? நீ நல்லா விசாரிச்சு தான் சொல்றியா?”  அவனை திரும்ப கேட்டான் ஆதித்யா..

“100% கன்ஃபார்ம்டு நியூஸ் பாஸ்.. அதுல எந்த டவுட்டும் இல்லை.. அவங்க ப்ராடக்ட் பேர் கூட லில்லிஸ் மசாலா.. முதல்ல சின்ன லெவல்ல பண்ணிட்டு இருந்தாங்க.. இப்ப பெரிய இடத்துல கிட்டத்தட்ட ஒரு 30 பேரை வேலைக்கு வச்சுக்கிட்டு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. ரெண்டே மாசத்துல நல்லா சூடு பிடிச்சிருக்கு பாஸ் அவங்க பிசினஸ்..” மெதுவாக கூறினான் அவன்..

“ம்ம்.. இன்ட்ரஸ்டிங்.. அவங்க கம்பெனி எங்க இருக்கு? எத்தனை பேர் வேலை செய்றாங்க? அது வாடகைக்கு இருக்கிற இடமா இல்ல சொந்த ப்ராப்பர்ட்டியா? இந்த டீடைல்ஸ் எல்லாமே இன்னும் இரண்டு மணி நேரத்துல என் டேபிள் மேல இருக்கணும்.. ரொம்ப சுவாரசியமா போயிட்டு இருக்கு இந்த விளையாட்டு… இதுல நிச்சயமா நான் தான் ஜெயிப்பேன்.. மை ஸ்வீட் எனிமி.. வேகமா மேலே ஏறி போறியா? எனக்கு மேல உன்னை ஏற விடமாட்டேன்.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி உன்னை தோக்கடிக்கிறதுதான் என்னுடைய முக்கியமான எய்ம்.. நிச்சயமா உன்னை தோக்கடிக்காம விடமாட்டேன்.. எந்த காலத்திலும் நீ என்னை ஜெயிக்க முடியாது.. அதுவும் இந்த ஆதித்யாவை.. என்னோட ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் நீ பதில் சொல்லி தான் ஆகணும்… இந்த ஆதித்யாவை வாழ்க்கையில ஒரு முறை தோக்கடிச்சதுக்கு நிச்சயமா நீ ஃபீல் பண்ணுவ… வாழ்க்கை முழுக்க உன்னை தோக்கடிச்சுக்கிட்டே இருப்பேன்” முகத்தில் அதீத சுவாரஸ்யத்தோடு சொன்னவனை ஆச்சரியமாக பார்த்தான் அருண்..

பெண்கள் இருக்கும் பக்கம் கூட திரும்பி பார்க்காத ஆதித்யா இன்று ஒரு பெண்ணை தன் எதிரி என்று சொல்லி அவளை அழிக்க முழுமூச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..

அவன் கொடுத்த வேலையை செய்வதற்காக அங்கிருந்து சென்றான் அவன்..

அடுத்த இரண்டு மணி நேரத்தில் லில்லிஸ் மசாலா கம்பெனி பற்றிய முழு விவரமும் அவனுடைய மேஜையில் இருந்தது.. அதன் பிறகு செய்ய வேண்டியவற்றை அருணிடம் உத்தரவுகளாக பிறப்பித்தவன்.. தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து சுற்றிக்கொண்டு ” ஏ..அல்லிராணி.. நான் மறுபடியும் உன்னை பாக்க வந்துட்டே இருக்கேன்டி.. என் அழகான எதிரியே..” என்று சிரித்தபடி சொன்னான்..

மறுநாள் காலையில் அல்லி அவள் நிறுவனத்தின் அலுவலகத்தில் அமர்ந்து கோப்புகளை பார்த்து கொண்டிருக்க அவள் அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மிடுக்காய் “கம் இன்” என்றாள் அவள்..

உள்ளே வந்தவனை பார்த்து அவள் அப்படி

யே உறைந்து நின்றாள்..

“ஆதி….த்யா..!!!”

இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான்.. ?!

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!