Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 15

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 15

by Subhashri Srinivasan
4.8
(16)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 15

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை

விழி அம்பு..!!

அன்று தன் நிறுவனத்திற்குள் நுழைந்த அல்லி அதனுள் இருந்த மாற்றங்களை கண்டு வியப்பில் விழி விரித்தாள்.. நிறுவனம் முழுவதும் குளிரூட்டிகள் ( ஏர் கண்டிஷனர்) பொருத்தப்பட்டு இருந்தன.. நிறுவனத்திற்கு வெளியே மரத்தடுப்பு போட்ட அறையில் ஒரு செவிலி அமர்ந்து இருந்தார்.. ஒரு குட்டி வைத்தியசாலையே அங்கே இருந்தது..

இவற்றைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றவள் “இதெல்லாம் அந்த ஆதித்யாவோட வேலையா தான் இருக்கணும்.. இதுக்கெல்லாம் சேர்த்து இன்னும் எனக்கு என்னென்ன வேட்டு வைக்க போறானோ தெரியல”

யோசித்துக் கொண்டே போனவள் தன் அறையை அடைந்து உள்ளே சென்றதும் அங்கே ஏற்கனவே சுழல் நாற்காலியில் ஆதித்யா அவள் வருகைக்காக எதிர்பார்த்து  அறை வாசலையே பார்த்து அமர்ந்திருந்தான்..

அல்லி உள்ளே நுழைந்ததும் “ஹலோ மிஸ். சண்டி ராணி.. குட் மார்னிங்..” அவனை அவ்வளவு காலையில் எதிர்ப்பார்க்காதவளின் முகத்தில் ஏற்பட்டு இருந்த அதிர்வை ரசித்து புன்னகைத்த படியே குரலில் உற்சாகம் பொங்கி வழிய வரவேற்றான் அவளை..

அவன் குரலில் உற்சாகம் பொங்கியதே தவிர அவன் பார்வையின் தீட்சண்யம் நீ எங்கு சென்றாலும் உன்னை விடமாட்டேன் என்று அவளிடம் மிரட்டலாய் சொல்லி கொண்டு இருந்தது..

“இப்ப எதுக்கு கம்பெனி முழுக்க ஏசி போட்டு வச்சிருக்கீங்க? வாசல்ல வேற ஒரு கிளினிக் ஓபன் பண்ணி வச்சு இருக்கீங்க?”

அவள் கோவமாய் கேட்கவும் “முதல்ல ஒருத்தர் விஷ் பண்ணா பதிலுக்கு அவங்களுக்கு விஷ் பண்ணணும்ற சின்ன எடிகெட் கூட தெரியாம இருக்கீங்க மிஸ்.மின்னல் ராணி… இது கூட தெரியாத உங்க கூட பார்ட்னர்ஷிப் வெச்சுக்கணுமா எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு.. அதனால..” தன் கன்னத்தில் கையை வைத்து தேய்த்துக்கொண்டு யோசிப்பது போல் நின்றிருந்தவனை பல்லை கடித்துக் கொண்டு முறைத்தாள் அல்லி..

குரலில் ஒரு வித அழுத்தத்தோடு “கு…ட்ட்ட் மா….‌ர்ர்ர்..னிங்” என்றவள் “நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க.. இப்ப எநுக்கு தேவையில்லாம இந்த ஆடம்பர செலவெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க.. இவ்ளோ ஏசி போட்டா அதை யூஸ் பண்ணி வர்ற எலக்ட்ரிசிட்டி பில்லை யாரு கட்டறது..?” படபடவென பொரிந்தாள் அவள்..

தன் இருக்கையில் இருந்து அந்த இருக்கைக்குப் பின்னால் சென்று அதன் மேல் கைகளை கட்டி குனிந்து அவளை கூர்ந்து பார்த்தவன்.. “முதல்ல.. கெட் திஸ் ஸ்ட்ரெய்ட் இன் டு யுவர் ஹெட்.. இன்னொரு முறை நான் சொல்லமாட்டேன்..”

தன் நெற்றி பொட்டில் சுட்டு விரலை அழுத்தி சொன்னவன் “என் கம்பெனியில என்னை யாரும் கேள்வி கேட்கிறது எனக்கு பிடிக்காது.. நேத்தே உன்னிடம் கிளியரா சொன்னேன் நீ எங்க என் பாட்ட தான் வேலை செய்யற.. சோ இனிமே இந்த கம்பெனிய பொறுத்த வரைக்கும் என்னுடைய கேள்வி கேட்கறதுக்கு முன்னாடி பத்தாயிரம் தடவை யோசிக்கணும்..”

ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாய் வந்து வெளியே விழுந்தது..

“அப்புறம் மை டியர் அடிமை ராணி.. எப்படியும் நீ என் பார்ட்னரா வேலை செய்ற இல்ல? ஒரு பிசினஸ்ஸை எப்படி நடத்தணும்னு உனக்கும் கொஞ்சம் தெரியணும்.. அதனால இந்த ஒரு முறை உனக்கு பதில் சொல்றேன்.. முதல் விஷயம் என் கம்பெனில நான் இருக்குற இடத்துல நானும் என் ஒர்க்கர்ஸும் ஏசி இல்லாம இருக்க முடியாது.. ரெண்டாவது விஷயம் அப்பப்ப தலைவலி கால்வலின்னு ஏதாவது ஒரு வியாதியை சொல்லிக்கிட்டு  கம்பெனியில வேலை நடக்காம இருக்கிறது எனக்கு பிடிக்காது.. இந்த மாதிரி ஒரு கிளினிக் கம்பெனிக்குள்ள இருந்தா அவங்களுக்கு அப்பவே டிரீட்மென்ட் பண்ணி மறுபடியும் ஒரு ஒரு மணி நேரத்துக்கு எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சுரலாம்.. இதையே சாக்கா வெச்சு இரண்டு நாள் லீவு எடுக்கறது.. மூலைல உட்கார்ந்துட்டு வேலை நேரத்துல வேலை செய்யாம ரெஸ்ட் எடுக்கறது.. இதெல்லாம் என்கிட்ட நடக்காது”

அவன் ஒரு முதலாளியாய் அவன் லாபத்தை மனதில் வைத்து பேச  அவளுக்கு அப்படியே பற்றி கொண்டு வந்தது..

“மனுஷனுக்கு உடம்பு சரியில்லைன்னா கூட வேலை செய்யணும்கறான்.. என்ன மனுஷனோ இவன்..” என்று முணுமுணுத்தாள் அவள்..

“ஹலோ மிஸ் இம்சைராணி.. கொஞ்சம் சத்தமா பேசுங்க.. என் காதுலயும் விழற மாதிரி.. இந்த முணுமுணுக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்… இல்லைனா..” என்றவன் மெதுவாக நடந்து எதிரே அவள் உட்கார்ந்து இருந்த இருக்கைக்கு அருகில் வந்து அவளுடைய இரு பக்கம் கையை ஊன்றி அவள் முகத்தின் அருகே முகத்தை வைத்து பார்க்க அவளோ கண்களை உருட்டி பயத்துடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்தாள் அவனை..

அவள் மருண்ட விழியில் ஒரு நொடி மயங்கியவன் அடுத்த நொடி சுதாரித்துக்கொண்டான்..

“என்ன கண்ணுடா..?!” மனதிற்குள் சொல்லி கொண்டவன் குரலில் மிடுக்கை வரவழைத்து கொண்டு “இல்லைன்னா.. இப்படி கிட்ட வந்து கேட்க வேண்டி இருக்கும்.. அப்புறம் நான் உன்கிட்ட தப்பா நடக்குறேன்னு சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை..” என்றான்..

“இ..இ..இல்ல.. இனிமே சத்தமாவே பேசுறேன்.. நீங்க உங்க இடத்துலயே போ..போய் உட்கார்ந்துக்கோங்க” என்றாள் சொன்னாள் அவனிடமிருந்து தலையை பின்னிழுத்த படி…

அப்படியே அவள் எதிரே இருந்த மேஜையின் நுனியில் அமர்ந்தவன்.. “நான் எங்க உட்காரணும்னு நீ ஆர்டர் போடக்கூடாது மிஸ்.அல்லிராணி.. எனக்கு எங்க தோணுதோ அங்க உட்காருவேன்.. “

அவள் இருக்கையின் கைப்பிடி மேல் அவன் கால்களை வைத்துக்கொண்டு அப்படியே மேஜை மேல் அவள் முகத்தில் தான் பேசியதற்கு எதிர் வினைகளாய் பல்வேறு பாவனைகள் மாறி மாறி தோன்ற பார்வையால் அதை அளந்து ரசித்த படி அங்கு அமர்ந்து கொண்டு இருந்தான்..

அவள் சட்டென எழுந்து அங்கிருந்து வெளியே வந்து விட்டாள்.. “ரௌடி.. என்ன நினைச்சு இந்த கம்பெனியை ஆரம்பிச்சேன்.. இப்போ இந்த ராட்சசன் கையில மாட்டிக்கிட்டு ஒவ்வொரு நாளும் திண்டாடிக்கிட்டிருக்கேனே” என்று எண்ணி அவளுக்கு தன் மீதே வெறுப்பு வந்தது..

அப்போதுதான் அங்கே வேலை செய்பவர்களை கவனித்தவள் அம்மணி பாட்டி.. காமாட்சி பாட்டி.. இவர்களெல்லாம் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ செய்து கொண்டிருந்ததை பார்த்தவள்.. நேரே அவர்களிடம் சென்றாள்..

“பாட்டி யூஷ்வலா நீங்க பொடி பேக் பண்ற செக்சன்ல தான் வேலை செஞ்சுட்டு இருப்பீங்க? இப்ப இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க பாட்டி?”

“அதுவாம்மா? இந்த ஆதி தம்பி வந்து எங்களை இனிமேல் போடி பேக் பண்ற வேலை பண்ண வேண்டாம்ன்னு சொல்லி இந்த சேரில உட்கார்ந்தபடி பாக்கெட் போட்டப்புறம் சீல் எல்லாம் ஒழுங்கா இருக்கா.. எதுவும் டேமேஜ் இருக்கான்னு செக் பண்ணி மட்டும் அனுப்ப சொன்னாரு.. அதே மாதிரி பொடி அரைச்சப்புறம் அதை பார்த்து அதுவும் சரியான அளவுல அரைச்சி இருக்காங்களா.. கலரு, டேஸ்ட் எல்லாம் சரியா இருக்கா அப்படின்னு பார்க்கிறதுக்கு மட்டும் சொல்லி இருக்காரு… காலைல நீ வர்றதுக்கு முன்னாடியே அவர் வந்து எல்லாரையும் கூப்பிட்டு இதெல்லாம் சொல்லி இனிமே அவரும் இந்த கம்பெனிக்கு ஒரு பார்ட்னர்னும் எங்களுக்கெல்லாம் சொன்னாருமா..” அம்மணி பாட்டி ஒரு மனம் நிறைந்த புன்னகையோடு கூறினார்..

ஆதித்யா  அவன் ஆதிக்க வேலையை ஆரம்பித்து விட்டான் என்று புரிந்தது அவளுக்கு..

” சரி பாட்டி.. நீங்க வேலைய பாருங்க..” என்று சொல்லிவிட்டு அவள் திரும்பவும் காமாட்சி பாட்டி “அம்மா.. நல்ல வேலை பண்ண… அந்த புள்ளைய இந்த கம்பெனியில பார்ட்னரா சேர்த்துக்கிட்டே.. நேத்து நீ உன் ரூம்ல இருந்தப்ப எனக்கு லோ பிபி வந்து மயக்கம் வந்துருச்சு.. எல்லாரும் சுத்தி நின்னுட்டு இருந்தப்போ அந்த தம்பி தான் வந்து என்னை அப்படியே தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போச்சு.. அந்த டாக்டர் நான் வேர்க்க விறுவிறுக்க வேலை செஞ்சதனாலதான் எனக்கு இந்த மாதிரி மயக்கம் வந்ததுன்னு சொன்னார்.. அது கேட்டு அந்த தம்பி இன்னைக்கு காலைல இந்த கம்பெனி முழுக்க ஏசி போட்டு வெச்சிருக்கு.. அது மட்டும் இல்லாம வாசல்ல ஒரு கிளினிக்  தொறந்து வெச்சிருக்கான்.. ரொம்ப நல்ல தம்பிமா.. நீ சேத்தாலும் சேர்த்துக்கிட்ட ஒரு நல்லவரா தான் பார்ட்னரா சேர்த்திருக்கிறே..”

காமாட்சி பாட்டி குரலில் நெகிழ்வோடு சொல்லவும் அவளுக்கு ஒவ்வொன்றாக தெளிவாகியது..

“நல்லதை யோசிச்சு நல்ல விதமா எல்லாத்தையும் செஞ்சிட்டு என் கிட்ட பேசும் போது மட்டும் இவனுக்கு ஏன் இப்படி குறுக்கு புத்தி வேலை செய்யுது…  இவன் செய்த நல்ல வேலைக்கெல்லாம் என்னை வெறுப்பேத்தற மாதிரியே காரணம் சொல்லி என்னை எரிச்சல் படுத்தி விடுறானே.. எப்படியோ எல்லாருக்கும் நல்லது நடந்தா சரிதான்”

இப்படி யோசித்துக் கொண்டே வெளியே சென்றாள்.. அங்கே எல்லோரும் குடிப்பதற்கு டீ வந்திருந்தது..

அவர்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ரமேஷ் டீ குடித்துக் கொண்டிருந்தான்.. இவள் வந்தவுடன் இவளை பார்த்துவிட்டு “ஹலோ மிஸ்.அல்லி எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான்..

“என்ன ரமேஷ்..? நீங்க எப்படி இருக்கீங்க? உங்களோட மார்க்கெட்டிங் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? மசாலா பேக்கெட் எல்லாம் நல்லபடியா வாங்குறாங்களா?” என்று கேட்கவும் “நல்லபடியா போயிட்டு இருக்கு..” என்று சொன்னான்.. அவன் அவள் வீட்டு பக்கத்தில் தான் இருந்தான்..

“அப்புறம்.. அங்கிள் ஆன்ட்டி எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று அவள் கேட்கவும் “நல்லா இருக்காங்க.. உங்க அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்ற இவளைக் கேட்டான்..

“சூப்பரா இருக்காங்க.. “என்று சொல்லிக் கொண்டே இருந்தவளைப் பார்த்து “உங்களுக்கு சாரி கட்டுனா ரொம்ப நல்லா இருக்கு.. ஒரு சூப்பர் பிசினஸ்  உமனா ஒரு கம்பீரமான லுக்கு இருக்கு.. உங்கள பாத்தா எங்களுக்கு எல்லாம் எனர்ஜி வருது.. இன்னும் உற்சாகத்தோட எங்க வேலைய பண்றோம்.. நீங்க டெய்லி சாரில்லயே வாங்க .. சிங்கப்பெண் மாதிரி இருக்கீங்க..”

அவன் சுற்றி முற்றி பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தான்.. ஆனால் இவர்கள் பேசுவதை அவர்கள் பின்னால் இரண்டு கண்கள் கவனித்துக் கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை..

இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது இருவருக்கும் நடுவில் வந்து ரமேஷை எரிப்பது போல் முறைத்தபடி நின்றான் ஆதித்யா..

“மிஸ்டர் ரமேஷ்.. ஆக்சுவலி உங்க பிரேக் டைம் முடிஞ்சு ரெண்டு நிமிஷம் ஆகுது.. நீங்க இன்னும் இங்க என்ன அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க? ஏன் உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா? வேலை டைம்ல நீங்க இப்படி அரட்டை அடிச்சிட்டு இருந்தா நான் உங்க சம்பளத்துல கை வைக்க வேண்டி இருக்கும்.. போய் உருப்படியா வேலை பார்க்கிறீங்களா?” அவன்தீவிரமாய் முறைத்தபடி பல்லை கடித்து கொண்டு கேட்கவும் ரமேஷுக்கு முகத்தில் ஈயாடவில்லை..

அமைதியாக அவன் விற்க வேண்டிய சாமான்களை தன் வண்டியில் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..

அவன் போவதையே பார்த்து கொண்டு இருந்தவன் மெதுவாக அல்லி மலர் பக்கம் திரும்பினான்.. அவள் கண்களை ஊடுருவி உருத்து பார்க்க அவளோ அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தன் பார்வையை இங்கும் அங்கும் அலையவிட்டவள் எச்சில் விழுங்கி தடுமாறினாள்..

“ஐயோ.. இப்ப என்னை கழுவி ஊத்தறதுக்கு என்னென்ன ஸ்டாக்ல வச்சிருக்கானோ தெரியலையே..” அவன் தன்னை நிச்சயம் வறுத்தெடுப்பான் என்று தெரிந்து அவன் படபடவென வெடிப்பதை கேட்க தயாரானாள் அல்லி..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!