Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 21

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 21

by Subhashri Srinivasan
4.8
(13)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 21

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

தன்னை இழந்தாலும்….!!

“ஆமாம் சார்.. அது உள்ளே இருந்து வர்ற ஒயர் எரிஞ்சுக்கிட்டே வந்தது.. அப்புறம் நான் லேசா எரியும்போதே உள்ளே இருந்து தண்ணி எடுத்துட்டு வந்து கொட்டணும்னு வேக வேகமா அங்க சுத்தி முத்தி பார்த்தேன்.. அங்கே எதுவும் தண்ணி இல்லை.. அப்புறம் எங்க கடைக்கு ஓடி வந்து நான் தண்ணி எடுத்துட்டு போறதுக்குள்ள கடை முழுக்க எரிஞ்சிருச்சு.. அதுக்கப்புறம் உள்ள போக பயமா இருந்ததுனால தான் நான் வெளியேவே நின்னுட்டேன்..”

ஆதி கேட்ட கேள்விக்கு சிறிது பதட்டத்துடனே சொன்னார் மாலன்..

“ஓ… அப்படியா? ஓகே.. தேங்க்ஸ்..” என்றவன் மறுபடியும் அல்லியோடு அவர்களுடைய கடைக்கு சென்றான்..

“ஆமா.. உங்க அப்பா கடைக்கு வரும்போது தண்ணி எல்லாம் எடுத்துட்டு வர மாட்டாரா? ஆனா நான் அங்க ஒரு தண்ணி பாட்டில் பார்த்தேனே.. அதுவும் அரைகுறையாக எறிஞ்சு கிடந்தது..”

அப்போதுதான் அல்லிக்கும் தோன்றியது.. அவள் அப்பா எப்போது கடைக்கு வரும்போதும் தண்ணீரும் மதிய உணவும் எடுத்துக் கொண்டுதான் வருவார்.. அவளும் அந்த தண்ணீர் குடுவையை அங்கே பார்த்தாள்..

“அதானே..? அங்க கேஷ் கவுண்டர் பக்கத்திலேயே தண்ணி பாட்டில் இருந்ததே.. அங்கிள் ஏன் தண்ணி இல்லன்னு சொன்னாரு? ஒருவேளை கவனிக்கலையோ?”

அவள் யோசனையாய் கேட்க “ஆமா.. உங்க கடைக்கு இன்சூரன்ஸ் எல்லாம் பிராப்பரா இருக்கா?”

அவன் ஏதோ போலீஸ் போல விசாரிக்க அவளோ “அதெல்லாம் எங்க அப்பா சரியா செஞ்சுருவார்… ஆனா அதுலயும் முழு பணமும் கிடைக்காது.. முழுக்க நஷ்டம் ஆயிடுச்சு..” என்றாள் அவள்..

“சரி நீ இப்ப வீட்டுக்கு போ.. எனக்கு ஒரு டூடேஸ் டைம் குடு..  அப்புறம் கடையில ஆக்சிடென்ட் ஆனா பண்ண வேண்டிய இன்சூரன்ஸ் ப்ரோசிஜர்ஸ் இதெல்லாம் பார்த்து இந்த கடைக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வாங்க முடியும்னு நான் உனக்கு டீடைல் சொல்றேன்.. இது கூட உங்க அப்பாவை பாத்தா எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது.. அவர் அழறதை பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. அதனால இந்த விஷயத்தில கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னு நினைக்கிறேன்.. அதுக்காக நம்ம டீலிங்கை மறந்துடாத.. நீ இன்னைக்கு ஆஃபீஸ்ல பேசுன பேச்சுக்கு இப்படியே உன்னை இழுத்துட்டு போய்

சைன் வாங்கணும்னு தான் தோணுது.. ஆனா இப்போ உன் வீட்டோட நிலைமையும் சரி இல்ல.. அதனால போனா போகுதுன்னு நாளைக்கு வரைக்கும் உனக்கு டைம் தரேன்.. நாளைக்கு காலைல 10வது மணிக்கு நீ ஆஃபீஸ்க்கு வரணும்.. ஒன்னு வாடகை தாயா இருக்கிற டாக்குமெண்ட்ல சைன் பண்ணு… இல்ல கம்பெனி பார்ட்னர்ஷிப் கேன்சல் பண்ற டீல்ல சைன் பண்ணு.. உன் இஷ்டம்.. ஆனா மார்னிங் 10 மணி வரைக்கும் தான் உனக்கு டைம்.. இதை நல்லா மைண்ட்ல போட்டு வச்சுக்கோ..”

அவள் தலையில் சுட்டு விரலை தட்டி சொன்னவன் நேராக சென்று தன் காரில் ஏறி வண்டியை எடுத்துகொண்டு தன் வீட்டுக்கு புறப்பட்டான்..

அல்லி ஒரு பெருமூச்சை விட்டவள் மறுபடியும் தன் வீட்டிற்கு செல்லும் வழி முழுக்க அவனை பற்றி தான் யோசித்த படி போனாள்..

“இவன் என்ன மேக்கோ தெரியல.. ஒரு நேரம் ஹெல்ப் பண்றேங்கறான்.. ஒரு நேரம் என்கிட்ட இருக்கிற கம்பெனியை புடுங்கிக்கிறேன்கறான்.. ஐயோ.. இவனை புரிஞ்சிக்கவே முடியலையே.. மொத்தத்துல என்னை டார்ச்சர் பண்ணனும்னே வந்து இருக்கான்..” என்று புலம்பிக் கொண்டே போனாள் தன் வீட்டிற்கு..

அன்று இரவு அல்லியின்  தந்தை செழியன் நிகழ்ந்ததை நினைத்து புலம்பியபடியே இருக்க அல்லியும் அவள் அன்னையும் அவர் கூடவே அவரை சமாதானப்படுத்துவதில் தங்கள் உறக்கத்தையே மறந்திருந்தார்கள்..

ஒருவழியாக விடியற்காலை 3 மணிக்கு செழியன் உறங்க அதன் பிறகு தாமரையை உறங்க சொல்லிவிட்டு அல்லி தன் அறைக்கு சென்று படுத்தாள்.. ஆனால் அதன் பிறகும் அவள் கண்கள் உறக்கம் கொள்ளவில்லை..

காலை பத்து மணிக்கு ஆதி வைத்திருந்த கெடு அவள் மனத்தை உறங்கவிடாமல் அலை கழித்து கொண்டு இருந்தது.. இப்போது தன் குடும்பம் இருக்கும் நிலையில் தன் மசாலா நிறுவனத்தையும் இழந்தால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று புரிந்தது..

அடுத்த பத்து நாட்களில் இருக்க இடமும் இன்றி திண்டாட வேண்டி இருக்கும் என்று உணர்ந்து தான் இருந்தாள்..

ஆனால் அதற்காக திருமணம் செய்யாமல் குழந்தை பெறுவதை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை..

அப்படியே விழியோரம் நீர் வழிந்தோட சிறிது நேரம் படுத்திருந்தவள்.. சீக்கிரமே படுக்கையில் இருந்து எழுந்து காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு வந்தவள் தன் கோலம் போடும் வேலையை முடித்து தன் அன்னை தந்தைக்கும் சேர்த்து காபி போட்டு அவர்களுடைய அறைக்கு எடுத்து போனாள்..

அவர்களை எழுப்பி பருக காபி கொடுத்து உற்சாகமாய் அவர்களோடு பேசியவள் அன்றைய காலை சிற்றுண்டியையும் மதிய உணவையும் தானே சமைத்து அவர்கள் இருவரோடும் உட்கார்ந்து சிற்றுண்டியை இருவருக்கும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு பிறகு தாமரையிடம் அவள் தந்தை செழியனை எங்கேயாவது கோவிலுக்கு அழைத்துப் போகச் சொல்லி ரகசியமாய் சொல்லிவிட்டு தனக்கு மதிய உணவை எடுத்துக் கொண்டு அவர்களிடம் அலுவலகத்திற்கு  போவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள்..

வீட்டிலிருந்து கிளம்பியவள் நேராக அவள் வீட்டு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்றாள்.. அங்கு கோவிலின் உள்ளே சென்று பிள்ளையார் எதிரே அமர்ந்தவள்.. கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..

“கடவுளே.. ஏன் என்னை இப்படி தர்ம சங்கடமான நெலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கே.. நான் என்ன பண்ணுவேன்? இந்த ரெண்டு விஷயமும் எனக்கு ரொம்ப முக்கியம்.. அந்த பொண்ணுங்களையும் நடுத்தெருவில நிறுத்த முடியாது.. என் குடும்பத்தையும் நடுத்தெருவுல நிறுத்தமுடியாது.. அதுக்காக கல்யாணம் பண்ணாம நான் ஒரு குழந்தையை சுமக்க முடியாது.. நீ எல்லாருடைய விக்னங்களையும் தீர்த்து வெப்பன்னு எல்லாரும் சொல்றாங்க.. இந்த பிரச்சனைக்கு நீ தான் ஒரு முடிவு சொல்லணும் பிள்ளையாரப்பா… எங்க அப்பாவோட கௌரவத்துக்கு எந்த பாதிப்பும் வராம அதே சமயம் எங்க வீட்டோட.. அந்த பொண்ணுங்களோட வாழ்வாதாரத்துக்கும் எந்த பாதிப்பும் வராம எனக்கு ஏதாவது ஒரு முடிவு சொல்லு..” அழுதபடி மனமார கரைந்து வேண்டினாள் கணபதியை…

அந்தப் பிள்ளையார் கோவிலில் விநாயகரின் எதிரில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவளின் கண் முன் ஒரு சிறிய குடும்பம் பட்டது.. அவர்கள் ஒரு 3 வயது பெண் குழந்தையை கையில் வைத்திருந்தார்கள்..

குழந்தையை ஒரு தள்ளுவண்டியில் தள்ளி கொண்டு வந்தவர்கள் பிரகாரத்தில் அந்த குழந்தையை இறக்கிவிடவும் அவள் வேகமாக பிரகாரத்தின் இன்னொரு பக்கத்திற்கு கண் மறைவாக ஓடி சென்று விட்டாள்..

அவள் பின்னே ஓடி சென்று அவளை தூக்கி வந்த அந்த குழந்தையின் தந்தை மறுபடியும் அவளை தள்ளுவண்டி இருக்கையிலே அமர வைத்து தள்ளிக் கொண்டு போனார்..

குழந்தை தன்னைக் கீழே இறக்கி விடச் சொல்லி கேட்டது..

அதற்கு அவளின் அம்மா “நான் உன்னை கீழே இறக்கி விடுறேன்.. ஆனா எங்க கண்ணு முன்னாடி தான் விளையாடணும்.. அந்த பக்கம் எல்லாம் கண் மறைவா போகக்கூடாது.. அப்படின்னா இங்க இறக்கிவிடுறேன்.. இல்லன்னா இந்த வண்டியிலதான் நீ உட்கார்ந்திருக்கணும்” என்று சொன்னாள்..

இதைக் கேட்ட அந்த குழந்தை “நான் இங்கேயே விளையாடுறேன்..” என்று சொல்லவும் அவளைக் கீழே இறக்கி விட்டார்கள். அந்த குழந்தை அவர்கள் கண் முன்னாடியே விளையாடிக் கொண்டிருந்தாள்..

இதைப் பார்த்த அல்லிக்கு தன் கஷ்டத்தை தாண்டியும் சிரிப்பு வந்தது.. இந்த குழந்தை போலவே இருந்திருந்தால் இப்போது இருக்கும் கஷ்டம் ஒன்றுமே இருந்திருக்காது என்று எண்ணியவள் மறுபடியும் தன் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று யோசித்தாள்..

அப்போது அவள் மூளையில் ஒரு பொறி தட்டியது.. அந்தத் தாய் எடுத்த முடிவினால் அந்த குழந்தையும் அவள் ஆசைப்பட்டபடி விளையாடினாள்… அதே சமயம் அந்த தீர்வு பெற்றோரின் கவலைக்கேற்ப அவர்கள் கண் முன்னால் அந்த குழந்தை பாதுகாப்பாக விளையாடுவதற்கும் உதவியது..

இப்போது தனக்கு இருக்கும் பிரச்சினையிலும் தான் இதையேதான் செய்ய வேண்டும் என்று எண்ணினாள்.. என் மானத்திற்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. அதே சமயம் தன் அலுவலகத்தில் உள்ள பெண்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று சிறிது யோசித்தவளுக்கு சட்டென ஒரு நல்ல தீர்வு புலப்பட்டது..

விநாயகரின் பக்கம் திரும்பியவள் கண்ணில் நீர் மல்க அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நிறுவனத்தை நோக்கி புறப்பட்டாள்..

அங்கே ஆதித்யா அவன் சொன்னபடி அந்த அலுவலக அறையிலேயே அமர்ந்திருந்தான்..

“என்ன அல்லி.. யோசிச்சிட்டு வந்துட்டியா? என்ன முடிவு பண்ண? எந்த டாக்குமெண்ட்ல சைன் பண்ண போறே?”

அவன் திமிராய் கேட்க “நான் வாடகை தாயா இருக்க ஒத்துக்கற டாக்குமென்ட்லயே சைன் பண்றேன்” என்றாள் அவள்..

அவன் தான் நினைத்தது போலவே எல்லாம் நடக்கப் போவதை எண்ணி இதழ் விரித்தான்..

“ஆனா அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னொரு டாகுமெண்ட்ல சைன் பண்ணனும்”

அவள் அவனைக் கூர்ந்து பார்த்தபடி கூறவும் அவன் ஒன்றும் புரியாமல் ஒரு குழப்பத்தோடு அவளை பார்த்தான்..

“எந்த டாக்குமெண்ட்ல நாம இரண்டு பேரும் சேர்ந்து சைன் பண்ணணும்?”

ஒரு புரியாத பார்வையோடு கேட்டான் அவன்..

“ஒரு டாக்குமென்ட்ல இல்ல… ரெண்டு டாக்குமெண்ட்ல சைன் பண்ண வேண்டி இருக்கும்” என்றாள் அவள்..

அவனுக்கு தலை சுற்றியது.. “நானே ரெண்டு பத்திரத்தை கொண்டு வந்து அவ முன்னால நீட்டி இருக்கிறேன்.. இவ என்னடான்னா இன்னும் ரெண்டு பத்திரத்தில கையெழுத்து போடணும்னு சொல்றா..”

அவளை ஆச்சரியமாக பார்த்தவன் “கொஞ்சம் எனக்கு புரியிற மாதிரி சொல்றியா? என்கிட்ட நிறைய டைம் கிடையாது உன்னோட வளவளன்னு பேசுறதுக்கு” என்றான்..

“முதல்ல நம்ம சைன் பண்ண வேண்டிய டாக்குமெண்ட் நம்ம கல்யாண ரிஜிஸ்ட்ரேஷன் டாக்குமெண்ட்..” என்றவுடன் “என்னது?” என்று அவன் ஆரம்பிக்கவும் “ஒரு நிமிஷம்.. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அதுக்கப்புறம் இதுக்கு உனக்கு சம்மதமா இல்லையான்னு சொல்லு..” என்றாள் அவள்..

“சரி சொல்லு” என்றான் அவன் பொறுமை இழந்து..

“ஒரு டாக்குமெண்ட் நம்ம கல்யாண ரெஜிஸ்ட்ரேஷன் டாக்குமெண்ட்… இன்னொரு டாக்குமெண்ட் நம்ப டிவோர்ஸ் டாக்குமெண்ட்” என்றாள் அவள்…

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!