Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 22

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 22

by Subhashri Srinivasan
4.6
(18)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 22

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

கானலாய் ஒரு வாழ்வு..!!

“டிவோர்ஸ் டாக்குமென்ட்டா?”

அவன் அதிர்ந்து கேட்க “ஆமா.. என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்காம உன் குழந்தையை சுமக்க முடியாது.. அதே சமயம் உன்னால காலம் முழுக்க என்னை பொண்டாட்டியா வெச்சு வாழ முடியாது.. இது ரெண்டுத்துக்கும் ஒரு சொல்யூஷன் வேணும்னா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. உன் குழந்தையை வாடகை தாயா இருந்து நான் பெத்து கொடுக்கறேன்.. அந்த குழந்தையை பெத்தப்புறம் டிவோர்ஸ் பண்ணி பிரிஞ்சிடலாம்.. அந்த டிவோர்ஸ் பத்திரத்துல நான் இப்பவே கையெழுத்து போட்டுடறேன்… குழந்தை பெத்து கொடுத்த அடுத்த நாளே நீ டிவோர்ஸ் ஃபைல் பண்ணிடலாம்.. மியூச்சுவல் கன்சென்ட்ங்கறதனால ஈஸியா கொஞ்ச நாள்லேயே டிவோர்ஸ் கிடைச்சுடும்” என்றாள் அவள்..

அவள் அவ்வளவு தெளிவாக பேசிக்கொண்டிருந்ததை கேட்டவன் “பரவாயில்லையே சண்டி ராணி.. சூப்பர் ஸ்மார்ட்டா யோசிச்சிருக்கே.. எல்லாருக்கும் ஒத்து வர்ற மாதிரி… நானும் குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ எங்க வீட்ல.. எங்க கண்காணிப்பில தான்.. இருக்கணும்னு சொல்லணும்னு நினைச்சேன்.. இப்போ நீ சொல்ற சொல்யூஷனும் அதுக்கேத்த மாதிரியே இருக்கு.. வெரி ஸ்மார்ட்.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. நான் அருண் கிட்ட சொல்லி இது எல்லா டாகுமெண்ட்ஸையும் உடனே ஏற்பாடு பண்ண சொல்லிடறேன்” என்றான் அவன்..

“எனக்கு இதுல இன்னொரு முக்கியமான ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு” என்றாள் அவள்..

“அதானே எப்பவுமே ஒரு கண்டிஷன்ஸ் அப்ளை போடாம உனக்கு தூக்கம் வராதே.. சொல்லு.. என்ன ரிக்வெஸ்ட்?” என்று கேட்டான் அவன்..

“நான் வாடகை தாயா இருந்து தான் உனக்கு குழந்தை பெத்து குடுக்க போறேன்கிற விஷயமோ இல்ல நம்ம ஒரு வருஷத்துக்கு அப்புறம் விவாகரத்து பண்றதுக்கு இப்பயே இந்த டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணி இருக்கோம்ன்ற விஷயமோ வெளிய யாருக்குமே தெரியக்கூடாது.. தயவு செஞ்சு இந்த ஒரு ஹெல்ப்பை மட்டும் எனக்கு பண்ணு.. அந்த அருண் கிட்டயும் சொல்லிடு ப்ளீஸ்..” கெஞ்சலாய் கேட்டாள் அவள்..

“ஓகே.. இதுல எனக்கு எதுவும் நஷ்டம் இல்லை.. சோ இந்த விஷயம் நீ.. நான்.. அருண்.. எங்க அப்பா.. நாலு பேரை தவிர வேற யாருக்கும் தெரியாது.. இது என்னோட ப்ராமிஸ்..நீ தைரியமா இருக்கலாம்..” என்று சொன்னான் அவன்..

“இப்படித்தான் முதல் நாள் பார்ட்னர்ஷிப் டாக்குமெண்ட் சைன் பண்ணும் போது நீ சொன்னே.. ஆனா நேத்திக்கு வந்து வேற மாதிரி சொல்லி பெரிய குண்டையே என் தலையில போட்ட.. அதே மாதிரி இந்த விஷயத்திலும் நடந்துக்கமாட்டேன்னு நான் நம்புறேன்.. உன்னை ரெண்டாவது முறையா நம்புறேன்.. உன் வார்த்தையை தயவு செஞ்சு காப்பாத்து.. நீ கொடுத்த பிராமிஸ்ஸை உடைச்சுடாதே..” அவனை தீர்க்கமாய் பார்த்து சொன்னாள் அவள்..

“ஓகே ஓகே.. கூல்.. ஆக்சுவலி இந்த குழந்தை பிரச்சனை வரலேன்னா போன முறையே நான் என் பேச்சிலிருந்து மாறி இருக்க மாட்டேன்.. ஆனா இதுக்கு ஒரு சொல்யூஷன் வேணும்னுதான் நேத்திக்கு நான் என் பேச்சிலருந்து மாற வேண்டியதா போச்சு.. எல்லாம் நல்லபடியா முடியும்னா ஓகே.. எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல..” என்றவன் தொடர்ந்தான்..

“ஆனா இது நடுவுல எந்த பிராப்ளமும் உன்னால வரக்கூடாது.. அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ.. குழந்தையை பெத்து குடுத்துட்டு நடையை கட்டிட்டு போயிட்டே இருக்கணும் நீ.. இந்த வாடகை தாயா இருக்கேன்னு சைன் பண்ற டாகுமெண்ட்லயே குழந்தை பெத்தப்புறம் உனக்கும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு நான் ஒரு கிளாஸ் போட்டு இருக்கேன்.. சோ அதுக்கும் சேர்த்துதான் நீ சைன் பண்றே.. ஞாபகம் வச்சுக்கோ… குழந்தை பெத்து குடுத்துட்டு கொஞ்ச நாள் கழிச்சு அந்த குழந்தையை பார்க்கணும்.. அந்த குழந்தையோட பேசணும்.. இந்த குழந்தைக்காக எங்க வீட்ல வந்து இருக்கணும்.. இப்படி எல்லாம் நீ பிரச்சினை பண்ணினா நடக்கிறதே வேற.. ரொம்ப அசிங்கப்பட்டு போயிடுவே” என்றான் அவன் மனசாட்சியே இல்லாமல்..

“இல்ல.. நான் அதெல்லாம் பண்ண மாட்டேன்.. நீ தாராளமா என்னை நம்பலாம்.. உன்னை மாதிரி நான் ஒரு வார்த்தை குடுத்துட்டு அதுக்கப்புறம் அதிலிருந்து பின் வாங்க மாட்டேன்..” அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவன் சொன்ன வார்த்தையில் இருந்து தவறியதை குத்தி காட்டினாள் அல்லி..

“ஓகே தென்” என்றவன்.. “நான் அருணை இது எல்லா டாகுமென்ட்ஸூமே எடுத்துட்டு வர சொல்றேன்.. நம்ப ரெண்டு பேரும் சைன் பண்ணிடலாம்” என்றான் அவன்..

” ஒரு நிமிஷம்”  என்றவளை பார்த்து “மறுபடியும் என்ன?” என்றான் அவன்..

“நான் சொன்ன மாதிரி நான் வாடகை தாயா இருக்கறதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேங்கிறது எங்க அப்பாக்கு தெரிய வேண்டாம்.. நம்ப இப்போ பத்திரத்தில் சைன் பண்ணிட்டு அதுக்கப்புறம் அந்த ப்ரொசீஜர் எல்லாம் பண்ணினோம்னா எங்க அப்பாக்கு நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுரும்.. அவருக்கு சந்தேகம் வரக்கூடாது.. எங்க அப்பா அம்மா முன்னாடி ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல முறையா நீ எனக்கு மாலை போட்டு தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்க வேண்டி இருக்கும்.. இதுக்கு உனக்கு ஓகேன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. நிச்சயமா நான் டைவர்ஸ் பேப்பர்ஸ்ல என்னைக்கு நம்ம மேரேஜை ரெஜிஸ்டர் பண்றமோ அன்னைக்கே சைன் பண்ணிடுவேன்.. இது நான் உயிரா நெனைக்கிற எங்க அப்பா அம்மா மேல சத்தியம்” என்று சொன்னாள்..

“நீ எவ்வளவு ஃபேமிலி அட்டாச்ட்னு எனக்கு தெரியும்.. சோ.. நான் உன்னை நம்புறேன்.. ஓகே.. நீ உங்க அப்பா கிட்ட விஷயத்தை சொல்லி எப்படியோ அவரை இந்த மேரேஜ்க்கு ஒத்துக்கறதுக்கு கன்வின்ஸ் பண்ணிடு.. இந்த மேரேஜ் இன்னும் ஒன் வீக்குக்குள்ள நடக்கிற மாதிரி பார்த்துக்கோ.. என்னால அதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது..” என்றான் அவன்..

“ஒண்ணும் பிராப்ளம் இல்ல.. நீ சொல்றபடியே பண்ணிடலாம்.. “என்று அல்லி சொல்லவும் அவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்..

அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அல்லி தன் வாழ்க்கை தொடங்கும் போதே அதை முடித்து விட்ட விதியை எண்ணி எண்ணி கண்ணில் தாரைதாரையாக நீர் வழிய அழுது கொண்டிருந்தாள்..

அடுத்து அவள் வாழப்போகும் ஒரு வருட வாழ்க்கையில் அவளுக்கு கணவனாக இருக்கப் போகும் ஆதியும் கிடைக்கப் போவதில்லை.. பிறக்கும் குழந்தையும் அவளுக்கு சொந்தமாக இருக்க போவதில்லை..

அவள் செய்து கொள்ளும் திருமணமும் கானல் நீராய் போகப் போகிறது.. நினைத்து நினைத்து அந்த மேஜையில் கவிழ்ந்து படுத்து குலுங்கி குலுங்கி அழலானாள்…

மாலையில் தன் வீட்டிற்கு சென்றவள் இந்த விஷயத்தை தன் தந்தையிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு அவள் தந்தையிடம் பொய் சொல்லி பழக்கம் இல்லை.. இப்போதுதான் முதல் முறையாக அவள் தந்தையிடம் இருந்து சில விஷயங்களை மறைக்கப் போகிறாள்.. இதை எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டே தன் அறைக்கு சென்றாள் அவள்..

இங்கே ஆதித்யா வீட்டில் அவன் வீட்டிற்கு வந்த உடனே அவன் தந்தையை பார்க்க சென்றான்..

“ஹாய் டாட்.. உங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வந்துட்டேன்..” என்றான் அவன்..

“என்ன.. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வந்துட்டியா? என்ன சொல்ற?”

இவன் என்ன விவகாரம் செய்து வைத்திருக்கிறானோ என்ற கலவரத்துடனே அவர் கேட்கவும் “நீங்க சொன்ன மாதிரியே அன்பா நல்ல குடும்ப பொண்ணா இருக்கிற ஒரு பொண்ணுகிட்ட வாடகை தாயா இருக்கிறதுக்கு சம்மதம் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றான் அவன்..

“இந்த விஷயத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கான்னா அவ நிச்சயமா நீ குடுத்த ஏதோ ஒரு குடைச்சலுக்காக தான் ஒத்துக்கிட்டிருப்பா… தன்னோட மானத்துக்காக பயப்படுற எந்த பொண்ணும் இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி வாடகை தாயா இருக்கறதுக்கு ஒத்துக்க மாட்டா” என்று சொன்னார் அவர்..

“எஸ் டாட்.. அக்சப்ட்டட்.. அந்த பொண்ணு அப்படித்தான் சொன்னா.. ஆனா அதுக்கு சொல்யூஷனும் அவளே சொல்லிட்டா.. அவ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம் விவாகரத்தும் பண்ணி தரேன்னு சொல்லி இருக்கா.. சோ.. பிராப்ளம் சால்வ்ட்.. உங்களுக்கு உங்க பேரக் குழந்தையும் கிடைச்சிடுவான்.. எனக்கு வாழ்க்கை முழுக்க ஒரு பொண்ணோட இருக்கணும்னு அவசியம் இல்ல.. சோ.. ரெண்டு பேருக்குமே பிரச்சனை தீர்ந்து போச்சு.. இப்ப என்ன சொல்றீங்க டாட்?” என்று கேட்டான் அவன்..

இவன் என்ன செய்திருந்தால் அந்தப் பெண் எவ்வளவு வலியுடன் இதற்கு ஒத்துக் கொண்டிருப்பாள் என்று யோசித்தார் அவர்..

” ஆதி.. யாருடா அந்த பொண்ணு?” என்று அவர் கேட்கவும்

“அவதான்பா அல்லி மலர்.. எப்பவும் என்னோட சண்டை போட்டுட்டு இருப்பாளே.. அந்த பொண்ணுதான்.. நீங்க கூட அன்னிக்கு சொன்னிங்களே.. அந்த பொண்ணை பத்தி கேட்டா அவ நல்ல அன்பான பொண்ணுன்னு  தோணுதுன்னு.. சாக்ஷாத் அவளே தான்..” அவன் சிரித்துக்கொண்டே கூறினான்..

“இதுல எனக்கு ஒரே கல்லில ரெண்டு மாங்காய் அடிச்ச மாதிரி இருக்கு.. அவ வேலையிலயும் அவளுக்கு நான்தான் பாஸா இருக்க போறேன்.. இந்த ஒரு வருஷம் அவளோட பர்சனல் வாழ்க்கையிலும் அவளுக்கு நான்தான் பாஸா இருக்க போறேன்..” ஒரு இறுமாப்போடு சொன்னான் அவன்..

“ஆதி.. இதுக்கு அவங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்களா?”

“ஆக்சுவலி அவங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க போல.. அதனாலதான் அவ அவங்க அப்பாக்கு இந்த டிவோர்ஸ் பத்தியோ இல்ல வாடகை தாயா இருக்கிறது பத்தியோ தெரியக்கூடாதுனு சொன்னா.. அது தவிர முறையா ரெஜிஸ்டர் ஆஃபீஸ் போய் மாலை மாத்தி தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கணும்னு வேற கண்டிஷன் போட்டிருக்கா அந்த சண்டி ராணி..” என்றான் அவன்..

“டேய் ஆதி.. அந்த பொண்ணு பாவம்டா.. அவ அப்பாகிட்ட திடீர்னு ஒருத்தரை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கணும்னு எப்படி போய் சொல்லுவா.. ஒரு பொண்ணா அது அவளுக்கு ரொம்ப கஷ்டம்.. சரி.. நானே முறையா போய் அவங்க வீட்ல இப்பவே பேசிட்டு.. பொண்ணு கேட்டுட்டு வரேன்..” என்றவரை தடுக்க முனைந்தான் ஆதித்யா..

“பொண்ணு கேட்க போறீங்களா? டாட்.. நீங்க எதுக்கு இவ்வளவு மெனக்கெடுறிங்க… அதெல்லாம் வேண்டாம்.. அவளே பாத்துக்குறேன்னு சொல்லிட்டா.. நீங்க கவலைப்படாதீங்க..”

அவன் சொன்னதை கேட்டு “நீ சும்மா இரு.. எனக்கு தெரியும் நான் இப்ப போய் அவங்க வீட்ல பொண்ணு கேக்க தான் போறேன்.. நீ என்னை கூட்டிட்டு போறியா இல்ல நான் டிரைவரோட போகட்டுமா?”  என்று கேட்டார் அவர்.. 

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!