Home Novelsஅசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 8

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 8

by Subhashri Srinivasan
4.9
(16)

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 8

– சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

கவரிமான் பெண்ணவள்…!!

“இவ்ளோ அழகா இருக்கற உன்னை ஒரு தடவையாவது அடைஞ்சுடணும்னு என் மனசு கிடந்து துடிக்குது.. 2 மாசமா அந்த ஆசையை அடக்கி வச்சிட்டு நீ சொல்றதுக்கு எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கேன்.. இப்ப என்னடான்னா ஒரே நிமிஷத்துல வேலையை விட்டுட்டு போறேங்குற?”

மிதுன் அல்லி மேல் காமப்பார்வை வீசியபடி சொல்ல அதைக் கேட்டவள் அதிர்ந்தாள்..

“மிதுன்.. என்ன பேசுறீங்க? நீங்க தெரிஞ்சு தான் பேசுறீங்களா? நீங்க ஒரு பொண்ணு கிட்ட பேசுறீங்கங்கறதை மறந்துடாதீங்க.. உங்ககிட்ட வேலைக்கு வந்துட்டா நீங்க எது சொன்னாலும் கேப்பேன்னு நெனச்சீங்களா? நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. எனக்கு இந்த வேலையே வேண்டாம்… ரிஸிக்னேஷன் லெட்டர் கொடுக்கலைன்னா என்ன.. இந்த மாசம் சம்பளம் கொடுக்க மாட்டீங்களா? எனக்கு அதுவும் ஓகே தான்.. இப்படி ஒரு கேடுகெட்ட மனுஷன் இருக்கிற இடத்தில வேலை செய்யறது எனக்கு தான் அவமானம்.. உங்ககிட்ட இருந்து இவ்ளோ நாள் சம்பளம் வாங்கினதை நினைச்சு நான் வெட்கப்படுறேன்.. நான் கிளம்புறேன்.. குட் பை..”

அவனை தீவிரமாய் எரிப்பது போல் முறைத்து விட்டு திரும்பி வெளியே போக அந்த அறையின் கதவருகே சென்று கதவை திறக்க அதன் மேல் கை வைத்தாள் அல்லி..

ஆனால் அவள் அந்த கதவை திறப்பதற்குள் மிதுன் தன் இடத்தில் இருந்து எழுந்து நாலு கால் பாய்ச்சலில் தாவி வந்து அவளின் கையைப் பிடித்து அவளை உள்ளே தள்ளினான்..

அப்படியே போய் மேஜையில் இடித்து நின்றவள் மிருகமாக மாறி இருந்த அவனை பார்த்து “மிதுன் என்ன பண்றீங்க நீங்க?” என்று கேட்கவும் “என்னடி ரொம்ப தான் பத்தினி வேஷம் போடுற..? இன்னிக்கு ஒரு நாள் என் கூட இருந்துட்டு அப்புறம் எங்க வேணா போ.. நீ இன்னைக்கு ஒரு நாள் இருக்கிறதுக்கு உன்னை பணமழையிலே அப்படியே குளிப்பாட்டிவிடுறேன்..”

கேவலமாக இளித்தபடி தலையை சாய்த்து அவளை அவள் உடல் கூசி போகும் விதமாக கால் முதல் தலை வரை தன் கன்னத்தை சொறிந்தபடி தன் பார்வையை மேய விட்டு கொண்டே சொன்னான் அவன்..

அல்லியோ பத்ர காளியாக மாறி போனாள் அவன் பேசியதை கேட்டு.. அவன் பார்வை அவள் உடலை கூச வைக்க அவனை அருவருப்பாக பார்த்தவள் கண்கள் அக்னி பிழம்பை கக்கி கொண்டு இருந்தது..

“டேய் பொறுக்கி.. இந்த மாதிரி வேலை எல்லாம் பண்றதுக்கு வேற ஆள பாரு.. உன் பணத்துக்காக இதெல்லாம் செய்ற பொண்ணுங்கணண கிட்ட போய் சொல்லு.. நான் நெருப்புடா.. கிட்ட வந்த.. எரிச்சிடுவேன்” எச்சரித்தாள் அவள்..

“ஓ அப்படியா? நான் எரிஞ்சு போறேனான்னு நானும் பார்க்கிறேன்.. வாடி என் செல்லக்குட்டி..!!” என்றபடி அவளை பிடிக்க வந்தான்…

அந்த அறையில் இருவரும் ஓடிப் பிடித்து கொண்டிருக்க கால் மணி நேரம் ஆகியும் அவள் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடி தன் பெண்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கைக்கு கிடைத்த பொருள் எல்லாம் அவன் மீது விட்டெறிந்து போராடிக் கொண்டிருக்க திடீரென அவள் கையைப் பிடித்தவன் அப்படியே அங்கிருந்த சோஃபாவில் அவளை தள்ளி அவள் மேல் படர்ந்தான்..

“சீ.. என்னை விடுடா.. நான் போகணும்.. வேண்டாம்.. கொன்னுடுவேன்டா உன்னை..” என்று சொல்லியபடி அவன் முகத்தில் காரி  துப்பினாள்..

தன் முகத்தை துடைத்து கொண்டவன் “பேபி.. உன் எச்சிலாலை என்னை குளிப்பாட்டணும்னா வேற மாதிரி செய்டி என் தங்கம்..”  அவள் இரண்டு கைகளையும் தன் கைகளால் இறுக்கி பக்கவாட்டில் பிடித்தபடி அவள் முகத்தை இன்னும் நெருங்கினான் அவன்..

தன் கைகளை அவனின் இறுகிய பிடியில் இருந்து விடுவித்தவள் முகத்தை பக்கவாட்டில் திருப்பியபடி அவன் பிடியில் இருந்து வெளிவர திமிறியபடி போராடினாள்..

தன் கைகளால் அவனை அடித்து  நகங்களால் அவனை பிராண்ட ஆரம்பித்தாள்.. அவன் கைகளைக் கடிக்கவும் ஆரம்பித்தாள்..

வலியில் அலறியவன் “என்னடி ரொம்ப ஆடுற?” என்றபடி ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறை வைத்தான்.. அந்த அறையின் வேகத்தில் அவள் வாயோரம் உதடு கிழிந்து ரத்தம் வர அப்படியே மயங்கி விழுந்தாள் பெண்ணவள்..

இதுதான் சமயம் என அவள் பெண்மையைத் திருட அவள் முகத்தின் அருகில் நெருங்கியவன் முகத்தில் வேகமாக ஒரு குத்து விழுந்தது.. அவனுடைய தலையில்  பொறி கலங்கியது..

தன்னை யார் அடித்தது என்று கலங்கிய கண்களோடு நிமிர்ந்து பார்த்தவன் அங்கே எதிரில் ஆதித்யா கோபமாக மலைபோல் நின்று கொண்டிருப்பதை பார்த்தான்..

“டேய் ஆதித்யா.. நீ எப்படிடா இங்க வந்த?” என்று அவன் கேட்கவும் அவனுக்கு பதில் அளிக்காமல் சரமாரியாக அடி உதைகளை கொடுத்துக் கொண்டே போனான் ஆதித்யா..

இப்படி இருவரும் அடிதடி செய்து கொண்டிருக்க அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் கண் விழித்த அல்லி அங்கு ஆதித்யா வந்து மிதுனை அடித்துத் துவைத்துக் கொண்டிருப்பதை ஆச்சரியமாக பார்த்து அதற்கு மேல் தான் அங்கு இருந்தால் தன் பெண்மைக்கு ஆபத்து வந்துவிடும் என கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தாள்..

மிதுனை போட்டு புரட்டி எடுத்தவன் அவன் துவண்டு போய் “வேணாண்டா.. இதுக்கு மேல அடிக்காத..” என்று கெஞ்சவும் அதற்கு மேல் அடித்தால் அவன் செத்து விடுவான் என்று தோன்ற அவனை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்..

“மரியாதையா அல்லி கால்ல விழுந்து மன்னிப்பு கேளு.. நீ செஞ்ச தப்புக்கு..” என்று  அவனை பிடித்து அவள் காலில் தள்ளினான்..

“சாரி அல்லி..” என்றவனைத் துச்சமாக பார்த்தாள் அல்லி..

“சீ.. நீ எல்லாம் ஒரு மனுசனா? ஒரு பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா? ஆதித்யா வந்ததுனால உன்னை வெறும் அடியோட காப்பாத்திட்டான்.. அவர் வரலைன்னா இந்நேரம் நீ செத்துப் போய் இருப்ப.. கொன்னே போட்டு இருப்பேன் உன்னை நான்..”

அவனை ஆக்ரோஷமாக பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தவளை பார்வையில் அதீத‌ வியப்போடு பார்த்து கொண்டு இருந்தான் ஆதி..

“இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.. இந்த முறை நீ பொழைச்சுட்ட.. என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டே.. இன்னொரு பொண்ணுக்கு இந்த மாதிரி பண்ணனும்னு நெனச்சே ஆதித்யா வர வேண்டாம்.. அடுத்த முறை நானே உன்னை கொன்னுடுவேன்..”

அவன் முகத்திற்கு நேராக தன் சுட்டு விரல் நீட்டி தீவிரமாய் எச்சரித்தாள் அவள்.. ஒரு சிங்கப் பெண்ணாய் அவள் சீறி இருந்தாள் அந்த கயவன் மீது..

ஆதித்யா மிதுனை பார்த்து “டேய்.. என்னடா பாத்துட்டு இருக்க..? அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேளுன்னு சொன்னேன் இல்ல? அல்லி.. நீ உடனே கிளம்பு.. போலீஸ் ஸ்டேஷன்ல போய் இவனை பத்தி ஒரு கம்ப்ளைன்ட் கொடுப்போம்.. காலம் பூரா ஜெயில்ல இருந்து கடந்து களி தின்னா தான் இவனுக்கெல்லாம் புத்தி வரும்..”

அல்லியை பார்த்து ஆதி சொல்ல அதைக்கேட்டு அரண்ட மிதுன் சட்டென அல்லியின் காலை பிடித்துக் கொண்டான்..

“ஐயோ.. அல்லி தயவு செஞ்சு அப்படி எல்லாம் பண்ணிடாத. ஏதோ.. உன் மேல் இருந்த ஆசையில தப்பு பண்ணிட்டேன்.. எங்க அப்பாக்குன்னு சொசைட்டில ஒரு இமேஜ் இருக்கு.. நான் ஜெயிலுக்கு போனா என் ஃபேமிலிக்கு ரொம்ப கெட்டு பேரா போயிடும்.. ப்ளீஸ் அல்லி..”

அவள் காலை பிடித்துக் கொண்டு அப்போதைக்கு வேலையாக வேண்டும் என்று குள்ளநரித்தனமாக முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கெஞ்சினான் மிதுன்..

தன் காலால் அவனை எட்டி வேறு புறமாக தள்ளியவள் “மன்னிப்பு கேக்குறதுக்காக கூட என் காலை தொடாத.. நீ என்னை தொட்டாலே அருவருப்பா இருக்கு.. இத்தனை நாளா உன்கிட்ட வேலை செஞ்சிட்டு இருந்தப்போவும் இந்த மாதிரி எண்ணத்தோட தானே என்னோட பேசி இருப்பே.. நீ எல்லாம் ஒரு மனுஷன் ஜென்மமே இல்லை. கேவலமான ஜென்மம்.. உன்னை எதோட கம்பேர் பண்ணாலும் அந்த ஜீவனுக்கு தான் அவமானம்.. இப்ப சொன்ன பாரு.. உங்க அப்பாக்கு உன்னால அவமானம்னு அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் உன்னை விட்டுட்டு போறேன்.. இனிமே என் வழியில வந்த.. அப்புறம் நடக்கிறதே வேற.. சொல்லிட்டேன்..”

அவன் அவனை நோக்கி பெண் சிம்ஹமாய் கர்ஜித்தவள் அவன் தலை முடியை பற்றி நிமிர்த்தி. “நீ எந்த தப்பு வேணா பண்ணு.. அது எல்லாத்தையும் இந்த அல்லி மன்னிச்சுடுவா.. ஆனா ஒரு பொண்ணோட பெண்மையை அழிக்கணும்னு மட்டும் நினைக்காதே.. அதைவிட கொடுமையான விஷயம் அந்த பொண்ணுக்கு வேற எதுவும் கிடையாது..” என்று சொல்லிவிட்டு அவனை அப்படியே பின்னால் தள்ளியவள் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இங்கு ஆதித்யாவுக்கோ அவள் சொன்ன வார்த்தை ஒவ்வொன்றும் இனித்தது.. அவள் நெருப்பாக இருப்பது ஏனோ அவனுக்கு மனதிற்கு இதத்தை அளித்தது..

தொடர்ந்து மிதுனின் காலரை பிடித்து எழுப்பியவன் அவன் அலுவலகத்தில் இருந்த பியூனை காட்டி, “மிதுன்.. உங்கிட்ட ஒன்னு சொல்றேன்.. இவன் தான் என்னோட ஸ்பை.. ஒவ்வொருவாட்டி நீ டெண்டர் அமௌன்ட் கோட் பண்ணும்போதும் அவனுடைய சின்ன ஃபோனை அந்த ரூம்ல வச்சுட்டு வந்துடுவான்.. அந்த போன்ல ரெக்கார்டர் ஆன் பண்ணி வச்சிட்டு வந்துட்டான்னா நீ என்ன அமௌன்ட் கோட் பண்றேன்னு சொல்றியோ அது அத்தனையும் எனக்கு தெரிஞ்சிடும்.. இப்படிதான் இத்தனை நாளா நீ என்ன பண்றன்னு நான் தெரிஞ்சுகிட்டேன்…ஆனா இன்னைக்கு அமௌன்ட் கோட் பண்ண போற உன் திட்டத்தை சொன்ன அப்புறம் அல்லிகிட்ட நீ தப்பா நடக்க போறேன்னு எனக்கு தெரிஞ்சப்போ அத கேட்டு தான் அவளை உன்கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக  ஓடி வந்தேன்.. இனிமே வேற எந்த பொண்ணு கிட்டயாவது இந்த மாதிரி வாலாட்டலாம்னு நெனச்ச அங்க மறுபடியும் இந்த ஆதித்யா வருவான்.. ஜாக்கிரதையா இரு..”

அவனை விடுவித்தவன் அல்லியின் கைபிடித்து அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்..

அல்லியின் மானத்தை காப்பாற்றி விட்டோம்.. அதனால் அவள் நிச்சயம் தனக்கு நன்றி சொல்லுவாள் என்று எதிர்பார்த்து  வெளியே வந்த அவனுக்கு  அவன் கையை உதறி அவள் பேசிய பேச்சு அதிர்ச்சியை தந்தது..

“நீங்க இன்னும் திருந்தலை இல்ல ஆதித்யா? திருந்தவும் மாட்டீங்க.. உங்களை எல்லாம் திருத்தவே முடியாது.. காலம் ஃபுல்லா திருட்டுத்தனம் பண்ணி பண்ணி உங்களுக்கு அதுவே பழக்கமா போச்சு..” என்று அவனை திட்ட ஆரம்பித்தாள் அல்லி மலர்.

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!