அத்தியாயம் 15
“அடேய் அதுக்காக அவளை நான் லவ் பண்ணனுமா என்ன” என்ற திலீப் கோபமாக சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்த பல்லவியால் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை அழுது அழுது கரைந்தாள் பல்லவி.
அழுது அழுது அவளுக்கு காய்ச்சல் வந்தது தான் மிச்சம். இரண்டு நாட்கள் நன்றாக யோசித்து பார்த்தவள் நான் என் காதலை அவன் கிட்ட சொன்னால் என்ன. அவன் எப்போதும் போல என் கிட்ட விளையாடி இருக்கிறான் அதற்கு ஏன் கோபம் பட்டு அவனை அடித்தேன் என்று யோசித்தாள் அவனிடம் தன் காதலை பற்றி பேச வேண்டும் என்று நினைத்து கல்லூரிக்கு வந்தாள் பல்லவி.
“திலீப்” என்று அவள் அழைத்திட , “என்ன” என்றான் திலீப் கோபமாக. “உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்ற பல்லவியிடம், “என்ன பேசப் போற” என்றான் திலீப் வர்மன்.
“ஸாரி அன்னைக்கு நான் உன்னை அடிச்சுருக்க கூடாது” என்ற பல்லவியிடம், “அதை அடிக்கிறதுக்கு முன்னே யோசிச்சுருக்கனும் கையா இது உலக்கை அதை வச்சு இப்படித் தான் அடிப்பியா டீ” என்று அவன் சிரித்திட, “கோபம் போயிருச்சா டா” என்றாள் பல்லவி. “போயிருச்சு டீ பெங்களூர் தக்காளி” என்றவன், “சரி சொல்லு என்ன விஷயம்” என்ற திலீப்பிடம் , “ஐ லவ் யூ திலீப். அன்னைக்கு நீ சொன்னது ப்ராங்கா இல்லாமல் உண்மையா இருக்க கூடாதா என்று மனசு கிடந்து அடிச்சுக்குது எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் திலீப் ஐ லவ் யூ” என்றாள் பல்லவி.
“ஹேய் பவி என்ன அன்னைக்கு நான் உன்னை ப்ராங்க் பண்ணினேன்னு ரிவெஞ்ச் எடுக்கிறியா என்னை ப்ராங்க் பண்ணி நான் ஏமாற மாட்டேன் டீ” என்று சிரித்தான் திலீப் வர்மன்.
“திலீப் சத்தியமா ப்ராங்க் இல்லை டா உண்மையை தான் சொல்கிறேன் ஐ லவ் யூ” என்றாள் பல்லவி. “என்ன சொல்லுற பவி நிஜமாகவே நீ என்னை லவ் பண்ணுறியா” என்றான் திலீப் வர்மன்.
“ஆமாம்” என்று அவள் கூறிட , “ஸாரி பவி எனக்கு உன் மேல அந்த மாதிரி எந்த ஃபீலிங்ஸுமே கிடையாது” என்று கூறினான் திலீப் வர்மன். “திலீப்” என்று அவள் ஏதோ சொல்ல வர , “சத்தியமா சொல்றேன் பல்லவி உன் மேல நீ என் ஃப்ரெண்ட் அதை தான்டி எந்த ஃபீலிங்ஸுமே கிடையாது” என்று கூறினான் திலீப்.
“அதான் ஏன் என்னை உனக்கு பிடிக்கலையா?” என்ற பல்லவியிடம், “உன்னை எனக்கு பிடிக்கும் டீ நீ என்னோட ஃப்ரெண்ட் அதனால் பிடிக்கும். ஆனால் லவ் எல்லாம் உன் மேல எனக்கு எப்பவுமே வராது பல்லவி” என்றான் திலீப் வர்மன்.
“எப்பவுமே வராதுனா எனக்கு புரியவில்லை” என்ற பல்லவியிடம், “ஐ யம் ஸாரி பல்லவி நீ எனக்கு அக்கா மாதிரி இருக்க உன்னை லவ் பண்ணி உன் கூட ஊரை சுத்தினால் கண்டிப்பா எல்லோரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க. உன்னை பாடி சேமிங் பண்ணவில்லை நீ ரொம்ப குண்டா இருக்க நான் நேர் ஆப்போசிட் பென்சில் மாதிரி இருக்கேன் நீயே புரிஞ்சுக்கோ எப்பவுமே எனக்கு உன்னை பிடிக்கும் அது வெறும் ஃப்ரெண்ட்டா மட்டும் தான்” என்றவன் கிளம்பிட, பல்லவிக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.
அவளால் நிதர்சனத்தை உணர முடிய வில்லை. தான் குண்டாக இருப்பதை நினைத்து முதல் முறையாக வருந்தினாள். எத்தனையோ முறை சாம்பவி அவளை கிண்டல் செய்து இருக்கிறாள் அப்போது எல்லாம் அவள் கவலையே பட்டது இல்லை. முதல் முதலாக தான் நேசித்த ஒருத்தன் தன் உடலை ஒரு குறையாக கூறி தன்னை நிராகரித்தது அவளுக்கு ரொம்பவே வலித்தது.
நல்ல வேளையாக அடுத்து வந்த நாட்கள் ஸ்டடி ஹாலிடே வந்ததால் அவள் கல்லூரிக்கு செல்லவில்லை. அவனை பார்க்க வில்லை. எங்கே அவனைப் பார்த்தால் மானம் கெட்ட மனது அவனை மீண்டும் காதலிக்க ஆரம்பித்து விடுமோ என்று பயந்தாள் பல்லவி. பரீட்சை நடக்கும் பொழுதும் அவனை பார்க்காமல் தவிர்த்து வந்தவள் தன் தந்தையிடம் ஏதேதோ காரணங்கள் சொல்லி கல்லூரியை விட்டு விலகி தன் அத்தை வீட்டில் தங்கி அங்கிருந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
என்னால அவனை பார்க்க முடியலை அபி மனசு ரொம்ப வலிக்க ஆரம்பித்தது. என் உடம்பு தான் பிரச்சினைனு நினைச்சு டயட், எக்சர்சைஸ் எல்லாமே பண்ணினேன். விரதம் இருந்து சாப்பிடாமல் இருந்தேன். உடம்பை குறைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன் ஆனால் இது என் ஃபேமிலி ஜீன் குறையவில்லை. ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி வலிப்பு வந்தது தான் மிச்சம். அப்போ தான் என் அத்தை ஒரு விஷயம் சொன்னாங்க, “யாருக்காக பவி நீ உடம்பை குறைக்கனும் அதுவும் பட்டினி கிடந்து. நீ எக்சர்சைஸ் பண்ணு, வாக்கிங் போ அதெல்லாம் நான் தடுக்க மாட்டேன் ஆனால் உடம்பு குறைய வில்லை என்று பட்டினி கிடக்காதே. நீ குண்டா இருக்கிறது உன்னை நேசிக்கிற உன் அப்பா, அத்தை, சங்கவி யாருக்கும் குறையா தெரியவில்லை. குறையா தெரியுற ஒருத்தவங்க உன் வாழ்க்கைக்கு தேவை இல்லாதவங்க அவங்களை பற்றி யோசிச்சுட்டு எங்களை தவிக்க விட்டுடாதே” பவின்னு என் அத்தை சொன்னாங்க அந்த விசயம் நிஜமாகவே எனக்கு புரிஞ்சுது. என்னை என் குறைகளோட ஏத்துக்கிற ஒருத்தன் வருவான். வரவில்லை என்றால் கூட என் அப்பாவுக்கு மகளாவும், என் அத்தைக்கு மருமகளாவும் இருந்தாலே போதும்னு முடிவு பண்ணிட்டேன்.
“அப்போ என்னை பிடிக்கலைனு சொன்னவன் இப்போ பிடிச்சுருக்குனு சொன்னதும் நான் ஏத்துக்கனுமா? சத்தியமா என்னால முடியலை அபி. அவன் திரும்பவும் பெட் கட்டி என்னை ப்ராங்க் பண்ணிருவானோன்னு பயம் தான் மனசு முழுக்க இருக்கு.
அவன் என்னை நெருங்கும் போது எல்லாம் நீ எனக்கு அக்கா மாதிரி இருக்க பல்லவினு அவன் சொன்னது தான் என் காதில் கேட்டுட்டே இருக்கு என்னை என்ன பண்ண சொல்லுற” என்று அழுதாள் பல்லவி.
“என்னை முதல் முதலாக பிடிக்கலைன்னு அவன் தான் சொன்னான். அந்த வார்த்தை என்னோட இருபத்தி ஆறு வயசு வரைக்கும் என்னை விரட்டிட்டே தான் இருக்கு. அந்த வார்த்தை கூட எனக்கு பழகிருச்சு” என்று அவள் அழுது கொண்டே இருக்க அபிநயாவிற்கு தான் தோழியை சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை.
“நான் பண்ணினது தப்பு தான் டா நான் மறுக்கவே இல்லை அன்னைக்கு என்னோட வயசு வெறும் பத்தொன்பது தானே டா. அன்னைக்கு எனக்கு என்ன மெச்சுருட்டி இருந்துச்சு சொல்லு காலேஜ் லைஃப் ரொம்ப ஜாலியா என்ஜோய் பண்ணினேன். அப்போ எனக்கு பல்லவியோட காதல் புரியவில்லை அது ஒன்னும் தப்பு இல்லையே ஆனால் அன்னைக்கு நான் ரிஜெக்ட் பண்ணுனதை இன்னமும் மறக்காமல் என்னை வேண்டாம்னு அவள் சொல்லுறது தான் எரிச்சலா இருக்கு” என்றான் திலீப் வர்மன்.
“எனக்கு புரியுது பவி கொஞ்சம் எமோஷனல் டைப் எதையும் ரொம்ப யோசிப்பால் ரொம்ப சென்சிடிவ்வா எடுத்துப்பா ஆனால் அவள் என்ன குழந்தையா இருபத்தி ஆறு வயசாகிருச்சு இன்னமும் ஏழெட்டு வருசத்துக்கு முன்னே நடந்த விஷயத்தை நினைச்சுக்கிட்டு என்னை ரொம்ப காயப் படுத்திட்டு இருக்கிறாள்” என்று புலம்பினான் திலீப்.
“நீ காயப்படுத்தலையா அவளை உன்னால தான் அவள் காலேஜ் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போனாள் அதை மறந்து விடாதே” என்ற ரஞ்சித்தை முறைத்தவன், “அடேய் அதுக்காக நான் எவ்வளவு தான் மன்னிப்பு கேட்பது” என்றான் திலீப் வர்மன்.
“மன்னிப்பு கேளு மச்சி தப்பே இல்லை” என்று கூறிய ரஞ்சித் , “எனக்கு வேலை இருக்கு டா நான் கிளம்புறேன் என்றிட என்னை விட உனக்கு உன் வேலை தானே முக்கியம்” என்றான் திலீப்.
“ஆமாம் டா வேலைக்கு போனால் தானே ஓனர் சம்பளம் கொடுப்பான். நானும் நிம்மதியா சோறு திங்க முடியும்” என்ற ரஞ்சித்திடம், “எப்போ பாரு சோறு, சோறு, சோறு சரியான சோத்து மூட்டைடா நீ” என்றான் திலீப் வர்மன்.
“உனக்கு தெரியாதா மச்சி ஒரு ஜான் வயித்துக்காக தான் இந்த உலகமே ஓடி ஓடி சம்பாதிக்குது” என்றான் ரஞ்சித்.
“இவரு பெரிய கருத்து கந்தசாமி வந்துட்டாரு கருத்து சொல்ல மூடிக்கிட்டு என் பவியை எப்படி கரெக்ட் பண்ணுவது ஐடியா கொடு” என்றான் திலீப் வர்மன்.
“திரும்ப ,திரும்ப அவள் காலில் விழு வேற வழியே இல்லை. நீ கொஞ்சம் ஓவராவே பேசி இருக்க அதனால் அவள் காலில் விழு அதுவும் தினமும் அப்போ தான் உன் பாவங்களுக்கு விமோச்சனம் கிடைக்கும்” என்று ரஞ்சித் கூறிட , “நேரம் டா எல்லாம் என் நேரம்” என்ற திலீப், “சரி போயி வேலையை பாரு என் ஆளை கரைக்ட் பண்ணிட்டு வரேன்” என்று கிளம்பினான்.
“ஐடியா கொடுன்னு திரும்ப வந்துறாதே டா மங்கி” என்ற ரஞ்சித் தன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.
“எங்கே போன” என்று ராகவ் கேட்டிட, “திலீப் வந்திருந்தான் அவனைப் பார்த்து பேசிட்டு வரேன் டா” என்றான் ரஞ்சித். “என்ன விஷயம் என்ற ராகவ் விடம் சும்மா பல்லவி பற்றி தான் பேசினான். அவளை சினிமாவுக்கு அழைச்சிட்டு போனானாம்” என்ற ரஞ்சித் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான். ராகவ்விற்கு தான் வேலை ஓடவில்லை.
மனதில் வேதனை குடி கொண்டு விட்டது. அந்த நேரம் சாம்பவி அவனுக்கு ஃபோன் செய்தாள். அதை அட்டன் செய்யலாமா? வேண்டாமா? என்று யோசனையுடன் மொபைலையே பார்த்துக் கொண்டு இருந்தான். கால் கட் ஆனது.
“இவனுக்கு என்ன ஆச்சு ஏன் நம்ம ஃபோன் பண்ணியும் எடுக்காமல் இருக்கிறான்” என்று யோசித்தவள் கடுப்புடன் மீண்டும் அவனுக்கு ஃபோன் செய்தாள். இந்த முறை அவன் அட்டன் செய்து பேசினான்.
“என்ன சாம்பவி” என்ற ராகவ் விடம், “உங்களை பார்க்கனும்” என்றாள் சாம்பவி. “எனக்கு வேலை இருக்கு இப்போ வர முடியாது” என்று அவன் கூறிட , “என்ன ராகவ் இது நான் கூப்பிட்டு நீங்க வர மாட்டீங்களா” என்றாள் சாம்பவி.
“அதான் சொல்றேனே சாம்பவி வேலை இருக்கு நாளைக்கு பார்ப்போம்” என்று கூறி விட்டு ஃபோனை கட் செய்தான் ராகவ்.
(…அடியே…)