முழங்கை சட்டையை மடித்து விட்டபடி கண்ணாடியின் முன் இன்னுழவன் நிற்க அவனுக்கு முன் அழகிய சிகப்பு நிற சில்க் சுடிதாரில் நின்று கொண்டிருந்தாள் கையில் குங்குமச்சிமிழை ஏந்திய வண்ணம் மேக விருஷ்டி.
இருவரின் பார்வையும் கண்ணாடியின் வாயிலாக மையம் கொண்டிருந்தது ஒரே நேர் கோட்டில்.
விழிப்பார்வையோ கண்ணாடியூடே இருகக்க அவள் கை புஜங்களை அழுத்தி பிடித்தவனாய் துப்பட்டாவோடு சுடிதாரின் டாப்பையும் சற்று விலக்கி வெண்ணிற தோளில் முத்தம் பதித்தான் ஆழமாய் அழுத்தமாய்.
அதில் இனம் புரியாது அவள் சிலிர்த்து பெருமூச்சி விட.. அவள் பிடரி கழுத்துக்குள் இதழ் ஊர்வலம் நடந்து ஆரம்பித்தான்.
அவளோ நிலை கொள்ள முடியாது உருக ஆரம்பிக்க…
குரலில் தாபமும் எதிர்பார்ப்பும் விரவியிருக்க, அவள் செவி மடல் தீண்டியவன் “ஏஞ்சல் அது நீ தானே காலேஜ்ல… உனக்கு தான நான் என்னோட ஷர்ட்ட கழட்டி தந்தேன்.” என்றவன் கேள்வியில் விதிர்விதிர்த்து போனாள் மேக விருஷ்டி.
தாபம் கரை கடந்து செல்ல அதிர்ச்சி மையம் சூழல மேனி அதிர சட்டென்று திரும்பினாள் விழிகள் பனிக்க.
சட்டையை அழுத்த பற்றி அவன் விழி ஏறிட்டவள் “அப்போ… நீங்க தான்… உங்களுக்கு எப்படி…” என்றவள் மேலும் அதிர,
“ப்ச்… ஏதுக்குடி இவ்வளவு அதிர்ச்சி ஆகுற” என அவளை தன்னோடு இறுக்க அணைத்தவன் நின்றான்.
“அப்போ அன்னைக்கு ஷர்ட் தந்தது நீங்கதானே…!
காலேஜ் சீனியர் ஸ்டுடென்ட்ஸ் சேர்மன் நீங்க தானா…?
கலவரத்துல அந்த சீனியர் ஸ்டுடென்ட்ட கூட அவங்கள அடிச்சு துவைச்சி எடுத்தது நீங்க தானா…!” என்றவள் வார்த்தைகள் திக்கு முக்காட விழிநீர் அவன் மார்பு நனைத்தது.
அவள் அழுகையை மனம் விரும்பாதவன், “ரெயினி… இப்ப எதுக்கு அழுகுற… நான் தான். அதெல்லாம் முடிஞ்சு போச்சு பா.. ஏதோ தெரியாத ஒரு இன்சிடென்ட்.
தெரியாம நடந்தாலும் அன்னைக்கே நான் பனிஷ் பண்ணிட்டேன் தான… பிரீயா விடு ஜில் பா..” என்றவன் அவளை தேற்றிக் கொண்டிருக்கும் போதே
“இன்னுழவா…” என கீழே இருந்து குரல் கொடுத்து விட்டார் கோதாவரி.
இன்னுழவன் படித்த அதே கல்லூரியில் தான் அவன் கடைசி முதுகலைப் பிரிவில் கடைசி வருடத்தில் பயணித்தபோது இளகலை பிரிவில் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தாள் மேக விருஷ்டி.
அவளுக்கோ விவசாயத்தில் இனம் புரியாத ஈர்ப்புயிருக்க, விவசாயத்திற்குும் நமக்கும் சம்பந்தமில்லை என சோமசுந்தரம் மைதிலியின் பிடித்தமின்மை எல்லாம் தாண்டி மன்றாடி அனுமதி பெற்று சந்தோஷமாக காலடி எடுத்து வைத்தாள்.
எவ்வளவு சந்தோஷமாக கல்லூரி சென்றாளோ அதைவிட பல மடங்கு கவலையுடன் அக்கல்லூரியையும் அவளின் ஆசை படிப்பையும் ஒரு வாரத்திலேயே இடைநீக்கம் செய்து வெளிநாட்டிற்கு பறந்து சென்றாள் மேக விருஷ்டி.
“இப்போ நேரம் இல்ல அப்புறம் இத பத்தி பேசலாம் ஏஞ்சல்” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விலக…
அவன் கையை ஏட்டி பிடித்து நிப்பாட்டியவள், “இப்ப நான் தான் அதுன்னு எப்பிடி கண்டுபிட்டிசிங்க?” கேட்டாள் ஆர்வமாக விழிகள் மின்ன.
அவளை கண்ணாடி பார்த்து சோழியாய் திருப்பியவன் தோளில் கிடந்த துப்பிட்டாவை உருவ..
விடாதவள் பிடித்தாள்.
“ப்ச்… அதான் எல்லாம் பார்த்துட்டேன் தான டி அப்புறம் என்ன” குரும்பாயவன் சலிக்க
“ஹீம்… ஹிம்… நான் என்ன கேட்டா நீங்க என்ன செயிறீங்க உழவா…”
என வேகமாக அவன் புறம் திரும்பி மார்போடு ஒன்றினாள்.
அவளை தன்னோடு அணைத்தவன், “இன்னும் ஏதுவுமே செய்யலையே டி…” கிறக்கமாய் உச்சமூச்சி விட்டான் ஏகத்துக்கு அவள் முகமதில்.
அவன் கூறியதின் பொருள் உணர்ந்தவள் தான் கேட்ட கேள்வியை மறந்து போக..
முகமது செவ்வரளியாய் சிவக்க..
முறைத்தவள் “உழவா நீங்க இருக்கீங்களே.. ஐஞ்சு நிமிஷ போன்லயே அந்த பேச்சு பேசுவீங்க இப்ப சொல்லவா வேணும்” என்றவள் அவனை அடித்தாள் பூவாய்.
“நான் இருக்கல ஏஞ்சல் உன்ன கட்டி பிடிச்சி நிக்கிறேன்” என்றவன் இடையை அழுத்த
“ஐயோ உங்களா… என்ன எப்பிடி கண்டுபிடிச்சிங்க இப்ப? அப்போ அன்னைக்கு நீங்க என்ன பார்த்தீங்களா…?” ஆராய்ச்சியுடன் கேட்டாள்.
எதிர்பார்க்கும் அவள் விழிகளில் இதழ் ஒற்றியவன் “உன் முகத்த பார்க்கலடி… ஆனா உங்கிட்ட ஒன்ன வித்யாசமா பார்த்தேன் அத வச்சி தான் கண்டுபிடிச்சேன்.”
“என்கிட்ட ஒன்ன பார்த்தீங்களா…! என்னது…?” அவள் விழிகளில் எதிர்பார்ப்பை கடந்து தீவிரம்.
அவள் தீவிரத்தை தணிக்க எண்ணியவன், “ஆனா இன்னைக்கு நிறைய பார்த்தேன் ஏஞ்சல்…” என்றான் வசீகர விஷமமாய்.
அவன் பேச்சில் சிவந்து இரச்சித்தாலும் “ஐயோ குழப்பாதிங்க உழவா… தெளிவா சொல்லுங்க” சிணுங்கியவள் அவன் நெஞ்சில் அடித்தாள் மீண்டும்.
“கை வச்சி அடிச்சா வலிக்கும் டி உனக்கு… உன் லிப் வச்சி அடி ஸ்ட்ராங்கா கிக்கா இருக்கும்” இதழுக்குள் நகைத்தான் கள்வனாய்.
அவன் பேச்சில் சிலிர்த்தாலும் முறைத்தவள், “அடிக்க தான செய்யணும் அடிக்கிறேன்…”
“ஹீம்… அதுக்கு தான் டி நானும் வெயிட்டிங்” என்றவன் அவளை இடையோடு தூக்கி உதட்டை நெருங்க, நறுக்கென்று கடித்திருந்தாள் விருஷ்டி அவன் அதரங்களை.
“ஸ்… ஆ…” கத்தியவன் “எதுக்கு டி கடிச்ச…” முகம் சுணங்கினாலும் அவளை நழுவ விடவில்லை.
“எனக்கு வலிச்சிருச்சி டி… இப்போ நான் கடிக்கிறேன் இல்ல அடிக்கிறேன் உனக்கு வலிக்குதான்னு சொல்லு…” என்றவன் அவளை அள்ளி கொண்டான்.
கழுத்தோடு கரம் கோர்த்தவள் “உழவா… வேண்டாம்… இது என்ன விளையாட்டு… நீங்க தான அடிக்க சொன்னிங்க. உங்களுக்கு வேலை இருக்குன்னு சொன்னிங்க தான…” என்றவள் வார்த்தை எல்லாம் வாயிதா வாங்கி கொள்ள…
மஞ்சத்தில் சரித்தவனோ அவளின் திரை ஆடை விலக்கி ஆலிலை இடையில் முகம் புதைத்தான் அதிரடியாக.
“ஐயோ… உழவா… என்ன பண்றீங்க… கூசுது… விடுங்க…” என்றவள் துள்ளி கை அவன் சீகையை அழுத்த பற்றி நெறிக்க…
நகர விடாது அவளை சிறை எடுத்தவன் “கூச தானடி செய்து… வலிக்கல தான…” என தன் மீசை மூடி கொஞ்சி விளையாட கடித்தான்..
அவனின் ஒவ்வொரு கடிக்கும் அவள் துள்ளி உதற.. நாசியால் வருடினான் இதழால் ஸ்ரீஹரித்து அவளை திக்கு முக்காட வைத்து மிஞ்சினான். அவளின் சிற்றிடையில் இதழ் கொண்டு சிறு தாப போருக்கு தூபம் ஏறினான்.
அவளவன் நடத்திய சில்மிஷத்தில் ஒரு நிலைக்கு மேல் தன்னிலை இழங்க கரங்கள் தலையணை அழுத்த பற்றி விழிகள் சொக்கினாள் தேகம் முறுக்கிட மங்கை மான்.
தன் இதழ் தீண்டலிலே மீண்டும் உருகியவளை கண்டு கள்ள சிரிப்பில் கர்வம் கொண்டவன் உடையவள் நிலை உணர்ந்தவனாய்
அவள் இடையில் அவன் இதழுக்கு விடுதலை கொடுத்து செவி மடல் நெருங்கி அவனின் மூச்சு காற்றை அங்கு நிரப்பினான்.
அவளுக்கோ அதில் தேகம் மொத்தமுமாய் சில்லிட்டு இமைகள் பசையாய் ஒட்டிக்கொள்ள, “இந்த ஒன்ன தான் ஏஞ்சல் பார்த்தேன். அன்னைக்கு நீ உன் டாப் கிழிஞ்சு இருக்கும் போது” என்றான் அவள் தோளில் இருக்கும் நட்சத்திர மச்சத்தில் அழுத்த அதரம் பதித்து இல்லை இல்லை கடித்து வைத்தான் வன்மையிலும் மென்மையாய்.
அதன் வலியில் சட்டென்று விழிகளை மலர்த்தியவள் அவன் அடையாளம் கண்டு கொண்டதை அறிந்தாலும், “அந்த மச்சத்த மட்டும் தான் பார்த்திங்களா இல்ல…” புருவம் தூக்கினாள் கள்ளியாய்.
அவள் புருவத்தில் மென் முத்தத்தை வைத்தவன், “அன்னைக்கு ஏதார்த்தமா அந்த மச்சம் மட்டும் தான் கண்ணுல பட்டுச்சு ரெயினி. ஆனா இன்னினைக்கு குளியல் அறையை புருவம் அசைத்து காட்டியவன் எல்லாமே பட்டுச்சு ஏஞ்சல்.
முக்கியமா என்னோட ஃபேவரிட் இடமான அங்கயும் நட்…”
“போதும்… போதும்…” என பட்டென்று வெக்கத்தில் அவன் வாயை அவள் அடைக்க,
அவள் காதில் அவ்விடத்தை கிசுகிசுத்தவன் அவளை குங்குமமாய் சிவக்க வைத்து நொடியில் இதழோடு இதழணைத்து வெளியேறி இருந்தான் கசங்கிய சட்டையை அழுத்த நீவி விட்டபடி.
அவன் செல்ல மீண்டும் தன் மச்சத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் அளப்பரியா சந்தோஷம் குடி கொண்டாலும், அன்றைய நாளையும் அதனால் தனக்கு நடந்தையும் நினைக்க மனம் வெகுவாய் வாடியாது.
தன்னவன் செய்த ஜாலத்தில் உணர்வுகளை ஒருநிலைக்கு கொண்டு வந்து சிறிது நேரத்தில் கீழே வந்திருந்தாள் மேக விருஷ்டி.
தயங்கியவாறே படிகளில் அவள் நடந்து வந்தாள். அங்கு அமர்ந்திருக்கும் சக்திவேல் தங்கமணியை பார்த்து.
திரும்பி மேலேயே போய் விடலாமா என்று யோசித்தவளாய் பாதி படியிலேயே தேங்கினாள்.
வெளியில் அமர்ந்திருந்த இன்னுழவன் விழிகள் அதை கவனித்தாலும், அனைவரின் முன் அமர்ந்திருந்ததால் மௌனம் காத்தான் செயல்படாது.
“ஸ்டப்புல என்ன ட்ரீம்ஸா என் பேத்திக்கு…” என அவளை பின்னோடு இருந்து குரல் கொடுத்து தோளோடு கை போட்டு நின்றார் அம்பிகாமா.
அதில் முதலில் திடுக்கிட்டு பின் ஆசுவாச மூச்சி விட்டாள் மேக விருஷ்டி.
“எதுக்கு டா தயங்கிறவ?” என்றவர் கேள்விக்கு,
அவளோ சக்திவேல், தங்கமணியை பார்த்தாள் மிரச்சியாக.
அவள் பார்வையில் திசை பார்த்தவர் “இதுங்களுக்கா பயப்படுற நீ… அதுங்க டம்மி பீசு டா. இது உன் வீடு, இந்த வீட்டோட ராணி இனி நீ தான் எதுக்கும் பயப்பட கூடாது.
எப்பேர்ப்பட்ட வம்சத்தில வாக்கப்பட்டுட்டு இன்னுழவன் பொண்டாட்டியா இருந்துட்டு பயப்படலாமா. அதுவும் இந்த வெஸ்ட் பாலோஸ பார்த்து” என அவள் கைகளை பிடித்து அழைத்து வந்தார் அம்பிகாமா.
இரண்டு நடுக்கூடம் கொண்ட அவ்வீட்டில் ஜோசியரிடம் கோதாவரி பேசிக் கொண்டிருக்க, அவர்களுடன் சக்திவேல் தங்கமணி அமர்ந்திருக்க..
அதற்கு மறுபுறத்தில் “உட்காருடா” என சென்று அமர்ந்தார் அம்பிகாமா. மேக விருஷ்டியோ அமராது பார்த்தாள் தன்னவனை.
அங்கு வயதுக்கு முதியவர்கள் வரை வயது வந்தவர்கள் வரை சுற்றி ஒவ்வொன்றாக பேசிக் கொண்டிருக்க, அதனை உள்வாங்கியபடி அதற்கு தீட்சயமாக அறிவுரையும், தீர்ப்புகளையும் கூறியவாரு அவர்களுக்கு மத்தியில் நடுநாயகமாக கூர்விழிகளுடன் அமர்ந்திருந்தான் இன்னுழவன் ஆளுமையாக.
இவ்வளவு நாள் தன்னுடன் அலைபேசியில் ஜொள்ளு வடிய பேசியவன் எங்கே!
தந்தை மற்றும் தமையன் சிலாகித்த அவன் அதிகார கம்பீரம் எங்கே!
ஏன் இவ்வளவு நேரம் தன்னிடம் பேசி கொஞ்சி மிஞ்சியவன் எங்கே!
இப்போது அவன் அமர்ந்திருக்கும் தோரணையும் மிடுக்கும் எங்கே!
இப்பிடி உட்காரு…” என அவளை இழுத்து அமர்த்தினார் அம்பிகாமா.
“இதுக்கே இப்படி பார்த்து வச்சேனா… சுத்தப்பட்டு ஊருக்கும் அவன் உட்கார்ந்து தீர்ப்பு சொல்லும் போதும், ஊருக்குள்ள அவன் மீசைய முறுக்கிட்டு பரிவட்டம் கட்டி நடந்து வரும் போது அந்த ராஜ ராஜ சோழனே தோத்து போயிருவாரு டி…” என சிலாகித்தார் அம்பிகாமா பேரனின் பெருமையை.
அதை கேட்டு உள்ளுக்குள் பூரித்தாலும், “அவ்வளவு எல்லாம் ஒன்னும் அழகு இல்ல உங்க பேரன் கொஞ்சம் குறைவு தான்” என சீண்டி விட்டாள் மேக விருஷ்டி முகம் கோண புன்னகையுன்.
“அடி ஆத்தே… அவள் கன்னம் கொணட்டியவர் என் பேரன் கிட்ட அப்படி என்னத்தடி குறைவ கண்டவ… அவன் தேர் டி இந்த ஜில்லா தேர்” என்றார் நாடியில் விரல் ஊன்றி.
அம்பிகாமா கன்னம் கிள்ளியவள், “தேர் உங்க பேரன்னா… அப்போ அதுக்குள்ள இருக்குற அம்மன் நான் தான…” அவள் வினவ…
“ஆமா… ஆமா…” என வந்து சேர்ந்தான் நிவர்த்தனன் அவர்களுடன்.
“ஹான்… அப்போ அந்த தேருக்குள்ள இருக்கிற அம்மன் நான் அழகா…? உங்க பேரன் அதான் தேர் அழகா?” என்றாள் சரிக்கு சரியாய் அவரை இடித்துக்கொண்டு.
“சபாஷ் சரியான கேள்வி” என அங்கு வந்து சேர்ந்திருந்தான் அகரனும் கூடவே நந்தனாவும் வந்து ஒட்டிக்கொண்டாள்.
“சொல்லு ஆத்தா தேர் அழகா…? தேருக்குல இருக்க அம்மன் அழகா…?” அகரன் சாட
“ஏலேய் உள்ள இருக்கிற அம்மன் அழகா இருந்தாலும் அந்த அம்மன அழைச்சிட்டு வர தேர் தானலே அழகு. எப்போதும் என் பேரன் தாம்லேய் அழகு” என்றார் ஆவேசமாக அகரன் தலையில் கொட்டு ஒன்றை வைத்து.
“சரி ஏதோ ஒன்னு இப்ப நான் சொல்றேன். இப்போ உங்க பேரன் உள்ள வருவாங்க தான. உங்க பேரன்கிட்ட கேட்போம் கோயில் தேர் அழகா இல்ல தேருக்கு உள்ள இருக்குற அம்மன் அழகான்னு.
மத்தபடி இங்கு யாரும் என்ன நடந்ததுன்னு சொல்ல கூடாது ஓகே வா” என்றதும் எல்லோரும் பெருவிரல் உயர்த்தினர்.
“உங்க பேரன் தேர் அழகுன்னு சொன்னா நான் சொல்றத நீங்க செய்யணும். அதுவே அம்மன் தான் அழகுன்னு சொன்னா நீங்க சொல்றத நான் செய்றேன் ஓகே டில் ஆஹ..” என்றாள் மேக விருஷ்டி.
“டிலு டி… டிலு டி… நான் என்ன சொன்னாலும் செய்யணும் ஓகே தான…” அம்பிகமா பூசகமாய் வினவினார்.
“டில் டில்…” என்றாள் அவளும்.
“என்ன டில்?” என வந்து சேர்ந்தான் இன்னுழவன் அவர்களுடன்.
“டேய் பேராண்டி உன்கிட்ட ஒரு கேள்வி?” ஆரம்பித்தார் அம்பிகாமா.
“ஹ்ம்… என்ன கேள்வியை அப்பத்தான் கேளு” என அவர்களுடன் வந்து அமர்ந்தான் இன்னுழவன்.
“டேய் நம்ம ஊரு கோயில் தேர் அழகா இல்ல தேர்ல வலம் போற அம்மன் அழகாடா…” என்றவர்,
“சரியா சொல்லுடா…”
பணிப்பெண் ராஜம் அனைவருக்கும் பழச்சாறை கொண்டு வர எல்லோரும் எடுத்துக் கொள்ள…
“இது என்ன கேள்வி… தேர் இல்லாம அம்மன் இல்லையே! அப்போ தேர் தானா அழகு.” என்றவனாய் பழச்சாறை அருந்த…
“ஏன் டி இவளே பார்த்தியா நான் தான் ஜெயிஞ்சேன். என் பேரன் தாண்டி அழகு…” என எழுந்து குத்தாட்டம் போட்டார் அம்பிகாமா.
மேக விருஷ்டியோ இன்னுழவனை ஏகத்துக்கு முறைக்க, “அப்பத்தா நான் முழுசா சொல்லி முடிக்கல அடங்கு” என்றவன்,
“தேர் அழகுனா தேர்ல ஏறி வலம் வர என் பொண்டாட்டி சாரி அம்மன் பேரழகு” என்றான் இதழ் விரிய குறுநகையுடன்.
“ஏ… பாட்டி அப்போ நான் அழகு இல்ல பேரழகு… உங்க பேரனே சொல்லிட்டாங்க” என மேக விருஷ்டி துள்ள, அனைவரும் அதனை ஆமோதிக்க…
“இல்ல இல்ல இதெல்லாம் கிடையாது இங்க பெட்டரு அழகா அழகு இல்லையான்னு மட்டும் தான். இதுல பேரழகுக்கு எல்லாம் மார்க் கிடையாது.
அதனால என் பேரன் முதல்ல தேர் தான் அழகுன்னு சொன்னான். சோ… நான் தான் ஜெயிச்சேன். நான் சொல்றத தான் நீ கேக்கணும். இன்னைக்கு நைட்டு நீ என் கூட தான் படுக்கிற” மேக விருஷ்டி கையை பிடித்துக் கொண்டார் தடாலடியாக அம்பிகாமா.
அதை கேட்டு மேக விருஷ்டி விழிகள் ஸாஸராய் விரிய.. வாயில் இருந்த மொத்த பழசாற்றையும் பீறிட்டு வெளியே தள்ளி இருந்தான் புரையேற இன்னுழவன் மறுபுறம்.
அதைக் கண்டு அகரன் முதல் அனைவரும் சத்தமாக நகைக்க தொடங்கினர் சுற்றம் மறந்து.
இன்னுழவனோ தலையை தட்டிக் கொண்டவன், “அப்பத்தா…” என செல்லமாய் சீற
“என்ன மாதிரி ஒரு யங்கு பிரிட்ரிய வச்சிகிட்டு பேரழகா உன் பொண்டாட்டி…” என பழிப்பு காட்டினார் அம்பிகாமா மேக விருஷ்டியை தனக்குள் பிடித்துக்கொண்டு.
சரியாக அந்நேரம் கோதாவரியும் ஜோசியரை அனுப்பி வைத்து நல்ல நேரத்தை அம்பிகாமாவிடம் ஆனந்தமாய் சொன்னார் அவர்கள் அருகில் வந்து.
சிறியவர்கள் அனைவரும் தலைகுனிந்து வெக்கத்தில் நகைத்துக் கொள்ள, இன்னுழவனோ இதழ் கடித்து புருவம் ஏத்தினான் மேக விருஷ்டியை பார்த்து வசீகரமாக.
“ம்க்… க்கும்… ஏன் அண்ணி ஜாதகம் பொறுத்தம் எல்லாம் பார்த்து ஏதோ நல்ல நேரம் குறிச்சி எல்லாருக்கும் அழைப்பு வச்சி எல்லா சடங்கு சம்பரதாயமும் சரியா செஞ்சு முடிச்ச கல்யாணம் மாதிரி நல்ல நேரம்லா பார்க்குறீங்க அது ஒன்னு தான் குறையாக்கும்” என அலுத்துக் கொண்டார் தங்கமணி.
அதில் மேக விருஷ்டி முகம் வாட இன்னுழவன் முகம் செந்நிறம் ஏறியது.
“ஹா… ஹா… அந்த தரங்கெட்டவன் லச்சனம் தெரிஞ்சு வந்த மாப்புள ஓடி போய்ட்டான்…” என சக்திவேல் ஆரம்பிக்க, “யோவ்…” என நிவர்த்தனன் பொங்கி எழுந்துவிட்டான்.
“நிவர்த்தனா…” இன்னுழவன் அடக்க மேக விருஷ்டி விழிகள் நீர் தூளிர்த்திருந்தன.
சட்டென்று அவள் அங்கிருந்து நகர முற்பட… அவளை விடாது பிடித்த இன்னுழவன் விழிகள் செவ்வரி ஏறியிருந்தது.
“இன்னுழவா… என்ன பேசுற நீ… என் பல்ல உடைச்சிருவாளா… எங்க உடைக்க சொல்லு பார்ப்போம்.” என சினம் கொண்டு முன் வந்தார் சக்திவேல்.
“இன்னுழவா என்ன சொல்லி கொடுக்குற நீ… மாமனார்க்கு தணிஞ்சு பணிஞ்சு போகணும் சொல்லி கொடுக்குறத விட்டுட்டு இப்பிடி அவளுக்கு சொல்லி கொடுக்கிற…” என கொதித்து எழுந்தார் தங்கமணி.
மேக விருஷ்டி வேணாமே என கெஞ்சல் மொழியில் விழிகளில் நீருடன் யாசிக்க..
இன்னுழவனோ அவர்களை திரும்பி பார்க்காது நீ செய்தே ஆக வேண்டும் என தீர்க்கமாக நின்றான் அவனவளை உறுத்து பார்த்தவனாய்.
சக்திவேலை பார்த்து ஒற்றை விரல் நீட்டியவனாய், “திரும்பவும் இதே மாதிரி நடந்துகிட்டா இன்னைக்கு பக்கத்துல நெருக்குன என் பொண்டாட்டி கை நாளைக்கு உங்க கன்னத்த உழுது பார்க்கும் அவ இல்லனாலும் நான் பார்ப்பேன் ஜாக்கிரதை” எச்சரித்தான் குரலில் கடுமை விரவ முகமது கனல் பறக்க இன்னுழவன்.