“உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன், இங்க எல்லோரும் அவங்க அவங்க நடத்துகிற விதத்துலயும் அவங்கவங்க பேசுற விதத்தையும் பொருத்து தான் மதிப்பு மரியாதை எல்லாம்.
முக்கியமாக உங்களுக்கும் சேர்த்து தான் அத்தை. வயசுக்கு இங்க மரியாதை கொடுக்கணும்னா அந்த வயசுக்கு தகுந்த மாதிரி பெரிய மனுஷதனமா நடந்துக்கணும்.
பின்னாடி மாட்டுத் தொழுவுல நிக்கிற எருமை மாட்டுக்கு கூட தான் 40 வயசு ஆகுது. அது வயசுக்கு மரியாதை கொடுத்து தள்ளிப்போன்னு சொன்னா அது போகாம நின்னா முதுகுல நாலு அடி போட்டா தான் அது விலகும். சக்திவேலை பார்த்தவன் அந்த நாலடிய போட நானும் எப்பவும் தயார் தான்.
யார் யாருக்கு தணிச்சு போகணும் பணிஞ்சு போகணும்னு எனக்கும் தெரியும் எனக்கு மேல என் பொண்டாட்டிக்கும் தெரியும்.
எங்க வாழ்க்கையில நல்ல நேரம் கெட்ட நேரம்ங்கிறது நாங்க வாழ்கிற வாழ்க்கை பொறுத்து தான் இருக்கு.
சந்தோஷமாவும் மன நிம்மதியா வாழற எல்லா நேரமும் நல்ல நேரம்தான் எங்களுக்கு. இந்த ஜாதி ஜோசியம் இதெல்லாம் உங்களோட வச்சுக்கோங்க.” தீயாய் பார்த்தவன்,
“வா…” என மேக விருஷ்டியை அழைத்து சென்றான் இன்னுழவன் மேலே.
“இன்னு… இப்ப மேகா உன்கூட” என கோதாவரி சற்று தயங்க…
படியில் நின்றவன், “எனக்கு தெரியும் மா. இருந்தாலும் அவங்களுக்கு சொன்னது தான் உங்களுக்கும். ஏன் காலைல தாலி கட்டும் போது நல்ல நேரம் முடிஞ்சு இருந்தா உன் அண்ணன் மகள இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்துருக்க மாட்டிங்களா..?
இருந்தாலும் உங்க மனசுக்காக உங்க ஆசை படி தான் எங்க வாழ்கையோட தொடக்கம் நடக்கும். நான் பாத்துக்குறேன் மா” என சென்று விட்டான் வேக நடையுடன்.
அனைவரையும் சினம் கொண்டு பார்த்து பல்லை நறநறவென அரைத்து அறைக்குள் அடைந்து கொண்டார் சக்திவேல்.
தங்கமணியோ முகத்தை சுழித்துக் கொண்டு நந்தனா கை பிடித்தவர், “ஏய் உனக்கு இன்னும் இங்க என்னடி வேலை. அதான் நீ இந்த வீட்டுக்கு மருமக இல்லனு சொல்லி செஞ்சுட்டாங்க இல்ல. அப்புறம் எதுக்கு நிக்கிற வா…” என நந்தினி இழுத்தார்.
“அண்ணி ஏன் இப்படி பேசுறீங்க, நான் தான் நந்தனா எப்போதுமே இந்த வீட்டுக்கு பொண்ணு தான். அவ எப்போதும் எனக்கும் உங்க அண்ணனுக்கும் மருமக தான்” என்றார் கோதாவரி கனிவாய்.
“ஆமாமா… பொல்லாத மருமக. அதான் என் மகள விட்டுட்டு எங்கயோ இருந்து ஒருத்திய சீமையிலிருந்து கொண்டு இறக்கி இருக்கீங்களே அம்மாவும் மகனும்.
என் மகன்கிட்ட இல்லாதது அப்படி என்னத்த கண்டிங்களோ தெரியல எல்லாரும். நல்லா எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா. இவளுக்கு அந்த சூது வாது தெரியாம போச்சி” என நந்தனாவை அவர் அடிக்க…
“இன்னுழவன் அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கான். இதுல நந்தனா என்ன செய்வா அவன் தான் அன்னைக்கு தெளிவா சொல்லிட்டான் தான…” என்றான் அகரன் தன்னவள் அடி வாங்குவதை பொறுக்க மாட்டாது கோவம் கொண்டாவனாய்.
தங்கமணி அகரனை பார்த்தவர் “ஏய் நீ யாருடா… கீழ் சா…” தங்கமணி உதடு கிழிந்து ரத்தம் வந்தது அம்பிகாமா கை வண்ணத்தில்.
“அவ்வளவு தான் உனக்கு மரியாதை இல்ல பார்த்துக்கோ. அவன் என் பேரன் டி… நீ பேசுனது மேல இருக்குற என் மூத்த பேரனுக்கு தெரிஞ்சுது உசுரோட வீடு போய் சேர மாட்ட…” என்றார் திண்ணமான குரலில் கோவ விழிகளுடன்.
“அடி மா… அடி… யாரு யாருக்கெல்லாமோ என்ன அடிக்கிற நீ… கல்யாணம் ஆன ஒரு நாள் கூட முடியல அவன் என்னடானா பொண்டாட்டிய விட்டு எங்க அண்ணன் பல்ல உடைக்க சொல்றான்.
கோதாவரி பார்த்தவர் நீங்களும் பார்த்துக்கிட்டு அமைதியா நிக்கிறீங்க. இதுதான் நீங்க புருஷன் மேல வச்சிருக்கிற மதிப்பு மரியாதை பாசம் எல்லாம்.
தெரியாம தான் கேக்குறேன் உங்களுக்கு உங்க அண்ணன் பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு இவ்வளவு நாள் மனசுக்குள்ள வச்சுக்கிட்டே தான் என் பொண்ண பத்தி அண்ணன் பேசும் போது அமைதியா இருந்திங்களா… சுயநலவாதி நீங்க” என வார்த்தையை விட்டார் வன்மமாய்.
மீண்டும் அவர் கன்னத்தை பதம் பார்த்த அம்பிகாமாவோ, “ஏய்… பெருசா பேச வந்துட்டா ஆட்டிகிட்டு. நீ அப்படி என்னடி உன் புருஷனுக்கு மதிப்பு மரியாதை பாசம் கீசமெல்லாம் கொடுத்து தொலைச்சிருக்க, என்ற மருமகள பத்தி பேசறவ.
இங்க பாரு அவள பேச எனக்கு உரிமை இருக்கு ஏன்னா நான் அவன் அம்மா மாதிரி. என் மகனுக்கு பேச உரிமை இருக்கு ஏன்னா அவன் பொண்டாட்டி. அத தவிர்த்து இங்க யாருக்கும் முக்கியமா உனக்கும் எந்த உரிமை இல்லை.
அம்மா வீட்டுக்கு மாசத்துக்கு ஒரு நேரம் வந்தோமா.. போட்ட சோத்த திண்ணும்மா போனோமான்னு இருக்கணும். அத விட்டுட்டு அதிகாரம் பண்றது அதிகாரமா பேசுறதுன்னு வேலை வெச்சுக்கிட்ட… நானே உன் முடிய பிடிச்சு இழுத்து வீட்டுக்கு வெளில தள்ளிருவேன்.
வந்து ஒரு வாரம் ஆகுது வீட்டில புருஷன் கஞ்சி குடிச்சானா வைச்சானான்னு நினைப்பு இல்ல இங்கயே அண்ணனுக்கு கூஜா தூக்கி ஆட்டிக்கிட்டு இருக்குறவ நீ பேசுறவ.. நீ சொல்றியா அவள பார்த்து சுயநலவாதின்னு தொலைச்சிருவேன்” என விலாசிவிட்டார் அம்பிகாமா.
தங்கமணியும் அனைவரையும் பார்க்காது வெளியேற நந்தனாவோ அகரனை பார்த்து இமை அசைத்து அனைவரிடம் இருந்து விடை பெற்றாள்.
“ஏன் அத்தை… அவளே ஏதோ மகள இந்த வீட்டுக்கு வாழ வைக்க முடியலையேன்னு ஆதங்கதுல பேசுறா.. நீங்க வேற..” கோதாவரி கவலை கொள்ள…
“ஆமாடி நீ இப்பிடி இருந்தா என் பொண்ணு மாதிரி இருக்குற எல்லாரும் உன் தலைல மிளகா அறைக்க தான் செய்வாங்க..
கல்யாணம் முடிஞ்சு கொடுத்தாச்சு தான அவள. உன் அதிகாரத்த உன் வீட்டுல வச்சிக்கோங்கன்னு நீ ஆரம்பத்துலயே சொல்லி கண்டிச்சு இருந்தா நான் ஏன் இன்னைக்கு பேச போறேன். அவளும் ஏன் கொடுக்கு முளைச்சி ஆட போறா…” என எள்ளும் கொள்ளுமாய் கண்டித்தார் அம்பிகாமா கோதாவரியை.
மகளுக்காக மட்டுமே பேசும் தாய்மார்களுக்கு மத்தியில் மருமகளுக்கா பேசும் அம்பிகாமா எட்டா ஆதிசயம் தான்.
“ஜஸ்ட் மிஸ் நான் கூட என் பேத்தி கையால இந்த பவர் டப்பா (சக்திவேல்) மூஞ்சி வாய் பிளக்கும்னு நினைச்சேன்.
நானே அந்த சோகத்துல இருக்கேன். இவ வேற உடால கட்டைய போட்டுக்கிட்டு.
ஹான்… என் பேரன் கையால தான் பவர் டப்பா முகம் பஞ்சர் ஆகணும்னு இருக்கும் போல…” என விரக்தியாய் விசனசப்பட்டு அமர்ந்து ஜூஸை பருக்கினார் அம்பிகாமா.
இங்கு அறைக்கு அழைத்துக் கொண்டு வந்த இன்னுழவனோ மேக விருஷ்டியை உள்ள விட்டு கதவை படார் என்று அடைத்தான்.
அவளோ இன்னுமும் மேனி நடுங்க அவனின் ருத்ர அவதாரத்தில் இருந்து அதிர்ந்து வெளிவராது அதிர்ச்சியுடனே நின்று கொண்டிருந்தாள் சிலையென.
கதைவை அடைத்தவன் திரும்ப அவளையே வெறிக்க பார்த்து நின்றாள் விழிகளில் நீருடன் மேக விருஷ்டி.
இரண்டடியில் அவளை நெருங்கியவன் தன் மார்பு கூட்டுக்குள் அடக்கியனான் கோழி குஞ்சாய்.
அவளும் அவனை காற்றுக்கும் இடம் கொடுக்காது இறுக்க அணைத்தாள்.
“இப்ப என்ன நடந்து போச்சுன்னு எதுக்கு இப்பிடி நடுங்குற டி நீ…” அவள் முதுகு வருடி ஆசுவாசபடுத்த…
சற்றென்ற அவன் விழி ஏறெடுத்தவள் “அதைத்தான் நானும் கேட்கிறேன் எதுக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு. எனக்கு பயமா இருக்கு உழவா உங்க கோபத்தை பார்த்து.” என அவன் நெஞ்சு முட்டினாள் சிசுவாய்.
அவள் பேச்சில் மீண்டும் கோபம் கிளர்ந்தாலும் அதற்கு உள்ளுக்குள் மடை கட்டியவன் அவளை சமநிலைப் படுத்த முனைந்தான்.
“கணக்குக்கு நீதான் கோவப்பட்டு இருக்கணும் ஏஞ்சல், நான் கோபப்பட்டு இருக்கேன்.”
“எவ்வளவு திமிரு டா உனக்கு…” என அவனை விடுத்து தலையணை தூக்கி மொத்தினாள்.
அவள் அடிகளை சுகமாய் வாங்கியவன், “ஏய் என்னது டாவா… ஏய் என்னடி மரியாதை எல்லாம் காத்துல பறக்குது…”
“நீதான டா சொன்ன வயசுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது வார்த்தைக்கு நடந்துக்கிற விதத்துக்கு தான்னு” என்றவள் மேலும் அடிக்க…
“ஏஞ்சல் கை வச்சி அடி டி… அப்போ தான் இதமா இருக்கும்” என
“ஓ அப்படி வரியா, நீ எனக்கு மரியாதையே கொடுக்க வேண்டாம் செல்லம். அதான் காலையிலேயே மானம் மரியாதை எல்லாம் பறந்து போயிருச்சுனேனே…” என்றான் தலையணை பறித்து தன்னோடு அணைத்து.
“வாய்… வாயா இது… என்ன வாய் இது… நான் என்ன பேசினா இது என்ன பேசுது”
அவளின் இதழை பெருவிரல் கொண்டு அழுத்த வருடியவன் “அப்ப இது வாயா தெரியலையா டி… வேணா உன்னோட இந்த ரெண்டு தேன் வடியிற உதட்ட மோத விட்டு பாரு ஏஞ்சல்” என்றவன்
அவளின் பதட்டத்தை மறக்கடித்து மனதை இதமாக்கினான்.
“உழவா நீங்க இப்ப எதுக்கு அடி போடுறீங்கன்னு தெரியுது. நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் கிளம்புங்க” அவனை தன்னில் இருந்து விலக்க…
உடும்பாய் இதழ் கடித்தவன், “ஆனா எனக்கு வேணும் போல இருக்கே ஏஞ்சல்…” என சிறு பிள்ளையை அடம் பிடித்தான் விழிகள் சிரிக்க.
“என்ன வேணும் உங்களுக்கு இப்போ…”
“எல்லாமே வேணும் கிடைக்குமா…” விரலால் அடி முதல் நுனிவரை ஓவியம் வரைந்தான் கிறக்கமாக.
அதில் நாணித்து சிலிர்த்தவள் கன்னங்கள் செம்மையாக “ஒன்னும் கிடைக்காது முதல்ல போங்க…”
“ஒன்னு கிடைக்கலட்டாலும் பரவால்ல டி… ஒரு அரை கிடச்சா கூட போதும்” என அவளின் கோவை பழ இதழை வழிகளால் சிறையெடுத்தான்.
அதில் அவன் முகம் பார்க்க முடியாது வெக்கத்தை மறைத்தவள், “அரையும் கிடையாது முக்காலும் கிடையாது. ஐயா சாமி கிளம்புங்க ஆல்ரெடி உங்க அப்பாக்கு என் ஃபேமிலிய பிடிக்காது. இதுல இன்னைக்கு நீங்க பண்ண அக்கப்போருல அவர் என்னை கொலை பண்ணாலும் பண்றதுக்கு இந்நேரம் ப்பளான் போட்டு இருப்பாரு தீவிரமா…” என்றவள் கேலியாய் நகைத்தாள்.
“அவர் உன்ன கொலை பண்ற வரைக்கும் நான் பார்த்துகிட்டு சும்மா இருப்பேன் நினைச்சியா ரெயினி. அவர் அப்படி நினைச்சாலே விளைவு பெருசா இருக்கும் அவருக்கு.” என்றவன் விழிகள் அனல் பறந்தது செழுமையாய்.
மீண்டும் அவளவன் கோவ வதனத்தில் அதிர்ந்தவள் “இத இதத்தான் சொன்னேன். இந்த வாய் தான் இந்த வாய் தான் இப்படி எல்லாம் பேசுது. கூடவே இந்த முகம் ஆவுன்னா சிவக்குது. உங்கள என்ன பண்ணனும்” அவள் முறைக்க…
“என்ன வேணாலும் பண்ணலாம் ஏஞ்சல். உன் இஷ்டத்துக்கு பண்ணு நான் என்ன கேட்கவா போறேன். இந்தா இப்பவே பண்ணு. கோவத்துல சிவக்குற என் முகத்த உன் மோகத்துல சிவக்க வையி…” என அவனிரு இதழ்களையும் அவள் இதழ்களின் அருகில் நெருங்கினான் மீண்டும் குறும்புடன் கள்ள பார்வை கொண்டுவனாய்.
“ஐயோ… என்னால முடியல தலை ரொம்ப வலிக்குது” என தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் மேக விருஷ்டி உடையவன் வார்த்தை ஜாலத்தில் திணறியவளாய்.
இன்னுழவனோ ஒரு சிறு மூச்சுடன் அவளிரு தோள்களையும் பிடித்து எழும்ப செய்து கண்ணாடி முன் அமர்த்தியவனோ அருகில் இருந்த முடி உலர்த்தியை ஆன் செய்தான்.
இருவரின் விழிகளும் கண்ணாடியூடு இருக்க ஈரம் தோய்ந்த அவளின் கேச திரள்களில் செயற்கைக் காற்றை செழுமையாய் படரவிட்டு அதை உலர வைத்தவனோ…
“ஏஞ்சல் எல்லா நேரமும் நான் உன் கூட இருக்க முடியாது. அவர் அப்பா மாதிரி நடந்துகிட்டா நான் ஏன் இப்படி எல்லாம் பேச போறேன். தப்புன்னு தெரிஞ்சா அது தட்டி கேட்கணும் ஏஞ்சல் இப்படி அழுதுகிட்டு இருக்க கூடாது.
நல்லா புரிஞ்சுக்கோ இந்த குடும்பத்துக்கு நீதான் இனி எல்லாம். இந்த குடும்பத்துக்கு மட்டும் இல்ல இந்த ஊருக்கும்.
இந்த ஊர்ல நான் தலைவரா இருக்கும் போது என்னோட மனைவி உனக்கும் சில பொறுப்புகள், பதவிகள், அந்தஸ்துகள் இருக்கும். அதுல இந்த மாதிரி நிறைய களைகள் வரும் அதாவது என் அப்பா மாதிரி.
ஒரு நெற்கதிர் வளர்ந்து மேல வர்றதுக்கு இந்த மாதிரி களைகள் எல்லாம் குறுக்க நிக்கும் போது அதை பிடுங்கி எறிய தான் செய்யணும். இதுல வயசு மரியாதைன்னு பாரபட்சம் பார்த்தா ஒன்னும் முடியாது.
இனிமேல் இந்த மாதிரி அழுதுகிட்டு நிக்க கூடாது. நாளைக்கு என்ன யாராவது ஏன் என் அப்பவே ஏதாவது பேசினா கூட நீ இந்த மாதிரி நின்னா அது எனக்கு எப்படி மரியாதையா இருக்கும் சொல்லு.
உன் அப்பாவ பேசின உடனே உன் தம்பி யாரு என்னனு பார்க்காம கொதிச்சுகிட்டு வந்தானே நீயே வரல…?”
“ஏன்னா நான் இந்த வீட்டுக்கு மருமக உழவா. வந்த அன்னைக்கு என்னால இந்த மாதிரி பிரச்சனை வந்ததுன்னா…” அவள் இழுக்க
“இந்த வீட்டு மருமகனா என்ன விண்வெளியில இருந்த குதிச்சு வந்தியா நீ. நீயும் பத்து மாசம் வயித்துல இருந்து அப்பா, தம்பி அம்மான்னு வளர்ந்து தானே வந்த.
இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. உனக்கு இந்த வீட்ல யாரு என்ன மரியாதை கொடுக்குறாங்களோ அதே மாதிரி நீ அவங்களுக்கு கொடுத்தா போதும்.
வாய முடிகிட்டு சகிச்சிகிட்டு எல்லாம் போக வேண்டாம்.
அது நானா இருந்தா கூட.
சிலர் வயசு காட்டி உன்ன அவமானப்படுத்தினா கூட திருப்பி பேசு. இந்த வீட்ல உனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கும் இல்ல. தப்புன்னு தெரிஞ்சா தட்டி கேளு நான் இருக்கேன் உனக்கு.
ஏங்கிட்ட கூட இது தப்புடான்னு சொல்லு நான் கேட்குறேன். இல்ல இந்த உதட்ட வச்சி நாலு கடி கடிச்சி சொல்லு ஏன்னு கேட்காம கேட்குறேன்,தெரிஞ்சு புரிஞ்சி நடந்துக்கோ சரியா.” என்றவன் உலர்த்தியை அணைத்து அவளை தூக்கி படுக்க வைத்தான்.
“கொஞ்ச நேரம் தூங்கு ஏஞ்சல் தலை வலி சரியாயிடும்” அவள் பிறை நெற்றியில் இதழ் பதித்தான்.
அவன் கையைப் பிடித்தவள், “நீங்க என்னென்னமோ சொல்றீங்க என்னால முடியுமான்னு தெரியல. ஆனா, உங்க பெயர் கெட்டு போற மாதிரி நான் எங்கேயும் நடந்துக்க மாட்டேன்.
அப்புறம் உங்கள யாராவது தப்பா பேசினாலும் இன்னைக்கு அப்பாவை பேசின மாதிரி நான் அமைதியா இருந்த மாதிரி இருக்க இனி மாட்டேன் ப்ராமிஸ் சரியா… அதுனால என்கிட்ட பேசாம இருக்க கூடாது…” என்றாள் உதட்டை பிதுக்கி மிடறு குழியை பிடித்துக் குழந்தையாய்.
பிதுங்கிய இதழில் இதழ் ஒற்றி எடுத்தவன், “சரி எதை பத்தியும் யோசிக்காம கொஞ்ச நேரம் தூங்கு. எனக்கு வெளியில வேலை இருக்கு நான் போயிட்டு வரேன் ஓகேவா” மென்னகையுடன்.
“நான் தூங்குற வரைக்கும் என் கூட இருக்குறீங்களா ப்ளீஸ்” கெஞ்சல் மொழியில் யாசித்தாள்.
அவளை அள்ளி வாரிசுருட்டி தன் நெஞ்சுக்குள் அடக்கிக் கொண்டவன் தட்டிக் கொடுக்க பத்து நிமிடத்தில் அவளும் உறங்கிப் போனாள் அவன் மார்பு சூட்டில்.
உறங்கியவள் துயில் கலையாது தலையணையில் பதித்து நெற்றியில் மென் முத்தம் கொடுத்து சத்தம் வராது கதவை அடைத்து வெளியே வந்தான் இன்னுழவன்.
வெளியில் வந்த இன்னுழவன் பைக்கில் ஏற போக அங்கு தோட்டத்தில் நின்று இயற்கை காற்றை உள்வாங்கிக் கொண்டிருந்தான் நிவர்த்தனன்.
அவனை கண்டவுடன் பைக்கை ஆன் செய்யாது அவனை நோக்கி சென்றான் இன்னுழவன்.
“என்னடா எங்க ஊரு காத்து புடிச்சிருக்கா” என குரல் கொடுத்து அவன் தோளோடு தோள் போட்டு நின்றான் இன்னுழவன்.
இதழ் பிரியாது சிரித்தவன், “நீங்க மறந்துட்டீங்க நினைக்கிறேன் மாமா இதுவும் என் ஊர் தான்..” என்றான் நக்கலாய்.
“நான் எல்லாம் மறக்கல டா நீங்க தான் மறந்துட்டு இத்தனை வருஷமா எங்கயோ இருந்திங்க. அவ்வளவு பேசுறவன் இந்த ஊரை பார்த்து வந்திருக்க வேண்டியது தானடா. இந்த ஊருக்கு வரட்டுமான்னு மை மாமனார் அதான் உங்க டாடி என்கிட்டேயே பர்மிஷன் கேட்கிறாரு.. எல்லாம் காலக்கொடுமை” என சலித்துக் கொண்டான் இன்னுழவன்.
நிவர்த்தனனோ மௌனமாய் நகைத்துக் கொண்டவன், “உண்மையாவே இதெல்லாம் கனவு மாதிரி இருக்குது மாமா. இந்த ஊருக்கு நாங்க வருவோம் இப்படி எல்லாம் இருப்போம், முக்கியமா என் அக்காக்கும் உங்களுக்கும் கல்யாணம் முடியும் இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல” என்றான் ஆச்சர்யமாக.
இன்னுழவனும் “ஹிம்… உன் அக்கா பத்தி சொல்லு டா. எதுக்காக உன் அக்கா காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணி ஒன் வீக்லயே அத டிராப் பண்ணிட்டு போனா?
எனக்கு தெரிஞ்சாகனும். அன்னைக்கு காலேஜ்ல நடந்த இன்சிடென்ட்டாலவா. அது ராகிங்கான சீனியர் ஜூனியர் பிரச்சனை.
அதுக்கான ப்ராப்பர் பனிஷ்மென்ட் கூட நான் அப்பவே கொடுத்துட்டேனே பிரின்ஸ்பல் மூலமா. அப்புறம் எதுக்கு அங்க இருந்து போனா…?” கேட்டான் விழிகளில் தீவிரமாக.
நிவர்த்தனன் நிமிர்ந்து கால் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டபடி நின்றவன், “அவ அங்க இருந்து பாதில போனதுக்கு முக்கிய காரணமும் முழுமுதற்க் காரணமும் நீங்க தான் மாமா” என அசராது இடியை இறக்கினான் இன்னுழவன் மேல்.
செங்கோதை மணம் வீசும்…
Story பத்தி ஒரு one or one like and heart Friend 🤗😍…