அந்தியில் பூத்த சந்திரனே – 14

4.9
(10)

வீட்டிற்கு வந்ததிலிருந்து நிரஞ்சனா முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. திருமணத்தின் போதும், அதற்க்கு முன்பும் கூட புடவை, நகை வாங்க சென்ற இடத்திலும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அவளுடைய பிடித்தமின்மையும் அம்ருத்தா மீதான வெறுப்பு  பார்வையும் ஹர்ஷாவுக்கு நன்றாகவே புரிந்தது. இருப்பினும் அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை.

இரவு உணவு தயாராக இருக்க அனைவரும் அமர்ந்து பேசி சிரித்தப்படியே சாப்பிட தொடங்கினர். அப்போது ஹர்ஷாவின் கைபேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தவன் தன்னுடைய ரெஸ்டாரண்ட் இன்டீரியர் டெகரேஷன் மாற்றுவதை பற்றி மேனேஜரிடம் பேசி முடித்ததும் அழைப்பை துண்டித்து விட்டு அம்ருதாவின் புறம் திரும்பி,

“அம்ருதா, ரெஸ்டாரண்ட்ல இன்டீரியர் மாத்தலாம்னு இருக்கேன். உனக்கு ஏதும் ஐடியா இருக்கா?” என்று கேட்க அவள் பதில் சொல்லும் முன்னரே,

வாய்விட்டு சிரித்தாள் நிரஞ்சனா. “என்ன அம்ருதா இதெல்லாம் உனக்கு தெரியுமா என்ன? உனக்கு இந்த வீட்டை விட்டா வேற எதுவுமே தெரியாது. ஏதோ அரைச்ச மாவையே அரைக்குற மாதிரி அந்த ஐ டி கம்பெனி வேலையை வீட்லருந்தே பார்த்துட்டு இருக்க. இதை விட்டா உனக்கு வேற என்ன தெரியும்?” என்று நக்கல் தோணியில் கேட்டிட

ஹர்ஷாவின் முகமோ கோபத்தில் இறுகியது.

அதை கவனித்த காவேரி நிரஞ்சனாவின் காதருகில் சென்று மெல்லிய குரலில் “வாயை மூடுடி. இல்லனா மாப்பிள்ளை இருக்காருன்னு எல்லாம் பார்க்க மாட்டேன். தொலைச்சு கட்டிடுவேன். ஞாபகம் வச்சுக்கோ” என்றதும் “ம்க்கும்.. உங்க மூத்த மகளை ஒன்னு சொல்லிட கூடாதே. உடனே வந்துடுவீங்க” என்றவள் ஹர்ஷாவின் கோபத்தையும் கவனிக்க தவறவில்லை. அந்த கோபத்தையும் அம்ருதா மீது வெறுப்பு பார்வையாக வீசிவிட்டு வேகமாக சாப்பிட்டு முடித்து அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

ஆனால் இன்று அவள் நடந்து கொண்ட விதத்தில் ஹர்ஷாவுக்குதான் சற்றே கோபமும், எரிச்சலும் மேலிட்டது. சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் அம்ருதாவின் தாய் தந்தையுடன் பேசி கொண்டிருந்தவன் பிறகு தன்னுடைய வேலையை முடிக்க அறைக்குள் சென்றுவிட்டான்.

அறைக்குள் வந்த அம்ருதாவிடம், “என்னதான் பிரச்சனை உன் தங்கச்சிக்கு? ஏன் எந்த நேரமும் உன்னை பிடிக்காத மாதிரியே பாக்குறா, பேசுறா? என்று கோபம் மேலிட கேட்டவனை பார்த்து, “எனக்கே தெரியலயே. சின்ன வயசுல நல்லதான் இருந்தா. என்ன காரணமோ தெரியல. அவளுக்கு என்னை பிடிக்கிறதே இல்ல. எதுக்கு வீண் பிரச்சனைன்னு அவ ஏதாவது பேசினாலும் நான் எதுவும் பேசிக்க மாட்டேன்.”

“ஏன் உன்னோட அம்மா அப்பா இதெல்லாம் என்னனு கேட்டு கண்டிக்க மாட்டாங்களா?”

“கண்டிப்பாங்க. ஆனா அதுக்கும் சேர்த்து என் தலைதான் உருளும். இவளே என்னை திட்டிட்டு, அம்மா எனக்காக சப்போர்ட் பண்ணி ஏதாவது கேட்டாங்கனா, உன்னாலதான்டி வீட்ல எல்லார் நிம்மதியும் போகுதுனு என்னைவே குறை சொல்லுவா. இவ ஏன்தான் இப்படியெல்லாம் பேசுறாளோன்னு எனக்கு அழுகைதான் வரும்.”

“இதோ பாரு அம்ருதா. நீ இப்படியே இருந்தீனா அவ அப்படித்தான் பேசுவா. யாரா இருந்தாலும் பொறுத்து போறேன், சகிச்சு போறேன்னு இல்லாம தப்புன்னு தெரிஞ்சா எதிர்த்து பேசு. ஒரு எல்லைக்கு மேல யாரையும் பேச அனுமதிக்காத. அவ என்ன பேசினாலும் கேட்டுட்டு நீ அமைதியா  இருந்தீனா, அவ பேசிகிட்டதான் இருப்பா. நீ எதிர்த்து பேசுற வரைக்கும் இந்த பிரச்சனை முடியாது.

 உன்னை அவகூட வேணும்னே சண்டை போடுன்னு சொல்லல. அவளா உன்கிட்ட பிரச்சனை பண்ணினா அதை சரியா கையாள தெரியணும்னு சொல்றேன். நம்ம மன நிம்மதியை கெடுக்கும்படியான எந்த விஷயத்தையும் நம்ம அனுமதிக்கவே கூடாது அம்ருதா. யாரா இருந்தாலும் உன்மேல தப்பு இல்லாத பட்சத்துல எதிர்த்து பேச கத்துக்கோ”

என்றதும் புரிந்தது என்பதை போல தலையாட்டினாள். தன்மீது அவன் காட்டும் அக்கறையையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் கண்டவளுக்கு ஹர்ஷாவை மேலும் மேலும் பிடித்து போனது. தன் தாய் தந்தையருக்கு பிறகு தனக்காக யோசிக்கும் ஒருவன் என்பதில் அவன் மீது உரிமையும் மரியாதையும் கூடி கொண்டே போனது அம்ருதாவிற்கு.

அவள் சிறு பிள்ளையை போல தலையாட்டுவதை பார்த்து சிரித்தவன், அவள் நெத்தியில் முத்தமிட்டுவிட்டு மீண்டும் அவனுடைய வேலையை தொடர்ந்தான். 

‘என்ன இவன்? எதுக்கெடுத்தாலும்  முத்தத்தை கொடுத்துடுறான்?’ என்று  எண்ணியவள் ‘ஆனா இதுவும் நல்லாதான் இருக்கு’ என்று சிரித்து கொண்டாள்.

பின் தண்ணீர் பாட்டில் காலியாக இருக்க அதை நிரப்ப சமையல் அறைக்குள் சென்றவளை பிடித்து கொண்டாள் நிரஞ்சனா. 

“என்னடி உன் புருஷன் என்னவோ வெறப்பாவே திரியுறாரு. உன்னை ஏதாவது சொன்னா என்னைவே அப்படி மொறச்சு பாக்குறாரு. மனசுல உங்களுக்கு என்ன இளம் ஜோடிகள்ன்னு நெனப்போ?” எணும்போதே, 

‘ஆரம்பிச்சுட்டா.. இனி வார்த்தைகள விஷமா கொட்டாம விடமாட்டா’ என்று எண்ணிகொண்டவளுக்கு ஹர்ஷா கூறியது நினைவில் வந்து போனது. 

அதை கலைக்கும் விதமாக “நல்லா விசாரிச்சு பாருடி, உண்மையிலேயே முதல் பொண்டாட்டி கூட எந்த பேச்சு வார்த்தையும் இல்லையான்னு. உன்னையும் கல்யாணம் பண்ணிட்டு அவ கூடவும் குடும்பம் நடத்த போறாரு” என்றதும் அந்த வார்த்தைகளை கேட்டவளுக்கு சுர்ரென்று கோபம் வர,

“பளார்..” என்று அவள் கன்னத்தில் அரைந்திருந்தாள் அம்ருதா.

“இதோ பாருடி. இத்தனை நாள் என்னை பத்தி பேசின நான் பொறுத்துக்கிட்டேன் ஆனா அவரை பத்தி இனி ஒரு வார்த்தை பேசின.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்.” என்று கோபத்தில் விழிகள் விரிந்து, முகம் சிவக்க நின்றவளை பார்த்த நிரஞ்சனா வாயடைத்து போனாள். அவளுக்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை. உண்மையிலேயே ‘இது அம்ருத்தாதானா?’ என்று அடித்த அடியில் நம்பமுடியாமல் பார்த்தாள் நிரஞ்சனா.

அவள் அப்படியே அசைவின்றி நிற்க, தண்ணீரை பாட்டிலில் நிரப்பியவள், நிரஞ்சனாவை தாண்டி போகும்போது “ஜாக்கிரதை” என தனது ஆள்கட்டி விரலை உயர்த்தி மீண்டும் ஒருமுறை எச்சரித்து விட்டு சென்றாள். 

‘இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னைவே அடிச்சிருப்பா. உன்னை சும்மா விட மாட்டேண்டி. இவ்வளவு நாள் பூனை மாதிரி இருந்துட்டு இப்போ என்மேலயே கையை வச்சுட்டல்ல?’ என்று புசு புசுவென கோப மூச்சுக்களை இறைத்தவள் ‘இதுக்கு நீ அனுபவிப்ப அம்ருதா, அனுபவிக்க வப்பேன்’ என்று மனதுக்குள் கறுவி கொண்டவள் வேக எட்டுக்களை  வைத்து அறையினுள் சென்று தாழிட்டு கொண்டாள்.

இரவு உறங்கும் நேரம் வந்ததும் காவேரி அம்ருதாவிடம் சென்றவர் “நீங்க இங்க இருக்குற வரைக்கும்தான ஆத்யா எங்ககூட இருப்பா. அதுவரைக்கும் அவளை எங்ககூடவே தூங்க வச்சுகிறோம்.” என்றவர் அம்ருதாவின் பதிலுக்காக காத்திராமல் ஆத்யாவை தூக்கி கொண்டு சென்று விட்டனர். 

அவளோ திரும்பி பார்க்க ஹர்ஷா அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான். அவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்றதும் தனது பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டவள் திருத்திருவென விழிக்க அதை பார்த்த ஹர்ஷாவுக்கு சிரிப்புதான் வந்தது. பிறகு கதவை தாழிட்டுவிட்டு படுக்கையை பார்க்க அது ஹர்ஷாவின் வீட்டில் இருந்த கட்டிலை போல பெரியது இல்லை. இரண்டு பேர் உறங்க சரியாக இருக்கும்.

அதை பார்த்தவள் என்ன செய்வது என்று கைகளை பிசைந்தப்படி நிற்க, அவளை நெருங்கி வந்தவன் அவள் நாடியை பிடித்து தன்னை பார்க்க செய்து, “உனக்கு என்னை பிடிக்கலையா அம்ருதா?” என்றான். அவன் கேள்வியில் அதிர்ச்சியும் குழப்பமுமாய் அவனை ஏறிட்டவள், “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே? ஏன் அப்படி கேக்குறீங்க?” 

“நீ பண்றதெல்லாம் பார்த்தா அப்படித்தான் தெரியுது. அதான் கேட்டேன்.”

“இல்ல… அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.” என்றவள் அவனை பார்க்க அவனது பார்வை அவளது இதழை நோக்கி சென்றது. அவளது வரி ஓடிய செவ்விதழை நோக்கியபடியே “அப்போ உனக்கு என்னை பிடிக்குமா அம்மு?” என்றதும் அவனது அம்ருதா என்ற அழைப்பு அம்மு என்று மாறி போனதில் திகைத்து நின்றாள். மீண்டும் ஒருமுறை தாபம் நிறைந்த குரலில் “உன்னைத்தான் கேக்கிறேன் சொல்லுடி. என்னை பிடிக்குமா?” என கேட்க, 

அவள் “ம்ம்ம்…” என்றதும் பட்டென அவளது இதழை கவ்வி கொண்டான். அவள் அடுத்து கூற வந்த வார்த்தைகள் அனைத்தும் தனக்குள் முழுங்கி கொண்டான். இதை சற்றும் எதிர் பாராதவளோ பதறி விலக போக, “அம்மு ப்ளீஸ்..” என்றவன் மீண்டும் அவள் இதழை ஆள துவங்கினான். அவனது ஒற்றை கரம் அவளை இழுத்து அணைக்க மற்றைய கரமோ அவளது கூந்தல் காட்டிற்குள் புகுந்து மேலும் தன்னோடு நெருக்கி கொண்டது.

அவனது தொடுதலில் மயங்கி, பின் கிறங்கி, அவனுக்குள் தொலைந்து போனவள் தன்னை மறந்து தானும் அவனது முத்தத்தில் பங்கேற்க  தொடங்கினாள். அவள் தன்னை ஏற்கிறாள் என்ற எண்ணமே அவனை அவளிடம் முன்னேற சொல்ல, இருவரது ஆடையையும் முத்தமிட்டப்படியே கலைந்தவன், இதழை விடுத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க, மொத்தமாக தொலைந்து போனாள் பெண்ணவள். 

உலகம் மறந்து, தன்னை மறந்து அவனது பின்தலை சிகையை அழுந்த பற்றியவள் தன்னுள் மேலும் புதைத்து கொண்டாள். அவளை இரு கரங்களிலும் ஏந்தி கொண்டவன் கட்டிலை நோக்கி சென்று அவளை மெத்தையின் மீது கிடத்தினான். அதனை தொடர்ந்து இருவரும் ஈருடலும்  ஓருடலாக தங்களது வாழ்க்கை பயணத்தை துவங்கி இருந்தனர்.

அடுத்த நாள் காலை பொழுது ஹர்ஷா பலத்த சிந்தனையும் குழப்பமுமாக நின்றிருந்தான். நேற்று இரவு நடந்த கூடலில் அவள் கன்னிப்பெண் என்பதை அறிந்து கொண்டவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அது எப்படி ஒரு குழந்தைக்கு தாயானவள் கன்னித்தன்மையுடன் இருக்க முடியும்? என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு அவள் கடந்த கால வாழ்க்கை பற்றின குழப்பம் மேலிட, மனது பலவாரான சிந்தனைக்குள் மூழ்கி போனது.

‘இது எப்படி சாத்தியம்?’ என்ற எண்ணமே அவனை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ‘அம்ருதாவிடமே இதைப் பற்றி கேட்டு விடலாமா?’ என்று ஒரு நிமிடம் சிந்தித்தவன் மீண்டும் தன் தலையை உலுப்பிக்கொண்டு ‘வேண்டாம் நான்தானே சொல்லி இருந்ததேன்? பாஸ்ட் லைஃப் பத்தி பேசக்கூடாதுன்னு. இப்ப எப்படி நானே அதைபத்தி கேட்கிறது? எதுவாயிருந்தாலும் பாத்துக்கலாம்.’ என்று எண்ணி கொண்டாலும் இது அவன் மனதிற்குள் பெரும் குழப்பமாகவே இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!