ஆழி 4
தன்னை விட மெலிந்த பெண்ணை இரக்கமேயில்லாமல் காயப்படுத்தியவனின் கைகள் அவளது கூந்தலை பற்றி இழுக்க.
அமிலமாய் இதயம் தைத்த வார்த்தைகளை காதில் வாங்கியவளுக்கு, இப்படியும் உயிர் வாழ வேண்டுமா என்றுதான் ரோசம் வந்தது.
அவனையே ரோசம் பொங்கப் பார்த்தவளுக்கு, அவனது இரக்கமற்ற பாவனையைப் பார்க்கவும் நன்றாகவே உரைத்தது. மான அவமானம் பார்க்க இது நேரமல்ல என்று.
அவன் யாரு என்னன்னே தெரியாது. இதுவரைக்கும் சுமந்ததே பெருசு. அதனால அவனை பாவம்னு விடுவோம் என்று தனக்குத் தானே ஆறுதல் பண்ணியவள் போனால் போகிறதே என்று அவனை மன்னித்தாள்.
அவனை விழி உயர்த்திப் பார்த்தவளுக்கு, மன்னிப்புக் கேட்கவும் அசிங்கமாக இருந்தது. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்கணுமான்னு உள்ளம் கொதித்தாலும், தன்னையே கத்தி போல கிழிக்கும் அவனது கூர் விழிகள் அவனை மன்னிப்புக் கேட்கவே வைத்தது. பார்க்கும் பார்வையாலேயே அவளைக் கட்டுப்படுத்தினான்.
முரண்டு பிடிக்கும் மனதை அடக்கியவள், “சாரி” என்று கேட்டுவிட்டாள். வலியை அடக்க முடியாமல் இம்முறை கண்ணீர் உடைப்பெடுத்து கன்னங்களை நனைத்தது.
“பாத்து இருக்க மாட்ட. தப்பிச்சு வந்திருக்க நீ. நான் யாருன்னு தெரியுமா உனக்கு. அண்ட் இது காடு. மிருகங்கள் வாழுற இடம். ஏதும் உரைக்காம குறட்டை விட்டுத் தூங்கிட்டு வர. இதுல இவ்ளோ ரத்தம்.
சிங்கம் புலியை, வா வந்து எங்களை புடிச்சுத் தின்னுன்னு கூவிக் கூவி அழைக்கிற. நீ சாவுறதும் இல்லாம உன்னைய காப்பாத்துற கொடுமைக்கு நானும் சாகணுமா. அடிமுட்டாள்” லாரி நிறைய திட்டுகளை அவளுக்கு வாரி வழங்கினான்.
“நான் முட்டாள்தான்” மலைத்துப் போனவள் இரு கைகளையும் அவனிடம் நீட்டினாள்.
“கல்லு குத்துது. என்னைய தூக்கி வேற இடத்துல உட்கார வச்சுட்டு ஆசை தீறப் பேசு” மான அவமானத்தை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டுக் கெஞ்சினாள்.
“என்ன சொன்ன? ஆசையா பேசுறேனா? எஸ் இதுக்குத்தான் குட்டியானை சைஸ்ல இருக்க உன்ன சுமந்துட்டு வந்திருக்கேன். வாவ் மா. நீ பேசும்மா பேசு. குட் குட்” காடே அவனது சிரிப்பால் அதிர்ந்தது.
“போச்சு. ஏற்கனவே பக்கம் பக்கமா கழுவி ஊத்துவான். நானே அவனுக்கு ஹின்ட் கொடுத்துட்டு இருக்கேன். அவனும் இந்தா வாங்கிக்கோன்னு விம் போட்டு கழுவுறான். வாய மூடிட்டு இருடி ஆழி” பக்கத்துல பிரம்மாண்டாமாய் இருந்த மரத்திலேயே தலையை மோதி உடைக்கும் வெறி அவளுள் கிளர்ந்தது. அவளது சிந்தனையையும் மீறி அவன் பேச்சு காதில் நெருப்பாய் விழ, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நானா உன்னை வான்னு கூப்பிட்டேன். வேற திசைக்குப் போய்த் தொலைய வேண்டியதுதானே? ஐ காண்ட்…” நெற்றியில் அரைந்தவனுக்கு இவளை எங்கயாவது கழட்டி விட்டுட்டுப் போலாம் என்றுதான் தோன்றியது.
ஆனால் காட்டுக்குள் விட்டுவிட்டுப் போனால் இவ்வளவு நேரம் அவளைக் காப்பாற்றியது வீணாகிப் போகுமே, யோசித்தவனுக்கு காட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவளைப் பிரிவது என்ற முடிவுக்கு வந்தான்.
“ஓகே கம்” முதுகில் ஒரு கைகொடுத்தவன், தொடைக்கும் கீழே வலது கையை வைத்தான்.
“ஏய்..ய்..! டோன்ட் டச்” தேகம் சிலிர்த்து அவனைத் தள்ளி விட்டாள்.
“இப்ப என்ன?” தேவையில்லாத சுமை என்ற எரிச்சலில் முள் மீது நிற்பதைப் போலவே சினத்தில் இருந்தவனுக்கு அவள் தள்ளி விடவும் உச்சத்திற்குப் போனது கோபம் மொத்தமும்.
“உன்கிட்ட ஹெல்ப் கேட்டேன்னு பேட் டச் பண்ணப் பார்க்குறயா?” இடம் பொருள் ஏவல் புரியாது கேட்டாளே பார்க்கலாம்.
அரைகுறை மனதோடு உதவ தயாராய் இருந்தவனுக்கு இப்பொழுது, விட்டுத் தொலைச்சிட்டே போலாமே என்றானது.
அவளருகில் இருந்து விலகியவன், திரும்பி பார்க்காமல் நடந்தான்.
நடந்து செல்பவனையே பார்த்தவளுக்கும், உதவி செய்ய வந்தவனை தேவையில்லாமல் தப்பான வார்த்தைகள் சொல்லித் திட்டியதும் உணர்ந்து கொள்ள முடிய. அவன் முதுகையே வெறித்தாள்.
அவனுக்கும் தனக்கும் என்ன இருக்கு. பாவம் பார்த்து உதவவும் அதிர்ஷ்டம் வேணுமே, பச்சதாபத்தில் கண்ணீர்தான் வழிந்தது அவளுக்கு.
அவனின் நிழலும் அவ்விடத்தை விட்டு மறைந்து போக, இனி வரமாட்டான் என்று நிதர்சனம் உரைக்க. இப்படியே அமர்ந்திருக்க, வலி உயிரை வாங்கும் போல இருந்தது.
ரத்த வாடைக்கு விலங்குகள் வரும் என்றானே. தன்னுடைய உடையைக் குனிந்து பார்த்தவளுக்கு, காய்ந்திருந்த ரத்தத் திட்டுகளும், காலில் வழிந்த ரத்தமும், அதன் வாசமும் குமட்டியது. எதுவுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றில் வாமிட் பண்ணியவளுக்கு வாய் கொப்பளித்து முகம் கழுவ வேண்டுமெனத் தோன்றவும், தண்ணீரை எட்டிப் பார்க்க, கைக்கெட்டும் தொலைவுதான் என்றாலும் எழுந்து செல்லத்தான் வேண்டும்.
உடல் சோர்வும், காலில் உண்டான காயத்தின் வலியும், அதிகாலைக் குளிரும் போனசாக சேர்ந்து கொள்ளவும் முகத்தைப் பொத்தி அழ ஆரம்பித்தாள் ஆழினி. உடலையே அசைக்க முடியாத அந்த நிலையில் அவளால் அழ மட்டுமே முடிந்தது.
அப்பொழுது அந்தரத்தில் பறந்தவள் கண்ணைத் திறந்து பார்க்க, அவன்தான் தன்னை கைகளில் தாங்கிக் கொண்டு தண்ணீர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான். அப்படியே கழுத்து வரைக்கும் ஆழம் நோக்கிச் சென்றவன், அவளை பாறையில் அமர வைத்தான்.
“வாய திறந்த. தண்ணிக்குள்ள அமுக்கி கொன்னுருவேன். என்ன புரியுதா?” கேட்டான்.
“யா ஓகே” சம்மதித்தவள், “சாரி” மன்னிப்பும் கேட்டாள்.
அவளது உடைகளைக் களைந்தவன் தன் டீசர்ட்டை அவளுக்கு அணிவித்தான்.
ஆணின் கரங்களுக்குள் இப்படியொரு நிலையில் இருக்கக் கூசினாலும், அவளுக்கு உடன்படுவதை தவிர்த்து வேற வழியில்லை. ஒரு மருத்துவர் என்றால் இப்படியொரு நிலையில் இருக்கத்தானே செய்வோம், என்று தன்னை கட்டுப்படுத்தினாள். ஜடம் போலத்தான் அந்நேரம் இருந்தாள்.
“உன்னால முடிஞ்ச வரைக்கும் தேய்ச்சுக் குளி. ஹெல்ப் பண்ணனுமா?” அவளை பாறை மீது நன்றாக அமர வைத்துக் கேட்டான்.
“இல்ல நானே குளிக்கறேன்” அவள் மறுத்துவிட.
“இதோ இந்த இலையில் இருக்கற மண்ணைத் தேய்ச்சுக் குளி. நான் அந்தப் பக்கம் குளிக்கறேன். கூப்பிடு வரேன்” என்றுவிட்டு அவன் அங்கிருந்து அகன்றான்.
அவன் சென்றதும் குலைவாய் இருந்த களிமண்ணைக் கைகளில் அள்ளி உடலில் தேய்த்து சுத்தமாகக் குளித்தவளுக்கு, அந்த மண்ணின் நறுமணம் ரொம்ப பிடித்தது.
ஒரு மண்ணுக்கு இத்தனை மனமா, யோசித்தவளுக்கு முல்தானிமெட்டி மண்ணைப் பற்றிய நினைப்பு வரவும் வியப்புதான்.
நன்றாக குளித்தவள், தவனை அழைத்தாள்.
அவளது அழைப்பு கேட்டு வந்தவன், திரும்பவும் அவளைத் தூக்கிக் கொண்டு கரைக்கு சென்றான்.
“உன்னோட டிரெஸ் காய்ஞ்சிருச்சு. போட்டுக்க” அவளுக்கு உடைகளை உடுத்த உதவியவனின் மனநிலை ஜென் மனநிலையோ அல்லது அவன் ஒரு இயந்திரமோ தெரியவில்லை. அவன் முகத்தில் எந்த உணர்வுகளுமே இல்லை.