Home NovelsE2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 15
4.9
(12)

அத்தியாயம் 15

உங்க பொண்ணு மேல சந்தேகம்… அந்த கொலைக்கு இவங்க காரணமாக இருக்கலாம்.. அதன் அடிப்படையில் அவங்கள அழைச்சிட்டு போக வந்திருக்கோம் என்றார் ஒருவர்…

சார் அவ சின்ன பொண்ணு.. அது மட்டும் இல்ல இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம் இருக்கு என்றார் அருணாச்சலம்…

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது… இப்போதைக்கு அவங்கள தான் சஸ்பெக்ட் பண்றோம்…

ப்ரூஃப் இருக்கா சார். அவளே இன்னைக்கு தான் டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கா…

சரி நாளு நாள் எங்க இருந்தீங்க; எந்த ஹாஸ்பிடல் போனிங்க…

அது எப்படி சார் சரியா மர்டர் நடந்து அடுத்த நாள் உங்க வீட்ல யாரும் இல்ல… பக்கத்து வீட்டில கூட யாரு கிட்டயும் சொல்லிட்டு போகல என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார்கள்…

அவர்கள் அதற்கு சரியான ஆதாரத்தை சொல்ல… இதைப் பற்றி நாங்க ஆல்ரெடி விசாரிச்சுட்டு தான் வந்தோம் என்றனர்…

பிறகு என்ன சார் ” யாரோ மர்மமான முறையில் இறந்து கிடந்தா அதுக்கு எங்க பொண்ணு எப்படி காரணமாக இருப்பாள் என்று அருணாச்சலம் கேட்டார்…

சரி உங்க பொண்ணு அன்னைக்கு ஆறு  மணிக்கு அங்க ஸ்டாப்பில இறங்கி இருக்காங்க…

நடந்து  வந்திருக்காங்க.. அங்க இருந்து வீட்டுக்கு வர  அஞ்சு நிமிஷம் ஆகும்… ஆனா உங்க பொண்ணு அரை மணி நேரம் கழித்து தான் வீட்டுக்கு வந்திருக்காங்க.. அப்படின்னா இடையில என்ன நடந்ததுன்னு உங்க பொண்ணு தான் சொல்லனும் என்றார்…

சார் அவ ஸ்டாப்ல கொஞ்ச நேரம் ஏதாவது ஆட்டோ வருதா ன்னு பார்த்திருக்கா…

ஏதும் கிடைக்லன்னு நடந்து வந்திருக்கா என்று கௌசல்யா கூற…

அப்படியா அது உண்மை ன்னு உங்க பொண்ணு தான் சொல்லனும் என்றார்..

அதற்குள் ஒரு பெண் காவலர் ஒருவர் மஃபடியில் வந்தார்…

சாரி சார் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு என்று கூற..

இட்ஸ் ஓகே மா என்று விட்டு  பிரகதியை பார்த்தனர்…

அம்மா எனக்கு எதுவுமே தெரியாது..

இவங்க என்ன சொல்றாங்க… நான் நேரா வீட்டுக்கு தான் வந்தேன்.. இருட்டாக இருந்தது.. ஆனா இவங்க என்னென்னவோ சொல்றாங்க என்று அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள்….

அப்ப உங்களுக்கு எதுவும் தெரியாது அப்படி தானே?

சரி நீங்க சொல்ற மாதிரி நேரா வீட்டுக்கு தான் வந்தீங்க அப்டி தானே?

ஆ.. ஆஆஆ ஆமா நான் வேற எங்கேயும் போகல…

இருட்டா இருந்துச்சு வேகமா வந்தேன்

என்றாள்..

வேகமா வந்தா வீட்டுக்கு சீக்கிரம் தானே வர முடியும் நீங்க எப்படி லேட்டா வந்தீங்க என்று கேட்டார் அந்த பெண் அதிகாரி…

அது வந்து… அது அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை…

கை கால்கள் எல்லாம் நடுக்கத்தில் இருந்தது…

அவளுக்கு மூச்சு எடுக்க சிரமம் ஆகி விட்டது ..

பிரகதி பிரகதி இங்க பாரு என்ன ஆச்சு டி என்று அவளை பிடித்துக்கொண்டு அரவிந்த் கத்தினான்..

அவளும் அவனை அணைத்துக்கொண்டாள்…

பிறகு மயங்கி விட்டாள்…

கௌசல்யா தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட…

ஐயோ யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல என் பொண்ணு இப்படி கஷ்டப்படறா என்று ஜோதி ஒரு புறம் அழுக.

சார் எல்லாரும் பேசிட்டு இருந்தா நாங்க என்ன பண்றது.. ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம் வாங்க என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினர்..

பக்கத்து வீட்டில் இருந்த ஒரு சிலர் என்ன என்று விசாரிக்க வர , அதற்க்குள் அவர்கள் சென்று விட்டனர்..

பிரகதியை அட்மிட் செய்து விட்டு அனைவரும் வெளியே இருந்தார்கள்…

தேவகி இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தாரே தவிர ஏதும் பேசவில்லை…

சார் கொஞ்சம் தனியா பேசலாமா என்றான் அரவிந்த்…

ம்ம் என்று யோசித்த வாரே சரி வாங்க என்று அருகில் இருந்த காஃபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றான்..

ஹாய் சார் ஐ ம் அரவிந்த் என்றான்..

ம்ம் ஐம் ரகு என்று அவனை அறிமுகம் செய்து கொண்டார்…

சொல்லுங்க அரவிந்த் என்ன பேசணும் ..

சார் அவ அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டா…

அது நீங்க சொல்லக்கூடாது அரவிந்த்..

அந்த பொண்ணு பிரகதி அவங்க தான் சொல்லனும்…

சார் எங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம்…

அதுக்கு நான் என்ன பண்ண முடியும் அரவிந்த்…

இப்ப எங்களுக்கு கிடைத்த ப்ரூஃப் எல்லாம் அவங்கள தான் சந்தேக பட வைக்குது‌ என்றான் ரகு..

சார் ப்ளீஸ் கொஞ்சம் அவ இடத்தில் இருந்து யோசிங்க.. அவளுக்கு என்ன மோட்டிவ் இருக்க போகுது என்று கேட்க?

ஹூ க்னோஸ்  அரவிந்த்..

தட்ஸ் ஆல் வாங்க போகலாம் என்று மருத்துவமனை வந்து விட்டனர்…

ரகு டாக்டரிடம் விசாரிக்க ?

பானிக் அட்டாக் ஆயிடுச்சு என்றார்..

அவங்க ரொம்ப ஸ்டெரஸ்ல இருக்காங்க.. ஹாஃப் அன் ஹவர் வெயிட் பண்ணி அழைச்சிட்டு போங்க என்று டாக்டர் சென்று விட்டார்..

அரவிந்த் மற்றும் தேவகியை தவிர்த்து மற்ற அனைவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தனர். – மேசையின் ஒருபுறம் இன்ஸ்பெக்டர் ரகு அமர்ந்திருக்க பிரகதி எதிரே அமர்ந்து இருந்தாள். அவளது  கண்களில் கண்ணீர். அடிக்கடி துடைத்து கொண்டு இருந்தாள்..

…அவள் பதட்டமும் நடுக்கத்திலும் அமர்ந்து இருந்தாள்..

விசாரணை அறை முழுக்க அமைதி…

என் கண்ணால பார்த்ததை மட்டும் சொல்றேன்…

நான் எந்த தவறும் செய்யல சார்…அவள் கண்களில் இருந்து மெதுவாக கண்ணீர் வழிகிறது..

நீங்க ஏதும் செய்யலன்னு சொல்றீங்க ஆனா ஆதாரம் உங்கள தான் யோசிக்க வைக்குது மேடம் என்றார்…

அவளுடைய மெளனம், பயம் எல்லாம் அவர்களுக்கு சந்தேகமாகவே இருந்தது.

சார் என்ன நம்புங்க .. நான் எதுவும் செய்யல என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டே சொன்னாள்..

ஷட்அப் என்று கத்திக்கொண்டே மேஜையை  ரகு வேகமாக தட்ட ..

அவளுக்கு உடம்பெல்லாம் ஒரு நொடி தூக்கிப் போட்டது….

அவளைப் பார்த்து அவனுக்கே பாவமாக இருந்தது..

ரேஷ்மா கொஞ்சம் பாருங்க நான் வரேன் என்று வெளியே கிளம்பி விட்டான்…

அவனுக்கும் அழுத்தம்…

அவளை பார்த்தாள் குற்றவாளி போல தெரியவில்லை…

கொஞ்ச நாள்ல கல்யாணத்த வெச்சிட்டு இப்படி ஒரு ப்ராப்ளம்ல மாட்டிக்கிட்டா என்று ஆதங்கமாக இருந்தது….

அவனுக்கு ஒரு கால் வந்தது…

எடுத்துப் பேசினான்…

ஓகே இன்னும் டுவென்டி மினிட்ஸ் ல வரேன் என்று வைத்து விட்டான்…

ரேஷ்மா கொஞ்சம் சாஃப்டா டீல் பண்ணுங்க.. ஏதாவது சொல்ல‌ வாய்ப்பு இருக்கு..

நான் காலைல வரேன் என்று கிளம்பி விட்டான்..

அவனுக்காக வாசலில் காத்துக் கொண்டு இருந்தான் அவனுடைய மூன்று வயது மகன்  ரித்விக்.

மஹதி ஒரு காஃபி கொண்டு வா என்று சோஃபாவில் அமர்ந்தான்…

ரொம்ப டென்ஷனா?

ஆமா மஹி..

அவள் அவனின் தலையில் தேய்த்து விட இதமாக இருந்தது…

ரித்விக் அவன் தந்தைக்கு கைகளை பிடித்து விட..

என் செல்லக்குட்டி என்று மகனுக்கு முத்தம் கொடுத்தான்..

மஹதி அவனுக்கு பார்சல் ஒன்றை கொடுக்க..

எதுக்கு டி இது ?

பிடிச்சுப் பாருங்க சார் என்றாள்..

அவன் முகம் புன்னகைத்துக் கொள்ள; அவளோ கோபமாக ஹேப்பி அன்னிவெர்சரி என்றாள் உதடு சுழித்து…

ஹே சாரி டி..

கேஸ் டென்ஷன் ல என்று ஆரம்பிக்க..

யப்பா சாமி போதும் உங்க  உருட்டு..போன வருஷம் இதத் தான் சொன்னிங்க என்றாள்..
வேணும்னு யாராவது மறப்பாங்களா?
சரி விடு நாளைக்கு ஈவினிங் உன்ன ஷாப்பிங் போகலாம் என்று வாக்குறுதி அளித்து அவளுக்கும் மகனுக்கும் முத்தம் கொடுத்து விட்டு..
ஓகே கேர் ஃபுல்லா இருங்க என்று ஸ்டேசன் சென்று விட்டான்…
அரவிந்த் வீட்டில என்ன ஆச்சு..
பிரகதி எப்படி இந்த கேஸ்ல மாட்டுனா?
அத அடுத்த எபி ல பார்க்கலாம்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!