ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(1)

4.5
(11)

நிலவின் கறைகளை 

அறியாத உன் கண்களில்

என் காதலின் பிழைகள் 

மட்டும் தெரிவதேன்…

 

மனம் முழுவதும் நீயே

வியாபித்து இருக்கும் 

பொழுதினில் என் 

சிந்தனை உன்னை

மட்டும் தானே சுற்றும் 

அதை உணர நீ மறுப்பது

ஏனோ….

 

என் நினைவுகளில் 

நிறைந்த மன்னனே

சொப்பனத்திலும் உன்

பிரம்பை எடுத்து என்னை

மிரட்டுவதேனடா….

 

 

என்று எழுதி இருந்த பேப்பரைப் பார்த்து அவனுக்கு கோபம் தான் வந்தது. “கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது இடியட் இது என்ன எக்ஸாம் பேப்பரா இல்லை லவ் லெட்டரா” என்று பற்களைக் கடித்தான் அவன். வித்யுத் அபிமன்யு.

 

“கடைசி பேஜ்ல மட்டும் தான் கவிதை எழுதினேன் மத்த பேஜ் எல்லாம் கரைக்டான ஆன்ஸர் தான் எழுதி இருக்கிறேன் சார்” என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் ,‌ “லுக் யாழிசை இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இன்னொரு முறை மாடல் எக்ஸாம் பேப்பர்ல இந்த மாதிரி கவிதை எழுதுகிறேன் என்று கிறுக்கி வச்ச ஹெச்ஓடி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் ஜாக்கிரதை” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

 

அவளோ அவனை புன்னகை முகத்துடன் பார்த்தவள், “நீங்க தயவு செய்து அதை பண்ணுங்க சார்  அப்போவாச்சும் என்னை காலேஜ்ல இருந்து டீசி கொடுத்து விரட்டி விடட்டும்” என்றாள் யாழிசை.

 

“என்ன” என்றவனிடம் , “நீங்க தானே சொன்னீங்க நான் உங்களோட ஸ்டூடண்ட் அதனால் என்னை லவ் பண்ண மாட்டீங்கன்னு டீசி வாங்கிட்டு காலேஜ் விட்டு வெளியே போயிட்டேன் என்றால் நாம லவ் பண்ணலாமே எந்த ரெஸ்ட்ரிக்சனும் இல்லையே” என்றாள் யாழிசை.

 

“அறிவு கெட்ட முண்டம் பொம்பளைப் பிள்ளை திட்டக் கூடாது என்று நானும் வாயை மூடிட்டு இருந்தால் நீ ஓவரா பண்ணிட்டு இருக்க. ஒழுங்கு மரியாதையா ஓடிப் போய் விடு” என்று பற்களைக் கடித்தான் வித்யுத் அபிமன்யு.

 

“ஓகே ஓகே கூல் சார் நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு, “அப்பறம் சார் கவிதை எப்படி இருக்குனு ஃபீட்பேக் சொல்லவே இல்லை” என்றாள் யாழிசை.

 

அவனுக்கு வந்த கோபத்துக்கு அவளை அடி பின்னி எடுத்து இருப்பான் ஆனாலும் பற்களைக் கடித்து கொண்டு, “நீ எழுதின கன்றாவிக்கு பெயர் கவிதையா. கவிதைனா முதலில் என்னன்னு தெரியுமா உனக்கு. வந்துட்டாங்க பெரிய கவிதாயினி ச்சீ பே” என்று அவன் கூறிட, “ஐய்யய்யோ வாத்தி கடுப்பாகிருச்சு ஓடிரு  யாழி” என்று மனசாட்சி கூறிட அவளும் ஓடியே விட்டாள்.

 

 

“என்ன மச்சி உன் ஆளு என்ன சொன்னாரு” என்றாள் அவளது தோழி மிதுனா. “அது ஒன்றும் இல்லை மச்சி நீ எழுதுற கவிதை எல்லாம் சூப்பரா இருக்கு யாழி எப்படி இவ்வளவு அழகா கவிதை எழுதுற. உன் கவிதையை படித்த உடனே உன் கன்னத்தில்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே “பளார்னு அறை கொடுக்கனும் என்று சொன்னாரா மச்சி” என்று வந்தாள் இன்னொரு தோழி உத்ரா.

 

“எதுக்கு டீ என்னை அறையப் போறாரு பச் பச்சுன்னு இச்சு கொடுப்பாரு” என்று யாழிசை கூறிட,  “நான் தான் பார்த்தேனே அவர் கொடுத்த இச்சை. கூச்சமே இல்லை இப்படி உருட்டுறியேடி நீ உருட்டிட்டு இருக்கிறது தெரியாமலே ஆ ஆன்னு வாயை பிளந்து கதை கேட்டுக் கொண்டு இருக்கிறாள் பாரு இந்த கேனைச் சிறுக்கி” என்று உத்ரா கூறிட, “உனக்கு பொறுக்காதே அவளாவது என் காதலை புரிந்து கொள்ளட்டுமே” என்றாள் யாழிசை.

 

“முண்டம் உன் ஆளுக்கு புரிய வை இப்போ தான் இவளுக்கு புரிய வச்சு இவளை எதுவும் கல்யாணம் பண்ணிக்க போறியா” என்றாள் உத்ரா.

 

“என்ன மிது நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்ற யாழிசையிடம், “என் மாமா பையன் அப்போ யாரைக் கட்டிப்பான் உன் ஆளையா” என்று கூறிவிட்டு மிதுனா சிரித்திட , “அடியேய் என் ஆளைப் பார்த்து வானவில் என்றா சொல்லுற உன்னை” என்று தோழியை அடிக்க விரட்டினாள் யாழிசை.

 

அவள் கையில் சிக்காமல் அவள் ஓடி விட துரத்தி வந்த யாழிசை யார் மீதோ மோதி பொத்தென்று மண்ணில் விழுந்தாள்.

 

 

“ஆ அம்மா” என்று அவள் எழ முடியாமல் எழப் பார்க்க, அவள் முன் கையை நீட்டினான். அப்பொழுது தான் அவள் நிமிர்ந்து பார்த்திட அவளது நாயகன் தான் கை நீட்டிக் கொண்டு இருந்தான்.

 

“அடப்பாவி மனுசா நீ தானா ஆளைப் பார்த்தால் ஒல்லியாக இருக்கிறார் ஒரே ஒரு இடி இடிச்சதுக்கே நான் பொத்துன்னு விழுந்துட்டேன்” என்று நினைத்தவள் அவனது கையை பிடித்து எழுந்தாள்.

 

“தேங்க்ஸ் சார்” என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் , “நீ என்ன சின்ன பாப்பாவா ஃபைனல் இயர் படிக்கிற பொண்ணு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் விளையாடிட்டு இருக்க” என்றிட அவள் மௌனமாக நின்றிருந்தாள்.

 

“உன் கிட்ட பேசுவதும், எருமை மாடு மேல மழை பெய்யுறதும் ஒன்று தான். போ போயித் தொலை” என்று திட்டி விட்டு அவன் சென்று விட அவளருகில் வந்தனர் மிதுனா, உத்ரா இருவரும்.

 

 

“என்ன மச்சி ரொம்ப திட்டிட்டாரா இவ்வளவு சீரியஸா உட்கார்ந்து யோசிச்சுட்டு இருக்க” என்ற உத்ரா விடம், “மச்சி நான் நல்லா ஜப்பியா கொஞ்சம் குண்டாக தானே இருக்கிறேன்” என்றாள் யாழிசை. 

 

“ஆமாம் நம்ம மூன்று பேரில் நீ கொஞ்சம் குண்டு தான் இப்போ என்னடீ அதுக்கு” என்றாள் உத்ரா.

 

“இல்லை டீ என் ஆளு ஒன்றும் குண்டு இல்லையே ஒல்லியாக தானே இருக்கிறார் ஆனால் அவர் இடிச்ச இடியில் நான் பொத்துன்னு விழுந்துட்டேன். என் இடுப்பு வேற வலிக்குது நான் மோதி அவர் விழுந்து இருந்தால் கூட ஒரு லாஜிக் இருக்கும். நான் எப்படி விழுந்தேன்” என்றாள் யாழிசை.

 

“அடி அரை போதை நாயே இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியாடீ” என்ற உத்ரா விடம், “ஆமாம் மச்சி என்னோட ஆன்மீக ஆராய்ச்சி பதில் தெரியவில்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும்” என்று அவள் கூறிட அவளது தலையில் நங்கு நங்கென்று கொட்டினாள் உத்ரா.

 

“உன் மூளையை தூக்கி முட்டுச் சந்துக்குள்ள எறிய ஏன் டீ இப்போ பதில் தெரிஞ்சு ஐஏஎஸ் பாஸ் பண்ண போறியா” என்று உத்ரா கேட்டிட, “பதில் சொல்லுடி பன்றிக் குட்டி வந்துட்டால் என் மூளையை தூக்கி முட்டுச் சந்துக்குள்ள போடுறதுக்கு” என்றாள் யாழிசை.

 

 

“யாழி எனக்கென்னவோ உன் ஆளு ஜிம் எல்லாம் போவாரு போல தோன்றுகிறது” என்றாள் மிதுனா. “நிஜமாவா அப்போ நாளைக்கே அந்த ஜிம்மை கண்டுபிடிச்சு நானும் ஜாயின் பண்ணி விடுகிறேன்” என்றாள் யாழிசை.

 

“அதற்கு உன் சித்தி விடனுமே” என்ற உத்ரா விடம் , “அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்னா சித்தியால எதுவும் பண்ண முடியாதே” என்று சிரித்தவள் , “சரி, சரி வாங்க க்ளாஸ் ரூம் போகலாம்” என்று தோழிகளுடன் வகுப்பறைக்கு சென்று விட்டாள் யாழிசை.

 

 

“என்ன வித்யுத் ஏதோ யோசனையா இருக்க” என்று வந்தான் அவனது தோழன் பிரித்வி. “உன் கிட்ட சொல்ல என்னடா அந்த பொண்ணு யாழிசை தொல்லை தாங்க முடியவில்லை” என்றான் வித்யுத்.

 

 

“என்ன பிரச்சினை” என்று பிரித்வி கேட்டிட , “மாடல் எக்ஸாம் பேப்பர்ல கூட லவ் லெட்டர் மாதிரி கிறுக்கி வச்சுருக்காள்” என்று பற்களைக் கடித்தான் வித்யுத் அபிமன்யு.

 

“அந்த பொண்ணும் இரண்டரை வருசமா தான் உன் பின்னால் சுத்தி பார்க்குது ஏன் டா நீ தான் அவளோட லவ்வை அக்செப்ட் பண்ணிக்கோயேன்” என்றான் பிரித்வி.

 

“பைத்தியமாடா நீ அவள் என்னோட ஸ்டூடண்ட் அவளைப் போய் நான் லவ் பண்ணனுமா என்று அவன் கேட்டிட நீ ஆல்ரெடி அந்த பொண்ணை லவ் பண்ண ஆரம்பித்து விட்டியோன்னு எனக்கு டவுட்டா இருக்கு” என்றான் பிரித்வி.

 

அவனை வித்யுத் முறைத்திட , “பின்னே என்ன டா அவளை நிஜமாவே பிடிக்க வில்லை என்றால் நீ என்ன பண்ணி இருக்கனும் ஹெச்ஓடி, பிரின்சிபால் இப்படி யார்கிட்டேயாவது கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கனும் இல்லையா அவள் பேரன்ட்ஸ் கிட்டேயாச்சும் சொல்லி கண்டிச்சு வைக்க சொல்லி இருக்கனும்” என்றான் பிரித்வி.

 

“அந்த மாதிரி எதுனாலும் பண்ணினால் அவளோட படிப்பு ஸ்பாயில் ஆகிரும் அதனால் தான் நான் அமைதியாக போகிறேன்” என்றான் வித்யுத். “புரியுது வித்யுத் அட்லீஸ்ட் அந்த பொண்ணுகிட்டையாவது கொஞ்சம் ஹார்ஸா சொல்லி விடு அது தான் எல்லோருக்கும் நல்லது.

 

இப்போ உள்ள பொண்ணுங்களை நம்பவே முடியாது ரீசண்டா ஒரு மூவி பார்த்தேன் அதில் இப்படித் தான் ஒரு பொண்ணு ப்ரொபசரை லவ் பண்ணிட்டு இருப்பாள். அவன் முடியாது என்று சொல்லவும் தன்னை ரேப் பண்ண பார்த்தான்னு பொய் சொல்லி அவனோட கெரியரையே காலி பண்ணிருவாள் அதனால் கொஞ்சம் உஷாராகவே இரு” என்றான் பிரித்வி.

 

“யாழிசை அப்படி பட்ட பொண்ணு கிடையாதுடா” என்று வித்யுத் கூறிட, “அப்படி இல்லை என்றால் சந்தோஷம் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது தானே” என்றான் பிரித்வி. சரி என்று தோழனிடம் விடை பெற்று வகுப்பிற்கு சென்றான் வித்யுத்.

 

அவன் வகுப்பு என்றால் அனைவரும் அமைதியாக பாடத்தில் மட்டுமே கவனமாக இருப்பார்கள் ஒருத்தியை தவிர. ஆம் நம் நாயகி தான் ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருப்பாள். 

 

அவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு திருந்தாத ஜென்மம் என்று திட்டி விட்டு பாடம் எடுக்க ஆரம்பித்தான். வகுப்பு முடியும் வரை அமையாக இருந்த மிதுனா, உத்ரா இருவரும் அவள் தலையில் நங்கென்று கொட்டிட , “ஆஆ எருமைங்களா எதுக்கு டீ கொட்டுனிங்க “என்றாள் யாழிசை.

 

“பின்னே என்ன அதான் க்ளாஸ் விட்டு போயிட்டாருல இன்னும் ஏன் ஆ ஆனு பார்த்துக் கொண்டு இருக்க” என்ற தோழிகளை முறைத்தாள் யாழிசை. “கிளாஸ் ரூம்ல உள்ள எல்லோரும் வீட்டிற்கு போயாச்சு நீ மட்டும் தான் உன் ஆளோட ஹேன்ட்ரைட்டிங்கை உட்கார்ந்து ரசிச்சுட்டு இருக்க” என்று தோழிகள் திட்டிட, “வீட்டுக்கு போகவே கடுப்பா இருக்கு டீ” என்றாள் யாழிசை.

 

“அப்போ உன் ஆளு கூட மெரினா பீச் போறியா” என்று உத்ரா கேட்டிட, “நோ பெசன்ட் நகர் பீச் போறேன் டீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடீ” என்றாள் யாழிசை. “அடி செருப்பால உன்னை” என்று

அவளை விரட்டி அவளோ ஓடிச் சென்று பைக்கை எடுத்துக் கொண்டு சிட்டாக பறந்து விட்டாள் தன் வீட்டிற்கு.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!