என்னடி இது இப்படி சூடு போட்டு வச்சுருக்காங்க உன் சித்தி மனுஷியா இல்லை பேயா என்று தான் கேட்டனர் உத்ரா, மிதுனா இருவரும்.
நெக்ஸ்ட் வீக் இன்டர் காலேஜ் காம்பெடிசன் போகிறோம் நியாபகம் இருக்கா என்றாள் யாழிசை. ஆமாம் நீ கூட டான்ஸ், பாட்டுனு இருக்கிற எல்லா போட்டியிலுமே பெயர் கொடுத்து வச்சுருக்கியே என்றாள் உத்ரா. அதே காம்பெடிசனுக்கு யாமினியும் வருகிறாள் அவளோட காலேஜ்ல இருந்து என்றாள் யாழிசை.
ஸோ வாட் என்ற மிதுனாவிடம் என் காலை பஞ்சர் பண்ணி விட்டுட்டால் என்னால எப்படி ஆட முடியும் அதான் என் சித்தியோட மாஸ்டர் ப்ளான். உப்பு சப்பில்லாத காரணத்தை சொல்லி என் கிட்ட வம்பு வளர்த்து அதற்கு பரிசாக காலில் சூடு போட்டு விட்டுருச்சு என்றாள் யாழிசை.
இப்போ எப்படி ஆடுவ நடக்கவே இவ்வளவு சிரமம் என்று தோழிகள் வருந்திட அதற்காக அந்த பல்லி கிட்ட என்னை தோற்றுப் போக சொல்றியா நான் யாழிசை அந்த யாமினி கிட்ட ஒரு போதும் தோற்றுப் போக மாட்டேன் என்று அழுத்தமாக கூறினாள்.
ஹாஸ்பிடல் போனியா என்ற தோழிகளிடம் போனேன் டீ இன்ஜக்சன் போட்டு விட்டுட்டாங்க வலிக்குது என்று வராத கண்ணீரை சுண்டி விட்டாள் யாழிசை.
அட சனியனே உன் சித்தி காலில் பொத்தல் விழும் அளவுக்கு சூடு போட்டு வச்சுருக்காங்க அது வலிக்க வில்லை சின்னோன்டு ஊசி உனக்கு வலிச்சுருச்சு த்தூ என்று உத்ரா துப்பிட இரு நாயே நீ என்னைக்காவது ஊசி போட்டுட்டு வந்து வலிக்குதுன்னு சொல்லு அப்போ வச்சுக்கிறேன் உன்னை என்றாள் யாழிசை.
இசை என்று அழைத்தவன் முன் நின்றாள் யாழிசை. சார் என்று அவள் அவன் முன் நிற்க ப்ராக்டீஸ் பண்ணாமல் என்ன அரட்டை வேண்டி கிடக்கு என்று கூறிவிட்டு அவளது காலைப் பார்த்தான். என்னாச்சு உன் காலுக்கு என்று அவன் கேட்டிட சின்ன காயம் தான் சார் லேசா கம்பி கீறிடுச்சு என்று அவள் கூறிட ஆட முடியுமா என்று கேட்டான். கண்டிப்பா முடியும் சார் என்று அவள் கூறிட முடியவில்லை என்றால் இப்போவே சொல்லிரு என்று அவன் கூறிட கண்டிப்பா ஆடுவேன் சார் என்றாள் யாழிசை.
சரி ஓகே என்று கூறிவிட்டு அவன் சென்று விட மச்சி முடியும் தானே என்று கேட்டனர் தோழிகள் இருவரும். இப்போவே ஆடட்டுமா என்று அவள் கேட்டு விட்டு ஆட ஆரம்பித்தாள். கால் வலி உயிர் போன போதிலும் தான் ஆடியே தீர வேண்டும் என்ற வெறியுடன் ஆட ஆரம்பித்தாள் யாழிசை. யாழி உனக்கு வில் பவர் ஜாஸ்தி டீ என்று மிதுனா கூறிட புன்னகைத்து விட்டு ஓரமாக அமர்ந்து கொண்டாள். அவளுக்கு வலி தாங்க முடியவில்லை ஆனாலும் அவள் வலியை பொறுத்துக் கொண்டாள்.
ஏன் டீ இப்படி சூடு போட்டு வச்சுருக்காங்க உன் சித்தி அவங்களை உன் அப்பா கிட்ட சொல்லி கொடுக்க வேண்டியது தானே என்றாள் மிதுனா. சொல்லலாம் சொன்னால் என் சித்தியை அடித்து வீட்டை விட்டு கூட துரத்தி விட்டு விடுவார். அப்பறம் தம்பி, தங்கச்சி நிலைமை. அவரு அடிச்சால் அவர் இருக்கிற வரை என்னை நல்லா பார்த்து கொள்வது போல நடிப்பாங்க. அவர் வேலைக்கு போனதும் திரும்ப என்னை முன்னை விட இன்னும் கொடுமை படுத்துவாங்க.
அப்பா கப்பலில் வேலை பார்க்கிறாரு. கடல் ஆறு மாசம், வீடு ஆறு மாசம் அவரு நிம்மதியா இருக்க வேண்டாமா. சித்தி என்னை கொடுமை படுத்தியது தெரிந்தால் அவரால் எப்படி நிம்மதியாக வேலை பார்க்க முடியும். அப்பா இருக்கிற ஆறு மாசம் எப்படி எல்லாம் நடிக்கனுமோ அப்படி நடிச்சுரும் என்ற யாழிசை சரி விடு டீ என் ஆளு வர்றாரு சித்தி பத்தி அப்பறம் பேசலாம் என்று கூறிவிட்டு வித்யுத் வருவதையே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டான்.
ஹாய் விகாஷ் என்று அவள் அழைத்திட புன்னகையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தான் விகாஷ். எஸ் யாமினி என்று விகாஷ் திரும்பிட அவனது அழகில் சொக்கிப் போனவள் உங்க கேங்க்ல நானும் ஆடலாமா என்று கேட்டாள்.
நீங்க தான் ஆல்ரெடி சோலோ பெர்பார்மன்ஸ்க்கு நேம் கொடுத்து இருக்கீங்களே என்றான் விகாஷ். ஆமாம் ஆனாலும் க்ரூப் டான்சிலும் பெயர் கொடுக்க ஆசை என்று அவள் கூறிட ஸாரி யாமினி க்ரூப் டான்ஸ் ஒன்லி ஃபார் பாய்ஸ் என்று கூறினான் விகாஷ். இட்ஸ் ஓகே என்று அவள் கூறி விட்டு நகர்ந்தாள்.
என்ன மச்சி அந்த பொண்ணு என்ன கேட்டுச்சு என்ற தோழன் வினேஷிடம் நம்ம க்ரூப்ல டான்ஸ் ஆடனுமாம் என்ற விகாஷ் எனக்கு என்னவோ அவளைப் பார்த்தாலே பிடிக்க வில்லை என்றான்.
ஏன் என்ற வினேஷிடம் ஏனோ தெரியவில்லை எனக்கு இந்த யாமினியை பார்த்தாலே பிடிக்க வில்லை. எங்கே போனாலும் வந்து வந்து பேசிட்டு இருக்கிறாள் சரியான ஜொள்ளு ஃபேக்டரி என்று கூறிவிட்டு அவன் எழுந்து கொள்ள அப்போ உனக்கு யாரைத் தான் பிடிக்கும் என்றான் வினேஷ்.
ஸ்கூல் டேய்ஸ்ல ஒரு பொண்ணு அனுவல்டே பங்க்சன் அப்போ சூப்பரா பரதநாட்டியம் ஆடினாள். அவ்வளவு அழகா இருந்தாள். அவளைப் பற்றி விசாரித்தேன் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஸ்கூலில் கூட அதிகம் பார்த்தது இல்லை என்று கூறிவிட்டு அவன் அமைதியாகிட ரொம்ப அழகோ என்றான் வினேஷ்.
தேவதைடா என்று விகாஷ் கூறிட என்னடா கண்டதும் காதலா என்று தான் கேட்டான் வினேஷ். லவ் எல்லாம் இல்லை ஆனால் அவளை திரும்ப ஒரு தடவை பார்க்கனும் என்று ஆசை என்ற விகாஷ் கிளம்பி சென்று விட்டான்.
என்ன விகாஷ் டல்லா இருக்க டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ணி பண்ணி டயர்ட் ஆகி விட்ட போல என்றார் சிவரஞ்சனி. இல்லை அம்மா என்றவன் அம்மா அண்ணா எப்போ வருவாங்க என்றான். மகனை முறைத்தவர் நீ மட்டும் தான் நான் பெத்த பையன் உனக்கு அண்ணன் என்று எல்லாம் யாரும் இல்லை என்று கோபமாக கூறி விட்டு சென்று விட்டார் சிவரஞ்சனி.
விகாஷ் தான் தன் அன்னையை ஆற்றாமையுடன் பார்த்து விட்டு தன் அண்ணனின் புகைப்படத்தை பார்த்து ஐ மிஸ் யூ அண்ணா என்று கூறினான்.
என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்ற வித்யுத்திடம் ப்ரோக்ராம் போட்டு பார்த்துட்டு இருக்கேன் சார் என்றாள் யாழிசை. நான் பார்க்கும் போது ப்ரோக்ராம் போட்டு பார்த்துட்டு இருக்கிறது போல நடிக்க வேண்டியது நான் அந்த பக்கம் போனால் கம்ப்யூட்டரில் வீடியோ பார்த்துவிட்டு இருக்க வேண்டியது என்று பற்களைக் கடித்தான் வித்யுத்.
ஐய்யயோ வசமா சிக்கிட்டேன் போலையே என்று நினைத்தவள் சார் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஏதோ சொல்ல வர அவளை முறைத்தவன் அவள் மினிமைஸ் பண்ணி வைத்த ஸ்கீரினை ஓபன் செய்து என்ன இது என்றான்.
ஸாரி சார் என்று அவள் தலையை கவிழ்ந்து கொள்ள அவனோ தலையை வலது இடமாக ஆட்டி விட்டு சென்று விட்டான். அவளோ செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளது தலையில் கொட்டு வைத்த உத்ரா ப்ரோக்ராம் போட்டு பாரு டீ என்று சொல்ல அந்த நேரம் பெல் அடித்து விட அனைவரும் ஆய்வகத்தை விட்டு வெளியே சென்று விட்டனர்.
அவன் போனில் எதையோ பார்த்துக் கொண்டு இருக்க அவனருகில் வந்து நின்றாள் யாழிசை. என்ன இசை நீ கிளம்ப வில்லையா என்ற வித்யுத்திடம் சார் நான் நான்கு வருசமா உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன் அது உங்களுக்கு தெரியும் தானே என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் ஏதோ சொல்ல வர ஹலோ வித்யுத் அபிமன்யு என்று அந்த ஆய்வகத்திற்குள் வந்தாள் அந்த டிப்பார்ட்மென்ட் ஹெச்ஓடி திவிஷியா.
என்ன யாழிசை இன்னும் கிளம்பாமல் லேப்ல என்ன பண்ணிட்டு இருக்க என்றாள் திவிஷியா. நோட்ஸ் கேட்டுட்டு இருந்தேன் மேடம் என்ற யாழிசை ஏக்கமாக தன்னவனை பார்த்து விட்டு அந்த ஆய்வகத்தை விட்டு வெளியே சென்றாள்.
நல்லா சிவ பூஜையில் கரடி மாதிரி இந்த பொம்பளை இப்போ லேப்க்கு வரவில்லை என்று யாரு அழுதாங்க இன்னும் ஏழெட்டு மாதம் தான் அப்பறம் காலேஜ் முடிந்து விடும். அவரை எப்படி தினமும் சைட் அடிக்கிறது. எத்தனை தடவை லவ் சொன்னாலும் அந்த மர மண்டைக்கு புரியவே மாட்டேங்குது என்று நொந்து கொண்டாள் யாழிசை.
என்ன மச்சி ஹெச்ஓடி வந்து உன் ரொமான்ஸ் டைமை கெடுத்து விட்டுருச்சு போல என்ற உத்ரா விடம் ஆமாம் டீ என்று அங்கு இருந்த மரத்தில் குத்தினாள் யாழிசை.
அடியே லூசு ஏற்கனவே உன் சித்தி வைத்த சூட்டில் காலு பஞ்சராகி கிடக்கிறது போதாதா இப்போ மரத்தில் குத்தி கையும் பஞ்சராகனுமா என்று மிதுனா கூறி விட்டு அவளது கையை ஆராய்ந்தாள்.
எனக்கு எல்லாம் ஒன்றும் ஆகாது டீ நான் ஸ்ட்ரோங்க் கேர்ள் என்று அவள் கூறிட சரி இதை குடி என்றாள் உத்ரா. இது எதற்காக டீ என்று யாழிசையிடம் கொதித்துக் கொண்டு இருக்கும் உன் வயிற்று எரிச்சலை இந்த குளு குளுன்னு இருக்கிற ரோஸ் மில்க் குடிச்சு கூல் பண்ணு மச்சி என்றாள் மிதுனா.
ஐயே காமெடியா சிரிப்பே வரவில்லை என்றாள் யாழிசை. ஏன் மச்சி ஹெச்ஓடிக்கு உன் ஆளு மேல் இன்ட்ரெஸ்ட் இருக்கும் போலையே என்ற உத்ரா விடம் ஆமாம் எனக்கும் தெரியும். அது அவர் கிட்ட ஏதோ பர்சனலா பேசணும் என்று தான் வந்திருக்கும் என்றாள் யாழிசை.
எனக்கு ஒரு டவுட் ஹெச்ஓடிக்கும் , உன் ஆளுக்கும் ஒரே வயசா என்ன என்றாள் மிதுனா. இல்லை வித்யுத் சாரை விட ஹெச்ஓடி ஐந்து வயது மூத்தவங்க என்றாள் யாழிசை. அப்பறம் ஏன் என்று மிதுனா ஏதோ கூற வர ஏய் வாயை மூடுடீ அந்த பொம்பளை வருது என்று தோழியின் வாயைப் பொத்தினாள் யாழிசை.
….. தொடரும்…