ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்(4)…

5
(3)

என்ன மூன்று பேரும் இங்கே அரட்டை என்ற ஹெச்ஓடி திவிஷியாவிடம் ஒன்றும் இல்ல மேடம் சும்மாதான் ரோஸ் மில்க் குடிச்சிட்டு இருக்கோம் என்றாள் உத்ரா.

இது தான் ரோஸ் மில்க் குடிக்கிற டைமா காலேஜ் முடிஞ்சிருச்சு இல்ல வீட்டுக்கு போக வேண்டியது தானே அது என்ன பைக் ஸ்டான்ட்ல அரட்டை கிளம்புங்க என்று கூறினாள் திவிஷியா.

ஓகே மேடம் என்று மூவரும் கிளம்ப ஆயத்தமாக திவிஷியா சென்று விட்டாள்.

வாயை மூடிட்டு இருங்கடின்னு சொன்னேன்ல நாம பேசுனது ஏதோ காதுல விழுந்திருச்சு போல அதுதான் விரட்டிவிட்டு இருக்கு என்று யாழிசை கூறிட அவங்க போக சொன்னால் உடனே போகனுமா என்றாள் மிதுனா.

அவங்க போக சொன்னால்  போகணும் பிகாஸ் அவங்க நம்ம ஹச்ஓடி இன்டர்னல் மார்க்கு ஒரு சப்ஜெக்ட் அவங்க கிட்ட தான் நம்ம போய் நிக்கணும் அதை மறந்துடாத கிளம்பு கிளம்பு என்று கூறினாள் யாழிசை.

தோழிகள் மூவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பி சென்றனர் .

லிப்டில் ஏறினான் வித்யுத் அபிமன்யு கதவு மூடுவதற்குள் வேகமாக ஓடி வந்தவள் தானும் அந்த லிஃப்ட்டிற்குள் நுழைந்துக்கொண்டாள்.

வழக்கம்போல் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல அவனை ரசித்துக்கொண்டு அவள் நின்றிருக்க  அவனும் ஏக கடுப்புடன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு இருந்தான்.

சார் என்று அவள் அழைத்திட அவளை முறைத்தவன் என்ன என்பது போல் பார்க்க நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலையே என்றாள் யாழிசை.

லுக் இசை சப்ஜெக்ட் பற்றி ஏதாவது டவுட் இருந்தால் மட்டும் என்கிட்ட பேசு தேவை இல்லாத விஷயத்தை பத்தி என்கிட்ட பேசாதே என்று கூறினான் வித்யுத் அபிமன்யு கராராக.

இதுவும் சப்ஜெக்ட் தான் சார் லவ் சப்ஜெக்ட் என்று அவளோ வழிந்து கொண்டிருக்க அறைஞ்சேன்னு  வச்சிக்கோ பல்லு முப்பத்து இரண்டும் தெறிச்சு விழுந்திரும். நான் அமைதியா போயிட்டு இருக்கேன் என்பதற்காக நீ ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிற என்று அவன் கூறிவிட்டு உன் வீடு வரப் போகுது இறங்கி போ என்று கூறினான்.

அவளோ அவனையே ஏக்கமாக பார்த்துக் கொண்டே லிஃப்ட்டின் கதவு திறக்கவும் சென்று விட்டாள்.

இருக்கிற பிரச்சினையில் இவன் வேற என்று நினைத்தவன் அவள் காலை தாங்கி தாங்கி நடப்பதை கண்டு வருந்தத்தான் செய்தான்.

அவனுக்கு அவளை பிடிக்கவில்லை என்று இல்லை ஆனால் இது தேவையில்லாத வேலை ஏற்கனவே தனக்கு இருக்கும் பிரச்சனையில் இவளை வேறு தூக்கி தலையில் வைத்துக் கொள்வதா? என்றுதான் அவளை அவாய்ட் செய்து கொண்டே இருக்கிறான். அவளும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அவன் பின்னே நாய் குட்டி போல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அதை அவன் அறிந்தும் அவளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுகிறான் .இவள் தொல்லை பற்றாது என்று திவிஷியா வேறு அவனை இம்சை செய்து கொண்டிருக்கிறாள் .

இவள் தான் தொல்லை கொடுக்கிறால் என்றால் அந்த ஹெச்ஓடி வேற என்று நினைத்தவன் இன்று லேபிள் நடந்த விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தான்.

என்ன மேடம் என்ற வித்யுத்திடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் மிஸ்டர் வித்யுத் அபிமன்யு என்றாள் திவிஷியா.

சொல்லுங்க மேடம் என்றவனிடம் என்ன சொல்ல சொல்றீங்க நான் ஆல்ரெடி கேட்டுட்டேன் திரும்பத் திரும்ப வெக்கத்தை விட்டு ஒரு பொண்ணு உங்ககிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கெஞ்சனுமா என்று திவிஷியா கேட்டிட மேடம் ப்ளீஸ் அதை பத்தி நம்ம பேச வேண்டாமே என்றான் அவன் .

எனக்கு இது செகன்ட் மேரேஜ் என்று யோசிக்கிறீங்களா என்ற திவிஷியாவிடம் ஐயோ மேடம் நான் அப்படியெல்லாம் யோசிக்கலை எனக்கு மேரேஜ் மேல இன்ட்ரெஸ்ட் இல்லை என்றான் வித்யத் அபிமன்யு.

மேரேஜ் மேல இன்ட்ரஸ்ட் இல்லைனா லிவிங் ரிலேஷன்ஷிப்ளையாவது நாம் சேர்ந்து  இருக்கலாமே என்று திவிஷியா கேட்டிட மேடம் ப்ளீஸ் தயவு செஞ்சு இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாது அது மட்டும் இல்லை எனக்கு ஆல்ரெடி நிறைய பிராப்ளம் இருக்கு இதுல கல்யாணம் பண்ணி ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என்று அவன் கூறிட ஓகே மிஸ்டர் வித்யுத் அபிமன்யு என்ற திவிஷியா கிளம்பி விட அவனும் கடுப்புடன் அமர்ந்திருக்க வித்யுத் என்ற திவிஷியா நல்லா யோசிச்சு சொல்லுங்க உடனே சொல்ல வேண்டாம். இன்னும் ஒன் மந்த் இந்த காலேஜ்ல தான் ஒர்க் பண்ணுவேன் எனக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்க ஒன் மந்த் இருக்கு அதுக்குள்ள நீங்க உங்க முடிவு சொல்லுங்க நம்ம ரெண்டு பேருமே வெளியூரில் போய் செட்டில் ஆயிரலாம் என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட அவனோ ஏகபடுப்புடன் வந்து கொண்டிருந்தான். போதாக்குறைக்கு இந்த யாழிசை வேறு எப்போ என்னோட லவ்வை அக்செப்ட் பண்ணிக்குவிங்க என்று கேட்டு தொல்லை செய்ய அவன் தான் என்ன செய்வான் சின்ன பொண்ணு போக போக புரிஞ்சுக்கவாள் என்று நினைத்தால் அவளோ விக்கிரமாதித்தன் தோளில் தொங்கும் வேதாளம் போல இவன் பின்னே தொங்கிக் கொண்டே சுற்றுகிறாளே அனைத்தையும் நினைத்தவன் தன் அறையின் கதவை அடைத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து விட்டான்.

ஏய் சனியனே என்ற ரோகிணியிடம் என்ன சித்தி என்றாள் யாழிசை .

சித்தி சித்தின்னு சொல்லாதே டி என்று ரோகினி ஏதோ சொல்ல வர சித்தியை சித்தி தான் கூப்பிட முடியும் பெரியம்மா என்றா சொல்ல முடியும் என்ற யாழிசையை ரோகிணி ஏதோ சொல்ல வர இன்னும் ரெண்டு நாளில் அப்பா வராரு என்று கூறினாள்.

என்னது இன்னும் ரெண்டு நாளில் உங்க அப்பா வராரா என்னடீ  விளையாடுறியா அவர் போய் ரெண்டு மாசம் தானேடி ஆகுது இன்னும் நான்கு மாசம் கழிச்சு தான் வருவாரு என்று ரோகினி பதட்டத்துடன் கூறிட நான் தான் எங்க அப்பாவை வரச்சொன்னேன் என்றாள் யாழிசை.

நீ எப்படி அவரை வரச் சொல்லுவ அது எப்படி கப்பலில் இருந்து அதற்குள்ளே திரும்புவார் என்ற ரோகினி பதட்டமாக இருக்க அப்பா வராருன்னு சொன்ன உடனே இப்படி பயப்படுற நீ எனக்கு சூடு வச்சுதை எங்க அப்பா கிட்ட சொல்லட்டுமா என்று யாழிசை கேட்டிட அவளது காதை பிடித்து திருகினார் ரோகினி .

என்னடி கொழுப்பா சாவடிச்சிடுவேன் என்று ரோகிணி கூறிட அவளோ சிரித்துவிட்டு சும்மா சொன்னேன் சித்தி அப்பா இன்னும் மூன்று மாசம் கழிச்சு தான் வருவாரு பயப்படாதே என்று சிரித்தாள் யாழிசை.

ஏண்டி உனக்கு என்ன கொழுப்பா  உங்க அப்பா வராருன்னு சொல்லி என்னை போட்டு பார்க்குறியா என்று அவளது காதை திருகிக் கொண்டிருந்தார் ரோகினி . சித்தி விடு எனக்கு வலிக்குது என்று யாழிசை கத்திக் கொண்டிருக்க வலிக்கட்டும் டீ  நல்ல வலிக்கட்டும் என்று கூறிய ரோகினியோ நேத்து உன் காலில் தான் சூடு வச்சேன் இரு இன்னைக்கு உன் வாயில சூடு வைக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

யார் இந்த நேரத்துக்கு வந்தது என்று கோபமாக கேட்ட ரோகிணி அவளது காதை விட்டு அவளை பிடித்து கீழே தள்ளிவிட்டார் அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் தரையில் மோதி உடைந்து அவளது கையில் குத்தி கையை பதம் பார்த்துக் கொண்டிருக்க ரோகிணி சென்று கதவை திறந்தார்.

கதவை திறந்த ரோகிணியும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார் காரணம் எதிரே அவரது கணவன் ரகுராமன் நின்றிருந்தார்.

தன் கணவனை பார்த்து விதித்துப் போனார் ரோகினி. என்ன இந்த ஆளு இன்னும் நான்கு மாசம் கழிச்சு தானே வருவாரு இப்பவே வந்துட்டாரு அய்யய்யோ இந்த நேரம் பார்த்தா இவளோட காலில் நான் சூடு வச்சு விடனும் நேத்து தானே காலில் சூடு வச்சு விட்டேன் போச்சு செத்தேனே என்று நினைத்த ரோகினி எதார்த்தமாக திரும்பிட கீழே யாழிசை விழுந்து வளையல்கள் குத்தியதில் அவள் கையில் முழுக்க ரத்தம் வந்து கொண்டிருக்க மகளின் கையில் ரத்தத்தை கண்ட ரகுராமனோ துடித்துப் போனார்.

இசை என்று அவர் அழைத்திட சந்தோஷமாக திரும்பினாள் யாழிசை. தனது தந்தையை கண்டவள் அப்பா என்று ஓடிப்போய் அவரை கட்டிக் கொள்ள அவரது வெள்ளை நிற யூனிபார்மில் அவளது ரத்தம் பட்டுவிட்டது.

உன் கைக்கு என்னாச்சு என்று ரகுராமன் கேட்டிட ஒன்னும் இல்லப்பா கீழே விழுந்துட்டேன் அதுதான் கண்ணாடி வளையல் போட்டிருந்தேனா அது உடஞ்சு குத்திருச்சு என்று அவள் கூறிட என்னமா நீ பார்த்து வருவது இல்லையா இப்படியா  கீழே விழுவ என்றவர் மகளது காலில் கட்டிப் போட்டு இருப்பதை பார்த்துவிட்டு என்னாச்சும்மா உன் காலுக்கு என்று துடித்து போனார்.

ஒன்னும் இல்லைப்பா காலேஜ்ல ப்ரஸ்ஸர்ஸ் பார்ட்டிக்கு வெடி வெடிச்சாங்க அந்த கங்கு பட்டுருச்சு என்று அவள் கூறிட அப்பொழுதுதான் ரோகிணிக்கு மூச்சே வந்தது .

என்னடா இசை நீ  உன் காலில் இவ்ளோ பெரிய கட்டு போட்டு இருக்க லேசான அடின்னு சொல்லிட்டு இருக்க என்று ரகுராமன் துடித்து போய்விட அப்பா எனக்கு  ஒன்றுமே இல்லைப்பா நீங்கள் ஏன் இப்படி துடிக்கிறீங்க என்று தன் தந்தையை சமாதானப்படுத்தினாள் இசை .

டாடி என்று யாமினி ஓடி வர அவளை அனைத்தவர் எப்படிமா இருக்க என்று கேட்டிட நல்லா இருக்கேன் டாடி என்று யாமினி கூறிக்கொண்டே எனக்கு என்ன டாடி வாங்கிட்டு வந்தீங்க என்று தான் கேட்டாள் .

உனக்கு என்ன எல்லாம் வேணுமோ எல்லாமே டாடி வாங்கி தரேன் என்ற ரகுராமன் இசை அப்பா உனக்காக ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொண்டு வந்து இருக்கேன் என்று கூறினார். என்னப்பா என்ற யாழிசையிடம்  கண்ணை மூடு என்று கூறிட அவளோ கண்களை மூடினாள் .

அவள் கையில் முத்துக்களால் செய்த வளையல் ஒன்றை அணிவித்தார் ரகுராமன் .

அது என்ன உங்க மூத்த பெண்ணுக்கு மட்டும் ஸ்பெஷலா வளையல் என்று ரோகிணி முகத்தை திருப்பிக் கொள்ள நான் என்ன வாங்கி கொடுத்தாலும் நீயும் சரி யாமினியும் சரி அதில் ஏதாவது குறை சொல்லுவீங்க ஆனால் என் பொண்ணு இசை நான் என்ன கொடுத்தாலும் அதை அப்படியே ஏத்துக்குவா அது மட்டும் இல்லை அவளுக்கு முத்து பதித்த வளையல் தான் ரொம்ப பிடிக்கும் அதனால தான் அவளுக்காக அது வாங்கிட்டு வந்தேன் என்று கூறிய ரகுராமன் யாமினி உனக்காகவும் அப்பா வாங்கிட்டு வந்து இருக்கேன் என்று அவளுக்கு ஒரு முத்து பதித்த வளையலை கொடுத்தார் இதை நீங்க யாழிசே கிட்டையே  கொடுத்துடுங்க எனக்கு இந்த முத்து போட்ட வளையல் எல்லாம் பிடிக்காது எனக்கு வேணும்னா டைமண்ட் ல வளையல் வாங்கி கொடுங்க என்று யாமினி கூறிட பாத்தியா யாமினிக்கு இது பிடிக்காது அதனால தான் நான் இதை இசைக்கு வாங்கிட்டு வந்தேன் என்று கூறிய ரகுராமன் கண்டிப்பா உனக்கு டைமண்ட் ல ரிங் வாங்கி தரேன் டா என்று மகளுக்கு கூறிவிட்டு இன்னொரு வளையலையும் மூத்த மகளின் கையில் அணிவித்துவிட்டார் ரகுராமன் .

இனிமேல் கண்ணாடி வளையலை போடாத அம்மு என்று அவர் கூறிட எனக்கு அதுதான் அப்பா ரொம்ப பிடிக்கும் என்றாள் யாழிசை.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!