எப்படித்தான் எல்லாருடனும் நட்பாக பழகுகிறாளோ பார்த்த பத்தாவது நிமிஷத்துல எல்லாரையும் பிரெண்ட் பிடித்து விடுகிறாள் என்று நினைத்த வித்யுத் கண்களை மூடிக்கொள்ள யாழிசையும் விகாஷிடம் பேசிக்கொண்டே கண்ணுறங்க ஆரம்பித்தாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உறங்குவதை கண்ட விகாஷின் முகத்தில் புன்னகை தான் அரும்பியது. சரியான தூங்கு மூஞ்சியா இருப்பா போல பேசிட்டு இருக்கும் போதே தூங்கிட்டாள் என்று நினைத்தவன் தன் நண்பனுடன் பேசிக்கொண்டே அவனும் தூங்கிவிட்டான்.
அதிகாலை அந்த பேருந்து சென்னை வந்து சேர்ந்தது. அவர்கள் இறங்கிய பிறகு பை விகாஸ் என்று புதிதாக கிடைத்த நண்பனுக்கு பாய் சொல்லிவிட்டு யாழிசை திரும்பிட வித்யுத் லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தான். சார் நம்ம இப்போ நேரம் காலேஜ் போக போறோமா இல்லை அவங்க அவங்க வீட்டுக்கு போக போறோமா என்ற யாழிசையிடம் காலேஜுக்கு நாளைக்கு வந்தால் போதும் இன்னைக்கு லீவு தானே வீட்டுக்கு போகலாம் என்று கூறியவன் கேர்ள்ஸ் எல்லாரும் பத்திரமா போயிடுவிங்க தானே என்றிட போயிருவோம் சார் என்று கோரசாக கூறினார்.
போயிட்டு எல்லாரும் குரூப்ல மெசேஜ் போடுங்க என்று கூறியவன் ஒரு ஆட்டோ பிடித்தான் . நான் உங்களோட வரட்டுமா சார் என்றாள் யாழிசை.
நீ எதுக்கு என் கூட வர என்ற வித்யுத்திடம் இரண்டு பேரும் ஒரே அப்பார்ட்மெண்ட் தானே போகிற வழியில அப்படியே டிராப் பண்ணா தான் என்ன. நான் ஒரு ஆட்டோ நீங்க ஒரு ஆட்டோ தண்டச் செலவு சார் ஒரே ஆட்டோவில் போனோம்னா அமௌன்ட் ஷேர் பண்ணிக்கலாமே என்று அவள் கூறிட சரி வா என்றான் வித்யூத் அபிமன்யு .
அவளுக்கு குஷியாகிவிட்டது. தன்னவனுடன் செல்லும் இந்த பயணத்தை ரசித்துக்கொண்டு ஆட்டோவில் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் . வேண்டும் என்றே அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள் அவனுக்கு கடுப்பாக இருந்தாலும் அவளது நெருக்கம் பிடித்திருந்தது.
என்ன யாமினி கிளம்பாமல் இருக்கீங்க என்ற விகாஷிடம் என்னை நீங்க டிராப் பண்ண முடியுமா சீனியர் என்றாள் யாமினி. சாரி யாமினி ஆட்டோ இல்லை கேப் பிடிச்சு போய்க்கொங்க என்னால உங்களை டிராப் பண்ண முடியாது என்று விகாஷ் கூறிட ஏன் சீனியர் இப்படி சொல்றீங்க என்று கேட்டாள் யாமினி.
என்னோட பைக்ல என்னோட வொய்ஃப் தவிர வேற எந்த பொண்ணையும் நான் அழைச்சிட்டு போக மாட்டேன் அதனால ப்ளீஸ் என்று அவன் கூறிட யாமினிக்கு தான் கடுப்பாகிவிட்டது .