Home Novelsஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(8)

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(8)

by Dhanakya karthik
5
(2)

சார்  இந்தாங்க என்று அவள் பணத்தை நீட்டிட, அதை வாங்கிக் கொண்டான் வித்யுத் அபிமன்யு. என்ன கொடுத்த உடனே வாங்கிட்டீங்க என்ற யாழிசையிடம் ஆட்டோவில் ஏறும்போது அமௌன்ட் ஷேர் பண்ணிக்கொள்ளலாம் என்று தானே சொன்ன.  அப்போ ஷேரிங் அமௌன்ட் கொடுத்தா வாங்காமல் வேண்டாம் நீயே வச்சுக்கோனா  நான் சொல்லுவேன் என்றான் வித்யுத்.

என்ன சார் நீங்க மத்தவங்க கிட்ட வாங்குவது சரி என்கிட்டயும் வாங்கிட்டீங்க என்ற யாழிசையிடம்  நீ மட்டும் என்ன ஸ்பெஷலா நீயும் மத்தவங்க மாதிரிதான் என்று அவன் கூறினான் .

அவளோ  சிரித்துக் கொண்டு அது எப்படி மத்தவங்களும் நானும் ஒன்னு.  நான் உங்களை லவ் பண்றேன் மத்தவங்களாம் என்ன உங்களை லவ் பண்றாங்களா என்றாள் யாழிசை.

எப்போ நீ என்கிட்ட அடி வாங்க போறேன்னு தெரியல இன்னொரு தடவை லவ் பண்றேன்னு சொன்ன உன் வாயை உடைத்து விட போறேன் பாரு என்றான் வித்யுத் .

உங்களுக்கு தான் கஷ்டம் பியூச்சர்ல என்னை கல்யாணம் பண்ணி வெளியில கூட்டிட்டு போகும் போது வாய் உடைஞ்ச பொண்ணை போயி கல்யாணம் பண்ணி இருக்கீங்களானு எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க என்றாள் யாழிசை.

நீ சரியான பைத்தியம் இல்லை சரியாகாத பைத்தியம் ஆளை விடு என்று அவன் வேகமாக லிப்ட்டிற்குள் செல்ல  அவனை பின்தொடர்ந்து வந்தவள் தானும் லிஃப்ட்டிற்குள் நுழைந்தாள்.

என்ன கிட்ட இருந்து தப்பிக்க பார்க்கிறீர்களா அதெல்லாம் உங்களால முடியாது என்று அவள் கூறிக் கொண்டிருக்க நேராக உன் வீட்டுக்கு வந்து உன் அப்பா கிட்ட உன்னை பத்தி சொல்ல போறேன் என்றான் வித்யுத் அபிமன்யு .

சொல்லுங்க நானும் சொல்றேன் எனக்கு சாரை ரொம்ப புடிச்சிருக்கு  அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு என் அப்பாகிட்ட நானே சொல்றேன் என்று அவள் சிரித்திட உன்கிட்ட பேசுறது சுத்த டைம் வேஸ்ட்.  நான் தான் ஆல்ரெடி சொல்லிட்டேன்ல எனக்கு உன்னை பிடிக்கலைன்னு அப்புறமும்  ஏன் என் பின்னாடி சுத்திட்டே இருக்க என்றான் வித்யுத்.

எனக்கு உங்களை பிடிச்சிருக்கே, அப்பறம் உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு நீங்க சொல்றது பொய். அது எனக்கு தெரியும் அதனால தான் நான் உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன் என்றாள் யாழிசை.

எப்படி தெரியும் எனக்கு உன்னை புடிக்கலைன்னு சொன்னது பொய்யின்னு நான் ஏன் பொய் சொல்ல போறேன் என்று அவன் கூறிட அதெல்லாம் அப்படித்தான் தெரியும் என்றவள் சரி ஓகே சார் என்னோட ஃப்ளாட் வரப்போகுது பாய் என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட அவனுக்கு தான் தலைவலியே வந்துவிட்டது.  இவள் கிட்ட பேசி மாளாது சரியான பைத்தியம் என்று தலையில் அடித்துக் கொண்டவன் தனது வீட்டிற்குள் சென்றான்.

என்ன யாமினி இவ்வளவு லேட்டா வர அவள் வந்து அரை மணி நேரம் ஆச்சு என்ற ரோகிணியிடம் நான் என் பிரண்ட்ஸ் கூட பேசிட்டு கொஞ்சம் லேட்டா வந்தேன் இதுல என்னம்மா இருக்கு என்ற யாமினி தன்னைக்கு சென்றாள்.

ஆமாம் என்ன யாமினி ப்ரைஸ் எதுவும் இல்லையா என்ற ரோகினியிடம் ஒரு பிரைஸ்சும் வாங்கலை தோத்து போயிட்டேன் போதுமா. உன் பெரிய மகள் ப்ரைஸா  அள்ளி கொண்டு வந்திருக்காள். போய் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு கோபமாக தன்னறைக்குள் அடைந்து கொண்டாள் யாமினி.

இசை என்ற ரகுராமனிடம் தனது மெடல்களை காட்டினாள் யாழிசை. அப்பா நான் கலந்துக் கிட்ட எல்லா போட்டியிலுமே வின் தான், அது மட்டும் இல்லை ஓவரால் சாம்பியன்சாப் ட்ராஃபி கூட எங்க காலேஜ் தான் வின் பண்ணுச்சு என்று அவள் கூறிட ரொம்ப சந்தோஷம் இசை என்ற ரகுராமன் சரி எங்கயாச்சும் வெளியே போகலாமா என்றார்.

இல்லை அப்பா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டுமா என்று யாழிசை கேட்டிட சரி அம்மு நீ தூங்கு ஈவினிங் நம்ப வெளியே போகலாம் என்றார் ரகுராமன். சரிங்கப்பா என்று கூறிவிட்டு தன்னறைக்குள் சென்று படுத்து உறங்க ஆரம்பித்தாள் யாழிசை.

என்ன விகாஷ் ரொம்ப சந்தோஷமா இருக்க போல எல்லா போட்டியிலும் ஜெயிச்சிட்டீங்களா என்ற சிவரஞ்சனியிடம் எல்லாத்துலையும் ஜெயிக்கலம்மா ஆனால் மேக்ஸிமம் நாங்கள் ஜெயிச்சிருக்கோம் என்றான் விகாஷ்.

சரி சரி ரொம்ப டயர்டா இருப்ப ரெஸ்ட் எடு என்று கூறி மகனை அனுப்பி வைத்தார் சிவரஞ்சனி .

அவனது மனமெங்கும் நிறைந்து இருந்தால் யாழிசை. உன்னை பார்க்க எத்தனை நாள் காத்துட்டு இருந்தேன் தெரியுமா என்று நினைத்தவன் அவளோட போன் நம்பர் கொடுத்தாளே  ஒரு மெசேஜ் போடலாம் என்ற விகாஷ்  ஹாய் என்று வாட்ஸ் அப்பில் அவளுக்கு ஒரு மெசேஜை தட்டி விட்டான் .

அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவனது மெசேஜை அவள் பார்க்கவே இல்லை . மெசேஜ் கூட பார்க்காமல் என்ன பண்ணிட்டு இருக்காள் என்று நினைத்தவன் சரி ஓகே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம் என்று படுத்துக் கொண்டான். அந்த நேரம் அவனது அண்ணனின் எண்ணில் இருந்து போன் வரவும் அதை அட்டென்ட் செய்த விகாஷ் சந்தோஷமாக தன் சகோதரனிடம் பேச ஆரம்பித்தான்.

தன் வீட்டிற்குள் வந்த வித்யுத் ஏதோ தீவிர யோசனையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு யாழிசையின்  நடவடிக்கைகளை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பல தடவை சொல்லிப் பார்த்தாச்சு இந்த பொண்ணு கேட்கவே மாட்டாள் போலையே. இனி  அவள் கிட்ட கொஞ்சம் ஹார்சா தான் சொல்லணும் அப்போ தான் புரிஞ்சிப்பாள் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க அவனது மொபைல் போன் ஒலித்தது.

ஹெச்ஓடி திவிஷியா அழைத்திட இவங்களுக்கு வேற வேலையே கிடையாது என்று நினைத்து ஃபோனை அட்டென்ட் செய்து சொல்லுங்க மேடம் என்றான் வித்யுத்.

வித்யுத் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என் வீட்டுக்கு வர முடியுமா? என்று திவிஷியா கூறிட, சாரி மேடம் இப்போ தான்  நான் வீட்டுக்கு வந்தேன். ரொம்ப டயர்டா இருக்கு ஈவினிங் மீட் பண்ணலாமா என்றான் வித்யுத்.

சரி ஓகே ஈவ்னிங் மீட் பண்ணலாம் டின்னருக்கு என் வீட்டுக்கு வர்றீங்களா என்று திவிஷியா கேட்டிட இல்லை மேடம் உங்க வீட்டுக்கு நான் வரவில்லை வேண்டாம். நாம ஏதாச்சும்  பார்க் இல்லைனா  ஹோட்டல் அப்படி மீட் பண்ணலாம் என்று கூறிவிட்டு போனை வைத்தான் வித்யுத் அபிமன்யு.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!