Home Novelsஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(9)

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(9)

by Dhanakya karthik
5
(2)

என்ன இசை இன்னும் கிளம்பாமல் என்ன பண்ணீட்டு இருக்க என்ற ரகுராமனிடம் ஃபைவ் மினிட்ஸ் அப்பா என்றாள் யாழிசை.  டாடி அக்கா மேக்அப் போட்டு வருவதற்குள் சினிமா முடிஞ்சு போயிரும் அதனால நம்ம மட்டும் போகலாம் என்றான் யஷ்வந்த்.  கடன்காரா நீயெல்லாம் ஒரு தம்பியா டா ஐந்து நிமிசம் லேட் ஆனதும் என்னை விட்டுட்டு போக நினைக்கிற என்று வந்தாள் யாழிசை.

 

நாங்க விட்டுட்டு போயிருவோம்னு சொன்னதும் தானே வேகமா கிளம்பி வந்த என்ற யஷ்வந்த் போகலாமா என்றான்.

 

யாமினி, சித்தி, ராகவ் மூன்று பேரும் வரவில்லையா என்ற யாழிசையிடம் அக்கா யாமினி அக்கா ப்ரைஸ் வின் பண்ணவில்லை. நீ வின் பண்ணினதால செலிபரேசன் அதுக்கு எப்படி அவங்க வருவாங்க என்றான் யஷ்வந்த்.

 

அப்பா இருக்கும் போது எப்படி வராமல் இருப்பாங்க என்று யாழிசை கேட்டிட அதெல்லாம் அம்மா உடம்பு சரியில்லைனு  சாக்கு போக்கு சொல்லி அப்பாவை சமாளிச்சுட்டாங்க நீ வா அப்பா கீழே நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்று தன் சகோதரியை அழைத்துக் கொண்டு சென்றான் யஷ்வந்த்.

 

அவர்கள் லிஃப்ட்டிற்குள் நுழைய அங்கே ஏற்கனவே வித்யுத் இருந்தான். உடன் தன் தம்பி இருக்கிறான் என்பதையும் மறந்து பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பதைப் போல அவனை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் யாழிசை.

 

அவளை தீயென முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் வித்யுத் அபிமன்யு. எருமை மாடு கொஞ்சம் கூட அறிவே இல்லை இவள் பார்க்கிறதால் எனக்கு தான் வெக்கமா இருக்கு என்று நினைத்துக் கொண்டு அவன் நின்றிருக்க யஷ்வந்த் ஏதோ பேசிக் கொண்டிருந்தவன் திரும்பி தன் சகோதரியை பார்க்க அவளோ தன்னவனை ரசித்துக் கொண்டு இருந்தாள்.

 

அக்கா அக்கா என்று அவன் இரு முறை அழைத்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தாள் யாழிசை.  என்னக்கா பார்த்துட்டு இருக்க என்ற யஷ்வந்திடம் ஒன்னும் இல்லைடா என்று சமாளித்தாலும் அவளது பார்வை வித்யுத்தை விட்டு அகலவில்லை.  அவனோ அவளை முறைத்துக் கொண்டிருக்க அவள் எப்பொழுதும் போல இளித்துக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அந்த சமயம் அவளது மொபைல் போன் மெசேஜ் டோனை விட அவள் அப்பொழுது தான் தன் போனை எடுத்துப் பார்த்தாள்.

 

விகாஷின் எண்ணில் இருந்து ஹாய் என்று மெசேஜ் வந்திருக்கவும்,  இவன் எப்போ மெசேஜ் பண்ணினான்  என்று பார்த்திட காலையிலேயே அவனது மெசேஜ் வந்து இருந்தது.  காலையிலே பயபுள்ள மெசேஜ் பண்ணி இருக்கான் போல சரி ஓகே பதிலுக்கு ஒரு ஹாய் தட்டி விடு என்று அவளும் ஹாய் என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு மீண்டும் வித்யுத்தை  வெரித்து பார்க்க ஆரம்பித்தாள்.

 

 

கிரவுண்ட் ஃப்ளோர் வந்தவுடன்  அவன் வேக வேகமாக வெளியே சென்று விட்டான் .

 

 

அக்கா எதுக்கு அந்த ஆளை வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்க என்ற யஸ்வந்திடம் என்னது அந்த ஆளா டேய் அவரு உன் மாமா டா அந்த ஆள் எல்லாம் சொல்லக்கூடாது மரியாதையா மாமான்னு சொல்லணும் என்றாள் யாழிசை.   என்னது  மாமாவா என்ற யஸ்வந்திடம் உங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற ஆளு உனக்கு மாமா தானே என்றாள் யாழிசை.

 

இவர் உன்னோட ப்ரொபசர் தானே என்ற யஸ்வந்திடம் என் ப்ரோபசர்னா அவரை நான் கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்ன அவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று அவள் கூறிட சரி சரி நடத்து நடத்து நான் அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் என்றான் யஷ்வந்த் .

 

நீ சொன்னா கூட எனக்கு கவலை இல்லை நானே அப்பா கிட்ட சொல்லத்தான் போகிறேன் என்ன  இப்போ சொன்னால் அப்பா கோவப்படுவாரு படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் எனக்கு இந்த மாதிரி ஒருத்தரை புடிச்சிருக்கு டாடி கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னால் அப்பா என் சம்மதத்தை மீறியா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாரு என்று சிரித்தாள் யாழிசை.

 

சீக்கிரம் வா அப்பா ரொம்ப நேரமா நம்மளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு என்று தன் சகோதரியை இழுத்து சென்றான் யஷ்வந்த் . என்னப்பா கிளம்பலாமா என்ற ரகுராமனிடம் கிளம்பலாம் என்று வந்தனர் யஷ்வந்த் , யாழிசை இருவரும்.

 

எங்கே போகலாம் என்ற ரகுராமனிடம் அப்போ அதான் சொன்னேனே சினிமாவுக்குன்னு  என்றான் யஷ்வந்த்.

 

இசை நீ சொல்லுடா என்ற ரகுராமனிடம் தம்பி ஆசைப்படறானேப்பா ஃபர்ஸ்ட் சினிமா போயிட்டு அப்புறமா டின்னர் சாப்பிட போகலாம் என்று யாழிசை கூறிட உன் இஷ்டம் என்று ரகுராமன் காரை இயக்கினார்.

 

சொல்லுங்க மேடம் என்ன விஷயம் என்றான் வித்யுத் அபிமன்யு . என்ன விஷயம்னு கேட்டால் என்ன சொல்றது நான் பல தடவை சொல்லிட்டேன் நீங்க தான் உங்க பதிலை சொல்ல மாட்டேங்கறீங்க என்றாள் திவிஷியா.

 

 

மேடம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் என்னோட பதிலை எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை என்றான் வித்யுத் . அதான் ஏன்னு நான் கேட்கிறேன். எனக்கு செகண்ட் மேரேஜ்  தான்  ஆனால் ஸ்டில் ஐ அம் வெர்ஜின் என்று அவள் கூறிட மேடம் ப்ளீஸ் நான் அந்த மாதிரி யோசிக்கவே இல்லை உங்க மேல எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு ஃபீலிங்ஸ்மே வர வில்லை உங்களோட பாஸ்ட் லைஃப் பத்தின எந்த ஒரு அபிப்ராயத்தையும் நான் சொல்ல விரும்பலை எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை புரிஞ்சுக்கோங்க என்றான் வித்யுத் அபிமன்யு .

 

ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லை நான் அழகா இல்லையா?  நல்லா படிச்சிருக்கேன், நல்ல வேலையில் இருக்கேன் எதனால் உங்களுக்கு என்னை பிடிக்கலை என்று திவிஷியா கேட்டிட மேடம் எனக்கு வேற ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு என்றான் வித்யுத் அபிமன்யு.

 

யாரு அந்த பொண்ணு யாழிசையா என்றாள் திவிஷியா கோபமாக.

 

என்ன சொல்றீங்க மேடம் இசை என்னோட ஸ்டூடண்ட் என்ற வித்யுத்திடம் தெரியும் சார் நல்லாவே தெரியும் அந்த பொண்ணு உங்களை சைட் அடிச்சிட்டு இருக்கிறதும்,  காலேஜ் ஃபுல்லா உங்களை அவளோட  ஆளுன்னு  சொல்லிட்டு தெரியுறதும் எல்லாமே எனக்கும் தெரியும். அரசல், புரசலாக  காதுல விழுந்துச்சு இப்போ நல்லாவே புரிஞ்சிருச்சு.  அவள் மட்டும் உங்களை விரும்பலை  நீங்களும் அவளைத் தான் விரும்புறீங்க. நான் கல்யாணம் ஆகி டிவோர்ஸ் ஆனவள். அவள் சின்ன பொண்ணு இல்லையா அதனால தான் உங்களுக்கு அவள் மேல ஃபீலிங்ஸ் என்றாள் திவிஷியா.

 

மேடம் இந்த மாதிரி பேசாதீங்க இசை என்னோட ஸ்டூடண்ட் . அந்த பொண்ணுக்கும், எனக்கும் எந்த ஒரு காண்டாக்ட்ம் கிடையாது . உண்மை தெரியாமல் ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசாதீங்க என்றான் வித்யுத்.

 

எனக்கு புரியலை நீங்க அந்த பொண்ணை ஏன் காப்பாத்த நினைக்கிறீங்க. கவலைப்படாதீங்க நான் உங்க இசையை எதுவும் பண்ணிட மாட்டேன். யாழிசைங்கிற பெயர் உங்க வாயில் முழுசா வந்ததே இல்லையே இசை என்று கூறிய  திவிஷியா கசந்த புன்னகையுடன் எழுந்து கொண்டாள்.

 

மேடம் என்று அவன் எதோ சொல்ல வர ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் மிஸ்டர் வித்யுத் அபிமன்யு. எனிவே ஆல் தி பெஸ்ட் என்று அவனுடன் கைகுலுக்கி விட்டு அவள் சென்றிட  அவனும் அவளுடனே சென்றான் .

 

அவர்கள் இருவரும் ஒன்றாக அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வருவதை பார்த்தாள் யாழிசை.

 

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!