தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(10)

5
(6)

அம்மா என்று கோபமாக கத்தினாள் டானியா. என்ன டானி என்று வந்த அனுசியாதேவியிடம் எனக்கு அவனை கொஞ்சம் கூட பிடிக்க வில்லை அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னையைவே கை நீட்டி அடித்து இருப்பான் என்று கத்தினாள் டானியா.

 

என்ன சொல்லுற டானி குகன் உன்னை அடித்தானா என்ற அனுசியாதேவியிடம் ஆமாம் என்று குகன் அலுவலகத்தில் நடந்த விஷயங்களை கூறினாள் டானியா.

 

இரு நான் சித்ராவுக்கு பேசுகிறேன் என்று அனுசியா சித்ராதேவியிடம் மகள் கூறிய விஷயங்களை கூறினார். குகன் கொஞ்சம் கோபக்காரன் நான் அவன் கிட்ட பேசுகிறேன். டானியா அவன் ஆஃபீஸ்ல அவன் கூடவே வொர்க் பண்ணுவாள் நான் ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறிவிட்டு சித்ரா தேவி மகனின் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றார்.

 

கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும் தன் மடியில் அவள் இருப்பதை மறந்து எஸ் கம் இன் என்று அவன் கூறிட சித்ரா தேவி உள்ளே நுழைந்தார்.

 

 

 

அவரைக் கண்டு பதறிப் போனாள் சஷ்டிப்ரதா. அவள் அவன் மடியில் இருந்து எழுந்து கொள்ள ஏன் டீ இப்போ எழுந்துக்கிற என்றவன் அவளது பார்வை போன் திசையில் பார்க்க அவனது அம்மா நின்றிருந்தார்.

 

 

அம்மா நீங்க ஏன் ஆஃபீஸ் வந்திங்க என்ற குகனை முறைத்தவர் புழுவைப் பார்ப்பது போல சஷ்டிப்ரதாவை பார்க்க அவளோ கூனிக் குறுகிப் போனாள். என்ன கண்றாவி குகன் இது யாரிவள் என்றார் சித்ரா தேவி. சஷ்டிப்ரதா என் ஆஃபீஸ் ரிசப்ஷனிஷ்ட் என்று அவன் கூறிட ரிஷப்சனிஷ்ட்க்கு உன் மடியில் என்ன வேலை என்று பற்களைக் கடித்த சித்ரா தேவி ஏதோ சொல்ல வர அம்மா போதும் என்றவன் ப்ரதா நீ போயி உன் வேலையைப் பாரு என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

 

சொல்லுங்க அம்மா என்ன பிரச்சினை என்று அவன் கேட்டிட இவளை இப்படி கொஞ்சனும் என்று தான் டானியாவை இன்சல்ட் பண்ணி துரத்தி விட்டியா யாருடா இவள் சாதாரண ரிசப்ஷனிஷ்ட் டானியா இரண்டு கம்பெனியோட எம்.டி என்று சித்ரா தேவி கூறிட ஸோ வாட் அந்த டானியாவை கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நீங்க தேவை இல்லாமல் அவளை என் வாழ்க்கைக்குள்ள திணிக்க பார்க்காதீங்க என்றான் குகன்.

 

அப்போ அந்த ஸ்டெனோவை நீ கல்யாணம் பண்ணிக்க போறியா வயசுப் பையன் மடியில் அதுவும் ஆஃபீஸ்லையே ச்சீ என்ன பொண்ணு அவள் கேவலமான பிறவி உன்னை  செடியூஸ் பண்ணி தான் இங்கே வேலைக்கு சேர்ந்தாளா என்று சித்ரா தேவி பேசிக் கொண்டே போக இனஃப் மாம் இனஃப் ப்ரதா பற்றி இன்னொரு வார்த்தை தப்பா பேசுனீங்கனா நல்லா இருக்காது என்றான் குகன்.

 

 

 

ஓ அந்த அளவுக்கு ஆகிப் போச்சா அவளைப் பற்றி பேசினால் நல்லா இருக்காதா சரி தான் என்று பற்களைக் கடித்து கொண்டு சித்ரா தேவி அங்கே இருந்து நகர்ந்திட அம்மா ப்ளீஸ் என்று அவன் ஏதோ சொல்ல வர அதை காதில் வாங்காமல் கோபமாக சென்று விட்டார் சித்ரா தேவி.

 

ரிசப்ஷனில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள் சஷ்டிப்ரதா. அவளைத் தீயென முறைத்துக் கொண்டு அவர் அவளருகில் வந்தார். மேடம் அது என்று உதடுகள் தந்தியடிக்க அவள் ஏதோ சொல்ல வர அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார் சித்ரா தேவி.

 

என்ன டீ நினைச்சுட்டு இருக்க உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் பையனை செடியூஸ் பண்ணி உன் வலையில் விழ வச்சுருப்ப என்று அவர் பேசிக் கொண்டே போக அவளுக்கு குகன் மீது தான் கோபம் வந்தது. அலுவலகத்தில் கூட அவனது இச்சையை தீர்த்துக் கொண்டு என்னை குற்றவாளி ஆக்கி விட்டானே என்று.

 

மேடம் அது என்று அவள் ஏதோ சொல்ல வர அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தார் சித்ரா தேவி. இதோ பாரு காசுக்காக தானே என் பையனை செடியூஸ் பண்ணிட்டு இருக்க உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ கேளு கொடுக்கிறேன் வாங்கிட்டு என் பையன் வாழ்க்கையை விட்டு நிரந்தரமா ஓடிப் போய் விடு. அவனுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன் என்றார் சித்ரா தேவி.

 

கண்டிப்பா உங்க பையனோட வாழ்க்கையில் இருந்து விலகிடுவேன் மேடம் என்ற சஷ்டிப்ரதாவிடம் நீ மட்டும் விலகவில்லை என்று சொல்லிப் பாரு அப்போ தெரியும் இந்த சித்ரா யாருன்னு என்று அவளை எச்சரித்து விட்டு அவர் சென்று விட அவளுக்கு தான் அவமானமாக இருந்தது. எங்காவது சென்று தற்கொலை செய்து இறந்து விடலாமா என்று தான் தோன்றியது.

 

 

அவள் அழுது கொண்டே இருக்க அவளது தோளில் ஒரு கை படர நிமிர்ந்து பார்த்தாள். குகன் தான் நின்றிருந்தான். ப்ரதா காரில் ஏறு என்று கூறி விட்டு அவளை தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்தான்.

 

அவள் அமைதியாக அழுது கொண்டே இருந்தாள். இப்போ எதுக்கு அழுதுகொண்டே இருக்க கொஞ்சம் அமைதியாக இரு என்று அவன் கூறிட ப்ளீஸ் குகன் என்னை விட்டுருங்க என்னால இதற்கு மேல அசிங்கம் பட முடியாது என்று அவள் அழுதிட என்ன பிரச்சினை ப்ரதா நீ கான்ட்ராக்ட் சைன் பண்ணும் போது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் என்று உனக்கு தெரியாதா. சும்மா அழுது டிராமா பண்ணாதே என்றவன் அவளது கையை பிடித்திட அவனது கையை தட்டி விட்டாள் சஷ்டிப்ரதா.

 

என்ன கொழுப்பு டீ உனக்கு என் கையை தட்டி விடுற என்றவன் அவளது கையை அழுத்தி பிடித்து அவளது தலை முடியை பற்றி தன் பக்கம் திருப்பி அவளது இதழில் தன் இதழைப் பதித்தான்.

 

அவனைப் பிரிய அவள் போராடினாலும் அவளால் அது முடியாது அவன் அவள் இதழில் அழுத்தத்தைக் கூட்டிட அவளோ மெல்ல அவனிடம் அடங்கிப் போக அதன் பிறகே அவளை விடுவித்தான் குகநேத்ரன்.

 

மனுசனா நீங்க என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவே மாட்டிங்களா என்று அவள் கத்திட அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான் குகன். என்ன டீ வாய் ஓவரா போகுது நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க தெரியுமா தெரியாதா இடியட் என்று கத்தினான் குகன்.

 

அவள் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் அடித்த வேகத்தில் அவளது பற்கள் உதட்டை கிழித்து இரத்தம் வழிய அதைக் கண்டு பதறிப் போனான் குகன்.

 

ப்ரதா ஏன் என்னை மிருகமா மாத்துற என்று கூறிவிட்டு அவளது இதழில் வழிந்த இரத்தத்தை துடைத்தவன் இதோ பாரு உன்னை காயப் படுத்த நான் நினைக்கவில்லை ஆனால் என்னோட கோபத்தை தூண்டி விட்டு என்னை மிருகமா மாத்தாதே என்று கூறிவிட்டு அவன் சென்று விட அவளுக்கு தான் அழுகையாக வந்தது.

 

அவன் சென்று ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து அவளுக்கு மருந்து போட்டு விட்டவன் இதோ பாரு நம்ம காண்ட்ராக்ட் முடியும் வரைக்கும் என்ன அவமானம் வந்தாலும் நீ சகித்துக் கொண்டு தான் ஆகனும். அது மட்டும் இல்லை என் கிட்ட குரலை உயர்த்தி பேசவே கூடாது சொல்லிட்டேன் என்றவன் எழுந்து சென்று விட்டான்.

 

 

தன் மொபைல் ஃபோனில் இருந்த புகைப்படத்தை பார்த்தவள் உனக்காக இன்னும் எத்தனை அவமானத்தை தான் நான் தாங்கப் போகிறேனோ தயவு செய்து சீக்கிரம் கண் விழித்து விடுடா என்று அவள் அழுது கொண்டிருக்க அவளது மொபைல் ஃபோனில் வால்பேப்பரில் அவள் தோளில் கை போட்டு கொண்டு அழகாக சிரித்துக் கொண்டு இருந்தான் விஷ்ணு.

 

 

என்ன சஷ்டி ஏன் அழுதுட்டு இருக்க என்ற விஷ்ணுவிடம் இல்லைடா அந்த ராஜேஷ் என்று அவள் மேலும் அழ ஆரம்பித்தாள். அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவன் இன்னும் இரண்டு வாரம் தான் எனக்கு சேலரி வந்து விடும் நீயும், நானும் தனியா வீடு எடுத்து தங்கிக் கொள்ளலாம் நீ இப்படி பயந்து பயந்து வாழவே வேண்டாம் என்று கூறினான் விஷ்ணு.

 

 

நாம சேர்ந்து இருந்தால் கார்த்திகா அம்மா நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வைத்து பேசி அசிங்கப் படுத்தி விடுவாங்களே என்ற சஷ்டிப்ரதாவிடம் நீ அவங்களை பற்றி எல்லாம் கவலைப் படாதே அவங்களை எப்படி சரி கட்டணும் என்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் விஷ்ணு. புது வீட்டுக்கு ஷிப்ட்டாகிறோம் சீக்கிரமே உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை முடிக்கிறோம் என்று விஷ்ணு கூறிட அவளோ ஜெயிலுக்கு போயிட்டு வந்த என்னை யாரு கல்யாணம் பண்ணிக்க போறாங்க அது மட்டும் இல்லை எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று அவள் கூறிட மக்கு அடிச்சுருவேன். நீ என்ன கொலை பண்ணிட்டா ஜெயிலுக்கு போன உன்னை பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளி இருக்காங்க அந்த உண்மை தெரிஞ்சு உன்னை ஏத்துக்க ஒருத்தன் வராமலா போய் விடுவான் என்று விஷ்ணு கூறிட அவளும் புன்னகைத்தாள்.

 

 

அந்த நினைவுகளில் இருந்து மீண்டவள் கடவுளே என் விஷ்ணு கண் விழித்து எழுந்தாலே போதும் நான் நிம்மதியா கண்ணை மூடிருவேன் என்று நினைத்தாள் சஷ்டிப்ரதா.

 

 

என்ன சித்ரா கோபமாக இருக்க என்ற அருள்வேந்தனிடம் எல்லாம் நாம பெத்த மகனால் தான். நான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒரு பொண்ணு பார்த்தால் அவன் ஆஃபீஸ் ஸ்டெனோ கூட ஆஃபீஸ்லையே உட்கார்ந்து கூத்தடிச்சுட்டு இருக்கிறான் என்று ஆதங்கமாக பேசினார் சித்ரா தேவி.

 

நீ சந்தோசம் தானே பட வேண்டும் இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிட்டு இருந்தவன் ஒரு பொண்ணு கிட்ட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்திருக்கிறான் என்றால் பாறைக்குள்ளும் பூ பூத்திருச்சு நம்ம பையன் மனசுலையும் காதல் பூத்திருச்சு என்று அருள் வேந்தன் கூறிட வாயை மூடுங்க அந்த பொண்ணு மேல அவனுக்கு காதல் இருந்தாலும் அவளை இந்த வீட்டிற்கு மருமகளா அழைத்துக் கொண்டு வர

நான் சம்மதிக்க மாட்டேன் என்றார் சித்ரா தேவி.

 

 

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!