Home Novelsதடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(6)

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(6)

by Dhanakya karthik
4.8
(4)

என்ன குகன் இது தான் வீட்டிற்கு வரும் நேரமா காலையில் சாப்பிட்டியா இல்லையா என்ற சித்ரா தேவியிடம் அதெல்லாம் சாப்பிட்டேன் அம்மா என்றவன் என்ன சமையல் என்றான். இன்னைக்கு உன் புண்ணியத்தில் வித விதமான சாப்பாடு அண்ணா என்றாள் துவாரகா. அவளை முறைத்த சித்ரா தேவி மகனுக்கு உணவினை பரிமாற ஆரம்பித்தார்.

 

மட்டன், சிக்கன், மீன், இறால், நண்டு என்று வகை வகையாக மகனுக்காக சமைத்து வைத்து இருந்தார் சித்ரா தேவி. எல்லாம் நல்லா இருக்கா குகன் என்றவரிடம் எல்லாம் நல்லா தான் இருக்கு அம்மா என்றவன் சாப்பிட்டு விட்டு எனக்கு எல்லா ஐட்டமும் நைட்டு சாப்பிட பார்சல் பண்ணி தாங்க என்றான் குகன்.

 

என்ன குகன் புதுசா பார்சல் பண்ணி தரச் சொல்லிட்டு இருக்க என்ற அருள்வேந்தனிடம் இன்னைக்கு சாப்பாடு நல்லா இருக்கு அப்பா அதான் என்றான் குகன்.

 

நல்லா இருக்கு என்று சொல்லி விட்டு இவ்வளவு கம்மியா சாப்பிட்டு இருக்க குகன் என்று சித்ரா தேவி கேட்டிட இவ்வளவு ஐட்டம் அதான் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டேன் அம்மா என்றவன் வாட்சையே பார்த்து கொண்டு இருந்தான்.

 

என்னப்பா வாட்சையே பார்த்து கொண்டு இருக்க என்ற சித்ரா தேவியிடம் இல்லைம்மா ஒரு மீட்டிங் இருக்கு அதற்கு நேரம் ஆச்சு என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவனிடம் ஒரு கேரியரை நீட்டினாள் துவாரகா.

 

தாங்க்ஸ் என்று கூறிவிட்டு அவன் சென்று விட அருள் வேந்தன் மகனின் செயலை யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்தார். என்னங்க எப்போதும் ஞாயிற்றுக்கிழமை காலையில் வருபவன் திங்கட்கிழமை தான் கிளம்பு வான். இன்னைக்கு காலில் வெந்நீர் கொட்டியது போல கடகடவென்று சாப்பிட்டு விட்டு ஓடிட்டு இருக்கிறான் என்றார் சித்ரா தேவி.

 

உன் மகன் என்னைக்காவது மதியம் சமைத்த சாப்பாட்டை ராத்திரி சாப்பிட்டு இருக்கிறானா ஆனால் இன்னைக்கு கேட்கிறான் என்றால் ஏதோ புதுசா இருக்கு என்ன என்று கண்டுபிடிக்கனும் என்றார் அருள் வேந்தன்.

 

 

அதானே எல்லாம் புதுசா இருக்கு என்ற சித்ரா தேவி ஜோசியர் கூறியதை கணவனிடம் கூறினார். நம்ம வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு மருமகள் வந்தால் போதும் என்று அவர் கூறிட கண்டிப்பா வருவாள் நீ கவலைப்படாதே சித்ரா என்று கூறிவிட்டு அருள் வேந்தன் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

 

 

சஷ்டிப்ரதா வின் மொபைல் போன் விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அவளுக்கு இருந்த அசதியில் அவள் கண் விழிக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் ஒலித்து விட்டு மொபைல் போன் ஓரமாக கிடந்தது.

 

 

என்ன டீ அந்த விளங்காதவள் ஃபோனை எடுக்கவில்லையா என்ற கார்த்திகா விடம் அக்கா எதுனாலும் வேலையா இருக்கும் அம்மா என்று பிரனிதா கூறிட மகளின் தலையில் குட்டு வைத்த கார்த்திகா அந்த ஓடுகாலி நாய்க்கு சப்போர்ட் பண்ணி பேசின அவ்வளவு தான் என்று பற்களை கடித்தார் கார்த்திகா.

 

 

எதற்கு இவ்வளவு கோபமாக இருக்க கார்த்திகா என்று வந்த ராஜேஷிடம் அந்த பீடை பிடித்த சனியன் ஏதோ  ஆஃபீஸ் டூர் போறேன்னு சொல்லிட்டு எங்கேயோ ஊர் சுத்த போயிருக்கிறாள் என்றார் கார்த்திகா. எப்படி சொல்லுற என்ற ராஜேஷிடம் அவள் கூட வேலை பார்க்கும் பொண்ணு அந்த யாத்ரா அவளை கறிக்கடையில் பார்த்தேன்.

 

அவள் கிட்ட நீ ஆஃபீஸ் டூர் போகலையாம்மா என்று நான் கேட்டால் எந்த ஆஃபீஸ் டூர் ஆன்ட்டி , என்ன நீங்க கறி வாங்க வந்து இருக்கீங்க சஷ்டி எங்கேன்னு கேட்கிறாள். இந்த சனியனுக்கு ஃபோன் பண்ணி ஓய்ந்து போய் விட்டேன் ஃபோனை எடுக்கவே மாட்டேங்கிறாள் என்று கோபமாக கூறிக் கொண்டு இருந்தார் கார்த்திகா.

 

விடு எங்கே போயிருக்கப் போகிறாள் அந்த விஷ்ணு கூட ஹாஸ்பிடலில் இருக்கப் போகிறாள் என்று கூறிவிட்டு ராஜேஷ் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார். என்னங்க அசால்ட்டாக சொல்லிட்டு இருக்கீங்க அந்த அனாதை பையனை பார்க்கிறதுக்காக என்னை எல்லா வேலையும் பார்க்க வைத்துக் கொண்டு இருக்கிறாள் அவள் வரட்டும் அவள் காலில் சூடு போட்டு விடுகிறேன் என்று கூறினார் கார்த்திகா.

 

விடு கார்த்திகா என்ற ராஜேஷ் மனைவிக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.

 

குகன் வீட்டிற்கு வந்த பிறகு கூட அவள் எழாமல் இருக்க அவளை எழுப்பினான் குகன். ப்ரதா , ப்ரதா என்று அவளை எழுப்பிட அம்மா ப்ளீஸ் எனக்கு உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி வலிக்குது இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் கொடுங்களேன் என்று அவள் கூறிட ப்ரதா என்று அவன் அவளை உலுக்கிட கண் விழித்து எழுந்தாள் சஷ்டிப்ரதா.

 

நீங்களா என்று எழுந்து கொண்டவள் என்ன விஷயம் என்று கேட்டாள். மணி இரண்டரை என்று அவன் கூறிட ஓ பசிக்குதா இருங்க நான் எதுனாலும் சமைக்கிறேன் என்று எழுந்தவளை தூக்கிக் கொண்டு வந்து வாஷ் பேசின் அருகில் நிற்க வைத்தவன் முதலில் முகம் கழுவி ஃப்ரெஷ்ஷாகு நீ ஒன்றும் சமைக்க வேண்டாம்  என் அம்மா சமைத்து கொடுத்து விட்டு இருக்காங்க நீ சாப்பிடு என்றான்.

 

உங்க அம்மாவுக்கு நான் இங்கே இருக்கிறது என்று அவள் தயங்கிட இதோ பாரு ப்ரதா நீ என் கூட இருக்கிறது என்னையும், உன்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாது. அப்பறம் என்னோட லாயர் பிரகாஷ் அவன் தானே அக்ரீமென்ட் ரெடி பண்ணி கொடுத்தான் என்ற குகனிடம் எதற்கு இந்த அக்ரீமென்ட் என்று கேட்டாள் சஷ்டிப்ரதா.

 

சப்போஸ் நீயும், நானும் சேர்ந்து இருந்த காரணம் நீ ப்ரகனன்ட் ஆகிட்ட அப்படினா அதற்கு நான் தான் காரணம் என்று என்னை ப்ளாக் மெயில் பண்ண கூடாது பாரு அதற்கு தான் என்றான் குகநேத்ரன்.

 

அவளுக்கு தான் மனம் சுருக்கென்று வலித்தது அவன் சொன்ன விஷயத்தை கேட்டதும். கவலைப் படாதீங்க மிஸ்டர் குகநேத்ரன் ஒரு வேளை நான் கர்ப்பமாக ஆகினாலும் குழந்தையை அபார்ஷன் பண்ணிக் கொண்டு என் வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன் என்றாள் சஷ்டிப்ரதா. அது உன்னோட ப்ராப்ளம் ப்ரதா என்று கூறிவிட்டு சரி சாப்பிடு என்றான்.

 

வகை வகையாக சாப்பாடு இருந்த போதிலும் அவளுக்கு அது தொண்டையில் இறங்க மறுத்தது. கஷ்டப்பட்டு உண்டு முடித்தாள் எழுந்து சென்று விட்டாள்.

 

என் குழந்தையை நீ அபார்ஷன் பண்ணிருவியா அது மட்டும் நடக்காது சஷ்டிப்ரதா என்று பற்களைக் கடித்து கொண்டு மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

 

அவளது மொபைல் போன் ஒலித்தது அதை கண்டவள் எடுக்காமல் சுவிட்ச் ஆப் செய்து விட்டு பால்கனியில் நின்றிருக்க அவளைப் பின் இருந்து அணைத்துக் கொண்டு என்ன பார்க்கிற உனக்கு அந்த கடலில் விளையாட ஆசையா என்று கேட்டான் குகநேத்ரன்.

 

கண்டிப்பா இல்லை என்று அவள் கூறிட அப்போ ஏன் அந்த கடலையே வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க என்றான். அந்த கடலுக்குள் விழுந்து செத்துப் போய் விட்டால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தேன் என்று அவள் கூறிட நீ ஏன் ஜெயிலுக்கு போன என்றான் குகன்.

 

உங்களுக்கு எப்படி தெரியும் என்ற சஷ்டிப்ரதாவிடம் உன்னைப் பற்றி எல்லாம் விசாரித்து தான் உன்னை வேலைக்கு எடுத்தேன் என்று அவன் கூறிட அப்போ நான் ஜெயிலுக்கு போன காரணமும் தெரியும் தானே என்றாள் சஷ்டிப்ரதா.

 

பணத்தை திருடி என்று அவன் கூறிட அவனை பார்த்து விரக்தியாக சிரித்தாள் சஷ்டிப்ரதா. என்னை பார்த்தால் பணத்தை திருடுறவள் போலவா இருக்கு எல்லாம் உங்களை மாதிரி ஒரு பணக்காரன் பண்ணின வேலை என் வாழ்க்கையை கெடுத்துட்டான். பணம் இருக்கிறது என்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து அடுத்தவங்க வாழ்க்கையை அழிக்கலாம் என்று அவள் கூறிட நிஜமாவே நீ எந்த தப்பும் பண்ணாமலா ஜெயிலுக்கு போவ என்றான் குகன்.

 

நீங்க நம்புவிங்களா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் சத்தியமா நான் எந்த பணத்தையும் திருட வில்லை. நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது பார்ட் டைம் ஜாப் போயிட்டு இருந்தேன். அது ஒரு லேப். அங்கே ஒரு ஜோடி கல்யாணத்திற்கு முன்னே தங்களோட ப்ளட் அப்பறம் அந்த ஆள் தன்னோடு செமன் எல்லாம் டெஸ்ட் பண்ண கொடுத்து இருந்தாங்க. அந்த லேடிக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கிறதில் இஸ்டம் இல்லை அதனால் அவள் மட்டும் திரும்ப வந்து லேப் இன்சார்ஜ் கிட்ட பேசி அவனோட ரிப்போர்ட் மட்டும் மாற்றி வைக்க சொல்லி சொன்னாள். பணத்திற்காக அந்த ஆளும் ரிப்போர்ட் மாற்றி வைத்து விட்டான்.

 

எப்படியோ அந்த விசயம் அந்த பணக்காரனுக்கு தெரிந்து அவன் இவனை அடித்து விசாரிக்க அவன் நான் தான் பணத்துக்காக ரிப்போர்ட்டை மாற்றி வைத்து விட்டேன் என்று சொல்லவும் அந்த பணக்காரன் என்னை பழிவாங்க பணம் திருடிட்டேன்னு என் லேப் ஓனரை வைத்து கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லி விட்டு என்னை ஜெயிலில் தள்ளிட்டான். திருட்டு கேஸ் மட்டும் இல்லை வாய் கூசுது காலேஜ் பசங்க கிட்ட தப்பா நடந்து ஐ மீன் விபச்சாரம் செய்தேன்னு சொல்லி இரண்டரை வருசமா ஜெயிலில் இருந்தேன். என்னை வெளியே எடுக்க கூட ஆள் இல்லை என்று கண் கலங்கினாள் சஷ்டிப்ரதா.

 

உன் வீட்டில் யாரும் இல்லையா என்ற குகனிடம் நான் இல்லாமல் போனால் அவங்க ரொம்ப சந்தோஷம் படுவாங்க. கேட்டிங்களே உன்னோட வெர்ஜினிட்டி எப்படி போச்சுன்னு எனக்கு பதினோரு வயசு இருக்கும் அப்போ தான் போச்சு. வயசுக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை சின்ன பொண்ணு என்று கூட பார்க்காமல் கதற கதற என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் அழ ஆரம்பித்தாள்.

அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான் குகநேத்ரன்.

 

என்ன ஆச்சு யாரு என்ற குகனிடம் நான் பிறந்ததுமே என் அம்மா செத்துப்போயிட்டாங்க. என்னை வளர்க்கனும்கிறதுக்காக என் சித்தியை என் அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைத்தாங்க. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட இல்லை அப்பா இறந்து விட்டார். சித்தியோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு என் தாத்தா, பாட்டி சித்திக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. சித்தியோட ஹஸ்பண்ட் ராஜேஷ். அந்த பொறுக்கி தான் என்னை ரேப் பண்ணினான்.

 

என் சித்திக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது. என்னை அவங்க வளர்த்துட்டு வருவதே நாங்கள் இருக்கிற வீடு என் பெயரில் இருக்கிறதுனால தான். இல்லை என்றால் எப்பவோ என்னை கொன்று இருப்பாங்க.

 

நான் வயசுக்கு வந்த ஒரு வாரத்தில் என் தம்பிக்கு உடம்பு சரி இல்லை அதனால் அம்மா அவன் கூட ஹாஸ்பிடலில் தங்க வேண்டிய சூழ்நிலை. அதுவரை என் மேல பாசமா இருந்த அப்பா என்று அவள் அழ ஆரம்பித்தாள்.

 

 

…. தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!